கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ் அறிஞருடன்
எனது அனுபவங்கள்
நான் தஞ்சையில் 1980களில் 'பெரியார்' இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றிருந்த காலம் அது. அப்போது எனக்கு நெருக்கமான சக பேராசிரியர் அ.மார்க்ஸ் இலங்கையில் இருந்து வந்து, பேரா.சிவத்தம்பி தஞ்சையில் தங்கியிருப்பதாக தெரிவித்து, அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார். தஞ்சை ரயில் சந்திப்பு அருகில், தமிழக அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள ஒரு அறையில் இருந்த அவருக்கு, என்னை 'பெரியார்' கொள்கையாளர் என்று அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தினார். அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நானறிந்த மார்க்சியவாதிகள் எல்லாம் தம்மை பெரிய அறிவுஜீவியாகக் கருதிக்கொண்டு, 'பெரியார்' கொள்கையாளர்களை அரைகுறை அறிவில் விவரமற்றவர்களாகக் கருதி உரையாடிக் கொண்டிருந்தார்கள். அதே தொனியில் தான், சிவத்தம்பியும் என்னுடன் உரையாடினார். நான் 'Das
Capital’, ‘Theories of Surplus Value’ , ‘collected works of Marx-Engels’, ‘Selected
works of Mao’ போன்ற இன்னும் பல நூல்களில் மூழ்கி, மார்க்சிய-லெனினிய புலமையாளனாக வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. சிவத்தம்பி 'பெரியார்' கொள்கையை கேள்விக்குறியாக்கி, மார்க்சியத்தை உயர்த்தி என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு, நான் தொடர்ந்து பதில் அளித்து வந்தேன். கடைசியாக, 'வர்க்கம்' என்ற அளவுகோலை முன்னிறுத்தி,
"சமூகத்திற்கு ஒரு
Common Denominator வேண்டாமா?" என்று கேட்டார். நான் உடனே
" ஏன் ஒரு Common
Denominator class தான் இருக்க வேண்டுமா? இரண்டு Common
Denominators caste and class இருக்கக்கூடாதா?
" என்று பதிலுக்கு கேட்டேன். அத்துடன் உரையாடல் முடிந்து, நாங்கள் வெளிவந்தோம்.
அதற்குப் பின், அவரின் நூல்களை படிக்கும் ஆர்வம் எனக்கு எழுந்ததில்லை. ஆனால் அதன்பின் தான், தமிழ்நாட்டு முற்போக்காளர்கள் மத்தியில் கைலாசபதி, சிவத்தம்பி அகியோர் முதலிடத்தில் போற்றப்படுபவர்கள், என்பதானது எனக்கு தெரிய வந்தது. அவ்வாறு வழிபடும் போக்கில் பயணித்த தமிழ்நாட்டில், மார்க்சியம் தொடர்பான எனது கீழ்வரும் தகவல்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
From: ‘ஈ.வெ. ரா -வின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு விலகி, 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்கிறார்களா? 'பெரியார்' பிம்பம்' ஈ.வெ.ராவின் சமாதியாகுமா?’;
‘சாங்கிருத்தியாயன், மார்க்சு போன்றவர்களின் ஆய்வுகள் எல்லாம் முடிந்த முடிவுகளாகக் கருதிப் பயணிப்பதானது வழிபாட்டுப் போக்காகும். பின் வந்தவர்களால் எந்த அளவுக்கு மறுஆய்வுக்கு உள்ளாகி, என்னென்ன உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன? 'புதிய ஜனநாயகம்' இதழுக்கு மறுப்பாக, 'உண்மை' இதழில் நான் எழுதிய கட்டுரைகள் மூலமாக வெளிப்பட்ட தகவல்கள், 'காரல் மார்க்ஸை' வழிபடும் போக்கில் பயணித்த 'பெரியார்' ஆதரவாளர்களுக்கே கசப்பாக இருந்ததையும் நானறிவேன். அந்த காலக்கட்டத்தில், மார்க்சிய லெனினிய குழுக்களுடன் அறிவுபூர்வ விவாதங்களில், நான் ஈடுபட்டிருந்தேன்.
இன்று இசை ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்கியுள்ளது போல், அதற்கு முன் பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஆகியோர் படைப்புகளில் மூழ்கி வாழ்ந்தேன். அப்போது பொருள் உற்பத்தி முறை(Mode
of Production), உற்பத்தி விசைகள்(Productive
Forces), உற்பத்தி உறவுகள்(Production
relations), அவற்றிற்கிடையிலான தொடர்புகள், உபரி மதிப்பு
(Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு
(Appropriation of the surplus product), முரண்பாடுகள் (contradictions)
பற்றிய படைப்புகளில் ஆழ்ந்து மூழ்கி, இந்திய சமூகத்தில், தமிழ்நாட்டில், அவற்றின் பின்னணியில் உள்ள வித்தியாசமான தனித்துவ கூறுகளை அடையாளம் கண்டேன். அவற்றை மார்க்சிய லெனினிய முகாம்களில் இருந்தவர்களோடு விவாதிக்க விரும்பி கட்டுரைகளும் வெளியிட்டேன். இடையில் 'மக்கள் யுத்தம்' பிரிவின் வெளியீடான 'வர்க்கப் போராட்டத்தின் கேந்திரமான கண்ணி' என்ற அவர்களின் கொள்கை விளக்கப் புத்தகம் பேரா.கோச்சடை மூலம் எனக்குக் கிடைத்தது. மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளின் அடிப்படையில் அப்புத்தகம் தொடர்பான விமர்சனத்தை எழுதி அவரிடம் கொடுத்தேன். இன்று வரை எந்த பதிலும் இல்லை…….. உண்மையில் முனைவர் பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள் பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பானப் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
பொதுவுடமை முகாம்களில் இது போன்ற உணர்ச்சிபூர்வ இரைச்சல் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பதையும் எனது கீழ்வரும் அனுபவம் உணர்த்தியது.
1970களின் பிற்பகுதியில் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தில் நான் பங்களிப்பு வழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. அப்போது விசாகப்பட்டிணத்தில், 'இந்திய நாத்தீக மையம்'
(Atheist Society of India) சார்பில் 'அகில இந்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணிக்கு அழைப்பு வந்தது. அவர் என்னை அம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். என்னுடன் குப்பு.வீரமணி, தஞ்சை இரத்தினகிரியின் தம்பியும், தற்போது தஞ்சை 'கிங் பொறியியல் கல்லூரி' நிர்வாக அதிகாரியுமான அண்ணாமலையும் உடன் வந்தனர். விசாகப்பட்டிணத்தில் இருந்த பல்கலைக்கழக அரங்கில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அரங்கில் பல்வேறு நக்சலைட் குழுக்களின் ஆதரவாளர்களாயிருந்த மாணவர்களும், கல்லூரி ஆசிரியர்களும் அரங்கு முழுவதும் நிரம்பியிருந்தனர். மார்க்சியம் லெனினியம் தொடர்பான மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளை விளக்கி, அந்த பின்னணியில் பெரியாரின் நிலைப்பாடுகளை விளக்கினேன். எனது உரை முடிந்து, அடுத்து இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளின் ஊடேயும், உணவு இடைவேளைகளிலும், இரவு படுக்கப் போகும் வரையும், காலையில் விழித்து எழுந்து, காலை உணவை முடித்தது முதல், கடைசியாக விசாகப்பட்டிணத்தில் இரயிலில் ஏறும் வரை, என்னை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு, அந்த நக்சலைட் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு, பதில் பெறுவதிலும், என்னிடம் கையெழுத்து பெறுவதிலும்
(Autograph), என்னை முழ்கடித்தனர். ஆக தமிழ்நாட்டு பொதுவுடமை முகாம்கள் உணர்ச்சி பூர்வ இரைச்சலில் கண்டுகொள்ளாமல் விட்ட 'சிக்னல்கள்', ஆந்திராவில் அரிய பொக்கிசமாகக் கருதப்பட்டதை உணர்ந்தேன். கூடுதலாக 'முக்கியத்துவம்' என்பது, ஏமாந்தால், நம்மை போதையில் ஆழ்த்திவிடும் என்பதையும் உணர்ந்தேன். எனவே தப்பித்தவறியும் அதில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன். 'முக்கியத்துவ'ப் போதை என்பது 'திராவிட மனநோயாளியாக' வளர்வதற்கான நுழைவு வாயில் என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டில் அந்த போதையாளர்களுக்கு எனது சமூக வட்டத்தில் இடம் அளிக்காமல் வாழ்வதும் அந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தான்.’
அதன்பின் இசை ஆய்வில் முழுமையாக நான் ஈடுபடத் தொடங்கினேன்.
1990களின் பிற்பகுதியில், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், எனது நேரத்தின் பெரும் பகுதியை, தரமணியில் இருந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி நூலகத்தில் செலவிட்டேன். அங்கு எனக்கு உதவிய முனைவர்.வளர்மதியிடம், இசைக்கல்வெட்டுகள் தொடர்பாக எனது ஆய்விற்கு கல்வெட்டு துறை அறிஞர் ஒருவரினை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.
அவர் அந்நூலகத்திற்கு அருகில் இருந்த தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர்.பத்மாவதிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பத்மாவதி தமது முனைவர் பட்ட ஆய்வு என்று சொல்லி, (எனது நினைவின்படி) 'சோழர் கால அரசும் மதமும்' என்ற நூலை (அல்லது ஆய்வேட்டினை) கொடுத்தார்.
பின் வீட்டிற்கு சென்று அந்நூலை முழுவதும் ஆழ்ந்து படித்தேன். மார்க்சிய பார்வையில் எழுதப்பட்ட அந்நூலில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் மேற்கோள்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அந்த இருவரின் மார்க்சிய பார்வையில் உள்ள குறைபாடுகளை எல்லாம் உரிய சான்றுகளின் அடிப்படையில் குறிப்புகள் தயார் செய்து, ஆவலுடன் அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி, மறுமுறை பத்மாவதியைச் சந்தித்த போது, அதனைத் தெரிவித்தேன். அதற்கு அவர் தமது முனைவர் பட்டமானது, மார்க்சிய லெனினிய புலமையாளரான தமது கணவரின் உதவியில் உருவானது, என்று சொல்லி அந்த விவாதத்தினைத் தவிர்த்து, ஆனால் இசைக்கல்வெட்டுகள் தொடர்பான எனது ஆய்வுக்கு அரிய உதவிகள் புரிந்தார். நான் எதிர்பார்த்த விவாதம் நடைபெறவில்லை.
அதன்பின், 1990களின் பிற்பகுதியில், எதிர்பாராத வகையில், சென்னைப்பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சிவத்தம்பியை நான் எவ்வாறு சந்திக்க நேர்ந்தது? என்பதை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.
‘பல வருடங்களுக்கு முன், என் மனைவி
"பேரா.சிவத்தம்பி என்பவர் போனில் பேசினார். தான் வயதானவர் என்றும், சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள என்னை அய்யா சந்திக்க விரும்புகிறேன் என்று சொன்னதாகவும்” என்னிடம் சொன்னார். மறுநாள் காலை அவரைச் சந்தித்தேன். ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குழந்தைகள் இசை பயில்வதற்கான பாடத்திட்டத்தை சுவிட்சர்லந்தில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் உருவாக்கி எடுத்து வந்திருப்பதாகவும், சென்னைப் பல்கலைக்கழக இசைத் துறையில் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, என்னைப் பார்க்க விரும்பியதாகவும், எனது ஆலோசனை வேண்டும் என்றும் சொன்னார். அப்பாடத்திட்டத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் தமிழிசையியல் இன்றி, தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக இசைப் பாடத்திட்ட அடிப்படையில் உருவாக்கி இருந்தார்கள். அதைச் சுட்டிக் காட்டிய போது, அதை அவர் விரும்பாமல், நியாயப்படுத்தும் வகையில் பேசினார். பின் விபுலானந்த அடிகள் 'யாழ் நூல்' சுருதிக் கணக்கீடுகளில் இருந்த குறைபாடுகள் பற்றி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில் வெளிவந்திருந்த எனது கட்டுரையின் நகலை அவரிடம் கொடுத்தேன். அதன்பின் அந்த பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைக்கவும் இல்லை.’ விபுலானந்த அடிகளின் தமிழ் இசை தொடர்பான ஆய்வுகளிலும், அவரின் கணக்கீடுகளிலும் இருந்த குறைகளை, எனது ஆய்வுகள் மூலமாக வெளிவந்து சுட்டிக்காட்டிய ஆய்வுக்கட்டுரையானது, அவரின் வெறுப்பை ஈட்டியதா? அந்த போக்கு செல்வாக்கில் உள்ள நாட்டில், அறிவியல் வளருமா? 'அந்த' சீரழிவுப் போக்கில், 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள் சிக்கினால், தமிழ் ஆராய்ச்சி வளருமா? என்று அறிவுபூர்வமாக விவாதிப்பது, இனியும் தாமதமாகலாமா?
1980களின் பிற்பகுதியில் இலங்கையின் தலித் எழுத்தாளர் டேனியல் என்பவர் அ.மார்க்ஸின் வீட்டில் தங்கி, அங்கேயே மரணமடைந்தார். அவரை நான் சந்தித்ததில்லை. இலங்கையில் அவர் கைலாசபதியைப் பார்க்க கைலாசபதியின் வீட்டிற்கு சென்ற நேரங்களில் எல்லாம், வீட்டுக்குள் அனுமதிக்காமல், திண்ணையிலேயே உட்கார வைத்து அனுப்பியிருக்கிறார். அதனை டேனியல் தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
1980களின் பிற்பகுதியில், நான் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஆண்டன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன், மாத்தையா போன்ற இன்னும் பலருடன் நெருக்கமாக பணியாற்றிய காலங்களில், அ.மார்க்ஸ் கீழ்வரும் தகவலை என்னிடம் தெரிவித்தார்.
அந்த காலக்கட்டத்தில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சி கே.கே.நகரில் தங்கியிருந்தார்கள். அப்போது அ.மார்க்ஸ் உதவியுடன் சிவத்தம்பி அவர்களைப் போய் பார்த்திருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் சிவத்தம்பியைப் பற்றிய கீழ்வரும் தகவல் எனக்கு தெரியாது. 'அந்த' அளவுக்கு சிவத்தம்பியை தமிழ்நாட்டில் முன்னிறுத்தியவர்கள் எல்லாம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீழ்வரும் தகவலை இருட்டில் தள்ளி, 'கைலாசபதி, சிவத்தம்பி' பிம்ப வழிபாட்டினை ஊக்குவித்த தமிழ்ச்சமூக குற்றவாளிகளா? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.
மார்க்சிய கூடாரங்களில் இருந்த பிம்ப வழிபாடே, தமிழ்நாட்டில் மார்க்சிய புலமை வறட்சிக்கு காரணமானதா? என்பது தொடர்பாக, கீழ்வரும் பதிவினை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.
‘தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில், எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும், வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த சமஸ்கிருத நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும், வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.
மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்.’
(‘'அறிவுபூர்வ விவாத வறட்சியில்'; 'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html )
பொதுவாக பிம்பங்களின் வழிபாட்டில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கசப்பான உண்மைகள் எல்லாம் இருளில் சிக்கும் அபாயம் இருக்கிறது; பொதுவாழ்வு வியாபாரத்தில் தமிழ்நாடானது சீரழியும் வாய்ப்பினையும் கூட்டி.
ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினைத் தூண்டும் வகையில், 1974-இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. காவல்துறை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர்கள் காயமுற்றனர்.
‘தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில், எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும், வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த சமஸ்கிருத நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும், வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.
மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்.’
(‘'அறிவுபூர்வ விவாத வறட்சியில்'; 'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html )
பொதுவாக பிம்பங்களின் வழிபாட்டில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கசப்பான உண்மைகள் எல்லாம் இருளில் சிக்கும் அபாயம் இருக்கிறது; பொதுவாழ்வு வியாபாரத்தில் தமிழ்நாடானது சீரழியும் வாய்ப்பினையும் கூட்டி.
ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினைத் தூண்டும் வகையில், 1974-இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. காவல்துறை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர்கள் காயமுற்றனர்.
The sad event of January 10th,
1974 in which nine Tamils lost their lives was one of the trend setting episodes
which generated the Eelam Campaign of late 1970s among Tamil militant youth.; https://sangam.org/jaffna-international-tamil-research-conference-1974/
The 1974 Tamil conference
incident occurred during the fourth World Tamil Research Conference, which was
held in the city of Jaffna between January 3 and 9, 1974. Sri Lankan Police
disrupted the meeting with force, killing nine people, and resulting in
substantial civilian property damage and more than 50 civilians sustaining
severe injuries. This incident was the precursor to the revenge killing of the
SLFP mayor of Jaffna, Alfred Duraiappah by the LTTE which began the era of
Tamil militancy amongst the youth leading up to the Sri Lankan civil war,; https://en.wikipedia.org/wiki/1974_Tamil_conference_incident
தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட அம்மாநாட்டில்,கைலாசபதியும், சிவத்தம்பியும் கலந்து கொள்ளவில்லை.
Among these 91 names, the
names of K.Sivathamby and that of his friend K. Kailasapathy are noticeably
missing. Why I pose this query? These were the names of scholars who
participated and presented their research studies in the 4th International Tamil
Research Conference, held in Jaffna, in January 1974. The then Sirimavo
Bandaranaike led Cabinet (in which the Communist Party was also represented)
was strongly opposed to holding this Tamil research conference in Jaffna. To
show their alliance to Sirimavo Bandaranaike’s racist regime, Kailasapathy and
Sivathamby boycotted this Tamil Conference! For Sivathamby, his love of Tamil
took a lower ranking below that of his self promotion skills with those who
held power. Those who registered and
participated at this Conference were subjected to numerous harassments.;
https://www.sangam.org/2011/08/Professor_Sivathamby.php?uid=4425&print=true
இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா எதிர்த்த, 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணித்த 'வாழ்வியல் புத்திசாலியாக வாழ்ந்த' அவர், பின் விடுதலைப் புலி பிரபாகரன் கை ஓங்கிய காலத்தில், திருச்சி கே.கே.நகரில் வாழ்ந்த பிரபாகரனின் பெற்றோர்களை தரிசித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக 'ஞானஸ்நானம்' பெற்றார். பின் முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின் தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி தமக்கு ஒத்து வராத உலகத்தமிழ் மாநாட்டு அமைப்பினை செல்லாக்காசாக்கி, புதிய அமைப்பின் மூலம், 2010
சூனில் கோவையில் செம்மொழி மாநாடு நடத்த துணை போனார். பின் 2010 டிசம்பரில்இல் கொலும்பில் நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை, தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர் எதிர்த்தார். (http://www.newindianexpress.com/world/2010/sep/04/sivathamby-opposes-colombo-tamil-meet-183904.html
)
சிவத்தம்பி தமது வாழ்நாளில் தமிழுக்காகவோ, தமிழர்களுக்காகவோ எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல், 1974
யாழ்ப்பாண உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைக் கெடுக்க சிறிமா பாண்டாரநாயகவிற்கு துணை நின்றவர். ஆனாலும் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்டு அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக பயணித்தவர் அவர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அடுத்து தலைமைப் பொறியாளர் ஆக இருந்த வாய்ப்பினை இழந்து, நெருக்கடி காலத்தில் கட்டாயப் பாணி ஒய்வு தண்டனைக்கு இலக்காகி, வருமானமின்றி வறுமையில் உழன்ற காலத்திலும், 1983
முதல் சாகும் வரை ஈழ விடுதலைக்காகவும், தமிழுக்காகவும் நடந்த சிறைவாசம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் தமிழ் இசை அறிஞர் ப.தண்டபாணி. அவருடன் எனது அனுபவங்களை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.
தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் சிவத்தம்பியை முன்மாதிரியாகக் கொண்டு, சுயலாப வலைப்பின்னல்களைப் பேணி பாதுகாத்து வாழும் வரை, தன்மானம் உள்ள தமிழ் அறிஞர்கள் எல்லாம் தண்டபாணிகளாக வாழ்வது நீடிக்கும்.
ஆனால் இது டிஜிட்டல் யுகம். இருளில் இருந்த உண்மைகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும் காலம் இது. இளம் தமிழ்ப்புலமையாளர்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாகும் முன், அத்தகையோர் எல்லாம் விழித்து, வெளிப்படைத்தன்மையையும் (Transparency),
பொறுப்பேற்பையும்
(Accountability) தமிழ் அறிவுப்புலத்தில் ஏற்படுத்தினால் தான், இனி தப்பிக்க முடியும்.
அதனை வேகப்படுத்தும் நோக்கில், இளம் தமிழ்ப்புலமையாளர்கள் பார்வைக்கு, கீழ்வரும் பிரச்சினைகளைக் கொண்டு சென்று, தீர்வு நோக்கிய பயணத்தில் நான் முன்னேறி வருகிறேன்.
தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய புதிய ஆய்வுகள்
தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய புதிய ஆய்வுகள்
(https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html
)
அந்த முயற்சியில் பொறியியல் கல்லூரி மாணவர்களில், தமிழில் ஆர்வமுள்ளவர்களை எல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களை துணிச்சலுடன் படிக்குமாறும் தூண்டி வருகிறேன். தமக்குள்ள தமிழறிவு போதுமா? என்று அஞ்சாமல் ஆர்வமுடன் உழைத்தால், 'அந்த' புதையல் வேட்டையின் ஊடே, 'அந்த' அறிவு எவ்வாறு வளரும்? என்பதையும், எனது அனுபவங்கள் மூலமாக விளக்கியுள்ளேன். கீழ்வரும் அந்த கட்டுரையினை அவர்கள் பார்வைக்கு முன்வைத்து, நேரில் சந்தித்து, அவை தொடர்பான ஐயங்களையும் களையும் முயற்சியிலும் இறங்கியுள்ளேன்.
'பழந்தமிழ் இலக்கியங்களில் புதையலைத் தேடுவோம்'
http://musicresearchlibrary.net/omeka/items/show/2444
Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)
‘The Origins of Tamil Classical Music’ Organized by the Centre for Singapore Tamil Culture
Part 1 of 2
https://youtu.be/7lGtWcwS7Ww
https://youtu.be/7lGtWcwS7Ww
Part 2 of 2
https://youtu.be/PPqP_giPB88
https://youtu.be/PPqP_giPB88
No comments:
Post a Comment