தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (7)
'கடகானா' மூலம் விழித்த ஜப்பானியர்களும், 'கிரந்த' மதிப்பு தெரியாமல் ஏமாந்த தமிழர்களும்
விளையாட்டுப்பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஜப்பானிய மொழியில் தான் ஜப்பானில் உள்ள கல்வி முறை உள்ளது. அவ்வாறு தமிழ்நாட்டில் தமிழும் இடம் பெற வேண்டும் என்று விரும்புபவர்களின் பார்வைக்குக் கீழ்வரும் தகவல்கள் உரியவையாகும்.
தமிழில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
(1) பொருள் சிதைவுக்கு இடமில்லாத ஒலிப்பியல் இறக்குமதி
(Phonetic import);
(2) பொருள் சிதைவு அபாயமுள்ள பொருள் மொழிபெயர்ப்பு
(semantic import)
ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளில், இறக்குமதி செய்ய ஒலிப்பியல் முறையையே பின்பற்றுகிறார்கள்.
அவ்வாறு இறக்குமதி செய்யும்போது, கீழ்வரும் சிக்கல் எழுவதைத் தவிர்க்க முடியாது.
பிறமொழி எழுத்துக்கள் எல்லாம், அந்த மொழியில் உள்ள சொற்களில் வெளிப்படுத்தும் ஓசைகளை எல்லாம், சிதைவின்றி இறக்குமதி செய்ய வேண்டுமானால், இறக்குமதி செய்யும் மொழியில் உள்ள எழுத்துக்களில், இறக்குமதிக்குள்ளாகும் பிறமொழிச் சொல்லின் ஓசைகளுக்கு பொருத்தமான எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
உதாரணமாக 'OXYGEN
' என்ற ஆங்கிலச் சொல்லினை ஒலிப்பியல் முறையில் தமிழில் இறக்குமதி செய்தால், 'ஆக்சிசன்' என்று தான் இறக்குமதி செய்ய முடியும். எனவே ஒலிப்பியல் இறக்குமதியில் ஓசைச்சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாகும். ஓசைச்சிதைவினை அகற்றி அல்லது இயன்றவரை குறைத்து இறக்குமதி செய்வதே, இறக்குமதி செய்யும் மொழியில் கல்வி பயில்பவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அது துணை புரியும். உதாரணமாக ஆங்கில அறிவியல் நூல்களில் 'OXYGEN'
தொடர்பான பகுதிகளை அடையாளம் கண்டு, படிக்க, தமிழில் ஓசைச்சிதைவின்றி படித்த மாணவர்களுக்கு எளிதாகும். அதற்கு மாறாக, இரண்டாவது முறையில், தனித்தமிழ்ப்பற்றில் உருவான 'தீயகம்' அல்லது அது போன்ற வேறு சொல்லினைக் கற்ற மாணவர்களால், அவ்வாறு அந்த 'OXYGEN
' என்ற சொல்லினை ஆங்கில அறிவியல் நூல்களில் அடையாளம் கண்டு படிப்பது சிரமமாகும்.
அது போன்ற சிரமத்தினை தவிர்ப்பதற்காகவே, ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்ய, முதலாவதான ஒலிப்பியல் முறையைப் பின்பற்றுகிறார்கள்.
ஒலிப்பியல் இறக்குமதியில் ஓசைச்சிதைவினை அகற்றி இறக்குமதி செய்வதற்காகவே, பிறமொழி எழுத்துக்களின் ஓசைகளைக் குறிக்கும் தனியான எழுத்துமுறையினை ஜப்பானிய மொழியில் இன்று பயன்படுத்தி வருகிறார்கள். அந்த முறை 'கடகானா' (Katakana)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி 9 ஆம் நூற்றாண்டில், சீன மொழி நூல்களில் இருந்த அறிவை, ஜப்பானிய மொழியில் இறக்குமதி செய்ய, புத்த துறவிகள் உருவாக்கிய முறையே, அதன் தொடக்கமாகும். பின் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் உள்ள சொற்களையும் ஓசைச்சிதைவின்றி இறக்குமதி செய்யும் வகையில் வளர்த்து இன்று பயன்படுத்துகிறார்கள்.
1960-களில் நான் உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடங்கள் படித்த போது, அறிவியலில் உள்ள சொற்களை எல்லாம் ஒலிப்பியல் முறையில் இறக்குமதி செய்தே பாடப்புத்தகங்கள் உருவாகின. ஜப்பானிய மொழியில் உள்ள 'கடகானா' எழுத்து முறையைப் போலவே, தமிழில் இருந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஓசைச்சிதைவினை சிறுமமாக்கிய பாடப்புத்தகங்களையே நாங்கள் படித்தோம். உதாரணமாக 'OXYGEN'
என்ற ஆங்கிலச்சொல்லானது, 'ஆக்ஸிஜன்' என்றே எங்களின் பாடப்புத்தகங்களில் நாங்கள் படித்தோம். எனவே கல்லூரியில் ஆங்கில
வழியில்
படித்த போது, 'அந்த' அறிவியல் சொற்கள் இடம் பெற்ற ஆங்கிலப்
புத்தகங்கள் மூலம் எளிதில் கல்வி கற்க முடிந்தது. இன்று புகழ்பெற்ற மயில்சாமி அண்ணாதுரை, அப்துல் கலாம் உள்ளிட்ட எண்ணிறந்த சாதனையாளர்கள் எல்லாம், 'அந்த' கல்வி முறையில் பயின்றவர்கள் ஆவோம். 1967க்குப் பின் தான், அறிவியல் பாட நூல்களில் அறிவியல் சொற்களை எல்லாம் மொழிபெயர்ப்பு செய்த மேற்குறிப்பிட்ட இரண்டாவது ஆபத்தான முறை பின்பற்றப்பட்டது. அதன்பின் தமிழ்வழியில் படித்து, கல்லூரியில் ஆங்கில வழியில் தாக்குப்
பிடிக்க
முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கானது அதிகரித்து வருகிறது.
The ‘technical
vocabulary’ turns out to be Greek and Latin for these students. Unfortunately,
most teachers take it for granted that all students can comprehend the
technical vocabulary,”
“However, in reality,
the shift in the medium of instruction is too abrupt for these students to make
quick and suitable adjustments,” he felt.
English turns suicide pill for engineering student (https://www.newindianexpress.com/thesundaystandard/2012/sep/16/english-turns-suicide-pill-for-engineering-student-406615.html)
‘தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்த கிரந்த எழுத்துமுறையை ஒருங்குறிக்குள் கொண்டு
வந்து
மற்ற
மொழிகளைப் போல அதற்கும் தனி இடங்களை ஒதுக்க வேண்டும் என்கிற பரிந்துரை ஒருங்குறி சேர்த்தியத்திடம் வைக்கப்பட்டது.தமிழ் நாட்டிலும், உலக அளவிலான தமிழ் மொழி அறிஞர்கள் மத்தியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது
தொல்காப்பியத்தில் பிறமொழிச் சொற்களை தமிழில் இறக்குமதி செய்வது தொடர்பான 'ஒரீஇ' சூத்திரத்தினை கிழ்வருமாறு புரிந்து கொண்டதன் அடிப்படையில், 'அந்த' எதிர்ப்பானது, வெளிப்பட்டதாக தெரிகிறது.
'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டு, அத்துடன் நிற்காமல், வேற்று மொழிச் சொற்களை தமிழில் அனுமதிப்பதை எதிர்க்கும் நியாயமும் அதில் இருப்பதாக புரிந்து கொண்டதும் வெளிப்பட்டுள்ளது. 'இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது.'(http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/11906-2010-12-11-14-44-47)
தொல்காப்பியத்தில் 'ஒரீஇ' தொடர்பான சூத்திரம் என்பதானது;
பிறமொழிச் சொற்களில் உள்ள எழுத்துக்களில், தமிழ் எழுத்தொலிகள் போல் இல்லாத, அந்த பிறமொழி எழுத்துக்களை ஒலிச்சிதைவுடன் (acoustic-phonetic- distortion of the letters of the non-Tamil words,) எவ்வாறு அச்சொற்களை தமிழில் இறக்குமது செய்வது? அவ்வாறு தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கு எல்லாம், தமிழ்ச்சொற்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிகள் ஏன் பொருந்தாது? ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்ய உருவாக்கப்பட்ட 'கடகானா' (katakana syllabary) முறையானது, எவ்வாறு தொல்காப்பிய 'ஒரீஇ' முறையில் அமைந்துள்ளது? தொல்காப்பிய 'ஒரீஇ' முறையானது, எவ்வாறு உலக மொழிகளுக்கான பிறமொழிச்சொற்கள் ஒலிப்பியல் இறக்குமதிக்கான இலக்கணம் ஆகும்?
(To import the technical words from the foreign languages, the 'orIi' process of tholkAppiam may prove to be an objective, language independent linguistic phonetic process, that could be adopted in all world languages.)
என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(To import the technical words from the foreign languages, the 'orIi' process of tholkAppiam may prove to be an objective, language independent linguistic phonetic process, that could be adopted in all world languages.)
என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(‘ஒருங்குறி சேர்த்தியத்திடம்
(Unicode Consortium) கிரந்த எழுத்துக்கள் தொடர்பான எதிர்ப்புகள் தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.com/2018/11/
)
தமிழ் மொழியின் எழுத்தொலிகளின் அடிப்படையில் இசை அழகியலில் (Musical aesthetics) உயரிய 'வண்ணங்கள்' தொல்காப்பியத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பது எனது கவனத்தினை ஈர்த்தது. அந்த வண்ணங்களில் ஒன்று 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.
'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'
'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டால், மேலே குறிப்பிட்ட வண்ணம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. 'ஒரூஉ வண்ணம்' தொடர்பான ஆய்வே, என்னை 'ஒரீஇ' தொடர்பான ஆய்விற்கு வழி நடத்தியது.
கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, உலக இசை அதிசயத்தில் இடம் பெற வேண்டிய, குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் இசைச்சுரங்கள் தொடர்பான எழுத்துக்களும், வாசகங்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. அவற்றை 'தமிழ் இசையியல்'(Tamil
Musicology) மற்றும் தொல்காப்பியத்தில் நான் கண்டுபிடித்துள்ள 'இசை மொழியியல்'
(Musical Linguistics) ஆகியவற்றுடன் எவ்வாறு தொடர்பு படுத்த முடியும்?
தமிழ் இசையியல் தொடர்பான கற்றலில், தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்கு
(Complimentary role) வகித்துள்ளன. அதற்கான காரணம் வருமாறு.
சமஸ்கிருதத்தில் எழுத்தின் ஒலிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன
(phonetically defined). அது சமஸ்கிருத மொழியின் தனித்துவ சிறப்பாகும். அதன் அடிப்படையிலான பாணினியின் இலக்கண விதிகள், இன்று உலக மொழிகளுக்கான மொழியியலில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
தமிழில் உயிரெழுத்துக்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, மெய்யெழுத்துக்களின் எழுத்தொலிகள், அந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து அமையும்
(phonetically with one or more options). உதாரணமாக 'க' என்ற சொல்லானது, 'சக்கரம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும், ‘சங்கம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தமிழ் இசையியலில், 'ச, ரி, க, ம, ப, த, நி' ஆகிய ஏழும் மேலே குறிப்பிட்டவாறு, அந்தந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து ஒலிப்பவை ஆகும். எனவே தமிழ் இசையில் மாணவர்களின் பயிற்சியில் சுருதி சுத்தமாக ஒலிக்க, ஏழு சமஸ்கிருத எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.
குடுமியான் மலை இசைக்கல்வெட்டில் ஏழு இசைச்சுரங்களும் சமஸ்கிருத எழுத்துக்களில் உள்ளதை ஆராயும் போது, மேலே குறிப்பிட்டதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதத்தில்
shadja (षड्ज) என்பது சுரப்பெயராகும். ஆனால் 'ச' என்ற சுரமானது,’ सा’ என்ற சமஸ்கிருத எழுத்தில் குறிக்கப்படுகிறது; சமஸ்கிருத சுரப்பெயரில் உள்ள முதல் எழுத்திலிருந்து வேறுபட்டு.
சமஸ்கிருத சுரப்பெயர்களிலிருந்து, சமஸ்கிருத இலக்கணப்படி, ஏழு சுர எழுத்துக்களைப் பெறமுடியாது, என்பதற்கு திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, ஆபிரகாம் பண்டிதர், வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர்,
1917)
இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்’ என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
(‘குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil
Musicology) தொடர்புள்ளவையா?’; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html
)
தமிழில் மேற்குறிப்பிட்டவாறு அமைந்த தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பு முறையின் அடிப்படையிலான தொல்காப்பியத்தின் யாப்பிலக்கண விதிகளின் அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான 'இசை மொழியியலை' நான் கண்டுபிடித்துள்ளேன். வளர்ந்து வரும் 'இசை மொழியியல்' (Musical Linguistics) துறையில், அது இடம் பெறத்தக்கது, என்று நவீன மொழியியலில் உலகப்புகழ் பெற்ற நோவாம் சோம்ஸ்கியும் அங்கீகரித்துள்ளார்.
“ஒரு மொழியில் உள்ள மொத்த விதிகளின் கூட்டே அம்மொழியின் இலக்கணமாகும்.( The
sum of the total rules found in any one language is known as a grammar) இலக்கணம் என்பதற்கு இரண்டு வகையான பொருள் உண்டு. அம்மொழி பேசும் மக்கள் இயல்பாக பயன்படுத்தும் விதிகள் தொடர்பான இலக்கணம் ஒரு வகையாகும்.இரண்டாவது வகை என்பது மொழியியலாளர் அந்த விதிகளை விதி அமைப்பிற்கு உட்படுத்துவதாகும்.
(grammar, a term which is often used interchangeably by linguists to mean two
different things: first the rules applied subconsciously by the speakers of a
language; secondly a linguist’s conscious attempt to codify these rules.) இலக்கணங்களில் மாற்றங்கள் நுற்றாண்டுகளிலும் நடக்கலாம்; ஒரு நபரின் வாழ்நாள் காலத்திற்குள்ளேயும் நடக்கலாம்,
(Grammars fluctuate and change over the centuries, and even within the lifetime
of individuals). (Page 16, - Language
change : progress or decay? Third
edition – JEAN AITCHISON, Professor of Language and Communication, University
of Oxford- Cambridge University Press - 2001);
தமிழைப் பொறுத்த மட்டில், சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தமிழ் இலக்கண நூல்களில் உள்ள இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதை உரிய சான்றுகளுடன் முனைவர் இரா.திருமுருகன் தனது 'மொழிப் பார்வைகள்' என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal
sounding, செவி உணர்விலும் aural
perception, காட்சி உணர்விலும்
visual perception, எழுத்து முறையிலும்
writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா?’
(‘தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற' பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’; http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html)
இசையில் 'சீர்' கெட்டு, துப்பு கெட்ட திசையில் பயணிக்கும் தமிழ்நாட்டில், தமிழ் மொழியின் இலக்கணமும் எந்த அளவுக்கு சீர் கெட்டுள்ளது? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html)
கி.பி 9 ஆம் நூற்றாண்டில், சீன மொழி நூல்களில் இருந்த அறிவை, ஜப்பானிய மொழியில் இறக்குமதி செய்ய, புத்த துறவிகள் உருவாக்கிய 'கடகானா' எழுத்து முறையை வளர்த்து வந்த போக்கில் தான், ஜப்பான் இன்று உலகே வியக்கும் வகையில் வளர்ந்த நாடாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் காலனியத்திற்கு முன், சமஸ்கிருத மொழி எதிர்ப்பு இருந்ததற்கு சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை. 'சாதி', 'இனம்' போன்ற சொற்கள் எல்லாம் காலனி ஆட்சியில் பொருள் திரிந்து, சமூகத்தில் சாதி மோதல்களை எவ்வாறு வளர்த்து வந்தன? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
தமிழ்நாட்டில் பல கல்வெட்டுகளில் தமிழும் சமஸ்கிருதமும் அருகருகே உள்ளன. தமிழ் அறிஞர்கள் சமஸ்கிருதத்திலும் நூல்கள் படைத்தனர். சமஸ்கிருத அறிஞர்கள் தமிழிலும் நூல்கள் படைத்தனர்.
ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு சுர எழுத்துக்களுக்கான தொன்மையான நூல் சான்றாக, தமிழில் 'சேந்தன் திவாகரம்' உள்ளது. சமஸ்கிருத சான்றுகள் எல்லாம் அதற்கு பிற்பட்டவையாகும். சமஸ்கிருத புலமையாளர்கள் தமிழில் எழுதிய நூல் தான் சேந்தன் திவாகரம் ஆகும். ஒரு மொழியின் உயிரெழுத்துக்களை ஏழு சுரங்களோடு தொடர்பு படுத்திய தொன்மையான சான்றும், 'அந்த' நூலில் தான் வெளிப்பட்டுள்ளது. தமிழாயிருந்தாலும், சமஸ்கிருதமாயிருந்தாலும், எந்த மொழியாய் இருந்தாலும், அறிவு என்பதானது உலகின் பொதுச் சொத்தாகும். 'யாது ஊரே, யாவரும் கேளிர்' என்று வாயால் சொல்லிக் கொண்டு, எந்த மொழியின் மீதும், எந்த மக்கள் மீதும் வெறுப்புடன் பயணிப்பவர்கள் எல்லாம், அந்தந்த மொழிகளின் வளர்ச்சிக்குக் கேடானவர்கள் ஆவார்கள்.
கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் புத்த துறவிகளின் முயற்சியால் தோன்றிய ஜப்பானிய 'கடகானா' எழுத்து முறைக்கு முன், கி.பி 6-ஆம் நூற்றாண்டில் அது போன்ற (புத்த அல்லது ஜைன) முயற்சியால், தமிழில் தோன்றிய கிரந்த எழுத்து முறையை, ஜப்பானியர்களைப் போல, 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தி வளர்க்காமல், எதிர்த்து ஒழிப்பவர்கள் எல்லாம், தமிழின் வளர்ச்சிக்குக் கேடானவர்கள் ஆவார்கள். குடுமியான்மலை இசைக்கல்வெட்டு உள்ளிட்ட தமிழ் இசையியல் ஆராய்ச்சியையும் கெடுத்து வருபவர்கள் ஆவார்கள்.
ஒரு மொழியின் எழுத்துக்களும் இலக்கண விதிகளும் வாழும் மனிதரைப் போலவே, வாழும் சமூகத்தைப் போலவே, உயிரோட்டம் உடையனவாகும். 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' இடமின்றி, அந்த உயிரோட்டத்தினை 'எந்தப் பற்றின்' அடிப்படையில் சிறைப்படுத்தினாலும், வளர்ச்சியின்றி சூம்பி உதிரும் காயைப் போல, அந்த மொழியும் சமூக ஓட்டத்தில் 'உதிர்ந்து' விடும்.
எனவே 'கடகானா' மூலம் விழித்த ஜப்பானியர்களைப் போலவே, 'கிரந்த' மூலமாக தமிழர்கள் விழிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.
தேவாரம் போன்ற சைவ நூல்களில் ஏன் கிரந்த எழுத்துக்களின் செல்வாக்கு இல்லை? நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற வைணவ நூல்களில் ஏன் கிரந்த எழுத்துக்கள் செல்வாக்கு பெற்றன? கம்ப ராமாயணத்தில் தொல்காப்பிய 'ஒரீஇ' முறையில், கிரந்த எழுத்துக்கள் கலப்பின்றி, சமஸ்கிருத சொற்களை இறக்குமதி செய்தது ஏன்? தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்பான தகவல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை விட, ஏன் தேவாரத்தில் அதிகமாக உள்ளன? கம்ப ராமாயணத்தை விட, பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணத்தில் ஏன் அதிகமாக உள்ளன? என்பது தொடர்பாக, ஆர்வத்துடனும், உரிய உழைப்புடனும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, என்னால் இயன்ற ஆய்வு ஆலோசனை வழங்க இயலும்.
குறிப்பு: 'கிரந்த' எதிர்ப்பு திசையில் பயணிக்கும் தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும், 'தமிழ் லெக்சிகனில் மற்றும் ‘தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகள்' பற்றிய ஆய்வுகள் பற்றி கவலைப்பட்டு, தமிழை வளர்க்க முயற்சித்தார்களா? இனியாவது முயல்வார்களா? இது டிஜிட்டல் யுகம். இளையர்களின் கேள்விக்கும், கேலிக்கும் இலக்காகும் முன் விழித்துக் கொள்வது நல்லது.
'தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வாய்ப்புகளும்'; http://tamilsdirection.blogspot.com/2018/
'தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்'; https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html
Note:
தேவாரம் போன்ற சைவ நூல்களில் ஏன் கிரந்த எழுத்துக்களின் செல்வாக்கு இல்லை? நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற வைணவ நூல்களில் ஏன் கிரந்த எழுத்துக்கள் செல்வாக்கு பெற்றன? கம்ப ராமாயணத்தில் தொல்காப்பிய 'ஒரீஇ' முறையில், கிரந்த எழுத்துக்கள் கலப்பின்றி, சமஸ்கிருத சொற்களை இறக்குமதி செய்தது ஏன்? தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்பான தகவல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை விட, ஏன் தேவாரத்தில் அதிகமாக உள்ளன? கம்ப ராமாயணத்தை விட, பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணத்தில் ஏன் அதிகமாக உள்ளன? என்பது தொடர்பாக, ஆர்வத்துடனும், உரிய உழைப்புடனும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, என்னால் இயன்ற ஆய்வு ஆலோசனை வழங்க இயலும்.
குறிப்பு: 'கிரந்த' எதிர்ப்பு திசையில் பயணிக்கும் தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும், 'தமிழ் லெக்சிகனில் மற்றும் ‘தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகள்' பற்றிய ஆய்வுகள் பற்றி கவலைப்பட்டு, தமிழை வளர்க்க முயற்சித்தார்களா? இனியாவது முயல்வார்களா? இது டிஜிட்டல் யுகம். இளையர்களின் கேள்விக்கும், கேலிக்கும் இலக்காகும் முன் விழித்துக் கொள்வது நல்லது.
'தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வாய்ப்புகளும்'; http://tamilsdirection.blogspot.com/2018/
'தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்'; https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html
Note:
‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback) https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION' (both KDP & Paperback) https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264
No comments:
Post a Comment