Thursday, December 5, 2013


கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்




பெரியார் தமது கொள்கைகளை எப்போதும் திறந்த மனதோடும் (open minded) அறிவு நாணயத்தோடும் தொடர்ந்து திறனாய்வு செய்து தவறானவற்றைத் தயக்கமின்றி மாற்றிக் கொண்டவர். “கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, உண்மையில் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது?” என்று அவரிடம் கேட்ட போது, எந்த தயக்கமும் இன்றி “வந்த கடவுளைச் சோதித்துப் பார்த்து உண்மையென்றால், கடவுள் உண்டு என்று சொல்லி விடலாம். நமக்கும் கடவுளுக்கும் தனிப்பட்ட சண்டையா, என்ன?” என்ற வகையில் பதில் சொன்னவர் அவர்.

அவருக்குப் பின் அந்த வழிமுறையைப் பின்பற்றத் தயங்கினால், அவரும் அவரின் கொள்கைகளும் வழிபாட்டுப் பொருட்களாக ஆகிவிடும். அந்த செயல்முறையும் தொடங்கி விட்டதோ என்று நான் சந்தேகப் படுகிறேன்.

நாம் சந்திக்கும் எந்த விஷயத்தையும் ‘பிடிக்கும்’ அல்லது ‘பிடிக்காது’ என்ற வரையரைக்குள் அடக்குவது இயல்பாகி விட்டது. ‘பிடிக்கும்’ அல்லது ‘பிடிக்காது’ என்று எல்லாவற்றையும் கறுப்பு அல்லது வெள்ளையாகப் (கம்யூனிஸ்டுகள் சிகப்பாக) பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதனால் சமூகத்தில் உள்ள வண்ணங்களைப் பார்க்கத் தவறும் குறைபாடு நம்மைப் பாதிக்கும் (அல்லது பாதித்திருக்கும்). கண் பார்வைக் கோளாறுகளில் வண்ணங்களைப் பார்க்க முடியாத குறைபாடும் ஒன்றாகும். மேற்சொன்ன குறைபாடு அதை விட அதிக பாதிப்புகளை நம் வாழ்வில் ஏற்படுத்த வல்லதாகும்.

‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு உள்ளான முற்போக்காளர்கள் தம்மையும் அறியாமல் ‘முற்போக்கு சாதி (அல்லது அதில் உள்சாதி) வட்டத்தில் சிக்கி விடும் ஆபத்தும் உண்டு. அவ்வாறு தமக்கான பிம்பத்தில் (image) சிக்கிய பின், தாம் சிந்திக்கும் வெளிப்படுத்தும் கருத்துகள் தமது பிம்பத்தைப் பாதிக்குமா வளர்க்குமா என்று யோசித்து செயல்படும் நோய்க்கு அவர்கள் ஆளாவார்கள்.

அதன் பின் நாம் வெள்ளையாகப் பார்க்கின்ற ஒருவரின் குறைபாடுகள் பற்றிய ஆதாரங்கள் நமது பார்வைக்கு வரும் போது பெரும்பாலும் அதைப் பொய் என்று சொல்லி ஒதுக்க முற்படுவோம். அதையும் மீறி அந்த ஆதாரங்கள் உண்மையென்று ஆகி விட்டால் கறுப்பை வெள்ளையாகப் பார்த்து விட்டோமோ என்ற ஐயம் நம்மை வாட்டத் தொடங்கும். நமக்குத் தெரிந்த பிம்பங்கள், குழு அடையாளங்கள் (தலித், தி.க. நக்சலைட், ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம் போன்ற இன்னும் பிற) மூலமே நமக்குப் பார்க்க பழக்கமாகி, உண்மைகளையும் நல்ல தனி நபர்களையும் அடையாளம் காண முடியாமல் போய் விடும். சில நேரங்களில் உண்மைகளுக்கும் நல்ல தனி நபர்களுக்கும் எதிரான சுயநல முயற்சிகளை ஆதரிக்கும் தவறையும் நாம் செய்ய நேரிடும்.

சமூகத்தில் உள்ள வண்ணங்களை உள்ளதை உள்ளவாறு பார்த்து வாழும் போது தான் நம்மை யாரும் ஏமாற்ற முடியாத வாழ்வை நம்மால் வாழ முடியும். தலைவர்களின் சுயநல வாழ்வுக்கு நமது உழைப்பை வீணாக்காமல் சமூகத்திற்கும் ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்க முடியும். இல்லையெனில் எதையும் சரியாகப் பார்க்கத் (‘கண் என்னாம்’ – குறள் 573) தெரியாமல் (ஆராயாமல்) கருத்தை உருவாக்கிக் கொள்ளும் (‘தேரான் தெளிவும்’ – குறள் 510) நோய்க்கு (opinion sickness) நாம் ஆளாக நேரிடும்.

உதாரணமாக மறைந்த சீனக் கம்யூனிஸ்டு தலைவர் மா.சே.துங்கை வெள்ளையாக அல்லது சிகப்பாகப் பார்த்து வந்த இங்குள்ள கம்யூனிஸ்டு ஆதரவாளர்களுக்கு 1996-இல் வெளிவந்த ‘The Private Life of Chairman Mao’ (தலைவர் மாவோவின் தனிப்பட்ட வாழ்க்கை) புத்தகம் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். சகப் போராளிகளைக் காட்டிக் கொடுத்து பாலியியல் அரசியலில் (sexual politics) ஈடுபட்டவராக மாவோவைப் பற்றி அவருக்கு 22 வருடங்கள் தனி மருத்துவராக (personal physician) பணியாற்றிய டாக்டர் லீ ஜிசுய் (Dr. Li Zhisui)  என்பவர் பல தகவல்களை இப்புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இத்தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டவை என்பது சார்பற்ற (objective)  ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் மா.சே.துங்கை வெள்ளையாக அல்லது சிகப்பாகப் பார்த்தவர்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் பொய்களின் மூட்டை என்று கருதுவதும் மா.சே.துங்கை வெறுத்துக் கறுப்பாகப் பார்த்தவர்கள் மேற்சொன்ன புத்தகத்தை உண்மைகளின் பொக்கிஷம் என்று கருதுவதும் முன்பு குறிப்பிட்ட கறுப்பு-வெள்ளைக் குறைபாட்டின் விளைவுகளாகும்.

அடுத்து பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றிய, எனது இசை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த பெரியார் தொண்டர்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய சில உண்மைகளைப் பொது விவாதத்திற்கு உட்படுத்த விழைகிறேன்.

தந்தை பெரியார் என்று குறிப்பிடாமல் பெரியார் ஈ.வெ.ரா. என்று நான் குறிப்பிட்டுள்ளதே பல பெரியார் தொண்டர்களுக்கு எரிச்சலைத் தரலாம்.

இசை ஆராய்ச்சிக்கு முன் நான் பெரியார் இயக்கங்களின் பங்கேற்றிருந்தேன். அப்போது பல பெரியார் தொண்டர்கள் தந்தை பெரியார் என்று அழைத்துப் பெரியாரைக் கடவுள் போல் கருதிச் செயல்பட்டதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். பரப்பியவன் அயோக்கியன். வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்ற பெரியாரின் கருத்துப் படிப் பார்த்தாலும் பெரியாரைக் (மற்றும் திராவிடக் கட்சித் தலைவர்களை) கடவுளாகக் கற்பிப்பதும் பரப்புவதும் வணங்குவதும் அதே வகையிலான தவறுகள் தானே.

தலைவர்களைத் ‘தோழர்’ என்றே அழைக்கும் பழக்கத்தைத் தமிழ்நாட்டில் முதன்முதல் அறிமுகப்படுத்தியவரே பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தான். இங்கு ‘தோழர் ஈ.வெ.ரா.’ என்று நான் அவரைக் குறிப்பிட்டிருந்தால் அது அவரை அவமதிக்கின்ற சொல்லாகவே பெரும்பாலான பெரியார் தொண்டர்களால் கருதப்படும். இன்று சமூகத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ள ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்குப் பெரும்பாலான பெரியார் தொண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே அதற்குக் காரணமாகும்.

இந்த சமூகத்தில் அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்களின் துயரங்களை உணர்ந்து அவற்றைத் தீர்க்க தமது அறிவு அனுபவ அடிப்படையில் உண்மையாக உழைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆவர். அதிலும் அரசியலில் தாம் கடுமையாக எதிர்த்த ராஜாஜியுடன் (இரகசியமாக இல்லாமல்) வெளிப்படையாக அவர் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு உலகில் வேறு எங்கும் நான் கண்டிராத அதிசயமாகும். அதே நேரத்தில் தமிழ்ப் பாரம்பரியம் பற்றிய அவரின் தவறான நிலைப்பாட்டினை நான் எனது இசை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான பழந்தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட வேண்டியவை என்பது பெரியாரின் கருத்தாகும்.

“கடவுள்களையும் அவர்களைப் பற்றிக் கூறும் கலை, இலக்கியம், புராணம், தேவாரம், பிரபந்தம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையுமான கடமையாகும்”

-       24.3.1943 ஜோலார்பேட்டை சொற்பொழிவு – ‘கலையும் நாடகமும்’ குடிஅரசு பதிப்பகம் 1943

பழந்தமிழ் இலக்கியங்களில் மக்களுக்குப் பயன்படும் அறிவுபூர்வமான விஷயங்கள் என்ன இருக்கின்றன என்று பெரியார் சவால் விட்ட போது தமிழ்ப் புலவர்களால் அதற்குச் சரியான விளக்கம் தர முடியவில்லை. எனவே பெரியாரின் கருத்துக்கு நானும் அடிமைப்பட்டு பழந்தமிழ் இலக்கியங்களைக் ‘கறுப்பாகவே’ கருதி வெறுத்து வந்தேன்.

அதன்பின் இசை அறிவியல் கோணத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை நான் ஆராய்ந்தேன். பல அரிய இசையியல் தகவல்களை அவற்றில் நான் கண்டு பிடித்தேன். அவை எனது கணிணி இசை ஆய்வுக்குப் பெருந்துணை புரிந்ததோடு இசைத் தகவல் தொழில் நுட்பத்தைப் (Music Information Technology) பயன்படுத்தி உலக இசையை வளர்க்கவும் துணை புரிபவை ஆகும்.

தேவராம் தமிழிசைக்கு ஒரு அரிய சுரங்கமாகும். பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணம் குழலிசை பற்றிய அரிய தகவல்கள் கொண்ட இசைக் கருவூலம் ஆகும். சிலப்பதிகாரத்தில் வரும் இசை தொடர்பானச் சொற்களுக்கு வெளிச்சம் சங்க இலக்கியங்களில் இருப்பதை நான் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் நிறுவி உள்ளேன். சிலப்பதிகாரத்தை விட யாழிசை பற்றிக் கூடுதல் தகவல்கள் உள்ள நூல் பெருங்கதையாகும். திருக்குறளில் அரிய இசையியல் தகவல்கள் இருப்பதை நான் சங்க இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்துள்ளேன். கல்லாடம் அரிய இசையியல் தகவல்கள் கொண்ட நூலாகும்.

கோவில்களில் உள்ள கல்வெட்டுகளும் சிற்பங்களும் இசை நாட்டியம் பற்றிய கல்விக்கு ஓர் அரிய கருவூலமாகும். குடுமியான்மலைக் கோவிலும் அக்கோவிலையொட்டியுள்ள குடுமியான்மலை இசைக்கல்வெட்டும் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவையாகும்.

‘அடியோடு ஒழிக்க வேண்டியதே’ என்று பெரியாரால் கண்டிக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் நான் கண்டுபிடித்த அரிய இசையியல் தகவல்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதைச் சுருக்கமாகக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

இசைத் தகவல் தொழில் நுட்பத்தைப் (Music Information Technology) பயன்படுத்தி நுண்ணொலி (Microsound) ஆய்வுகளின் அடிப்படையில் நவீன இசை ஆராய்ச்சிக்கு உதவும் ‘இசை இழை’ பற்றிய கண்டு பிடிப்பு (இது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை 2007 சனவரியில் அமெரிக்காவில் ஹவாயில் நடக்க உள்ள சர்வதேச மாநாட்டில் Hawaii International Conference on Arts and Humanities ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் உள்ள எல்லா வகை இசைகளும் ஏற்று பயன்பெறக் கூடிய அளவுக்கு ஓர் அறிவுபூர்வமான தாள இசை இலக்கணம் (இது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை 2006 சனவரியில் அமெரிக்கா ஹவாயில் நடந்த சர்வதேச மாநாட்டில் – Hawaii International Conference on Arts and Humanities – ஏற்றுக் கொள்ளப் பட்டது.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் ஏற்று பயன்பெறக் கூடிய அளவுக்கு எழுத்தின் ஒலிக்கும் இசைக்கும் இடையிலானத் தொடர்பு பற்றிய இலக்கணம்,
இசை அழகியல் சீர் குலைந்து தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் சமச்சுர அதிர்வெண் வேறுபாட்டுத் தகவு முறைக்குப் (Equal Temperament)  பதிலாக சிலப்பதிகாரத்தில் உள்ள சிறப்பான இசை அளவு முறை.

சுருதி சேர்ப்பதற்கு இன்றுள்ள சர்வதேச தர அதிர்வு எண் [International Pitch Standard] மதிப்புக்கு மிக நெருக்கமாகச் சிலப்பதிகார உரையில் வரும் ஒரு குழலின் இசை அறிவியல் அடிப்படையிலான அதிர்வெண் மதிப்பு.

சுருதி சுத்தமான (Accurate Pitch)  இசைப் பயிற்சிக்கு உதவும் ‘ந-ம-சி-வா-ய’ ஐந்தெழுத்து மந்திரத்தின் முக்கியத்துவம்.

மேற்சொன்ன ஆய்வு முடிவுகள் பற்றி ஆங்கிலத்தில் ‘Anicient Music Treasures – Exploration for New Music’ தொல் இசைப் புதையல்கள் – புதிய இசைக்கான தேடல் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளேன். இதில் சில முடிவுகள் இன்னும் தமிழில் கூட வெளிவரவில்லை. ஏன் என்பதை இக்கட்டுரையில் நான் விளக்க விரும்பவில்லை. மேற்கண்ட ஆய்வு முடிவுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ள அரிய இசையியல் தகவல்களின் துணையுடன் பெறப்பட்டவை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனக்கு சமஸ்கிருத மொழி தெரியாததால் சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதத் துறைத் தலைவர் பேரா. முனைவர். எஸ். தியாகராஜனும் சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை முன்னாள் தலைவர் பேரா. முனைவர். என். ராமநாதனும் எனது இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தார்கள், இருக்கிறார்கள்.

பெரியார் இயக்கத்தால் ஏற்பட்ட இன்னொரு தவறான கருத்து சமஸ்கிருத மொழி மீது கொள்ளும் வெறுப்பு. பிராமணர்கள் மற்றும் வேதங்கள் தொடர்பானவைக்கான மொழியே சமஸ்கிருதம் என்பது தவறான கருத்து ஆகும். தொன்மை இந்தியாவில் வேதங்களுக்கு எதிராக, யாகங்களுக்கு எதிராக, இருந்த கருத்துகளை அறிவதற்கு உரிய மொழியாகவும் சமஸ்கிருதம் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், தொன்மை இந்திய அறிவுக் கருவூலங்களைக் கொண்ட மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது. இன்றுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு சமூகத்தைச் சீர்திருத்தத் தேவைப்படும் கொள்கைகளை உருவாக்க உதவும் முக்கிய மூலங்களில் (Sources) சமஸ்கிருதத்திற்கு முக்கிய இடம் உண்டு. தமிழ் நாட்டில் உள்ள ‘முற்போக்காளர்’கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள முற்போக்கு நூல்களைப் போல் சமஸ்கிருதத்தில் உள்ள நூல்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் வடநாட்டில் தேபிப்ரசாத் சட்டோபாத்யாயா, கோசாம்பி, கே.சி.பட்டச்சார்யா, எஸ்.சட்டர்ஜி பாஸ்ம் எனப் பல அறிஞர்கள் சமஸ்கிருத நூல்களை ஆராய்ந்து அரிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்த வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. பெரியார் இயக்கத்தால் தமிழ்நாட்டில் தூண்டப்பட்ட சமஸ்கிருத வெறுப்பு வடநாட்டில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் மீதுள்ள வெறுப்புக்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் உண்டு.

ஆங்கிலேயர் வருகைக்கு முன் கடந்த சுமார் 700 ஆண்டுகளாக தமிழ் நாடு தமிழரல்லாத கன்னட, தெலுங்கு, மராத்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது இசையில் தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. வழிபாட்டில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் இசையிலும் வழிபாட்டிலும் எந்த மொழித் திணிப்பையும் யாரும் ஆதரிக்கவில்லை. இசையிலும் வழிபாட்டிலும் தமிழ் தனக்கு உரிய இடத்தைப் பெறவில்லையென்றால் அதற்கு கடந்த 47 வருடங்களாகத் தமிழ்நாட்டை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்.

‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்குத் தமிழ்நாடு உள்ளானதும் இதற்குக் காரணமாகும். இந்நோய் காரணமாகத் தமிழ்நாட்டில் மோசமான புதிய சாதி முறை ஒன்று அரங்கேறி வருவதும் அதிர்ச்சியைத் தருகிறது.

1967-க்கு முன் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர்களும் ‘காமராசர், பக்தவத்சலம், அண்ணாதுரை’ என்றே அவர்களின் பெயர்களால் அழைக்கப் பட்டார்கள். இன்றைக்குத் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயரைச் சொன்னால் அவமரியாதை என்று கருதும் அளவுக்கு அடிமைக் கலாச்சாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பிராமணர்களுக்கும் பண்ணையார்களுக்கும் கிராமத்தில் இருந்த மரியாதையை விடப் பயம் கலந்த கூடுதல் மரியாதை இது. மாநில அளவில் உள்ள பெரிய தலைவர்கள் பின்பற்றிய (நேரு குடும்ப) வாரிசு அரசியலை இப்போது மாவட்ட அளவில் உள்ள பெரிய தலைவர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டு அரசியலில் கடைபிடிக்கப்படுவது ஜனநாயக நெறிமுறையா அல்லது மன்னராட்சியின் வாரிசு அரசியலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலில் விழுவதிலும் பல மணி நேரம் (சில சமயம் பல நாட்கள்) காத்துக் கிடந்து (பெரும்பாலும் பிரயோசனமற்ற) தரிசனம் பெறுவதிலும் வாழ்வு நிலை, அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படைகளிலும் பெரியாருக்கு முன் இருந்த சாதி முறையை விட மோசமான புதிய சாதிமுறை அரங்கேறி வருகிறது.

தமது இயக்கத்தில் உள்ளவர்களைக் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு அடிமைப் படுத்தி வைப்பது தலைவர்களின் சுயநல வாழ்வுக்கு மிகவும் உதவும். குறிப்பாகத் தம் மீது அறிவுபூர்வமான விமர்சனங்களை முன் வைப்பவர்களைத் துரோகிகள் (கறுப்பு) என்று பட்டம் கட்டித் தமது தொண்டர்களைக் தூண்டி அவர்கள் மீது வன்முறையை ஏவ அத்தலைவர்களால் முடியும். அப்பாவித் தொண்டர்களும் தம்மைப் போராளியாகக் கற்பனை செய்து கொண்டு உண்மையில் அடியாளாகச் செயல்படுவார்கள். தமது தொண்டர்களை ‘அந்தத் துரோகிகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற ‘புதிய தீண்டாமை’க்குப் பழக்கப்படுத்தும் போக்கும் வளர்ந்து வருகிறது. தமிழக அரசியலில், பொதுவாழ்வில் ரவுடிகளும் ரவுடியிசமும் பெற்றுள்ள செல்வாக்கிற்கும் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோயின் செல்வாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பின் தொகு விளைவாக விமர்சனங்கள் துரோகங்களாகச் சித்தரிக்கப்பட்டு எளிதில் சாகடிக்கப் படுகின்றன. ‘இந்தியாவின் முதல் சிம்பொனி’ பற்றிய விமர்சனங்கள் இவ்வாறு சாகடிக்கப்படுவதை நான் அனுபவித்து வருகிறேன்.

அரசியல் மட்டுமின்றி சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் இந்த நோய் உள்ளது. செல்வாக்கான நபர்கள் இசைத் துறையில் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் அவற்றிற்கு எவ்வளவு பெரிய பாராட்டுதல்களைப் பெற்றாலும் இப்போது உள்ள தமிழ்நாட்டுச் சூழலில் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே வாழ்வியல் புத்திசாலித்தனம் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்தேன். இக்கட்டுரை நான் எழுத அது துண்டுகோலாகவும் அமைந்தது.(2006 சனவரி 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது.)

சுயநலமில்லாமல் உண்மையில் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு உள்ளாகியிருப்பதால் அவர்களின் உழைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்சொன்ன புதிய சாதிமுறை அரங்கேற்றத்திற்கேத் துணை புரிந்து வருகிறது. குறிப்பாகத் திறந்த மனதோடும் (Open minded)  அறிவு நாணயத்தோடும் தொடர்ந்து திறனாய்வு செய்யும் திறன் நம்மையறியாமலேயே நம்மை விட்டு விலக நேரிடுகிறது.

திறந்த மனதோடும் அறிவு நாணயத்தோடும் தாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளை நிலைப்பாடுகளைப் பெரியாரைப் போல் தொடர்ந்து திறனாய்வு செய்யத் தவறினால் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு நாம் அடிமையாவதைத் தவிர்க்க முடியாது.

பெரியார் பிராமணர்கள் சங்கத்திலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பெரியாரியல் நிபுணரும் பெரியார் இயக்கக் கூட்டத்தில் இந்துத்வா நிபுணரும் உரையாற்றும் வகையில் கருத்து வேறுபாட்டை மதித்துக் கூட்டம் நடத்தும் ஆரோக்கியமான சூழல் வர வேண்டும். ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய் ஒழிய அது வழி வகுக்கும்.


           Is globalization a new Marxist Avatar?

      (Or Heterogeneous Societies and the Mode of Production)



Note: Prior to my music research, I was associated with Periyar Movement (social Atheist Body), specialising in Marxism. Failing to find a person in Marxist & ML groups to discuss the following during that period, I prepared a core draft while migrating to music research. After few decades, I had added the subsequent developments to the draft to circulate it and activate a debate on the relevance of ancient wisdom to the modern world.          

                                                   
Abstract:

The productive forces and production relations were conferred homogenous character in traditional Marxist view. This view in turn led to homogenous conception of the surplus product, the surplus value and the appropriation of the surplus product. Most of the Marxist predictions failed forcing the need to re-examine the postulates of Marxism

The fatalistic dimension (& the related fears) of Marxist theory becomes irrelevant to a heterogeneous society. In heterogeneous mode of production, the multi directional displacement of the contradictions may lead to a complex combination of peaceful and violent resolutions.

The socialist experiments in the former soviet bloc countries and China had proved that the financial capital is subservient to the power of contacts and networks. The above homogenous experiment done in the name of ‘free labour’ Marxism, is now repeated in the name of free capital through globalisation. An open minded review of ancient thoughts in our heritage in modern context may have the keys to understand the heterogeneous mysteries and their relation with globalisation.

Introduction – The Need to re-examine the postulates of Marxism

Before discussing the relevant aspects of the concept of the mode of production, let us  recall that in traditional Marxist view, the social history was divided into primitive, slave, feudal, capitalist and future socialist-communist phases identifying each phase with a particular mode of production. In other words each phase was considered to have a homogenous society having a homogenous mode of production in this over simplified view. As more and more details of past history in different parts of the world unfold, it is becoming clear that these divisions were oversimplified.  Obviously the productive forces and production relations were conferred homogenous character in such a traditional Marxist view. This view in turn led to homogenous conception of the surplus product, the surplus value and the appropriation of the surplus product. 

Most of the Marxist predictions failed, leaving the Marxists all over the world to look for a way out to rescue its relevance.  In the field of science, any failure of a prediction on the basis of a theory will lead to a re-examination of the postulates. One such effort in the case of Marxism will be to a re-examination of its postulates.


Homogeneous & heterogeneous dimensions of the mode of production

In the homogeneous conception, the contradictions in a homogenous society with homogenous mode of production will have a positive unidirectional progression towards maturing and bursting giving birth to a higher phase of society with higher mode of production. But in a heterogeneous society exhibiting heterogeneous character in the mode of production, the contradictions will have a multi directional displacement ruling out positive unidirectional progression towards maturing and bursting giving birth to a higher phase of homogenous society with higher homogenous mode of production. The multi directional displacement of the contradictions may lead to a complex combination of peaceful and violent resolutions.  Thus the fatalistic dimension (& the related fears) of Marxist theory (A feudal society is certain to transform to capitalistic first and socialistic next) becomes irrelevant to a heterogeneous society.

To understand the shortcoming of the homogenous conception of a society, mode of production, surplus product, surplus value and the appropriation of the surplus product, let me illustrate it with my experience.

During 1980’s I was a visiting a village in a backward area in Tamilnadu, South India to give a lecture to a group of youth. Due to poor public transportation facilities I stayed there overnight. To my total surprise, I found villagers purchasing in a small shop consumable items like washing soap manufactured in Bombay under a license from an MNC. Instead of cash, they were paying the paddy. I was witnessing a commodity exchange involving a capitalistic product in a village where the mode of production mainly in agriculture involved tools of early colonial period.

Most of the villages bordering around the districts Pudukkottai, Ramnad and Madurai in Tamilnadu were like that. Most of these villages had a small town at a distance of about 30 K.M where no such commodity exchange was in practice. Even during 1980’s Tamilnadu was one of the well developed states in India leading in literacy next only to Kerala.

Unlike the above example, many parts in the under developed and developing world have been compartmentalised into different kinds of undeveloped/unevenly developed societies. In other words, world economy is subjected to different kinds of heterogeneous mode of production in different countries.

What I witnessed was a unique case of heterogeneous society exhibiting heterogeneous character in the mode of production, surplus product, surplus value and the appropriation of the surplus product.


The Socialist experiments and a new breed of capitalists

The socialist experiments in the former soviet bloc countries and China in fact turned out to be futile experiments of imposing homogeneous character on the societies which were basically heterogeneous. The segregation of financial power and political power coalesced into a complex one through these experiments. These experiments resulted in a new breed of capitalists who reaped profits not possible by the previously known capitalists. These new type of capitalists invested more in developing contacts and networks than any financial investment. In fact they have proved that the financial capital is subservient to the power of contacts and networks. The mathematical equations used by Karl Marx in his Das Capital did not take into account the heterogeneous dimension and financial value of contacts and networks. Those simple equations will become more complex if these factors were taken into them.


Free labour and Free capital experiments

It is interesting and pathetic that the above homogenous experiment done in the name of ‘free labour’ Marxism, is now repeated in the name of free capital through globalisation. Encouraging human tendency to be lethargic with addictions to idiot box and handy gadgets, easy & quick learning for quick earning and converting human beings into consumer thirsty robots, seemed to be the mechanism of this homogenous experiment. This mechanism is developing a culture of imitation and comparison killing creativity and originality wherever it spread. The key players also seemed to have become a special category of human robots that did not care for anything except material success. Due to the decline in the spiritual dimension and respect for the heritage, the loss of a valuable heritage museum in Iraq was not felt even by the so called civilized world.

No wonder USA, once the leading force of the above mechanism of globalisation, had started reaping the consequences, becoming a victim in social and economic terms, now struggling for a way out through protectionist measures. India and China, the two countries with rich ancient heritage had become the engines of the world economy and the very survival of USA depended on these two countries.

More interesting and pathetic in this new experiment is the mode of appropriation of not only the heterogeneous surplus product but also the natural resources. Spiritual dimension of the people and their heritage have become victims in this senseless experiment. A proper theoretical framework to understand this kind of appropriation and the nature of forces behind this may reopen a review of Marxist concept of mode of production with heterogeneous dimension.

Globalisation started when human beings started to travel to distant places. Following a non-linear path depending on the development in technology and social changes, it had undergone several transformations. Its present avatar propelled by reckless thirst for profits is endangering the very survival of the world. This awareness in turn had drawn the attention of all interested in preserving the world. Hence globalisation is under review even by those benefited by it, in view of its (and theirs) uncertain future.


The relevance of the ancient wisdom to the modern world

Globalisation must take into account the heterogeneous dimension of the society if it has to succeed to serve world interest upholding meaningful democracy, freedom and well being of the people world wide. This enquiry will also have to take into account pre-Marxist philosophies. Probably an open minded review of ancient thoughts in our heritage in modern context may have the keys to understand the heterogeneous mysteries and their relation with globalisation.

For example, I had discovered ‘Musical Threads’ in ancient Tamil texts. The discovery will be valuable to the Music Information Technology. The world renowned expert in the new research field of MICROSOUND, Prof.Curtis Road (Media Arts & Technology, University of California) had commented on this discovery as “It sounds potentially interesting”. Also I compose music (to listen visit http://muxel.sg/) using computer following a methodology developed on the basis of my discoveries in the ancient texts of Tamil and Sanskrit.

 Late Dr.V.Ganapathi Sthapati (http://www.vastuved.com/ ) had discovered the five-fold
(Architecture, Music, Sculpture, Dance & Poetry) technology related to Maya in South America and Mayan in ancient Sanskrit and Tamil texts. Under his guidance, I had discovered the logic behind 'de-freezing music from the building architecture', for developing computer based application software.  

The treasures of ancient wisdom in our ancient texts await open minded exploration to discover the keys to solve the problems of the modern society as well as to develop new technologies. The pitfalls in the unidirectional linear concept of the homogeneous mode of production in Marxism may be identified and revised to include the multidirectional nonlinear mode of production by referring to the ancient texts in the light of the modern technologies.

-------------------------------------------------------------------------------

Thursday, November 28, 2013


தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (4)

 

             உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள்




தமிழரின் அடையாளக் கூறுகள் பற்றி தெளிவற்ற‌, உணர்ச்சிபூர்வ‌ போதை உணர்வுக்கு ஆட்பட்டு, 'தீக்குளிக்க, போராட', தயாராக உள்ள இளைஞர்கள் , பெரும்பாலும் கிராமப்புறம்/நகர்ப்புற அடித்தட்டு பின்னணியுடையவர்களாக, பெரும்பாலும் தமிழ் மட்டும் படித்தவர்களாக, கடுமையான தாழ்வு மனப்பான்மையை ( முன்னர் குறிப்பிட்ட உளவியல் ஆய்வின்படி ஈடுகட்டும் வகையிலான) முரட்டுத்தனமான உயர்வு மனப்பான்மையில் மறைத்து, கோபம், வெறுப்பு, பழிவாங்கல், வன்முறை போன்ற‌ எதிர் உணர்வு தீனிகளிலேயே வளரும்,  'வலியவராக' 'செயல்படுகின்றனர்'.

இத்தகைய போக்கானது, மீண்டும் மீண்டும், வெவ்வேறு வகையிலான, 'முள்ளி வாய்க்கால்' அழிவுகளையே, அப்பாவித் தமிழர்கள் குறிப்பிட்ட கால‌ இடைவெளிகளில் சந்திக்கும் அளவுக்கு, தற்கொலைச் சுற்றாக அமைந்து விடும்.

இத்தகைய உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கியவர்களுக்கு, அறிவுபூர்வமான பார்வை, அதன் விளைவாகவே மங்கிவிடும். தமது தமிழறிவை வளர்ப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள‌ பிரச்சினைகளை ஆழமாக விளங்கிக் கொள்வது, அவற்றை அறிவுபூர்வமாக எவ்வாறு களைவது என்பது போன்ற‌ ஆக்கபூர்வமான வழிகளில் தம்மை வளர்த்துக் கொள்வதும், தமிழ், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட குறைகளைக் களைவதிலும் அவர்களால் ஈடுபடுவதற்கான ஆர்வமும், திறமையும், குறையத் தொடங்கும். சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளுக்காக ஏங்கும் மனநோயாளிகளாக, தம்மை அறியாமலேயே, அவர்கள் மாற்றம் பெறுவார்கள். (பலவருடங்களுக்கு முன் தி.மு.க சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தின்போது, காவல்துறை கூட்டத்தைக் கலைக்க சுட்டதில் ஒரு இளைஞர் மரணமடைந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. கலையுமாறு எச்சரித்த காவல்துறையினர் முன் குடிபோதையில் சென்று, தைரியமிருந்தால் தனது ஆண்குறியை நோக்கி சுடுமாறு சவால் விட, அவ்வாறே நடந்து அவர் பலியானதாக நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். அந்த அளவுக்கு உணர்ச்சிபோதைப் பாதையில் தமிழ்நாடு பயணித்தது. ) 

              தமிழையே' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயம் 


தம்மையும், தமது குடும்பத்தையும் ( தமது குழந்தைகள் படித்தாலும், படிக்கா விட்டாலும்) நன்கு செட்டில் செய்து, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்து, வெளியில் 'தமிழ் வழிக் கல்வி'க்காக போராடும், 'தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும்' வாழ்வதாக காட்டிக் கொள்ளும் தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்களின்'போராட்டங்களுக்கு' 'விட்டில் பூச்சிகளாக' வீணாகும் திசையில் இவர்கள் பயணித்தார்கள்.  இவர்களில் சுயநலமும், குறுக்கு புத்தியும்(cunning)  உடையவர்கள், 'விவரமான' இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட 'குட்டி'த் தலைவர்களாக வளரும் போக்கில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது இத்தகைய இரண்டாம் கட்ட, மூன்றாம்  கட்ட 'குட்டி'த் தலைவர்கள் புற்றீசல் போல் வளர்ந்து வருவதும்,  தம்மையும், தமது குடும்பத்தையும் அழித்துக் கொள்ளும் போக்கிலான 'விட்டில் பூச்சிகள் ' எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதும், 'தமிழ்' சம்பந்தப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், வெட்டவெளிச்சமாகி வருகிறது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கேடாக விளங்கிய,  அறிவை அடகு வைத்த 'உணர்ச்சி பூர்வ‌ போதைப்' போக்கு வலிவிழந்து வருவதானது, இதனால் தெளிவாகிறது. 

அதே நேரத்தில், பொது மக்கள், குறிப்பாக நன்கு படித்து நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர்கள் ( மற்றும் அவர்கள் வழியில் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி நர்சரியில் சேர்த்து பயணிக்கும் கூலித் தொழிலாளர்கள்) மத்தியில், 'தமிழ், தமிழ்' என்று பேசுபவர்கள் பற்றிய இழிவான அபிப்பிராயமும், ஆங்கில வழிக் கல்வி மூலமாக வேர் பிடித்து வளர்ந்து வரும் திரிந்த மேற்கத்திய வாழ்வு முறை காரணமாக‌,  தமிழையே,  அவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில், ' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயமும் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே பார்த்த தமிழுக்கான ஆபத்துகளின் பின்னணியில், இது 'தமிழ் அழிவு சுனாமி' தொடக்கத்தின் முதல் அறிகுறியாகவும் இருக்கலாம். 

தமிழரின் அடையாளத்தோடு நெருக்கமான தொடர்புடைய பிரச்சினைகளின் கதி?


தமிழ்நாட்டில் தமிழ் உணர்வில் தீவிரமாக செயல்படும் மனிதர்களோ, கட்சிகளோ, தலைவர்களோ, தமிழரின் அடையாளத்தோடு நெருக்கமான தொடர்புடைய‌  கீழ்வரும் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட்டார்களா? கவலைப்பட்டு, அவற்றை களைய செயல்பட்டார்களா? என்பது, அவர்களின் மனசாட்சிக்குத் தான் தெரியும். இப்பிரச்சினைகள் பற்றி, அவர்களில் பலருக்கு ஏதும் தெரியாதிருந்தாலும், ஆச்சரியமில்லை. 


1.    ஒரு இனத்தின் அடையாளம் அழிவதற்கு முன், அதன் மொழியின் வீழ்ச்சியில் தான் அது தொடங்கும். மொழியின் வீழ்ச்சியானது, பயிற்று மொழி வலுவிழப்பில் ஆபத்தான கட்டத்தை அடையும்.1970 களுக்கு முன்,  உயர்நிலைப் பள்ளி வரை மிகவும் வலுவுடன் இருந்த தமிழ்வழிக் கல்வியானது, அதன்பின் ஆங்கிலவழிக் கல்வி புற்றீசல் வளர்ச்சியில் பாதிக்கப்பட்டு, இன்று தமிழ்வழி ஆரம்பப்பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும் அபாயத்தில், மரணப்படுக்கையில் இருக்கிறது . ( தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சியும், மீட்சியும்- http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ) 


2.   பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை விளங்கி, விவாதிக்க ஆர்வமும், புலமையும் வேகமாக வற்றும் அளவுக்கு, தமிழ் அறிவுப்பாலைவனமாக தமிழ்நாடு மாறிவருகிறது.( தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும்- http://tamilsdirection.blogspot.in/) 


3.  தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலீஸின் அசுரவளர்ச்சி வேகத்தில், தமிழும் மரணப் படுக்கையில் உள்ளது. 


4.  வெள்ளைக்கார ஆட்சியில் அடையாளம் கண்டு, அச்சில் வெளியிடப்பட்ட  கல்வெட்டுகள் உள்ளிட்டு, தமிழரின் வரலாற்றுச் சான்றுகளான‌  பல கல்வெட்டுகள், கடந்த 30 வருடங்களில், நம்ப முடியாத அளவுக்கு, 'குவாரி'வியாபாரிகளின் லாபத்திற்காக, மலைகளில் அழிக்கப்பட்டு வருகின்றன. (உலகில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இது நடந்திருந்தால், எந்தவித தூண்டுதலுமில்லாமல் தாமாகவே, மிகப் பெரிய போராட்டம் வெடித்திருக்கும். தமிழ்நாட்டிலோ, இது போன்ற வழிகளில்  'பணக்காரர்' ஆனவர்கள், தமக்கு ஒத்து வரும் 'தமிழ்க்' குழுக்களின் புரவலராக இருக்கும் போது, இது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையாகக் கூட வெளிப்படவில்லை.) 


5. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்டு அனைவரும், 1960-கள் வரை விளையாடி வந்த, உள்ளும்(indoor) வெளியிலுமான(outdoor)  அறிவு வளர்ச்சியை உள்ளடக்கிய  விளையாட்டுகள், பெரும்பாலும் இன்று அழிந்து விட்டன.


சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளில் வளரும் 'தமிழ் இன உணர்வு' போதையில் இருப்பவர்களுக்கு, ஆக்கபூர்வமான உணர்வுகள் அடிப்படையில் விளங்கி களைய வேண்டிய மேலேக் குறிப்பிட்ட, தமிழரின் அடையாளம் சம்பந்தப்பட்ட‌ , பிரச்சினைகள், அவர்கள் பார்வைக்குப் படாததில் வியப்பில்லை.

                        ஆக்கபூர்வமான திசையில் பயணிப்பது

உலகம் முழுவதும் நன்கு படித்து , தொடர்ந்து தம்மை வளர்த்துக் கொள்ளும் போக்கிலான, மக்கள் அனைவரும் பெரும்பாலும் ஆக்கபூர்வமான திசையில் பயணிப்பதிலேயே ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறர்கள். எதிர் உணர்வுகளின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வாழும் மனிதர்கள், பலவகையிலான உடல் சம்பந்தப் பட்ட நோய்களுக்கும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் உள்ளாவார்கள் என்பதையும், ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

இந்தப் பின்னணியில் ஓற்றுமையா? பிரிவினையா? என்ற கேள்விகளை அடுத்து ஆராய்வோம்.

                         ஐரோப்பிய ஒன்றியம் போல், சார்க் ஒன்றியம்


ஆங்கில வழிக் கல்வி ஆதிக்க சூழலில், தமிழ்நாட்டில் கிராமப்புற அளவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்ப் படிப்பு மாணவர்கள் எண்ணிக்கையும், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வேகத்தில், 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருவதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை மறுத்த, 'தமிழர்' என்ற அடையாளம் வலுவிழந்து வருவதும் பற்றி, ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்வழி மீட்சி உள்ளிட்டு, தமிழரின் அடையாளக் கூறுகளை, அழிவிலிருந்து காப்பாற்ற, தமிழ்நாட்டில் வலிமை பெற்று வரும், 'இந்தியர்'என்ற அடையாளத்துக்கு இணக்கமாகவே 'தமிழர்' என்ற அடையாளம் பயணித்தாக வேண்டியது உண்மையா? இல்லையா? என்பதும் முக்கியமானதாகும். 

ஒற்றுமையா, பிரிவினையா என்ற கேள்வியை விட, ஆட்சியில் மக்கள் நலன்கள், எந்த அளவுக்கு நியாயமாக பாதுகாக்கப் படுகின்றன, என்பதே முக்கியமாகும். உலகமயமாக்கலில், மக்களின் நலன்களை, ஆட்சியாளர்கள் தமது சுயநலத்திற்காகக் காவு கொடுக்காமல் இருப்பது முக்கியமாகும். சர்வதேசச் சூழலில் சாத்தியமான, மக்களுக்கு பெருங்கேடு விளைவிக்காத முறையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வதே புத்திசாலித்தனமாகும். பிரச்சினைகள் காரணமாக ஒரு இனத்தின் மீதோ, நாட்டின் மீதோ, சாதியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பை வளர்ப்பது சுயநலப் பேய்களின் கொண்டாட்டத்திற்கே வழி வகுக்கும். 

ஒற்றுமையானாலும், பிரிவினையானாலும், மக்களின் நலன்களுக்கு கேடாகவும், சுயநலத் தலைவர்களுக்குச் சாதகமாகவும், அமைவது பாதகமானதே.

இன்றைய சர்வதேச சூழலில், தனி நாடுகளின் சாவரினிட்டியின் தனித் தன்மை மக்கள் நலனைப் பாதுகாப்பதில், அரசின் வலிமை பலகீனமாகி வருவதை உணர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம், யூரோ நாணயம் என்ற ஒற்றுமையை நோக்கி ஐரோப்பிய நாடுகள் பயணிக்கும் காலக் கட்டம் இது. ஐரோப்பிய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்திய துணை கண்டத்திலுள்ள, சார்க் நாடுகளிலுள்ள மக்களிடையே பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில், வேற்றுமையில் ஒற்றுமைக்கான கூறுகள் அதிகம் உள்ளன. அக்கூறுகளை வ‌லிமைப்படுத்தும் வகையில், பொதுவாழ்வைப் பிழைப்பாகக் கொள்ளாத, மனிதாபிமானிகள் செயல்படத் தொடங்கினால், வேற்றுமையைப் பகையாக்கி, அப்பாவி பொதுமக்களையும், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்திப் பிழைக்கும் மோசகாரக் கும்பலைத் தனிமைப் படுத்தி வலுவிழக்கச் செய்ய முடியும். பாரம்பரியம், பண்பாடு ஒற்றுமைகள் வலிவு பெறும் போது, அரசியல் ஒற்றுமை அதன் பின்னால் வந்தே தீரும். ஐரோப்பிய ஒன்றியம் போல் சார்க் ஒன்றியமும் மலர்வதில் தான், சார்க் நாடுகளிலுள்ள மக்களின் பிரச்சினைகள் பெருமளவில் தீர்ந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.