1996 & 2011 ஆண்ட கட்சிகளின் தோல்விகளுக்கு இடையில் என்ன வேறுபாடு?
2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றியில் இருந்து,
தி.மு.க ஆதரவு வாக்குகள் தொடர்ந்து சரியும் போக்கிலா?
1996 தேர்தலில், ஆண்ட கட்சியான அ.இ.அ.தி.மு.க
தோற்றது போலவே, 2011 தேர்தலில் ஆண்ட கட்சியான தி.மு.கவானது எதிர்க்கட்சியாக ஆக முடியாத
அளவுக்கு பெரும் தோல்வியைச் சந்தித்தது.
ஆனால் இரண்டு
தோல்விகளுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு.
மேல் நடுத்தர
மற்றும் வசதியான குடும்பங்களில் பெரும்பாலோர் தேர்தலில் வாக்களிப்பதில்லை.
அவர்களின் கோபத்தை ஈட்டும் அளவுக்கு ஆளுங்கட்சி ஆட்சி செய்திருந்தால், அடுத்து வரும்
தேர்தலில் ஆண்ட கட்சிக்கு எதிராக வாக்களிப்பர்கள். 1996 தேர்தலுக்கு முன், அந்த கோபமானது வெளிப்படையாக
ஊடகங்களில் வெளிவந்தது. நடிகர்களில் ரஜினி மட்டுமே துணிச்சலுடன் அந்த கோபத்தை
வெளிப்படுத்தினார். ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்திற்கு எதிராக வெளிப்பட்ட
கோப அலையில் 1996 தேர்தலில்
அ.இ.அ.தி.மு.க தோற்றது.
1996க்கு முன் முதல்வர் ஜெயலலிதாவின்
மீதும் சசிகலா குடும்பத்தின் மீதும் மக்களுக்கு இருந்த கோபங்களை ஊடகங்கள்
துணிச்சலுடன் வெளியிட்டன. ஜெயலலிதாவின் தோல்வியை குறித்த கணிப்புகளும் வெளிவந்தன.
ஆனால் 2011 தேர்தலுக்கு
முன், முதல்வர்
கருணாநிதி மீதும், கருணாநிதியின் குடும்பத்தின் மீதும் மக்களுக்கு இருந்த கோபங்களை
ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்குக்கான பணம்
சில ஆயிரமாக உயர்ந்து வெற்றி பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, துக்ளக்
தவிர்த்த அனைத்து பத்திரிக்கைகளும்,
லயோலா கல்லூரியும், 2011 தேர்தலில்
தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று கணித்தார்கள்.
2011 தேர்தலில் வாக்களிப்பதற்காகவே
புதுக்கோட்டையில் இருந்து சென்னை சென்று வந்தேன். பேரா. (ஞானாலயா) டோரதி
கிருட்டிணமூர்த்தி "யாருக்கு சார் வாக்களித்தீர்கள்?" என்று
கேட்டார்.
"அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன்' என்று பதில்
சொன்னேன். உடனே அவர் தெரிவித்தது,
எனக்கு மறக்க முடியாத சமூக சிக்னல் ஆனது.
"நான் இதுவரை கேட்டவர்களில் நீங்கள்
ஒருவர் தான் அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன் என்று சொன்னீர்கள். மற்ற எல்லோரும்
தி.மு.கவிற்கு வாக்களித்ததாகவே சொன்னார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் சொன்னதற்கு
எதிராக இருக்கிறது"
அரசால் கைப்பற்ற
முடியாத ஊழல் பணத்தை நம்மால் முடிந்த அளவு கைப்பற்றி, தமது கோப அலையை
எவருமே கணிக்க முடியாத அளவுக்கு வாக்களிக்கும் போக்கு தமிழக மக்களிடையே வளர்ந்து
விட்டது. (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_25.html
)
பொதுவாக பொது
வெளியிலும் ஊடகங்களிலும் தி.மு.க ஆதரவாளர்கள் தமது கருத்தினை வெளிப்படுத்தும்
அளவுக்கு, அ.இ.அ.தி.மு.க
ஆதரவாளர்கள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கான காரணம் வருமாறு:
பொதுவாக,
தமிழ்நாட்டில் ஆங்கில
மற்றும் தமிழ்ப்பத்திரிக்ககளை படிப்பவர்களும், வெளியில்
தமது அரசியல் ஆதரவு போக்குகளை வெளிப்படுத்துபவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில்
படித்தவர்களும், விவரமானவர்களும் ஆவார்கள். அவர்களில்
பிராமணர்களில் பெரும்பாலோர் பா.ஜ.க ஆதரவு போக்கில் பயணிப்பவர்கள்.
பிராமணரல்லாதோரில் பெரும்பாலோர் தி.மு.க ஆதரவு போக்கில் பயணிப்பவர்கள். அவ்வாறு
தி.மு.க ஆதரவு போக்கில் பயணிப்பதற்கான காரணம், வருமாறு:
கருணாநிதி
குடும்ப அரசியலானது, மாவட்டங்களில் உள்ள தி.மு.க அதிகார பீடங்கள் என்ற தூண்களின் வலுவில், மையப்படுத்தப்பட்ட
அதிகார பீடமாக செயல்பட்டது.
ஜெயலலிதா
ஆட்சியில், அமைச்சர் பதவியும்,
மாவட்ட செயலாளர் பதவியும் நிரந்தரமின்றி, அவ்வப்போது
மாற்றங்களுக்கு உள்ளாக நேரிட்டது. எனவே, சசிகலா குடும்ப அரசியலானது, தி.மு.கவிற்கு
இருக்கும் மாவட்ட அளவிலான அதிகார பீடங்கள் என்ற தூண்கள் இன்றி, ஜெயலலிதாவை
முன்னிறுத்தி, பின்னிருந்து இயக்கிய ஆதாய அரசியல் வலைப்பின்னலில் செயல்பட்டது.
எனவே
தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கும்,
விவரமானவர்களுக்கும் தங்களுக்கான காரியத்தை
சாதித்துக் கொள்ள அ.இ.அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியே என்றும் விரும்பத்தக்கதானது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/2021-1952-2021.html
)
அவ்வாறு தி.மு.க
ஆதரவு போக்கில் உள்ள படித்தவர்களும், விவரமானவர்களும் பொதுவெளிகளில் அரசியல் அதிகம்
பேசுபவர்களாக இருப்பார்கள்.
மேற்குறிப்பிட்ட
பதிவில், கீழ்வரும்
கணிப்பினையும் வெளியிட்டேன்.
'கருணாநிதி - மாறன் குடும்பம், சசிகலா
குடும்பம், மற்றும் அவர்களை ஒட்டி ஊழல் புரிந்த அனைத்து கட்சிகளின் முக்கிய
புள்ளிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், மோடி ஆட்சியில் நடந்த சோதனைகள் அடிப்படையிலான
வழக்குகள், வைகோவால் பிரபலமான சாதிக்பாட்சா கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளில்
உள்ள குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படும் வரையில், தமிழக
பா.ஜ.கவானது நோட்டாக்கட்சியாகப் பயணிக்கப் போவது இயற்கையின் தண்டனையாகும்.'
சசிகலா - நடராஜன்
குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாகத் தொடங்கி இருப்பதானது, தமிழ்நாட்டின்
மீட்சிக்கான நல்ல சமூக சிக்னல் ஆகும். அது தொடர்ந்து, பாரபட்சமின்றி
கருணாநிதி குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள், அந்த இரண்டு குடும்பங்களையும்
ஒட்டிப்பிழைத்தவர்களின் ஊழல் சொத்துக்கள் எல்லாம், அடுத்து அடுத்து பறிமுதலுக்கு உள்ளாக வேண்டும்.
அவ்வாறு மீட்கும் ஊழல் சொத்துக்கள் மூலமாக, டாஸ்மாக்கை ஒழித்து, புதிய வரிகள்
விதிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியும்.’
2014 முதல் தமிழ்நாட்டில் மோடியின்
செல்வாக்கு எவ்வாறு தொடர்ந்து சரிந்தது? என்பதை எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.
எல்.முருகன்
தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்'
ஒரு நல்ல திருப்பம் ஆகும்.
இந்திய
விடுதலைக்குப் பின், முதல் முறையாக, தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலை தீர்க்கும் முயற்சியானது, மோடி ஆட்சியில்
துவங்கி விட்டது.
சசிகலா - நடராஜன்
குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாகத் தொடங்கி இருப்பதானது
எவ்வாறு தமிழ்நாட்டை டாஸ்மாக் நோயில் இருந்தும், ஊழல் நோயில் இருந்தும் மீட்கும்? என்பதை மேலே
பார்த்தோம்.
கருணாநிதி
குடும்ப ஆதாய அரசியல் வலைப்பின்னலுக்கும், சசிகலா குடும்ப ஆதாய அரசியல் வலைப்பின்னலுக்கும் இடையிலான
வேறுபாடுகளைப் பார்த்தோம்.
உள்ளாட்சி
தேர்தல் வெற்றி தொடர்பாக, அ.இ.அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன்
வெளிப்படுத்திய கருத்து வருமாறு:
"இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 2,800 இடங்களிலேயே
போட்டியிட்டது. தி.மு.க. சுமார் 3,500 இடங்களில் போட்டியிட்டது. ஆகவே சதவீத அடிப்படையில் அ.தி.மு.கவுக்குத்தான்
வெற்றி" (https://www.bbc.com/tamil/india-51034481 )
மேற்குறிப்பிட்ட கருத்து சரி என்றால்,
2019 பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில்
மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தி.மு.கவின் வெற்றி,
அடுத்து வந்த
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிக வாக்கு வேறுபாட்டில்
அ.இ.அ.தி.மு.கவின் வெற்றி,
அடுத்து வந்த
உள்ளாட்சி தேர்தலில், சரியான மேற்குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படையில் தி.மு.க
வாக்குகளில் சரிவு போன்றவைகள் எதை உணர்த்துகின்றன?
2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றியில் இருந்து, தி.மு.க ஆதரவு
வாக்குகள் தொடர்ந்து சரியும் போக்கில் உள்ளன.
உள்ளாட்சி
தேர்தலுக்குப் பின், ஸ்டாலின் மகன் உதயநிதி மூலமாகவும், உ.பி முதல்வர்
அகிலேஷ் யாதவ் வலைப்பின்னலை சீர்குலைத்த பாணியில் பிரசாந்த் கிசோர் மூலமாகவும், தி.மு.கவின்
வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது சீர் குலைந்து வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி
இடைத்தேர்தல் வெற்றிகளும், உள்ளாட்சி தேர்தல் வெற்றிகளும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மூலமாக, அ.இ.அ.தி.மு.க
வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது வலிமை பெறும் போக்கில் பயணிப்பதை
வெளிப்படுத்தியுள்ளது.
எல்.முருகன்
அண்ணாமலை கூட்டணியானது தமிழ் அடையாள அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, அதன் மூலமாக, தமிழக பா.ஜ.க
பிரமிக்கும் வகையில் தமிழ்நாடேங்கும் வ:ளரத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு
மக்களின் நாடித் துடிப்புகளுடன் ஒட்டி, இயன்ற வரையில் பயணித்து வரும் அடிப்படையில், தி.மு.கவானது 2011 தேர்தலைப்
போலவே, 2021 தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவும், என்பது எனது
கணிப்பாகும்.
தமிழ்நாடு
இந்தியாவில் நோஞ்சான் மாநிலமாக இதுவரை பயணித்தது.
2021 தேர்தல் முடிவுகள் மூலமாக, தமிழ்நாடு
நோஞ்சான் நோயில் இருந்து விடுதலை பெற்று, கர்நாடகம், மகராட்டிரம், பஞ்சாப், கோவா போன்ற வலிமையான மாநிலங்களின் வரிசையில்
இடம் பெறத் துவங்கும். (‘தமிழ் உணர்வாளர்களும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும்/ஆதரவாளர்களும், தி.மு.கவை
ஆதரிப்பது ‘மருட்சியில்’ செய்யும் தவறா?’; https://tamilsdirection.blogspot.com/2020/10/blog-post.html
)
No comments:
Post a Comment