Friday, July 12, 2019

உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passion) வாழ்க்கையைக் காதலிக்க தெரியாத

முட்டாள்த் தமிழர்கள்



இந்தியாவில் மனித உரிமைப் போராளிகளாக இருப்பவர்கள் எல்லாம், நானறிந்த வரையில், மேற்கத்திய மோகத்தில் இந்துத்வா எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள்;

என்று கருதியிருந்தேன். பிரமிக்கும் வகையில், மனித உரிமை போராட்ட சாதனைகள் நீண்ட காலமாக புரிந்து வரும், கோவாவில் வாழும் கிளாடிஸ் ஆல்வாரிஸ் (Claude Alvares) அந்த வரிசையில் இருக்கக் கூடும்; என்று நான் யூகித்திருந்தேன். ஆனால் இன்று நான் பயணித்து வரும் திசையிலேயே, அவரும் பயணித்து வருகிறார்; என்பதானது, எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், 'தமிழ் காட்டுமிராண்டி மொழி', மற்றும் 'தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்கு கேடு' என்ற .வெ.ராவின் நிலைப்பாடுகளை ஏற்று, 'மார்க்சியம், லெனினியம்' முகாம்களில் இருந்து, .வெ.ராவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கண்டுபிடிப்பதிலேயே முழு கவனத்தினை செலுத்தினேன். எனவே அது தொடர்பான நூல்களிலேயே மூழ்கி பயணித்தேன். பின்னர் தமிழ்நாட்டின் பொதுவாழ்வானது, 'ஈழ விடுதலை பொதுவாழ்வு வியாபாரிகளின்' செல்வாக்கில் சிக்கிய பின், பொழுது போக்காக ஈடுபட்டிருந்த 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வில் மூழ்கினேன். அதன் தொடர்ச்சியாக, பழந்தமிழ் இலக்கியங்களுக்குள் நுழைந்தேன். அது ஒரு புதையல் வேட்டையாக மாறி, பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் 'இசைத்தகவல் தொழில் நுட்பம்' (Music Information Technology) என்ற துறையில் புலமையாளனாக வெளிப்பட்டதானது; நான் எதிர்பார்க்காமல், திட்டமிடாமல், எனது இயல்பினை ஒட்டிய இயற்கையின் போக்கில் விளைந்த ஒன்றாகும். (http://drvee.in/)

அதன்பின், 'வெள்ளைக்காரன் தான் நமக்கு கல்வியும் நாகரீகமும் கற்றுக் கொடுத்தான்' என்பது போன்ற .வெ.ராவின் நிலைப்பாடுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்பது தொடர்பான ஆய்வுகளைத் தேடும் ஆர்வம் எழுந்தது. அது தொடர்பாக, என் பார்வையில் பட்டதையும் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.

இந்தியாவிலும் வெள்ளையர் ஆட்சிக்கு முன் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்நாகரிகத்திலும் பின்தங்கியிருந்ததாக படித்த இந்தியரில் பெரும்பாலோர் நம்பும் அளவுக்கு, அவர்கள் மனதிலேயே வெற்றிகரமாக விதைத்த சூழ்ச்சி பற்றி ஆய்வு செய்து, தரம்பால் என்ற அறிஞர் ஆய்வு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

(DHARAMPAL • COLLECTED WRITINGS - Distributed by Other India Bookstore, Above Mapusa Clinic, Mapusa 403 507 Goa, India.) 

அப்புத்தகத்திற்கு  ‘Making History.  என்ற தலைப்பில், புகழ்பெற்ற மனித உரிமையாளர் கிளாடிஸ் ஆல்வாரிஸ் - Claude Alvares - எழுதியுள்ள முன்னுரையானது, இந்நூலில் உள்ள ஆதாரங்கள் பற்றியும், ஆய்வின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது.’ 

'தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, 1944-இல் நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்ததன் விளைவுகளாக, இன்று நம்மிடையே 'நாய்களாகவும், கழுதைகளாகவும்' உலவுபவர்களை, அடையாளம் கண்டு ஒதுக்கினால் தான்;

நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன், நாம் வாழ்ந்து சாதனைகளும் படைக்க முடியும்,  என்பதும், நான் அனுபவபூர்வமாக கற்ற பாடமாகும்.' என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

பின் அண்மையில் கிளாடிஸ் ஆல்வாரிஸின் இணையதளத்திற்கு சென்ற போது, 'வாழ்க்கையைக் காதலிக்காமல், எவ்வளவு முட்டாள்த்தனமாக தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள்?' என்பதை விளங்கிக்கொள்ள கீழ்வரும் பதிவும் துணை புரிந்தது.

‘Most middle class families nowadays have adequate cash and many save too much. (Many, too numerous actually to mention, kick the bucket after putting aside huge savings, so what was the point of it all? Sadly, they are never around to answer.)

if not used wisely, that money is going to be used to get one more flat, or another cell phone or simply dumped on the share market or on mutual funds or bitcoins to get more money! For all of us, this appears to be sheer evil and quite appalling, considering the fact that the decision makers in the family actually prefer to hand out family assets to total strangers (bank managers, speculators) when it was originally — painfully and hardworkingly — harvested to meet the needs of the family, which is you. So how come they are willing to hand it over to fat cats like Vijay Mallya, Adani, Mukesh Ambani and that huge mob of respectable gangsters called NPAs?

Not a single person in the world today is given a salary to do what he likes, but only what someone else likes. So between the ages of 16 and 40 is the time for you to discover yourself, the world, all creatures bright, small and large, things which bite and spit and sing. My best advice: to live during this period, loving life and doing the things you love and with the people you want to be with, whatever you do, don’t get a job. If you do, it’s over.’ 

“Not a single person in the world today is given a salary to do what he likes, but only what someone else likes.” என்று கிளாடிஸ் ஆல்வாரிஸ் தெரிவித்துள்ள கருத்தானது, வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களுக்கும், தமிழ்நாட்டில் தனியார் துறைக்கும் மட்டுமே பொருந்தும்அரசுப் பணிகளில் நம்ப முடியாத அளவுக்கு 'சுதந்திரம்' (Freedom) உள்ளது. சம்பளம் தவிர ஊழல் வழிகளில் பணம் ஈட்டவும், கூடுதலாக தொழில் வியாபாரங்கள் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அரசுப் பணியாளர்களில் விரும்புபவர்களுக்கு, வாழ்க்கையைக் காதலித்து வாழும் சுதந்திரமும் இருக்கிறது. அரசு கல்லூரிகளில் நான் பணியாற்றிய காலத்தில், அவ்வாறு பயணித்தவர்களும் இருந்தார்கள்.

"வாழக்கையை நாம் காதலித்தால், வாழ்க்கை நம்மை காதலிக்கும்."- American classical pianist, Arthur Rubinstein (‘6 Ways to Love Your Life More’; https://www.huffpost.com/entry/6-ways-to-love-your-life-more_b_8295318


வாழ்க்கை நம்மை காதலிப்பதை எவ்வாறு நாம் உணர முடியும்? நாம் திட்டமிடாமலேயே, ஏக்கத்துடன் எதிர்பார்க்காமலேயே, சந்திக்கும் இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் அந்த வகையைச் சாரும். அது மட்டுமல்ல;

இனம் இனத்தோடு சேரும் என்ற இயற்கை விதியின்படி, சமூக ஒப்பீடு நோயில் சிக்காமல், நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நாம் வாழும்போது, நமது சமூக வட்டமானது, அந்நோயாளிகளிடமிருந்து விலகி, நம்மைப் போன்றே வாழும் மனிதர்களை உள்ளடக்கிய சமூக வட்டமாக மாறுவதும், இயற்கை விதி போலவே நடைபெறுகிறது என்பதானது, வாழ்க்கை நம்மைக் காதலிப்பதன் வெளிப்பாடாகும்; என்பதும் எனது அனுபவமாகும். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

வாழ்க்கையைக் காதலிக்க தெரியாத முட்டாள்த் தமிழர்கள் எல்லாம், எண்ணிக்கையில் எவ்வாறு வளர்ந்தார்கள்? என்று பார்ப்போம்.

'காரியம்' சாதிக்க 'போலியாக' சிரிப்பது, பாராட்டுவது, கண்டிப்பது, மேல் நிலையில் உள்ளவர்களுக்கு வாலாட்டுவது, கீழ்நிலையில் உள்ளவர்களை தமது செல்வாக்கின்(?) மூலம் வாலாட்ட வைப்பது என்ற போககில் சாகும் வரை பயணித்து, இயல்பைத் தொலைத்த கோமாளிகளாக வாழ்ந்து, எவ்வளவு சொத்து சேர்த்தாலும்செத்த பின், அந்த சொத்து கூட வராது. ஆனால் செத்தவரை நினைப்பவர்கள் மனதில், 'அந்த' கோமாளி வருவதை எவரும் தடுக்க முடியாது. (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_10.html )

தமிழ்நாட்டில் மற்றவர்கள் பெரிதாக நினைக்க வேண்டும் என்பதற்காக, கடன் வாங்கி வீடு கட்டி, ஆடம்பரமாக திருமணம் செய்து, 'அந்த' கடன்களை அடைக்கவே சாகும் வரை தமது வாழ்வைத் தொலைத்த, கவலையில் மரணித்த, மரணிக்கும் முட்டாள்களும் அதிகரித்து வருகிறார்கள். அதில் தப்பி, சாகும் வரை பணம், சொத்து சேர்ப்பதிலேயே முழு கவனம் செலுத்தி சேர்த்த‌, அரசியல் கொள்ளையர்களின் அபகரிப்பில் இருந்து தப்பிய சொத்துக்கள், தமது மரணத்திற்குப் பின் என்னாகும்? வெளிநாட்டில் 'செட்டில்' ஆன பிள்ளைகள் அதை அனுபவிப்பார்களா? என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகும் முட்டாள்களும் அதிகரித்து வருகிறார்கள்

வாழ்க்கையைக் காதலிக்க தெரியாத முட்டாள்த் தமிழர்கள் எல்லாம், 'பாரம்பரிய செல்வ வாசனை தெரியாத கழுதைகளாகவும்', வரலாற்றுக் குற்றவாளிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். (https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

பொதுவாக பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் 'IIT, NIT' போன்ற உயர்க்கல்வி அமைப்புகளில் 'எமரிட்டஸ் பேராசிரியர் (emeritus professor)' பதவி பெறுவதன் மூலமாக, உயர்ந்த ஊதியமும் செல்வாக்கும் பெறுவார்கள். அந்த பதவிக்கு ஏங்கி, முயற்சிப்பவர்களில் வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே. 'கட்டிடத்தில் உறைந்துள்ள இசையை பிரித்தெடுக்கும் ஆய்வுத்திட்டத்தில்' (Defreezing Music from the Building Architecture) எனது பங்களிப்பின் காரணமாக, அந்த பதவி என்னைத் தேடி வந்த போது, ஊசலாட்டமின்றி நான் அதனை மறுத்தேன். என்னை மற்றவர்கள் பெரிதாக நினைக்க வேண்டும் என்பதற்காக, நான் உள்ளாந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்ந்து வரும் வாழ்க்கையை இழப்பது முட்டாள்த்தனமல்லவா?

நான் உயர்நிலைப்பள்ளி வரை, தமிழ்வழியில் படித்தவன்; அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற இன்னும் பல சாதனையாளர்களைப் போலவே. ஆரம்பப்பள்ளி வரையிலாவது தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு வாழும் வாழ்க்கை கிட்டும். மாறாக, விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கிலவழியில் படிப்பவர்கள் எல்லாம், 'அந்த' வாழ்க்கையை இழக்கும் தண்டனைக்கு ஆளாவதில் இருந்து தப்ப முடியாது

அவர்களில் பெற்றோர்களுக்கு (திருமணத்திற்குப் பின் மனைவிகளுக்கு அல்லது கணவர்களுக்கு) அடங்கி வாழ்பவர்கள், சமூகத்துக்குக் கேடான முரடர்கள், என்ற பிரிவுகளில் சிக்காமல், தூண்டப்பட்ட (Induced Passions like, கிரிக்கெட், சினிமா, etc) ஈடுபாடுகளுக்கு அடிமையாகி, (இந்தியா கிரிக்கெட்டில் தோற்றால்) தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்துடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தூண்டப்பட்ட ஈடுபாடுகளும், மேற்கத்திய மோகமும் ஒன்றையொன்று வளர்த்து வரும் சமூக நோய்கள் ஆகும்.

மிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட சமூக நோய்களின் வளர்ச்சியும், என்னைப் போன்று வாழ்வதானது, முட்டாள்த்தனம்' என்று கருதுபவர்களின் வளர்ச்சியும், எந்த சமூக செயல்நுட்பத்தில் வளர்ந்து, இன்று உச்சத்தில் உள்ளது? என்பதை அடுத்து பார்ப்போம்.

மன அழுத்தம் மிகுந்த வாழ்வானது, 'நோய்களின் சரணாலயம்' என்று தெரிந்தும்;

தமது உற்றமும், சுற்றமும் 'பொறாமைப்படும்' (?) அளவுக்கு, எந்த வழியிலும் (?) பணம் சம்பாதிக்கும் "ஓட்டப் பந்தயத்தில்' சிக்கி;

சமூக ஒழுக்க பொது நெறிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, கூடப்பிறந்தவர்களை கூட கூச்சமின்றி ஏமாற்றி, 'பணமே தெய்வம்'  என்று 'பிறருக்காக' (?)  வாழ்பவர்களும்

'குலம், கோத்திரம்' பின்னுக்கு போக, 'பணமே கடவுள்' என்ற அடிப்படையில் திருமணம் முடிக்கும் பெற்றோர்களும், 'அந்த' பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளைகளும்;

மனித இழிவுக்கு இலக்கணமானவர்களை கூட, 'அதிவேக பணக்காரர்' என்று மதித்து பாராட்டி அவர்களுக்கு நெருக்கமாக வாழ்பவர்களும்;

'அரசியல் கொள்ளையர்கள்என்று தெரிந்தும், அவர்களை நாடி, தம்மிடம் உள்ள ('பகுத்தறிவு(?), பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு/ஆதரவு, இன்னும் பல முகமூடிகள் ஆளுக்கேற்றவாறும்) 'திறமைகள்'(?) மூலம் 'பலன்'(?) பெறும்  'புதியபாணி விபச்சாரிகளும்';

தம்மிடம் ஏமாறும் வாய்ப்புள்ள நபர்களை அடையாளம் கண்டு, 'உதவி' என்ற தூண்டில் போடும் சமூக மீன் பிடிப்பாளர்களும்
(http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_27.html

ஒருவரிடம் நேரடியாக தெரிவிக்கும் துணிச்சலின்றி, முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களும், அவர்களின் பொய்களை நம்பும் முட்டாள்களும்
(https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

கணவன் மதிக்க வேண்டுமென்றால், தானும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று வாழும் மனைவியும்;

மனைவியும் உறவினர்களும் மதிக்க வேண்டுமானால், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற 'லட்சியத்திற்காகவே' குடும்பமின்றி வெளிநாடுகளில் வேலை பார்க்கும்  கணவனும்;

அதிகம் சம்பாதிக்கும் பிள்ளையிடமே 'அதிக அன்பு'(?) செலுத்தும் பெற்றோரும்;

அதிகரித்து வரும் குடும்பங்களில் 'இயல்பான அன்பானது' வற்றி வரும் போக்கில்;

யாருடைய துயரத்தையும் யாரிடமும் பகிர்வதிலும் கூட 'லாப நட்ட கணக்கு' செயல்படுமே என்று அஞ்சி; 

குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் இருந்த 'சமூக சுமை தாங்கிகளும்',  தமிழ்நாட்டில் வற்றத் தொடங்கி விட்டன.

எனவே பள்ளி மாணவர்கள் முதல், முதியவர்கள் வரை தற்கொலைகள் அதிகரிக்க;

அதில் தப்பித்தவர்கள் எல்லாம் மனநல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகளாக வாழ;

'அனாதை ஆஸ்ரமங்களில்' சேர போட்டி போடும் குழந்தைகளின் எண்ணிக்கையும், முதியோர் இல்லங்களில் சேர போட்டி போடுபவர்களின் எண்ணிக்கையும், அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

அதற்கிடையில் சொந்த வீடு கட்டி, பக்கத்து வீட்டுக்கரர்கள் கொடுத்த தொந்திரவினை சமாளிப்பதே முக்கியம் என்று கருதி, சாகும் வரை அந்த சவாலிலேயே காலத்தைக் கழிப்பவர்களும் இருக்கிறார்கள்;  தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, தானும் வாடகை வீட்டில் வாழ்பவர்களும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறார்கள்; வருடக்கணக்கில் வாடகையும் வராமல், பணம் கொடுத்து சொந்த வீட்டை மீட்டு வருபவர்களும் இருக்கிறார்கள்; அது போன்ற சிக்கலின்றி வாழ்வதற்காகவே, 'அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு' வாலாட்டி' வாழ்பவர்களும் இருக்கிறார்கள்

மேலே குறிப்பிட்ட மனிதர்களின் 'அசுர வளர்ச்சியும்', தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் வெளிப்பட்ட 'சாதனை'(?) என்பதானது;

1967க்கு முன் கல்லூரியில் படித்த என்னைப் போன்றவர்களுக்கு தெரியும்.

'வாழ்க்கைக்கு பணம் தேவை' என்பதை, 'பணமே வாழ்க்கை' என்ற வாழ்க்கை இலட்சியமாக மாற்றிய ஓட்டப்பந்தயத்தினை, தமிழ்நாட்டில் அரங்கேற்றி, அதன் மூலம் தமிழ்நாட்டில் கணிசமானோரை 'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும் வாலாட்டும்' அவமரியாதை தமிழர்களாக மாற்றிய சாதனையானது;

1967க்குப்பின் ஆட்சிக்கு வந்ததிராவிடக் கட்சிகளையேச் சாரும்.’ (‘'அந்த'(?)  ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' (1)?’; 

'நேர்மை வழிகாட்டியை' (Ethical Compass) துறந்து, அகநேர்மையின்றி வாழ்பவரிடம் வெளிப்படும் உள்ளார்ந்த ஈடுபாடும், புலமையும், 'அறிவு விபச்சார' திசையில், உள்நாட்டு/வெளிநாட்டு கொள்ளையின் 'சமூக முதுகெலும்பாக' பயணிக்கச் செய்யும்; மேற்குறிப்பிட்ட ஓட்டப் பந்தயத்தில் சிக்கி.

1925 இல் 'குடிஅரசு' இதழை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு தொடங்கிய .வெ.ரா அவர்கள், தடம் புரண்டு, பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி, முன்னெடுத்த நாத்திகமானது, எவ்வாறு தமிழ்நாட்டை சீரழித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
 (http://tamilsdirection.blogspot.com/2017/09/semanticdistortion.html )

எனது ஆய்வுகளின் தொடர்ச்சியான 'கடவுள்' தொடர்பான எனது ஆய்வினையும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

‘Experiencing God, the Infinite, through Resonance’; https://veepandi.blogspot.com/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html

2014-இல் வெளிவந்த மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கு, 'பெரியார்' ஆதரவாளர்களிடம் இருந்து இதுவரை மறுப்பு ஏதும் வரவில்லை; இனி வந்தாலும் வரவேற்பேன்.வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், எனது கருத்தினை அறிவுபூர்வமாக மறுக்க முயற்சித்திருப்பார்; அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால், ஏற்றுக் கொண்டிருப்பார்; ஆனால் நிச்சயமாக 5 வருடங்களாக அதை கண்டு கொள்ளாமல், 'அறிவில் கோழையாக' பயணித்திருக்க மாட்டார்; என்பதை எந்த 'பெரியார்' ஆதரவாளரும் மறுக்க முடியுமா?

2005-இல் (கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாக்கிய) கணபதி ஸ்தபதியுடன் ஏற்பட்ட நெருக்கமான தொடர்புக்குப் பின், காரைக்குடி அருகே உள்ள (காலத்தால் வாதாபி கணபதிக்கு முந்தைய) பிள்ளையார் பட்டியில் உள்ள பிள்ளையார் எனது வழிபாட்டிற்கும் ஆய்வுக்கும் உரிய கடவுளாக இருக்கிறார்; சிவனைப் போலவே.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், பிள்ளையார் தொடர்பாக- இயற்கையின் தத்துவங்களை விளங்கிக் கொள்ளும் நாகரீகத்தின் முகமாக-,  கிளாடிஸ் ஆல்வாரிஸ் வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் கருத்தானது, எனக்கு இன்ப அதிர்ச்சியானது.

‘For the above reasons, Lord Ganesha remains the face of a civilization that can hardly be dubbed fully ancient or traditional, early modern or modern simply because several of its features, in fact, continue to reflect an understanding of nature’s principles that is so systematic and so holistic that it could be profitably used as long as human beings survive on the planet.’ (‘Ganesha and the Modern Intellectual’; http://typewriterguerilla.com/2017/09/ganesha-and-the-modern-intellectual/)

இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை, நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழும்போது, நான் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இன்ப அதிர்ச்சிகள் கிடைக்கும்; என்பது எனது அனுபவமாகும். அவ்வாறு 'வாழ்க்கையைக் காதலித்து' நான் வாழும் இரகசியத்தையும் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்

'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'

என்ற புறநானூற்று வரிகளை, அக நோக்கில் தம்மைக் குவியமாக்கியஅணுகுமுறையில் தம்மைத் தாமே கண்காணித்து வாழ்பவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரட்டை வேடப் போக்குகளில் பயணிக்க மாட்டார்கள்.

கிடைக்கும் தூரத்தில் இருக்கும் 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) அடைக்கலமாக வாய்ப்புகள் இருந்தாலும்; மது சொகுசு தேவைகளுக்கும் (Needs), ஈடுபாடுகளுக்கும் (Interests) தாம் அடிமையாகி, மது 'சுதந்திரத்தினை' பலகீனமாக்கும் நோயில் சிக்கியும் அவர்கள் வாழ மாட்டார்கள்.

சாவு எப்போது வந்தாலும் வரவேற்கும் மனநிலையிலேயே, ஒரு தனி மனித இராணுவம் போலவே சாகும் வரை வாழ்வார்கள். (‘வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(2); புறநானூற்று வரிகளை அக நோக்கில் குவியமாக்கும் செயல்நுட்பம்?’; 
http://tamilsdirection.blogspot.com/2019/02/2.html

பணத்திற்கும், செல்வாக்கிற்கும் மயங்காமல், நேர்மையான சுய சம்பாத்தியத்துடன் வாழ்ந்து கொண்டு, மதிக்கத் தகுந்தவர்களை சுயலாப நோக்கின்றி மதித்தும், சமூகத்துக்கு கேடாக வாழ்பவர்களை எல்லாம் 'சமூக புழுதியாக' கருதி ஒதுக்கியும், திருக்குறள் (469) வழியில் உதவிகள் புரிந்தும், தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான தனி மனித இராணுவமே. அத்தகையோரின் எண்ணிக்கையும் பிரமிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது; வாழ்க்கையைக் காதலிக்க தெரிந்த புத்திசாலிகளாக.


Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment