தமிழக பா.ஜ.க செயல்பாடுகள் 2021 தேர்தலில் ‘பூமராங்’ ஆகுமா? (2)
தமிழ்நாட்டின்
2021 தேர்தலானது, 1952 தேர்தலை நோக்கி பயணிக்கிறதா?
தமிழ்நாட்டில்
'பெரியார்' ஈ.வெ.ரா,
அண்ணா மீது மதிப்பு கொண்டவர்களில்,
பெரும்பாலோர் இந்துமத பக்திமான்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டில்
அரசியல் நீக்கம் (Depoliticize) தொடரும் வரை, கொள்கைகளை விட,
தலைவர்களுக்கே செல்வாக்கு அதிகமாகும்.
அது
தெரியாமல், ஈ.வெ.ரா
அண்ணா போன்ற தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவு செய்து கண்டிக்கும் போக்கில் தமிழக பா.ஜ.க.
பயணிக்கும் வரையில், 'நோட்டா'வுடனும், 'டெபாசீட்டுடனும்' போட்டி போடும் நிலை தான் தொடரும்.
சமூகவியலில்
உட்குழு(ingroup)வில் இருப்பவர்கள் எல்லாம்,
ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றும் ‘குழு மனநிலையில்’ பயணிப்பவர்கள் ஆவார்கள்.
வெளிக்குழுவில்
உள்ளவர்கள் உட்குழுவில் இருப்பவர்களை அவமதிப்பதை எதிர்ப்பார்கள்.
பிரிவினை
கோரிக்கைக்காக ஈ.வெ.ராவை
இழிவுபடுத்திக் கண்டிக்கும் எச்.ராஜாவும் அவரின்
ஆதரவாளர்களும், இந்திய விடுதலைக்கும் முன், தமது ஆருயிர் நண்பர்
ஈ.வெ.ராவின் திராவிட
நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரித்த, மணியம்மை திருமணம் தொடர்பாக ஈ.வெ.ராவிற்கு
ஆலோசனை வழங்கிய ராஜாஜியை, ஈ.வெ.ராவைக்
கண்டித்த 'பாணியில்' ராஜாஜியை இதுவரைக் கண்டித்தார்களா? இனிமேலாவது கண்டிப்பார்களா? (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; https://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html
)
தமக்கும்
தமது குடும்பத்துக்கும் ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதி என்று பயணிப்பவர்கள் எல்லாம்,
தனிமனித நேர்மை வழிகாட்டியில் (individual ethical compass) இருந்து தடம் புரண்டவர்கள்
ஆவார்கள்.
பொது
அரங்கில் பாராட்டுவதற்கும் கண்டிப்பதற்கும் தமக்கு பிடித்த தலைவர்களுக்கு ஒரு அளவு
கோல், தமக்கு பிடிக்காத தலைவர்களுக்கு வேறு அளவு கோல், என்று பயணிப்பவர்கள் எல்லாம்
சமூக நேர்மை வழிகாட்டியில் (social ethical compass) இருந்து தடம் புரண்டவர்கள் ஆவார்கள்.
1967இல்
நடந்த ஆட்சி மாற்றத்தில், சமூக நேர்மை வழிகாட்டியை 'அறிவியல் ஊழல்' மூலமாக சீர் குலைத்து,
தனிமனித நேர்மை வழிகாட்டியில் இருந்து தடம் புரண்டவர்களே ஆட்சியின் அரவணைப்பில் வளர
முடியும், என்பதானது எழுதப்படாத விதியானது.
மேற்குறிப்பிட்ட சமூக நோயில் அனைத்து கட்சிகளும் சிக்கியதன் விளைவாக, வெளியில் எலியும் பூனையுமாக காட்சி தந்த எதிரெதிர் முகாம்களின் தலைவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தின் அறிவாலயத்திலும், சசிகலா நடராஜன் குடும்பத்தில் முள்ளி வாய்க்கால் முற்றத்திலும் சங்கமம் ஆக முடிந்தது. அந்த சங்கமமானது பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் 'திருவாசகம் சிம்பொனி'யிலும் நீடித்தது. (குறிப்பு கீழே).
தேவர்
ஜெயந்திக்கு பா.ஜ.க
தலைவர்கள் சென்ற போது, முதலில் மரியாதையை எச்.ராஜா ஏற்றுக்கொண்டதாகவும்,
அதன் பின்னர் (திராவிடக் கட்சியில் இருந்து பா.ஜ.கவிற்கு
சென்ற) மாநிலப் பொறுப்பாளரின் முயற்சியால் மாநிலத்தலைவர் எல்.முருகனுக்கும் மரியாதை
செய்ததாகவும், படித்த பிராமணரல்லாதோர் மத்தியில் ஒரு தகவல் வலம்
வந்து கொண்டிருக்கிறது.
தமிழக
பா.ஜ.கவில் முன்பு
மாநிலத்தலைவராக இருந்த தலித், பின்னர் பா.ஜ.கவில்
இருந்து வெளியேறினார். அதன்பின் தமக்கு பா.ஜ.கவில்
நிகழ்ந்த அவமானங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அவை உண்மையா? பொய்யா?
மிகைப்படுத்தலா? என்ற கேள்விகளுக்கு விடைகள்
கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழக பா.ஜ.க
ஒரு 'பிராமண சார்புக் கட்சியே' என்று ஏற்கனவே இருந்த பிம்பம் இன்னும் வலுவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தற்போது
தமிழக பா.ஜ.க
தலைவராக இருக்கும் எல்.முருகன் எந்த
அளவுக்கு தாம் வகிக்கும் பதவிக்கு
உரிய அதிகாரத்துடனும் உரிய மரியாதையுடனும் செயல்பட
மூத்த தலைவர்களால் அனுமதிக்கப்படுகிறார்? என்ற யோக்கியதையானது, அவரது
பதவி காலம் முடியும் போது தான் தெரிய
வரும்.
மு.க.அழகிரி, சசிகலா,
ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட
செல்வாக்கு பீடங்களுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்லுறவில் இருந்து கொண்டு, திராவிட ஊழல்களையும் அராஜகத்தையும் தமிழக பா.ஜ.க எதிர்ப்பதானது கேலிக்கூத்தாகாதா?
'கந்த
சஷ்டி கவசம்' சர்ச்சை தொடர்பாக, முதல் முறையாக, இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் ஆத்திகத் தமிழர்களிடம் வெளிப்பட்ட ஆதரவினை புத்திசாலித்தனமாகக் கையாண்டு, 'வெளிக்குழு' என்ற சிறையில் இருந்து
விடுதலையாக, தமிழக பா.ஜ.க
வி'ற்கு அரிய வாய்ப்பு
கிடைத்தது. அதைக் கெடுத்துக் கொண்டு, தமிழக பா.ஜ.க
எவ்வாறு அரசியல் தற்கொலைப் பாதையில் பயணிக்கிறது? (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_11.html)
மோடியின்
ஊழல் ஒழிப்பு வடிவேல் பாணி காமெடியாகி, மோடி
பிரதமரான பின்னர், தமிழ்நாட்டில் வாக்குக்கான பணமானது பல மடங்கு அதிகரித்ததாலும்,
ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான
கோபத்தில் சசிகலா குவியத்தில் மோடி சிக்கியதாலும், தமிழக
பா.ஜ.கவை நோட்டாக்கட்சியாக்கிய
சமூக விசைகள் (social forces) எந்த அளவுக்கு மாறியுள்ளன?
படித்த, கட்சி சார்பற்ற பிராமணரல்லோதாரிடமும், கிராமப்புற பின்னணியுள்ள கல்லூரி மாணவர்களிடமும் 2019 தேர்தலில் வெளிப்பட்ட மோடி எதிர்ப்பு அலையானது,
அதற்குப் பின் தமிழ்நாட்டில் மோடி
எதிர்ப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மூலமாக மோடி எதிர்ப்பு அலையானது
உள்மறையாக (latent) வளர்ந்துள்ளதா? அந்த போராட்டங்கள் மூலமாக
மோடி எதிர்ப்பு கட்சிகள் அம்பலமாகி பலகீனமானார்களா? பா.ஜ.கவிற்கு
போனசாக ஸ்டாலின் உதயநிதி தலைமையில் தி.மு.கவின்
வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது எந்த அளவுக்கு வேகமாக
சீர்குலைந்து வருகிறது? சசிகலாவின் விடுதலையானது அ.இ.அ.தி.மு.கவை எந்த அளவுக்கு பலகீனமாக்கும்? என்பவற்றின் தொகுவிளைவினைப் (resultant) பொறுத்தே, அ.இ.அ.தி.மு.க
ஆட்சியைப் பிடிக்க உள்ள வாய்ப்புகளுக்கு தமிழக
பா.ஜ.க வலிவு
சேர்க்குமா? கெடுதலாகுமா? என்பது தெளிவாகும்.
உதயநிதி
திருச்சியில் கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப பரிவட்டம்
கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு
மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. திருவாரூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், அவரை கைது கைது
செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில
மணி நேரத்துக்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையில், உதயநிதி கைதை கண்டித்து, தமிழகத்தின்
பல பகுதிகளில், தி.மு.க.,வினர் மறியலில் (கொரொனா காலத்தில்?)ஈடுபட்டனர். (https://www.dinamalar.com/news_detail.asp?id=2656057)
எனது கணிப்பின்படி, வரும் 2021 தேர்தலில் உதயநிதி தி.மு.கவின் கதையை முடித்து விடுவார். .மு.க.அழகரி, சசிகலா சார்பில் பயணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கு அதனால் பலன் கிடைக்காது.
எம்.ஜி.ஆர் இருந்தது வரையில் முதல்வராக முடியாத கருணாநிதி, எம்.ஜி.ஆர்
மறைந்த பின் 1996லும், 2006லும் முதல்வரானதற்கு சசிகலா குடும்ப அரசியல் மீது மக்களுக்கு
இருந்த கோபமானது முக்கிய காரணமாகும். சசிகலா குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த
கோபமானது, கருணாநிதி குடும்ப அரசியல் மீது இருந்த வெறுப்பை விட அதிகமானதே காரணமாகும்.
மு.க.அழகிரி என்றாலே, மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் எரிந்து பத்திரிக்கையாளர்கள்
அநியாயமாக இறந்ததே மக்களுக்கு ஞாபகம் வரும்.தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்புகளுக்கு
எதிரான திசையில் 2014 முதல் தமிழக பா.ஜ.க பயணிப்பதானது தமிழ்நாட்டின் துரதிஷ்டமே ஆகும்.
2014 முதல் மு.க.அழகிரிக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமாகப் பயணித்துக்
கொண்டு, தேர்தலில் வாக்குக்கு பணம் பல மடங்கு அதிகரித்து, 2ஜி குற்றவாளிகள் விடுதலையான
நிலையில், ஆர்.கே.நகரில் நோட்டாவிடம் ஏன் தோற்றோம்? 2019 தேர்தலில் வாக்குச்சாவடிகளில்
பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரியும், சட்டசபை இடைத்தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஏன்
வாக்களித்தார்கள்? என்று பாடம் கற்று பயணிக்காத வரையில், தமிழக பா.ஜ.கவை கடவுள் வந்தாலும்
காப்பாற்ற முடியாது.
1952 தேர்தலை
நோக்கி, தமிழ்நாட்டின் 2021 தேர்தல் பயணிக்கிறது.
இந்திய
விடுதலைக்குப்பின் நடந்த 1952 தேர்தலில் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை
ஆதரிப்பதாக ஈ.வெ.ராவிடம்
எழுதிக்கொடுத்து அவரின் ஆதரவைப் பெற்ற கட்சிகளின் வெற்றியில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அது
1944 தொடங்கிய பாதகமான சமூகமடைமாற்றத்தின் விளைவாகும்.
தமிழ்நாட்டின்
தனித்துவமான (unique) தமிழ் அடையாளச்
சிக்கலானது தீர்ந்து இந்திய அடையாளத்துக்கு இணக்கமான மென்சக்தியானது (soft power) எம்,ஜி,ஆர்
மற்றும் ஜெயலலிதா ஆட்சிகளில் வெளிப்பட்டது. அதனை சீர்குலைத்து, தமது
ஊழல் பாதுகாப்பு கவசமாக, கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் அரசியல் செயல்பாடானது, பிரிவினை சக்திகளை தமது கட்டுப்பாட்டில் வளர்க்கும்
திசையில் பயணித்தது.
ஜெயலலிதாவின்
மரணம் மூலமாக கிடைத்த அரிய வாய்ப்பினை, தமிழக
பா.ஜ.கவின் தவறான
ஆலோசனையில் மோடி அரசானது கெடுத்துக்
கொண்டு அரசியல் தற்கொலைப்போக்கில் பயணித்ததன் விளைவே, ஆர்.கே.நகர்
இடைத்தேர்தலில் நோட்டாக்கட்சியாகி, 2019 தேர்தலில் தி.மு.க
அணி எதிர்பாராத வெற்றி பெற காரணமானது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)
திராவிட
அரசியல் முன்னெடுத்த கொள்கைகள் அறிவுபூர்வமாக தோற்றுள்ள நிலையிலும் ‘என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, ஆதாய
அரசியல் வலிமையில் தி.மு.கவை
முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து கட்சிகளும் பயணிக்கின்றன. (https://tamilsdirection.blogspot.com/2020/08/engine.html),
மோடியின்
ஊழல் ஒழிப்பு பலகீனம் காரணமாக, ஆதாய பண அரசியலில்
வலிமையுடன் நீடிப்பதால், 2021 தேர்தலானது 1952 திசை நோக்கி பயணிக்கிறது.
ஆனால் அதிலும் ஒரு வேறுபாடு இருக்கிறது.
1952 தேர்தலுக்குப் பின், பிரிவினைக் கட்சிகள் நோஞ்சானாகி, ஆதாய அரசியல் வலிமையில்
மட்டுமே பயணிக்க நேரிட்டது.
‘என்ஜீன்
நின்று போனாலும் ஓடும் கார் போலவே, ஆதாய
அரசியலில் பயணிக்கும் கருணாநிதி, சசிகலா போன்ற குடும்ப அரசியல் கட்சிகளின் வலிமைகள் எல்லாம், மோடி அரசின் ஊழல்
ஒழிப்பானது வேகமெடுத்தால், ஊசியால் குத்தப்பட்ட பலூன்கள் போல சுருங்கி விடும்.
பா.ஜ.கவிலும் ஆட்சியிலும்
உள்ள கறுப்பு ஆடுகளின் முயற்சியால் அது தாமதமாகும் வாய்ப்புகளும்
இருக்கின்றன.
தாமதமானாலும், 1952லிருந்து 1967 நோக்கி பயணித்த திசைக்கு எதிரான திசையிலேயே இனி தமிழ்நாடு பயணிக்கும். ஆனால் உரிய காலத்தில், தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளச் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், தமிழ்நாடானது சமூக காங்கிரின் நோயில் மீட்சிக்கு வழியின்றி சிக்குவதையும் தவிர்க்க முடியாது. (‘மோடியின் ஆட்சியில் இந்தியாவின் சமூக காங்கிரீனாக’ மாறி வரும் தமிழ்நாடு’; https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)
அதன்பின் மாநிலக் குடும்ப கட்சியின் அல்லது நேரடியாக மத்திய அரசின் சர்வாதிகாரத்தில் முணகக்கூட வழியின்றி சிக்கும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது. அதன் முன்னோட்ட பரிசோதனையாகவே,
முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சையும் மரணமும் வெளிப்பட்டது
1991 முதல் கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட போக்கானது, தமிழ்நாட்டின் சிவில் சமூகத்தை கேலிப்பொருளாக்கி வருகிறது.
சிவில் சமூகம்
(Civil society) என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், சாதிகள், மதங்கள், மனித உரிமை, பெண் உரிமை போன்ற சமூகப் பிரிவுகளின் அடிப்படைகளிலான அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்ற இன்னும் பல அமைப்புகளை.க் கொண்டதாகும்.
(Civil society includes charities, development NGOs, community groups, women's
organizations, faith-based organizations, professional associations, trade
unions, social movements, coalitions and advocacy groups.; https://www.who.int/social_determinants/themes/civilsociety/en/
)
தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள சிவில் சமூகமானது கோழையாக இருந்ததாலேயே, மேற்குறிப்பிட்ட தமிழக முதல்வரின் மர்மமான மருத்துவ சிகிச்சையானது பல மாதங்கள் நடந்து, மர்மமான மரணத்தில் முடிந்தது. சம்பிரதாயங்களுக்கும் பொது ஒழுக்கத்திற்கும் கேடான வகையில் இறுதிச்சடங்கும் நடந்தது.
அவ்வாறு கோழையாக தமிழ்நாட்டின் சிவில் சமூகம் இனியும் நீடித்தால், அதுவே சர்வாதிகார ஆட்சியை ஏதாவது ஒரு வழியில் வரவழைத்து விடும். அந்த சமூக இயற்கையின் போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பது கடினமே. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)
தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள சிவில் சமூகமானது கோழையாக இருந்ததாலேயே, மேற்குறிப்பிட்ட தமிழக முதல்வரின் மர்மமான மருத்துவ சிகிச்சையானது பல மாதங்கள் நடந்து, மர்மமான மரணத்தில் முடிந்தது. சம்பிரதாயங்களுக்கும் பொது ஒழுக்கத்திற்கும் கேடான வகையில் இறுதிச்சடங்கும் நடந்தது.
அவ்வாறு கோழையாக தமிழ்நாட்டின் சிவில் சமூகம் இனியும் நீடித்தால், அதுவே சர்வாதிகார ஆட்சியை ஏதாவது ஒரு வழியில் வரவழைத்து விடும். அந்த சமூக இயற்கையின் போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பது கடினமே. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)
இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின் நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின் உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும். (‘தமிழக பா.ஜ.க செயல்பாடுகள் 2021 தேர்தலில் ‘பூமராங்’ ஆகுமா? (1)’; https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_19.html)
குறிப்பு:
'திருவாகம் சிம்பொனி ஆரடோரியா' தோல்விக்கு, திருவாசக தமிழ் வரிகளே காரணமாகும்' என்ற வகையில், பின்னர்
கஸ்பார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
([Indo-Asian News Service, Chennai, March 20, 2006, 18 March 2006 News Update
Service, The Hindu and Deccan Chronicle 19 March 2006]. நேர்மையற்ற ஒரு
கிறித்துவ பாதிரியார் இந்து மத புனித நூலான
திருவாசகத்தை 'சிம்பொனி ஆரடோரியோ' என்ற உலகில் இல்லாத
இசை வடிவத்தில் வெளியிட்டதையும், பின் அதன் தோல்விக்கும்
திருவாசகத்தின் தமிழைக் குறை சொல்லியதையும், எந்த
'இந்துத்வா' ஆதரவாளரும், தமிழ் ஆதரவாளரும் கண்டித்திருக்கவில்லை என்றால்;
தமிழ்நாட்டில்
தமிழர்களின் 'அகம்' சீரழிந்துள்ளதற்கு, அது வலிமையான சான்று
ஆகாதா?
மேற்குறிப்பிட்ட
இணைப்புகளில் உள்ளபடி, விடுதலைப்புலி பிரபாகரனால் 'பணமும், செல்வாக்கும்' பெற்ற பாதிரியார் ஜெகத் கஸ்பார், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களின் பிரபலங்களுக்கும் நெருக்கமானவர்; பிரபாகரனைப் போலவே. அவர்களில் மனசாட்சியுள்ளவர்கள் எவராவது மெளனம் கலைத்து, ஏமாந்தது அவர்களா? கஸ்பாரா? என்று தெளிவுபடுத்துவார்களா? (https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html
)
No comments:
Post a Comment