Wednesday, July 13, 2016



  ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்க முடியுமா?


தி.க விலிருந்து பிரிந்து, கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் தனிக் கட்சி தொடங்கியபோது, அதன்  துவக்க கூட்டம் மதுரையில் நடந்தது.

கி.வீரமணி புரவலராக இருந்த பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்து,  நான் விலகிய பின், என்னுடன் பயணித்தவர்களோடு சேர்ந்து, 'திருச்சி பெரியார் மையம்' என்று தனியாக செயல்பட்ட காலம் அது.

மேற்குறிப்பிட்ட கூட்டம் நடந்த மண்டப வாயிலில்,  திருச்சி பெரியார் மைய வெளியீடுகளை, ஒர் ஓரத்தில் பரப்பி, நானும் இன்னும் சிலரும் விற்றுக் கொண்டிருந்தோம். 

அப்போது கோவை.இராமக்கிருட்டிணன் என்னிடம் வந்து, அந்த கூட்டத்தில் பேசுமாறு வலியுறுத்தினார். கீழ்வரும் காரணத்தால், அக்கூட்டத்தில் பேச, நான் தயங்கினேன்.

'பெரியார்' சிறையில் ஈ.வெ.ரா  சிக்கியிருந்ததை,  அந்த கால கட்டத்திலேயே உணர்ந்து, 'தோழர். ஈ.வெ.ரா ' என்று திருச்சி பெரியார் மைய வெளியீடுகளில் அச்சிட்டு பரப்பிய காலம் அது.

அவர் மிகவும் வலியுறுத்தியதால், நான் அக்கூட்டத்தில் பேசத் தொடங்கினேன்.
'பெரியார்' கொள்கைகளை பாராட்டி பேசத் தொடங்கி, 'தோழர் ஈ.வெ.ரா ' என்று என் பேச்சில்  நான் குறிப்பிட்டதும்,  கூச்சலும் குழப்பமும் அரங்கை ஆக்கிரமிக்க,  நான் பேச்சை நிறுத்திவிட்டு, மேடையிலிருந்து இறங்கி வந்து, மீண்டும் புத்தக விற்பனையில் ஈடுபட்டேன்.

அங்கு வந்த, கோவை.ராமகிருட்டிணனிடம், 'இதற்கு தான், நான் பேச மாட்டேன்' என்று சொன்னேன்' என்று கோபத்தை வெளிப்படுத்தினேன். அவர் என்னை சாந்தப்படுத்திவிட்டு, அங்கிருந்து அகன்றார்.

பின் புத்தகம் வாங்கியவர்களில், ஓவியா 'ஆனைமுத்துவுக்கே மறுப்பா?' என்று வியப்புடன், அந்த மறுப்பு பற்றிய புத்தகத்தை வாங்கி சென்றதும், எனக்கு மறக்க முடியாத அனுபவமானது. 

ஆக பெரியார் கொள்கைகளை பாராட்டி பேசினாலும், 'ஈ.வெ.ரா' என்று சொல்லானது, ‘அவரை அவமதிக்கும் சொல்’ என்ற உண‌ர்ச்சிபூர்வ போதையானது,  தமிழ்நாட்டில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே செல்வாக்கு பெற்று விட்டது. 

இந்த அளவுக்கு, தலைவரின் பெயரை,  அவரை பாராட்டுபவர்கள்  சொன்னாலும் அவமரியாதை என்று கருதும் 'சீர்திருத்த'/'புரட்சி'(?) இயக்கம், உலகில், நானறிந்தது வரை, தமிழ்நாட்டில் மட்டுமே இருந்தது/இருக்கிறது. 

" 'தோழர் ஈ.வெ.ரா' என்று குறிப்பிடும் 'திருச்சி பெரியார் மையம்' பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை" என்று கி.வீரமணி சொல்லியதாக, நான் கேள்விப்பட்டது, வரலாற்றில் உண்மையாகி விட்டது. 

நான் இசை ஆய்வுகள் நோக்கி, திசை திரும்பி,  'திருச்சி பெரியார் மையம்' செயலிழந்து விட்டது என்று நான் கருதியிருந்தேன். ஆனால் நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான‌ வழியில்லாத நபர்கள், 'திராவிட அரசியல் கொள்ளை வலைப்பின்னலில்' இடம் பெற்று 'குறுக்கு வழி' பணக்காரர்கள் ஆகும் 'ஏணியாக' திருச்சி பெரியார் மையம் பயன்பட்டு வந்தது/வருவது எனக்கே நம்ப முடியாத அதிர்ச்சியானது. ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )  நான் கி.வீரமணியை விட்டு விலகாமல் இருந்திருந்தால், எனக்கும் சமூகத்திற்கும் கேடான சமூக கிருமிகள், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. கீழ்வரும் காரணத்தால், அதில் எனக்கு வருத்தமில்லை. நமது வாழ்வில் சந்திக்கும் துயரங்களையும், சீர்குலைவுகளையும், 'சிக்னலாக' (signal) கருதி, சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதால், சமூகத்தின் சீர்கேடுகளிலிருந்து மீள்வதற்கான திறவுகோல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளிப்பட்ட 'பெரியார் சமூக கிருமிகளை, ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலமே, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த, தமிழர்களை வேரற்றவர்களாக்கும் பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது; இசை இயற்பியல் (Physics of Music)  அடிப்படையில், பழந்தமிழ் இலக்கியங்களில், நான் மேற்கொண்ட ஆய்வுகளின் துணையோடு

எனது சமூகவியல் ஆய்வுகளுக்கு துணை புரிந்த/புரியும் சமூகவியல் பரிசோதனை மாதிரிகளாக ( Sociological Real Life Experimental Specimens), திருச்சி பெரியார் மையம் மூலம் நான் அடையாளம் கண்ட, 'பெரியார்' 'சமூக கிருமிகள்' பயன்பட்டு வருகிறார்கள். [ 'sociologists use empirical evidence (that is, evidence corroborated by direct experience and/or observation) combined with the scientific method or an interpretive framework to deliver sound sociological research.'; https://opentextbc.ca/introductiontosociology/chapter/chapter2-sociological-research/ ] அந்த ஆய்வு நோக்கில், எனக்கு கிடைக்கும் சான்றுகளையும், அந்த சான்றுகள் அடிப்படையில் நான் யூகிப்பவைகளையும், எனது பதிவுகளில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். நான் முனைவர் பட்டம் பெறுவதற்கோ, பணம், புகழ் சம்பாதிப்பதற்கோ,  இதில் ஈடுபடவில்லை......தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் எண்ண‌ற்றோரின் தியாகங்கள் (தேசிய, திராவிட, பொதுவுடைமை உள்ளிட்ட அனைத்து இயக்கங்களிலும்) எல்லாம், தமிழ்நாட்டில் 'பொது அரங்கில் சுயநலக் கள்வர்கள்' ஆதிக்கம் பெறும் விளைவிலா,  முடிய வேண்டும்? அதிலிருந்து மீள வேண்டுமானால், அந்த பாதக விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பத்தை (Social Mechanism),  கண்டுபிடிக்க வேண்டாமா?  (http://tamilsdirection.blogspot.in/2016/03/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

இன்று தி.மு.க, மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் சென்னை தலைமை அலுவலகங்களில், அக்கட்சிகளின் தலைவர்களின் பெயரை சொல்லி, குறிப்பிட்டு பேசி விட்டு, அசம்பாவிதம் ஏதுமின்றி எவரும் திரும்பி வர முடியுமா? என்ற கேள்வி  உருவானதற்கு  யார் காரணம்? என்பதும் ஆய்விற்குரியதாகும். ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்பதானது, தமிழ்நாட்டின் பொதுவாழ்வை, சீரழிவிலிருந்து மீட்பதற்கான துவக்கமாக அமைய வாய்ப்புண்டு; மாணவர்கள் மத்தியில், 'பெரியார் யார்?' என்று கேட்கும் போக்கானது, உச்சத்தை தொடுவதற்கு முன்னால்.( http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html )

இன்று பொதுவாழ்வில், 'சுயலாப கணக்குடன்' தான், எவரையும் ஆதரிப்பது/எதிர்ப்பது என்றுள்ள சூழலில், ஈ.வெ.ராவின் சுயலாப நோக்கற்ற வாழ்வின் தியாகங்களை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வ போக்குகளில், 'இந்துத்வா' மற்றும் 'தமிழ்த் தேசிய' ஆதரவாளர்களில் சிலர், உணர்ச்சிபூர்வமாக ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி வருவதை எனது பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். ஈ.வெ.ரா 'பெரியார்' சிறையில் சிக்கியிருப்பதானது, அம்முயற்சிகளுக்கு வலுவூட்டுவதாகும்.

ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்டு, காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு உட்படுத்தி, அவரின் சுயலாபமற்ற சமூக தொண்டை வளர்க்க விரும்புபவர்கள் பார்வைக்கு;

'பண்டிகைகளின் சமூக பரிமாணங்கள் (social dimensions)' பற்றிய புரிதலின்றி, காலனிய சூழ்ச்சியான 'ஆரியர்- திராவிடர்' கருத்தாக்கத்தில் சிக்கி;

'தீபாவளி' உள்ளிட்ட பண்டிகைகளை எதிர்த்ததானது;

தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உருவாக காரணமான:

தமது இயக்கத்திற்கான சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து (Sources) அந்நியமாக;

அவர் புரிந்த பல தவறுகளில் ஒன்றா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்கள் கிழே.

இங்கர்சால் கிறித்துவராக பிறந்து, பின் 'எதீயிஸ்ட்' ஆகி (Atheist- நாத்தீகம் என்ற சொல்லானது சமஸ்கிருதத்தில் வேதத்தை மறுப்பவரை குறித்த சொல்; கடவுளை மறுப்பவரை குறிக்கும் சொல் அல்ல) ;

கிறித்துவ மத்தை எதிர்த்தவர், ஏன், எவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்? என்பது தொடர்பான தகவல்கள் கீழே.

எனக்கு நேரம் கிடைக்கும்போது, இவற்றை தமிழில் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது. அதற்கு முன்னே, எவராவது, இயலுமானால், தமிழில் மொழிபெயர்த்து உதவுவதை, நன்றியுடன் வரவேற்கிறேன்.

"தமிழர்கள் அழிவுபூர்வ பின்னூட்ட வளையில்  சிக்கி, சீரழிந்து வருகின்றனர். அது ஆக்கபூர்வ பின்னூட்ட வளையாக மாறும் வரை, கடுமையாக போராடியாக வேண்டும்' (“Tamils are suffering the negative feedback loop. It will be a hard struggle until it switches to positive feedback loop. ”) என்று லண்டனில் வாழும் எனது நண்பர் வே.தொல்காப்பியன் தெரிவித்துள்ள கருத்தே, தமிழரின் மீட்சிக்கான திறவுகோல் ஆகும்

காலனிய சூழ்ச்சிகளில் தமிழில் இருந்த 'இனம்' திரிந்து,  'திராவிடர்', மற்றும் இன்றுள்ள 'சாதி அமைப்பு' அரங்கேறி, அதில் ஈ.வெ.ரா சிக்கி, 1944இல் தி.கவை உருவாக்கி, உணர்ச்சிபூர்வ பிராமண எதிர்ப்பில், பயணித்ததே, அழிவுபூர்வ பின்னூட்ட வளையில் தமிழும், தமிழரும், தமிழ்நாடும் சிக்கி, சீரழியவும், அந்த பின்னணியில் 'பெரியார் சமூக கிருமிகள்' வளரவும், காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேலே குறிப்பிட்ட மீட்சிக்கான திறவுகோலை அமுலாக்க, 'சுயலாப கள்வர் நோய்' உள்ள, நேர்மையான சுயசம்பாத்தியமின்றி, 'குறுக்குவழி, ஊழல்வழி' மனிதர்களை, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, பாராட்டு, புகழ், செல்வாக்கு போதையில் சிக்காமல், ஆக்கபூர்வ பின்னூட்ட வளையாக (positive feedback loop),  எனது சமூக வட்டத்தை மாற்றி வருகிறேன் (‘For Joyful Life; Beware of the Negative Feedback Loop’; http://veepandi.blogspot.in/2013/03/normal-0-false-false-false.html); ஈ.வெ.ரா 'பெரியார்' சிறையில் சிக்கியதால் விளைந்த, அழிவுபூர்வ பின்னூட்ட வளையிலிருந்து,  'மீட்சி' நோக்கிய முயற்சியாக; ஆக்கபூர்வ பின்னூட்ட வளையாக இருந்த எனது  சமூக வட்டமானது, 'பெரியார்' கொள்கையில்  நான் நுழைந்ததால்,  அழிவுபூர்வ வளையானதிலிருந்து, மீளும் முயற்சியாக.

1.    “My family and I regard Christmas as a holiday--that is to say, a day of rest and pleasure--a day to get acquainted with each other, a day to recall old memories, and for the cultivation of social amenities. The festival now called Christmas is far older than Christianity. It was known and celebrated for thousands of years before the establishment of what is known as our religion.”- AN ESSAY ON CHRISTMAS (First part)
The Works of Robert G. Ingersoll, Vol. 4

2.    “I believe in the festival called Christmas--not in the celebration of the birth of any man, but to celebrate the triumph of light over darkness--the victory of the sun. I believe in giving gifts on that day, and a real gift should be given to those who cannot return it; gifts from the rich to the poor, from the prosperous to the unfortunate, from parents to children.”
-          GIFT GIVING
-          The Works of Robert G. Ingersoll, Vol. 12

3.    As other religions have been produced, the old customs have
been adopted and continued, so that the result is, this festival of
Christmas is almost world-wide. It is popular because it is a
holiday. Overworked people are glad of days that bring rest and
recreation and allow them to meet their families and their friends.
They are glad of days when they give and receive gifts -- evidences
of friendship, of remembrance and love. It is popular because it is
really human, and because it is interwoven with our customs,
habits, literature, and thought.”
http://infidels.org/library/historical/robert_ingersoll/interviews/set_5.html

சுயலாப நோக்கின்றி, சமூக அக்கறையில் பயணித்திருந்தாலும், தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி,  ஈ.வெ.ரா  பயணித்து, தாய்மொழி, இலக்கியங்கள், புராணங்கள், பாரம்பரியம், பண்பாடு, பண்டிகைகள், சடங்குகள் உள்ளிட்டவற்றை 'மூர்க்கத்தனமாக' எதிர்த்ததால்; 2006 முதல் நான் வெளியிட்டு வரும் 'ஆய்வு எச்சரிக்கைகளை' புறக்கணித்து, அதே தவறான திசையில், 'பெரியார்' கட்சிகள் இன்றும் பயணித்து வருவதால்;

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த பாதிப்புகள் பற்றிய ஆய்வுகள்,  உலகின் கவனத்தை ஈர்க்கவல்ல, அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளிப்படுத்தினால், வியப்பில்லை;
என்பதற்கு அவை தொடர்பான, புதிதாக வளர்ந்து வரும் அறிவியல் துறையில் வெளிப்பட்ட சான்று வருமாறு.
"Human societies have memories that are transmitted through the culture of the group, and are most explicitly communicated through the ritual re-enactment of a founding story or myth, as in the Jewish Passover celebration, the Christian Holy Communion and the American thanksgiving dinner, through which the past become present through a kind of resonance with those who have performed the same rituals before."
http://www.sheldrake.org/research/morphic-resonance/introduction
 

Tuesday, July 12, 2016



'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை'(?)யும்


“ 'மாதொருபாகன்' நாவலுக்கு தடை இல்லை: படைப்பாளிகளின் கருத்துரிமையை பாதுகாக்க 3 மாதத்தில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு” - http://tamil.thehindu.com/tamilnadu/

மேலே குறிப்பிட்டுள்ள தீர்ப்பை வரவேற்றவர்கள், மற்றும் அத்தீர்ப்பின்படி உருவாக உள்ள‌ நிபுணர் குழுவின் பார்வைக்கு, சமூக பொறுப்புடன் கூடிய அறிவுபூர்வ விவாதத்தை எதிர்நோக்கி, கீழ்வரும் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

ஒரு சமூகத்தில் மனித உரிமைக்கான வரையறைகள்(definitions) மற்றும் வரை எல்லைகளை(limitations)  எப்படி தீர்மானிப்பது?

மனித உரிமை பாதுகாப்பாளர்களின் பாரபட்ச (discrimination) போக்கு, மிகவும் பாதகமான மனித உரிமை மீறல் ஆகாதா?

ஒரு சமூகத்தின் மொழி, பாரம்பரியம்,பண்பாடு,நிலத்தடி நீர் அதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், கிரனைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், மனித உரிமைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். மேலேக் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள்,  அந்த தொடர்புகளின் அடிப்படையில் பெறப்படுபவை ஆகும்.அந்த தொடர்பை பற்றிய தெளிவின்றி, மனித உரிமைகளைத் தனித்து, பிரித்து அணுகுவது ஆபத்தாகும். அந்த அணுகுமுறையில், மனித உரிமைப் பாதுகப்பு முயற்சிகளில் பாரபட்சம்(discrimination)  கடைபிடிப்பது பேராபத்தாகும்.

தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள சீர் கேடுகளிலிருந்து, சுயநல நோக்கின்றி, மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் இனியும் புறக்கணிக்க முடியாத கேள்விகள் இவை. 'மாதொரு பாகன்' நாவல் பிரச்சினையும், அதை எழுதிய பெருமாள் முருகனின் 'மனித உரிமை' (?)பாதுகாப்பாளர்களும், தமிழ்நாட்டில் இக்கேள்விகளை குவிய விவாதத்திற்கு(focused debate)  உட்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளார்கள்.அந்த கேள்விகளுக்கான விடைகள், மனித உரிமை பாதுகாப்பில் சட்டத்தின் வரை எல்லைகள், மற்றும் சமூகத்தின் வரை எல்லைகள் பற்றியும் தெளிவுபடுத்தும். அந்த நாவல் தொடர்பான 'மனித உரிமை மீறல்' பிரச்சினை பற்றிய தகவல்கள் கீழுள்ள குறிப்பில் உள்ளன.

ஒரு மனிதன் தனி ஒரு ஆளாக ஒரு தீவில் வசிக்கும்போது அவரின் மனித உரிமைக்கு அவசியமில்லை. மானம், மான நஷ்டம் போன்ற பிரச்சினைகளும் இல்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழும்போது,கருத்துரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் ஆனவை, சம்பந்தப்பட்ட மனிதர்களில் எவரையும் பதிக்காத வரையில், பிரச்சினை இல்லை. பாதிக்கும் போது தான், மனித உரிமைகளுக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் தேவைப்படுகின்றன.

அத்தகைய வரையறைகளையும், வரை எல்லைகளையும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் தமக்குள் கலந்து பேசி, உருவாக்கி, கடைபிடிக்கும் போதும் எந்த சிக்கலுமில்லை.

வரை எல்லைகள் மீறுவதைக் கண்காணித்து, நெறிப்படுத்தும் பணி, அந்த மனிதர்கள் வாழும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் மூலமே நிறைவேற்ற முடியும். அந்த அமைப்புக்கு உள்ள வலிமையைப் பொறுத்தே, அந்த அமைப்பின் கட்டளைகள் நிறைவேறும்.
சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை அரசுக்கு இருக்கும். அந்த வலிமை குறைந்து,பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர்,அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் தடையான‌, ‘உள்மறை இரகசியத்தடைகள்’ - ‘Subterranean censorship’ -இந்தியாவில் அதிகரித்து வருவது பற்றி பின்னர் பார்ப்போம்.

சமூகத்தில் உள்ள மக்கள் கோரிக்கைகள் மூலமும், போராட்டங்கள் மூலமும் கொடுத்த அழுத்தங்களே மனித உரிமைகளின் தோற்றம், மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாறு ஆகும்.

தனி மனித உரிமைகளை வலியுறுத்திய 'மாக்ன கார்த்தே'- Magna Carta (1215)-,'உரிமைகளுக்கான விண்ணப்பம்'- the Petition of Right (1628), 'அமெரிக்க அரசியல் சட்டம்'- the US Constitution (1787),,'மனிதர் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரெஞ்சு பிரகடனம்'- the French Declaration of the Rights of Man and of the Citizen (1789),,'அமெரிக்காவின் உரிமைகள் சட்டம்' - the US Bill of Rights (1791) , உணர்த்தும் வரலாறு அது தான்.
(Documents asserting individual rights, such as the Magna Carta (1215), the Petition of Right (1628), the US Constitution (1787), the French Declaration of the Rights of Man and of the Citizen (1789), and the US Bill of Rights (1791) are the written precursors to many of today’s human rights documents.- http://www.humanrights.com/what-are-human-rights/brief-history/cyrus-cylinder.html )

ஐ.நாவின் உலக மனித உரிமைகள் பிரகடனப்படி, -Universal Declaration of Human Rights-
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குமான மரியாதை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளவையே மனித உரிமைகள் ஆகும். (Human rights are based on the principle of respect for the individual. Their fundamental assumption is that each person is a moral and rational being who deserves to be treated with dignity.- http://www.humanrights.com/what-are-human-rights.html )

ஒரு மனிதரின் மரியாதை -honour-, கெளரவம்- reputation, உள்ளிட்டு அவரின் தனிவாழ்க்கைக்கான உரிமை- The Right to Privacy (No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honour and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks.)

ஒரு மனிதரின் சுதந்திரமான வளர்ச்சிக்கும்- free development, கெளரவத்திற்கும்- dignity  அத்தியாவசியமான சமூக பண்பாடு - social and cultural rights - உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உரிமை - Social Security  (Everyone, as a member of society, has the right to social security and is entitled to realization, through national effort and international co-operation and in accordance with the organization and resources of each State, of the economic, social and cultural rights indispensable for his dignity and the free development of his personality.)

மேலேக் குறிப்பிட்ட வரையறையின்படி, ஒரு மனிதரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மரியாதையைக் குலைக்கும் அளவுக்கு, இன்னொரு மனிதரின் அல்லது இன்னொரு சமூகத்தின் மனித உரிமைகள் செயல்பட முடியாது. அதாவது மனித உரிமையின் செயல்பாட்டுக்கான வரைஎல்லைகளுக்குக் கட்டுப்பட்டே, எந்த மனிதரின் அல்லது எந்த சமூகத்தின் மனித செயல்பாடும் அந்த வரைஎல்லைகளுக்குள் தான் செயல்பட வேண்டும். கட்டுப்பாடற்ற மனித உரிமை என்பது, நீண்ட வரலாற்றின் அடிப்படையில் உருவான மனித உரிமையின் வரையறையையும், வரை எல்லைகளையும் மீறியதாகும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தமக்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை,தமது குடும்பத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை;தமது சமூக வட்டத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை;பொதுவில் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை;என்று பேச்சுரிமை பல தளங்களில் செயல்படுவதாகும். அந்தந்த சமூக பாரம்பரிய, பண்பாடுகளின் அடிப்படையில் அவை செயல்படுவதாகும். ஐ.நாவின் மனித உரிமைகள் அந்த பாரம்பரிய, பண்பாடுகளைக் கணக்கில் கொண்டே, ஒவ்வொரு சமூகத்திலும் செயல்பட வேண்டும். மாறாக வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில் செயல்படுவது என்பது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமையும்.மேற்கத்திய நாடுகளில் ' பூங்கா- park- ' போன்ற பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து புரள்வது அவர்களுக்குள்ள உரிமை. அதைப் பார்த்து, இந்தியாவில் அதை அனுமதிக்க முடியுமா? அந்த நோயில் சிக்கி, இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க ஆண் பெண் உடலுறவு போராட்டம் நடத்துவார்களா?

'மாதொரு பாகன்' நாவலில் திருச்செங்கோடு பகுதியில் பெருமாள் முருகன் குறிப்பிட்ட தகவல்கள் ஆதாரபூர்வமானவையா? இல்லையா? என்பது ஆய்விற்குரியது. ஆதாரபூர்வமானவையென்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும், அதை நாவல் மூலம் வெளிப்படுத்தி, அங்கு வாழும் மக்களின் மரியாதைக்கும், கெளரவத்திற்கும் களங்கம் கற்பிப்பது, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் மீறல் ஆகாதா? பெருமாள் முருகனின் எழுத்துரிமைக்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் வரை எல்லைகள் பொருந்தாதா?

இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுக்கான 'அறிவுபூர்வமான கட்டுப்பாடுகள்' (reasonable Restrictions),  மேலேக்குறிப்பிட்ட வரை எல்லைகளின் அடிப்படையிலேயே உருவானவை, என்பதை, அது தொடர்பான இந்திய அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுரிமையும், எழுத்துரிமையும்,அந்த வரை எல்லைகளை மீறும்போது, அவை 'மான நட்ட வழக்கு'க்குரியவையாகக்(Defamation) கருதப்பட்டு, நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

உலகில் உள்ள சமூகங்கள் வெவ்வேறு பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் வெவ்வேறாக இருக்கும்போது,மனித உரிமைக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் வெவ்வேறாக இருப்பதில் வியப்பில்லை.

காலனி ஆட்சியில் அடிமைப்பட்ட நாடுகளில், இரு வேறு நாடுகளின் வரையறைகளும், வரை எல்லைகளும் ஒரு வகையான மோதலில் சிக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் அந்த பாதிப்புகளே காலனிய மன நோயாளிகளையும், திராவிட மன நோயாளிகளையும் உருவாக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம்('காலனிய' மனநோயாளிகளும்,'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் மானநட்ட வழக்கு தொடுத்து தண்டிப்பதற்கு, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவை மூலமே வழக்கு தொடுத்தாக வேண்டும்.அந்த இரண்டும் மேற்கத்திய சமூக வரலாற்றுப் பின்னணியில் உருவாகி, இந்திய சமூக சூழலில் எந்த அளவுக்கு நீதியை நிலைநாட்ட பயன்பட்டிருக்கிறது? குற்றவாளிகள் 'ஓட்டைகள்' மூலம் தப்பிக்க வழி வகுத்திருக்கிறது? என்பது ஆய்விற்குரியதாகும்.

பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார்(Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை இரகசியத்தடை  ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார். https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf

சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.

ஒரு நாட்டில் நீதி மற்றும் சட்டம் எவ்வாறு செயல்படுவது என்று மதிப்பிடுவது தொடர்பாக‌,  அந்நாட்டின் குடிமக்கள் நினைப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் தெளிவுபடுத்தியுள்ளார். (Socrates argues that law and justice should be evaluated above what citizens think the proper action to take is. “I thought I should run any risk on the side of law and justice rather than join you, for fear of prison or death, when you were engaged in an unjust course” (32b-c). From ‘Moral Theories and Moral Obligations’ Written by Michael J. Ritter Edited by Michael J. Ritter and Richard J. Colling}

இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌  சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா? உரிய நீதி பெறுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும்,ஊழல் தொடர்புள்ள அரசு வக்கீல், நீதிபதிகள் உள்ளிட்ட குறைபாடுகளும் எந்த அளவுக்கு இருக்கின்றன? அவை மேற்குறிப்பிட்ட சமசீரற்ற பண்பு வலிமை பெற எந்த அளவுக்கு துணை புரிந்துள்ளன? போன்ற கேள்விகளின் வலிமையை 'மாதொரு பாகன்' 'மனித உரிமை மீறல்' பிரச்சினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் வேதங்களுக்கும், யாகங்களுக்கும் எதிரான 'அறிவுபூர்வ' விவாதங்கள் நடைபெற்றதற்கு சமஸ்கிருதத்திலும், தமிழிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்கள் உணர்வுபூர்வமாக தடம் புரண்டு, பொது அரங்கில் எதிரணியினர் ஒருவரையொருவர் இழிவுபடுத்துவது, 1944இல் முளை விட்டு வளர்ந்ததை ஏற்கனவே பார்த்தோம்(’பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டதானது, மேலேக் குறிப்பிட்ட கேள்விகள் எழ காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில்  மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளில் பாரபட்சம் கடைபிடிக்கிறார்களா? என்ற கேள்வியையும் 'மாதொரு பாகன்' நாவல் பிரச்சினை எழுப்பியுள்ளது.

பெருமாள் முருகனின் 'எழுத்துரிமையை'(?) கம்யூனிஸ்டுகளும் ஆதரிக்கிறார்கள். அவர்கள் கேரளாவில் கம்யூன்ஸ்ட் கட்சியினரால், பால் சக்கிரியா (Paul Zachariah,) என்ற மலையாள எழுத்தாளரை கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியதைக் (manhandled) கண்டித்தார்களா? பெருமாள் முருகன் எழுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு பெருமாள் முருகனைத் தாக்கவில்லை.இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கொண்ட 'ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும்'(moral policing), கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிகவும் ஆடம்பர வாழ்க்கையில் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்து வாழ்ந்ததையும்(“lavishly, indulging in sex”)  பால் சக்கிரியா கண்டித்து எழுதியதே, அந்த தாக்குதலுக்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் கடந்த வருடங்களில், அரசியல் செல்வாக்குள்ள கொலையாளிகளால் மிரட்டப்பட்டு, அரசு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி, அந்த கொலையாளிகள் நிரபராதிகளாக விடுதலையானார்கள். பெருமாள் முருகனுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆதரவாளர்கள், அந்த எந்த பின்பலமற்ற அப்பாவி சாட்சிகளின் மனித உரிமைக்கு குரல் கொடுத்தார்களா? ஆக மனித உரிமைப் பாதுகாப்பிலும் பாரபட்சம் காட்டுவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் மனித உரிமைப் போராளிகளால் முன்னெடுக்கப்படும்,  மனித உரிமைகள் தொடர்பான வரையறைகளும், வரை எல்லைகளும் எவ்வாறு உருவாகி, எந்த அளவுக்கு நேர்மையாக, அல்லது பாரபட்சமாக செயல்படுகிறது?

தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் உள்ள மனித உரிமை மீறல்களை 'வாழ்வியல் புத்திசாலித்த‌னத்துடன்' கண்டு கொள்ளாமல்,  'ஆதிக்கவாதிகளுடன்' நல்லுறவாக இருந்து கொண்டு, தம்மையும் தமது குடும்பத்தையும் நன்கு செட்டில் செய்து, பெருமாள் முருகன் பிரச்சினை போன்றவற்றில் சுயலாப நோக்கின்றி போராடுபவர்களுடன் சேர்ந்து, முன்னுக்கு நிற்கும் ‘மனித உரிமைப் போராளிகளை’(?)  எவராலும் அம்பலப்படுத்த முடியாது; அந்த அளவுக்கு மீடியா, நிதி மன்றம் உள்ளிட்டு அனைத்திலும் அவர்கள் வலிமையானவர்களா? ஒரு சமூகத்தின் மொழி, பாரம்பரியம்,பண்பாடு,நிலத்தடி நீர் அதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், கிரனைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், மனித உரிமைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும்.சமூகத்தில் வெளிப்படும் ஆற்றல் செயல்பாடானது(‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html), அந்த தொடர்பை துண்டித்து, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி, பாரபட்ச போக்கில், தமக்கு 'வேண்டியவர்களின்' மனித உரிமைகளுக்காக மட்டும் போராடுவது சரியா? வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் மனித உரிமை என்.ஜி.ஓக்களுக்கு உள்மறை ‘Subterranean’  செயல்த்திட்டம் இருப்பதே மேற்குறிப்பிட்ட பாடபட்ச மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளுக்கு காரணமா? உலக வர்த்தக வியாபார நலன்களுக்கு ஏதுவாக இந்திய மக்களை 'நுகர்வு கலாச்சாரத்தில்' சிக்க வைக்க, இந்திய பாரம்பரிய, பண்பாடுகளுக்கு இருக்கும் செல்வாக்கில் வலிமையையும், மேற்கத்திய சூழ்ச்சிகளுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையையும் குலைப்பதற்கு வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓக்கல் பங்களிப்பு வழங்கி வருகிறார்களா? ‘India Foundation for the Arts (IFA)’ என்ற என்.ஜி.ஓ அமைப்பு 'மாதொரு பாகன்' நாவல் எழுத பெருமாள் முருகனுக்கு ரூபாய் 3,28,500 நிதி உதவி செய்துள்ளது. 'மாதொரு பாகன்' நாவல் மூலம் பெருமாள் முருகன் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்படுவதற்குரிய குற்றவாளியானால், அந்த நாவல் எழுதத் தூண்டி, நிதிஉதவி செய்த அமைப்பும் குற்றவாளியாகாதா?

ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளில் உலக நாடுகளுக்கிடையே பாரபட்சமான செல்வாக்குகள் இருப்பதால், வலிமையான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள மனித உரிமைகளை மீறி செயல்பட்ட போது, அதைத் தடுக்கும் வலிமை ஐ.நாவுக்கு இருந்ததில்லை. அது ஐ.நா அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.

எனவே இந்தியாவிலும், உலக அளவிலும் மனித உரிமைப் பாதுகாப்பில் உள்ள பாரபட்சத்தையும்,வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில்,இன்னொரு சமூகத்தில் அந்த வரை எல்லைகளைத் திணிப்பதானது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமைவதையும், தமிழ்நாட்டில் பொது அரங்கில், சமூகப் பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, 'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை' (?) அதரவாளர்களும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

சுதேசி புறக்கணிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய சமூகத்தின் கருத்து அமைப்பில் (Paradigm), பாரபட்ச அணுகுமுறையில்,  ஒரு சமுகம் சிக்கிவிடுமானால், அங்கு தீவிரவாதமும், பயங்கரவாதமும் எளிதில் முளைவிட்டு, அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக‌ வளர்வதை தடுக்க முடியாது.

"ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள், 'மெட்ராஸ் கஃபே' (Madras Café) உள்ளிட்டு தமக்குப் பிடிக்காத திரைப்படங்களை எதிர்த்துப் போராடி , தடையில் வெற்றியும் பெற்றதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் நூல்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களும், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களும்; கருத்துரிமை எதிர்ப்பில் ஒரே வகையா? இல்லையா? பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட‌  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

அதே போல், விடுதலைப்புலி ஆதரவாளர்களில் (குறிப்பாக அந்தந்த பகுதிகளில்)  யார் யார்  பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் கருத்துரிமை மீது மேற்கொண்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

பாதிக்கப்பட்டதாகக் கருதிய மக்கள், பாதிப்புக்குள்ளாக்கியதாகக் கருதிய பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் உள்ளிட்ட  எழுத்தாளர்களை எதிர்த்து,போராடினார்கள். பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்  சார்ந்த சாதியினரையோ அல்லது கட்சியினரையோ தாக்கவில்லை.

ஆனால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆய்விற்காகவும், ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் வந்திருந்தவர்களை, 'சிங்களவர், பெளத்தர்' என்ற காரணத்திற்காக தாக்கியவர்கள் தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் செயல்படும் கட்சியினர் ஆவர். (http://dbsjeyaraj.com/dbsj/archives/18826 )

பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் மேற்குறிப்பிட்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்……….."