Saturday, October 17, 2020

 

1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் ஈ.வெ.ராவை இழிவு செய்த பாணியில்,


மாரிதாஸ் உள்ளிட்டு பல பா.ஜ.க ஆதரவாளர்கள்?
 

1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் எந்த அளவுக்கு ஈ.வெ.ராவை இழிவு செய்தார்கள்? என்று தெரியாத புதிய தலைமுறைக்கு, அவற்றை நினைவூட்டும் வகையில்(https://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html

மாரிதாஸ் உள்ளிட்டு பல பா..க ஆதரவாளர்கள் அதே பாணியில்,  தவறான தகவல்கள் மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் ஈ.வெ.ராவை இழிவு செய்து வருகிறார்கள்.

எனது தலைமுறையைப் போல, தி.மு.க தலைவர்களின் பேச்சில் எழுத்தில் ஏமாந்த தலைமுறை அல்ல,  இன்றைய புதிய தலைமுறை. எனவே தி.மு.க பாணியில் தவறான தகவல்கள் மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் இந்துத்வா முகாம்களில் ஈ.வெ.ராவை இழிவு செய்து வரும் போக்கானது,  'இந்துத்வா பாணி தி.மு.க'வாகவே தமிழக பா.ஜ.கவை இன்றைய புதிய தலைமுறைக்கு அடையாளம் காட்டும். அதன் காரணமாக, பிராமணரல்லாத மாணவர்களும் இளைஞர்களும் இந்துத்வா எதிர்ப்பு முகாம்களை நோக்கி ஆர்வம் காட்டும் போக்கும் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலும்,   'உட்குழு - வெளிக்குழு' சிக்கலும், அதற்கு சமூக வினையூக்கியாக (social catalyst) செயல்படுகின்றன.

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்கள்' எல்லாம், உணர்ச்சி பூர்வ பரிமாற்ற வெறுப்பு அரசியலில் சமூக நேர்மையைச் சீர்குலைத்துப் பயணிப்பதானது, 2014 முதல் வேகமெடுத்து வரும் ஆபத்தான சமூக சிக்னலாகும்.

அதன் தொடர்விளைவாக, 'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களாக‌‌ (Recruiting agents) எவ்வாறு பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.’ (‘'தமிழர்' உட்குழுவாக, 'இந்தியர்' வெளிக்குழுவாக, பிராமணரல்லாதார் 'உட்குழுவாக', பிராமணர்கள் 'வெளிக்குழுவாக'; எதிரெதிர் முகாம்களின் 'கறுப்பர் கூட்டங்கள்'; தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் கேடாகும் வகையில் உள்மறை (Latent) சங்கமம்; https://tamilsdirection.blogspot.com/2020/08/latent.html)

தவறான மற்றும் திரித்த தகவல்களின் தகவல்களின் அடிப்படையில், ஒரு தலைவரைப் பாராட்டுவதால், அவ்வாறு பாராட்டுபவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அதிக கேடு வராது.

ஆனால், எந்த ஒரு தலைவரையும் தவறான தகவல்கள் (உதாரணமாக, மணியம்மை ஈ.வெ.ராவின் வளர்ப்பு மகள்) மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் கண்டிப்பதன் காரணமாக, அவ்வாறு கண்டிப்பவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் கேடு விளைவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு கண்டிப்பவருக்கு அவர் வாழும் சமூகத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு கேடு விளையும்.

இந்துத்வா பற்றாளர் தங்க.முத்துக்கிருஷ்ணன் எல். முருகன் அவர்களுக்கு  எழுதிய பகிரங்க கடிதமும், எனது பின்னூட்டமும் முகநூலில் வெளிவந்துள்ளது. ஈ.வெ.ராவின் வாழ்க்கை வரலாறு பற்றிய அறியாமையில், அதே பாணியில் இன்னொன்று:  

https://www.youtube.com/watch?v=dhdk5MvH_cE&feature=youtu.be 

ஏற்கனவே ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்டவர்கள் ஈ.வெ.ரா பற்றி வெளியிட்டு வரும் தவறான கருத்துக்கள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளேன். (‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics EVRamaswamy’;  Why it may accelerate the breaking of Tamilnadu from India?; https://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html) 

நேர்மறை சிந்தனைகளுடன் வாழ்பவர்கள் எல்லாம் தமது நிலைப்பாட்டிற்கு எதிரான மனிதரை வெறுக்க மாட்டார்கள். ஒரு கொள்கையை எதிர்ப்பதற்கும்,  அந்த கொள்கையாளரை எதிர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை  அவர்கள் அறிவார்கள். எனவே ஒரு கொள்கையை எதிர்க்கும் போது,  கொள்கையாளரையும்  சேர்த்து எதிர்க்கும் வெறுப்பு அரசியலில் அத்தகையோர் பயணிக்க மாட்டார்கள். எனவே உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வமான வாதத்தையே,  அத்தகையோர் முன்னெடுப்பார்கள்.

நானறிந்த  வரையில் தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெறுப்பு அரசியலில் பயணித்த முக்கிய நபர்கள் எல்லாம் கருணாநிதிஸ்டாலின்மு.க.அழகிரி,   சசிகலா, நடராஜன் ஆகிய குடும்பங்களில் குறைந்த பட்சமாக ஒன்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்லுறவில் இருந்தவர்கள் ஆவார்கள். வெறுப்பு அரசியலை குடும்ப ஊழல் பாதுகாப்புக் கவசமாக வளர்த்த பெருமை(?) கருணாநிதியையேச் சாரும். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html

இந்துத்வா முகாமில் ஈ.வெ.ரா பற்றிய விவாதத்தினை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதையே நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். 

எனது பதிவில் கீழ்வரும் பகுதியில் கோட்சேயின் பெயரையும் குறிப்பிட்டிருந்தேன்.

தி.மு.க எம்.பி 'ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம், அறிவு நேர்மையில் தடம் புரண்டு, 'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா'  மனநோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழுவதற்கும் வாய்ப்புள்ளது.

ஈ..வெ.ரா, கோட்சே, உள்ளிட்டு எந்த பொதுவாழ்வு மனிதரின் தியாகங்களைப் புறக்கணித்து, அறிவுபூர்வ விமர்சனப் பார்வையையிழந்து,  அவர்கள் மீது உணர்ச்சிபூர்வ வெறுப்பினை உமிழும் 'செனோபோபியா'' எழுத்தாளர்கள் எவராவது, நம்முடன் நல்லுறவில் இருந்தால், அவர்களை திருத்த வேண்டும்; இயலாதெனில் நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும்.' (‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html  )

மேற்குறிப்பிட்ட பதிவில் கோட்சே பெயர் இடம் பெற்றது தொடர்பாக,  ஒரு 'பெரியார்' ஆதரவாளர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு 'கோட்சே காந்தியைக் கொன்றது தவறு. ஆனால் அதை மட்டும் வைத்து அவரை எடை போடக்கூடாது. நானறிந்த தகவல்களின் அடிப்படையில்,  நான் காந்தியை விட கோட்சேயை உயர்வாக மதிக்கிறேன்.' என்று தெரிவித்தேன்.

மேற்குறிப்பிட்டது தொடர்பாக, கீழ்வரும் பகுதியானது கவனிக்கத்தக்கதாகும்.

Jayamohan's Tamil book on Gandhi, had refutable blunders. Few years before, I paid the price & got the book from Pudukkottai Gnanalaya Krishnamoorthy. I started marking the portions that I could refute with the evidences. Meanwhile Gnanalaya Krishnamoorthy got the book from me, and did not return it till now. Due to lack of time, I could not work on it.

My close friend in Pudukkottai, Thiru.Kodandapani had collected valuable references to expose Gandhi. (‘Was Mahatma Gandhi a hypocrite?’; http://www.dailyo.in/politics/mahatma-gandhi-subhas-bose-ahimsa-non-violence-british-raj-independence/story/1/4756.html) Hope both of us will find time to work on those evidences, to bring out a book against ‘Gandhi Mania’; reason weakening, emotion banking based ‘myth making’ of the Indian leaders (like Gandhi, Nehru, EVR, etc), fuel, all kinds of anti-social, divisive forces. Encouraging emotion free, open minded intellectual debates, may help to combat the mania (without ignoring – like Jayamohan w.r.t EVR-  their sacrifices), strengthening the soft power to unify the people & to rescue the country from the divisive forces.

The soft power is a double-edged weapon w.r.t unifying as well as disintegrating a country like India. The above mania, by encouraging emotions to dominate over reason, weaken the soft power for ‘unifying the country’, while strengthening the soft power for disintegrating the country. (https://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none.html )

நான் காந்தியை விட,  கோட்சேயை உயர்வாக மதிப்பது தவறு என்று உரிய சான்றுகளின் அடிப்படையில் எதிர்ப்பதை வரவேற்கிறேன். அந்த சான்றுகளை நான் ஆராய்வேன். அவற்றின் அடிப்படையில் காந்தி மற்றும் கோட்சே தொடர்பான எனது நிலைப்பாடு தவறு என்று வெளிப்பட்டால்,

அதை பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை. அவ்வாறு செயல்பட எனக்கு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த தலைவர் ஈ.வெ.ரா ஆவார். (தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  ஈ.வெ.ரா; https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் தவறான தகவல்கள் மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில், ஈ.வெ.ராவை இழிவு செய்த பாணியில், இன்று இழிவு செய்து வரும் பா.ஜ.க ஆதரவாளர்கள் எல்லாம், அதற்கு வருத்தம் தெரிவித்து, திருந்தி பயணிப்பது அவர்களுக்கும் நல்லது. தமிழக பா.ஜ.கவிற்கும் நல்லது. இல்லையென்றால், அவர்கள் எல்லாம் பா.ஜ.கவிற்கு எந்த அளவுக்கு அனுகூல சத்ருவாகப் பங்களித்தார்கள்? என்பதை, வரும் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி விடும்.  (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_22.html)  

2014 முதல் தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கு எவ்வாறு தொடர்ந்து சரிந்தது? என்பதை எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.

எல்.முருகன் தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்' ஒரு நல்ல திருப்பம் ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக, தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலை தீர்க்கும் முயற்சியானது, மோடி ஆட்சியில் துவங்கி விட்டது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/1996-2011-2019.html)

1949 முதல் 1967 வரை முரசொலியில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்திய பாணியானது, இந்துத்வா ஆதரவு முகாம்களில், தி.மு.க பாணி துணிச்சலுடன் இன்று வெளிப்பட்டு வருவதும், 'சமூக காங்கிரின் நோய்' தொடர்பான சமூக அறிகுறியாகும்

காமராஜரின் அரசியலானது, தி.மு.கவின் வெறுப்பு அரசியலிடம் தோற்றது போலவே, தமிழக பா.ஜ‌.கவிற்குள் எல்.முருகன் - அண்ணாமலை கூட்டணியின் அரசியலானது, பா.ஜ‌.கவிற்குள் தி.மு.க பாணி வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்களிடம் தோற்கும் வாய்ப்பும் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/2-1925.html)  


குறிப்பு: தமிழக பா.ஜ.கவில் ஈ.வெ.ராவை அறிவுபூர்வமாக விமர்சிக்க விரும்புபவர்கள் எல்லாம், கீழ்வரும் குடிஅரசு தொகுப்பினை படிப்பது நல்லது.

குடிஅரசு இதழ் தொகுப்பு “ : http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

No comments:

Post a Comment