1967 முதல் வெளிப்பட்ட 'சமூக ஊமைக் காயங்கள்'(3)
எல்.முருகன் தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்'?
முன் குறிப்பு: இந்துத்வா பற்றாளர் தங்க.முத்துக்கிருஷ்ணன் எல். முருகன் அவர்களுக்கு எழுதிய பகிரங்க கடிதமும், எனது பின்னூட்டமும் முகநூலில் வெளிவந்துள்ளது. ஈ.வெ.ராவின் வாழ்க்கை வரலாறு பற்றிய அறியாமையில், அதே பாணியில் இன்னொன்று: https://www.youtube.com/watch?v=dhdk5MvH_cE&feature=youtu.be ஏற்கனவே ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்டவர்கள் ஈ.வெ.ரா பற்றி வெளியிட்டு வரும் தவறான கருத்துக்கள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளேன். (‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics -EVRamaswamy’; Why it may accelerate the breaking of Tamilnadu from India?; https://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html) இந்துத்வா முகாமில் ஈ.வெ.ரா பற்றிய விவாதத்தினை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதையே நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.
---------------------------------------------------------------
2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில், மோடியும் அமித்ஸா-வும், சம்ஜவாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் செல்வாக்கில் இருந்து, இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளில் கணிசமானவர்களை எவ்வாறு தமது செல்வாக்கிற்குள் கொண்டு வந்தனர்? என்பதை கீழ்வரும் கட்டுரையானது விளக்கியுள்ளது.
மேலே
குறிப்பிட்ட அகில இந்திய பா.ஜ.க-வின் அடையாள அரசியல் வெற்றியை தமிழ்நாட்டில்
விரிவுபடுத்த வேண்டுமானால்;
அம்பேத்காரை
அங்கீகரித்தது போல, ஈ.வெ.ரா, அண்ணா
ஆகியோரின் சுயலாப நோக்கற்ற தியாகங்களை அங்கிகரிப்பதோடு, இந்தியாவிலேயே
தனித்துவமான 'தமிழ், தமிழர்'
அடையாள அரசியலை, 'திராவிடர், திராவிட'
அடையாளச் சிதைவுகளில் இருந்தும் மீட்கும் வகையிலான, 'அடையாள அரசியலை' செயல்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறு
முன்னெடுக்காமல், பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில்,
தமிழக பா.ஜ.க-வானது, எவ்வாறு 'அரசியல்
தற்கொலைப் போக்கில் பயணித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/06/5.html )
மேற்குறிப்பிட்ட
அணுகுமுறையில், அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டை
மீட்கும் வாய்ப்பு தொடர்பான சான்று 17-05-2018 இல்
வெளிப்பட்டது.
‘RSS joint general secretary Dr Manmohan Vaidya
on 17-05-2018, Thursday expressed confidence that the Sangh would able to
strengthen its base in Tamil Nadu, explaining that there is much in common
between Periyar’s Dravidian principles and the RSS ideology, as both advocate
equality in society without caste and communal differences and class
distinctions.’ (https://indiainteracts.wordpress.com/2018/05/19/evrs-hindutwa-or-hindutwa-of-periyar-rsss-comparison-of-ideologies-of-periyar-and-hindutwa/ )
ஆனால்
தமிழ்நாட்டில் கடந்த காலத்தின் அடிமைகளாக ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவில்
பயணித்தவர்கள் ஈ.வெ.ராவை எதிர்த்தார்கள்.
ஈ.வெ.ராவையும், திராவிட அரசியலையும் கண்டித்த
ரவிக்குமாரின் கட்டுரைகள் எல்லாம் தமிழ்நாட்டில் ஈ.வெ.ராவின் எதிர்ப்புக்கு
பயன்பட்டது.
தத்தம் சார்பு(Subjective)
கண்ணோட்ட அடிப்படையில், ஈ.வெ.ராவின்
எழுத்துக்களை அதன் பின்னணியிலிருந்து பிரித்து, பயன்படுத்தி
அவரை பார்ப்பன எதிர்ப்பு/ஆதரவு, தமிழர் எதிர்ப்பு/ஆதரவு, தலித் எதிர்ப்பு/ஆதரவு, முக்குலத்தோர்
எதிர்ப்பு/ஆதரவு, அம்பேதர்கார் எதிர்ப்பு/ஆதரவு காந்தி எதிர்ப்பு/ஆதரவு, ராஜாஜி
எதிர்ப்பு/ஆதரவு என்று இன்னும் பல எதிர்ப்பு/ஆதரவு கட்டங்களுக்குள், ஈ.வெ.ரா அவர்களை சிக்க வைத்து எவ்வாறு எழுதுவது?
என்று பயிற்சி
வகுப்பு எடுக்க உதவும் பாடப்புத்தகத்தினை ரவிக்குமார் உருவாக்கியுள்ளார். (‘பிராமண
எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html )
ரவிக்குமார்
இப்போது தி.மு.க எம்.பி.
கடந்த சட்டமன்ற
பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி:
"என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய
மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு
நிச்சயமாக வர மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." (https://www.vikatan.com/government-and-politics/politics/63817-stalins-reply-to-udhayanidhis-political-entry?fbclid=IwAR1wYf1wfHrIKZomAYJytA0WUJNEyyWXlz7vKgUYr6Zy4zIe52SPyyMu8zU )
தமிழக
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி, தன் மகன் உதயநிதியை ஸ்டாலின் முன்
நிறுத்தியுள்ளார். அதன்பின், தி.மு.க நம்ப முடியாத அளவுக்கு வேகமாக பலகீனமாகி வருகிறது.
மோடியின்
கருணையால் (?), ஸ்டாலினும், சசிகலாவும் மாயக் கட்டுமரங்களாகத் தடுமாறிப் பயணிப்பதையும், ஏற்கனவே
விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_10.html )
சோனியாவின்
குடும்ப அரசியலில் காங்கிரஸ் வேகமாக பலகீனமாகி வருகிறது.
சோனியா
குடும்பத்தின் பிடியில் இருந்து காங்கிரஸ் விடுதலை பெறும் வரையில், இந்தியாவில்
வலுவான எதிர்க்கட்சி உருவாக வழியில்லை. அது போல, தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்தின்
பிடியில் இருந்து தி.மு.க விடுதலை பெறும் வரையில், தி.மு.க வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு
வழியில்லை.
காஷ்மீரில்
பிரிவினைக்காக வெளிப்படும் வன்சக்தியை (Hard Power) விட
வலிமையானது, தமிழ்நாட்டில் பிரிவினைக்காக வளர்ந்து,
இன்று 'திராவிட ஊழல் பாதுகாப்புக் கவசமான'
மென்சக்தியாகும் (Soft Power) என்பதையும்
ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
கருணாநிதி, ஜெயலலிதா, நடராஜன்
மறைந்துள்ள நிலையில், 'திராவிட ஊழல் பாதுகாப்புக் கவசமான' மேற்குறிப்பிட்ட மென்சக்தியின் மூலமாக மத்திய
அரசை அச்சுறுத்தும் வாய்ப்பிற்கும் இடம் இல்லை.
இன்னொரு ஓடும்
காரின் துணையுடன், (கொள்கை) என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, திராவிட குடும்ப
அரசியல் தொடர்கிறது. மோடி அரசின் (தமிழ்நாட்டு ஊழல் ஒழிப்பு பலகீனம் காரணமான)
ஒத்துழைப்புடன், தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் தாமதமானது. (‘1967
முதல் வெளிப்பட்ட 'சமூக ஊமைக் காயங்கள்'(2);
கட்டுமரத்தைப் பிடித்து தப்பிக்கும் கடலில்
மூழ்கிய நபரைப் போன்ற தமிழர்கள்?
‘https://tamilsdirection.blogspot.com/2020/09/1967-2.html)
இனியும்
மத்தியில் ஆளும் கட்சிகள் தமிழ்நாட்டின் நோஞ்சான் கட்சிகளுடன் நேசமாக பயணிக்க
வேண்டிய தேவையும் இல்லை. (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )
அதன்பின் தான், தமிழ்நாட்டில்
நோஞ்சான் தமிழர்களின் எண்ணிக்கையும் குறைந்து, இந்தியாவில் கர்நாடகம், மகராட்டிரம், கோவா, பஞ்சாப் போன்ற தந்தம்
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வலிமைமிகு மாநிலமாக தமிழ்நாடும் வளரும்.
எனவே தமிழையும்
தமிழ்நாட்டையும் நோஞ்சான் கட்சிகளிடமிருந்து மீட்பதும் சாத்தியமாகும்.
தமிழ்நாட்டிற்கான
'தமிழ்
அடையாள அரசியல்' திசையில், ஊசலாட்டமின்றி தமிழக பா.ஜ.க பயணிக்க வேண்டும்.
மோடி ஆட்சியில்
தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள்
சிக்கி, ஊழல்
சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல்
ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக
வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில்
வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/06/5.html )
தமிழக பா.ஜ.க
தலைவர் எல்.முருகன் தலைமையில், 'தமிழ் அடையாள அரசியல்' மீட்சி திசையில்,
ஊசலாட்டமின்றி தமிழக பா.ஜ.க பயணிக்கத் தொடங்கியுள்ளதை, கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.
'யார்த் தமிழர்?' என்பது போன்ற குழப்பங்களுடன் 'தமிழ்த்தேசியம்' கட்சிகள் திராவிட அரசியலில் வால்களாகவே வளர்ந்து, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமமாகினர். எனவே சரியான 'தமிழ் அடையாள அரசியல்' மீட்சியானது, 'வைக்கம்' ஈ.வெ.ராவிடமிருந்தே தான் தொடங்க முடியும்.
தமிழ்த்தேசியம், 'பெரியார் தந்த
புத்தி' மற்றும்
'இந்துத்வா
முகாமில் ஈ.வெ.ரா எதிர்ப்பாளர்கள்'
ஆகிய மூன்று பிரிவினரும், திராவிட ஊழல்
திமிங்கிலங்களிடம் சங்கமமாகி, தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான பங்காளிக் குற்றவாளிகள்
ஆவார்கள்.
சாதி
ஏற்ற தாழ்வுகளை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ் பாணி தேசியவாதியாகவே, வைக்கம்
போராட்டத்தில் ஈ.வெ.ரா பங்காற்றினார்.
1920களில் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற ஈ.வெ.ரா அவர்கள் இன்றைய ஆர்.எஸ்.எஸ் பாணி தேசியவாதியாகவே பயணித்தவர் ஆவார்.
'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற
மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5,
10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள்
கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து
கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில்
ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத்
தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'- ஈ.வெ.ரா
(பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்) (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_11.html)
அவ்வாறு பயணித்த ஈ.வெ.ரா அண்ணாவுடன் கூட்டு சேர்ந்து, 1944இல் தி.க தொடங்கினார். அதுவே பாதகமான 'சமூக மடை மாற்றம்' ஆனது.(https://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html).
அந்த பாதக மடைமாற்ற சமூக செயல்நுட்பத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் முயற்சியே, வைக்கம் ஈ.வெ.ராவை 'பெரியார்' சிறையில் இருந்து மீட்கும் முயற்சியாகும்.
பா.ஜ.க ஆதரவு
முகாம்களில் சசிகலாவுக்கு ஆதரவாக வெளிப்பட்ட சிக்னல்களின் அடிப்படைகளில்,
தமிழக மக்களின்
நாடித்துடிப்புடன் தொடர்புள்ள சமூக செயல்நுட்பம் புரியாமல், இன்று வரை தமிழக பா.ஜ.க பயணித்து வருவது தமிழ்நாட்டின் தூரதிர்ஷ்டமே
ஆகும்;
என்ற எனது
கவலையையும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தேன். (https://tamilsdirection.blogspot.com/2020/06/14.html )
சசிகலாவின்
விடுதலை தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள் எல்லாம், சசிகலாவுக்கு
ஆதரவாக பா.ஜ.க ஆதரவு முகாம்களில் மேற்கொண்ட முயற்சிகளின் தோல்வியை
உறுதிப்படுத்தியுள்ளது. (https://timesofindia.indiatimes.com/city/bengaluru/vk-sasikala-can-walk-out-of-bengalurus-central-jail-on-january-27-if-she-pays-rs-10-crore-fine/articleshow/78138293.cms
& https://www.deccanchronicle.com/nation/crime/030920/sasikalas-benami-properties-attached.html )
தமிழக பா.ஜ.க
துணைத்தலைவர் அண்ணாமலை நீட் எதிர்ப்பாளர்களுடன் வாதம் செய்ய முன் வந்துள்ளார்.
ஆனால் தி.மு.க சார்பில் அந்த சவாலை ஏற்க எவரும் முன்வரவில்லை.
ஸ்டாலின்,
கி.வீரமணி, சீமான், திருமா,
வைகோ போன்ற இன்னும் பலர், 'அலெக்சிதிமிக்'
(alexithymic) மனநோயை ஊக்குவிக்கும் சமூகக் குற்றவாளிகளா?
என்று நான் முன்வைத்த வாதத்திற்கு, இதுவரை
மறுப்பேதும் வரவில்லை. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post.html )
இன்று ஈ.வெ.ரா
அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்,
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து
செயல்பட்டிருப்பார்; (https://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
என்ற எனது
ஆய்விற்கு 'பெரியார்' கட்சிகளிடமிருந்து இதுவரை மறுப்பு வரவில்லை. இனி வந்தாலும்
வரவேற்பேன்.
'கறுப்பர்
கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள்
சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான (Recruiting agents) பிராமணர்கள்
பற்றிய சான்றுகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். எனவே சமூக
நல்லிணக்கதினை விரும்பும் பிராமணர் அமைப்புகளின் தலைவர்கள் விழித்து, உரிய நிவாரண முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html
)
தமிழ்நாட்டிற்கான
'தமிழ் அடையாள அரசியல்' திசையில்,
ஊசலாட்டமின்றி தமிழக பா.ஜ.க பயணிப்பதும், பாரபட்சமற்ற
'திராவிட' ஊழல்
ஒழிப்பில் மத்திய அரசு சுறுசுறுப்பாக முன்னேறுவதும், தமிழின்
தமிழ்நாட்டின் மீட்சிக்கான நல்ல சமூக சிக்னல்கள் ஆகும்.
கந்த சஷ்டி
கவசம்’ மூலமாக, தமிழின்
தமிழ்நாட்டின் மீட்சி நிச்சயமாகி விட்டது. தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு
தமிழ்நாடு பலிகடா ஆக இனி வாய்ப்பில்லை;
என்ற கணிப்பினை
வெளிப்படுத்தியிருந்தேன். (https://tamilsdirection.blogspot.com/2020/07/social-polarization.html)
அதன்
தொடர்ச்சியாக, கந்தன் கருணையால், எல்.முருகன் தமிழக பா.ஜ.க தலைவரானார். அதன்பின் அண்ணாமலை ஐ.பி.எஸ்
துணைத்தலைவரானார். மூத்த தலைவர்களின் ஆதரவுடன், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சி நிச்சயமாகி
வருகிறது.
1967 முதல் முளை விட்டு வளர்ந்து, தமிழின் தமிழர்களின் எதிர்காலத்தையே சீரழித்து
வரும் சமூகக் காயங்களை எல்லாம் உரிய சமூக மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணியையும், இனி தொடங்க
முடியும்.
தமிழத்துவாவைச்
சரியாக உள்வாங்கிய இந்துத்வாவே, மேற்குறிப்பிட்ட சமூக ஊமைக்காயங்களைக் குணமாக்கும் 'சமூக மருந்தாக' எனது ஆய்வில்
வெளிப்பட்டுள்ளது. அதனை அறிவுபூர்வமாக விவாதிப்பதையும் நான் வரவேற்கிறேன்.
சமஸ்கிருதம்
மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வளத்தை உள்ளடக்கிய இந்துத்வாவே
இந்தியாவில் 'தேச கட்டுமானத்தை'
(Nation Building) வலுவாக்கும் என்பதை உணர்த்தும் வகையில்;
வளர்த்தெடுப்பதே, 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' ஆகும்.
'கந்த சஷ்டி கவசம் சர்ச்சை' மூலமாக
இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் உள்ள 'கறுப்பர்
கூட்டம்' அம்பலமாகி
வருகின்றன.
இரண்டு வகை
கறுப்பர் கூட்டங்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமமானவையாகும். எஞ்சியவை
கருணாநிதி குடும்ப அரசியலில் சங்கமம் ஆனவையாகும். மேற்குறிப்பிட்ட இலக்கில் பெறும்
வெற்றியின் மூலமாக, அவை சமூகக் குப்பையாக ஒதுங்கப் போவதும் நிச்சயமாகி வருகிறது.
வெற்றி நமதே. வெற்றி வேல். வீர வேல். (‘1967 முதல் வெளிப்பட்ட 'சமூக ஊமைக் காயங்கள்' (1); குணமாக்கும் 'சமூக மருத்துவர்களாக' நாம்? https://tamilsdirection.blogspot.com/2020/08/1967-1967.html)
குறிப்பு:
தேசியத் தியாகி வ.உ.சி ஈ.வெ.ராவை தமது தலைவராக ஏன் அறிவித்தார்? அவ்வாறு அறிவித்த போதும், பெரியார் படத்தை திறந்து வைத்து வ.உ.சி ஈ.வெ.ராவைப் பாராட்டி பேசியபோதும், அந்த புகழ்ச்சியை எவ்வாறு ஈ.வெ.ரா கண்டித்தார்? என்பதை, உண்மையை அறியும் ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். எனக்கு நேரம் கிடைக்கும் போது, அதற்கான சான்றுகளை எல்லாம் தொகுத்து வெளியிடும் எண்ணமும் உள்ளது. உதாரணத்திற்கு ஒன்று:
No comments:
Post a Comment