Saturday, August 22, 2020


தமிழ் வளர வேண்டும் என்று விரும்புபவர்களிடம் கோருவது:


'அடுத்து நான் என்ன செய்யலாம்? என்று தங்களுக்கு தோன்றுவதை தயக்கமின்றி அனுப்பவும்'




நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்:
தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html?m=1/ )


மேற்குறிப்பிட்ட பதிவில், சமஸ்கிருதத்தின் துணையுடன், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பினையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

மேற்குறிப்பிட்ட பதிவிற்குக் கீழ்வரும் பின்னூட்டம் (feedback) வந்தது.

'இந்த கட்டுரை வாசித்தேன். உங்களின் புலமைஆய்வில் நான் பல நல்ல செய்திகளை,அணுகுமுறைகளைக் கற்று வருகிறேன்.

ஆனால் தமிழ்நாட்டில் சிறிய அளவில் கூட உங்கள் கருத்துகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள இங்கு  பொதுவானவர்கள் யாரும் இல்லையா?

நீங்கள் உங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக கருதலாமா

உங்கள் நட்பு வட்டத்தில் இதைப் படித்து விவாதிப்ப‌வர்களையும் இணையாக உருவாக்கி வந்தால் நல்லதல்லவா?

எனக்கு பட்டதைச் சொல்கிறேன் ஐயா.

உங்கள் அனுபவம் இதற்கான காரணமாக இருந்தாலும் இதை மாற்றுவது எப்படி என்பதற்கும் கவனம் செலுத்துங்கள் ஐயா.'

நான் அவருக்கு கீழ்வருமாறு பதில் தெரிவித்தேன்.

'அடுத்து நான் என்ன செய்யலாம்? என்று தங்களுக்கு தோன்றுவதை தயக்கமின்றி அனுப்பவும்'

அவருக்கும் அவரைப் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கும் கீழ்வருவதைத் தெரிவிக்கலாம், என்று எனக்குத் தோன்றியது.

மலேசியாவில் பினாங்குத் தீவில் 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics in Tholkappiam)  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

உரையின் இடைவேளையில் அனைவருக்கும் குடிக்க‌ மூலிகை நீர் வழங்கப்பட்டது. அப்போது சிலர் என்னிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டார்கள்.

', ரி, , , , , நி தமிழே' என்பதும், இசையில் 'சுருதி' என்ற பொருளில் 'அத்தம்' என்ற சொல்லானது சங்க இலக்கியங்களில் பயன்பட்டதும், உரையாசிரியர்கள் இசை தொடர்பான சொற்கள் இடம் பெற்ற பகுதிகளில் தவறாக விளக்கம் தந்துள்ளதை உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டதும், ஏன் இன்னும் தமிழ்நாட்டு பாடத்திட்டங்களில் இடம் பெறவில்லை?'

மேற்குறிப்பிட்ட கேள்விக்கு, கீழ்வருமாறு விளக்கம் அளித்தேன்.

2002இல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் முன்னிலையில் எனது கண்டுபிடிப்புகளை விளக்கினேன். 

எனது கண்டுபிடிப்புகளை பாராட்டியவர்களில் கீழ்வருபவர்கள் எல்லாம் முக்கிய பொறுப்புகள் வகித்தவர்கள் ஆவர்;

பேரா.வி.ஜெயதேவன் ‘Oxford English-English-Tamil Dictionary’- Consultant editor, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் மறுபதிப்பு குழுவின் தலைவர், முன்னாள் தமிழ்த்துறை தலைவர்;

முனைவர்.வீ.அரசு,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ் இலக்கிய‌த்துறை தலைவர்;

முனைவர் பொற்கோ முன்னாள் சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;

முனைவர் ம.இராசேந்திரன், முன்னாள் தமிழ்ப்பல்கலைகழக துணை வேந்தர், ஆசிரியர் 'கணையாழி' இதழ்;

முனைவர் ஆர்.தாண்டவன், முன்னாள் சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;

தமிழ் தொடர்பான படிப்புகளில் எனது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்திய குறைகளை சரி செய்ய‌, மேலே குறிப்பிட்ட நபர்கள்,  என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள்? என்பதானது அவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி, பிரபாகரன் 'வழிபாடு வலைப்பின்னல்களில்' இடம் பெறாமல், தனித்து அறிவுபூர்வ விமர்சனப்பார்வையோடு நான் பயணித்து வருவதே, மேலே குறிப்பிட்ட இருட்டடிப்புக்கு காரணமாக இருக்கலாம். மோடி ஆட்சியில் வெளிப்படும் நிறைகளைப் பாராட்டினாலும், குறைகளையும், இந்துத்வா ஆதரவு முகாம்களில் வெளிப்படும் குறைகளையும் சுட்டிக்காட்டி வருவதால், இந்துத்வா ஆதரவு முகாம்களிலும், அதே பாணி இருட்டடிப்பு தொடரலாம்.

மேலே குறிப்பிட்ட விளக்கத்தினை கேட்ட பின், கேள்வி கேட்டவர்கள் அமைதியாயினர். 

எனது கண்டுபிடிப்புகள் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்திருந்தால், அவை  உடனே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்;

என்பதும் எனது கருத்தாகும்                

எந்த வகையான வெறுப்பு அரசியலையும் நான் ஆதரிக்க முடியாது. எனக்கு வேண்டியவர்களாயிருந்தாலும், அவர்களின் ஆய்வுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் புலமையின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். 

அப்போது தான், 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' சிக்கியுள்ள‌ தமிழ்ப்புலமைக்கு விடுதலை கிடைக்கும்.
 (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html)

எனது ஆய்வுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதை வரவேற்கிறேன். 

நான் இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்களும் ஆய்வுக்கட்டுரைகளும்: 

எனது 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' & ' The Origins of Tamil Classical Music' காணொளிகள் மற்றும்  ஆய்வுக்கட்டுரைகளைப் படிப்பதற்கான தொடர்புகள்: 
http://drvee.in/?page_id=24

சங்க இலக்கியங்கள் எல்லாம்காதல் வீரம் மட்டுமின்றி, புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்ல‌ அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும்  இருப்பதை எனது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 
(https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html)

எனது ஆய்வுகள் மூலமாக தமிழ் வளர வேண்டும் என்று விரும்புபவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

'அடுத்து நான் என்ன செய்யலாம்? என்று தங்களுக்கு தோன்றுவதை தயக்கமின்றி அனுப்பவும்'  (Email: pannpadini@gmail.com)

No comments:

Post a Comment