Wednesday, April 22, 2015



                 நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை


திராவிடர் கழகத்தின் தலைவரான   பெரியார் ஈ.வெ.ரா இந்திய விடுதலையை துக்க தினமாக அறிவித்ததில் நேர்மையிருக்கிறதா? அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு, திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை கைவிடாமல், அண்ணாதுரை பெரியார் ஈ.வெ.ராவை மறுத்து, இன்பநாளாக வரவேற்றதில் நேர்மையிருக்கிறதா?  என்பது கீழ்வரும் தகவல்கள் அடிப்படையில் ஆய்விற்குரியது.


1857 முதலாம் இந்திய விடுதலைப்போர் வெற்றி பெற்றிருந்தால், வெள்ளையர் வெளியேறி, இந்தியாவானது, அந்தந்த பகுதி மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கும் என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

1857 முதலாம் இந்திய விடுதலைப் போரில், காலனி ஆட்சியாளர்கள் என்னென்ன பாடங்கள் கற்று, தமது ஆட்சி அதிகாரத்தையும், உளவு அமைப்புகளையும் பயன்படுத்தி, காங்கிரஸ் உள்ளிட்டு எந்தெந்த கட்சிகளை உருவாக்கினார்கள்? எந்தெந்த தலைவர்களை தமது நேர்முக/மறைமுக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்? அவர்களில் யார் யாரின் துணையோடு நேதாஜி போன்று தனத்து ஒத்து வராத தலைவர்களை ஈவிரக்கமில்லாமல் ஒழித்தார்கள்? என்பது பற்றிய தகவல்களும், குறிப்பாக இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவானது எந்தந்த வெளிநாட்டு உளவு அமைப்புகளின் வேட்டைக்காடாக இருந்தது என்பது பற்றிய தகவல்களும், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் கசியத் தொடங்கியுள்ளன. வெள்ளைக்கரர்களுக்கு வெண்சாமரம் வீசியதாக குற்றம் சாட்டப்படும் பெரியார் ஈ.வெ.ராவும், அவர் நடத்திய பத்திரிக்கைகளும், காலனிய ஆட்சியில்.  சிறைவாசம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான அளவுக்கு,  தமிழ்நாட்டில் அந்த கால கட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்டு வேறு எந்த கட்சியும் தலைவர்களும் உள்ளானார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா குரல் எழுப்பும் முன்னரே, பெரியார் ஈ.வெ.ரா திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை முன்வைத்தவர் ஆவார். இந்திய பிரிவினையை பொம்மலாட்டமாக , தமது சுயநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயக்கிய காலனிய ஆட்சியும், மவுண்ட்பேட்டன் குடும்ப செல்வாக்கில் சிக்கிய நேருவின் பிரதமர் பதவி ஆசையுமே, பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும். திராவிட நாடு பிரிவினைக்கும் என்னென்ன வாய்ப்புகள் இருந்தன? ராஜாஜியும், அவர் செல்வாக்கில் இருந்த பிராமணர்களும் ஆதரித்த நிலையில்,
 ( "We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ; http://en.wikipedia.org/wiki/C._R._formula);

திராவிட நாடு பிரிவினை நடக்காததற்கு காரணங்கள் யாவை? ராஜாஜிக்கும், நேருவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காரணமா? அல்லது திராவிடநாடு பிரிவினைக்காக விமானப்பயணம் மேற்கொண்ட (குடிஅரசு இதழ்களில் புகைப்படங்களுடன், அவரை வழியனுப்பும் செய்திகள் வெளிவந்துள்ளன) சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் - 'நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போல‌' - இறந்தது காரணமா? அது விபத்தா? அல்லது சதியா? என்பது போன்ற கேள்விகளுக்கு , பிரிட்டனின் உளவு அமைப்பு MI5   கோப்புகள்  declassify-இரகசிய நீக்கமாகும்போது-   தெரியும். அவ்வாறு விடைகள் தெரியும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பது என் கருத்து. ("They make Indians fight with each other on caste and communal lines, operating through their agents, which include many of the political parties in India. Partition of India in 1947 was also part of this design.")
http://www.outlookindia.com/article/our-real-enemies-are-abroad/295698 

நல்லவேளையாக திராவிடநாடு பிரியவில்லை என்று நான் கருதுவதற்கான காரணங்கள் வருமாறு;

இன்று திராவிடக்கட்சிகளிலும், இந்துத்வா கட்சிகளிலும் அரைகுறைத் தகவல்களுடன் உணர்ச்சிபூர்வமாக பேசிவரும் போக்கிற்கு, 1944இல் விதை போடப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதன்பின் நடந்த, அண்ணாதுரை புறக்கணித்த‌, தூத்துக்குடி தி.க மாநாட்டில் , வெளிவந்துள்ள பெரியார் ஈ.வெ.ராவின் உரையில், அண்ணாதுரைக்கு எதிரான உணர்ச்சிபூர்வ பேச்சு வெளிப்பட்டது. உண்மை, நேர்மை,நேரம் கடைபிடித்தல் (punctuality) , சொந்த பணத்தை செலவு செய்து உழைப்பு போன்றவற்றை விட்டுக்கொடுக்காத பெரியார் ஈ.வெ.ராவின் தி.கவானது, அதற்கு எதிரான 'பண்புகளுடன்'அண்ணாதுரையின் தி.மு.க வளர்ந்த வேகத்தில், பலகீனமானது. அந்த தவறான திசையில் தி.மு.க பெற்ற வளர்ச்சிக்கு, ராஜாஜியின் ஆதரவு முக்கிய பங்கு வகித்தது. 1967இல் தி.மு. க ஆட்சியைப் பிடித்ததற்கும், 1969இல், மூத்தவர்களை பின் தள்ளி, கலைஞர் மு.கருணாநிதி முதல்வரானதற்கும் ராஜாஜி முக்கிய காரணமாவார்.

1944இல் விதை போட்ட பாவத்திற்காக, 1965இல் பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து, ராஜாஜி ஆதரவுடன் , 'காந்தி வழியில்' தமிழ்நாட்டில் முதன் முதலாக மாணவர்கள் முன்னெடுத்த, பொதுச்சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் சேதம் விளைவித்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.
https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  தி.மு.க வை வளர்த்து, ஆட்சியைப் பிடிக்க வைத்து, கலைஞர் மு.கருணாநிதியை முதல்வராக்கிய பாவத்திற்காக, தமிழ்நாட்டில் ராஜாஜி உயிராக நேசித்த‌  மது விலக்கு கொள்கை மரணத்திற்குள்ளானது; இன்று டாஸ்மாக் மூலம் தமிழ்நாடே பேராபத்தில் மூழ்கும் விளைவிற்கு அது துவக்கமானது. 

இந்தியாவில் தமிழ்நாடு ஒரு மாநிலமாக இருக்கும் போதே, தமிழ்வழியின் மரணப்பயணத்தைத் துவக்கி, தமிழ்நாட்டின் கனிவளங்களைச் சூறையாடி, அந்த கொள்ளையில் தமக்கு வாலாட்டி பங்கு பெறும் நாய்களாக தமிழர்களில் கணிசமானவர்களை மாற்றி, (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
https://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html  )',  ஆங்கிலவழிக் கல்வி மூலம் தமிழர்களை வேரற்றவர்களாக, தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே புலமையற்ற, திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் மூழ்கிய , தமிங்கிலிசர்களாக, மாற்றி வரும் அபாயத்தில் சிக்கி,  திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடும் அளவுக்கு  பரவி, தமிழ்நாடு சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது. 1947லிருந்து 1967 வரை தமிழ்நாடு எப்படி இருந்தது என்று அனுபவித்த தலைமுறையினர் இன்றும் உயிரோடிருக்கின்றனர். 1947இல் திராவிடநாடு பிரிந்திருந்தால், 1967க்கு முன்னேயே ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு மீட்சிக்கே வாய்ப்பில்லாதவாறு சீரழிந்திருக்கும். நல்லவேளை திராவிட நாடு பிரியவில்லை.

மோடி ஆட்சியில் வரும் வருடங்களில் அடிப்படைக்கல்வி வரை தாய்மொழிக்கல்வி கட்டாயமாதல் நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன். அப்போது தமிழ்நாட்டில் தமிழ்வழியின் மரணப்பயணம் தடுக்கப்படும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் சந்தன மரங்களை வேட்டையாடி, முற்றிலும் அழித்து, அண்டைமாநில காடுகளிலும், அந்தந்த மாநில அரசியல் கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து, சூறையாடுவது தப்பிக்கும்; தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள் சூறையாடியது போக, எஞ்சிய இயற்கை கனி வளங்கள் தப்பிக்கும்;  என்றும் நம்புகிறேன். அரசியல் கொள்ளையர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது என்றும் நம்புகிறேன்.  

இந்துத்வா கட்சிகளிலும், திராவிடக் கட்சிகளிலும் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் காரணமாக சாதி, மத மோதல்கள் புத்துயிர் பெற்று, மேலேக் குறிப்பிட்ட நம்பிக்கைகள் சிதையவும் வாய்ப்பிருக்கிறது. வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில்,தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. ( https://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_19.html )

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது. அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது.  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்கள்,  திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் வாலாகி, மனிதப்பண்புகளை இழந்த கள்வராகியதற்கு, மேற்கண்ட அனுபவ அறிவு காரணமா? இயல்பில் திரிந்தவர்கள் எல்லாம், சுயநல நோக்கில்,   'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற பொதுப்பிரச்சினைகளில் அக்கறை காட்டி, மதிக்க வேண்டிய தனிமனித உறவுகளை சிதைத்து, 'வாழ்வியல் புத்திசாலிகளாக' எப்படி வளர்ந்தார்கள்?
https://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html  ) தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா?(எனது அனுபவங்கள் அடிப்படையில்) சுயலாப நோக்கில் மதம் மாறிய கிறித்துவர்களிடமிருந்து, இந்த சமூக செயல்நுட்பமானது, திராவிடக்கட்சிகளால் அகவயபடுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் தேசிய, இந்துத்வா உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் 'இயல்பில் திரிதல்' நோயை தொத்துநோயாக வளர்த்து வருகிறதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஆனால் தமிழ்நாட்டில் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புபவர்களும், மனச்சாட்சியும், அறிவுநேர்மையும், உள்ளவர்களும்,  எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். அந்த வகையில் வாழ்பவர்களெல்லாம்,  உணர்ச்சி பூர்வ‌மாக‌ பேசுபவர்களையும், எழுதுபவர்களையும்,  'இவர் நம்மாளு' என்று  அவர்களுக்கு துணை போகாமல், அவர்களை ஒதுக்கினால்தான், தமிழ்நாடு தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று  நம்புகிறேன்.


Note: 'தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்'
https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html

Sunday, April 19, 2015


பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;             

 என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை



" முதலில் ஈ.வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் 1944-ல் ஈ.வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்க மாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார். தீர்மானம் என்ன சொல்கிறது என்றால் “வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து கொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்ட தேச துரோகிகள் தானேடா ஈ.வே.ரா, அண்ணாதுரை, வீரமணி, கருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று ஈ.வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்த இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில் 18 ஏப்ரல் 2015 அன்று நடைபெற்ற கறுப்பு சட்டை எரிப்பு போராட்டத்தில் ஈ.வெ.ரா வையும், வீரமணியையும், கம்யூனிசத்தையும் சேர்த்து எரித்து தள்ளிய திரு H.ராஜா அவர்களின் காரசாரமான பேச்சு' என்று முகப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.பெரியாரைப் பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இவ்வளவு இழிவான கருத்துள்ள எச்.ராஜா, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் அழகிரியின் வீட்டிற்கு சென்று, தனக்கு ஆதரவு தருமாறு கெஞ்சியது சரியா? என்ற கேள்வியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் 'தனி திராவிட நாடு' கோரிக்கையை ராஜாஜி பகிரங்கமாக ஆதரித்தது எச்.ராஜாவுக்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால், ஈ.வெ.ரா, அண்ணதுரையுடன் ராஜாஜியையும் அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.

"We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ;http://en.wikipedia.org/wiki/C._R._formula

அது மட்டுமல்ல,எச்.ராஜா இந்து மகா சபை தலைவர்களையும் 'அடித்து துரத்தியிருக்க வேண்டும்' என்று பேசியிருப்பார். ஏனென்றால், இரண்டாம் உலகப் போரின் போது, காங்கிரஸ் வெள்ளையரை எதிர்த்த போது, திராவிடர் கழகத்தைப் போலவே, இந்து மகா சபாவும் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தனர்.

“The Congress condemned Britain’s declaration of India as a “belligerent country” without its consent, and resented London’s refusal to promise India’s independence after the war. The Muslim League and the Hindu Mahasabha, however, supported the British war effort, seeking furtherance of their sectarian interests.” http://www.thehindu.com/books/freedom-movement-a-holistic-feat/article61951.ece


ஆங்கிலேயருக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை ஆதரிக்காததில், தி. கவிற்கும், இந்து மகாசபைக்கும் அதிக வேறுபாடு கிடையாது.


“the Hindu Mahasabha did not actively support agitations against British rule in India. Under the leadership of Mohandas Gandhi, the Congress led several nationwide campaigns of non-violent civil disobedience. The Mahasabha refused to endorse any of the movements and participated in the legislative councils established by the British, which were otherwise boycotted by the Congress and most of the population..”
http://en.wikipedia.org/wiki/Akhil_Bharatiya_Hindu_Mahasabha
 
1925இல் காங்கிரசை விட்டு வெளியேறி, பெரியார் ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்க்ம் தொடங்கினார். 1925 முதல் 1947 இல் இந்தியா விடுதலை அடையும் வரை, அவர் அனுபவித்த அளவுக்கு சிறைத் தண்டனைகளும், அவர் நடத்திய பத்திரிக்கைகள் அனுபவித்த அளவுக்கு காலனிய அரசின் ஒடுக்குமுறைகளையும், தமிழ்நாட்டில் எந்த காங்கிரஸ், இந்துத்வா தலைவர்கள், அவர்கள் நடத்திய பத்திரிக்கைகள், அனுபவித்திருக்கிறார்களா? என்ற கேள்வியை எச்.ராஜாவும், அவரின் பேச்சை பாராட்டுபவர்களும் மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும் பரிசீலிப்பார்களா?

இந்தியா விடுதலையான பின் நடந்த 1952 முதல் பொது தேர்தலில், தனி திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து, பெரியார் ஈ.வெ.ரா ஆதரித்த கட்சிகள் பெருவாரியாக வெற்றி பெற, காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறவில்லை என்பது, எச்.ராஜாவுக்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களை அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.அப்படி இருந்த தமிழ்நாடு, இன்று இப்படி எச்.ராஜா பேசும் அளவுக்கு சீரழிந்ததற்கு, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளின் சாதனையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வெள்ளைக்காரர் ஆட்சிக்கு முன் தமிழ்நாடே பல மன்னர்கள் ஆட்சியில் இருந்தது எச்.ராஜாவுக்கு தெரியாதா? வீரசவர்க்கார் எழுதிய 'எரிமலை' -'The Indian War of Independence' - நூலில் 1857 இல் வடநாட்டில் இருந்த முஸ்லீம் அரசர்களும் இந்து அரசர்களும் சேர்ந்து, வெள்ளையரை எதிர்த்ததை, ‘முதலாம் விடுதலைப் போர்’ என்று குறிப்பிடுவது எச்.ராஜாவுக்கு தெரியாதா? அந்த போர் வெற்றி பெற்றிருந்தால், வெள்ளைக்காரர் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள். ஆனால் இந்தியா பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா? 

'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவில் உரிய அளவுக்கு வலுப்பெறாததன் காரணமாகவே, இந்தியாவில் பிரிவினை முயற்சிகள் மக்கள் ஆதரவுடன் நடைபெற்று வருவதும், அதைப் பலகீனப்படுத்தி, இந்தியர் என்ற அடையாளத்தை வலிமையாக்க, மத்திய அரசு எவ்வளவு கடுமையாக முயற்சிக்கிறது என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா? 

இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு தேவைப்படும் 'பெரும் விரிவுரை - கிராண்ட் நேரேட்டிவ் (Grand Narrative)  ஆனது, மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி இருப்பதும், அந்த சூழ்ச்சியிலிருந்து அந்த 'கிராண்ட் நேரேட்டிவை' மீட்டு, இந்தியர் என்ற உணர்வை வலிமைப்படுத்த ராஜிவ் மல்கோத்ரா போன்ற அறிஞர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பற்றி எச்.ராஜாவுக்கு தெரியுமா?

every country needs its own narrative, a narrative rooted in its tradition and story; without this narrative, its agenda could be appropriated by more powerful countries, and the country is more likely to fail. India needs such a narrative. The problem, he argued, is that currently the Indian narrative belongs to the West – it is where the best quality education is for South Asian Studies, where an intellectual has to publish papers and attend conferences to be someone in their field. It is with an identity created for it by the West that India presents itself to the world.”

ராஜிவ் மல்கோத்ராவின் ‘Breaking India’  (http://www.breakingindia.com/)  என்ற புத்தகமானது, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அந்த புத்தகத்திலும் தமிழ்நாட்டில் 'தமிழர்', 'திராவிடர்' என்ற அடையாளங்களின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் 'இந்தியர்' என்ற அடையாளத்தை தமிழ்நாட்டில் பலகீனமாக்கி, விடுதலைக்குப் பின் நடந்த முதல் 1952 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற முடியாத விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பம்(Social Mechanism)  போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கருதுகிறேன். அதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் அப்புத்தகத்தைப் படிக்க எண்ணியுள்ளேன்.அந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேரவிடாமல் தடுத்துவரும், தமிழ்நாட்டு இந்துத்வா கட்சிகளில் எச்.ராஜா போன்றவர்கள் ஆற்றி வரும் 'இந்தியா உடைக்கும்- ' Breaking India’- 'சேவை பற்றி விளங்கிக் கொள்ள, அந்த நூல் துணை புரியுமா? என்ற ஆய்விற்காகவும் மீண்டும் அப்புத்தகத்தைப் படிக்க எண்ணியுள்ளேன்.

எச்.ராஜா பா.ஜ.கவில் அகில இந்திய அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். மேலேக்குறிப்பிட்டவையெல்லாம் தெரியாமல், அந்த பொறுப்பில் அவர் நிச்சயம் இருக்க முடியாது.

அவருடைய பேச்சின் அடிப்படையில் 'இந்தியர்' என்ற அடையாளம் வரையறுக்கப்பட்டு, பெரியார் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, ராஜாஜி போன்றவர்களை "அடித்து துரத்தியிருக்க வேண்டும்." என்ற கருத்தை, மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.கவும் , பிரதமர் மோடி தலைமையிலான அரசும் ஏற்றுக் கொள்கிறர்களா? 

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தனது வரை எல்லைகள்(limitations)  பற்றிய புரிதலின்றி, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை தமிழர்க்கு கேடாக கருதி, மேற்கொண்ட முயற்சிகள்,  தமிழர்களை ஆங்கிலவழிக் கல்வி மூலம் வேரற்றவர்களாக ஆக்கி வரும் அபாயம் பற்றி எச்சரித்திருக்கிறேன். ராஜிவ் மல்கோத்ரா, குருமூர்த்தி போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் மற்றும் மோடி பற்றிய எனது ஆய்வின் அடிப்படையிலான கருத்துக்கள் மூலம், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாட்டின் நலன்களைப் பாதுகாத்து, தமிழர் என்ற அடையாளத்துடன் இணக்கமாக‌, இந்தியர் என்ற அடையாளம் தமிழ்நாட்டில் வலிமை பெற்று,(தமிழ்வழிக் கல்வியைச் சீரழித்து, தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடிய,) திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் பிடியிலிருந்து தமிழ்நாடு மீளும் என்று நம்பியிருந்தேன். ஆனால் எச்.ராஜாவின் பேச்சு அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளது. 

அவர் குறிப்பிடும் அளவுகோலின் படி, பெரியார் ஈ.வெ.ரா, அண்ணாதுரை ஆகியோரை மதிப்பவர்களை இந்தியாவிலிருந்து 'அடித்து துரத்த' வேண்டும். அப்படியென்றால் என்னை இந்தியாவிலிருந்து துரத்துவது தான் சரி. என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறி, என்னை மதித்து நடத்தும் நாட்டில் குடியேறுவது தான் வழி. அல்லது எச்.ராஜாவும் அவரின் ஆதரவாளர்களும் என் மீது 'தேச துரோகம்' குற்றம் சுமத்தி, சிறையில் அடைத்தாலும் சரி. பெரியார் ஈ.வெ.ரா வழியில் அந்த வழக்கில், எதிர் வழக்காடாமல், 'அதிகபட்சம் தண்டனை' வழங்குமாறு நீதிபதியிடம் நான் கேட்பேன் என்பதையும் எச்.ராஜாவுக்கும், அவர் பேச்சை பாராட்டும் அவரின் ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


குறிப்பு: திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களுடன் கடந்த/நிகழ் கால தொடர்பின்றி, உணர்ச்சி போதையின்றி, அறிவுபூர்வமாக செயல்படும் கட்சிகளோ, குழுக்களோ இன்றி, தமிழ்நாட்டில்  எனக்கான சமூகவெளி(social space)  மூச்சுத் திணறலுக்கு(social suffocation)  உள்ளாகும்போது, குறைந்த பட்சம் எனது ஆய்வுகளை-http://musictholkappiam.blogspot.in/; http://musicdrvee.blogspot.in/; - distractions இன்றி மேற்கொள்ள, வாய்ப்புள்ள இடம் நோக்கி வெளியேறுவது பற்றி பரிசீலிப்பது சரி என்று கருதுகிறேன். 

Saturday, April 18, 2015


மலேசியா முனைவர் கே.லோகநாதன் மறைந்த செய்தி

மலேசியா முனைவர் கே.லோகநாதன் 18.04.2015 காலையில் மறைந்த செய்தி இணையத்தில் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். சைவம் தொடர்பாகவும், சுமேரு தொல்தமிழ் தொடர்பாகவும் நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். தொல்தமிழ் பற்றிய அவரது ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்ளவும், அதற்கு உள்ள மறுப்புகள் பற்றி தெரிந்து கொள்ளவும் கீழ்வரும் கட்டுரை துணைபுரியலாம்.அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்கிறேன்.

Review of Clyde’s Video on SumeruTamil-1
 
Dr K.Loganathan 15-8-12
 
The production of Clyde’s video on Sumerian as CaGkam Tamil or more specifically the Tamil of the First CaGkam to go along with the tradition of the sophisticated Academies in Tamil literature, is certainly a momentous event that records a dramatic change in the understanding of World History. The video can be seen and heard at the address:
http://www.youtube.com/watch?v=sZ3_zCzupLM&list=UUryp_DYeagKtvL-pw1BpZeA&index=1&feature=plcp
 
I venture to review this great video as a way of appreciating the efforts of Clyde and expressing my profound thanks. I know Clyde has been reading my studies since my first major publication “Sumerian: Tamil of the First CaGkam” in the Journal of Tamil studies in the year 1975, a paper that I wrote when I was doing my masters degree in the University of London. I used to frequent the library of SAOS where one day I accidentally saw the Sumerian texts (Dumuzi’s Dream, Suruppaks Moral Instructions etc) on reading some of which I realized immediately that I was reading some kind of Tamil, certainly an archaic form. Then I spend the whole of three month vocation reading many necessary treatises and wrote that paper and which was published in the Journal of Tamil Studies, where Dr S,V Subramaniam, then the Editor saw it fit for publication.

I knew it was a major breakthrough in Dravidian studies but was very disappointed that it did not catch the attention of the Tamil scholars who, I hoped would pursue it further. But my expectations were not fulfilled and the paper went almost unnoticed except for the Eelam scholar Dr A. Velu Pillai who also connected it with the great research by Prof Sathasivam (whom I met in person in 1988 in Kuala Lumpur) who also advocated the view that Sumerian is in fact Tamil. But I now I realize that the paper had attracted the attention of Dr Clyde Winters who also contributed many research papers to the Journal of Tamil Studies as well as many other journals of universities in Tamil Nadu. I realize now that Clyde had read that paper and absorbed the details and made it the base of many of his later studies including the present video presentation. 

For this is the first point he makes in his video presentation: That Sumerian is the Tamil of the First CaGkam and by which the Sumeriologists view that Sumerian is an isolate language, long dead and gone is refuted. I am really glad to note that Clyde saw how great a discovery this is and how important it is for understanding or re-understanding World History. Sumerian is Tamil of a kind and as Clyde remarks, to understand Sumerian it must be linked with the Tamil language and culture that is very much alive to this day 

Any way despite the lack of appreciation of such discoveries by the Tamil scholars and politicians I persisted in my studies of Sumerian texts that I collected when I was in London during the years 1974-75 and later in 1988-89 . During this time also developed in greater details my Process Grammar, a grammatical theory based on Tolkaappiyam and which I developed as an alternative to Chomsky’s Transformational Generative Grammar. This grammar also includes the Process Calculus and which I developed as an alternative to the highly misleading Predicate Calculus of Russel and Whitehead, the authors of Principia Mathematica the basis of Logical Positivism of the West. All the articles I published during this time are now available in the Cyber Space and those interested can see them at:
http://www.ulakaththamizh.org/JOTSAArticle.aspx?id=51
 
The list of papers also includes the now world famous “Sumerian: Tamil of the First CaGkam”
I must mention that my studies in Process Grammar and the development of Process Calculus are now being pursued further by Dr Sivakumar, a lecturer in the Universiti Sains Malaysia and who has been a long time student of my studies in almost all fields. I hope in the near future he will begin to write to our groups on how he is developing further the essentials of Process Grammar that I developed in the seventies and eighties. 

Now I must mention that Process Grammar is my first major contribution to Dravidian Studies where I used the insights of Tolkaappiyar to develop it. Here I must mention that it was my development of Process Grammar that served me later to develop various branches of Evolutionary Linguistics where I also used the insights of Aurobindo as well as PavaNar. These essays under the title Viri Linguistics Uri Linguistics Veer Linguistics Uur Linguistics and so forth still remain sporadic developed more in the contexts of many challenges to my claims by such great scholars like BVK Sastry the great Turkish scholar Polat Kaya and so forth. 

Now I am already quite old (in the seventies) where my interests are more metaphysical, and where I am preoccupied with writing the massive History of Dravidian Philosophy, I am not sure I can get back to my earlier linguistic interests. I will be happy if some young linguists would read these essays and come up with a treatise outlining my ideas on Evolutionary Linguistics and which will be an effective alternative to Constructive Historical Linguistics of the West and which has helped many European scholars to sustain the lie that Sk is Indo-European and not Dravidian. 

My essays on Evolutionary Linguistics are available at:
https://sites.google.com/site/ulagansessays/evolutionary-linguistics
 
I think Clyde has not made a mention of this though he is very familiar with the controversies with BVK Sastry and Polat Kaya where he also has contributed substantially in favor of my claims. 

Dr.K.Loganathan
http://heritagewiki.org/index.php?title=Review_of_Clyde%27s_Video_on_SumeruTamil

Friday, April 17, 2015


'கொள்கை' பிணம் தின்னும் கழுகுகளாகவா?                            நாமே 'கொள்கைப் பிணமாக'வா?                     


           எப்படி நாம் வாழ்கிறோம்? 



பிறக்கும் போது எதையும் நாம் கொண்டுவரவில்லை. வாழும்போது மனசாட்சியை அடகு வைத்து, வசதியும் செல்வாக்கும் மிக்கவர்களுக்கு வாலாட்டி சேர்க்கும் செல்வத்தையும் செல்வாக்கையும், நாம் மரணமடையும்போது, நம்மோடு எடுத்துச் செல்லப் போவதுமில்லை. தமது சுயநலத்திற்காக 'வாழ்வியல்(?) புத்திசாலித்தனமான' இழிவான சமரசங்களுடன் வாழ்ந்து கொண்டு, 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம், பொதுவுடமை' என்று இன்னும் பல கொள்கையாளர்களாக ( அல்லது அந்தந்த கொள்கை விபச்சாரிகளாக) வாழ்ந்து, சேமித்த செல்வத்தையும் செல்வாக்கையும், நாம் மரணமடையும்போது, நம்மோடு எடுத்துச் செல்லப் போவதுமில்லை. நமது குழந்தைகளுக்கும், வாரிசுகளுக்கும், நாம் இழிவாக வாழ்ந்ததை பாரம்பரிய சுமையாக்கி, அவர்களைத் தண்டிப்பதே நமது வாழ்வின் பலனாக, நமது மரணத்திற்குப்பின் மிஞ்சும். 

நாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான 'அறிவுபூர்வ' விவாதங்களை தவிர்த்து,  நாம் 'உணர்ச்சி பூர்வ கொள்கைப் பற்றுடன்'  வாழ்வது என்பது; ஒன்று அந்த கொள்கை செத்து, பிணம் தின்னும் கழுகுகளாக நாம் வாழ்வதை உணர்த்தும்; அல்லது நாமே 'கொள்கைப் பிணமாக' உயிருடன் வாழ்வதை உணர்த்தும்.'கொள்கைப் பிணமாக' வாழ்பவர்கள் தான், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து வாழ முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ்கிறோம்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.

எனது வாழ்வின் பெரும்பகுதியை, சுயலாப நோக்கின்றி,  பெரியார் கொள்கையாளனாக கழித்தவன் நான். (அதன் காரணமாகவே நிகழ்காலத்தில் வேறு எவரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லாத, இழப்புகளுடன், அந்த இழப்புகளையே எனது பதிவுகளுக்கான மதிப்புமிக்க உள்ளீடுகளாக(inputs)  மாற்றி, வாழ்ந்து வருபவன் நான்.) பின் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் வரைஎல்லைகள் (limitations)  பற்றிய புரிதல் அவருக்கு இல்லாததால், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான, 'மிகவும் ஆபத்தான' 'தமிழர்களை 'வேரற்ற'வர்களாக ஆக்கும், அவர் வெளிப்படுத்திய‌ கொள்கைகளை உண்மை என்று நம்பி, எனது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி விட்டேனோ? என்ற ஐயம் எழுந்தது. அது தொடர்பான அறிவுபூர்வ விவாதத்தைத் தொடங்க, நான் எழுதிய கட்டுரையானது, 'கறுப்பு, வெள்ளை (அல்லது  சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற தலைப்பில், 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2006 வெளிவந்தது. (refer 'கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்';
http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html

இன்று வரை எந்த பெரியார் கொள்கையாளரிடமிருந்து அதை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த கருத்தும் எனக்கு வரவில்லை. இடையில் என்னை நேரில் சந்தித்த சில பெரியார் ஆதரவாளர்கள் அது சரி என்பது போல் தலையாட்டிச் சென்றார்கள். அவர்கள் உண்மையாகச் சொன்னார்களா? அல்லது இன்று தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வரும் 'ஆளுக்கேற்றார்ப்போல்' பேசும் வியாதியில் சிக்கி, சொன்னார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

உண்மையில் பெரியார் கொள்கை மரணமடைந்து, அந்த மரணத்தில் 'பிணம் தின்னும் கழுகுகள்' போல், பெரியார் கொள்கையாளர்கள், மனிதப் பண்புகளற்ற சுயநல கள்வர்களாக‌ வாழ்கிறார்களா? என்ற கேள்வியை, திருச்சி பெரியார் மையம் தொடர்பான எனது அனுபவங்கள் எழுப்பின.

(‘தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’;
http://tamilsdirection.blogspot.in/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) “நான் திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், வே.ஆனைமுத்து உள்ளிட்டு பெரியார் கொள்கையாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் வெளிப்பட்டால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து, அச்சிட்டு, விவாதத்திற்கு உட்படுத்தினோம். ( நான் விலகிய பின், திருச்சி பெரியார் மையம் மரணமடைந்து, அந்த மரணத்தில் 'பிணம் தின்னும் கழுகுகள்' போல், அதை வைத்து, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'வாலாகி' சுயநலக் கள்வர்கள் பலன் பெற்ற 'பாவத்திற்கு, ' திருச்சி பெரியார் மையத்திற்கும், அதில் பங்களிப்பு வழங்கிய எனக்கும் பங்குண்டு; திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள் உருவாக பெரியார் ஈ.வெ.ராவின் தொண்டுக்கு உள்ள பங்கைப் போல; பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து நடந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பங்களித்தது போல. (” 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,இன்று  எப்படி இருக்கிறது?இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?”;
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

அதாவது, தமிழ்வழியின் மரணப்பயணத்திற்கும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், ஆறுகள், காடுகள், கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்கள் கொள்ளைகள், திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்நாட்டில் அரங்கேறியதற்கும், அந்த கொள்ளைகளுக்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் கணிசமான தமிழர்களை கொள்ளையில் பங்கு பெறும் சுயநலக் கள்வர்களாக மாற்றும் போக்குகளுக்கும்,  அந்த திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'நெருக்கமாகி' பிழைப்பதற்கான வழிமுறைகளில் பெரியார் கொள்கையும் இடம்பெற்றிருந்தால், அதற்கும்,  1944இல் தமிழ்நாட்டில் பொது அரங்கில் அறிவுபூர்வமான விவாதங்கள் உணர்ச்சி பூர்வமாக‌ தடம் புரண்டு, தனிமனிதர்களை இழிவுபடுத்தும் போக்கில் பயணித்ததே, தமிழ்நாடு சந்தித்து வரும் தீமைகளுக்கும் மூல காரணமா? என்ற ஆய்வை நான் தொடங்க, மேற்குறிப்பிட்ட அனுபவங்கள் வழி வகுத்தன. தகுதி, திறமை, புலமை, உண்மை, நேர்மை, உழைப்பு போன்றவற்றை தமிழ்நாட்டில் 'வாழத் தெரியாத' முட்டாள்களின் உடைமையாக்கி விட்டு, வாழ்வில் 'விரைவில், குறுக்கு வழியில்' முன்னேற, 'பலவித தரகு, வன்முறை' போன்றவை 'முற்போக்கு இரட்டை வேடத்துடன்'  அரங்கேறியதற்கான மூலமானது, 1944இல் விதைக்கப்பட்டதா? என்ற ஆய்வினைத் தொடங்கவும் அந்த அனுபவங்களே வழி வகுத்தன.

பெரியார் கொள்கைகளை, அவரின் மறைவிற்கு பின் வெளிவந்துள்ள ஆய்வுமுடிவுகளின்படி மறு ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமே, அக்கொள்கைகளில் எவையெவை மரணமடைந்து விட்டன? எவையெவை 'புத்துயிர்' பெற வாய்ப்புள்ளவை என்பது தெளிவாகும். அந்த விவாதத்தை இனியும் தாமதப்படுத்துவது என்பது, புத்துயிர் வாய்ப்புகளைக் கெடுத்து, பெரியார் கொள்கைகளை கல்லறைக்கு அனுப்பவே துணை புரியும்.

ஒரு தனிமனிதனாகட்டும், அல்லது கட்சியாகட்டும்; அவர்களின் செயல்பாடுகளில் ஒரு கூறானது, புறவாழ்வு வெளிப்பாடுகளின் தூண்டுதல்கள் காரணமாக எதிர்வினையாக (Reactive) இருக்கும். எதிர்வினைகள் என்பவை உணர்ச்சிபூர்வ, அல்லது அதே வகையிலான மனதில் படிந்துள்ள மதிப்பீடுகள் – மனப்பாங்குகள் (values – Attitudes) அடிப்படைகளில் செயல்படுபவையாகும். சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில் சிக்கி வாழ்பவர்களின் வாழ்க்கையே எதிர்வினையாக சீரழிந்து போவதில் வியப்பில்லை.

இன்னொரு கூறானது சுய‌தூண்டுவினையாக (pro-active) இருக்கும். மனதில் அறிவுபூர்வமான சிந்தனைகளின் அடிப்படையிலேயே ஒரு மனிதனின், கட்சியின் தூண்டுவினை உருவாகி செயல்படும்.

பொதுவாக தனிமனிதரின், கட்சிகளின் செயல்பாடுகளில் அவரவர் 'தன்மை'களைப் பொறுத்து, வெவ்வேறு அளவுகளில் இரண்டு கூறுகளும் 'பின்னிப் பிணைந்து' வெளிப்படும்.
வீழ்ந்து உதிரும் திசையில் வாழும் மனிதர்களின், கட்சிகளின் செயல்பாடுகளில் எதிர்வினை(Reactive) செல்வாக்கு செலுத்தி வெளிப்படும். வளரும் திசையில் வாழும் மனிதர்களின், கட்சிகளின் செயல்பாடுகளில் சுய‌தூண்டுவினை(proactive) செல்வாக்கு செலுத்தி வெளிப்படும்.

திராவிடர் கழகம் அறிவித்த 'தாலி அகற்றும்' போராட்டம் என்பது எதிர்வினையா? தூண்டுவினையா? என்பது ஆய்விற்குரியது. 

1938 இந்தி எதிர்ப்பு போராட்டம், வகுப்புரிமை போராட்டம் என்று, அந்தந்த காலக்கட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து, முன்னெடுத்த போராட்டங்களில் பிராமணர் - பிராமணரல்லோதார் வேறுபாடுகளும், ஆத்தீக - நாத்தீக வேறுபாடுகளும் இல்லாமல்,  மக்கள் ஒற்றுமையை முக்கியமாக்கி, பெரியார் ஈ.வெ.ரா போராட்டங்களை முன்னெடுத்தார். அத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லாத காலக்கட்டங்களில், பிராமணர் - பிராமணரல்லோதார் வேறுபாடுகளையும், ஆத்தீக - நாத்தீக வேறுபாடுகளையும் முன்னிறுத்தி,  பிரச்சாரங்களும், பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற போராட்டங்களும் நடத்தினார். அவர் காலத்தில் தாலி கழட்டும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே விளம்பரமும், முக்கியத்துவமும் இன்றி நடந்ததா? அல்லது அண்மையில் திராவிடர் கழகம் நடத்தியது போல, தனி முக்கியத்துவம் உள்ள நிகழ்ச்சியாக நடந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தாலி அகற்றும் போராட்டம் என்பது இன்று தமிழ்நாட்டு மக்களைப் பாதித்துள்ள பிரச்சினைகளோடு தொடர்புடையதா? தொடர்பு அற்றதா? என்ற ஆய்வின் மூலமே, அப்போராட்டம் என்பது எதிர்வினையா? சுய‌தூண்டுவினையா? என்று முடிவு செய்ய முடியும். அந்த முடிவின் மூலமே திராவிடர் கழகம் வளர்ச்சி திசையில் பயணிக்கிறதா? அல்லது பலகீனமாகி உதிரும் திசையில் பயணிக்கிறதா? என்பது தெளிவாகும். இது போன்ற ஆய்வுகளை பெரியார் கட்சிகளுக்கு விரிவுபடுத்தினால், அக்கட்சிகள் வளர்ச்சி திசையில் பயணிக்கிறதா? அல்லது பலகீனமாகி உதிரும் திசையில் பயணிக்கிறதா? என்பதும் தெளிவாகும். 

“ 'இந்துத்வா' அரங்கில் உணர்ச்சி பூர்வமான போக்குகளின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்கள், (குறிப்பாக புராணங்கள், இலக்கியங்கள் பற்றி பெரியார் ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கேள்விகள் உள்ளிட்டு,)  நடைபெற்று வருவதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், 

ஆர்.எஸ்.எஸ்  அதிகாரபூர்வ இதழ் http://www.organiser.org/
இணையத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா http://rajivmalhotra.com/

மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளது போன்ற இந்துத்வா ஆதரவாளர்களின் கட்டுரைகளை படிக்கலாம்.

http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/

மேலே குறிப்பிட்டவை தொடர்பாக, பெரியார் இயக்க ஏடுகளில் ஏதேனும் வெளிவந்திருந்தால், அதை எனது பார்வைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் அவற்றை திறந்த மனதுடன் படித்து, எனது கருத்துக்களை நெறிப்படுத்திக் கொள்ள அவை உதவும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

இந்துத்வா எதிர்ப்பாளர்களின் 'அறிவுஜீவிகளாக' உலக அளவில் வலம் வரும்  வெண்டி டோனிகர் (Wendy Doniger), ஷெல்டன் பொல்லாக்(Sheldon Pollock)  போன்றோரின் நூல்களை தடை செய்வதை ஆதரிக்காமல், அறிவுபூர்வ விவாதத்தில் இந்துத்வா எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டு, அந்த அறிவுஜீவிகளின் 'அறிவுக் குறைபாடுகள்' அம்பலமாகத் தொடங்கியுள்ள. உலக அளவில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ராஜிவ் மல்கோத்ரா ஆவார். தனதளவில் கடும் முயற்சியின் மூலம் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டவர்களே அப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திவருகிறார்.

“ Before public campaigns, start with oneself. Decolonize your own self. This involves a lot of study, introspection and changing. Second go to those in your circle in small settings, to test and learn. Dont try to overnight become a public teacher - bypassing the years of tapas required.” - Rajiv Malhotra

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணத்தைத் தடுத்து, தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை, ஆங்கிலவழிக் கல்வி வழியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டு போதை மூலம், சிதைத்து வருவதை, மேற்குறிப்பிட்ட வழியில், எனது அறிவு, அனுபவ அடிப்படையில் எதிர்த்து வருகிறேன். 

அதற்கு இந்துத்வா ஆதரவாளர்களில் தமிழ்ப் பற்றுள்ளோரிடம் வெளிப்பட்டுள்ள ஆதரவு,  என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது போல, அல்லது அதை விட அதிகமாக, பெரியார் ஆதரவாளர்களிடம் ஆதரவு வெளிப்படுவதை வரவேற்கிறேன். அந்த இரண்டு வகை ஆதரவுகளையும் வெளிப்படையாக 'சினர்ஜி' சமூக செயல் மூலம் நெறிப்படுத்தி, தமிழ்வழியின் மரணப்பயணத்தை தடுத்த நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். (’ இந்தியாவில் முன்னுதாரணமாக;தமிழ்நாட்டின் மீட்சிக்கான, ‌  'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான நேரம் வந்து விட்டது’;
http://tamilsdirection.blogspot.in/2015/03/12_7.html ) அதுவே  மேற்கத்திய பண்பாட்டு போதையில், திரிந்த 'தமிங்கிலிசர்களாக',  தமிழர்கள் மாறிவரும் போக்கைத் தடுக்கும் என்று நம்புகிறேன்.

தமது அளவில் 'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி, திறமைப் பற்றிய புரிதலின்றி, புரிதலுக்கான தகுதி இல்லையென்றால், அதை அறிவு நாணயத்துடன் ஒத்துக் கொண்டு, தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல், 'தகுதி, திறமை மோசடி' என்ற போர்வையில் அதை மறைத்து, சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி வருபவர்களின் காலம் தமிழ்நாட்டில் முடிந்து விட்டது என்பது என் கருத்து. 

சுயலாப நட்ட நோக்கமில்லாமல், பாதுகாப்பின்மை(insecurity) நோயில் சிக்கி, இழிவான சமரசங்களுடன் வாழாமல், பிம்ப(image) சிறையில் சிக்காமல், நமது மனசாட்சிக்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழும்போது தான் குற்ற உணர்வின்றி நமது மரணத்தை நாம் சந்திக்க முடியும். ( 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?;
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) நாட்டையும், சமூகத்தையும் சீரழிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு சதிகளுக்கு துணை போகாத முறையில் வாழ முடியும்.