Tuesday, September 27, 2016

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(9)


த‌மிழ்நாட்டில் பொதுவாழ்வில், ‘அரசியல் நீக்க‌’, 

ச‌மூக‌ கேடான‌ போக்கைஅர‌ங்கேற்றிய‌வ‌ர் காந்தியா?


சுயலாப நோக்கின்றி,நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றிய அக்கறையுள்ளவர்கள் எல்லாம், மீட்சிக்கான 'சரியான' திறவுகோலை தேடி வரும் காலக்கட்டம் இதுவாகும்.

அம்முயற்சிக்கு, 1925 முதல் 1944 வரை வெளிவந்துள்ள, ஈ.வெ.ராவின் 'குடி அரசு' இதழ்களை படிப்பது பலன்கள் தரும் என்பது, எனது அனுபவமாகும்.

தாம் கண்டிக்கும் தலைவரின் 'நிறைகளை' குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் கண்டிக்கிறேன்? என்பதையும்,

தாம் பாராட்டும் தலைவரின் 'குறைகளை' குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் பாராட்டுகிறேன்? என்பதையும்,

ஈ.வெ.ரா விளக்கி எழுதியுள்ள கட்டுரைகள் எல்லாம், தமிழ்நாட்டு பொது வாழ்வில் அரங்கேறியுள்ள 'உணர்ச்சி பூர்வ' ;

‘பாராட்டு இரைச்சல்களையும்',  'கண்டிக்கும் இரைச்சல்களையும்' அகற்ற துணை புரியும்.

பொது வாழ்வில் தலைவராக வெளிப்பட்டுள்ள ஒரு தனி மனிதரை, நாம் 'தனி மனித' அளவில் எடை போட்டு பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், சமூக அக்கறையில் பொது அரங்கில் பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், வேறுபாடுகள் இருந்தன; 1944இல் 'திராவிடர் கழகம்' உருவானது வரை.

தி.க உருவான பின்னும், 1967 வரை, தி.க மற்றும் தி.மு.க விற்கு இடையிலான மோதல்களில் மட்டுமே, ஈ.வெ.ரா 'உணர்ச்சிபூர்வமாக' அப்போக்கிலிருந்து தடம் புரண்டு பயணித்தார். அந்த காலக்கட்டத்தில், ஈ.வெ.ரா எழுதி வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம், 'தடம் புரளாமல்', அறிவுபூர்வமாக, சமூக அக்கறையுடன் இருந்தன, என்பதும் எனது அறிதலாகும். எனவே ஈ.வெ.ராவின் பேச்சுக்களுக்கும், எழுத்துக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளும் ஆய்விற்குரியவையாகும்.

ஆனால் தி.மு.கவோ, தி.க, காங்கிரஸ் உள்ளிட்டு தாம் அரசியலில் எதிர்த்த தலைவர்கள் மீது, உணர்ச்சிபூர்வமாகவும், ஆபாசமாகவும் வசைபாடும் போக்கை, அரங்கேற்றினர். இன்று அந்த போக்கில், திராவிட, தேசிய, இந்துத்வா உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் 'அந்நோயில்' சிக்கி, பலர் பயணித்து வருவதானது, ஊடகங்களில் வெளிப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலம் உருவான, போராட்டங்களை முன்னெடுப்பதிலும், அனைத்து கட்சிகளும் 'ஒரே போக்கில்' பயணிக்கின்றன.

தி.மு.க வை தவிர்த்து, ஈ.வெ.ரா,

பொது வாழ்வில் தலைவராக வெளிப்பட்டுள்ள ஒரு தனி மனிதரை,  'தனி மனித' அளவில் எடை போட்டு பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், சமூக அக்கறையில் பொது அரங்கில் பாராட்டுவதற்கும்/கண்டிப்பதற்கும், வேறுபாடுகளை கடை பிடித்த போக்கை, விளங்கிக்கொள்ள;

காந்தி தொடர்பாக, அவர் கடைபிடித்த அணுகுமுறையை ஆராய்வது பலனளிக்கும்.

அந்த நோக்கில்,

இந்திய விடுதலைக்கு முன் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களில், காந்தியின் நிலைப்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து, ஈ.வெ.ரா  எழுதியுள்ள கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 

கோட்சே காந்தியை கொலை செய்தது தவறு என்பது என் கருத்தாகும். காலனி ராணுவத்தினர் பயன்படுத்திய இத்தாலிய துப்பாக்கியானது (Italian Beretta pistol), காந்தியை கொல்ல, கோட்சே கைக்கு எப்படி வந்தது? என்ற கேள்வியை சுப்பிரமணிய சுவாமி எழுப்பியுள்ள்ளார்.(http://zeenews.india.com/news/india/subramanian-swamy-seeks-to-reopen-mahatma-gandhi-assassination-case-smells-conspiracy_1822169.html) எனவே இந்திரா கொலை, ராஜிவ் கொலை போன்றே, காந்தி கொலையிலும்,  'மர்ம முடிச்சுகள்' இருக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதே நேரத்தில், காந்திக்கு எதிராக, கோட்சே முன்வைத்த கருத்துக்களை திறந்த மனதுடன் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டும், என்பது என் விருப்பமாகும். காந்தி தொடர்பாக, கோட்சேயும், ஈ.வெ.ராவும் முன்வைத்த விமர்சனங்களை ஒப்பிட்டு, அவற்றிற்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதும், எனது விருப்பமாகும். அந்த ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு, என்னால் இயன்ற உதவிகளையும் செய்ய இயலும். 

மாணவர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதில் முடிந்த காந்தியின் 'சத்தியாகிரக போராட்டங்களை';

காந்தி துவங்குவதற்கு முன், எச்சரித்தவர் தாகூர்.(Tagore to Gandhi, March 1921, Gandhi, Collected Works,XX (Navajivan Trust, Ahmedabad, 1966), 539, 540-1.)

தாகூரின் எச்சரிக்கையை புறக்கணித்து, காந்தி 'சத்தியாகிரகம்' போராட்டத்தினை துவக்கி;

மேற்சொன்ன விளைவுகளில் முடிந்த பின், இந்தியாவிலேயே துணிச்சலாக ‌காந்தியைக் கடுமையாகக் கண்டித்தவர் ஈ.வெ.ரா; ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்தபோது, காந்தியின் மது விலக்கு பிரச்சாரத்தில், இந்தியாவிலேயே 'தனித்துவமாக', தமது குடும்பத்தினருடன் பங்கேற்றதை, காந்தி பாராட்டி எழுதியிருந்த பின்னணியிலும்.

அதே காந்தி, மரணமடைந்த போது, அவரை வானளாவப் புகழ்ந்தவர் ஈ.வெ.ரா.

அதன்பின், காமராஜரை முதல்வராக ஆதரித்த காலத்தில், காந்தி பொம்மையை உடைத்தல், காந்தி படங்களை எரித்தல் ஆகிய போராட்டங்களின் அவசியத்தைப் பிரச்சாரம் செய்தவரும் ஈ.வெ.ரா.

மேற்போக்கான அணுகுமுறையில் முரண்பாடுகளாக தோன்றும், மேற்குறிப்பிட்ட ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை, மேலே குறிப்பிட்ட;

'தனி மனித' அளவிலும், பொது அரங்கில் சமூக அளவிலும், அணுகுவதற்குள்ள வேறுபாடுகள் பற்றிய புரிதல் மூலமே, விளங்கிக் கொள்ள முடியும். 1944க்கு முந்தைய தமிழ்நாட்டின் போக்கு பற்றி அறிந்தவர்களிடம், அப்புரிதல் இருக்க வாய்ப்புண்டு.

ஈ.வெ.ராவின் 'பார்ப்பன எதிர்ப்பானது', அந்த வகையில் புரிந்து கொள்ளப்பட்டதால் தான்;

ஈ.வெ.ராவிற்கு மிகவும் நெருக்கமான நண்பராக ராஜாஜி இருந்தார்; 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை, பிராமணர்களில் பலர் ஆதரித்தனர்; ஈ.வெ.ராவின் 'தனி திராவிட நாடு' கோரிக்கையை, இந்திய விடுதலைக்கு முன், ராஜாஜியும், பல பிராமணர்களும் ஆதரித்தனர். தமக்கு நெருக்கமான பிராமண நண்பர்களின் தோட்டங்களில், தமது கட்சியின் பயிற்சி வகுப்புகளை ஈ.வெ.ரா நடத்தினார். தமக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவிற்கு, பிராமண மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். தமது வாகனம் பழுது பார்க்க, பிராமணரின் தொழிற்கூடங்களை அணுகினார்.( மத்திய அரசில் தமிழ்நாட்டு பிராமணர்களின் செல்வாக்கு குறைந்ததற்கும், 'காவிரி, முல்லை பெரியாறு' உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு கேடான, பல தீங்குகள் அரங்கேறியதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற ஆய்வை தொடங்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.)

'பார்ப்பன எதிர்ப்பு' தொடர்பான, மேலே குறிப்பிட்ட புரிதலானது, எப்போது தடம் புரண்டு, இன்று பெரியார் கட்சிகளிலும், பிராமண அமைப்புகளிலும், 'பொதுவான இலக்குகளில்' ஓன்று சேராமல், 'உணர்ச்சிபூர்வ பரஸ்பர பகைமைப் போக்கில்', இரு சாராரும் பயணிக்க நேரிட்டது? அதே நேரத்தில், இரு சாராரிலும் பலர், 'விடுதலைப் புலிகள்' ஆதரவு போக்கில் மட்டும், 'ஒன்றாக' பயணித்தது எப்படி? அந்த போக்கில் யார், யாரிடம் ஏமாந்தார்கள்? 'முள்ளி வாய்க்கால்' அழிவிற்கு இட்டுச் சென்ற போக்குகளில், அந்த போக்கும் இடம் பெற்றதா? இன்று (எனது பார்வையில்)  தமிழ்நாட்டில் மாணவர்கள்/'ஒழுங்காக' படித்த இளைஞர்களின் சுயநலமற்ற ஆதரவானது, 'இந்துத்வா' கட்சிகளுக்கு அதிகரித்து வருவதற்கும், 'பெரியார்' கட்சிகளுக்கு 'அதிவேகமாக' குறைந்து வருவதற்குமான காரணங்களிலும், அந்த போக்கும் இடம் பெறுகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1944இல் திராவிடர் கழகம் உருவாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் அரங்கேறிய பின், திராவிட கட்சிகளில், கட்சித் தலைவரின் நிலைப்பாடுகள் சமூகத்திற்கு கேடாக முடியும், என்று பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் நபர், அந்த கட்சியில் நீடிக்க முடியுமா?

பொதுநல/சுயநல நோக்கிலோ, நீடிக்க முடியாமல் வெளியேறியவர்கள் எல்லாம், பொது வாழ்வில் ப‌ல‌ குட்டிக்கரணங்க‌ள் போட்டு, 'செல்வ‌ம், செல்வாக்குட‌ன்' பிழைத்து வ‌ருவ‌தையும் பார்த்து வ‌ருகிறோம்.

அவ்வாறு குட்டிக்க‌ர‌ண‌ங்க‌ள் போடாம‌ல், வாழ்ந்தால் என்ன‌ ஆகும்? என்ற‌ கேள்விக்கு விடையாக‌ வாழ்ந்து ம‌றைந்த‌வ‌ர் வ‌.உ.சி.

த‌மிழ்நாட்டில் பொதுவாழ்வில், அந்த‌ ச‌மூக‌ கேடான‌ போக்கை அர‌ங்கேற்றிய‌வ‌ர் காந்தியா?

என்ற‌ ஆய்வுக்கு, வ‌.உ.சி, பார‌தி உள்ளிட்ட‌ ப‌ல‌ரின் வாழ்க்கை வ‌ர‌லாற்றில் மறைக்கப்பட்ட/மறக்கடிக்கப்பட்ட தகவல்களை, தேட வேண்டிய நேரம் வந்து விட்டது.

“1857 விடுதலைப் போர் தோல்வியடைந்த பின், வெள்ளைக்காரர்கள் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது. பல வருடங்கள் வரை, 'இந்திய தேசிய' அரசியல் அடையாளத்தோடு தொடர்புடைய காங்கிரஸ் மாநாட்டில், முதலாவதாக, 'ராஜ விசுவாச' தீர்மானங்கள் நிறைவேற, 'இந்தியர்' என்ற அரசியல் அடையாளம் தோன்றி வளர்ந்தது. தமிழ்நாட்டு 'இந்துத்வா' கட்சிகளில், எச்.ராஜா போன்றவர்கள், பெரியார் ஈ.வெ.ராவை 'தேச துரோகி' என்று அழைத்த அளவுகோலின்படி, 'இந்தியர்' என்ற அரசியல் அடையாளமானது, 'தேச துரோக'மாக முளைவிட்டு வளர்ந்து, பின் எப்போது,  அந்த  பலகீனப் போக்கிலிருந்து விடுபட்டு, 'தேசப் பற்றாக' மாறியது?  என்ற கேள்வி எழுகிறது.

அந்த போக்கில், தமிழ்நாட்டில் காந்தி, ராஜாஜி போன்றோர் ஊக்குவித்த, அரசியல் நீக்க (depoliticize) உணர்ச்சிபூர்வ  தனிநபர் விசுவாச போதையானது, எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளத்தை பலகீனப்படுத்தி, வ.உ.சி போன்ற இணையற்ற தியாகிகள், மனம் வெதும்பி, 'இந்திய' விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி, பெரியார் ஈ.வெ.ராவை பகிரங்கமாக பாராட்டும் போக்கில் வெளிப்பட்டது?”

 வ.உ.சி சிறையில் இருந்த போது;

அவரை சந்தித்தவர்கள் யார்? வ.உ.சியின் குடும்பத்திற்கு உதவியவர்கள் யார்? வ.உ.சி சிறைவாசத்திலிருந்து விடுதலையான போது, சிறை வாசலில் வரவேற்க வந்தவர்கள் யார்? பின் அவர் சாகும் வரை வறுமையில் உழன்றபோது, மற்ற காங்கிரஸ்காரர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களில் யார்? யார்? வ.உ.சிக்கு உதவினார்கள்? வ.உ.சிக்கு உதவ, தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கொடுத்த நிதியை, இந்தியா திரும்பியபின், காந்தி மறந்தது சரியா? எவ்வளவு காலம் கழித்து, வ.உ.சி நினைவூட்டி மடல் எழுதி, அதை காந்தியிடம் எப்படி பெற்றார்? வ.உ.சி மறைந்த போது, தமிழ்நாட்டு காங்கிரஸ் அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற மறுத்ததற்கு காரணம் என்ன?

காந்தியின் நிலைப்பாட்டை வ.உ.சி எதிர்க்காமல், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல, காந்தி 'ரசிகரா' பயணித்து, காந்தி புகழ் பாடியிருந்தால், வ.உ.சி மேற்கண்ட கொடுமைகளை சந்தித்திருப்பாரா?

என்ற கேள்விக்கு,  தமிழ்நாட்டில் காந்தியின் 'செல்வாக்கு' ஏற்படுத்திய, 'சமூக கேடுகள்' யாவை? என்ற ஆராய்ச்சியை தொடங்குவதை, தாமதப்படுத்தலாகுமா?

மகாத்மா காந்தி தமிழகத்துக்கு 20 முறை வந்து சென்றிருக்கிறார்; 1896 தொடங்கி 1946 வரையிலான காலகட்டத்தில்,  ஒவ்வொரு முறையும் பல்வேறு இடங்களில் பேசியிருக்கிறார். பல நபர்களைச் சந்தித்திருக்கிறார். காந்தி தமிழகத்தில் மேற்கொண்ட பயணங்கள் குறித்து ஒரு புத்தகம் அ.இராமசாமி எழுதிய “தமிழ்நாட்டில் காந்திஆகும். அது தவிர, காந்தியின் தொகுப்பு நூல் (Collected Works) வரிசையும், வ.உ.சி. பாரதி, திரு.வி.க , நாமக்கல் கவிஞர் உள்ளிட்டு, அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த காங்கிரஸ்காரர்களின் சுயசரிதைகளும், அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி பலர் எழுதியுள்ள நூல்களும், மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கு உதவக் கூடியவையாகும்.

“இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில், காங்கிரஸ் தலைவர்களின் 'யோக்கியதை' எவ்வாறு இருந்தது? என்ற ஆய்வுக்கு உதவும் சான்று வருமாறு.

"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது.  தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்" திரு.வி.க 18 - 4 - 1928; தமிழ்ச்சோலை

1890 முதல் 1936 வரை , வ.உ.சியை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் காங்கிரசில் காந்தி, ராஜாஜி போன்ற தனிநபர்களின் 'சுயநல அரசியல்' சலனம் தோற்றுவித்த, வ.உ.சி போன்றவர்களின் துயர வாழ்விற்கு காரணமான, 'தவறான' 'டென்சன்கள்' (Tension)  ஆனவை, 1944இல் 'திராவிடர் கழகம்' தோன்றிய பின்,  புதிதாக அரங்கேறியிருந்த திராவிட இயக்கம் நோக்கி, சமூகதொத்து நோய் செயல்நுட்பத்தில்,  பகுதியாக (partly)  இடம்பெயர்ந்து, உரம் பெற்று வளர்ந்து, அதில் விதை கொண்டிருந்த 'தனிநபர் விசுவாசம்' ஊக்கம் பெற்று, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவுடன், காங்கிரசில் 'சிற்றினமாக' கருதப்பட்டவர்கள், திராவிட கட்டத்தில் (Phase)  தீயினமாக வலிமை பெற்று வளர்ந்தார்களா? என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. May 6, 2015; 'நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல் - திருக்குறள் 460';

வ.உ.சி மறைவிற்கு, தமிழ்நாட்டு காங்கிரசில், இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை, என்ற தகவலை ம.பொ.சி, தனது சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த அளவுக்கு, காந்தியின் தனிநபர் 'உணர்ச்சிபூர்வ' செல்வாக்கானது, பொதுவாழ்வு சீர்கேட்டிற்கு துணையாகஇருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.”
( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க‌ உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம் ?; http://tamilsdirection.blogspot.sg/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.htmlஈ.வெ.ரா தொடர்பான எனது விமர்சனங்களை புறக்கணித்து பயணிக்கும், 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம், 'காந்தி ரசிகர்களை'ப் போன்ற, 'பெரியார் ரசிகர்களா’? 'பெரியார் ரசிகர்' என்ற சமூக போக்கின் வளர்ச்சியின் ஊடே, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் அரவணைப்பில், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவானது எந்தெந்த வெளிநாட்டு உளவு அமைப்புகளின் வேட்டைக்காடாக இருந்தது என்பது பற்றிய தகவல்களும், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் கசியத் தொடங்கியுள்ளன. (http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) அந்த உளவு வலைப்பின்னலின் 'ஆதரவில்', 'காந்தி பிம்பம்' வளர்க்கப்பட்டதா? அந்த 'காந்தி பிம்பத்தை' தகர்க்காமல், தலைவர்கள் எல்லாம் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலம் உருவான போராட்டங்களிலிருந்து, நாடு 'விடுதலை' ஆக முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

காந்தி தொடர்பான அமைப்புகளுக்கும். அமெரிக்க உளவு அமைப்பான சி.அய்.ஏக்கும் உள்ள தொடர்பை பற்றிய, 1980களில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முயற்சியில் நடந்த, விசாரணை கமிசன் அறிக்கையில் உள்ள அரசியல் புழுதிகளை நீக்கி, நம்பத்தகுந்த தடங்கள் சிக்கினவா?  (The Kudal Commission, headed by Purushottam Das Kudal, was set up in February 1982 to probe into the working of three Gandhian institutions - the Gandhi Smarak Nidhi, the Gandhi Peace Foundation (GPF) and the Sarva Seva Sangh - and the Association of Voluntary Agencies for Rural Development (AVARD); http://indiatoday.intoday.in/story/kundal-commission-is-a-witch-hunt-ordered-because-we-backed-jps-pre-emergency-stir/1/348884.html ) இன்று காந்தியின் வழிபாட்டுப் போக்கினை ஊக்குவிப்பதில், அந்நிய சக்திகளின் சுயநலன்கள் அடங்கியுள்ளதா? 'பெரியார் சமூக கிருமிகளும்', அந்த சூழ்ச்சி வலையில், பங்கேற்று, 'பலன் பெற்று' பயணிக்கிறார்களா? என்பவையும் ஆய்விற்குரியவையாகும். 

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு காந்தி 'இறக்குமதி' செய்து, வெள்ளையர்களுடன் 'சமரசப் போக்கில்' முன்னெடுத்த, 'இந்திய விடுதலை போராட்ட' போக்கை எதிர்த்து, 'சமரசமற்ற' போக்கை வலியுறுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். காங்கிரசில் காந்தியின் எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் தலைவராக, வாக்கெடுப்பின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போசை, செயல்பட விடாமல் தடைகள் ஏற்படுத்தி, மனம் வெறுத்து, போஸ் காங்கிரசிலிருந்து வெளியேற காரணமானவர் காந்தி. அகில இந்திய அரசியலில், காந்தியின் செல்வாக்கு, தோற்றுவித்த 'அரசியல் நீக்கமும்', அதன் அடிப்படையில் வளர்ந்த 'வாரிசு அரசியலும்', ஆய்விற்குரியதாகும்.( http://biggchat.com/congress-president-and-boses-conflict-with-gandhi/

தென்னாப்பிரிக்காவில் முஸ்லீம் வர்த்தகர்களின் வக்கீலாக பணியாற்றிய காந்தி, அங்கு நடந்த 'போயர் போரில்'(Boer War) காயமடைந்த பிரிட்டன் ராணுவ வீரர்களைக் காப்பாற்ற, 'ஆம்புலன்ஸ்' தொண்டு செய்தார். (http://www.gandhitopia.org/profiles/blogs/mahatma-gandhi-s-role-in-1899-anglo-boer-war-very-few-people-know ) அங்கு கறுப்பினத்தவருக்கு எதிரான காந்தியின் செயல்பாடுகள் பற்றியும். 'காந்தி பிம்பத்திற்கு' எதிராகவும் நூல்கள் வெளிவந்துள்ளன.(http://www.bbc.com/news/world-asia-india-34265882 & https://en.wikipedia.org/wiki/Gandhi_Behind_the_Mask_of_Divinity   ) ஆப்பிரிக்காவில் காந்தி சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. (https://www.theguardian.com/world/2016/sep/22/petition-calls-for-gandhi-statue-to-be-removed-from-ghana-university ) 'காந்தி பிம்பம்' உருவாகத் தொடங்கிய போதே, 1930 களிலேயே, எதிர்ப்பு குரல் எழுப்பிய ஈ.வெ.ரா, இன்று 'பெரியார் பிம்பத்தில்' சிறைபட்டுள்ளாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'பெரியார் பிம்பம்' உள்ளிட்டு, இன்றுள்ள பெரிய/சிறிய தலைவர்களின் 'பிம்பங்களின்', மற்றும் அரசியல் நீக்கம் மூலம் அரங்கேறியுள்ள 'வாரிசு அரசியலின்', 'மூல பலம்' 'காந்தி பிம்பம்' என்பதும் எனது ஆய்வு முடிவாகும். பொது வாழ்வில், சமூகத்திற்கு கேடான (தமக்கும், தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பை 'உறுதி' செய்து கொண்டு, பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தி வரும்; 'பெரியார் சமூக கிருமிகளும்' கடைபிடித்து வரும்;) 'இரட்டை வேட' போக்குகளுக்கு, 'காந்தி பிம்பம்' கேடயமாக பயன்பட்டு வருகிறது என்பதும், அந்த 'காந்தி பிம்பத்தை' தகர்ப்பதானது, பொது மக்களின் சமூக மனவியலில் (Social Psychology) மீட்சிக்கான மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என்பதும், எனது ஆய்வு முடிவாகும். ஒழுக்கக்கேடான வழிகளில் ஈட்டிய பணத்தில், மேற்குறிப்பிட்ட 'பிம்பங்களை' வளர்க்கும் போக்கும், முடிவுக்கு வரும். மக்களின் கவனத்தை 'பிம்பங்கள்' நோக்கி திருப்பி, 'அந்த இருளில்', கிரானைட், தாது/ஆற்று மணல், கொள்ளை, ஆந்திராவில் செம்மரக் கடத்தல் உள்ளிட்ட இன்னும் பல ஒழுக்கக்கேடான வழிகளில் (இவை பற்றியெல்லாம், 'காந்தி பிம்பம்' ஆதரவாளர்கள் கவலைப் பட்டார்களா?) தமிழ்நாடும், தமிழர்களும் சீரழிவதும் முடிவுக்கு வரும். 

தமிழ்நாட்டில் 'கட்சி சாரா' 'அறிவு ஜீவிகளின்' அமைப்புகள் நடத்தும் மாதாந்திர ஆய்வு கூட்டங்களில், நிகழ்காலத்தில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும், தமிழையும் சீரழித்து வரும் சமூக இயக்கவியல் (Social Dynamics) பற்றியும், மீட்சிக்கான வாய்ப்புகள் பற்றியும், இது வரை விவாதிக்கப்பட்டதா? அல்லது 'நமக்கேன் வம்பு? என்ற சமூக பாதுகாப்பு வளையத்தில் – Social Safety Zone -(அரசியல் கொள்ளையர்கள்/அவர்களுக்கு நெருக்கமான வியாபாரக் கொள்ளையர்கள்-இன் நேரடி/மறைமுக 'நண்பர்களாக'), 'அறிவு சுய இன்பம்' (intellectual masturbation) பெறும் நோக்கில், அந்த அமைப்புகள் எல்லாம், காந்தி, 'பெரியார்' போன்ற இன்னும் பல  'பிம்பங்களை' வளர்த்து, செயல்படுகின்றனவா? 'அறிவு ஜீவிகளில்’ பெரும்பாலோரின், 'சுயநல சமரச போக்கே', எந்த சமூகத்தையும் 'ஊழல் பெருச்சாளிகளின்' ஆதிக்கத்தில் சிக்க வைக்கும், என்பதே என் கருத்தாகும்.

சுயலாப நோக்கின்றி,நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றிய அக்கறையுள்ளவர்கள் எல்லாம்,'உணர்ச்சிபூர்வ வழிபாட்டு' போக்குகளை ஒதுக்கி வைத்து;

'தனி மனித' அளவிலும், பொது அரங்கில் சமூக அளவிலும், ஒரு தலைவரை அணுகுவதற்குள்ள வேறுபாடுகள் பற்றிய புரிதலோடு;

தமிழ்நாட்டில் பொதுவாழ்வில், உணர்ச்சிகர வழிபாட்டு போக்கில், அரசியல் நீக்கம் உருவாகியுள்ள, ‘அந்த’  சமூக கேடான போக்கை  அரங்கேற்றியவர் காந்தியா?

என்ற‌ ஆராய்ச்சியில் ஈடுப‌ட்டு, அத‌ன் முடிவுக‌ளின் அடிப்ப‌டையில் செய‌ல்ப‌டுவதே;

ஆக்க‌பூர்வ‌மான‌ திசையில் ந‌ம்மை ப‌ய‌ணிக்க‌ வைக்கும். திரு.வி.க-வின் 1928 அறைகூவலை ஏற்று, 2016இல் 'நாம் தான் "தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்."

Thursday, September 22, 2016

'ஆர்.எஸ்.எஸ் -ன் அலுவலகம் முற்றுகை' போராட்டம்:


தேச கட்டுமான (Nation Building) சீர் குலைவினை 

தடுக்குமா? துரிதப் படுத்துமா?


'பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு 22 கட்சிகள் ஒன்று சேர்ந்து, தமிழ்நாட்டில் 'ஆர்.எஸ்.எஸ் -ன் அலுவலகம் முற்றுகை' போராட்டம் நடத்திய செய்தி வெளிவந்துள்ளது.






உச்ச நீதி மன்ற உத்திரவின்படி, தமிழ்நாட்டிற்கு தண்ணிர் தர மறுத்து வருவது கர்நாடகத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியே.

தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சிக்கு அதை கண்டிக்கும் துணிவில்லாத நிலையில்;

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் மேற்குறிப்பிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திருந்தால், அப்போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மிகுந்திருக்கும்; (காலையில் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலையானவர்களின் - 22 கட்சிகளை  சேர்ந்தவர்களின்- எண்ணிக்கை 325; http://www.eenaduindia.com/states/south/tamil-nadu/chennai-city/2016/09/21090444/325-arrested-for-attempting-to-lay-siege-to-RSS-office.vpf )

தமது முகத்தை காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாடு காங்கிரஸானது, கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருப்பார்கள். அது கர்நாடக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மோடியை கண்டித்துள்ளது போல, சோனியா, ராகுலை கண்டித்து, அறிக்கையாவது வெளியிட்டுள்ளார்களா?;  காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தலைவரான, கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகர்ஜூன் கார்கே, உச்சநீதி மன்ற ஆணையை எதிர்த்து, கருத்து தெரிவித்துள்ள சூழலிலும். ( https://in.news.yahoo.com/sc-keeps-passing-non-implementable-orders-maintaining-law-024011907.html )

மத்திய அரசில் காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்களைப் போலவே, இப்போது பா.ஜ.க ஆட்சியில் , கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பவர்களும், காவிரிப் பிரச்சினையில் உச்சநீதி மன்ற ஆணைப்படி, தமிழகத்திற்கு தண்ணிர் திறந்துவிட  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில்;

அகில இந்திய கட்சிகளின் அந்தந்த மாநில கிளைகள், எதிரெதிர் நிலைப்பாடுகள் எடுத்து வருவதானது, இந்தியாவில் 'தேச கட்டுமானம்' சீர்குலைவதற்கு முக்கிய காரணமாகி வருவதை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (Is BJP aware of the derailing of the Indian nation building process?; http://tamilsdirection.blogspot.sg/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html )

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான வன்முறையை ஏவி விட்டவர்கள் யார்? யார்? என்பது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவர தொடங்கியுள்ளன.
பெங்களூர் பற்றி எரிய காரணம் "கன்னட பிரகாஷ்"... கூடுதல் கமிஷனர் ரெட்டி செய்த தவறு.. பரபர தகவல்கள்!”

அகில இந்திய கட்சிகளின் மாநிலத்தலைவர்களே 'இந்தியர்' என்ற அடையாளத்தை புறக்கணித்து, 'கன்னடர்', 'தமிழர்' போன்ற மாநில அடையாளங்களை முன்னிறுத்தி வரும் சூழலில்,

அந்தந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களில் சிலர், 'வன்முறை'களில் ஈடுபடுவதில் வியப்பில்லை.

கர்நாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது, தமிழர்கள் மீதான வன்முறையைத் தூண்டியதாக ஊடகங்கள் செய்திகள் வெளிவந்தனவா? அவ்வாறு வெளிவரவில்லையென்றாலும், சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட கட்சிகள், தனிப்பட்ட முறையில் கண்டுபிடித்த, நம்பத்தகுந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்களா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை தர வேண்டிய நெருக்கடியை, முகநூலில் வெளிவந்துள்ள கீழ்வரும் கருத்து ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் வெளிப்பட்ட ஒரு கருத்து:

தண்ணீர் தர மறுப்பது காங்கிரஸ். ஆனால் போராட்டம அரசியல் கட்சி அல்லாத ஆர்.எஸ்.எஸ். க்கு எதிராக.

எல்லாம் அந்நிய நிதியை நிறுத்தியதன் விளைவு. எப்படியெல்லாம் காங்கிரசை காப்பாற்றுகிறார்கள், அதனிடம் மீள முடியாத அடியை வாங்கிக் கொண்டே..!”

அதாவது மேற்குறிப்பிட்ட கட்சிகளில்  யார் ? யார்?  வெளிநாட்டு நிதியில், சோனியாவுக்கு சாதகமாக‌  செயல்படும் என்.ஜி.ஓக்களுக்கு (NGOs) நெருக்கமானவர்கள்?

'அந்த' என்.ஜி.ஓக்களின் மீது, வெளிப்படையானகணக்கு பொறுப்புள்ள வகையில்(Transparency & Accountability in funds & activities), தவறுகள்  புரிந்தவர்கள் மீது, மோடி அரசானது, நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில்;

'அந்த' அமைப்புகளின் தூண்டுதலில், காவிரிப்பிரச்சினையை காரணம் காட்டி, மேற்குறிப்பிட்ட போராட்டம் நடந்துள்ளதா? என்ற கேள்வியை;

மேற்குறிப்பிட்ட முகநூல் பதிவு எழுப்பியுள்ளது.

.வெ.ரா எதிராக செயல்படும் அமைப்புகளிலும், 'பெரியார்' கட்சிகளிலும் யார்? யார்? அந்த 'வெளிநாட்டு நிதி என்.ஜி. வலைப்பின்னலில்'  இடம் பெற்றுள்ளவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இந்தியாவில் சட்டத்தின் செயல்பாட்டை(Rule of the Law) கேலிக்குள்ளாக்கி வரும், உச்சநீதி மன்ற ஆணைகளை, அந்தந்த மாநில 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில அரசுகள் 'செல்லாக் காசாக்கி' வரும் சூழலில்,-(http://swarajyamag.com/politics/cauvery-bcci-sahara-why-sc-orders-are-increasingly-being-defied-by-many ); 

அந்தந்த மாநில 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள் செல்வாக்குடன் வளர்ந்து வர, அகில இந்திய கட்சிகளின் மாநில கிளைகள் எல்லாம், அந்த போக்கிற்கு 'எதிர் நீச்சல்' போட அஞ்சி, 'அந்த போக்கின்' 'வால்களாக' பயணித்து வருகிறார்கள்; என்பது தான் இன்றுள்ள நிலைமையாகும்.

அந்த போக்கிற்கு எதிராக, முதல்முறையாக, கர்நாடக மாநில பா.ஜ.கவை கண்டித்து, தமிழக இந்துத்வா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், முகநூலில் வெளிவந்துள்ளன.

“இந்த விஷயத்தில் பிஜேபியின் அணுகுமுறை "அப்பட்டமான ஓட்டுவங்கி அரசியல்" தான்.

சரிதான்.. ஆனால் இன்று சதானந்த கவுடா சொல்லியிருப்பதைப் பாருங்கள்.”

“முல்லை பெரியார் பிரச்சனையின் போது பா.ஜ இரண்டு மாநில மக்களை ஒன்றிணைத்து மனித சங்கிலி நடத்தியது. அதுபோல தற்போதும் நடத்த வேண்டும்.”

“கர்நாடகா எரிகிறது. பிரதமர் அமைதிக்கு அழைப்பு விடுகிறார். உள்துறை அமைச்சர் அழைப்பு விடுக்கிறார். சோனியாவும் ராகுலும் ஏன் இன்னமும் வாய் திறக்கவில்லை ?”

அகில இந்திய கட்சிகளின் சுயநல அரசியல் போக்கின் காரணமாக, இந்தியாவில் தேச கட்டுமானது சீர்குலைவது, என்பதன் காரணமாக‌;

தமது நிதி உதவியில் செயல்படும் - இந்தியாவில் பயங்கரவாதிகளின், பிரிவினைவாதிகளின் 'மனித உரிமை காவலர்களாக'(?) வலம் வரும் - என்.ஜி.ஓக்கள் துணையுடன், தேச கட்டுமான சிதைவு போக்கின் ஊடே, 'ஒன்றுபட்ட' இந்திய சந்தையின் (market) பலன்களை 'அனுபவித்து' வரும், உலக ஆதிக்க சக்திகள் தமது சுயநலனுக்கு உகந்த தருணத்தில், 'சோவியத் ஒன்றியம் பிளவுபட்டது போல', 'எளிதில்இந்தியாவை சிதற' வைக்க வாய்ப்புள்ளதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.

அவ்வாறு இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் போது, அந்தந்த மாநில 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்ஆட்சி'களில்,  ஆப்பிரிக்க நாடுகளை விட,  மோசமான நிலையை , இந்திய 'னிநாடு' மாநிலங்கள் அடையும்.

இந்தியாவில் இன்று பணக்கார மாநில வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டில், பிற மாநில மற்றும் வெளிநாட்டினர்  'வளர்ந்து' வருவதையும், 'திராவிட மன நோயாளிகளாக' தமிழர்கள் 'வீழ்ந்து' வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் (http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html ); தமிழ்நாட்டில் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும், 'திறமைசாலி' தமிழர்களில் பெரும்பாலோர், 'பிழைப்பிற்காக' - ‍அவ‌ர்களில் பலர் குடும்ப வாழ்க்கையின் 'பலன்களை' துறந்து, 'பணம் ஈட்டும் எந்திரர்களாக' - வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வெளியேறும் போக்கில்; பணம் சம்பாதிப்பதற்காக, 'எதையும்' இழக்கத் தயாரான தமிழர்களின் எண்ணிக்கையானது, 'அதிவேகமாக' அதிகரித்து வரும் போக்கில்; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாதபடி;

'தமிழர் சமூக தற்கொலை' போக்கில், தமிழ்நாடு பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, நிபந்தனைகளுடன் பரோலில் சென்னை வந்த போது, சசிகலா ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்றுள்ளனர். (https://tamil.oneindia.com/news/india/sasikala-going-chennai-from-bengaluru-car-297784.html ) 2ஜி வழக்கில் டெல்லி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கனிமொழியை, சென்னை விமான நிலையத்தில் எண்ணற்ற தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். 1967க்கு முன், கட்சிகளில் வெட்கப்பட வேண்டியவைகளாக இருந்தவை எல்லாம், இன்று திராவிடக் கட்சிகளில் பாராட்டப்படுபவையாக மாறி உள்ளன.

எனவே இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான',  'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானதுதமிழ்நாட்டில் 'வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு-  சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாகஇன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போலதமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாக‌வும் இருந்தால், வியப்பில்லைஎனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும். இந்துத்வா முகாமில் அதற்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், எதிர்ப்பாக இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். 'அந்த' இன்னொரு இந்துத்வா பிரிவினரும், 'பெரியார் கட்சிகள்' உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பாளர்களும், ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும் கெடுத்து, தேச கட்டுமானத்தை சீர் குலைத்து வரும் திசையில், 'ஒன்றாக' பயணிக்கிறார்கள்; என்பதும் எனது 'அறிதல்' (Observation) ஆகும். 

வரலாற்றில் நடைமுறையில் உண்மைகளை புறக்கணித்து, 'உணர்ச்சிபூர்வ கறபனைகளில்' பயணிக்கும் எந்த போக்கும், எதிரான‌ விளைவுகளை சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது.
“What you think is what you get...no matter how absurd. And then, reality imposes itself, and you get something else altogether, often the exact opposite of what you wanted.

Reality doesn't care what you think. Thoughts hardly matter. Reality happens whether you want it or not. Nobody threatens his weatherman when the temperature falls; everyone knows it's not his fault.” : https://www.equitymaster.com/diary/detail.asp?date=01/21/2016&story=2&title=Reality-Happens-Whether-You-Want-It-or-Not&utm_source=VKD&utm_medium=mail&utm_campaign=e-letter&utm_content=VKD

“1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய .வெ.ரா, தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, 1944இல் 'தடம்' புரண்டு, 'இனம், சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சி வலையில் சிக்கி, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற 'ஆணி வேர்களையே', 'நோய்களாக' கருதி பயணித்து, தமிழர்களின் 'அகச்சீரழிவு போக்கை வேகமாக்கியதன்' விளைவானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வாய்ப்பை மேலும் பலகீனமாக்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html )

'தமிழும், தமிழ்  உணர்வும்மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில்' இடம் பெற்று வருவதையும் ஏற்கனவே பார்த்தோம்(http://tamilsdirection.blogspot.sg/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html); அரசியலில் நத்திப் பிழைப்பவர்களின், வெட்கமின்றி 'குட்டிக்கரணங்கள்' போடுபவர்களின், 'கேடயங்களாக', அவர்களின் பேச்சுகளிலும், எழுத்துகளிலும், 'உணர்ச்சிபூர்வ' தமிழும், தமிழ் உணர்வும் பயன்பட்டு வரும் போக்கில்.

அத்தகைய சூழலில், மேலே குறிப்பிட்டுள்ளவாறு, இந்தியாவானது சிதறலுக்கு உள்ளாகும் நிலையில்,  ‘தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு விதை போட்ட குற்றவாளி‘ என்ற வரலாற்றுப் பழிக்கு .வெ.ரா உள்ளாக வாய்ப்பிருப்பதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.

வெள்ள நிவாரணப் பணியில் பங்களித்த, கட்சிசாரா இளைஞர்களும், மாணவர்களும், 'மூல காரணத்தை' தேடி, கண்டுபிடித்து, அவர்களின் கோபமானது, சென்னை வெள்ளம் போல, பெருக்கெடுப்பதற்கு முன், 'பெரியார்' சமூக கிருமிகளிடமிருந்து, '.வெ.ரா'வைக் காப்பாற்ற முடியுமா? அதிலும் சுமார் 50 வருடங்களுக்கு முன் வெளிப்படுத்திய, 'தமிழ், மதுவிலக்கு, திராவிடர் 'இனம்' (?)' தொடர்பான நிலைப்பாடுகளை, .வெ.ரா அறிவுறுத்தியபடி, 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், இன்றும் அந்த பழைய நிலைப்பாடுகளையே (சுயநல போக்கிலோ அல்லது 'திராவிட' மனநோயாளியாகவோ) முன்னிறுத்தினால், 'தமிழ், தமிழர்' பகையாக 'பெரியாரை' முன்னிறுத்தும், 'பெரியார் எதிர்ப்பாளார்களின்' சூழ்ச்சிக்கு துணை போய், 'பெரியாரை' தமிழ்நாட்டு மக்களின் 'கோப வெள்ளத்திற்கு' இரையாக்கி விடாதா, .பொ.சி, பெங்களுர் குணா வழியில், வழக்கறிஞர் பா. குப்பனின்தமிழரின் இனப்பகை . வெ. ராபோன்ற நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில்?”

..சி,  .வெ.ரா,  சத்தியமூர்த்தி,  வாஞ்சிநாதன் உள்ளிட்ட எண்ணற்றோர்;

இந்திய விடுதலை போராட்டத்தின் மீது செல்வாக்கு செலுத்திய‌ வெளிநாட்டு உளவு அமைப்புகளின் வலைப்பின்னலில் சிக்கி, ‘சொகுசாக’ (http://tamilsdirection.blogspot.my/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) அல்லது பொதுவாழ்வில் சொத்து சேர்க்கும் 'அரசியல் வியாபாரிகளாக' பயணித்தார்கள் என்று அவர்களின் 'கொள்கை எதிரிகள்' கூட குற்றம் சுமத்த மாட்டார்கள்.

அவர்களின் தியாகங்கள் எல்லாம் 'அரசியல் வியாபாரிகள்' ஆதிக்கத்தில், தமிழும்தமிழர்களும், தமிழ்நாடும் சீரழியும் விளைவில் முடிவதை அனுமதிக்கலாகுமா? அவர்களின் தியாகங்களை கருத்தில் கொண்டு,  உலக உளவு அமைப்புகளின் வலைப்பின்னலின் செயல்பாடு பற்றியும், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, கொலை, தற்கொலை, திருட்டு உள்ளிட்டவை அதிகரிக்க 'வழி வகுக்கும்' வெளிநாட்டு இறக்குமதிகள் பற்றியும், 'மீடியா' வெளிச்சத்தில் வலம் வந்து, அம்பலப்படுத்தி வரும்,  எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை இனியும் தவிர்க்கலாகுமா?

சுயலாப நோக்கற்ற, நேர்மையான சுயசம்பாத்தியமுள்ள‌, சமூக அக்கறையுள்ளவர்கள் எல்லாம்,  'உணர்ச்சிபூர்வ' போக்குகளிலிருந்து விடுபட்டு, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதில் ஒன்றுபட்டு செயல்பட்டால், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீள வாய்ப்பு இன்னும் இருக்கிறது;

 என்பதே எனது கருத்தாகும்.

"வரலாற்றில், மேற்குறிப்பிட்ட வகையில் வாழும், (நான் உள்ளிட்டு எவருக்கும்), ஒரு மனிதரின் சமூக பங்களிப்பில் ஏற்படும் விளைவுகள் ஆனவை,  கீழ்வரும் காரணிகளைப் பொறுத்ததாகும்.

1. சம்பந்தப்பட்ட மனிதரின் , அவருக்கு புரிந்த மற்றும் புரியாத, தனிமனித வரை எல்லைகள்(limitations);

2. அந்த வரை எல்லைகளுக்குட்பட்டு, சமூகத்தில் உள்ள ஆற்றல்களையும், செயல்பாட்டில் உள்ள விசைகளையும் கணக்கில் கொண்டு,உருவாக்கி செயல்படுத்தும் முழுசெயல் திட்டமும்(strategy), உடனடி செயல் திட்டமும்(tactics);

3. தனிமனிதரின் வரை எல்லைகளுக்கப்பால் உலகம், மற்றும் இயற்கை புலங்களில் உள்ள 'எதிர்பாரா' ஆற்றல்கள்(Energy) மற்றும் வெளிப்படும் விசைகள்(Forces);

4. மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்கும் மனிதரின் வயதாகும் போது, ஏற்படும் மாற்றங்கள் (Physically & mentally dependent)  காரணமாக, அவர் ஏற்கனவே பயணித்த  தடத்தில், பகுதியாக தடம் புரண்டு, வெளிப்படுபவை;

மேற்குறிப்பிட்ட காரணிகளின் செல்வாக்கின் தொகுவிளைவாக(Resultant),  சமூக இயக்கவியலில் (Social Dynamics), மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவரின் பயணத்தில், ஏற்படுத்தும் 'திசை மாற்றமானது', தவறாக அமைந்து விட்டால், அழிவுபூர்வ விசைகளின் செல்வாக்கில், கால ஓட்டத்தில், சமூகத்திற்கு பாதகமான எதிர்த்திசையில் திருப்பும் சமூக சுழற்சிக்கு(social torsion) உள்ளாகி, அந்த தலைவருக்கும், அந்த சமூகத்திற்கும் கேடாக முடியுமா? என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்விற்கு, உதவும் தகவல்கள் வருமாறு:
[ஈ.வெ.ராவுக்கு கல்வி தொடர்பாக இருந்த வரைஎல்லைகள்(limitations)  இல்லாத, லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட 'திசை மாற்றமானது'; 'தனி நாடு' (லீ குவான் யூ உள்ளிட்டு) கோரிக்கையின்றி, தனிநாடான சிங்கப்பூரில், சாலை சந்திப்புகளில் போலீஸ் பகிரங்கமாக லஞ்சம் வாங்கும் அளவுக்கு மோசமான நிலை; மலேசியா நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவு; என்ற நிலையிலிருந்து, இன்றுள்ள சிங்கப்பூராக எவ்வாறு முன்னேறியது? முன்மாதிரியாக வாழ்ந்த தலைவருக்கும், கட்சிக்கும், 'சுருதி பேதமின்றி' பயணித்தது முக்கிய காரணமா? என்பது தொடர்பான‌ அரிய பாடங்களை தரவல்லதாக, லீ குவான் யூ வாழ்க்கை வரலாறும், சிங்கப்பூர் வரலாறும் அமைந்துள்ளன.] 

திருப்பாதிரிபுலியூர் ஞானியார் ஸ்வாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் தமது 'குடிஅரசு' இதழை துவக்கியவர் ஈ.வெ.ரா ஆவார்.
http://www.tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/
( இதில் வியப்பென்னவென்றால், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்த நான், எனது இசை ஆராய்ச்சிகளின் போக்கில் , எதிர் திசையில், சைவத்தை நோக்கி பயணிக்கிறேன்.
http://www.musicresearch.in/categorydetails.php?imgid=137  &http://veepandi.blogspot.in/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html)
 

அதன்பின் ஈ.வெ.ரா திசை திரும்பி, அண்ணாதுரையின் வருகை காரணமாக, தமிழ்நாட்டில் 'புதிதாக' வெளிப்பட்ட கூடுதல் ஆற்றல்கள் பற்றி 'தவறாக' கணித்து, அவரை 'வளர்த்து', 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாக்கி, அதன் பின்விளைவுகள் சமூகக்கேடாகும் 'சுருதி பேத' அபாயத்தை உணர்ந்து, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் அதை வெளிப்படுத்தியது;

பின் அதிலிருந்து, 'சமூக நன்மை' என்று கருதி, சறுக்கி, அடுத்த நடந்த மாநாட்டில், அண்ணாதுரையை சாரட்டில் உட்காரவைத்து, ஈ.வெ.ரா ஊர்வலத்தில் நடந்தது; அதன்பின் அந்த 'சறுக்கலால்' பலனில்லை என்று உணர்ந்து, மணியம்மையை 'வாரிசாக்கியது' (அன்று அமுலில் இருந்த இந்து சட்டப்படி, வாரிசாக்க ஆணென்றால் 'மகனாக' தத்து எடுக்கலாம்; பெண்ணென்றால் சட்டப்படி 'மனைவியாக்குவதன்' மூலமே தான் வாரிசாக்க முடியும்); 

உண்மை தெரிந்தும், சமூகத்தின் 'பொது கருத்து' சூழலை பயன்படுத்தி, அண்ணாதுரையின் தி.மு.க வானது,( 'பெரியார்' எதிர்ப்பில் தி.மு.க வின் வால்களாக, - ராஜாஜியின் ஆசியோடு-  செயல்பட்டு, பின் தி.மு.க ஆட்சியில் 'பலன்களும்'அனுபவித்த, ம.பொ.சி, ஆதித்தனார், போன்றோரின் 'தமிழர்' கட்சிகளும், துணை புரிய)‌ ஈ.வெ.ராவை 'வெற்றிகரமாக' இழிவு படுத்த முடிந்தது;

அந்த போக்கில், உடல் அளவிலும்(physically),  மன அளவிலும்(mentally) தனது சுயசார்பை பகுதியாக‌(partly) இழந்து, ஈ.வெ.ரா பிறர் சார்பானது;

என்று பகுத்தாய்ந்து தான், அவரை 'முன்மாதிரியாக' கொண்டு , நான் செயல்படுகிறேன்; ஒரு  கூட்டு முயற்சியாக செய்ய வேண்டியதை, தனி ஆளாக முயலும்போது, தவிர்க்க முடியாமல் உள்ள வரை எல்லைகள் பற்றிய புரிதலோடு.

புதிய சான்றுகளின் அடிப்படையில், தவறு என்று பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்ளும் ஈ.வெ.ராவின் துணிச்சலை, என்னால் இயன்ற அளவு அகவயப்படுத்தி வாழ்வதால்; ஈ.வெ.ராவிற்கு இருந்த 'கல்வி' தொடர்பான வரைஎல்லைகள் எனக்கு இல்லையென்றாலும், அதையும் மீறி, மேற்குறிப்பிட்ட வரை எல்லைகளின் 'பாதகங்களும்' கால ஓட்டத்தில் வெளிப்படும், பிறர் பங்களிப்பால், 'சரி செய்யப்படும்' என்ற நம்பிக்கையில்."