அழிவுபூர்வ போக்குகளின் குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கு' எதிராக நிற்கும்;
ஸ்டாலின், ஓபிஎஸ் போன்றவர்களை நாம் ஆதரிக்க முடியுமா?
சசிகலா குடும்பத்தின் 'தனித்துவ' திறமைகளால் மட்டுமே, 'சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேறவில்லை
‘காலில் விழுவதையும்,
ஆடம்பர பேனர்கள் வைப்பதையும் கண்டித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும்,
இன்றைய முதல்வர் தேசிய கொடி ஏற்றிய குடியரசு தின நிகழ்ச்சியிலும் பங்கேற்று, தி.மு.க
தலைவர் கலைஞர் கருணாநிதியை வெறுப்பவர்களில் பலரும் ஆதரிக்கத் தொடங்கும் அளவுக்கு,
'அரசியல் நாகரீகத்துடன்', தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பயணிக்கும் திசைக்கு எதிரான, 'அரசியல் தற்கொலை' திசையில், முதல்வர் ஓபிஎஸ்ஸை
அவமதித்து, சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலாவின் "சொந்த
செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' முயற்சியில், அரசியல் விஞ்ஞானத்தில்(
Political Science) புதிய ஆராய்ச்சிக்கு வழி
வகுக்கும் 'ஓபிஎஸ் நிகழ்வு' ( ‘OPS
PHENOMENON’ ) என்பதானது வெளிப்பட்டுள்ளது.’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( ‘நிமிர்ந்தது
ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட’; http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html
)
'நேற்று வரை குனிந்திருந்தவர்
தானே, ஓபிஎஸ்' என்று கேலி பேசுபவர்கள் எல்லாம், 'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்கள்
ஆவர்.
'நேற்று வரை குனிந்திருந்த
ஓபீஸ், இன்று நிமிர்ந்ததற்கு, அவரின் அகத்தில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளன? என்பது
அவரின் மனசாட்சிக்குத் தான் தெரியும்.
ஆனால், புறத்தில் ஜல்லிக்கட்டு
ஆதரவு போராட்ட வெற்றி உள்ளிட்டு, ஆக்கபூர்வமாக வெளிப்பட்டுள்ள சமூக விசைகளின்
(Social Forces) செல்வாக்கின் துணையின்றி,
சமூக அளவில் ஓபிஎஸ் நிமிர்ந்திருக்க முடியுமா? அகத்தில் உரிய மாற்றங்களின்றி, புற சமூக
விசைகளின் செல்வாக்கில், ஓபிஎஸ் நிமிர்ந்திருந்தால், அவ்வாறு நிமிர்ந்தது நீடிக்குமா?
ஓபிஎஸ் மட்டுமின்றி, தமிழ்நாட்டில், பணம் சம்பாதிப்பதற்காக, மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக குனிந்திருப்பவர்கள் எல்லாம், அவ்வாறு குனிந்திருப்பதானது, 'சமூக அவமானம்' என்று உணரும் அளவுக்கு;
ஓபிஎஸ் மட்டுமின்றி, தமிழ்நாட்டில், பணம் சம்பாதிப்பதற்காக, மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக குனிந்திருப்பவர்கள் எல்லாம், அவ்வாறு குனிந்திருப்பதானது, 'சமூக அவமானம்' என்று உணரும் அளவுக்கு;
மேலே குறிப்பிட்ட சமூக
விசைகளின் வளர்ச்சிக்கு, நாம் எவ்வாறு பங்காற்ற முடியும்? என்ற நோக்கில்;
'கடந்த கால அடிமைகளாக'
வாழாமல், நிகழ்காலத்தில் சுயமரியாதையுடன் காலூன்றி, அறிவுபூர்வமாக, சாத்தியமுள்ள வருங்காலம்
நோக்கி, வாழ்பவர்கள் எல்லாம், பங்களிப்பார்கள்.
சமூக இயக்கவியல்
(Social Dynamics) புரிதல் உள்ளவர்கள் எல்லாம், நாட்டு நடப்புகளில் வெளிப்படும் ஆக்கபூர்வ/அழிவுபூர்வ
சமூக விசைகளை (Social Forces) கணிப்பதிலும், ஆக்கபூர்வமாக பங்களிப்பதிலும், அவ்வப்போது
'உரிய' திருத்தங்களுடன், 'சமூக கணக்குகளுக்கு' விடைகள் கண்டு, பயணிப்பார்கள்.
'கடந்த கால அடிமைகளாக'
வாழ்பவர்கள் எல்லாம், தமது 'மனதில் பதிந்த குறிப்பாய அடிமைகளாக' ( Mental Slaves
to the Adopted Paradigm), தம்மிடம் உள்ள 'விடைகளுக்கு', 'சமூக கணக்குகளை' திருத்த
முயன்று,
சமூக போக்குகளின் ஓரத்தில்
ஒதுக்கப்பட்டு, 'வேடிக்கை' பார்த்து, 'அரைகுறை
அறிவு சுய இன்ப விமர்சகர்களாக' (semi-literate Intellectual Masturbation) வாழ நேரிடும்.
அவர்களில் திறந்த மனதும், அறிவு நேர்மையும் உள்ளவர்கள் எல்லாம், தம்மை திருத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான திசையில் வாழும் வழிகளை கண்டுபிடிக்க;
‘Freedom From the Known' by J.Krishnamurti ( 'தமிழில் 'அறிந்ததினின்றும் விடுதலை') புத்தகத்தை படிக்கலாம். ‘தமிழ்நாட்டில் கல்வியறிவற்ற 'தற்குறி'களில் பலர், தமது செயல்பாடுகளில் மிகுந்த அறிவாற்றலை வெளிப்படுத்தி வாழ்வதைக் கண்டு, நான் வியந்ததுண்டு. நன்கு படித்த புலமையாளர்களிடமிருந்தும், வெளிப்படும், மிகுந்த அறிவாற்றலை கண்டும், நான் வியந்ததுண்டு. ஆனால் அரைகுறை தமிழறிவுடன் , 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளாக' வளரும் போக்கானது, தமிழ்நாட்டில் எப்போது, தோன்றி, எப்படி வளர்ந்து, தமிழரின் 'அடையாளச் சிதைவிற்கும், அரசியல் நீக்கத்திற்கும்' எந்த அளவு பங்களிப்பு வழங்கி வந்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
தமிழ்நாட்டில் ஆங்கில அறிவில்லாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'பெரியார் சமூக கிருமிகள்' பலர், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், புராணங்களையும், கேலி செய்து மகிழும், 'அரைகுறை அறிவு சுய இன்ப விமர்சகர்களாக', வாழ்ந்து வருவதை, நான் 'அனுபவித்திருக்கிறேன்'.
அவர்களில் பலர் 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்ப வலைப் பின்னலில் இடம் பெற்று, 'பலன்கள்' அனுபவித்துக் கொண்டே, 'சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு' என்று மக்களை ஏமாற்றி வாழ, அதன் மூலம் அவர்களோடு, அவர்களின் நிலைப்பாடுகளும் மக்களிடமிருந்து அந்நியமாகி, தமிழ்நாடு திருப்பு முனைக் கட்டத்தில் இருக்கிறது; அதன் உந்து விசையாக, 'சசிகலா பினாமி ஆட்சி' எதிர்ப்புகளின் செல்வாக்கில். திராவிட இயக்க வளர்ச்சியில், அத்தகையோர் 'ஆதிக்கம்' பெற்றதன் விளைவாக, அறிவுப் புதையல்களான பழந்தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் 'மூடநம்பிக்கையாக' ஒதுக்கப்பட்டன. (‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'’; http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கும் காரணங்களாகி. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) அதன் தொடர்விளைவாக, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார் சிலை' மூலம் 'தலைவர் வழிபாடு' துவங்கி, அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) வினை ஊக்கியாகி (Catalyst), 'ஆதாய அரசியல்' வளர்ச்சியின் உச்சக்கட்டமாக, பணம் சம்பதிப்பதற்காக, மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக குனிந்திருப்பவர்களின் துணையுடன், இன்று சசிகலாவின் 'பினாமி ஆட்சியில்', தமிழ்நாடு சிக்கியுள்ளதா? அதையும் 'பெரியார்' வழிபாட்டுக் கட்சிகள், ஆதரித்து வரும் காட்சிகளும் அரங்கேறியுள்ளனவா? என்பவையும் ஆய்விற்குரியவையாகும்.
சோமசுந்தர பாரதியார் சரியாக சுட்டிக்காட்டியபடி,( http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-dec16-2014/27905-2015-02-21-03-30-23) 'தன்மானம்' என்ற தமிழ்ச்சொல்லை அறியாமல், புதிதாக தமிழில் 'சுயமரியாதை' என்ற சொல்லை, 'அரைகுறை' தமிழ் அறிவில் அறிமுகப்படுத்தியதும்;
ஆங்கிலத்தில் 'Self Esteem' (https://en.wikipedia.org/wiki/Self-esteem) என்ற சொல் இருப்பது தெரியாமல், 'Self Respect' என்ற சொல்லை, 'அரைகுறை' ஆங்கில அறிவில் அறிமுகப்படுத்தியதும்;
1944இல் தொடங்கிய திராவிடர்/திராவிட இயக்க வரலாற்றில், மேடையில் தலைவர் காலில் விழுந்து வணங்கும் போக்கானது, முதல்முறையாக எப்போது அரங்கேறியது? என்ற கேள்வி தொடர்பான எனது தேடலில், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய, கீழ்வரும் தகவல் கிடைத்துள்ளது.
1967இல் முதல்வராகும்
முன், அண்ணா, தான் விலகிய தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில், கட்சியில் மூத்தவர்களை
புறக்கணித்து, முரசொலி மாறனை வேட்பாளராக அறிவித்து, தேர்தலில் முரசொலி மாறன் வெற்றி
பெற்று, நடந்த பாராட்டு கூட்டத்தில், மேடையில் முதல்வர் அண்ணா காலில், முரசொலி மாறன்
விழுந்து, வணங்கியுள்ளார்.
மேலே குறிப்பிட்ட தகவல்
உண்மையென்றால், அதுவே 'அந்த கலாச்சாரத்தின்' 'திராவிட' தொடக்கமாகும்.
அதன்பின் முதல்வர்களாக இருந்த கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரையில், மெத்த படித்த துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் எல்லாம் காலில் விழுந்து வணங்கிய போது, அந்த துணை வேந்தர்களின், பேராசிரியர்களின், குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களை எல்லாம் கண்டித்திருந்தால்:
அதன்பின் முதல்வர்களாக இருந்த கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரையில், மெத்த படித்த துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் எல்லாம் காலில் விழுந்து வணங்கிய போது, அந்த துணை வேந்தர்களின், பேராசிரியர்களின், குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களை எல்லாம் கண்டித்திருந்தால்:
இன்று சசிகலா தமிழ்நாட்டு
சிறைக்கு மாற்றப்பட்டால், சிறை அதிகாரிகளில் யார்? யார்? சசிகலா காலில் விழுந்து வணங்குவார்கள்?
என்ற விவாதத்திற்கு இடம் இருந்திருக்காது.
தி.மு.கவின் செயல் தலைவர்
ஸ்டாலின், உண்மையிலேயே, அந்த கலாச்சாரத்தை, தி.மு.கவிலிருந்து, அகற்றுவதில் வெற்றி
பெற்றால், அதற்காகவே அவர் வரலாற்றில் இடம் பெறுவார்.
‘தமிழக முதல்வர்கள்’ காலில் விழுந்த, துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், போன்ற மெத்த படித்தவர்கள் எல்லாம் (அவர்களில்
யார்? யார்? 'பெரியார்', 'கம்யூனிஸ்ட்', 'முற்போக்கு', ஆதரவாளர்கள்?), அவர்களின் குடும்பங்களின்,
நண்பர்களின், ஆதரவோடு 'சிக்கும்' அளவுக்கு;
சமூக இழைகளிலும்
(Social Fibers), பிணைப்புகளிலும் (Social Bonds) ஏற்பட்ட பண்பு மாற்றங்களால், குடும்பம்,
நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான
செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவாக;
(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html
)
'திருச்சி பெரியார் மையத்தில்'
இருந்து, பின்னர் மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக, 'சசிகலா குடும்ப அரசியல்' எடுபிடிகளான,
'பெரியார் சமூக கிருமிகள்' போல; ( http://tamilsdirection.blogspot.in/2016/08/blog-post.html
)
ஜெயலலிதாவின் விசுவாசிகளாக
இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக' இன்று வலம் வந்த
போக்கில், 'சசிகலா பினாமி' ஆட்சியில், தமிழ்நாடு சிக்க நேர்ந்துள்ளதா?
நமது குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட சமூகத்தில், இன்று நாம் சந்திக்கும் நல்லவைகளும், தீயவைகளும், எப்போது முளை விட்டு, எப்படி விளைந்து, இன்று எவ்வாறு 'நல்ல/தீய அறுவடை பலன்களாக', நம்மை 'தீண்டுகின்றன'?, என்ற ‘அறிவுபூர்வ தேடல்’ இன்றி, 'உணர்ச்சிபூர்வ போதைகளில்' வாழ்வதானது, நமக்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிப்பதாகும்.
'இந்துத்வா எதிர்ப்பு' என்ற பேரில் பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், சுப.வீ உள்ளிட்ட இன்னும் பல எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள்/கவிஞர்கள் எல்லாம்;
ஆதரித்து வாழ்கிறார்களா?
காலனி ஆட்சியில், 'மேற்கத்திய வழிபாடு' நோயின் மூலம், இந்தியர்களின் மனதில் 'தாழ்வு மனப்பான்மையை' விதைத்து, வளர்த்த போக்கில், தமிழ்நாட்டில் 'திராவிடர் இன' நோயில்;
மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில், 'சசிகலா பினாமி ஆட்சி' என்பதானது, சசிகலா குடும்பத்தின் 'தனித்துவ' திறமைகளால் மட்டுமே அரங்கேறவில்லை, என்பதும்;
1944இல் முளை விட்ட 'திராவிடர்
நச்சு விதை'யின், அறுவடைக் கட்ட சமூக சூழலும், 'அவர்களின் திறமைகளும்', ஒருவகை 'மார்பிக்
ஒத்திசைவு' (http://www.sheldrake.org/research/morphic-resonance) சமூக செயல்நுட்பம் மூலம், 'அந்த பினாமி'
ஆட்சியை சாத்தியமாக்கியுள்ளது, என்பதும்;
கவனிக்கத்தக்கதாகும். அதே சமூக செயல்நுட்பத்தில்,
தமிழ்நாட்டில் முளை விட்டு 'தடம் புரண்ட', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப்
போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப் போக்கும்; சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி'
ஆட்சியா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post_19.html
)
ஜெயலலிதா நல்லவரா? கெட்டவரா? இரண்டும் கலந்தவரா? என்பது ஆய்வுக்குரியது. ஆனால் அவரால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளில்', அவரின் 'விசுவாசிகளாக' காலில் விழுந்து வணங்கிய எவரையும், நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், நாம் எதிர்ப்பின்றி அனுமதித்தால், நாமும் மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக மாட்டோமா?
இன்று தமது விசுவாசிகளாக
இருப்பவர்கள் எல்லாம், தமது மரணத்திற்குப் பின், தம்மால் 'தீயவராக' அடையாளம் காட்டப்பட்டவர்களின்
எடுபிடிகள் ஆக மாட்டார்களா? என்ற கவலையானது, சசிகலாவிற்கு இல்லாமல் இருக்கலாம்.
குடும்பம், நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவாக;
மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக;
(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )
வரிகள் கட்டாமல் பதுக்கும் 'கறுப்பு பணத்தை'(Black Money) விட ஆபத்தான, சுயநல அரசியல் போக்கை தீர்மானிக்கும் 'இருட்டுப் பணமானது' (Dark Money; https://en.wikipedia.org/wiki/Dark_money), உலக அரசியல் பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருவது தொடர்பான விவாதங்கள், உலகில் வெளிப்பட்டுள்ளன.( ‘the political and economic events of recent decades compel an evaluation of the gaming of the political system by vested interests manifested by the alarming influence of vast sums of dark money.’; https://www.theguardian.com/australia-news/commentisfree/2017/feb/25/just-as-neoliberalism-is-finally-on-its-knees-so-too-is-the-left ) ஊழலுக்கு தண்டிக்கப்பட்ட ஒரு சிறைக்கைதியானவர், உலகத்திலேயே, முதல் முறையாக, தமிழ்நாட்டில் 'பினாமி ஆட்சி'யை அரங்கேற்றியதில், 'இருட்டுப் பணம்' பங்காற்றியிருந்தால், அது உலக அளவிலான விவாதத்தில் இடம் பெறத்தக்கதாகும்.
'வின்னர்' திரைப்படத்தில் 'வடிவேலு'வை 'அச்சுறுத்திய' 'ரவுடி'யுடன், அதில் நகைச்சுவை காட்சிகள் வெளிவந்துள்ளன. அந்த 'ரவுடியுடன் இரகசியமாக' நேசமாகி, 'அந்த ரவுடியின் ஆதரவினை' 'பின்பலமாக'க் கொண்டு, ஊரை வடிவேலு மிரட்டும் நகைச்சுவை காட்சிகள், அந்த படத்தில் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக, இன்று தமிழ்நாட்டில், 'இந்திய, உலக ரவுடிகளின்' 'பின்பலத்தில்', தமிழ்நாட்டை அடிபணிய வைத்த 'திராவிட' தலைவர்கள் எல்லாம், அந்த 'இரகசியம்' தெரிந்த சுப்பிரமணிய சுவாமிக்கு அடி பணிந்தும், 'பயந்தும்', 'வாலைச் சுருட்டிக் கொண்டு', பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ஆனால் சுப்பிரமணிய சுவாமியோ, தனது 'வலிமையை' இந்தியாவின் நலனுக்கே பயன்படுத்தி வருவதால், ஒரு காலத்தில் 'அமெரிக்காவின் கைக்கூலி' என்று சித்தரிக்கப்பட்ட அவர், இன்று அமெரிக்காவின் 'ஆர்வார்ட்' (Harvard) பல்கலைக்கழகத்தின் 'தீண்டாமைக்கு' உள்ளாகியுள்ளார்.( http://www.rediff.com/news/report/harvard-snubs-subramanian-swamy/20111208.htm ) 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள்/இளைஞர்கள் மூலம், அந்த 'திராவிட நாடகமானது' முடிவுக்கு வரும் படலம் துவங்கி விட்டது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.
‘பிரமிக்க வைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டமானது வெற்றி பெற்ற, அதே தமிழ்நாட்டில்;
'மிருகப் பண்ணை' நாவலில்
வருவதைப் போல (‘Animal Farm’, an
allegorical novella by George Orwell; https://en.wikipedia.org/wiki/Animal_Farm
) சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில், எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் பல நாட்கள்,
சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாதவாறு அடைத்து வைத்து, சட்டமன்றத்திற்கு 'ஓட்டி வந்து',
'இரகசிய வாக்கெடுப்பு'க்கான துணிச்சலின்றி;
எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க,
நம்பிக்கை வாக்கெடுப்பில், சசிகலாவின் 'அடிமையான' ஒருவர், தமிழ்நாட்டின் முதல்வராக,
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 'வெற்றி'யானது
சட்டப்படி சரியாகுமா? என்ற குழப்பங்களுடன்.
தமிழ்நாட்டிற்கு தலைக்
குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை' எதிர்த்து
(http://www.ndtv.com/video/news/ndtv-special-ndtv-24x7/vk-sasikala-s-proxy-prison-rule-449384
) ;
இனிமேல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வன்முறையற்ற 'ஜல்லிக்கட்டு'
மாதிரி போராட்டத்தினை, சென்னை மெரினாவில் அரங்கேற்ற வழியில்லாதவாறு, 144 தடை உத்திரவின்
துணையுடன், அந்த ஆட்சி துவங்கியுள்ளது.’ என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ( ‘தமிழ்நாட்டில்
'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா? 'சசிகலா பினாமி' ஆட்சியின்
முள்ளிவாய்க்கால் பயணம்?’; http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post.html
)
மேலே குறிப்பிட்ட சட்டசபை
நிகழ்வுகளில், சில தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்தது உள்ளிட்ட
ஒழுங்கீனங்களுக்கு, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்;
அது போன்று, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, எந்த காலத்திலாவது, சட்டசபையில் தமது
கட்சி எம்.எல்.ஏக்களின் ஒழுங்கீனங்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறாரா? என்ற ஆய்வுக்கு
இடம் அளித்து.
'மிருகப் பண்ணை' நாவலில்
வருவதைப் போல, சசிகலா குடும்பம் தமது கட்சி எம்.எல்.ஏக்களை நடத்தி, 'ஆதாய அவமரியாதை
அரசியல்' குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலை, ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணி,
(http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html
) ;
தி.மு.கவை கண்டித்து
அறிக்கை வெளியிட்டதும், அதை 'முன்மாதிரியான' அரசியல் நாகரீகத்துடன் தி.மு.க செயல் தலைவர்
ஸ்டாலின் அதை எதிர்கொண்டதும், கீழ்வரும் செய்தியில், வெளிப்பட்டுள்ளது.
‘பேரவைத்தலைவர் நாற்காலியில்
அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும்
உரியதாக இல்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும் கூட. இந்தக் கட்டத்தில்
கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று வீரமணி தனது
அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி இன்று அண்ணா
அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தான் கி.வீரமணியிடம் மதிப்பும் மரியாதையும்
வைத்திருப்பதாக கூறினார். கி.வீரமணி வயது மூத்த தலைவர் என்றும் அவரை தான் விமர்சிக்க
விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார். ‘
நாட்டின் நடப்புகளில்
அழிவுபூர்வ போக்குகளின் குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கு' எதிராக நிற்கும், ஸ்டாலின், ஓபிஎஸ், போன்றவர்களின், அவர்களது கட்சிக்காரர்களின், கடந்த கால 'யோக்கியதைகளை' முன்னிறுத்தி,
மறைமுகமாக அந்த குவியத்தை பலகீனமாக்கி, 'சசிகலா குடும்ப அரசியல் நலன்களுக்கு', சுயலாப நோக்கின்றி, துணை போகின்றவர்கள் எல்லாம்
'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அதற்கு மாறாக, அழிவுபூர்வ
போக்குகளின் குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கு' எதிராக நிற்கும் சமூக விசைகளின்
மீது, நமது வரையறைகள் (Limitations) பற்றிய
புரிதலுடன், நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தி, அதன் அடுத்த கட்டமானது, மீண்டும் 'பொதுவாழ்வு
வியாபாரத்திற்கு வழி வகுக்காமல், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கி, பயணிக்க வைப்பது?
என்ற நோக்கில், 'கடந்த
கால அடிமைகளாக' வாழாமல், நிகழ்காலத்தில் சுயமரியாதையுடன் காலூன்றி, அறிவுபூர்வமாக,
சாத்தியமுள்ள வருங்காலம் நோக்கி, வாழ்பவர்கள் எல்லாம், பங்களிப்பார்கள். ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தில்
வெளிப்பட்ட சமூக விசைகளைப் (Social Forces) போலவே, சசிகலாவின் 'பினாமி ஆட்சிக்கு' எதிராக,
தமிழரின் ‘தன்மான மீட்பு’ நோக்கில், சமூக விசைகள் வெளிப்பட்டுள்ளன. அந்த எதிர்ப்பினை,
வெறும் தேர்தல் அரசியல் தளத்தில், ஆட்சி அதிகாரம் நோக்கிய எதிர்ப்பாக அணுகுபவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவி, 'வெற்றியை' சீர்
குலைக்க முயன்று அம்பலமானதை போல, ஒரு கட்டத்தில் முட்டாளாக ஓரங்கட்டப்படுவார்கள், என்ற புரிதலுடன், நாம் வழங்கும் பங்களிப்பானது,
சமுக பயனுள்ள வகையில் அமையும் என்பதும், எனது ஆய்வு முடிவாகும்.