Tuesday, October 20, 2020

 

தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளை 'பெரியாரிஸ்டுகள்' எதிர்ப்பதானது,

பகுத்தறிவா? குருட்டுப் பகுத்தறிவா?(1)

 

தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதை ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்த போது எதிர்க்கவில்லை; 1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய போதும் எதிர்க்கவில்லை.

1925 முதல் 1944 வரை, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முக்கிய மூலங்களாக (sources), மேற்கத்திய உலகில் நாத்திகம் மற்றும் கம்யூனிசம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

ஈ.வெ.ராவிற்கு ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாது. எனவே அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் ஆங்கில அறிவுள்ளவர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவைகளின் அடிப்படையிலேயே, 1925 முதல் 1944 வரை, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அது போலவே, ஈ.வெ.ராவிற்கு சமஸ்கிருதம் தெரியாது. எனவே தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவைகளின் அடிப்படையிலேயே ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

உலகில் தொன்மை மொழிகளில் அறிவுபூர்வ விவாதங்களை வெளிப்படுத்தும் நூல்கள் மிகுந்த மொழி சமஸ்கிருதம் ஆகும். தொன்மை மொழிகளில் நாத்திகம் பற்றிய அதிக நூல்கள் உள்ள மொழியாக சமஸ்கிருதம் இருப்பதை, இந்துத்வா எதிர்ப்பாளராகிய‌ அமர்தியா சென் வெளிப்படுத்தியுள்ளார்.  ( Page 35, 'Identity and Violence' by Amartya Sen)

மேற்குறிப்பிட்ட தக‌வலானது, ஈ.வெ.ராவின் பார்வைக்கு வந்திருந்தால், ஆங்கில மொழியைப் போலவே, சமஸ்கிருத மொழியையும் பாராட்டியிருப்பார்.

மேற்கத்திய உலகில் வெளிப்பட்டவைகளையும், சம்ஸ்கிருத நூல்களில் வெளிப்பட்டவைகளையும், இரண்டும் கெட்டானாகப் புரிந்து கொண்ட ஈ.வெ.ரா அவர்களின் 'நாத்திகம்' தொடர்பான நிலைப்பாடானது, சமஸ்கிருதத்தில் இருந்த பொருளை திரித்தது மட்டுமின்றி, அவ்வாறு திரிதலுக்கு உள்ளான சொல்லை, ஆங்கிலத்தில் உள்ள, கடவுள் மறுப்பு தொடர்பான‌ 'எதீஸ்ட்' (Atheist) என்ற சொல்லுடன் பொருத்தியதிலும் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. அவற்றை எல்லாம் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி பயணித்த 'பெரியார்' ஈ.வெ.ராவின் நாத்திகம்’; https://tamilsdirection.blogspot.com/2017/09/semanticdistortion.html)

அந்த பொருள் திரிதலுக்கும், அந்த திரிதலில் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்ததால், சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலுக்கும், உள்ள தொடர்பு பற்றியும், மேற்குறிப்பிட்ட பதிவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஈ.வெ.ரா அவர்களின் 'நாத்திகம்' தொடர்பான நிலைப்பாடானது, எவ்வாறு இரண்டும் கெட்டானாக இருந்ததோ அது போலவே, தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி புஜை தொடர்பான நிலைப்பாடானது, இரண்டும் கெட்டானாக இருந்து, சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலையும் ஊக்குவித்தது.‌ இன்று நானறிந்த பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், 'நாத்திகர்' என்ற போர்வையில் வலம் வருவதற்கும் மேற்குறிப்பிட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலே முக்கிய காரணமாகும்.

1919 முதல் 1944 வரை  ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் எண்ணற்றோரும், சேமித்து வளர்த்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944இல் தமிழ்ச் சொல்லான 'இனம்' பொருளில் திரிந்து, 'திராவிடர் கழகம்' உருவான சமூக செயல்நுட்பத்தில் பொதுவாழ்வு வியாபாரப் போக்கானது முளை விட்டு, அந்த சமூக ஆற்றல்களை எல்லாம் உணர்ச்சிபூர்வ போக்கில் அபகரித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( https://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

ஒரு சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் எல்லாம், சமுகம் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முக்கியமானவையாகும்.

“Festivals have both social and economic angles. In the chaotic and stressful planet we inhabit, happiness is overshadowed by negativity and insecurity and so the need for something that could bring positivity has been felt time and again. Thus, festivals that give us the opportunity to forget all our worries and celebrate the positive side of life, even if it is for a few days, came into existence. “; Why festivals are important; https://www.thenews.com.pk/print/188562-why-festivals-are-important#

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது, ஏசுநாதர்  பிற‌ப்பதற்கு முன்பே, 'பாகன்என்ற பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வந்த ஒரு பண்டிகையாகும்.

ஏசுநாதர் உண்மையில் டிசம்பர் 25 அன்று பிற‌ந்திருக்க வாய்ப்பில்லை, என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.

was Jesus really born on December 25?

The short answer is no. It is not believed Jesus was born on the day Christmas is globally celebrated. Instead, Christmas was chosen as a convenient celebratory day on the same day of a pagan holiday that celebrated the winter solstice, according to The History Channel.  https://www.newsweek.com/december-25-really-day-jesus-was-born-what-bible-says-1270667

பாகன் திருவிழா கொண்டாட்டத்தினை கிறிஸ்துமஸ் பண்டிகை என்று மாற்றியதும், கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதும் பரவுவதற்கு உதவியது.

ஈ.வெ.ரா அவர்கள் தீபாவளிஆயுத பூஜைசரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளைக் கண்டித்ததும், 'தாய்ப்பால் பைத்தியம்என்று தமிழை ஒதுக்கியதும்தமிழ்நாட்டின் சமூக ஆற்றல் மூலங்களில் இருந்து அவரை அந்நியப்படுத்தி தி.மு.க வளர எவ்வாறு  உதவியதுஎன்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது. அந்த பலகீனம் மூலமாகபாகன் திருவிழாவை அபகரித்த சமூக செயல்நுட்பத்தில்தமிழ்நாட்டில் கிறித்துவ மதமாற்றங்களுக்கு துணை புரியும் வகையில், 'பெரியார்கட்சிகள் எவ்வாறு பயன்பட்டு வருகின்றனஎன்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்க நாத்திகர் இங்கர்சால் எவ்வாறு கொண்டாடினார்? அவ்வாறு கொண்டாடுவதற்கு அவர் முன்வைத்த வாதங்கள் யாவை? என்பது தொடர்பான தகவல்கள் கீழ்வரும் இணைய தளத்தில் உள்ளது.

‘Christmas was not, nor did it have to be, a Christian holiday. He argued that “the good part of Christmas” was the secular, social part of it. He labeled it a “really human” tradition, and “a day to get acquainted with each other, a day to recall old memories, and for the cultivation of social amenities.” Ingersoll knew Christmas for what it is: a cultural ritual rooted in shared experience, not dated dogma.’

‘An Ingersoll Christmas’; https://nexuszine.wordpress.com/2008/12/03/an-ingersoll-christmas-by-writerlarge/

ஒரு சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பவை பல பரிமாணங்கள் கொண்டவையாகும். அப்பரிமாணங்களில் அப்பண்டிகைகள் கொண்டாடுவதற்காக சொல்லப்படும் கதைகள் ஒரு பரிமாணம் மட்டுமே. சமூக வரலாற்றில் அந்த காரணங்கள் எவ்வாறு மாறக்கூடும்? என்பதை கிறிஸ்துமஸ் பண்டிகையாக மாறிய பாகன் பண்டிகையானது வெளிப்படுத்தியுள்ளது. அது போலவே, சமூகத்தில் பரம்பரியமாகக் கொண்டாடப்படும் பண்டிகையை நாத்திகர்கள் எவ்வாறு மதம் தொடர்பான காரணத்தை நீக்கி கொண்டாட முடியும்? என்பதற்கு இங்கர்சால் நல்ல முன்னுதாரணமாக உள்ளார்.

சரஸ்வதி பூஜை பண்டிகை அன்று, பெரியாரிஸ்டுகள் தமது இல்லங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் சுத்தம் செய்து வணங்குவதும்,

ஆயுத பூஜை பண்டிகை அன்று, பெரியாரிஸ்டுகள் தமது வாழ்விற்கும் பொருள் ஈட்டுதலுக்கும் உதவிய கருவிகளை எல்லாம் சுத்தம் செய்து வணங்குவதும், 

ஈ.வெ.ரா பிறந்த தினத்தன்று பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து வணங்குவதை விட, மேலானதும் சமூக நல்லிணக்கத்திற்கு உதவுவதும் ஆகும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்க நாத்திகர் இங்கர்சால் எவ்வாறு கொண்டாடினார்? அவ்வாறு கொண்டாடுவதற்கு அவர் முன்வைத்த வாதங்கள் யாவை? என்பது ஈ.வெ.ராவின் பார்வைக்கு வந்திருந்தால்,

'தமிழர்களைத் தற்குறிகளாக்கியது பாரப்பனர்களே' என்று வெளிப்பட்ட காலனிய சூழ்ச்சியில் ஈ.வெ.ரா சிக்காமல் இருந்திருந்தால், (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

புராணங்கள் என்பவை எல்லாம் பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடாகும், என்பதும் ஈ.வெ.ராவிற்கு விளங்கியிருந்தால், (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட இந்துப் பண்டிகைகளை ஈ.வெ.ரா எதிர்த்திருக்க மாட்டார்;

என்பது எனது ஆய்வு முடிவாகும். அந்த ஆய்வு முடிவுக்கு எதிரான வாதங்களை, நான் ஆர்வமுடன் வரவேற்கிறேன்.

சாகும் வரையில், ஈ.வெ.ரா பொது சிவில் சட்டத்தினை ஆதரித்தார். அது எவ்வாறு தவறானது? என்று விளக்காமலேயே, இன்று பெரியார் கட்சிகள் பொது சிவில் சட்டத்தினை எதிர்க்கின்றனர்.

ஈ.வெ.ராவால் 'காலித்தனம்', 'சண்டித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை, இன்று கையிலெடுக்கும், ஆதரிக்கும், 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களில் எவராவது, குறைந்த பட்சம் ஈ.வெ.ரா அவர்கள் அவ்வாறு கண்டித்தது தவறு என்று சொல்ல துணிச்சல் இல்லையென்றாலும், தாங்கள் இன்னும் 'பெரியார் வழியில்' 'பெரியார் தந்த புத்தியில்' பயணிப்பதாக சொல்லிக் கொள்வது வெட்கக்கேடில்லையா? (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

தமது கொள்கைக்கு எதிரான புத்தகங்களை, திரைப்படங்களை தடை செய்யுமாறு கோராமல், அவற்றை எல்லாம் அறிவுபூர்வமாக மறுத்து தமது பிரச்சாரத்திற்கான வாய்ப்புகளாக கருதி பயணித்தவர் ஈ.வெ.ரா. ஆனால் இன்று பெரியார் கட்சிகள் எல்லாம், விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பாணியில் அச்சுறுத்தி 'மெட்ராஸ் கஃபே' போன்ற திரைப்படங்களை தடை செய்தும், முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்த்துக் கெடுத்தும் பயணித்துக் கொண்டு, தாங்கள் இன்னும் 'பெரியார் வழியில்' 'பெரியார் தந்த புத்தியில்' பயணிப்பதாக சொல்லிக் கொள்வது வெட்கக்கேடில்லையா?

அவ்வாறு 'பெரியார் தந்த புத்தியில்' இருந்து தடம் புரண்டு பயணிப்பவர்கள் எல்லாம், தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளை எதிர்ப்பதானது, குருட்டுப் பகுத்தறிவா? அல்லது பொதுவாழ்வு வியாபாரமா? என்ற கேள்விகளுக்கான விடைகள் எல்லாம், அவ்வாறு பயணிக்கும் பெரியாரிஸ்டுகளின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.


குறிப்பு: முகநூலில் காளிங்கன் பதிவில்: 

"சமணம் உருவ வழிபாடற்ற மதம். சமணம் பௌத்தத்திற்கு மூத்த மதம். சமணர்களும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். சில பௌத்த பிரிவினர் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். சீக்கிய சமயம் இந்து, இஸ்லாம், பௌத்தசமயக் கருத்துகளை உள்ளடக்கியது. சீக்கியர்களும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

தென் இந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்று நோய்க் காலங்களில் அந்த தீய சக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பது ஒரு வழமை. ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென் இந்தியாவில் மிகப்பெரிய நோய்க்காலம். விளக்குகளை ஏற்றி வைப்பது கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது. தாலப்பொலி என்ற வடிவில் தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். தொன்மையான காலத்தில் இந்த வழமை வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். 

பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது. அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய வெவ்வேறு உருவாக்கங்களும் அழிவுச்சக்தி என்றே உருவாக்கம் பெற்றுள்ளன. 

பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகை. சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் சமணம் பௌத்தம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப் பார்க்கலாம். "

No comments:

Post a Comment