'பார்ப்பனர் நலன்': 'மூடநம்பிக்கையா'? 'பகுத்தறிவா'?
.“இந்துத்வா கட்சிகளில் உயர்பதவிகளில் பிராமணரல்லாதோர் வரமுடியாது என்ற
பிரச்சாரத்தை முறியடித்தவர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மோடி”.
ஏற்கனவே உமாபாரதி, கல்யாண்சிங் போன்றவர்கள் வாஜ்பாய் காலத்திலியே உயர்பதவி
வகித்துள்ளார்கள் . பார்ப்பனர் நலன் நோக்கில் கொடுக்கப்படும் முன்னுரிமையும், அதற்கு
மற்றவர்களையும் பயன்படுத்தும் தன்மையும் இந்துத்வா அமைப்புகளில் உள்ளது.
மேலே
சிகப்பில் உள்ளவை ஏற்கனவே பதிவில் வெளிவந்ததாகும்.(’ தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்
‘திராவிடச் சிக்கல்கள்’’;
http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2014-01-01T00:00:00-08:00&updated-max=2015-01-01T00:00:00-08:00&max-results=50 )
http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2014-01-01T00:00:00-08:00&updated-max=2015-01-01T00:00:00-08:00&max-results=50 )
மேலேக்
குறிப்பிட்டது உள்ளிட்ட, 'தமிழர் திசை' பதிவுகளைப்
படித்தவர் எழுப்பிய கருத்து, அதன் கீழுள்ளதாகும்.
அதில் வரும் 'பார்ப்பனர்
நலன்' என்பது என்ன?
"பார்ப்பனர் நலன்"
என்ற கருத்தில், உணர்ச்சிபூர்வ கூறுகள் யாவை என்பதும்,அறிவுபூர்வ கூறுகள் யாவை என்பதும்,
பெரியார் மற்றும் 'இந்துத்வா எதிர்ப்பு' கட்சிகளில் உள்ள, அந்தந்த மனிதரின், அறிவு மற்றும் அனுபவத்தைப் பொறுத்ததாகும்.
'பார்ப்பனர் நலன்'
என்ற கருத்தில், ஆயிரக்கணக்கான வருடங்களாக கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களில்
பெரும்பான்மையினரைக் கல்வி கற்க விடாமல் செய்தவர்கள் 'பார்ப்பனர்கள்', என்ற பெரியாரின்
நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தவன் நான், இசை ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கிய பின்னும்.
எனது இசை ஆராய்ச்சி தொடர்பாக,தொல்பொருள் துறையில் (Archeology
Dept) ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளருடன் (Epigraphist)
உரையாட வாய்ப்பு கிடைத்த போது,மேலேக் குறிப்பிட்ட
எனது நிலைப்பாட்டை விளக்கினேன்.
அபத்தமான கேள்வி
கேட்ட ஒரு ஆரம்பப் பள்ளி மாணவரை, ஒரு கல்லூரி பேராசிரியர் பார்ப்பது போல, என்னைப் பரிதாபமாகப்
பார்த்து, "சார், அது தி.க காரங்க சொல்றது. கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்பொருள்
சான்றுகளின் படி, வெள்ளைக்காரர் வருவதற்கு முன், இங்கு அதிகம் படித்தவர்களாக இருந்தவர்கள்
'கம்மாளர்கள்' என்று விளக்கினார். அது உண்மை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்ட பின்,
'பார்ப்பனர் நலன்' என்று முன்வைக்கப்படும் கருத்துக்களை, அறிவுபூர்வமாக சான்றுகளின்
அடிப்படையில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன்
முக்கியத்துவம் எனக்குப் புலனானது.
அந்த தேவையை உணராமல்,
தமது நிலைப்பாடுகளில் ஒருவர் பயணிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
ஒன்று, அந்த நிலைப்பாட்டில்,
'கஞ்சா போதையை'ப் போல, ஒருவகை உணர்ச்சிபூர்வ போதையில் மகிழ்ச்சி காண்பவராக அவர் இருக்க
வேண்டும்.
அல்லது அது அவரது
'பொதுவாழ்வு' வியாபாரத்திற்கு முக்கியமாக இருக்க வேண்டும்.
அரசும், சமூகமும் பின்னிப் பிணைந்திருந்த
நிலையில், செயல்பாட்டு தர ஏணியாக (Functional hierarchy) இருந்த 'வருணம்' என்ற சமூக
செயல் நுணுக்கம் (social Mechanism) , தமிழ்நாட்டில் எந்த காலத்தில், எந்த சமூகக் காரணங்கள்
அடிப்படையில் ' சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை' உள்ளடக்கிய செயல் நுணுக்கமாக மாறியது
என்பது ஆய்விற்குரியது.” தமிழ்நாட்டில் 'வருணம்' இருந்ததற்கு சான்றுகள் என்ன? அவை
''சாதிகளாக' தமிழ்நாட்டில் மாற்றம் பெற்றதற்கான சான்றுகள் என்ன? என்பது பற்றியெல்லாம்
கவலைப்படாமல், பெரியாரின் கருத்துக்களை 'வேத வாக்கு'போல் கருதி, உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பனர்
நலன்' என்று பேசுவது 'மூடநம்பிக்கையா'? 'பகுத்தறிவா'?
இன்றைய சாதி முறைக்கான சான்றுகள்
சங்க இலக்கியங்களில் இல்லை என்பதையும், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்டு அனைத்து
தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள், 'பறை' வகை இசைக் கருவிகளை இசைத்தார்கள் என்பது பற்றியும்
பதிவு செய்துள்ளேன்.
( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
அதே போல், “பல பரிமாணங்கள் கொண்ட
இலக்கியங்களிலும் புராணங்களிலும், 'பார்ப்பன நலன்' பார்வை வளையத்தில் சிக்கி, மூடநம்பிக்கை என்ற இரைச்சலை மட்டுமே பார்த்தது,
அவை ஒழிக்கப்பட வேண்டியவைகளே என்ற முடிவுக்கு இட்டுச் சென்றதா? அவற்றில் இருந்த புலமை
தொடர்புள்ள 'சிக்னல்களை' ,உணர முடியாமல் போனதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அல்லது
'புலமை' என்பதே பார்ப்பன நலனாகப் பார்க்கப்பட்டதால், சமூக நலனுக்கான 'தகுதி, திறமைகள்'
எல்லாம் 'பார்ப்பன மோசடி' என்ற முடிவுக்குக் கொண்டு சென்றதா?” (
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html &
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html &
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )
அதன் காரணமாக, 'தகுதி,
திறமை' முக்கியத்துவம் இழந்து, 'இன உணர்வு, ஊழல்' அடிப்படையில், தமிழ்நாட்டில் ஆரம்பப்
பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை பணி நியமனங்கள் 'திராவிட ஆட்சிகளில்' நடந்ததா? அதனால்
கல்வித் துறையில் என்னென்ன சீர்கேடுகள் விளைந்தன? கல்லூரிகளில், திராவிட ஆட்சிகளின்
வளர்ச்சிப் போக்கில், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பல்கலைக்கழக தேர்வுகளில் விடை
எழுதும் அளவுக்கு ,உயர் கல்வியின் தரம், தமிழ்நாடு அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும்
சீர் கெட்டிருக்கிறதா? அந்த வளர்ச்சிப் போக்கும், தமிழ்வழி
வீழ்ச்சிப் போக்கும், தமிழ்நாட்டின் கனி வளங்களைச் சூறையாடி, தனியார் சொத்துக்களை
'மிரட்டி, கொலை செய்து' அபகரித்த போக்கும்,
'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி,திறமைப் பற்றிய புரிதலின்றி,சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பும் 'வியாதியுடன்,''தமிழ் உணர்வு,பகுத்தறிவு' முகமூடிகளுடன் 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' வளர்ந்த போக்கும்,அந்த வியாதியில் சிக்கி, 'தேசிய முகமூடி'க் கொள்ளையர்கள் உருவாகி, வளர்ந்த போக்கும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடயவையா? என்பது பற்றி 'சமூகவியல்' நோக்கில் ஆய்வு மேற்கொண்டால், அது உலக முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை வெளிப்படுத்தினால் வியப்பில்லை.இயல்பில் திரிந்தவர்களை 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு'முகமூடிகளுடன், ஆதிக்க செல்வாக்குடன் வலம் வர அனுமதிக்கும், ஒரு சமூகமானது, 'தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு' தொடர்புள்ள, சமூக செயல்நெறி மதகுகளின் சீர்குலைவை, எந்த முறையில் சந்திக்கும், என்ற பாடத்தை, உலகிற்குக் கற்றுத் தரும் பரிசோதனைக் கூடமாக தமிழ்நாடு இருக்கிறது.
( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

“1949இல் தி.மு.க உருவானபின், எதிர் நிலைப்பாடுகளில்
இருந்த தி.கவும், தி.மு.க.வும் ஒருவரையொருவர் இழிவு படுத்தும் பேச்சும், எழுத்தும் செல்வாக்குடன்
வளர்ந்த,. அந்த பின்னணியில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும்,
பாரதிதாசனுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும்,
அந்த செல்வாக்கில் சிக்கியே வெளிப்பட்டன. அந்த உணர்ச்சிபூர்வ நோயில் தி.மு.கவின்
இடத்தை, இந்துத்வா கட்சிகள் பிடித்துள்ளதா? என்ற கேள்வி எழும் வகையில் சில தலைவர்கள்
பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதாவது 1944இல் முளைவிட்டு வளர்ந்த உணர்ச்சிபூர்வ போக்கில்
பிராமணர்களும் சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறார்களா? என்ற ஆய்வும் அவசியமாகிவிட்டது,
என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
“சமூக செயல்நெறி மதகுகள்(Social
Functional Checks) ஆனவை, திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன்
'பலன்களை' பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும்
'அனுபவித்து வருகின்றனர்.
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
எனவே,பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லாதாராய் இருந்தாலும், தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்துவதில் ஈடுபடாமல், தமிழ்நாட்டின்
நிலத்தடி நீர் வளங்களாகிய ஏரி, குளங்களையும், கிரானைட், தாது மணல் உள்ளிட்ட கனி வளங்களை
சூறையாடிய கொள்ளையர்களிடம் 'குற்ற உணர்வின்றி, கட்சி நிதி/உதவிகள் பெற்று', அக்கொள்ளையைத் தடுக்கும் 'சகாயம் ஐ.ஏ.எஸ்'
போன்றோர் எடுத்து வரும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அச்சுறுத்தி தடுக்க முனைவதைக் கண்டிக்காமல்,
'பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, தமிழ் ஈழம், இந்துத்வா,
ஆன்மீகம், தலித், இஸ்லாம்’ ' என்று பேசுபவர்களை, 'போராடுபவர்களை' , மேலேக் குறிப்பிட்ட
'பொது வாழ்வு வியாபாரிகளாக', அல்லது உணர்ச்சிபூர்வ போதையாளர்களாக,
அடையாளம் காண்பது தவறா?(குறிப்பு கீழே)
‘திராவிடக் கட்சிகளானாலும்,
பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளானாலும், 'உணர்ச்சிபூர்வ பேச்சாளர்கள்' இழிவான சுயநல
சமரசப் போக்கில் 'ஒரே மாதிரியானவர்கள்' என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
( http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html )
( http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html )
வெள்ளத்தில் மூழ்கியவர்களைக்
காப்பாற்றும் முயற்சியில், 'பார்ப்பன நலன், இந்துத்வா, ஆன்மீகம், இஸ்லாம், தலித்' என்ற
பிரிவினைப் பார்வையில் குறுக்கிடும் தவறினைப் போன்றதே, 'தமிழ்வழி மீட்சி,தமிழ்நாட்டின்
கனிவளங்கள் உள்ளிட்ட நலன்களின் மீட்சி, தமிழர்
குடும்பங்களிலும் நட்பு உள்ளிட்ட சமுக வட்டங்களிலும் மனித உறவுகளில் 'கள்வர் நோயில்'(திருக்குறள்
813) இருந்து மீட்சி முயற்சிகளில் , அதே போன்ற பிரிவினை பார்வைகளில் குறுக்கிடுவதுமாகும்.'கள்வர் நோய்' வெள்ளத்தில் தமிழர்கள் மூழ்கியுள்ளது தொடர்பாக, "சமூக ஆற்றல் செயல்பாடு என்ற இரத்த ஓட்டத்தில் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'என்ற நோய்க்கிருமி நுழைந்த பின், சமூக இரத்தமே அந்த நோயில் பண்புமாற்றம் அடைந்த பின், அந்த சமூகத்தில் மொழியும், மொழி சார்ந்த பாரம்பரியமும், பண்பாடும் அழிவதில் வியப்புண்டோ?" என்று ஏற்கனவே பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_3.html )
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_3.html )
”தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் சிக்கல்கள்”
( http://tamilsdirection.blogspot.in/2014_12_01_archive.htmlhttp://tamilsdirection.blogspot.in/2014_12_01_archive.html ) என்ற பதிவினை, பெரியார் ஆதரவாளர்கள்,
( http://tamilsdirection.blogspot.in/2014_12_01_archive.htmlhttp://tamilsdirection.blogspot.in/2014_12_01_archive.html ) என்ற பதிவினை, பெரியார் ஆதரவாளர்கள்,
”தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் சிக்கல்கள்” என்று கூறுவதைவிட ஆட்சியைப் பிடிக்கக் கூறும் ஆலோசனைகள் என்பதே பொருத்தமானது.
தமிழ்நாட்டில்தான் மோடி அலையில்லையே.” என்று
கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி ஒரு இடம் கூட வெல்ல முடியாத போது, பா.ஜ.க கூட்டணி
2 இடங்களிலும், அதில் பா.ஜ.க ஒரு இடத்திலும் வெல்ல காரணம் என்ன? தமிழ்நாட்டில் 3 ஆவது
பெரிய கட்சியாகக் கருதப்பட்ட விஜயகாந்த் கட்சி 14 இடங்களில் பெற்ற வாக்குகளை விட, 7 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க அதிக வாக்குகள்
பெறக் காரணம் என்ன? இந்தியாவில் வீசிய மோடி அலையானது, தமிழ்நாட்டில் வீசாமல் இது நடந்திருக்குமா?
தமிழ்நாட்டில் மோடி அலையை விட வலுவானது, தி.மு.க குடும்ப ஆட்சி எதிர்ப்பு அலை.அந்த
புரிதலின்றி, தமிழக பா.ஜ.க பயணித்தது;பயணிக்கிறது என்பது என் கணிப்பு.
தமிழையும்,
தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மோடி அலை மூலம் காப்பாற்ற முடியும் என்பதும் என் கணிப்பு.
எனது பதிவுகளை ஆலோசனைகளாக ஏற்று, அம்முயற்சி வெற்றி பெற, பெரியார் காமராசரை ஆதரித்தது
போல, என்னால் இயன்ற அளவுக்கு, உணர்ச்சிபூர்வ
போதையாளர்களை விட்டு விலகி, அறிவுபூர்வ தளத்தில் உறுதியுடன் நின்று, நான் ஆதரிப்பதை,
எனது சமூகக் கடமையாகக் கருதுகிறேன்.
குறிப்பு : தமிழ்நாட்டில் உள்ள 'முற்போக்கு,பிற்போக்கு' கட்சித்தலைவர்கள், 'நிதி/உதவி' பெற்று 'கண்களை மூடிக் கொள்ளாமல்', தமிழ்நாட்டில் ஏரிகள்,குளங்கள்,மலைகள்,தாது மணல் உள்ளிட்ட கனிவளங்கள், கடந்த 25 வருடங்களாக 'எந்த எதிர்ப்புமின்றி' சூறையாடப்பட்டிருக்குமா?
No comments:
Post a Comment