தமிழ்ப் பகைவர்கள் யார்? (3)
தமிழ் மொழிக்காக
உழைப்பவர்கள், ஊடகத்தில் சந்திக்கும் படுகுழிகள்
'தமிழ் மொழிக்காக
உழைப்பவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இரு தரப்ப்பினருக்கும் இடையிலான
கலந்துரையாடல் மிஸ் பண்ணாமல் பாருங்கள்' என்ற தலைப்பில்
வெளிவந்த கீழ்வரும் ‘நீயா? நானா?’ காணொளி எனது கவனத்தினை ஈர்த்தது.
https://www.facebook.com/103803354731913/posts/170403254738589/?sfnsn=wiwspwa
மேகுறிப்பிட்ட 'தமிழ் மொழிக்காக உழைப்பவர்கள்' என்ற
வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் ஒரு சிலரை மட்டுமே நான் அறிவேன். அதில் உண்மையில்,
தமிழ் மீதிருந்த உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன், பணம்
ஈட்டுவதை முதன்மை குறிக்கோளாக கொள்ளாமல், இழப்புகளைக்
கண்டு அஞ்சாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் மிகவும் போற்றத்தக்கவர்கள்
ஆவார்கள்.
அந்த வரிசையில்
இருந்த 'அகரமுதலி தொகுப்பின்' தலைவர்
மதிவாணனை நான் அறிவேன்.
முதல்வர்
ஜெயலலிதா ஆட்சியில், சென்னை அரசு இசைக்கல்லூரி முதல்வர்
திருப்பாம்புரம் சண்முகசுந்தரம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட 'தமிழ்
இசைக்கலைக்களஞ்சியம்' திட்டம் முடிந்து சமர்ப்பிக்கப்பட்ட
ஆய்வு அறிக்கையை மதிப்பீடு செய்யும் பணியை, மதிவாணனும் நானும் செய்தோம். அவரின் சமூக
நேர்மையும், அறிவு நேர்மையும் என்னை வியப்பில்
ஆழ்த்தியது.
அதே நேரத்தில்,
சிந்து சமவெளி எழுத்துக்கள் பற்றிய அவரின் ஆராய்ச்சியானது, உலக அளவில் உள்ள புலமையாளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்டது? என்பது எனக்கு தெரியாது.
2010-இல்
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மேற்குறிப்பிட்ட காணொளியில்
இடம் பெற்ற எவரும் கெளரவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் ‘சிந்து சமவெளி மொழியானது திராவிட
மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்' ("most likely to have
belonged to the Dravidian family") என்று கருத்து தெரிவித்த அஸ்கோ பர்போலா
(https://en.wikipedia.org/wiki/Asko_Parpola#cite_note-5)
என்ற மேற்கத்திய வெள்ளைக்கார அறிஞர் மிகுந்த
முக்கியத்துவத்துடன் கெளரவிக்கப்பட்டார்.
அஸ்கோ
பர்போலாவின் சிந்து சமவெளி மொழி தொடர்பான ஆய்வில் உள்ள குறைபாடுகளை ஐராவதம்
மகாதேவன்வெளிப்படுத்தியுள்ளார்.
'An Encyclopaedia of The Indus
Script' - Iravatham Mahadevan; DEGPHERlNC mE INDUS SCRIPT By Asko Parpola - Cambridge
University Press, 1994; http://rmrl.in/wp-content/uploads/2014/02/papers/21.pdf
சிந்து சமவெளி
மொழி தொடர்பான மதிவாணனின் ஆய்வினை அஸ்கோ பர்போலாவின் பார்வைக்கு கொண்டு சென்று
அவரின் கருத்துக்களை பதிவு செய்யும் முயற்சியானது, கோவை
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அது போல
ஐராவதம் மகாதேவன் போன்ற உலக அளவில் மதிக்கப்படும் அறிஞர்களின் பார்வைக்கு, மதிவாணனின் ஆய்வினைக் கொண்டு சென்று அவரின் கருத்துக்களை பதிவு
செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தனிமனித அளவில் மதிவாணன்
அம்முயற்சிகளில் ஈடுபடுவதில் உள்ள சிரமங்களை நான் அறிவேன். அரசின் ஆதரவுடன் நடந்த
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அது போன்ற முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்பாகும்.
‘சிந்து சமவெளி
மொழியானது திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்' என்று தெரிவித்த அஸ்கோ பர்போலா கோவை மாநாட்டில் மிகுந்த
முக்கியத்துவத்துடன் கெளரவிக்கப்பட்டது போல, '‘சிந்து
சமவெளி மொழியானது தமிழே' என்று ஆய்வு செய்துள்ள மதிவாணன்
கெளரவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தாம் மேற்கொண்ட
ஆய்வுகளின் முடிவுகளை அது தொடர்பான புலமையாளர்களின் பார்வைக்குக் கொண்டு சென்று,
அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை முதலில் சரி செய்ய வேண்டும்.
அவ்வாறு தொடர்புள்ள புலமையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளையே வெளிப்படுத்த
வேண்டும். அதற்கு முன், செய்தியாக தமது ஆய்வுகளை
வெளிப்படுத்தலாம். அதிலும் புலமையாளர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,
என்ற உண்மையை மறைத்து வெளியிடுவதானது, சமூக
நேர்மையாகாது.
மேற்குறிப்பிட்ட
காணொளியில் பரிசு பெற்ற ஒருவர், அது போன்ற குறைபாட்டினை வெளிப்படுத்தியதையும்,
நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
‘பொருளில் உள்ள
புலமை பற்றிய தமது வரை எல்லைகள் தெரியாமல் எழுதும்; பொ
வேல்சாமி போன்ற எழுத்தாளர்களால் விளையும்
சமூக கேடுகள்; https://tamilsdirection.blogspot.com/2017/02/1500.html &
தமது ஆய்வு
முடிவுகளுக்கு வலிவு சேர்க்கும் புதிய ஆய்வு வெளிப்பட்டாலும், அதனை தம்மால்
விளங்கிக் கொள்ளமுடியாத நிலையில்,
‘தெரியாததை தெரியாது' என்று
கூச்சமின்றி தெரிவிக்கும் துணிச்சல் வேண்டும், என்பதை உலகப்புகழ் பெற்ற அறிஞர் நோவாம்
சோம்ஸ்கியிடம் நான் கற்றுக் கொண்டேன். (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html)
தனிமனிதராக
இருந்தாலும், சமூகமாக இருந்தாலும்,
குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தும்
செயல்நுட்பத்திற்கு உள்ளாகவில்லை என்றால், தரத்தில் வீழ்ச்சி என்பது தவிர்க்க
இயலாததாகும்.
என்னிடம் உள்ள
குறைகளை எனது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட
வேண்டும்; எனது
ஆய்வுகளில் உள்ள குறைகளை, எனது ஆய்வு வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி
சுட்டிக்காட்ட வேண்டும்; என்ற திசையிலேயே இன்றும் பயணித்து வருகிறேன். அரங்கில் (வகுப்பறையாக
இருந்தாலும்) இருப்பவர்களை விட, நாம் அதி புத்திசாலி என்ற தோரணையில் நான் என்றுமே பேசியதில்லை. (‘தமிழ், தமிழ் இசை
ஆய்வுகளின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது?’; https://tamilsdirection.blogspot.com/2020/04/growth-mindset.html)
மேற்குறிப்பிட்ட
காணொளியில், தமிழில் உள்ள கல்வெட்டுகள் மற்றும்
சுவடிகள் இன்றுவரை வெளிவராமல் இருளில் நீடிக்கும் அவலத்தினைக் குறிப்பிட்டார்கள்.
மன்மோகன்
ஆட்சியினைக் கட்டுப்படுத்திய சோனியா காந்தி கிறித்துவர். இந்துத்வா எதிர்ப்பாளர்.
அந்த ஆட்சியில் செல்வாக்கான தி.மு.க அமைச்சர்கள் அங்கம் வகித்தனர்.
மேற்குறிப்பிட்ட
அவலத்தினை நீக்க, தமிழக முதல்வராக நீண்ட காலம் இருந்த
கருணாநிதி ஏன் முயற்சிக்கவில்லை? சோனியா காந்தியும் கருணாநிதியும்
பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கியதால், அது
நடைபெறவில்லையா? அல்லது அந்த இரண்டு குடும்பங்களும்
தம்மை வளமாக்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்ததால், அந்த
அவலத்தினை நீக்க முயற்சிக்கவில்லையா?
கீழடி தடயம்
கருணாநிதி முதல்வராக இருந்த போதே வெளிப்பட்டு, ஆனால்
மோடியின் ஆட்சியில் தான் அகழாய்வு தொடங்கியது. மோடி அரசில் தான் சி.பி.ஐ
சொதப்பலால் 2ஜி குற்றவாளிகள் விடுதலை ஆகினர்.
அதுபோலவே, தொல்பொருள்துறையில் நடந்த சூழ்ச்சியில்
தான், கீழடி அகழாய்வில் பின்னடைவு ஏற்பட்டது. பின்
எதிர்ப்பின் மூலம் வெளிப்பட்ட சிக்னலை உணர்ந்து, கீழடி
அகழாய்வு மட்டுமின்றி, பிற அகழாய்வுகளும் மோடி ஆட்சியில்
புத்துயிர் பெற்று நடைபெற்று வருகின்றன. 'சமஸ்கிருதத்தை
விட தொன்மையான மொழி தமிழ்' என்று அறிவித்து, திருக்குறள், புறநானூறு
உள்ளிட்டவற்றில் இருந்து மேற்கோள்களை தமிழில் உலக அரங்குகளில் பிரதமர் மோடி வெளிப்படுத்தி
வருகிறார்.
ஆனால்
மேற்குறிப்பிட்ட காணொளியானது, பிராமண எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ்நாடு பிரிவினை ஆதரவு போக்குகளை, காணொளியைப் பார்ப்பவர்கள்
மனதில் தோன்றும்படி எடிட் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வ' போக்கிலான வெறுப்பு நோயின்
வளர்ச்சியும், தாம் எழுதும் பொருளில் உள்ள புலமை
பற்றி, தமக்குள்ள வரை எல்லைகள் (intellectual
limitations) தெரியாமல் எழுதும் எழுத்தாளர்களின்
வளர்ச்சியும், எந்த அளவுக்கு ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையது? என்பதையும் முனைவர் பட்ட ஆய்வாக
மேற்கொள்ளலாம். (https://tamilsdirection.blogspot.com/2017/02/1500.html)
சமஸ்கிருதம்
தொடர்பாக துக்ளக் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் உலக அளவில் சமஸ்கிருதம் பெற்று வரும்
பிரமிப்பூட்டும் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
ஆனால் தமிழ்
தொடர்பாக வெளிப்பட்டுள்ள பிரமிப்பூட்டும் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள்
எல்லாம் உரிய ஆதரவு இன்றி, அக்கண்டுபிடிப்புகள் மூலமாக தமிழ் பெற
வேண்டிய வளர்ச்சியும் நத்தை வேகத்திலேயே முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் 'சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு' என்ற நோக்கில் செயல்பட்ட ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் எல்லாம்
தத்தம் மனசாட்சிக்குட்பட்டு, மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள்
தொடர்பாக தமிழ் பெற்றிருக்க வேண்டிய வளர்ச்சியானது கெட்டதற்கு யார் காரணம்?
என்ற ஆய்வினை இனியாவது தொடங்குவார்களா? இல்லையென்றால்,
அவர்கள் எல்லாம் 'தமிழ்ப் பகைவர்கள்' வரிசையில் இடம் பெற மாட்டார்களா? (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_4.html)
தமிழ் மொழிக்காக உழைப்பவர்கள், ஊடகத்தில் சந்திக்கும் படுகுழிகள் பற்றிய விழிப்புணர்வுடன் பயணிக்க வேண்டும். தமது ஆய்வுகளின் முடிவுகளை செய்தியாக வெளிப்படுத்தலாம். அதிலும் புலமையாளர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, என்ற உண்மையை மறைத்து வெளியிடக் கூடாது. சுயலாப நட்ட கணக்கின்றி, மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்கள் எல்லாம், தாம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை, அது தொடர்பான புலமையாளர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல நம்மால் இயன்ற உதவிகளைப் புரிய வேண்டும். அது போன்ற உதவிகளை வழங்குமாறு அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தொடர்பான
புலமையாளர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை முதலில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு
தொடர்புள்ள புலமையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளையே, அங்கீகரிக்கப்பட்டதாக வெளிப்படுத்த வேண்டும்.
யாராக
இருந்தாலும், நூல்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகள் மூலமாகவும் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள்
இருந்தால், அதனை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு
உட்படுத்துவதை வரவேற்க வேண்டும். உரிய சான்றுகளின் அடிப்படையில் தவறுகள்
வெளிப்பட்டால், நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, திருந்தி பயணிக்க வேண்டும். (https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html)
உட்பகை தமிழரே
ReplyDelete