தீபாவளி, ஆயுத
பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளை 'பெரியாரிஸ்டுகள்' எதிர்ப்பதானது, பகுத்தறிவா?
குருட்டுப் பகுத்தறிவா? (2)
சரஸ்வதி பூஜையை தமிழரின் கல்விக்கும்
தமிழ்வழிக்கல்விக்கும் புத்துயிர் கொடுக்கும் தினமாகவும்,
ஆயுத பூஜையை தமிழரின் தொழில்நுட்பப் புதுப்பிப்புக்கு புத்துயிர் கொடுக்கும் தினமாகவும் கொண்டாடுவோம்.
ஈ.வெ.ரா அவர்கள் தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளைக் கண்டித்ததும், 'தாய்ப்பால் பைத்தியம்' என்று தமிழை ஒதுக்கியதும், தமிழ்நாட்டின் சமூக ஆற்றல் மூலங்களில் இருந்து அவரை அந்நியப்படுத்தி தி.மு.க வளர எவ்வாறு உதவியது? என்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/blog-post_19.html )
திராவிடர் கழகம்
தமிழ்நாட்டில் பண்டிகைகளை எதிர்த்ததானது, எந்த அளவுக்கு தி.மு.க வளர உதவியது?
என்ற ஆய்விற்கு
அண்ணாவின் கீழ்வரும் மேற்கோள் உதவும்.
கீழ்கண்டவாறு
பேசி, தி.கவில் இருந்த இளைஞர்களை ஈர்த்து 1949இல் அண்ணா தி.மு.கவைத் துவக்கினார். 1957இல்
தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதும் அவ்வாறு தி.க பாணியில் இரட்டைக்குழல் போல
பேசியதைக் குறைத்தார். 1960 களில் அவ்வாறு பேசியது வற்றியது. ஈ.வெ.ராவுடன்
சேர்ந்து கண்டித்த அண்ணா 1967இல் ஆட்சியைப் பிடித்த பின், கம்பர் உள்ளிட்ட தமிழ்ப்புலவர்களுக்கு சிலைகள்
வைத்தார்.
அண்ணா மீது எந்த
அறிவுபூர்வ விமர்சனத்தையும் முன் வைக்காமல், இன்று
கம்ப ராமாயணம் தொடர்பான 'தீ பரவட்டும்' நூலின்
நிலைப்பாட்டினை அண்ணாவின் நிலைப்பாடாகவும், கீழ்வரும்
ஆயுத பூசைக்கு எதிரான நிலைப்பாட்டினை அண்ணாவின் நிலைப்பாடாகவும் முன் நிறுத்துவது
சரியா?
மேற்கத்திய
வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும்
தமிழ்நாடு பற்றியும் தாழ்வு மனப்பாமையை ஏற்படுத்தும் வகையில் அண்ணா வெளிப்படுத்திய
மேற்குறிப்பிட்ட கருத்தை ஒட்டியே, கீழ்வரும் ஈ.வெ.ராவின் கருத்தும்
வெளிப்பட்டுள்ளது.
"தமிழ்
தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த
தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ்
நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை?
என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே,
சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த
வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது
வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று
கேட்கிறேன்" (“தாய்ப் பால் பைத்தியம்’ என்ற நூலிலிருந்து)
மேற்கத்திய
வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில், சரஸ்வதி பூஜை, ஆயுத
பூஜை போன்ற பண்டிகைகளை ஈ.வெ.ரா, அண்ணா போன்ற தலைவர்கள் கண்டித்ததன்
காரணமாக, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும்
நிகழ்காலத்திலும் பாதிப்புகள் எவ்வாறு தொடர்கின்றன? இன்று
இங்கு பார்ப்போம்.
சென்னை மத்திய
தோலாய்வு நிறுவனத்தில் (Central Leather Research Institute) விஞ்ஞானியாகப் பணியாற்றிய முனைவர் என், சோமநாதன்
தனது தமிழார்வத்தால் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வினைச் சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்
மேற்கொண்டார். அதில் பழந்தமிழ் இலக்கியங்களில் தோல் பதனிடும் தொழில் நுட்பம்,
தோல் இசைக் கருவிகள் பற்றிய தொழில்நுட்பம் ஆகியவற்றைக்
கண்டுபிடித்துள்ளார். (http://nsomanathan.tripod.com/)
அந்த ஆய்வின் நகல் அங்குள்ள நூலகத்தில் உள்ளது. அரசியல் 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள்' 'பிடியில்' தமிழ்நாடு சிக்கியதால், இத்தகைய ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எனவே அந்த ஆய்வின்
அடிப்படையில் உயிர் இணக்க (Bio-friendly) தோல்
தொழில்நுட்ப/தோல் இசைக் கருவிகள் பற்றிய ஆய்வுகள், அதன்
தொடர்ச்சியாக 'இயல்பாக'
மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தும் பொருள் உருவாக்க (marketable
product development) முயற்சிகளும், இன்று வரை தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
நோவாம் சோம்ஸ்கி
உள்ளிட்ட உலக அளவில் புகழ் பெற்ற 'மொழியியல்' புலமையாளர்கள்
எல்லாம், 'நவீன மொழியியல்'(Modern
Linguistics)) என்ற
துறையில் சமஸ்கிருத மொழியின் பங்களிப்பினை அங்கீகரித்து பாராட்டி வருகிறார்கள்.
அவ்வாறு நோவாம்
சோம்ஸ்கி பாராட்டியதை சமஸ்கிருத ஆர்வலர்கள் எல்லாம் பெருமிதத்துடன் உலகு எங்கும்
பரப்பி வருகிறார்கள். இத்தனைக்கும் நோவாம் சோம்ஸ்கி இந்துத்வா எதிர்ப்பாளார்.
அவரின் மொழியியல் ஆராய்ச்சியை பாராட்டுபவர்களும், அவரின்
அரசியல் நிலைப்பாட்டை கண்டுகொள்வதில்லை.
ஆனால்
தமிழ்நாட்டின் 'திராவிட' சாபமாக,
ஈ.வெ.ராவை அண்ணாவை கருணாநிதியை பிரபாகரனை விமர்சிக்கும் என்னைப்
போன்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளால் தமிழ் வளர்வதைக் கெடுக்கும் வகையில்,
அந்த ஆய்வு முடிவுகள் வெளிச்சத்திற்கு வராமல், மேற்குறிப்பிட்ட
தலைவர்களின் ரசிகர்களான ஆதரவாளர்களும், அவர்களின்
செல்வாக்கில் அதிகாரத்தில் இருப்பவர்களும் கடந்த சுமார் 20 வருடங்களாக
தாமதப்படுத்தி வருகிறார்கள்.
அவ்வாறு என்
போன்றோரின் ஆய்வுகளால் தமிழ் வளர்வதைத் தாமதப்படுத்தி,
ஈ.வெ.ராவை
அண்ணாவை கருணாநிதியை பிரபாகரனை துதித்த காரணத்தால் ஊக்குவிக்கப்பட்ட நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் எல்லாம், ஊடக பலத்தில்
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், எந்த நேரத்திலும் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து
சிதற காத்திருக்கும் பிம்ப பலூன்களே ஆகும். (‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய
தமிழ்ப்புலமை?’; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html
)
நோவாம் சோம்ஸ்கி
தொல்காப்பியம் தொடர்பான எனது ஆய்வினைப் பாராட்டியுள்ளதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html
)
'மொழியியல்'
அடிப்படையில், 'Natural Language Processing -NLP’ மூலமாக 'speech -to- text; text-to- speech; spell check;
grammar check; etc' போன்ற மென்பொருட்கள் உலகில் பல
மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நவீன
மொழியியலில் (Modern Linguistics) சமஸ்கிருத மொழியின் பங்களிப்பானது உரிய
அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தின் துணையுடன்,
உலக மொழிகளுக்கான 'இசை மொழியியல்' (Musical
Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம்
மூலமாக துவங்கும் வாய்ப்பினையும்
சுட்டிக்காட்டியுள்ளேன்.
தொல்காப்பியத்தின்
' இசை மொழியியல்' அடிப்படையில்,
'lyrical text to music – to song; music to lyrical text; musical grammar check;
etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.
தொல்காப்பியத்தில்
உள்ள யாப்பிலக்கணத்தில் வரும் அசையானது, யாப்பிலக்கண
விதிகளுக்குட்பட்டு உருவான இசைப்பாடலுக்கான அசையாகும். அதனை எனது ஆய்வின் மூலமாகக்
கண்டுபிடித்து வெளியிட்டுள்ளேன்.
‘Musical Phonetics in
tholkAppiam’ in December 2013, in the journal from the International Institute
of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.in/journal
)
இசைக்கும்
மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்'
(logic) தொல்காப்பியத்தில் இருப்பதும், அக்கண்டுபிடிப்பின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தில்
வெளிப்பட்டுள்ள யாப்பிலக்கணமானது, உலகில் எந்த மொழியிலும், அசைகளின் அடிப்படையில் இசைக்கப்படும் இசைப்பாடலுக்கான 'உலகப் பொது
இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for musically rendered poems) ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2020/10/prosody-in-english-prosody.html )
இந்தியாவிலும்
வெள்ளையர் ஆட்சிக்கு முன் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்,நாகரிகத்திலும் பின்தங்கியிருந்ததாக படித்த இந்தியரில் பெரும்பாலோர்
நம்பும் அளவுக்கு அவர்கள் மனதிலேயே வெற்றிகரமாக விதைத்த சூழ்ச்சி பற்றி ஆய்வு
செய்து, தரம்பால் என்ற அறிஞர் ஆய்வு நூல்கள்
வெளியிட்டுள்ளார்.
(DHARAMPAL • COLLECTED
WRITINGS - Distributed by Other India
Bookstore, Above Mapusa Clinic, Mapusa 403 507 Goa, India.) அப்புத்தகத்திற்கு ‘Making History. என்ற தலைப்பில், புகழ்பெற்ற
மனித உரிமையாளர் கிளாடிஸ் ஆல்வாரிஸ் - Claude Alvares - எழுதியுள்ள
முன்னுரையானது, இந்நூலில் உள்ள ஆதாரங்கள் பற்றியும்,
ஆய்வின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது.
வெள்ளைக்காரர்
வருகைக்கு முன் இந்தியா கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்,
உலக வர்த்தகத்திலும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தது என்பது பற்றி,
உலகில் நடந்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில், திரு.குருமூர்த்தி
உள்ளிட்ட அறிஞர்கள் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சுமார் 20 வருடங்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள இசை அறிவியல்
நுட்பங்களை, எனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்து,
சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை நான் வெளிப்படுத்தி
வந்துள்ளேன்; (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html
)
தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, பழந்தமிழ் இலக்கியங்களை தமிழர்களுக்கு கேடானவையாக பிரச்சாரம் செய்து வரும் செல்வாக்கான 'திராவிட மன நோயாளிகள்' எல்லாம், எனது ஆய்வின் பலன்களால் தமிழும், தமிழ்நாடும் வளர தடைகளாக உள்ளார்கள், என்பதையும், அதன் மூலம் கண்டுபிடித்துள்ளேன்.
இந்தியாவில் இந்தியர்கள் தமது பாரம்பரியம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்பம்,
ஆகியவற்றைக் கீழாகவும், வெள்ளைக்காரர்களைப்
பற்றி உயர்வாகவும் எண்ணுவது தவறு என்று விளக்கும் அறிவுபூர்வமான ஆய்வுகளையெல்லாம்,
'இந்துத்வா' என்று
அச்சுறுத்தி, இருட்டில் தள்ளும் வேலையை, 'முற்போக்கு', மதச் சார்பின்மை' என்ற போர்வைகளில் செய்கிறார்களா? அல்லது
அவற்றை அறிவுபூர்வமாக விமர்சித்துள்ளார்களா? என்பதும்
ஆய்விற்குரியதாகும்.
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு.’ (திருக்குறள் 423)
என்பதைக்
கவனத்தில் கொள்ளவில்லையென்றால், இழப்பு யாருக்கு? (https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html
)
கல்வியிலும்
தொழில்நுட்பத்திலும் உயர்ந்திருந்த தமிழ்நாடானது காலனி ஆட்சியில் காலனிய
சூழ்ச்சியில் சிக்கியதால் வந்த கேடுகளை அறியாமல் (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )
ஈ.வெ.ராவும்
அண்ணாவும் மேற்கத்திய வழிபாட்டு போதையை ஊக்குவித்ததே ,
தமிழும் தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது.
எனவே சரஸ்வதி
பூஜையை தமிழரின் கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் புத்துயிர் கொடுக்கும்
தினமாகவும் ,
ஆயுத பூஜையை தமிழரின் தொழில்நுட்பப் புதுப்பிப்புக்கு புத்துயிர் கொடுக்கும் தினமாகவும் கொண்டாடுவோம்.