Saturday, September 5, 2020


ஸ்டாலின், கி.வீரமணி, சீமான், திருமா, வைகோ போன்ற இன்னும் பலர்;


'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயை ஊக்குவிக்கும் சமூகக் குற்றவாளிகளா?



கீழ்வரும் 'வாட்ஸ் ஆப்' தகவல் எனது கவனத்தினை ஈர்த்தது.

" ஹிந்தி எதிர்ப்பிற்காக இந்த முறை வித்தியாசமாக தலைவர் குடும்பத்தில் இருந்து ஒருவர் தீக்குளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவாலயம் அறிவிப்பு"

அது தொடர்பாக விசாரித்ததில், அது உண்மையல்ல; கேலி செய்து போடப்பட்ட பதிவு, என்று அறிந்தேன்.

அவ்வாறு கேலிகள் இணையத்தில் வலம் வருவதற்கான சமூக வரலாற்றுப் பின்னணியும், தமிழ்நாட்டின் மீட்சி தொடர்பான ஆய்வில் முக்கிய இடம் பெறும்.

1965 முதல் துவங்கி வளர்ந்த தீக்குளிப்புகள் உள்ளிட்டு, அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக, தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகள் எண்ணிக்கையற்றவை ஆகும். அவை பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் நடந்த சாவுகளாகும்; பொதுவாழ்வு வியாபாரத்தில் மேல்தட்டு வாழ்க்கையில் பயணிப்பவர்களின் முதலில்லாத மூலதனங்களாக.

அனிதாவின் அண்ணன் எனது மாணவராக இருந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்திருந்தால், தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என்றும், ஐ.ஏ.எஸ், சார்ட்டர்ட் அக்கவுண்ட் போன்ற வாய்ப்புள்ள இலக்குகளுக்கான படிப்புகளை தேர்ந்தெடுத்து, படிக்குமாறும் அறிவுறுத்தியிருப்பேன்.

என்னைச் சந்தித்த பின், சில நாட்களில், அந்த பெண் தற்கொலை செய்திருந்தால், அந்த உரையாடலில் நான் எங்கு தவறு செய்திருக்கக் கூடும்? என்று ஆராய்ந்து, அந்த தற்கொலையை தவிர்த்திருக்க வேண்டுமே என்ற கவலையானது, என்னைப் பற்றியிருக்கும்.

அனிதா, செங்கொடி போன்றோரின் தற்கொலைகளை எல்லாம்,  நான் மனசாட்சியுடன் ஆதரித்தால், அடுத்து தமிழ்நாட்டில் அது போல அரங்கேறும் தற்கொலைகள், எனது குடும்பத்தில் அரங்கேறுவதை நான் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழும் சமூகக்கிருமிகளின் வரிசையில் நானும், எனது குடும்பமும் இடம் பெற தகுதி உடையவர்கள் ஆவோம். 
(‘தாய்மொழி அடையாளச் சிதைவுக்கும், 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோய் வளர்ச்சியால் விளைந்த தற்கொலைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா?’; 

நீட் தேர்வில் தோல்வி, நீட் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ததில் தோல்வி போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்? தேர்வில் தோல்வி, தேர்வில் காப்பியடித்து மாட்டிக்கொண்ட அவமானம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்?

பேரறிவாளன் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகள் செய்து கொண்டவர்கள் யார்?

அவர்களில் எவராவது  தமிழ்/திராவிட கட்சிகளின் தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது படித்த, பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்களா?

அல்லது வசதியற்றவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்களா?

நீட் தேர்வில் தோல்வி, நீட் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ததில் தோல்வி போன்ற காரணங்களால், அல்லது  தேர்வில் தோல்வி, தேர்வில் காப்பியடித்து மாட்டிக்கொண்ட அவமானம் போன்ற காரணங்களால் மனச்சோர்வுக்கு (Depression) உள்ளானவர்கள் எல்லாம், 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயாளிகளாக இருந்தால் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம், என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.

There is an increasing evidence that alexithymia may be considered a risk factor for suicide.; Front Psychiatry. 2017; 8: 148. Published online 2017 Aug 14. doi: 10.3389/fpsyt.2017.00148

In conclusion, if depression presents alexithymic features the subject has an additive impact on the risk of suicidal ideation. 

The TAS is a 20-item instrument that is one of the most commonly used measures of alexithymia.

Education, income, and occupational status were inversely related to the TAS score. The results suggest that alexithymia could be viewed not only as a psychological phenomenon, but also partly as a socially determined one. 

மேற்குறிப்பிட்ட தற்கொலைகளில், அனிதா, செங்கொடி போன்ற தற்கொலைகளைகளை, தமது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தும் கட்சிகளும் தலைவர்களும் சமூகக் குற்றவாளிகள் ஆக மாட்டார்களா?

திராவிட அரசியலில் சமூக உளவியலில் என்னென்ன பாதிப்புகள் நடந்துள்ளன
(‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; 

அந்த பாதிப்புகளில் 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயும் ஊக்குவிக்கப்பட்டதன் காரணமாகவே, 1965 முதல் இன்று வரை வசதியற்ற சாமான்யர்களின் குடும்பப் பிள்ளைகள் மட்டுமே மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயை ஊக்குவித்ததானது, சமூக ஊமைக்காயங்களை உணர முடியாத யோக்கியத் தமிழர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியதா?

'ஒரு சமூகத்தில் வெளிப்படும் சமூக ஊமைக்காயங்களை முளையிலேயே கண்டறிந்து, உரிய 'சமூக மருத்துவ சிகிச்சை' மூலமாக குணமாக்காததன் விளைவாக‌, அது இன்னும் மோசமான சமூக ஊமைக்காயங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் முதல்வரையேக் காவு வாங்கியதா

என்பது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உகந்ததாக தமிழ்நாடு இருக்கிறது.

திராவிட அரசியல் ஊழல் போக்கில், ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமானது 1970களில் தொடங்கி வளர்ந்த போக்கில், தாய்மொழிவழிக்கல்வி எந்த அளவுக்கு சீரழிந்தது? அதன் காரணமாக, தாய்மொழி அடையாளக் கூறுகள் எந்த அளவுக்கு சீரழிந்தது? அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரித்துள்ளனவா?

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ 

'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயும் ஊக்குவிக்கப்பட்டதன் காரணமாகவே 1965 முதல் இன்று வரை வசதியற்ற சாமான்யர்களின் குடும்பப் பிள்ளைகள் மட்டுமே தற்கொலைகள் செய்து வரும் சூழலில்,

வசதியான குடும்பங்களில் உள்ள பிள்ளைகளில் பெரும்பாலோர் போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), போன்றவை மூலமாக பலியாகி வருகின்றனர்.

உலக அளவில், பல உயிர்களை காவு வாங்கியுள்ள இணையவழி விளையாட்டு 'நீல வேல் மீன் விளையாட்டு' (Blue Whale game) போன்று புதிது புதிதாக வெளிவரும் விளையாட்டுகள் மூலமும் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

அதே போக்கில், தமிழ்நாடானது தொடர்ந்து பயணிக்குமானால், ‘'திரிந்த மேற்கத்திய' மோகத்தில், தமிழ் வேரற்ற,  நுகர்வெறி (Consumer thirst) மிருகங்களாக,  நமது குழந்தைகள் வளர்ந்து, அவர்களிடம் நாம் பெறப்போகும் 'பரிசுகள்', வெளியில் சொல்லமுடியாத, இழிவான துன்பங்களாக தாக்கப்போகிறது' என்ப‌தற்கான அறிகுறிகள், இப்போதே வெளிப்பட தொடங்கி விட்டன. 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' செய்யப் போகிறோமா? தமிழ் வேரற்ற (பிராமணர் - பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி) தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடாக வேண்டுமா?’ 
(‘தமிழ்நாட்டில 'திராவிடர்/தமிழர் சமூக‌ நீல வேல் மீன் விளையாட்டு'    (Dravidar/Tamizhar Social Blue Whale Game) ?’; 

ஸ்டாலின், கி.வீரமணி, சீமான், திருமா, வைகோ போன்ற இன்னும் பலர் தத்தம் மனசாட்சிக்குட்ப்பட்டு, மேற்குறிப்பிட்ட உயிர்ப்பலிகளை ஊக்குவிக்கும் அரசியலை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட உயிர்ப்பலிகளுக்கு முக்கிய காரணமான தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள் பற்றிய  கவலையின்றி, ‘நாமும்,  நமது குடும்பமும் பிழைத்தால் போதும்என்று நாம் வாழ்கிறோமா? அதன் விளைவாக, இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதை, தவிர்க்க முடியுமா?

அது நடக்குமானால், வரலாற்றில் ஸ்டாலின், கி.வீரமணி, சீமான், திருமா, வைகோ போன்ற இன்னும் பலர், தமிழ்நாட்டில் தமிழ் வேரை அழித்த சமூகக் குற்றவாளிகளாக இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது.


குறிப்பு:


நீட் தேர்வு குறித்து Dr. T. பெரியசாமி., M. Tech., Ph.D (IIT Madras)  எழுதி இருக்கும்... விளக்கமான...தரவுகளுடன் கூடிய... தெளிவான... பதிவு.

தினமலரில் வெளியான வாசகர் கடிதம்:

'திமுக 50 லட்சம், அதிமுக - 40 லட்சம், மதிமுக- 5 லட்சம் வழங்கும். பாமக விசி கட்சிகளின் ஜாதியை பொருத்து 5 லட்சம் வரை வழங்கும். அரசு சார்பில் ஒருவருக்கு வேலை. டிவி விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினால் இதெல்லாம் கிடைக்கும். தமிழர்கள் பணக்காரர்கள் ஆக தற்கொலை ஃபார்முலாவை புரிந்து கொள்ள வேண்டும்.'  

வேற்று மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இல்லையே ஏன்? வீரத்தமிழ்ப் பரம்பரையைக் கோழைகளாக்கியது யார்?’ (https://www.dinamalar.com/news_detail.asp?id=2612316 )

கல்வி பிரச்சனையில் தமிழ்நாடு மட்டுமே கட்சிகளிடம் ஏமாந்து பயணிக்கிறது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆளும் மாநில அரசுகள் நீட் தேர்வை நடத்துகின்றன. தத்தம் மாநிலங்களில் நீட் எதிர்ப்பு என்று மாணவர்களை தவறாக வழி நடத்தவில்லை.

No comments:

Post a Comment