Thursday, July 16, 2020


 'எழுத்தாணி' எழுப்பிய இக்கட்டான கேள்விகள்



அண்மையில் கீழ்வரும் குறும்படத்தினைப் பார்த்தேன்.
EZHUTHAANI – Tamil Award Winning Short Film(True Incidents)|; 

மேற்குறிப்பிட்ட குறும்படமானது, பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' நாவல் தொடர்பான சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாக நான் யூகிக்கிறேன். எனது யூகம் சரியானால், அந்த திரைப்படமானது எந்த அளவுக்கு அறிவு நேர்மையுடனும், சமூகப் பொறுப்புடனும் உருவாகியுள்ளது? என்ற விவாதத்திற்கான தேவை எழுந்துள்ளது.

அந்த நாவல் தொடர்பான, எனது கீழ்வரும் பதிவானது 2015 பிப்ரவரியில் வெளிவந்தது. இதுவரை நூற்றுக்கணக்கில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதனை வாசித்துள்ளார்கள்.

மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும், 'மாதொரு பாகன்'  எழுப்பும் கேள்விகள் 

மேற்குறிப்பிட்ட குறும்படத்தின் திரைக்கதையை எழுதியவர் எனது பதிவை படிக்கவில்லையென்றால், அந்த அளவுக்குத் தான் அவர் திரைக்கதையை உருவாக்க உழைத்தாரா? படித்திருந்தால், அதனைப் புறக்கணித்து, திரைக்கதையை எழுதினாரா? என்பது அவரின் மனசாட்சிக்கே வெளிச்சம்.

கீழ்வரும் சான்றின்படி,

1. பெருமாள் முருகனின் நாவலுக்கு கீழ்வரும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்திருக்கின்றன (received grants from the controversial Tata Foundation and India Foundation for the Arts headed by Anmol Vellani, both seen as affiliates of Ford Foundation)

2. தமக்கு சாதகமான தீர்ப்பு வந்தபின் அவர் மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார்.

3. அவர் தமது சொந்த ஊருக்கு அருகிலேயே பணியிடம் மாற்றம் பெற்றுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மையானால், 'எழுத்தாணி' எந்த அளவுக்கு உண்மையில் இருந்து தடம் புரண்டு உருவாகியுள்ளது? என்பதை, அந்த படத்தினைப் பார்த்து பாராட்டியவர்கள் எல்லாம், தத்தம் மனசாட்சிக்கு உட்பட்டு விடை காணலாம்.

கூடுதலாக, கீழ்வரும் கேள்விகளுக்கான விடைகளையும், அதே வழியில் காணலாம்.

ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டத்தில், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்க, தமிழ்நாட்டிலிருந்து அழுத்தம் கொடுத்தவர்கள்;

தமிழ்நாட்டில் கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பலரின் தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

கண்டனம் தெரிவிக்க, தமிழ்நாட்டிலிருந்து அழுத்தம் கொடுத்தார்களா?

வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் மனித உரிமை என்.ஜி.ஓக்களுக்கு உள்மறை ‘Subterranean’  செயல்திட்டம் இருப்பதே மேற்குறிப்பிட்ட பாரபட்ச மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளுக்கு காரணமா? உலக வர்த்தக வியாபார நலன்களுக்கு ஏதுவாக இந்திய மக்களை 'நுகர்வு கலாச்சாரத்தில்' சிக்க வைக்க, இந்திய பாரம்பரிய, பண்பாடுகளுக்கு இருக்கும் செல்வாக்கின் வலிமையையும், மேற்கத்திய சூழ்ச்சிகளுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையையும், குலைப்பதற்கு வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓக்கள் பங்களிப்பு வழங்கி வருகிறார்களா? ‘India Foundation for the Arts (IFA)’ என்ற என்.ஜி.ஓ அமைப்பு 'மாதொரு பாகன்' நாவல் எழுத பெருமாள் முருகனுக்கு ரூபாய் 3,28,500 நிதி உதவி செய்துள்ளது. 'மாதொரு பாகன்' நாவல் மூலம், பெருமாள் முருகன் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்படுவதற்குரிய குற்றவாளியானால், அந்த நாவல் எழுதத் தூண்டி, நிதிஉதவி செய்த அமைப்பும் குற்றவாளியாகாதா?

ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளில் உலக நாடுகளுக்கிடையே பாரபட்சமான செல்வாக்குகள் இருப்பதால், வலிமையான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள மனித உரிமைகளை மீறி செயல்பட்ட போது, அதைத் தடுக்கும் வலிமை ஐ.நாவுக்கு இருந்ததில்லை. அது ஐ.நா அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும். தத்தம் சுயநல அரசியலில், ஐ.நாவினை அவமதித்து வரும் அமெரிக்க அரசானது, சிறிய நாடான இலங்கை அரசை, ஐ.நா மூலம் 'முள்ளி வாய்க்கால் போர்க் குற்ற விசாரணை'என்று அச்சுறுத்தி வருவதும், ரஷ்யா, சீன அரசுகள் அதனை எதிர்த்து வருவதும், தமிழ்நாட்டு கம்னியூஸ்ட் கட்சிகள் ரஷ்ய அரசையும், சீன அரசையும் கண்டிக்காமல், ஈழ மக்களின் மனித உரிமை ஆதரவாளர்களாக வலம் வருவதும், 'மனித உரிமை கேலிக் கூத்துகள்' ஆகாதா
(‘ஈ.வெ.ரா மற்றும் லெனின் வழியில் ராஜபட்சேயுடன் சமரசமாவதே, ஈழத்தமிழர்களுக்குள்ள புத்திசாலித்தனமான ஒரே வழியாகும்’;
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_11.html)

எனவே இந்தியாவிலும், உலக அளவிலும் மனித உரிமைப் பாதுகாப்பில் உள்ள பாரபட்சத்தையும், வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில், இன்னொரு சமூகத்தில் அந்த வரை எல்லைகளைத் திணிப்பதானது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமைவதையும், தமிழ்நாட்டில் பொது அரங்கில், சமூகப் பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, 'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை' (?) ஆதரவாளர்களும் ஏற்படுத்தியுள்ளார்கள்.’ 

அதே நெருக்கடியை 'எழுத்தாணி' குறும்படமும் மற்றும் அக்குறும்படத்தினைப் பாராட்டியவர்களும் கூட்டியுள்ளார்கள்.

விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் வாசகர்களும், சமூக முதுகெலும்பு முறிந்து, 'நோகாமல் நொங்கு சாப்பிடும்' திசையில் பயணித்ததானது, எந்த சமூக செயல்நுட்ப அரங்கேற்றம் மூலமாக, முளை விட்டு, வளர்ந்து, இன்று மரணத்தின் வாயிலை நெருங்கியுள்ளது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அந்த வரிசையில் பெருமாள் முருகனும் அவரது வாசகர்களும் இடம் பெறுவார்களா? இல்லையா? என்பதும் விவாதத்திற்குரியதாகும்.

தாம் வாழ்கின்ற இடத்தில், பணியாற்றுகின்ற இடத்தில் வெளிப்படும் அநீதிகளை எதிர்க்கும் சமூக முதுகெலும்பின்றி பயணிப்பவர்களின் ரசனைக்குத் தீனி போடும் எழுத்தாளர்கள் எல்லாம், ஒருவகை போதை எழுத்து வித்தையில் சிறந்த எழுத்துக்கலைக் கூத்தாடிகளே ஆவார்கள். 

1970களில் அண்ணாமலைப்பல்கலைகழகத்தில் அநியாயமாக உயிரிழந்த மாணவர் உதயகுமார், திருச்சி கிளைவ் விடுதியில் காவல் துறையின் கண்மூடித்தனமான தாக்குததலால் கை கால்கள் முறிந்த மாணவர்கள் தொடங்கி, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் உள்ளிட்டு நடந்துள்ள அராஜகப் போக்குகளுக்கு உரிய சமூக எதிர்ப்பினை வெளிப்படுத்தாத எழுத்துக்கலைக் கூத்தாடிகளும் அவர்களின் ரசிகர்களும், அந்த குற்றவாளிகளின் கூட்டுப்பங்காளிகள் ஆவார்கள். 
(https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html)

Ford Foundation, Tata Foundation, India Foundation for the Arts  உள்ளிட்ட இன்னும் பல வெளிநாட்டு/உள்நாட்டு அமைப்புகளின் தொடர்பில் இருந்தவர்களில் எவராவது, மேற்குறிப்பிட்ட அராஜகப் போக்குக்களை அந்தந்த காலக்கட்டங்களில் கண்டித்தார்களா? அவ்வாறு கண்டிக்காமல் கூட்டுப்பங்களிகளாகப் பயணித்தவர்கள் யார்? என்று அடையாளம் கண்டு பாராட்ட வேண்டிய அல்லது கண்டித்து ஒதுக்க வேண்டிய‌ நேரமும் நெருங்கி விட்டது.

கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் எழுத்து மூலமாக ஆட்சியைப் பிடித்தவர்களின் பொதுவாழ்வு வியாபாரமானது, தற்போதுள்ள‌ மலட்டுத்தனமான ரசனையானது நீடிக்கும் வரையில் தான் நீடிக்கும். இன்று அந்த ரசனையில் மிதப்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 50 வயதைக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரிகளிடம் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. 
(https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே வளர்ந்து வரும் 'தனித்துவமான ரசனை இடைவெளி'யானது, அதற்கான முன்னறிவிப்பாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html)



Note: Also read;

‘From Western - centric Human Rights to Asian - centric Human rights - Did UN & CHRI function with religious bias?’ 
https://tamilsdirection.blogspot.com/2020/07/from-western-centric-humanrights-to.html    

No comments:

Post a Comment