Thursday, November 16, 2017

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' (Tamil Chair) (1);


சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டம் தொடங்கப்படுவது அறிந்து, அறிவுபூர்வ பார்வையை இழந்து, உணர்ச்சிபூர்வமாக மகிழ்ந்து பாராட்டாமல்;

சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்ப்பது தொடர்பான ஹார்வர்ட் பல்கலைக்கழகத் திட்டமானது, பேரா.செல்டான் பொல்லாக் தலைமையில் செயல்படுவது தொடர்பான‌ குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பினை 132 சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

அதே செல்டான் பொல்லாக் தமிழைப் பற்றி, அபத்தமான, தவறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது தொடர்பான, எனது அறிவுபூர்வ எதிர்ப்பு முயற்சிகளை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன்.

“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உடனே யார் யார் கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்; என்பதைப் பட்டியலிட வேண்டியதில்லை. ஆனால் அதே கருத்தையும், அதை விட இன்னும் அபத்தமான தமிழைப் பற்றிய கருத்துக்களையும், உலக அளவில் மிகவும் மதித்துப் போற்றப்படுகின்ற அமெரிக்க எழுத்தாளர் Sheldoon Pollock - ஷெல்டான் போல்லாக் – ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (permanent black - Delhi  2007) என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 9 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ளகருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?” ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டி வருபவர்கள் உள்ளிட்டு, தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் எல்லாம் உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர் ஒருவர், தமிழை இழிவுபடுத்தியதை இது வரை கண்டு கொண்டார்களா? இனியாவது கண்டு கொண்டு, தமது எதிர்ப்பினை பதிவு செய்வார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று பாதுகாப்பு வளையத்தில் (Comfort Zone)  தொடர்ப் போகிறார்களா?

ஆனால் சமஸ்கிருதம் தொடர்பான தவறான ஆய்வுகளை வெளிப்படுத்திவரும் செல்டன் பொல்லாக்குடன், சமஸ்கிருத அறிஞர் ராஜிவ் மல்கோத்ரா அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டுள்ளதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( http://tamilsdirection.blogspot.sg/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

ஹார்வார்ட் பல்கலைக்கழகமானது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது தொடர்பான செய்திகளும் ஊடகத்தில் வெளிவந்துள்ளன. ( https://www.theguardian.com/business/2009/sep/11/harvard-yale-financial-crisis  & https://www.forbes.com/forbes/2009/0316/080_harvard_finance_meltdown.html#58e8884351dd  )

ஏற்கனவே ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ( https://sas.fas.harvard.edu/tamil )

அந்த நிலையில் 'தமிழ் இருக்கை' என்று தொடங்குவதற்காக அந்த பல்கலைக்கழகத்திற்கு தரப்படும் நிதியின் அடிப்படையில், வருடம் தோறும் எவ்வளவு நிதி செலவிடப்பட்டு, என்னென்ன திட்டங்கள் தமிழின் வளர்ச்சிக்காக செயல்படப் போகின்றன? என்ற கேள்விகளுக்கான விளக்கமானது, ஹார்வார்ட் பல்கலைக்கழகம் சார்பில் வெளிவந்ததாக தெரியவில்லை; வெளிவந்திருந்தால், அதை தெரிவிப்பவர்களுக்கு நன்றியுடன் அது தொடர்பான எனது கருத்துக்களை பதிவு செய்ய முடியும். இல்லையென்றால், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் நிதி நெருக்கடிக்கு உதவுவதே 'தமிழ் இருக்கையின்' முக்கிய பலனாக அமைந்து விடுமோ? என்ற ஐயமானது நீடிக்கும்.

அது மட்டுமல்ல, முதலில் குறிப்பிட்டுள்ளவாறு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டத்தில், சமஸ்கிருதத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி உலகம் முழுவதும் உள்ள சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதையும் கணக்கில் கொண்டால்;

அதே போல, ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை மூலமாக தமிழுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதா

தமிழை இழிவுபடுத்திய செல்டன் பொல்லாக் மேலே குறிப்பிட்டுள்ள ஹார்வார்ட் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், அவர் தமிழை இழிவுபடுத்தியதை, ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்க்கும் தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் அதை எதிர்க்கும் துணிவின்றி இருப்பதும் உண்மையானால், அந்த ஆபத்துகள் நிஜமாகி விடாதா? (http://harvardtamilchair.org/faq )

செல்டன் பொல்லாக் இந்துத்வா எதிர்ப்பாளர். அதனால் அவர் தமிழை இழிவு படுத்தினாலும் பரவாயில்லை, என்று 'இந்துத்வா எதிர்ப்பு' உணர்ச்சிபூர்வ போதையில் தமிழ் புலமையாளர்கள் அதை கண்டு கொள்ளவில்லையாதிராவிட கட்சிகளின் ஆட்சிகளில் 'இந்துத்வா எதிர்ப்பும்', 'தமிழ் இன உணர்வும்' ஊழல் சுனாமியில் தமிழ்நாட்டை சீரழிக்க,  'சமூக முதுகெலும்பாக', அவரவர் 'தகுதி, திறமை'களுக்கு ஏற்ப 'பலன்கள்' அனுபவித்து (ஆனால் தமக்கு நெருக்கமான சமூக வட்டத்திற்குள் மட்டும் முணகி) உதவிய 'இந்துத்வா எதிர்ப்பு முற்போக்குகள்’ எல்லாம், தமிழ்நாட்டை கொள்ளையடித்ததை கண்டு கொள்ளாதது போலவே, அவர்கள் எல்லாம் 'இந்துத்வா எதிர்ப்பு' செல்டன் பொல்லாக் தமிழை இழிவுபடுத்தியதையும் கண்டுகொள்ளவில்லையா?  

காலனிய சூழ்ச்சியில் தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, அந்த சூழ்ச்சியில் 'பெரியார்' .வெ.ரா அவர்கள் சிக்கி, திராவிடர்/திராவிட/தமிழர் அடையாளக் குழப்பங்களை அரங்கேற்றி, தமிழ் இலக்கியங்களையும், பாரம்பரியம், பண்பாடுகளையும் தமிழர்க்கு கேடென அறிவித்து, 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்ததை, அறிவுபூர்வமாக எதிர்த்த மிழறிஞர்கள் யார்? 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கிய தமிழறிஞர்கள் யார்? (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (4);  'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?’; http://tamilsdirection.blogspot.sg/2015/06/depoliticize-4.html )

'தனிமனித அளவில் எவ்வளவு மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும், .வெ.ரா அவர்களுக்கு 'இடிப்பார்களாக' இல்லாமல் பயணித்த, .வெ.ராவிற்கு நெருக்கமான, தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், மேலே குறிப்பிட்ட 'அடையாள அழிப்பிற்கு' பங்களித்த சமூக குற்றவாளிகள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.' ( ‘'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' .வெ.ராவா? அந்த சீரழிவுப் போக்கில்தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும்  பெற வேண்டிய, ஆய்வுகளின் பலன்கள் தாமதமாகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_10.html )

அது போலவே, உலக அளவில் பெரும் செல்வாக்குள்ள செல்டன் பொல்லாக் தமிழைப் பற்றி வெளிப்படுத்தியுள்ள தவறான ஆய்வு முடிவுகளை கண்டு கொள்ளாததமிழ் அறிஞர்களும், தமிழ் ஆதரவாளர்களும்சமூக குற்றவாளிகள் ஆக மாட்டார்களாசைவத்தின் 'தமிழ் அடையாள' புரவலர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகளின் ஆதரவோடு, 'குடி அரசு' இதழ் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள், திசை மாறி  'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பய‌ணித்ததை தடுக்காமல், ஈ.வெ.ராவிற்கு நெருக்கமாக பயணித்த அனைவருமே சமூக குற்றவாளிகள் ஆவர். 

இன்று இந்துத்வாவை 'தமிழ் எதிர்ப்பாக' கருதும் உணர்ச்சிபூர்வ பிரமை நோயில் பலரும் சிக்கி, ஆர்.எஸ்.எஸின் 'தாய்மொழிவழிக் கல்வி மீட்பு' முயற்சிகளை எல்லாம், தமிழ்வழிக்கல்வி மீட்புக்கு பயன்படுத்த தயங்கி வருகிறார்களா? (http://tamilsdirection.blogspot.co.uk/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ் அழிந்தாலும் பரவாயில்லை, அந்த ஆதரவு தேவையில்லை, என்று அவர்கள் எல்லாம் கருதுகிறார்களா? அவ்வாறு பயணிப்பவர்களை எல்லாம் ஓரங்கட்டி, தமிழ்வழிக் கல்வியும்,( எனவே தமிழும்) மீட்கப்படும், என்பதும் எனது கணிப்பாகும்; லத்தீனைப் போல சமூக உயிரிழந்த தமிழுக்கான முயற்சியாக 'ஹார்வார்ட் தமிழ் இருக்கை' மாறாமல்.

1967க்கு முன், இது போல தமிழுக்கு எதிரான ஆய்வு முடிவுகள் வெளிவந்திருந்தால்;

இன்றுள்ள தமிழ்நாடு போல இல்லாமல், வலிமையான அறிவுபூர்வ மறுப்புகள், பல தமிழறிஞர்களிடமிருந்தும் வெளிவந்திருக்கும். செல்டன் பொல்லாக்கின் நூலை படித்து விளங்கிக் கொள்ளும் ஆங்கில அறிவுள்ள அண்ணாவும், நிச்சயமாக அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பார், என்பதும் என் கருத்தாகும்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு 192) என்பதை மறந்து, தம்மிடம் உள்ள குறைகளை அடையாளம் கண்டு களையாமல், காலனிய சூழ்ச்சியில் சிக்கி, சமஸ்கிருதத்தின் மீதும், 'பார்ப்பனர்கள்'மீதும் பழி சுமத்தி, பயணித்த போக்கில், பதர்களின் ஆதிக்கத்தில் தமிழ் சிறையுண்டதால், செல்டன் பொல்லாக் போன்றவர்கள், எதிர்ப்பின்றி தமிழை இழிவுபடுத்தும் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறார்களா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது.

திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது தொடர்பாக, பாமரத் தமிழன் மகிழ்வது இயல்பே.

அந்த மொழி பெயர்ப்புகளில் பிழை இருக்கிறதா? அந்த பிழைகள் காரணமாக, அம்மொழி பெயர்ப்புகளை நம்பி, உலகில் உள்ள அறிஞர்கள் எல்லாம் தமிழ் தொடர்பாக மேற்கொண்டு வரும் ஆய்விகளில் தவறுகள் ஏற்படாதா?

என்ற கவலையானது உலகில் உள்ள தமிழ் அதரவு புலமையாளர்களுக்கு இருக்கிறதா?

சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களுக்கு சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் தொடர்பாக, மேலே குறிப்பிட்டுள்ள கவலையானது, தமிழ் ஆதரவு புலமையாளர்களுக்கு தமிழ் தொடர்பான மொழிபெயர்ப்புகளில் இல்லையா?

என்ற ஐயமும் எனக்குள்ளது.

அல்லது பாமரத் தமிழன் மகிழ்வது போலவே, தமிழ் ஆதரவு புலமையாளர்கள் எல்லாம் உலக மொழிகளில் திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்ததே போதும், என்று மகிழ்ந்து வாழ்கிறார்களா?

இல்லையென்றால், கடந்த சுமார் 10 வருடங்களாக;

உரையாசிரியர்களையும், அகராதிகளையும் நம்பி மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஆய்வுகளிலும், மொழிபெயர்ப்புகளிலும் உள்ள குறைபாடுகள் பற்றி, நான் வெளிப்படுத்திவரும் சான்றுகளை எல்லாம் இதுவரை எவராவது மறுத்துள்ளார்களா? இனியாவது மறுப்பார்களா? (https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டம் தொடங்கியதை, சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் கண்காணித்து, தவறுகளை சுட்டிக் காட்டியது போல, மத்திய அரசின் செம்மொழி நிறுவனம் தொடர்பான செயல்பாடுகளை, தமிழ் ஆதரவு புலமையாளர்களில் எவராவது கண்காணித்து, குறைகளை சுட்டிக்கட்டியுள்ளார்களா? அல்லது 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்' நோக்கில், தமக்கான பலன்களை அனுபவிப்பதிலேயே கவனம் செலுத்தினார்களா? முறையான விசாரணை மூலம் தவறுகளை அடையாளம் கண்டு களைந்து, சரியான சட்ட திட்டங்களை உருவாக்கி, அந்த முறையான சட்ட திட்டங்களின் அடிப்படையில் அந்நிறுவனம் பாரபட்சமின்றி தமிழின் வளர்ச்சிக்கு செயல்பட வேண்டுமானால், அந்த திசையில் மோடி அரசு செயல்பட, தமிழ்நாட்டில் உள்ள 'உணர்ச்சிபூர்வ இந்துத்வா எதிர்ப்பு' அனுமதிக்குமா? தமிழ் ஆராய்ச்சிக்கு என்று நிறுவப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகமும், முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், நிதி நெருக்கடிகளில் சிக்கி பயணித்து வருவது உண்மையா? ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையும் (Transparency), குறைகளை பொறுப்பேற்கும் தன்மையும் (Accountability), அமுலாக்கி, 'திராவிட அரசியல் ஊழல்' வழிகளில் புகுந்துள்ள‌ பதரானவர்களை வெளியேற்றி, மணியானவர்களை ஈர்த்து, நிதிப்பற்றாக்குறையின்றி செயல்பட வைப்பதே, இன்றைய அவசிய, அவசர தமிழ் மீட்புப் பணி என்பதும் எனது கருத்தாகும்.  

தமிழை வைத்து பணமோ, புகழோ ஈட்ட வேண்டிய அவசியமானது, எனக்கில்லை என்பது மட்டுமல்ல:

பணமும் புகழும் வந்து சேரும் ஆய்வுகளில் நான் ஈடுபட்டுள்ள நிலையில் ( http://drvee.in/?page_id=21 );

தமிழ் தொடர்பான ஆய்வுகளில் ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?” என்று என்னிடம் நேரில் கேட்ட தமிழ்ப் புலமையாளர்களும் இருக்கிறார்கள்.

'தமிழில் செய்துள்ள ஆய்வுகளுக்கு பதிலாக, இந்தியாவில், உலகில் வேறு எந்த மொழிகளிலாவது ஆய்வு மேற்கொண்டிருந்தால், உங்களை தலை மேல் வைத்து புகழ்ந்திருப்பார்கள்' என்று என்னிடம் தெரிவித்தவர்களிடம்;

"இசை மொழியியல் (Musical Linguistics)  மற்றும் இசையியல் (Musicology) தொடர்பாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இல்லை என்று நான் கருதுவதால், வேறு எந்த மொழியிலும் நான் ஈடுபட்டிருந்தாலும், இந்த அளவுக்கு கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டிருக்காது" என்றும் தெளிவுபடுத்தினேன்.

எனவே ஹர்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பாக தொடங்கப்பட்ட திட்டமானது சமஸ்கிருதத்திற்கு கேடாகும் என்று சமஸ்கிருத ஆதரவு புலமையாளார்கள் எதிர்த்து வரும் பின்னணியில்;

அந்த சமஸ்கிருத திட்டத்தின் தலைவரான செல்டன் பொல்லாக் தமிழுக்கு கேடாகும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள சூழலில்;

ஹார்வார்டில் தொடங்கும் தமிழ் இருக்கையால், வருடத்திற்கு எவ்வளவு நிதி செலவிட்டு என்ன திட்டங்கள் செயல்படப் போகின்றன? அத்திட்டங்களால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படுமா? தீங்கு நேரிடுமா? என்ற கேள்விகளை, எனது சமூக கடமையாக கருதி, தமிழ் ஆதரவு புலமையாளர்களை நோக்கி முன் வைக்கிறேன்; என் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் எல்லாம் இது போன்ற 'சர்ச்சைகளில்' ஈடுபடுவதை தவிர்க்குமாறு என்னை அறிவுறுத்தியுள்ள நிலையிலும்.

என்னை போற்றுவதும், தூற்றுவதும் அவரவர்க்கு உள்ள உரிமையாகும்

‘The Theory of Moral Sentiments’ (by Adam Smith; https://en.wikipedia.org/wiki/The_Theory_of_Moral_Sentiments) என்ற நூலில் அறிவுறுத்தியுள்ளவாறு, எனக்குள் உள்ள மூன்றாம் மனிதரின் (3rd person) எச்சரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions) ஒன்றி வாழ்வதால், தமிழின் நலனுக்காக இந்த எச்சரிக்கையை முன் வைக்கிறேன். 

Note: Also visit : ‘Did Tamil & Sanskrit have common origin? Are the Tamils suffering from the deep rooted inferiority complex, after 1967?’; http://tamilsdirection.blogspot.co.uk/2017/04/sanskrit-have-common-origin-are-tamils.html

Sunday, November 12, 2017

அரசியல் கொள்ளையர்களுக்கு  எதிரான மத்திய அரசின் சோதனைகள்;


தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி ?                                                  


இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்டு உலகில் உள்ள நாடுகளில் 'மாட்டிக் கொள்ளாமல்' சட்ட விரோதமாக சம்பாதித்து, வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியுள்ளவர்களின் பட்டியலானது, 'பனாமா கோப்புகள்' (Panama Papers) என்ற பெயரில் 2015இல் வெளிவந்து, அந்த பதுக்கலுக்கு எதிரான முயற்சிகளின் வலிமையைக் கூட்டியுள்ளது. (https://en.wikipedia.org/wiki/Panama_Papers ) அதை தொடர்ந்து, கடந்த வாரத்தில் 'சொர்க்க கோப்புகள்' (Paradise Papers ) என்ற பெயரில், இன்னொரு பதுக்கல் பட்டியலும் வெளிவந்துள்ளது. (https://en.wikipedia.org/wiki/Paradise_Papers )

மேல்நடுத்தர, வசதி மிகு மனிதர்களில்  உள்ள அறிவுஜீவிகளில் பலர் பதுக்கல்காரர்களிடமிருந்து பல வகையில் பலன்கள் பெற்றுக் கொண்டு, 'யோக்கியர்களாகபுறத்தில் காட்சி தந்து, அந்தந்த நாடுகளில் பதுக்கலுக்கு துணை போகும் சமூக செயல்நுட்பமும் அம்பலமாகியுள்ளது. (Today it is these same golden figures with their offshore billions who host the fundraisers, hire the lobbyists, bankroll the think tanks and subsidize the artists and intellectuals.;  This is their democracy today. We just happen to live in it.; https://www.theguardian.com/commentisfree/2017/nov/09/paradise-papers-offshore-billionaires )

அந்த பதுக்கல் பணத்தினை மீட்டால், அமெரிக்காவில் ஏழை பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை சீரமைக்க முடியும்; குண்டும் குழியுமான சாலைகளையும் , ஆயுள் முடிந்து உடையும் நிலையில் உள்ள நெடுஞ்சாலை பாலங்களை சீரமைக்க முடியும்; என்பது போன்ற எழுச்சிகளும் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ( Think of all the young people saddled with catastrophic student-loan debt: we should have – could have – made that unnecessary. Think of all the decayed small towns, and the dying rust belt cities, and the drug-addicted hopeless: all of them should have – could have – been helped.

But no. Instead America chose a different project. Our leaders raised up a tiny class of otherworldly individuals and built a paradise for them, made their lives supremely delicious. Today they hold unimaginable and unaccountable power.; https://www.theguardian.com/commentisfree/2017/nov/09/paradise-papers-offshore-billionaires )

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசானது பதுக்கல்காரர்களின் செல்வாக்கிற்கும், பதுக்கலுக்கு எதிரான மக்களின் கோபத்திற்கும் இடையில் சிக்கி, தட்டுத்தடுமாறி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன..

தனியாக எந்த ஒரு நாட்டின் அரசும் அதில் வெற்றி பெற முடியாது, என்ற எதார்த்தத்தை உணர்ந்து, உலக அளவில் கூட்டு முயற்சிகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில், உலக பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 (G-20) அமைப்பின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் நானும் கையெழுத்திட்டுள்ளேன். ர்வமுள்ளவர்கள் கீழ்வரும் இணைய தளங்களுக்கு சென்று தங்களின் ஆதரவினை பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டிலும்  ‘ வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை ஊழல் வழிகளில், 'அதிவேக' பணக்காரர்களாக வலம் வரும் அனைத்து கட்சி அரசியல் கொள்ளையர்களையும் விசாரணைக்குட்படுத்தி, தண்டித்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான், தமிழ்நாடு உருப்படும்; என்ற கருத்தானது, நடுத்தர, ஏழை மக்களிடையே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அரசியல் நீக்கம் (Depoliticize) காரணமாக;

சாதாரண மக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான 'பிணைப்பு வலைப்பின்னலானது' (Link network) மறைந்து, 'ஆதாய வலைப்பின்னலின்' பலத்தில் பயணிக்கும், திராவிட/தேசிய/தமிழ் கட்சித் தலைவர்களின் கண்களுக்கு, அது தெரிய வாய்ப்பில்லை. (திருக்குறள் 573)

உயர் நடுத்தர(upper middle class), பணக்கார (affluent)  வசதிகளுடன், தாம் வாழும் 'பாதுகாப்பு மண்டிலத்தை' (Comfort Zone) விட்டு விலகிபார்ப்பவர்களுக்கு மட்டுமே, அது தெரிய வாய்ப்பிருக்கிறது.(.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது 'யோக்கியதைஎப்படி?’ ; http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வெண்டில் படித்த காலத்தில், அப்பள்ளியில் படித்த, இன்று உலகப்புகழ்  பெற்ற நடனக் கலைஞராக வாழும் அனிதா ரத்னம் அவர்கள், ஜெயலலிதா மீது, ஜெயலலிதாவின் அம்மா மற்றும் எம்.ஜி.ஆரை போலவே, சசிகலாவுக்கு இருந்த 'அதிகாரத்தை' கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

“Perhaps it was Sasikala, with her mostly rustic sensibilities who introduced a surreal atmosphere of court intrigue, grandiose financial chicanery and the phenomenon of obsequiousness in to the Maugham and Beatles loving, academically inclined and shy Brahmin born politico’s life. And perhaps like she had done with her mother and MGR before, Jayalalithaa”

தி.மு. ஆட்சியில் காவிரி, கச்சத்தீவு பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பையும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏற்பட்ட பாதிப்பையும் தீர்க்க, துணிவான ஆக்கபூர்வமான திசையில் செயல்பட்டவர்; இந்திய அளவிலும், உலக அளவிலும் முன்மாதிரியாக செயல்பட்ட அம்மா உணவகங்கள்; தி.மு. ஆட்சியில் 8 மணி நேர மின்வெட்டில் தவித்த தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக மாற்றியவர்; சொந்தங்களை தொலைவில் வைத்தவர்: போன்ற - அரசியல் எதிரிகளும் மறுக்க முடியாத - சாதனைகளுக்குரியவர் ஜெயலலிதா: ஊழலற்று தொடங்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, தி.மு. தலைவரின் தூண்டுதலால் கலைத்து, பின் அரசியலில் தொடர, .தி.மு. ஆட்சியும் ஊழல் திசையில் பயணிக்க வைத்தார்கள். அதே திசையில் பயணித்த ஜெயலலிதாவை முன் வைத்து, அவரின் பலகீனங்கள் மூலம் அவரை சிறைப்படுத்தி, (அதன் காரணமாகவே, கடைசியில் 'மர்மமான' முறையில் மரணமடைய‌), சசிகலா குடும்பமானதுஅரைபினாமி’ ஆட்சியைத் தொடங்கியது

ஆனால் எம்.ஜி.ஆரைப் போல, தி.மு.க தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற பல புலமையாளர்களை தேடி, வரவழைத்து, மதித்து துணையாக கொள்ளாமலும், தன்மானமுள்ள புலமையாளர் எவரும் நெருங்காமல் ஒதுங்கும் வகையிலும், பயணித்ததாலேயே, எம்.ஜி.ஆரைப் போல தனது பெயரில் உள்ள சொத்துக்களை தருமம் செய்யும் வகையில் உயில் கூட எழுத முடியாத 'மர்மமான' முறையில் மரணமடையும் அளவுக்கு; அவ்வாறு ஜெயலலிதா சசிகலா குடும்பப் பிடியில் சிக்கினாரா ? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அப்படி சசிகலாவின் செல்வாக்கில் சிக்கி, 1991இல் தொடங்கிய அவரது ஆட்சியில் தான், ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாட்டில் மலைகள், ஏரிகள், ஆறுகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் இரையாக தொடங்கியதும், அச்சுறுத்தி தனியார் சொத்துக்களை அபகரிக்க தொடங்கியதும் ஆகிய போக்குகள் வெளிப்பட்டன; இன்று வரை வெட்கமில்லாமல், 'சசிகலா அரசியலுக்கு' வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், ஆதரவு தெரிவித்து வரும் தேசிய/திராவிட/தமிழ்/கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆதரவோடு.
 

பின்னர் தி.மு. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதே திசையில் பயணித்து: அந்த போக்குகளில், மக்களின் கோபத்திற்கு உள்ளாகிஉச்சக்கட்ட நிலையை அடைந்து, இரண்டு கட்சிகளும் மாறி, மாறி, ஆட்சியை இழந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தன. ( http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )

'பிரிவினையைக் கை விடுகிறேன். பிரிவினைக்கான காரணங்கள் தொடர்கின்றன' என்று அண்ணா அறிவித்ததானது, பின்னர் 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில்;

உணர்ச்சிபூர்வ முட்டாள்களின்/தரகர்களின் ஆதரவோடு, ஊழல் சுனாமியில் தமிழ்நாட்டை சூறையாடவும், வசதியானவர்களை அச்சுறுத்தி ஊழலுக்கு எதிரான 'சமூக முதுகெலும்பை' முறித்து, ஊழல் பிரமிடு சிலந்தி வலையில் தமிழ்நாட்டு அரசியலையே சிக்க வைத்ததே; (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியைக் கலைத்து, தி./தி.மு. தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில்அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக. அதில் பாடம் கற்காமல், இந்திரா காந்தி பின்னர் தி.மு.-வுடன் கூட்டு சேர்ந்ததன் பலனாக, காங்கிரஸ் செல்வாக்கை இழந்து, கடந்த சட்ட மன்ற தேர்தலில், சசிகலா குடும்ப அரசியல் எதிர்ப்பு அலையில், தி.மு. ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பினை கெடுத்த அளவுக்கு, 'தீண்டத்தகாத' கட்சியாகி வருகிறது.

அதன்பின் ஊழல் பிரமிடு சிலந்தி வலை இன்னும் மோசமாகி, உலக அளவில் முதல் முறையாக, ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் முட்டாளாக்கி, ஒரு மாநில முதல்வரையே மாதக்கணக்கில் 'மர்மமான முறையில்' மருத்துவமும், மரணமும் நிகழ காரணமானதா? இன்று வரை தமிழ்நாட்டு அரசியலானது அந்த போக்கிலேயே தொடர்கிறதா? என்ற விவாதத்தை இனியும் இருட்டில் வைக்க முடியாது.

மத்திய அரசானது தமிழ்நாட்டில் அடுத்து அடுத்து ஊழல் கொள்ளைக்கு எதிரான வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு சோத்னைகளை நடத்தி, அதன் உச்சக்கட்டமாக சசிகலா குடும்ப வலைப்பின்னல் மீது நடத்தி வரும் சோதனைகள்;

உண்மையில் தமிழ்நாட்டு மக்களிடையே மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடியை (crisis of confidence) ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனை வலையிலிருந்து ஊழல் திமிங்கிலங்கள் தப்பிக்குமா? தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளில் உள்ள ஊழல் திமிங்கிலங்களை நெருங்குமா?

மோடி அரசு ஊழல் குற்றவாளிகளை தப்ப விடாமல், தண்டித்தால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மோடியால் ஈட்ட முடியும்; ஏற்கனவே 'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகியிருக்காது. அதற்கு மாறாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கின் வெளிப்பாடாக. 

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சிகளின் முதுகெலும்பை முறிக்காமல், மோடியாலும் கூட தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியாது. (‘ மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

தமிழ்நாட்டில் வாழும் மேல்நடுத்தர, வசதி மிகு மனிதர்களில் நான் உள்ளிட்டு பெரும்பாலோர் வெவ்வேறு காலக்கட்டங்களில்,

'கொள்கை அடிப்படை' என்று அவரவர் புரிதலில் கருதிக் கொண்டோ, அல்லது அவ்வாறு வெளியில் காட்டிக் கொண்டு', அகத்தில் 'சுயலாபக் கணக்குடனோ', தி.மு. மற்றும் ...தி.மு. ஆட்சிகளை ஆதரித்தவர்கள் எல்லாம்;

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளுக்கு 'சமூக முதுகெலும்பாக' பயன்பட்டிருக்காவிட்டால்;

லட்சக்கணக்கான கோடிக்கணக்கில் பெருந்தலைக் குடும்பங்களும், நூற்றுக்கணக்கான கோடிக்கணக்கில் வார்டு கவுன்சிலர் வரையும், ஊடகங்கள் வெளிப்படையாகவும், கிசுகிசு பாணியிலும் வெளிப்படுத்திய கொள்ளை நடந்திருக்க முடியுமா?

அதாவது மேல் நடுத்தர, வசதியான மட்டங்களிலும், அறிவுஜீவிகளிலும் கணிசமானோர் 'சமூக அழுகல்' போக்கில் சிக்காமல், மேற்குறிப்பிட்ட கொள்ளை நடந்திருக்க முடியாது; 'ஊர் எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்ற வகையில்.

அழுகல் இன சமூக வட்டத்தில், இனியும் நாம் நீடித்தால், ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ள நமது குடும்பத்தினரும், நண்பர்களும் நம்மை மதிப்பார்களா?

வெளியில் யோக்கியராக காட்சி தந்துஊழலுக்கு 'சமூக முதுகெலும்பாகநாம் தொடர்ந்தால், நாமும் நமது குடும்பமும், நண்பர்களும், தமிழ்நாட்டின் ' அழுகல் இனம்' ஆக மாட்டோமா?

'அழுகல் இனத்தின்' ஆதிக்கம் ஒழியாமல், மதுவிலக்கு அமுலானால், 'டாஸ்மாக்' கடைகளெல்லாம், 'கள்ளச்சாராய' கடைகளாக, 'புது அவதாரம்' எடுக்காதா?

'அழுகல் இன' கவிஞர்களின், எழுத்தாளர்களின், பேச்சாளர்களின் 'பிடியிலிருந்து',  தமிழையும், தமிழ் உணர்வினையும், 'விடுதலை' செய்யத் தவறினால், 'தமிழர்' என்ற அடையாளம் மிகவும் பலகீனமாகி, 'இந்தியர்' என்ற அடையாளமானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 'தனித்துவ(Unique) வலிமை' பெறும் போக்கானது'ஊழல் சுனாமி' ஆதரவுடன் 'ஆங்கிலவழிக் கல்வியின் அசுர வளர்ச்சி மூலமும், அதன் தொடர் விளைவான கிரிக்கெட் 'நோய்' மூலமும் அதிகரித்து வருகிறது. (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7); தமிழும், தமிழ் உணர்வும்மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.sg/2015/06/ )

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,

ஊழல் குற்றவாளிகளுக்கு உதவ, ஊழல் வலையில் சிக்கிய நீதிபதிகளும்  அஞ்சுவார்கள். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை எல்லாம்தமிழ்நாட்டில் பள்ளிகளை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் பற்றாக்குறையை ஒழித்தல் போன்ற பொது காரியங்களுக்கு செலவிட வேண்டிய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகளும் உணரும்.

'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்று குழம்ப வேண்டியதில்லை.

சுயலாப நோக்கற்ற, சமூக அக்கறையுள்ள, ஒவ்வொருவரும், தமது சமூக வட்டத்தில் உள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு மணி கட்டுவது சாத்தியமே, என்பதையும், மேற்சொன்ன வகையில் நான் நிரூபித்து வருகிறேன். (குறிப்பு கீழே)

அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நமது சமூக வட்டத்திலுள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், தற்போது சீரழிந்துள்ளசமூக செயல்நெறி மதகுகள்புத்துயிர் பெறும். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

அதன்பின் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட  சட்டங்களும் ஒழுங்காக செயல்படும்; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்காக; 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்திலிருந்து, 'விடுதலை' பெற்று.

தமிழில் மனிதரின் பண்பு அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்', 1944க்குப்பின் திரிந்து உருவான, 'அழுகல் இனத்திலிருந்து' 'விடுதலை' பெற்றால் தானே, தமிழ்நாட்டில் 'நல்லினம்' பல்கி பெருக முடியும். நமது முயற்சியில், நமது சமூக வட்டத்திலிருந்து, 'அழுகல் இனத்தை' அகற்றுவது தானே, அதற்கு சரியான, வலுவான, தொடக்கமாக அமையும்.; ( http://tamilsdirection.blogspot.sg/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )

குறிப்பு :

திருக்குறள் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வரும் கீழ்வரும் திருக்குறளில் 'ஒழுகல்' என்பதானது, ஒழுக்கமுடைமையோடு தொடர்புடையதாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140)

மோடி ஆட்சியில் வெளிப்படும் குறைகளை சுட்டிக்காட்டாமல் ஆதரிப்பவர்களும், நிறைகளை பார்க்கத் தெரியாமல் (திருக்குறள்-573) கண்களை  மூடிக்கொண்டு  எதிர்ப்பவர்களும், தமிழ்நாட்டை ஊழல் வலைப்பின்னலிலிருந்து மீட்கும் முயற்சிக்கு தடைகளே ஆவர். 'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்; அரங்கேற்று காதை) பயணிப்பவர்கள் மட்டுமே; ஊழல் ஒழிப்புக்கு எதிராக வெளிப்படும் சமூக ஆற்றல்களோடு (Social Energy),  திருக்குறள் வழியில் 'ஒட்டி' பயணித்து, தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியும்ஊழல் வலையின் 'ஆக்ஸிஜனில்' ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலவழிக்கல்வி நோயிலிருந்து, தமிழ்வழிக் ல்வியையும்(எனவே தமிழையும்), மரணப் படுக்கையிலிருந்து மீட்க முடியும்(‘‘தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html )

ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது; தமிழ்நாட்டை ஊழல் வலையிலிருந்து மீட்க முடியாது; என்று சொல்லி ஒதுங்கி வாழ்பவர்கள் எல்லாம்

ஊழல் ஒழிப்புக்கு எதிராக வெளிப்படும் சமூக ஆற்றல்களை கண்டு, 'ஒட்டிபயணிக்க தெரியாதவர்கள் (‘ பலகற்றும்  கல்லார்’  ) ஆவார்கள்.

உணர்ச்சிபூர்வ போதையில் சிக்காமல், அறிவுபூர்வ போக்கில் பயணிக்கும் நேர்மையாளர்களை தேடிச் சென்று, 'ஒட்டி' பயணித்து வரும் நான்;

வாழ்வியல் புத்திசாலிகளாக தம்மை கருதிக் கொண்டு, தமிழ்நாட்டில் ஊழல் வலைப்பின்னலில் உள்ளவர்களோடு 'ஒட்டிபயணித்தவர்களில், எனது உற்றத்திலும், சுற்றத்திலும் இருந்தவர்களை எல்லாம், உலகத்தோடு ஒட்டி அழுகல் மனிதர்களாக பயணிப்பதாக கருதி;

எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் பயணித்து வருகிறேன்


'உலகத்தின் கேடாக அழுகல் வழிவாழும்

உறவும் தீதாகு மே' ; புதுக்குறள் - 140


பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும். நமது இயல்பைத் தொலைத்து, காலனி ஆட்சிப் பாதிப்பில் இன்றும் உழலும் மனநோயாளிகளாக வாழ்பவர்கள் எல்லாம், வாழும் போது,(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )