‘கந்த சஷ்டி கவசம்’ மூலமாக,
தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு
தமிழ்நாடு இனி பலிகடா ஆகாது
‘கந்த சஷ்டி
கவசம்’ மூலமாக 'பெரியார்'
ஆதரவாளர்களுக்கு 'சமூகத் தளவிளைவு’ (Social Polarization)
நெருக்கடி
உருவாகியிருப்பதை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
ஆனால் நான்
எதிர்பார்க்காத வகையில், இந்துத்வா எதிர்ப்பாளர்களிடையே தமிழ்
உணர்வின் அடிப்படையில் ஒர் அதிசய ‘சமூகத் தளவிளைவு' (Social Polarization) உருவாகி
வருகிறது. அதனால் இந்துத்வா ஆதரவு முகாம்களில் பொதுவாழ்வு வியாபாரிகளாகப்
பயணித்தவர்களின் ஆட்டமும் அடங்கப் போகிறது. உரிய
திருத்தங்கள் இன்றி இனியும் 'பெரியார்' கட்சிகள் பயணித்தால்,
ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும்
இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்
'இந்து கடவுள்களை
இழிவு செய்பவர்களின் சிந்தனையில் குறைபாடு இருக்கிறது.' என்று
தமிழர் சமயத்தைக் காக்கும் ஆன்மீக செயற்பாட்டாளர் இறைநெறி இமயவன் என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.
கந்த சஷ்டி
கவசத்தை கொச்சைப்படுத்தியதோடு மட்டுமில்லாமல்
மதங்களுக்கிடையே நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த
கருப்பர் கூட்டத்தின் செயல்களை கண்டித்து முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்துத்வா
எதிர்ப்பில் பயணிக்கும் கிறித்துவப் பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் ‘கந்த கந்த சஷ்டி கவசத்தைப்
பாராட்டி, சஷ்டி கவசம்’ சர்ச்சையில் தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
(‘வீர முருகனின்
வரலாறு இதான்..- Jegath Gaspar
Interview on Karuppar Koottam Controversy;
“முருகரை
பழித்துப் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்பதானது தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்று
அறிவித்துள்ளார்கள். இனி 'பெரியார்' கட்சிகளின்
பாடு திண்டாட்டம் தான். ஏனெனில் இந்து மதக்கடவுள்களை எல்லாம் ஈ.வெ.ரா அவர்கள்
பழித்து பேசிய புத்தகங்களையும், ஒலிப்பதிவுகளையும், 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரத்திற்குப்
பயன்படுத்தினால், தி.மு.க.,
உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் எதிர்ப்)பைச் சம்பாதிக்க
வேண்டிய நெருக்கடியில் சிக்கி விட்டார்கள்.
(https://tamilsdirection.blogspot.com/2020/07/2-socialpolarization.html
ஆத்தீகத் தமிழர்களிடையே வெளிப்பட்டுள்ள எழுச்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சாதி, மத, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெளிப்படுவது நல்ல சமூக சிக்னலாகும்.
வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும்.
ஆத்தீகத் தமிழர்களிடையே வெளிப்பட்டுள்ள எழுச்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சாதி, மத, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெளிப்படுவது நல்ல சமூக சிக்னலாகும்.
வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2020/07/positive-thinking.html)
1920களில் பயணித்த வைக்கம் ஈ.வெ.ராவிற்கும், நீதிக்கட்சியில் இருந்த 'இடிப்பார்களிடம்' ( திருக்குறள் 448) இருந்து விலகி, 1944 முதல் பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் வளர்ந்த வேறுபாடுகளை எல்லாம் விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.
வைக்கம் ஈ.வெ.ராவை இந்துத்வா எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்து, தமிழ்நாட்டு இந்துத்வா ஏமாந்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
1920களில் பயணித்த வைக்கம் ஈ.வெ.ராவிற்கும், நீதிக்கட்சியில் இருந்த 'இடிப்பார்களிடம்' ( திருக்குறள் 448) இருந்து விலகி, 1944 முதல் பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் வளர்ந்த வேறுபாடுகளை எல்லாம் விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.
வைக்கம் ஈ.வெ.ராவை இந்துத்வா எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்து, தமிழ்நாட்டு இந்துத்வா ஏமாந்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
காஞ்சி 'ஆச்சார்யா' சந்திரசேகர
சங்கராச்சாரியார் தமிழ்நாட்டு மக்களை ஈர்க்க, ஈ.வெ.ரா அவர்களை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு
சுப்பிரமணியசுவாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
The following evidence suggest that Subramanian Swamy may be emulating
E.V.R, as advised by Kanchi ‘Parmacharya’.
“Ironically, in one of his tutorials to me by Parmacharya, God on earth,
he said Periyar EVR had kept his vow to his parents to maintain the ancestral
temple in Erode, which temple received first prize for the best maintained
temple for years. Parmacharya also told me to learn from Periyar EVR how one
man can change the thinking of crores of people with nothing but ideas.”
காந்தியின்
ஒப்புதல் கிடைத்திருந்தால், 1925க்கு முன் நடந்த வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா பங்கேற்றிருந்த
காலத்தில், இந்து மகா சபையும் அவருடன் சேர்ந்து போராடியிருக்கும். (பக்கம் 119, வைக்கம்
போராட்டம், பழ.அதியமான்). அந்த காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு
தோற்றுவிக்கப்படவில்லை.
‘From the point of view of justice, dharma and humanism, fighting
untouchability is a duty and we Hindus should completely eradicate it.’-
Savarkar
அன்றைய இந்து
மகா சபை பாணியில் தான், ஈ.வெ.ரா அவர்கள் தேசிய திசையில் பயணித்தார் என்பதைக் ஈ.வெ.ரா அவர்கள்
வைக்கம் போராட்டதின்போது வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்து உணர்த்துகிறது.
'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற
மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5,
10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள்
கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து
கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில்
ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத்
தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.' (பக்கம் 94, வைக்கம் போராட்டம்,
பழ.அதியமான்)
1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறாமல்
இருந்திருந்தால், அதே திசையில் தான் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்திருப்பார். தி.க, தி.மு.க போன்ற
கட்சிகள் உருவாகியிருக்காது.
வைக்கம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓய்வு நேரங்களில் ராட்டையில் நூல் நூற்றார்கள்; இந்தி மொழி
கற்றார்கள்; தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தொண்டர்கள் உள்ளிட்டு. அவ்வாறு ஈ.வெ.ராவால் எதிர்க்கப்படாத விருப்ப
இந்தியை, 1937இல் முதல்வராக இருந்த ராஜாஜி கட்டாயமாக்கியதன் விளைவாக, தமிழ்நாடானது
இந்தியை எதிர்த்ததோடு நிற்காமல்,
ஈ.வெ.ரா தலைமையில் 1938இல் நடந்த இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தில் 'தனித்தமிழ்நாடு' பிரிவினை கோரிக்கையும் முதன் முதலாக வெளிப்படும் விளைவில் முடிந்தது.
அதே ராஜாஜியும்
அண்ணாவும் கூட்டு சேர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்; மாணவர்களைத்
தூண்டி, பொதுச்சொத்துக்களுக்கும்
பொதுமக்களுக்கும் கேடாகும் வகையில். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
ஈ.வெ.ரா எதிர்த்து, போராட்டக்காரர்களால் அவமதிக்கப்பட்டார். 1925க்கு முன் நடந்த
வைக்கம் போராட்டத்திலும், 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் வெளிப்பட்ட ஈ.வெ.ராவின்
சமூக ஆற்றலானது, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏன் வற்றி, அவர்
அவமதிக்கப்படும் விளைவில் முடிந்தது? 1920களில் கேரளாவில் வைக்கம் போராட்டத்தில்
பிரமிக்க வைக்கும் வகையில் வெளிப்பட்ட ஈ.வெ.ராவின் செல்வாக்கானது, 1944இல் தி.கவும், 1949இல் தி.மு.கவும்
தோன்றியதன் விளைவாக, தமிழ்நாட்டில் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவமானகரமாகும் அளவுக்கு எவ்வாறு
வற்றியது? என்ற
விவாதமானது இனியும் இருட்டில் நீடிப்பது தமிழ்நாட்டிற்குக் கேடாகும்.
கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் போல
பொதுவாழ்வின் மூலமாக சொத்து சேர்த்தவர்கள் என்று ஈ.வெ.ரா, ராஜாஜி, அண்ணா மூவர்
மீதும் அவர்களின் கொள்கை எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த
மூவரும் பொதுவாழ்வில் மேற்கொண்ட தவறான முடிவுகள் காரணமாகவே, மேற்குறிப்பிட்ட
நால்வர்கள் பிடியில் தமிழ்நாடு சிக்க நேரிட்டது. இடையில் வந்த எம்.ஜி.ஆர் மூலமாகவே
தமிழ்நாட்டின் மீட்சிக்கான திசையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்? என்பதையும் நான்
விவாதித்துள்ளேன்.
'மூட நம்பிக்கை
எதிர்ப்பானது' எவ்வாறு 'குருட்டுப்
பகுத்தறிவு’ ஆகும்? என்பதையும்
ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
தமிழ்நாட்டு
இந்துத்வாவின் ஏமாளித்தனத்தால் இருட்டில் நீடித்த வைக்கம் ஈ.வெ.ராவை மீட்டு
வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பானது ‘கந்த
சஷ்டி கவசம்’ மூலமாக உருவாகியுள்ளது.
மூத்த
பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பிராமண
எதிர்ப்புக் கண்ணோட்டத்தில் எழுதிய பதிவுகளை உற்சாகமாக வரவேற்றவர்கள்
பெரியாரிஸ்ட்கள்.
‘கந்த சஷ்டி
கவசம்’ சர்ச்சை தொடர்பாகவும் சாவித்திரி கண்ணன் ஒரு பதிவு
வெளியிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட
பதிவில், கீழ்வரும் கருத்துக்கள் இடம்
பெற்றுள்ளன.
“எந்தக் கட்சியும் ஆதரிக்கத் தயாரில்லை என்பது
மட்டுமல்ல, தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவது தான் தற்போது
பெரும்பாடாகிவிட்டது!
பகுத்தறிவுப்
பிரச்சாரம் என்ற பெயரில் பகை வளர்க்கும் பிரச்சாரம் தான் அரங்கேறியுள்ளது!
மூட
நம்பிக்கைகள் மிகுந்து சமூகம் பேரழிவை சந்தித்த காலங்களிலெல்லாம் வரலாற்றுத்
தேவையாக வந்து வழிகாட்டியதே நாத்திகம்!
பகுத்தறிவு
பேசுபவர்கள் எல்லாம் தங்களை பெரியாராகக் கருதிக் கொள்ளமுடியாது!
பெரியார்
வரலாற்றின் தேவையாக வந்தவர்! பச்சிளங் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது,விதவைகளை
காலமெல்லாம் கொடுமைப்படுத்துவது,
சடங்குகளின் பெயரால் எளிய மக்களின் பணம்
விரையமாவது, பார்ப்பனிய ஆதிக்கம் சக மனிதர்களை தாழ்த்தி வைத்திருந்தது…ஆகியவற்றை
எதிர்த்து தரைமட்டமாக்க ஒரு பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தார்!
இன்றைக்கு
மதத்தின் பெயரால் மக்களை வென்றெடுக்க காத்திருக்கும் மதவாத சக்திகளுக்கு ஒரு
சிறந்த ஆயுதத்தை கூர் தீட்டித் தந்துள்ளது கருப்பர் கூட்டம்!
கந்தர் சஷ்டி
கவசத்தை ஆபாசமாகப் பார்ப்பது என்பது அறியாமையின் உச்சம்! ஒரு பக்தி பனுவலை
எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பக்குவமின்றி, அரைவேக்காட்டுத்தனமாக உளறியுள்ளனர்………….
பகுத்தறிவோ,
நாத்திகமோ…ஆன்மீகமோ…எதுவானாலும்,
அது மக்களுக்கு
நன்மை சேர்ப்பதாக,
மக்களை
பிளவுபடுத்தாமல் ஒன்றிணைப்பதாக,
மேன்மேலும்
நேசத்தை வளர்ப்பதாக அமையட்டும்!”
தாய்மொழித்
தமிழ்வழிக்கல்வியை மரணப்படுக்கையில் இருந்து மீட்பதற்காக, இந்துத்வா ஆதரவு
மற்றும் எதிர்ப்பு என்ற பேரில், மக்களை பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்க ‘கந்த சஷ்டி கவசம்’ துணை
செய்துள்ளது.
சங்க காலம்
முதல் பிற மொழி மன்னர்கள் ஆட்சி,
காலனி ஆட்சி உள்ளிட்டு 1967 வரை பாதுகாப்பாக
இருந்த ஏரிகளும், ஆறுகளும், காடுகளும், மலைகளும் உள்ளிட்ட அனைத்து வளங்களும் திராவிட அரசியல்
கொள்ளைக்குடும்பங்களின் ஊழல் பேராசைக்கு
இலக்காகி சீரழிந்து வருகின்றன.
தமிழக மக்களின் பொதுக்கருத்துருவாக்க (public opinion) சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, காங்கிரசும், பா.ஜ.கவும் தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு 'சலாம்' போட்டு பயணித்து வந்துள்ளன.
தமிழக மக்களின் பொதுக்கருத்துருவாக்க (public opinion) சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, காங்கிரசும், பா.ஜ.கவும் தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு 'சலாம்' போட்டு பயணித்து வந்துள்ளன.
தேசிய அரசியலில்
தமிழ்நாட்டைக் காவு கொடுத்த பிரதமர் இந்திரா பாணியில், பிரதமர்
மோடியும் பயணிக்கிறாரா? தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்பு
கூடுகிறதா? என்ற விவாதத்திற்கும் தேவை எழுந்துள்ளது.
அறிவிலோ உடலிலோ
நோஞ்சான்களாக இருக்கும் மனிதர்கள்,
விரும்பினால் கடும் முயற்சிகள் மூலமாக, அறிவிலும்
உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர முடியும். அதற்கு மாறாக, தாம் நோஞ்சானாக
இருப்பதை மறுத்து, வாய்ப்பேச்சு வீரர்களாக பிறரை ஏமாற்றி, ஒட்டுண்ணிகள் போலவும் வாழ முடியும். அவ்வாறு
ஒட்டுண்ணிகள் போல வாழ்பவர்கள் எல்லாம், தத்தம் 'நேர்மை வழிகாட்டியை' தன்மானக்கேடான
திசையில் அவ்வப்போது திருத்தி பயணிப்பதையும் தவிர்க்க முடியாது. (‘இந்தியாவில் 'நோஞ்சான்
தமிழர்கள்' வளரும் போக்கில் தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும்
கேடாகும்; இந்தியாவிற்கும்
கேடாகும்’;
https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)
https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)
பிராமணர் -
பிராமணரல்லாதோர், தமிழர் - தமிழர் அல்லாதோர் போன்ற பரிமாற்ற பகைமையை முன்னெடுத்த
நபர்கள் எல்லாம், குடும்ப அரசியல் ஊழலை எதிர்த்தார்களா? கூச்சமில்லாமல் ஏதாவது ஒரு திராவிட குடும்ப
அரசியல் ஊழல் பிதாக்களுடன் நெருக்கமாக இருந்தார்களா? என்ற கேள்விகளே, அந்த விளையாட்டில் பிழைத்த சமூக ஒட்டுண்ணிகளை
அடையாளம் காட்டும்.
‘'சமுக கீரி -
பாம்பு சண்டையானது' எவ்வாறு முடிவை நெருங்கியது?’;
தமிழ்நாட்டில் ‘சமூக கீரி - பாம்பு சண்டை’ காட்டி ஏமாற்றி
திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்கள் எந்த அளவுக்கு பணத்திலும் செல்வாக்கிலும்
வலிமையானார்களோ,
அந்த அளவுக்கு
அவர்களுடன் ஒட்டிப் பயணித்து 'நோஞ்சான் தமிழர்கள்'
தமிழ்நாட்டில் வளர்ந்தார்கள்.
இந்துத்வா ஆதரவு
மற்றும் எதிர்ப்பு என்ற பேரில், மக்களை பிளவுபடுத்தி 'நோஞ்சான் தமிழர்கள்'
வளர்ந்து வந்த சமூக செயல்நுட்பத்தினை ‘கந்த சஷ்டி
கவசம்’ வீழ்த்தியுள்ளது.
சுயலாப நோக்கின்றி, சமரமற்ற ஊழல் எதிர்ப்பில் வலிமையான 'நேர்மை வழிகாட்டியுடன்' (Ethical Compass) பயணித்து வந்த வலிமையான தமிழர்களை எல்லாம் ஒன்றிணைக்க ‘கந்த சஷ்டி கவசம்’ துணை செய்துள்ளது.
எனவே 'நோஞ்சான் தமிழர்கள்' அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர ஊக்குவிக்கும் சமூக சூழல் உருவாகி விட்டது. வெறுப்பு அரசியலில் மக்களிடையே பிரிவினைகளை வளர்த்துப் பிழைத்து வந்த 'ஒட்டுண்ணிகளை' சருகாக்கி சமூகக் குப்பைத்தொட்டியில் ஒதுக்குவதற்கும் ‘கந்த சஷ்டி கவசம்’ துணை செய்துள்ளது.
சுயலாப நோக்கின்றி, சமரமற்ற ஊழல் எதிர்ப்பில் வலிமையான 'நேர்மை வழிகாட்டியுடன்' (Ethical Compass) பயணித்து வந்த வலிமையான தமிழர்களை எல்லாம் ஒன்றிணைக்க ‘கந்த சஷ்டி கவசம்’ துணை செய்துள்ளது.
எனவே 'நோஞ்சான் தமிழர்கள்' அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர ஊக்குவிக்கும் சமூக சூழல் உருவாகி விட்டது. வெறுப்பு அரசியலில் மக்களிடையே பிரிவினைகளை வளர்த்துப் பிழைத்து வந்த 'ஒட்டுண்ணிகளை' சருகாக்கி சமூகக் குப்பைத்தொட்டியில் ஒதுக்குவதற்கும் ‘கந்த சஷ்டி கவசம்’ துணை செய்துள்ளது.
எனவே ‘கந்த சஷ்டி
கவசம்’ மூலமாக, தமிழின்
தமிழ்நாட்டின் மீட்சி நிச்சயமாகி விட்டது. தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு தமிழ்நாடு
பலிகடா ஆக இனி வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment