Saturday, October 10, 2020

 தமிழ் உணர்வாளர்களும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும்/ஆதரவாளர்களும்,


தி.மு.கவை ஆதரிப்பது 

மருட்சியில்செய்யும் தவறா?

 

'தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடிப்பதும்,'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் நீடிப்பதும், தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுத்து வரும் அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் ஆகும்.

அது தெரியாமல், மத்தியில் ஆளும் எந்த தேசியக்கட்சியும் தமிழ்நாட்டில் வேரூன்ற எவ்வளவு முயற்சித்தாலும்,

கிடைக்கும் கட்டுமரத்தைப் பிடித்து தப்பிக்கும் கடலில் மூழ்கிய நபரைப் போலவே,

கருணாநிதி அல்லது அவரைப் போன்ற வேறு கட்டுமரத்தைத் தான் தமிழ் உணர்வாளர்களும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும்/ஆதரவாளர்களும் ஆதரிப்பார்கள்.(‘மாயக் கட்டுமரங்களாகத் தடுமாறிப் பயணிக்கும் ஸ்டாலினும், சசிகலாவும்’; https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_10.html) 

2014 முதல் ஈ.வெ.ராவை (1949 - 1967 தி.மு.க பாணியில்) கண்டித்த பா.ஜ.க தலைவர்கள் மு.க.அழகிரி அல்லது சசிகலா ஆதரவு போக்கில் பயணித்ததையும், மேற்குறிப்பிட்ட பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.  

மேற்குறிப்பிட்ட அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் பற்றிய புரிதல் இன்றி, கருணாநிதியை மீட்பராகக் கருதிய மருட்சியை (illusions)  விளங்கிக் கொள்ளவேண்டுமானால்;

ஒரே நேரத்தில் பிராமணர்களையும் பிராமணரல்லாதோரையும் முட்டாள்களாக்கி, கருணாநிதி அரங்கேற்றிய 'சமூக கீரி - பாம்பு சண்டை' பற்றிய புரிதல் அவசியமாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html )

'சமூக கீரி - பாம்பு சண்டை'  மூலமாக வீரியம் பெற்ற மேற்குறிப்பிட்ட 'மருட்சியே';

டாட்டாவையே ராஜாத்தியிடம் கெஞ்ச வைத்த அளவுக்கு ( (நீரா ராதியா ஒலிப்பதிவுகள்: https://www.youtube.com/watch?v=udNHT8dAK9g ),

ஏழையாக சென்னையில் குடியேறிய கருணாநிதியின் குடும்பங்கள் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் அளவுக்கு உயர்த்தியது.

தி.மு.கவானது கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலில் எளிதாக சிக்க வழி வகுத்தது. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளும், பா.ஜ.க தவிர்த்த மற்ற கட்சிகளும் மாவட்டங்கள் வரையில், வாரிசு அரசியலில் சிக்கிய அளவுக்கு, அந்த சமூக நோயும் தீவிரமாகியுள்ளது.

கருணாநிதியின் பாசறையில் பயின்ற நடராஜன் அறிவில், ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா நடராஜன் குடும்பங்களும் அதே அளவுக்கு அதிபதி ஆனார்கள்.

சசிகலா நடராஜன் குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாகத் தொடங்கி இருப்பதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கான நல்ல சமூக சிக்னல் ஆகும். அது தொடர்ந்து, பாரபட்சமின்றி கருணாநிதி குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள், அந்த இரண்டு குடும்பங்களையும் ஒட்டிப்பிழைத்தவர்களின் ஊழல் சொத்துக்கள் எல்லாம், அடுத்து அடுத்து பறிமுதலுக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு மீட்கும் ஊழல் சொத்துக்கள் மூலமாக, டாஸ்மாக்கை ஒழித்து, புதிய வரிகள் விதிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியும்.

வரும் 2021 தேர்தலில், ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க அரசில் அங்கம் வகித்த தி.மு.கவை, தமிழ் உணர்வாளர்களும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும்/இந்துத்வா ஆதரவாளர்களும் ஆதரிப்பதானது, மேற்குறிப்பிட்ட மருட்சியில் செய்யும் தவறா? என்ற ஆராய்ச்சிக்கு கீழ்வருவது உதவும்.

‘But the rich and powerful, Smith argued, are neither happier nor morally superior to other people. They are often miserable and vicious. And they use our illusions about them to justify their privileges. Elites benefit from inequalities of wealth and power in our society because the basic structure of our emotional life, sympathy, leads us to identify with our oppressors.’  - ‘Adam Smith warned us about sympathising with the elites’; https://psyche.co/ideas/adam-smith-warned-us-about-sympathising-with-the-elites?

2021இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தால், ஸ்டாலின் மடியில் உள்ள ஊழல் கனத்தின் அளவுக்கு ஏற்ப, மத்திய அரசுக்கு சேவகம் புரிவார். ஸ்டாலினை ஆதரித்தன் காரணமாகவே, தமிழ் உணர்வாளர்களும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும் தமிழ்நாட்டில் செல்லாக்காசு அவார்கள். தி.மு.கவை ஆதரித்த இந்துத்வா ஆதரவாளர்கள் செல்லாக்காசாக மாட்டார்கள். தமிழக பா.ஜ.கவானது, 1949 முதல் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி தி.மு.க வளர்ந்த பாணியில், அதிவேகமாக வளர்வார்கள். 

தமிழக பா.ஜ.கவில் எல்.முருகன் -  அண்ணாமலை கூட்டணி ஓரங்கட்டப்படுவார்கள். ஆனால். தி.மு.க பாணியில் தமிழக பா.ஜ.க வளர்வதானது, எந்த அளவுக்கு இந்தியாவின் உண்மையான ஒற்றுமைக்கு ஆபத்தாக வெளிப்படும்? என்பதானது, அகில இந்திய பா.ஜ.கவின் தமிழ்நாட்டைப் பற்றிய அறியாமையைப் பொறுத்ததாகும்.

அவ்வாறு தி.மு.க பாணியில் தமிழக பா.ஜ.க வளர்வதானது, எல்லை மீறினால், மோடிக்குப் பின், இந்தியாவில் இருந்து முதலில் துண்டிக்கப்படும் நாடாக தமிழ்நாடு இருக்கும்.

மு.க அழகிரி, சசிகலா குடும்பங்களின் ஆதரவுடன் அரங்கேறும் சர்வாதிகார ஆட்சிக்கு, தமிழ்நாடானது 'பெரியார் மண்', 'இந்துத்வா மண்' என்று எந்த  மண்ணாக இருந்தாலும், சமூக காங்கிரின் நோயில் சிக்க வைக்கும் ஒரே வகை ஊழல் சர்வாதிகார மண் தான்.

சட்டத்தையும் பொது ஒழுக்கத்தையும் சீர் குலைத்து, மர்மமான முறையில் நோயுற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டது முதல், சசிகலா சிறை சென்ற வரையில், பல மாதங்கள் தமிழ்நாடு இருந்த நிலையானது, சமூக காங்கிரின் நோயின் முன்னோட்டமாக இருந்தது. சசிகலா மற்றும் கருணாநிதி ஊழல் குடும்பங்கள் சங்கமமாகி, மத்திய அரசை மெளன சாட்சியாக்கி நடந்த சமூக செயல்நுட்பமும், தமிழ்நாடானது எவ்வாறு சமூக காங்கிரின் நோயில் சிக்கும்? என்பதற்கு எடுத்துக்காட்டானது.

ஒரு சமூகத்தின் அடையாளச் சிக்கலானது உரிய முறையில் தீர்க்கப்படாமல், உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் தமிழ்நாடு பயணித்து மேற்குறிப்பிட்ட தி.மு.க நோயில் சிக்கியது. மீண்டும் அதே பாணியில், உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் தமிழ்நாடு பயணித்தால், தமிழ்நாடானது மீள முடியாத சமூக காங்கிரின் நோயில் சிக்கி விடும். (https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html )

சமூக காங்கிரின் நோயில் சிக்கிய சமூகமானது, எளிதில் நிரந்தர சர்வாதிகார ஆட்சியில் சிக்கி, ஆப்பிரிக்க நாடுகளைப் போல சீரழிவதைத் தவிர்க்க முடியாது.

கீழ்வரும் காரணத்தால், தமிழ்நாடு அந்த ஆபத்தில் சிக்காது.

தமிழக பா.ஜ.கவானது, மு.க.அழகிரி மற்றும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பிரிவினை சக்திகளுடன் சங்கமமாகி, 1949 முதல் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி தி.மு.க வளர்ந்த தி.மு.கவின் பாணியில், ஈ.வெ.ராவையும் அண்ணாவையும் கண்டித்து தமிழ்நாட்டில் வளர வாய்ப்பில்லை. ஏனெனில் கருணாநிதி போன்றவர்கள் ஈ.வெ.ராவை இழிவு செய்த போதும், அண்ணா தி.மு.கவின் தலைவர் பதவியை ஈ.வெ.ராவைப் போற்றும் வகையில் வெற்றிடமாகவே வைத்திருந்தார். அண்ணாவின் அந்த நெளிவு சுழிவு அணுகுமுறையின்றி, பொய்யான மற்றும் திரிந்த தகவல்களின் அடிப்படையில் ஈ.வெ.ரா மட்டுமல்ல, எந்த தலைவரையும் கண்டித்தால், அது 'பூமரங்காக'(Boomerang; https://en.wikipedia.org/wiki/Boomerang) கண்டித்தவரையே பாதிப்புக்குள்ளாக்கும்.

கருணாநிதியும் நடராஜனும் மறைந்துள்ள நிலையில், உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல் மூலமாக, தமிழ்நாட்டை சர்வாதிகாரத்தில் சிக்க வைப்பதற்கான‌ வாய்ப்பும் இல்லை.

2014 முதல் தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கு எவ்வாறு தொடர்ந்து சரிந்தது? என்பதை எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_22.html )

எல்.முருகன் தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்' ஒரு நல்ல திருப்பம் ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2020/09/1967-3.html)

இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக, தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலை தீர்க்கும் முயற்சியானது, மோடி ஆட்சியில் துவங்கி விட்டது.

சசிகலா நடராஜன் குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாகத் தொடங்கி இருப்பதானது எவ்வாறு தமிழ்நாட்டை டாஸ்மாக் நோயில் இருந்தும், ஊழல் நோயில் இருந்தும் மீட்கும்? என்பதை மேலே பார்த்தோம்.

கருணாநிதி குடும்ப ஆதாய அரசியல் வலைப்பின்னலுக்கும், சசிகலா குடும்ப  ஆதாய அரசியல் வலைப்பின்னலுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பார்த்தோம். (https://tamilsdirection.blogspot.com/2020/10/2021-1952-2021.html)

ஸ்டாலின் மகன் உதயநிதி மூலமாகவும், உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் வலைப்பின்னலை சீர்குலைத்த பாணியில் பிரசாந்த் கிசோர் மூலமாகவும், தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது சீர் குலைந்து வருகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிகளும், உள்ளாட்சி தேர்தல் வெற்றிகளும் ஈபிஎஸ் ஓபிஎஸ் மூலமாக, அ.இ.அ.தி.மு.க வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது வலிமை பெறும் போக்கில் பயணிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

எல்.முருகன் அண்ணாமலை கூட்டணியானது தமிழ் அடையாள அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, அதன் மூலமாக, தமிழக பா.ஜ.க பிரமிக்கும் வகையில் தமிழ்நாடேங்கும் வ:ளரத் தொடங்கியுள்ளது.‌

எல்லாவற்றையும் விட, தமிழ்நாட்டில் கொரோனா மூலமாக சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எல்லாம், தி.மு.க பாணி அரசியலுக்கு நம்ப முடியாத அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்புகளுடன் ஒட்டி, இயன்ற வரையில் பயணித்து வரும் அடிப்படையில், தி.மு.கவானது 2011 தேர்தலைப் போலவே, 2021 தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவும், என்பது எனது கணிப்பாகும்.‌‌

தமிழ்நாடு இந்தியாவில் நோஞ்சான் மாநிலமாக இதுவரை பயணித்தது. (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html)

2021 தேர்தல் முடிவுகள் மூலமாக, தமிழ்நாடு நோஞ்சான் நோயில் இருந்து விடுதலை பெற்று, கர்நாடகம், மகராட்டிரம், பஞ்சாப், கோவா போன்ற வலிமையான மாநிலங்களின் வரிசையில் இடம் பெறத் துவங்கும்.

No comments:

Post a Comment