Thursday, October 15, 2020

 

தொல்காப்பிய யாப்பிலக்கணம்


'புரோசடி' (prosody) இலக்கணமா? இசைச்செய்யுள் இலக்கணமா?

 

'யாப்பிலக்கணம் in English' என்று கூகுளில் தேடிய போது 'prosody' என்பது கிடைத்தது.

Tolkappiyam represents the older tradition in Tamil prosody while yapparungalam and yapparungalakkarigai represent the later tradition. The prosodic structure of literary works from the Sangam era has to be analysed according to the Tolkappiyam. (https://en.wikipedia.org/wiki/Tamil_prosody )

‘prosody meaning in tamil’ கூகுளில் தேடிய போதுயாப்பிலக்கணம்என்பது கிடைத்தது.

தமிழில் இன்று செவ்விசை (classical music) நாட்டுப்புற இசை (folk music) போன்ற பிரிவுகள் எல்லாம், காலனிய ஆட்சியில் மேற்கத்திய இறக்குமதியாக உள் நுழைந்தவை ஆகும்.

இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இங்கு இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை. அத்தகைய சான்றுகள் இருப்பின், அவற்றை எனது கவனத்திற்கு யாரேனும் கொண்டு வந்தால்,  ந‌ன்றியுடன் அவரைக் குறிப்பிட்டு - acknowledge செய்து-  அதனை திறந்த மனதுடன் ஆராய்வேன்.

மேற்கத்திய இசை வரலாற்றில் செவ்விசை (Classical Music) தோன்றி உருவான காலக்கட்டம் கி.பி 1550 முதல் 1900 வரை உள்ள காலக் கட்டமாகும். (http://en.wikipedia.org/wiki/Classical_music). பிரஞ்சுப் புரட்சி, தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் கலை, இலக்கியத் துறைகள் அரசர்கள் - ‍ பிரபுக்கள் பிடியிலிருந்து விடுதலை பெற்று, புதிய திசையில் புதிய சிந்தனையில் மேற்கத்திய உலகில் செவ்வியல் காலம் (Classical Period) தோன்றி வளர்ந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் உருவான செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளை இந்திய சமூகத்திற்குள் புகுத்தி அணுகுவது எப்படி சரியாகும்? (https://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

அது போலவே 'புரோசடி' (prosody) என்பதும் மேற்கத்திய இறக்குமதியாகும்.

தொல்காப்பிய யாப்பிலக்கணத்தினை 'புரோசடி'யுடன் தொடர்பு படுத்த என்ன நியாயம் இருக்கிறது? என்று ஆராய, முதலில் 'புரோசடி' என்றால் என்ன? என்று அறிய வேண்டும்.

பேச்சுக்கான ஒலிப்பியலில் (Phonetics) உயிர் எழுத்துக்களும் (vowels)  மெய் எழுத்துக்களும் (consonants) இடம் பெறும்.

பேச்சு என்பதானது, 'புரோசடியாக' மாறும் பொழுது, கூடுதலாக, அசைகள் (syllables), பேச்சுச்சுருதியின் ஏற்ற இறக்கம் (intonation: rise and fall of the voice pitch),  குரலோசை (tone: பேச்சில் குரலோசை, இசையில் ஒரு முழுச் சுர இடைவெளி), அழுத்தம் (stress),  ரிதம் (rhythm; கால வட்ட ஏற்ற இறக்கம்)

In linguistics, prosody is concerned with those elements of speech that are not individual phonetic segments (vowels and consonants) but are properties of syllables and larger units of speech, including linguistic functions such as intonation, tone, stress, and rhythm. Such elements are known as suprasegmentals. https://en.wikipedia.org/wiki/Prosody_(linguistics)#

Suprasegmental, also called prosodic feature, in phonetics, a speech feature such as stress, tone, or word juncture that accompanies or is added over consonants and vowels; these features are not limited to single sounds but often extend over syllables, words, or phrases. https://www.britannica.com/topic/suprasegmental

பேச்சொலியில் அசைக்கு பிரயோசனமான பங்கு ஏதும் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. (https://www.researchgate.net/post/What_do_you_think_about_the_linguistic_category_SYLLABLE_Is_it_useful_Are_there_regularities_which_cannot_be_explained_without_this_category )

அத்தகைய குழப்பத்திற்கு இடமின்றி, புரோசடியில் அசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோசடியின் மற்ற கூறுகளான பேச்சுச்சுருதியின் ஏற்ற இறக்கம், குரலோசை , அழுத்தம், ரிதம் போன்றவற்றின் செயல்பாடுகள் எல்லாம் புரோசடியில் இடம் பெறும் அசைகள் மூலமாகவே சாத்தியமாகும்.

அடுத்து புரோசடிக்கும் இசைப்பாடலாகிய செய்யுளுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? என்று பார்ப்போம்.

புரோசடியில் அசைகள் முக்கிய பங்கு வகிப்பது போலவே, இசைப்பாடலிலும் அசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில், புரோசடியில் இடம் பெறும் அசைகளுக்கும், செய்யுளில் இடம் பெறும் அசைகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. அவை வருமாறு:

அதற்கு முதலில் சுருதி (pitch) என்றால் என்ன? என்ற புரிதல் வேண்டும்.

இசைப்பாடலின் பண் (தமிழிசை), ராகம் (கர்நாடக இசை),  ஸ்கேல் (மேற்கத்திய இசை- musical scale) என்பதை, ஒரு தானத்தில் (ஸ்தாயி, octave) உள்ள 12 சுரங்களில் எந்தெந்த சுரங்கள் இடம் பெற வேண்டும்? என்ற அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியும். ஆனால் அந்த தானத்தில், ராகத்தில் அல்லது ஸ்கேலில், எந்தெந்த சுரம் எந்தெந்த ‌சுருதியில் ஒலிக்க வேண்டும்? என்பதை 'சுருதி சேர்த்தல்' (tuning) மூலமே தீர்மானிக்க முடியும்.

எனவே நமது செவியில் நாம் உணரும் இசை தொடர்பான‌ அதிர்வு எண்ணே சுருதியாகும். (Pitch can be defined as a sensory characteristic arising out of the frequency assigned to a note in a musical scale. The frequency assigned to a music note is based on the tuning system and pitch standard)

நமது செவியில் பேச்சில் அல்லது புரோசடியில் உணரும் ஓசையில் அதிர்வு எண்ணே, பேச்சுக்கான புரோசடிக்கான சுருதி ஆகும். பேச்சில் அல்லது புரோசடியில் உள்ள சுருதியானது இசைச்சுருதி ஆகாது. ஏனெனில் பேச்சும் புரோசடியும் பண்ணின்,  ராகத்தின் அல்லது ஸ்கேலின் அடிப்படையில் செயல்படுவது கிடையாது.

எனவே புரோசடியில் இடம் பெறும் பேச்சுச்சுருதியின் ஏற்ற இறக்கம் (intonation) என்பதற்கும், இசையில் சுருதியின் ஏற்ற இறக்கம் (musical intonation) என்பதற்கும் வேறுபாடு உண்டு.

அது போலவே, புரோசடியில் இடம் பெறும் அழுத்தம் (stress) என்பதில் இருந்து மாறுபட்டு, இசைப்பாடலில் அழுத்தம் என்பதானது, அந்தந்த இசைக்கான இலக்கண விதிகளின்படி கட்டுப்படுத்தப்படும்.

அது போலவே, புரோசடியில் இடம் பெறும் ரிதம் (rhythm) என்பதானது, அந்தந்த இசைப்பாடலில்  இசைக்கான இலக்கண விதிகளின் படியிலான தாளத்திற்கு உட்பட்டே செயல்படும்.

இதுவரை புரோசடிக்கும் இசைப்பாடலுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் பார்த்தோம்.

எனவே யாப்பிலக்கண விதிகளின்படி உருவாகும் செய்யுளானது இசைப்பாடலாகும்.

தொல்காப்பிய யாப்பிலக்கணத்தில் புரோசடி இடம் பெறவில்லை.

நானறிந்தவரையில், தொல்காப்பிய யாப்பிலக்கணத்தை புரொசடிக்கான இலக்கணமாகக் கருதி வெளிப்பட்டு வரும் கருத்தானது, காலனிய ஆட்சியில் நடந்த தவறாகும்; செவ்விசை,நாட்டுப்புற இசை போன்ற இறக்குமதிகள் மூலமாக தமிழிசையில் (இந்திய இசையிலும்)  குழப்பத்தை விளைவித்த தவறைப் போலவே.

தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணத்தில் வரும் அசையானது, யாப்பிலக்கண விதிகளுக்குட்பட்டு உருவான இசைப்பாடலுக்கான அசையாகும். அதனை எனது ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளேன்.

‘Musical Phonetics in tholkAppiam’ in December 2013, in the journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.in/journal )

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதும், அக்கண்டுபிடிப்பின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள யாப்பிலக்கணமானது, உலகில் எந்த மொழியிலும், அசைகளின் அடிப்படையில் இசைக்கப்படும் இசைப்பாடலுக்கான‌  'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for musically rendered poems) ஆகும்

அக்கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின் உலகப் பொது இலக்கணம்’ (Universal Grammar) தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர வல்லவையாகும்.

நவீன மொழியியல் (Modern Linguistics) அறிஞர் நோவாம் சோம்ஸ்கியின் பார்வைக்கு அதனை அனுப்பினேன்.

சோம்ஸ்கியின் உலகப் பொது இலக்கணம்அணுகுமுறையில், எனது கட்டுரையை மாற்றி எழுதி;

‘Musical Linguistics; applicable to the musically rendered poems in world languages; Non-semantic and music related rules for poems, discovered in ancient Tamil grammar tholkAppiam’ என்ற தலைப்பிலான கட்டுரையினை அவருக்கு அனுப்பினேன்.

அதற்கு கீழ்வருமாறு நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.

‘Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’

– Noam Chomsky 23 Sep, 2018

உலகில் உள்ள பல்கலைகழகங்களில் 'மொழியியல்' (Linguistics) என்ற துறை ஏற்கனவே உள்ளது.

புதிதாக 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையானது தொல்காப்பியம் மூலமாக உருவாக, நோவாம் சோம்ஸ்கியின் அங்கீகாரமானது மேற்குறிப்பிட்ட அவரின் மடல் மூலமாக கிடைத்துள்ளது. (‘நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்: தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்.’; https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html )

'மொழியியல்' அடிப்படையில், 'Natural Language Processing -NLP’ மூலமாக 'speech -to- text; text-to- speech; spell check; grammar check; etc' போன்ற மென்பொருட்கள் உலகில் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அது போலவே, தொல்காப்பியத்தின் ' இசை மொழியியல்' அடிப்படையில், 'lyrical text to music – to song; music to lyrical text; musical grammar check; etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.

நவீன மொழியியலில் (Modern Linguistics) சமஸ்கிருத மொழியின் பங்களிப்பானது உரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தின் துணையுடன், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பினையும் கீழுள்ள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2019/01/why-anti-sanskrit-is-harmful-to-tamil.html 

உலக அளவில் தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது 'புரோசடி' (prosody) இலக்கணமாகும்'

என்ற தவறான கருத்தானது, உலகம் முழுவதும் கற்பிக்கப்படும் தமிழ்க்கல்வியில் இடம் பெற்றுள்ளது.

அந்த தவறான கருத்தில் இருந்து தமிழ்க்கல்வியானது விடுதலை ஆகும் வரையில், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பானது தாமதமாகும், என்பதும் எனது அனுபவமாகும்.

தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்ற மாணவர்கள் எல்லாம் யாப்பிலக்கணத்தை விளங்கிக்கொள்ள 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), ஆகியவற்றில் அடிப்படை அறிவு பெற்றால், தொல்காப்பியத்தில் உள்ள 'இசை மொழியியல்' தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகையோருக்கு இசை மொழியியல் அடிப்படையிலான   Natural Language Processing (NLP) ஆய்வுத்திட்டங்களிலும், மென்பொருள் உருவாக்க (Software development)தொழில்களிலும், Resource Persons வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாக உள்ளன.

'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), அகியவற்றில் அடிப்படையில், யாப்பிலக்கணத்தினை விளங்கிக் கொள்ளும் ஒரு பாடத்திட்டத்தினை நான் உருவாக்கி செயல்படுத்தும் முயற்சியானது, சுமார் 20 வருடங்களாக தாமதமாகியுள்ளது. அது தொடர்பாக நான் மேற்கொண்ட முயற்சிகளையும், சந்தித்த ஏமாற்றங்களையும், நேரம் கிடைக்கும் போது பதிவு செய்வேன்.

அது போல பொறியியலில் ECE, Computer Science, உள்ளிட்ட இன்னும் அது போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் எல்லாம், ‘இசை மொழியியல்அடிப்படையில் NLP ஆய்வுகளும், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கம் (application software development) ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் காலமும் கனிந்து வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html )

நடக்காததை விட தாமதமாக நடப்பது நல்லது (better late than never) என்ற பழமொழியின்படி, இனியாவது 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), ஆகியவற்றின் அடிப்படையில், யாப்பிலக்கணத்தினை விளங்கிக் கொள்ளும் ஒரு பாடத்திட்டத்தினை உருவாக்கும் வாய்ப்பு விரைவில் உருவாக வேண்டும்.


குறிப்பு:

Tholkappiam based Musical Linguistics emerging as new field of Research for Natural Language Processing (NLP) product development : https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html

 

'The Origins of Tamil Classical Music'; 
https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&t=1221s 


No comments:

Post a Comment