Thursday, February 25, 2016


தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கான கருதுகோள்(1) (Hyphothesis);


ஆய்வு (Research) திறந்த‌ மூலம் (Open Source)  கூட்டு முயற்சியே  (Collaboration)

 

'சாதி ஒழிப்பு' முகமூடியில், 'புதிய' பொது வாழ்வு திருடர்களா


"திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது?" என்ற கேள்விகளை முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த கேள்விகளுக்கான விடைகளை பெறுவது பற்றி, இங்கு பார்ப்போம். 

நமது அறிவு, அனுபவ அடிப்படைகளில், இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் தேடும் நோக்கிலான ஆராய்ச்சிக்கு, உருவாக்கப்படுவது " கருதுகோள்" (hypothesis ) ஆகும். ( " a hypothesis refers to an idea that needs to be tested. A hypothesis needs more work by the researcher in order to check it. A tested hypothesis that works, may become part of a theory or become a theory itself."; https://simple.wikipedia.org/wiki/Hypothesis ) 

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள் தேடும் ஆராய்ச்சிக்காக, நான் உருவாக்கியுள்ள கருதுகோள் வருமாறு:

1857 முதலாம் விடுதலைப் போரில் 'அனைத்து சாதி இந்துக்களும், முஸ்லீம்களும்' 'காலனி எதிர்ப்பு' என்ற‌ அடிப்படையில்,  'இந்தியராக' 'ஒற்றுமையுடன்' போராடியதை 'எரிமலை' (ஆங்கிலத்தில்- 'The Indian War of Independence'  is an Indian nationalist history of the 1857 revolt by Vinayak Damodar Savarkar - first published in 1909) நூல் மூலமாக வெளிப்படுத்திய 'குற்றத்திற்காக', 'வேறு எந்த தலைவரும்' அனுபவிக்காத, 'அந்தமான் சிறைக்கொடுமை'களுக்குள்ளானார் வீரசவர்க்கார். 

'சில' சுயநலக்கள்வர்களான இந்தியர்களின் 'உதவியால்', 'மயிரிழையில்', அந்த விடுதலைப் போரில் தோல்வியைத் தவிர்த்த காலனி ஆட்சியாளர்கள், அதில் கற்ற பாடத்தில், ஆங்கிலத்தில் புதிதாக 'காஸ்ட்' -'caste' - என்ற சொல்லை (ஸ்பானிஸ், மற்றும் போர்ச்சுகீச மொழிகளிலிருந்து) உருவாக்கி, அதன் மூலம் புதிய அடையாள (Identity) முறையில், 'சாதி'யை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்து, புதிதாக சமூக ஒப்பீடு (Social Comparison)  நோயில் சிக்க வைத்து, அதனூடே, சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை, மற்றும் செவ்வியல் (Classical), நாட்டுப்புறம் (Folk) போன்ற புதிய உயர்வு/தாழ்வு பிரிவுகளும், ஏற்கனவே இருந்து வந்துள்ளது போல, சமூகத்தில்  அறிமுகம் செய்து, அதன் மூலம், 'சுயலாப கள்வர்' நஞ்சானது  'விதைக்கப்பட்டு'

காந்தி, நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி என்னும் 'நாற்றாங்காலில்' பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது;

இந்தியாவிலேயே 'தனித்துவமாக'(Unique),  'விலைமதிப்பற்ற' தியாகங்கள் மூலம், ஈ.வெ.ரா உருவாக்கியிருந்த சமூக ஆற்றலானது, 1944இல், தமிழில் இருந்த 'இனம்' திரிந்து, தனித்துவமான‌, 'நச்சு விவசாயம்' நோக்கி, பாதகமான 'சமூக ஆற்றல் மடை மாற்றத்திற்கு' உள்ளானதன் காரணமாக; திறந்த மனதுடன், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய வகையில் (Accountability), விவாதங்கள்  நடைபெற்ற ஒரு இயக்கத்தில், 'உணர்ச்சிபூர்வ' விவாதங்களும், 'கிசு கிசு' பாணியில் 'சந்தேகங்கள்' 'உண்மைகள்' போலவும் அரங்கேற‌; 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை கைவிடாமலேயே, 'இந்திய விடுதலையை', இந்தியாவிலேயே, 'தனித்துவமாக' வரவேற்று; நேருவின் 'உதவி'யால், 'பிரிவினை தடை சட்டம்' மூலம், பிரிவினையை கை விட்டு, ஆனால் 'பிரிவினைக்கான காரணங்கள் தொடர்வதாக' அறிவித்து, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பத்தில், 'இந்தியர்' அடையாளத்தையும், தேசிய கட்சிகளையும் பலகீனப்படுத்தி; தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தோற்றுவித்து, 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவற்றை கேலிக்குள்ளாக்கி, 'பலவகை தரகர்கள்', 'பலவகை கொள்கை முகமூடிகளுடன்', 'ஆதிக்கம்' பெறும் சமூக அடித்தளத்தை (அநேகமாக உலக வரலாற்றில் முதல் முறையாக) வளர்த்து; 'அந்த' தரகர்கள் துணையுடன், கடந்த சுமார் 50 வருடங்களில், தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவரின் சொத்துகள் 'அதிவேகமாக' அதிகரித்து, அந்த 'தரகு சம்பாத்திய' கவர்ச்சியில், தமிழர்களிடையே உள்ளார்ந்த ஈடுபாடுகளும் (Passions), அறிவு உழைப்பும், உடல் உழைப்பும் 'மந்தமாக';  நேர்மையான வழிகளில் பொருள் ஈட்டும் தகுதி, திறமைகளின்றி, உழைத்து சம்பாதிக்கும் மனமின்றி, 'குறுக்கு வழிகளில்', அதிவேக பணம் ஈட்டும், 'தரகர்கள்' எல்லாம், சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வர;

மேலே பராமரிக்கப்பட்ட 'காங்கிரஸ்' 'நச்சு நாற்றுகள்', 'திராவிட' 'நச்சு விவசாயமாக' வளர்ந்து; ('தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6); 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான; நல்ல விதைகளும், நச்சு விதைகளும்'; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html ), 

திருடர்களே,  திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, அவ்வாறு 'விதைக்கப்பட்டு', 'திராவிட அரசியல்' மூலம், 'திராவிட, தேசிய, முற்போக்கு,  பிற்போக்கு' உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் 'சிக்க' வைத்து, தமிழ்நாட்டு பொதுவாழ்வில்  'அறுவடை'யில் உள்ளது; வெளிநாட்டு நிதியில் செயல்படும் என்.ஜி.ஓக்களின் 'பல வகை' ஆதரவுடன். 

மேலே குறிப்பிட்ட கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு, மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவிலேயே, அது சரியா? அல்லது தவறா? என்பது தெளிவாகும். (குறிப்பு கீழே)

மேலே குறிப்பிட்ட கருதுகோளை நான் உருவாக்கவும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், துணை புரிந்த/புரியும் சமூகவியல் பரிசோதனை மாதிரிகளாக ( Sociological Real Life Experimental Specimens), திருச்சி பெரியார் மையம் மூலம் நான் அடையாளம் கண்ட, 'பெரியார்' 'சமூக கிருமிகள்' பயன்பட்டு வருகிறார்கள். [ 'sociologists use empirical evidence (that is, evidence corroborated by direct experience and/or observation) combined with the scientific method or an interpretive framework to deliver sound sociological research.'; https://opentextbc.ca/introductiontosociology/chapter/chapter2-sociological-research/ ] அந்த ஆய்வு நோக்கில், எனக்கு கிடைக்கும் சான்றுகளையும், அந்த சான்றுகள் அடிப்படையில் நான் யூகிப்பவைகளையும், எனது பதிவுகளில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். ('பெரியார்' மூலம் உருவான 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக வாய்ப்புண்டா?; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) நான் முனைவர் பட்டம் பெறுவதற்கோ, பணம், புகழ் சம்பாதிப்பதற்கோ,  இதில் ஈடுபடவில்லை.

தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் எண்ண‌ற்றோரின் தியாகங்கள் (தேசிய, திராவிட, பொதுவுடைமை உள்ளிட்ட அனைத்து இயக்கங்களிலும்) எல்லாம், தமிழ்நாட்டில் 'பொது அரங்கில் சுயநலக் கள்வர்கள்' ஆதிக்கம் பெறும் விளைவிலா,  முடிய வேண்டும்? அதிலிருந்து மீள வேண்டுமானால், அந்த பாதக விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பத்தை (Social Mechanism),  கண்டுபிடிக்க வேண்டாமா? 

இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. சுயலாப நோக்கமின்றி, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்கும் ஆர்வமுள்ள அனைவரின் பிரச்சினை ஆகும்.  

நாம் வாழும் 'டிஜிட்டல்'(Digital) யுகத்தில், தனிமனித லாபம்/முக்கியத்துவம் நோக்கின்றி திறந்த‌ மூலம் (Open Source) கூட்டுமுயற்சிகளின் (Collaboration) விளைவாக, ' லினக்ஸ்' (The development of Linux is one of the most prominent examples of free and open-source software collaboration. https://en.wikipedia.org/wiki/Linux )  உள்ளிட்ட இன்னும் பல பலன்களை நாம் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம்.

அந்த கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்கள் யார் என்று ஒருவரைப்பற்றி, இன்னொருவருக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. எவர் சொல்வது சரி? எவர், எதன் சார்பாக, கருத்து வெளியிடுகிறார்?  என்பது போன்ற கேள்விகளுக்கே இடமிருக்காது. தற்போது 'செனோபோபியா' ( http://jensrydgren.com/Logic%20of%20xenophobia.pdf ) நோயாக, உணர்ச்சிபூர்வ போக்கில் 'வலம்' வரும்,
‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து, அவர்பால்

வெறுப்பை உமிழ்வது அழிவு’- 'புது'க்குறள் வழியில், பொது அரங்கில், சுய நலக் கள்வர்களை பாதுகாத்து, விவாதங்கள் சீரழிந்த போக்கானது,  மறைந்து; 

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423
என்பது அரங்கேறி வருவதானது, இணைய யுகத்தின் 'திறந்த மூலம்' (Open Source) வெற்றியாகும்.


வெளிவந்துள்ள தகவல் சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியில் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். தகவல்கள் சரியானவை என்றாலும், முன்வைக்கப்படும் வாதத்தில் குறைபாடுகள் (fallacy; https://en.wikipedia.org/wiki/List_of_fallacies ) உள்ளனவா? சரி என்பதற்கான சான்றுகளை தேடுவதிலும், தவறு என்பதற்கான சான்றுகளை தேடுவதிலும் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். 

அது போல 'திறந்த‌ மூலம்  கூட்டு முயற்சி' ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான கருதுகோளை,  நான் முன் வைத்துள்ளேன். நானும் எனது பதிவுகளில் குறிப்பிட்டு, வெளிப்படுத்தாத‌ (பல‌ வருடங்களுக்கு முன் பார்த்து, குறித்து வைக்காத; ஆனால் நிச்சயம்,வாய்ப்பு கிடைக்கும் போது,  நேரம் ஒதுக்கி, அவை தொடர்பான‌ ஆராய்ச்சியாளர்களை சந்தித்து) சான்றுகளை வெளிப்படுத்த முயல்வேன்.  

அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் எல்லாம் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும்,பேசி விவாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் ஆய்வு முயற்சிகளின் பலன்கள் இணையத்தில் இடம் பெற்றால் போதும். எனது பதிவுகளில் பின்னூட்டமாக (Feedback comment)  அத் தகவல்கள்/ தகவலுக்கான இணைய தொடர்புகள்,  இடம் பெறுவதை வரவேற்கிறேன். ஆர்வமுள்ளவர்கள், தாம் விரும்பும் போதும், தமக்கு இயலும்போதும் ஆய்வுகளில் ஈடுபடலாம். சுயலாப நோக்கின்றி அவ்வாறு பயணிப்பதன் மூலமே, ஆக்கபூர்வமான பலன்கள் வெளிப்பட்டு வருகின்றன. 

அந்த கருதுகோள் அடிப்படையிலும், அல்லது  அதற்கு மாற்றான புதிய கருதுகோள் அடிப்படையிலும், மீட்சி நோக்கிய முயற்சிகள் நடைபெற, தூண்டுகோலாகவே, எனது பதிவுகள் வெளிவருகின்றன; உணர்ச்சிபூர்வ போக்கிலிருந்து விலகி, திறந்த மனதுடன் அறிவுபூர்வ விவாதங்களின் ஊடே, 1944க்கு முன் ஈ.வெ.ரா பயணித்தது போல;

நேர்மையான, துணிச்சலான, சுயவிமர்சனம் மூலம், நம்மையும், குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டத்தையும், 'சுயலாப கள்வர்' நோயிலிருந்து விடுவித்து, 'அந்நிய சூழ்ச்சியிலிருந்து' விடுபட்டு; தமிழ்நாட்டில் பொது அரங்கில் 'பலவகை கொள்கை முகமூடிகளுடன்' வலம் வரும், 'சுயநலக் கள்வர்கள்' மற்றும் அவர்களை 'ஒட்டி' பலன் பெற்று வரும் 'துணை கள்வர்கள்' எல்லாம், தண்டிக்கப்படுவதை ஊக்குவித்து; தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான சரியான வழியில் பயணிக்க.

குறிப்பு :
மேலே குறிப்பிட்ட கருதுகோள் சரியா? தவறா? என்ற ஆய்வின்றி, 'சாதி ஒழிப்பு' என்று பயணிப்பவர்கள் எல்லாம், ஈ.வெ.ராவை போல, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html & போலியோ நோய் எதிர்ப்பு மருந்து (Polio Vaccine) கண்டுபிடித்த 'நுட்பம்'; http://www.nytimes.com/1990/11/25/magazine/once-again-a-man-with-a-mission.html?pagewanted=all#h[ShcIwt,1]  ) பற்றிய புரிதலின்றி பயணிப்பவர்களா? ஈ.வெ.ராவுக்கு இருந்த கல்வி வரை எல்லைகள் இல்லாதவர்களும், அவ்வாறு பயணிப்பது, 'படித்த தற்குறி பகுத்தறிவு' பயணம் ஆகாதா? அல்லது அந்நிய பிரிவினை சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்களா? அதில் 'ஊழல் ஒழிப்பை' பற்றிய கவலையின்றி, பயணிப்பவர்கள் எல்லாம், அந்த சூழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டிற்கு அறிமுகமான 'புதிய' பொது வாழ்வு திருடர்களா? என்பவையும், மேற்குறிப்பிட்ட கருதுகோள் தொடர்பான ஆய்வில் இடம் பெற வேண்டும்.



Tuesday, February 16, 2016



                    அறிவுபூர்வ விவாதத்தில் 'இந்துத்வா'       

  ராஜிவ் மல்கோத்ராவும், செல்டன் பொல்லாக்கும்

 

மேற்கத்திய சூழ்ச்சியில், 'சமஸ்கிருதம்' பலியாகி வருகிறதா? 'சமஸ்கிருத மொழியானது அரசியல் நோக்கில், சாதிய ஒடுக்கலுக்கு பயன்படுத்தப்பட்டது' என்பது தான் அந்த சூழ்ச்சியின் சாராம்சமா?
 
என்பது தொடர்பாக, அறிவுபூர்வமான விவாதத்தை எதிர்நோக்கி, அண்மையில் வெளிவந்து, உலகின் கவனத்தை ஈர்த்துவரும் ஆங்கில நூல்:

சமஸ்கிருதத்திற்கான போர்; சமஸ்கிருத மொழி அரசியலுக்கா? புனிதத்திற்கா?; ஒடுக்கலுக்கா? விடுவிப்பதற்கா?;   மரணித்ததா? உயிருள்ளதா?
' The Battle for Sanskrit; “Is Sanskrit political or sacred, oppressive or liberating, dead or alive?”  '

'இந்துத்வா' தொடர்பாக, 'தடை' போன்ற உணர்ச்சிபூர்வ போக்குகளை ( தடைகளை எதிர்த்து 'எதிர்நீச்சலில்' வளர்ந்த ஈ.வெ.ரா, 1944இல் திசைமாறியதால், 'வளர்ந்த' 'பெரியார் கொள்கையாளர்கள்', தமக்கு பிடிக்காத 'திரைப்படங்களை', தடை கோரும் அளவுக்கு சீரழிந்துள்ள சூழலில்) ஆதரிக்காமல்; 

'அறிவுபூர்வ விவாதத்தை முன்னெடுப்பவர்கள் இருக்கிறார்களா? அந்த விவாதத்தில், மேற்கத்திய 'இந்துத்வா' எதிர்ப்பு அறிவுஜீவிகள், நேர்மையாக பங்கேற்கிறார்களா? அல்லது தமக்குள்ள 'வலிமையின்' மூலம், அந்த விவாதத்தை இருட்டில் தள்ள முயற்சிக்கிறார்களா?

அந்த மேற்கத்திய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, மத்தியில் பா.ஜ.க ஆட்சி பயணிக்கிறதா?

என்பது தொடர்பாக; 
            
மேற்குறிப்பிட்ட நூலாசிரியர் ராஜிவ் மல்கோத்ராவை, 'மனுஷி' இதழாசிரியர் மது கிஷ்வார் பேட்டி கண்டது தொடர்பான, காணொளி கீழே;

இந்துத்வா எதிர்ப்பு மேற்கத்திய எழுத்தாளர்களில் முதல் இடத்தில் உள்ள செல்டன் பொல்லாக்,  எந்த அளவுக்கு நேர்மையாக, ராஜிவ் மல்கோத்ராவின் அறிவுபூர்வ விவாதத்தை எதிர்கொள்கிறார்,  என்பது பற்றிய தகவல்கள் மேற்குறிப்பிட்ட பேட்டியில் வெளிப்பட்டுள்ளன.

“ 'இந்துத்வா' அரங்கில் உணர்ச்சி பூர்வமான போக்குகளின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்கள், (குறிப்பாக புராணங்கள், இலக்கியங்கள் பற்றி பெரியார் ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கேள்விகள் உள்ளிட்டு,)  நடைபெற்று வருவதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், 

ஆர்.எஸ்.எஸ்  அதிகாரபூர்வ இதழ் http://www.organiser.org/
இணையத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா http://rajivmalhotra.com/

மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளது போன்ற இந்துத்வா ஆதரவாளர்களின் கட்டுரைகளை படிக்கலாம்.


மேலே குறிப்பிட்டவை தொடர்பாக, பெரியார் இயக்க ஏடுகளில் ஏதேனும் வெளிவந்திருந்தால், அதை எனது பார்வைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் அவற்றை திறந்த மனதுடன் படித்து, எனது கருத்துக்களை நெறிப்படுத்திக் கொள்ள அவை உதவும். 'இந்துத்வா'வில் உள்ள உணர்ச்சிபூர்வ போக்குகளிலிருந்து, அறிவுபூர்வமான போக்குகளை, பிரித்தறியும் 'பகுத்தறிவு' இன்றி, 'பெரியார் கொள்கையாளர்கள்' பயணிக்கிறார்களா? இல்லையா? என்ற ஆய்வுக்கும், அவை உதவும். உலகின் தொன்மை மொழிகளில் நாத்தீகம் பற்றி அதிகம் உள்ள சம்ஸ்கிருத மொழியை (Amartya Sen:  'Identity and Violence; The Illusion of Destiny' Page 35  ), 'பிராமணர்கள், வேதங்கள்' மொழியாக மட்டுமே அடையாளப்படுத்தி, வெறுப்பதும், எதிர்ப்பதும், இனியும் தொடருவது சரியா?

இந்துத்வா எதிர்ப்பாளர்களின் 'அறிவுஜீவிகளாக' உலக அளவில் வலம் வரும்  வெண்டி டோனிகர் (Wendy Doniger), செல்டன் பொல்லாக் (Sheldon Pollock)  போன்றோரின் நூல்களை தடை செய்வதை ஆதரிக்காமல், அறிவுபூர்வ விவாதத்தில் இந்துத்வா எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டு, அந்த அறிவுஜீவிகளின் 'அறிவுக் குறைபாடுகள்' அம்பலமாகத் தொடங்கியுள்ளன. உலக அளவில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ராஜிவ் மல்கோத்ரா ஆவார். தனதளவில் கடும் முயற்சியின் மூலம் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டவர்களே அப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திவருகிறார்.

“ Before public campaigns, start with oneself. Decolonize your own self. This involves a lot of study, introspection and changing. Second go to those in your circle in small settings, to test and learn. Dont try to overnight become a public teacher - bypassing the years of tapas required.” - Rajiv Malhotra

மேற்குறிப்பிட்ட ராஜிவ் மல்கோத்ரா - மது கிஷ்வார் பேட்டியில், இந்திய அறிவு புலத்தை, தமது சுயநலனுக்கான அடிமைப்படுத்தி வரும் மேற்கத்திய சூழ்ச்சிகள் பற்றி, விளக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும், 'அந்நிய நலன்களுக்கான' வலைப்பின்னலில் சிக்கி செயல்பட்ட/செயல்படும் அமைப்புகள், மற்றும் 'முற்போக்குகள், பிற்போக்குகள், அறிவுஜீவிகள்' பற்றிய ஆய்வுகளும், அறிவுபூர்வ விவாதங்களும் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது, என்பதும் என் கருத்தாகும்.( http://tamilsdirection.blogspot.in/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

அந்த மேற்கத்திய சூழ்ச்சியில், திராவிடர் கழகத்தோடு ஒப்பிட்டு, நீதிக்கட்சியை இழிவு படுத்தி, பின் தி.மு.க வோடு ஒப்பிட்டு, ஈ.வெ.ராவையும், தி.கவையும் மட்டம் தட்டிய, ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் எனது அனுபவம் வருமாறு:

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் , ஸ்வீடன் நாட்டு பெண் எழுத்தாளர்  அனிதா டேல்- Anita Diehl.(1977). 'E. V. Ramaswami Naicker-Periar: A study of the influence of a personality in contemporary South India', (Scandinavian University Books) பெரியாரைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி, தி.கவால் பாராட்டப்பெற்றார். அந்தப் புத்தகத்தில் உள்ள நிறைய பிழைகளையும் கண்டு, தி.க தலைவர் கி. வீரமணியிடமும், விடுதலை ராசேந்திரனிடமும் ( எனது பெரியார் இயக்க தொடக்க காலத்தில் ) தெரிவித்தேன். அதுவும் வெளிவரவில்லை. பின் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்      Irshik, HardGrave Jr போன்றோர் ( தி.க) பாராட்டிய நூல்களையும் படித்து, அவற்றிலுள்ள குறைகளைத் தெரிவித்தேன். வெளிவரவில்லை.( 'உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்’கள்';

Irshik, HardGrave Jr உள்ளிட்டு, மேற்கத்திய எழுத்தாளார்கள்,  'திராவிட இயக்கம்' பற்றி வெளியிட்டுள்ள நூல்களை ஆராய்ந்து, அந்நூல்களில் மேற்கத்திய சூழ்ச்சி நலன்கள் உள்மறைந்துள்ளதா? என்று எவரும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால், அவருக்கு என்னால் உதவ முடியும். இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவில், தமிழ்நாட்டில், எந்த அளவுக்கு, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகள்  செயல்பட்டன?  என்பது தொடர்பாகவும், இந்திய விடுதலைக்குப் பின்னும், பிரிட்டனின் உளவு அமைப்பு, நேரு ஆட்சியில் தொடர்ந்து செயல்பட்டது பற்றியும், 'இரகசிய நீக்கம்' (Declassified)  செய்யப்பட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. நேதாஜியின் சீடராக, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தேச பக்தராக, பாராளுமன்றத்தில் நேருவை தீவிரமாக எதிர்த்து வந்த, சுயலாப நோக்கின்றி வாழ்ந்த முத்துராமலிங்க தேவரை, 'முதுகளத்தூர் சாதி கலவரத்தில்' சிக்க வைத்து, 'சாதித்தலைவராக' அவரது அரசியல் வாழ்வை முடித்ததில், அந்த உளவு அமைப்புகளுக்கு பங்கு உண்டா? இல்லையா? என்பது, இந்திய அரசு தம்வசம் உள்ள கோப்புகளை 'இரகசிய நீக்கம்'(Declassify)  செய்யும் போது, தெளிவாகும். இந்திய விடுதலைக்கு முன், தனிநாடாக பிரிய இருந்த 'சென்னை மாகாணம்' ஆனது, 'திராவிட' சூழ்ச்சியில் சிக்கியதால், பிரியவில்லையா? என்ற ஐயமும் தெளிவாகும். (  ' ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2); அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?'; http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_27.html ) 'இழிவுக்கு இலக்கணமான' மனிதர்களை நான் அடையாளம் காண உதவிய, 'திருச்சி பெரியார் மையம்' வரை, அந்த மேற்கத்திய சூழ்ச்சிவலை 'நீண்டு' செயல்பட்டு வருகிறதா? என்ற ஆய்விற்கும், அவை துணை புரியும். ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

அந்த 'மேற்கத்திய சூழ்ச்சி வலை'யில் சிக்கியவர்கள் பங்களிப்புடன், 'தமிழ்', 'தமிழ் இசை' தொடர்பான எனது ஆய்வுகள் 'இருட்டில்' உள்ளனவா? மேற்கத்திய சூழ்ச்சிகளை, 'அறிவுபூர்வமாக' எதிர்த்து வரும், ராஜிவ் மல்கோத்ரா, மது கிஷ்வார் போன்ற  புலமையாளர்கள் எல்லாம், அந்த 'இருட்டில்' சிக்கி, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு பற்றிய 'முழு' உண்மைகள் தெரியாமல் இருப்பதற்கும், அந்த மேற்கத்திய சூழ்ச்சியே காரணமா? தமிழ்நாட்டில், தமிழின் மீது 'சுயலாப' நோக்கற்ற உண்மையான பற்றுள்ள, 'இந்துத்வா' ஆதரவாளர்கள் மூலமே, அந்த சூழ்ச்சியை முறியடித்து, தமிழை மீட்க முடியும் என்பது உண்மையா?

'மேற்கத்திய புலமையாளர்களில்' செல்டன் பொல்லாக் என்பவர் -  உலக அளவில் 'அதீத செல்வாக்குடையவர்'-  தமிழைப் பற்றி, இதுவரை யாரும் குறிப்பிடாத அளவுக்கு, மிகவும் மோசமாக, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்து, உலகப்புகழ் பெற்ற நூலில் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ், 'தமிழ் உணர்வு' கட்சித் தலைவர்களோ, தமிழ்ப் புலமையாளர்களோ, உலக அளவில் அறிவுலகில் தமிழுக்கு நேர்ந்த அந்த அவமானத்தைப் பற்றி அறிந்ததாகவோ, அதை உரிய சான்றுகளுடன் மறுத்து ஏதும் எழுதியுள்ளதாகவோ நான் இதுவரை அறியவில்லை.

'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று,  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? உடனே 'யார்? யார்? கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்', என்பதைப் பட்டியலிட வேண்டியதில்லை. ஆனால் அதே கருத்தையும், அதை விட இன்னும் அபத்தமான தமிழைப் பற்றிய கருத்துக்களையும், உலக அளவில் மிகவும் மதித்துப் போற்றப்படுகின்ற அமெரிக்க எழுத்தாளர் Sheldoon Pollock - செல்டன் பொல்லாக் – ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (permanent black - Delhi  2007) என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 9 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள,  கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?

அப்புத்தகத்திலிருந்த 'அபத்தமான' தவறுகளை, உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுத்து,  ஷெல்டன் பொல்லாக்கிற்கு, மின் அஞ்சல் மூலம் 2007-இல் அனுப்பினேன். அவரிடமிருந்து எந்த மறுப்பும் இன்று வரை வரவில்லை. அதைத் தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த பலருக்கும் அனுப்பினேன்.  உலக அரங்கில் புகழ் பெற்ற செல்வாக்குள்ள ஒரு அமெரிக்க அறிஞரின், தமிழைப் பற்றிய அபத்தமான கருத்துக்களை,  தமிழ்நாட்டில் 'செல்வாக்குள்ள'' புகழ் பெற்ற' , எந்த தமிழ் அறிஞராவது - மறைந்த கணபதி ஸ்தபதியின் முயற்சியால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட ஐந்திறம் பற்றி மிகப் பெரிய விவாதப் புய‌லைக் கிளப்பியவர்கள் உட்பட -   மறுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ( http://tamilsdirection.blogspot.in/2014_10_01_archive.html ). அப்படி எவரும் மறுத்திருக்கவில்லையென்றால்,  அது தமிழுக்கே ஆபத்தான அறிகுறியில்லையா? அந்த அளவுக்கு தமிழ்ப் புலமையாளர்கள், மேற்கத்திய சூழ்ச்சி வலையில்,  சிக்கி உள்ளார்களா? என்பவை ஆய்வுக்கு உரியவையாகும்.

 எனது மறுப்புகளை ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்காகப் பதிவு செய்துள்ளேன். ( ‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts (1),(2),(3); http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html   )

இதுவரை உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள, சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களுக்கு, 'ஒரு திருத்த இணைப்பு' வெளியிடவேண்டிய அளவுக்கு, லெக்சிகன், உரைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய;

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், சாம்பமூர்த்தி உள்ளிட்டவர்களின் ஆய்வுகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்திய;

உலகிற்கு புதிதாக 'இசை மொழியியல்'(Musical Linguistics) என்ற துறையை தொல்காப்பியத்தில் கண்டுபிடித்து வெளிப்படுத்திய; 

தமிழ் அறிவு உலகில் மிகப்பெரும் விவாதப்புயலை கிளப்பும் என்று நான் கடந்த 20 வருடங்களாக காத்திருக்கும்;( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) 

எனது ஆய்வுகள், 'விவாத இருட்டில்' இருப்பதற்கு என்ன காரணம்? 1967க்கு முன் இது போன்ற 'விவாத இருட்டு' இருந்ததா? உலக அளவில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம், இவ்வாறு 'விவாத இருட்டில்' சிக்கியதற்கு என்ன காரணம்? புலமைக்கு எதிரான 'தீ பரவட்டும்' என்ற 'திராவிட' நோயானது, 'உணர்ச்சிபூர்வ இரைச்சலில்', 'அதிவேகமாக' பரவி, ராஜாஜி உதவியுடன் 1967இல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது தான், காரணமா? பொது அரங்கில் எதிரெதிர் நிலைப்பாடுகளில் பங்காற்றிய, (இந்திய விடுதலைக்கு முன், இடையில் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையில் 'இணைந்த')  ஈ.வெ.ராவும், ராஜாஜியும், கீழ்வரும் திருக்குறள் வழியிலிருந்து விலகி;
'வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கி செயல்'  திருக்குறள் 471;

சுயலாப நோக்கின்றி, மேற்கத்திய சூழ்ச்சியில், ஒரே சமூக செயல்நுட்பத்தில் (social mechanism), சிக்கியதன் பலனா?


உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இந்திய பிரிவினை' உள்ளிட்ட  'சமூகத்தை சீரழிக்கும்', 'குப்பனையும், சுப்பனையும்' காவு கொடுத்து, 'தீ இனம்' ஆனது செல்வம், செல்வாக்கில் வளர்வதற்கு காரணமான‌ 'அந்நிய' சூழ்ச்சிகளுக்கு, எனது ஆய்வுகள் பயன்படாது, என்பது தான் காரணமா?

அல்லது ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில், புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி, அறிவியல் உள்ளிட்ட பல்துறை ஆய்வுகள் (interdisciplinary research) தமிழில் வெளிவந்தால், அதை புரிந்து கொள்ளும் 'தகுதி, திறமை'களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமின்றி, மேலே குறிப்பிட்ட 'தீ பரவட்டும்' போக்கில் செல்வாக்கு பெற்ற, 'தமிழ், தமிழ் இசை' புலமையாளர்கள் பொது அரங்கில் 'ஆதிக்கம்' செலுத்தி வருவது காரணமா? என்ற ஆய்வுகளை, இனியும் தாமதிப்பது என்பது, தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்நிய சூழ்ச்சிகளை முறியடித்து, இந்தியாவை மீட்கும் என்ற நம்பிக்கையை விதைத்து, மோடி அரசு ஆட்சிக்கு வந்தும், அந்த சூழ்ச்சிகள் இன்னும் 'செல்வாக்குடன்' வலம் வருகின்றனவா? என்ற ஐயம் தொடர்பான வெளிச்சமும், மேலே குறிப்பிட்ட 'ராஜீவ் மல்கோத்ரா - மது கிஷ்வார் காணொளி பேட்டி'யில் கிடைத்தது.

இடையில் எனது முதுகுக்குப்பின்னால் 'பெரியார்' கொள்கையாளர்கள் மத்தியில் 'வலம்' வந்த கீழ்வரும் வதந்தி, எனது சுயநலம் பாராத வாழ்விற்கு கிடைத்த 'பரிசு' ஆகும். 

எந்த சூழலிலும் எனது நேர்மையை விட்டுக்கொடுக்காத, எனது இயல்பின் காரணமாகவும், 1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, 'ஊழல்' தமிழ்நாட்டில் அரங்கேறியதன் காரணமாகவும், நான் கடனில் சிக்கி, 'உடுக்கை இழந்தவன் கை'(திருக்குறள் 788) போன்ற நட்புகளால் மீண்டு, திருச்சி 'அன்னை ஆசிரமம்' உள்ளிட்ட பலருக்கு, என்னால் இயன்ற பண உதவிகள் புரிந்து வந்துள்ள நிலையில்;
  "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " என்று, திருச்சி பெரியார் மையத்தில் இருந்து, எனது சமூக வட்டத்தில் நான் 'ஏமாந்து' அனுமதித்த நபர்கள், அந்த 'வதந்தியை' பரப்பி, அதில் 'பெரியார்' கொள்கையாளர்கள் யார்? யார்? எமாந்தார்கள்? என்னுடன் பழகி, என்னை அறிந்தவர்களில், அதை கண்டித்தவர்கள் யார்? யார்? கண்டிக்கவில்லையென்றால், அவர்கள் அகத்தில் சீரழிந்தவர்களா?  என்று ஆராய வேண்டிய  அளவுக்கு, இழிவான சூழலும் தமிழ்நாட்டில் நீடிக்கிறதா? 'பெரியார் முகமூடியில்', பொதுவாழ்வு 'வியாபாரத்திற்கு', 'முதலில்லா மூலதனமாக' (investment without capital)  பயன்பட்ட, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' வரிசையில் 'ஊழல் ஒழிப்பு' எப்போது சேர்ந்தது? திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது?( http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://tamilsdirection.blogspot.co.uk/2017/03/blog-post_5.html ) 'ஊழல் வழிகளில்' பணம் சம்பாதிக்க, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைப்பவர்களையும், அவர்களை கண்டிக்காமல் 'நல்லுறவு' பேணுபவர்களையும், 'சமூக கிருமிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ்கிறேன்; அந்த 'பெரியார்' சமூக கிருமிகளில், அந்நிய சூழ்ச்சி வலையில் சிக்கியவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியுடன்.

தமிழ் மொழி தொடர்பாக தவறான கருத்துக்களை வெளிப்படுத்திய செல்டன் பொல்லாக்,  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இலக்கியங்கள் உருவாக துணை புரிந்துள்ளதாக, சமஸ்கிருதம் மொழியை பற்றிய, உயர்வான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும், அவையும், அந்த மேற்கத்திய சூழ்ச்சி குறிப்பாயத்தில் (Paradigm) உள்ளதை, ராஜிவ் மல்கோத்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக அளவில் சமஸ்கிருத மொழி கற்பவர்களின் எண்ணிக்கையானது, அதிகரித்து வரும் சூழலில் ( http://www.montclair.edu/RISA/d-studies.html ), தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணமும், 'தனித்தமிழ்' பற்றாளர்களின்,  'சுயநினைவற்ற' பங்களிப்புடன், தமிழர்களிடமிருந்து, 'விலகி', தமிழ் இலக்கணத்தின் மரணப்பயணமும், தமிழ் வேரழிந்த தமிழர்கள் அதிகரித்து வருவதும், அதிலிருந்து மீள வழியின்றி, 'புதிதாக' மாணவர்களிடம் கூட சாதி வெறி நுழைந்து, சாதி மோதல்கள் அதிகரித்து வருவதும், மேற்கத்திய சூழ்ச்சிவலையில், தமிழ்நாடு சிக்கியதன் பலன்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து, செல்டன் பொல்லாக் போன்ற எழுத்தாளர்களிடமிருந்து, சமஸ்கிருதத்தை மீட்க, போர் அறிவிப்பை, தனது நூல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார், ராஜிவ் மல்கோத்ரா;

மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து,
செல்டன் பொல்லாக், Irshik, HardGrave Jr போன்ற எழுத்தாளர்களிடமிருந்து, தமிழை மீட்க, போர் அறிவிப்பை, எனது பதிவுகள் மூலம், நான் வெளிப்படுத்தி வருகிறேன். அவரைப் போலவே, 'தடை' போன்றவற்றை ஆதரிக்காமல், உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து;('எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்'; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

அறிவுபூர்வ விவாதங்களை எதிர்நோக்கி, நானும் பயணிக்கிறேன்; ராஜிவ் மல்கோத்ராவைப் போலவே, உணர்ச்சிபூர்வ மூடர்கள் (morons) சிக்கலுடன்;
( 'உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில்; திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும்(2); 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ மூடர்கள் (morons) யார்?யார்?'; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html )