Saturday, March 7, 2015


              'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு  லாபம்?



லட்சக்கணக்கான கோடி ஊழல்களிலும், பொருளாதார சீர்கேடுகளிலும் சிக்கித் தவித்த இந்தியாவை, ஊழலற்ற, பாரபட்சமற்ற ஆட்சியின் மூலம் காப்பாற்றுவார் என்று நம்பி, 'எதிர்பாராத' பெரும்பான்மை பலத்துடன் மோடியை மக்கள் பிரதமராக்கியுள்ளர்கள்.அந்த திசையில் அவரின் ஆட்சி பயணிப்பதன் காரணமாக, மோடியைப் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 'இந்து மத வெறியராக'ச் சித்தரித்தவர்களில் பலர், 'மோடியின் ஆட்சிக்கு இந்து மத வெறியர்களால்' ஆபத்து என்று எழுதும் அளவுக்கு, மோடியைப் பற்றிய தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்கள். 

இதற்கிடையில் மகராட்டிர மாநிலத்தில் அமுலுக்கு வந்துள்ள  'பசு வதைத் தடை சட்டமா’’னது, இந்தியா முழவதுமுள்ள முஸ்லீம்கள் மட்டுமின்றி, தலித்துகளில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், நகரங்களில் பிராமணர்கள் உள்ளிட்டு அனைத்து சாதிகளிலும் ( மேற்கத்திய நாகரீகப் போக்கில்) 'விரும்பி' மாட்டுக்கறி உணவு சாப்பிடுபவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் கணிசமான மக்களின் கோபத்தையும், வெறுப்பையும் வெவ்வேறு அளவுகளில் உண்டாக்கினால், வியப்பில்லை. ஊழல்,வாரிசு அரசியல் போன்றவற்றால் மக்களிடம் செல்வாக்கிழந்த‌, 'இந்துத்வா எதிர்ப்பு' கட்சிகள் புத்துயிர் பெற, அவை  உதவினாலும் வியப்பில்லை. 

அசைவக் குடும்பங்களில் பிறந்து, வளரும்போது, தமது குடும்பத்தில் 'மிகுந்த அன்போடு' வளர்த்த கோழிகள் உணவுக்காக வெட்டப்படுவதைப் பார்த்தும், ஆடுகள் கோவிலில், அல்லது உணவுக்காக வெட்டப்படுவதைப் பார்த்தும், அதிர்ச்சியடைந்து, 'முட்டை' கூட சாப்பிடாத, , 'தீவிர சைவ' உணவுண்பவர்களாக மாறியவர்களை நான் அறிவேன்.மனிதர்கள் வளர்க்கும் மிருகங்களில் முதுமையடையும் வரை  தொடர்ந்து பால் கொடுத்து வரும் பசு மாடுகளும், எருமை மாடுகளும் மனிதர்கள் மிகவும் நன்றி செலுத்த வேண்டிய மிருகங்களாகும். 

சங்க இலக்கியங்களில் 'பசு' என்ற சொல் மிருகங்களைக் குறிக்கும் பொதுவான சொல் ஆகும். ( ஐங்குறுநூறு 271:3; நற்றிணை 275:5, Page 520,Pre-Pallava Tamil Index, University of Madras, 1990) . எனவே இன்றுள்ள பொருளில், தமிழில்,  பசு மாடும், எருமை மாடும் எந்த காலக் கட்டத்தில், என்ன சமுகக் காரணங்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டன? என்பது ஆய்விற்குரியதாகும். 

மகராட்டிர மாநிலத்தில், முந்தைய பா.. சிவசேனா கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, 19 வருடங்களாக குடியரசு தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருந்த சட்டம், அண்மையில் ஒப்புதல் பெற்று அமுலுக்கு வந்துள்ளது. பசு மாடுகள், காளை மாடுகள் உணவுக்காக வெட்டப்படுவதைத் தடுக்கும் அச்சட்டத்தில் எருமை மாடுகள் இடம் பெறவில்லை. 
http://indianexpress.com/article/india/india-others/beef-banned-in-maharashtra-5-yrs-jail-rs10000-fine-for-possession-or-sale/
பால் தரும் பசுவையும், எருமையையும், விவசாயத்திற்குப் பயன்படும் காளைகளையும் எவரும் கொல்லமாட்டார்கள். தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கியூபா அரசு அண்மையில் பசுவைக் கொல்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.
http://articles.economictimes.indiatimes.com/2003-09-13/news/27533499_1_cow-slaughter-cuba-cattle
இந்தியாவில் வடகிழக்கு  மாநிலங்களில் மட்டுமே தடையின்றி உணவுக்காக பசு, உள்ளிட்டு அனைத்து மிருகங்களும் கொல்லப்படுகின்றன.ஆந்திரா, தெலுங்கானா, பீகார்,கோவா, ஒடிஸ்ஸா,ஆகிய மாநிலங்களில் பசுக்களை மட்டும் தடை செய்து,உரிய சான்றிதழுடன் மற்ற மிருகங்களை உணவுக்காகக் கொல்ல சட்டம் அனுமதிக்கிறது.தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உரிய சான்றிதழுடன்  மிருகங்களை உணவுக்காகக் கொல்ல சட்டம் அனுமதிக்கிறது.கேரளாவில் சட்டபூர்வ தடையின்றி, சில கட்டுப்பாடுகள் உள்ளன. http://www.thehindu.com/news/national/cattle-slaughter-in-varying-degrees/article6956046.ece

மகராட்டிர அரசின் பசுவதைத் தடை சட்டம் மூலம் உயிர் வாழும் வயதான பசுக்களையும், காளை மாடுகளையும் 'அனாதைகளாக' சாகாமல் பராமரிப்பதற்கு, 'பட்ஜெட்டில்' நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அவற்றைப் பராமரிக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பது பற்றி மீடியாவில் தகவல்கள் எனது பார்வையில் படவில்லை. Also read:
http://swarajyamag.com/culture/this-matter-of-beef/  
வயதான பசுக்களையும், காளை மாடுகளையும், பசி, பிணி மூலம் 'அனாதைகளாக' சாவதை, சட்டபூர்வமாக்கியுள்ள 'பசுவதை தடை சட்டமானது', நடைமுறையில், ஈவிரக்கமற்ற 'பசுவதை சட்டம்' ஆகாதா?

சமூகத்தில் உள்ள மனிதர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 'அரசியல்' செயல்நுட்பம் மூலம் அரசால் உருவாக்கப்பட்டு அமுலாவதே அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of law) ஆகும்.

பசுவதைத் தடை சட்டம்,காளைகளை அடக்கும் விழாக்களுக்கான தடை , கோவில்களில் பறவைகளையும் மிருகங்களையும் பலியிட தடை (பின்னர் நீக்கப்பட்டது} போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விவாதங்களை, சமூகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை தொடர்பாக உருவாகும் புதிய சட்டங்கள் ஏற்படுத்துவதில்லை. தடா, பொடா போன்ற சட்டங்கள் தொடர்பான விவாதங்கள் கூட, வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓ மனித அமைப்புகளின் முயற்சிகள் இன்றி, பொது அரங்கில் விவாதத்தில் இடம் பெற்றிருக்குமா? என்பதும் ஆய்விற்குரியதே ஆகும்.

சமூகத்தில் அரசியல் புலத்திற்கான வரை எல்லைகளுக்கு அப்பால், அந்த சமூகத்தின் பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளில் உருவாகி செயல்படுவதே, அந்த சமூகத்தின் செயல்நெறி மதகுகள்(social functional checks) ஆகும். (refer; ’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) 

சட்டபூர்வ செயல்பாடும், சமூக செயல்நெறி மதகுகளின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும்போது, அந்த சமூகத்தில் குற்றங்கள் சிறுமமாக, இணக்கமான சூழலில் அச்சமூகம் வளர்ச்சி திசையில் பயணிக்கும். 

சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை அரசுக்கு இருக்கும்.

பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள், கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,அவற்றின் செயல்பாட்டிற்கு வலிமை இருக்கும்.

ஒரு சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு தொடர்புடைய பிரச்சினைகளில் சட்டத்தின் மூலம் தலையிடுவது சிக்கல் நிறைந்ததாகும். மேற்கத்திய வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக சமூக அரங்கில் மேற்கத்திய பாரம்பரியமும்,பண்பாடும் பெரும் சீர்குலைவிற்கும், மாற்றங்களுக்கும் உள்ளானது. எனவே சட்டத்தின் வரம்பு எல்லைகள் அங்கு பரந்த அளவுக்கு விரிந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில், தனி மனித உரிமைகளுக்கான வரை எல்லைகளும் குடும்பம் உள்ளிட்டவற்றைப் பலகீனப்படுத்தி விரிந்தது. மேற்கத்திய மனித உரிமைகள் வழியில், இந்தியாவில் பயணிக்கும் முயற்சிகளே, 'மாடு பிடிக்கும் விழாவிற்கும்','கோவிலில் பறவைகள்/மிருகங்கள் பலியிடுவதற்கும் எதிர்ப்புகளையும் தடைகளையும் உருவாக்கி வருகின்றன.

சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.” இந்திய விடுதலைக்குப் பின் அந்த சமசீரற்ற பண்பு எவ்வாறு வளர்ந்தது என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

காலனி ஆட்சியிலும், அதன்பின் 'காலனியமயமாக்கப்ப‌ட்ட' (colonization of the Indian mind) மனதுடன், தெரிந்தும் ( வெளிநாட்டு நிதி உதவியில்/ஆதரவில் வாழும் என்.ஜி.ஓக்கள், அறிவு ஜீவிகள்), தெரியாமலும் வாழ்பவர்கள் பங்களிப்பிலும்,  பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள் தொடர்ந்து பலகீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போக்கில், சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்பு 'பாதிக்கப்பட்டு' வளர்ந்த காலனிய அரசின் சட்டங்களும், அரசு செயல்பாடும், 'அந்த பாதிப்பு' முழுமையாக நீங்காமல், ஆட்சியாளர்களின் 'வசதிகளுக்கான' மாற்றங்களுடன் தொடர்ந்து 'அந்த களங்கத்துடனேயே இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திய மக்களிடையே சமசீரற்ற பண்பினை 'ஆபத்தாக' வளர்த்து வரும் , மேலேக் குறிப்பிட்ட இரண்டு போக்குகளும் இந்திய விடுதலைக்குப் பின் வளர்ந்த வேகத்தில், சாதி,மத, பிராந்திய பிரிவினைப் போக்குகள் 'ஏற்ற இறக்கங்களுடன் கூடிய' மக்கள் செல்வாக்குடன் வளர்ந்து வருகின்றன.

சட்டத்தின் செயல்பாட்டிற்கு சம்பந்தமில்லாமால் உள்மறை இரகசியத்தடை, லஞ்சம், பயங்கரவாதம் உள்ளிட்ட  'சமூக நோய்கள்' அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, ஒன்றையொன்று வளர்க்கும் திறனுள்ளவைகள் ஆகும். அவற்றின் தோற்றமும்,வளர்ச்சியும், சமூக அமைப்பின் சமசீரற்ற பண்பின் வளர்ச்சியுடன் தொடர்புள்ளவை ஆகும்.

அந்த சமசீரற்ற பண்பின் வளர்ச்சிக்கு 'மனித உரிமை,முற்போக்கு' என்ற பெயரில் பங்களிப்பு வழங்கி வரும், வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் கிறித்துவ என்.ஜி.ஓக்களைக் கண்காணிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு 'இந்துத்வா' என்ற போர்வையில் 'அதே இலக்கில்,வெளிநாட்டு நிதி உதவியில்  செயல்படும் அமைப்புகளையும் கண்காணிப்பது முக்கியமாகும். 'விதேசி' ஆதரவின்றி, 'சுதேசி' பலத்தில் செயல்படுபவர்கள் எல்லாம் நாட்டின் நலனுக்காக, சாதி,மத,கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றுபட்டு செயல்பட்டால் தான், அது சாத்தியமாகும்.

காளைகளை அடக்கும் விழா தடை, பசுவதை தடை உள்ளிட்ட தடைகள் எந்த அளவுக்கு அமுலாகிறதோ, அந்த அளவுக்கு அந்தந்த அரசு  துறைகளில் உள்ள 'கறுப்பு ஆடுகளின்’' லஞ்ச வருமானங்கள் பெருகுவதோடு, அரசைப் பலகீனப்படுத்தும் உள்மறை இரகசியத் தடை ஆற்றல்களுக்கான மக்கள் செல்வாக்கும் அதிகரிக்கும். 

அதாவது 'பசுவதைத் தடை சட்டம்,காளைகளை அடக்கும் விழா தடை போன்ற மக்களின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் அமுலாகும் சட்டங்களானது, அரசில் எந்த அளவுக்கு 'லஞ்சம்' தலை விரித்தாடுகிறதோ, அந்த அளவுக்கு மக்களிடையே உள்ள சமசீரற்ற பண்பினையும், சமூக நோய்களையும் வளர்க்கும். அந்த வளர்ச்சிப் போக்கானது, மோடி அரசின் கதையை சாண் ஏறி, முழம் சறுக்கினதாக மாற்றினாலும் வியப்பில்லை. அவ்வாறு நிகழ்ந்தால், இந்தியா 'மோசமான' பிரிவினைக்குள்ளாகி, 'லஞ்சமும், குடும்ப வாரிசு அரசியலும்' பின்னிப் பிணைந்த 'ராஜா'க்களுக்கு சாதகமாக, ஆப்பிரிக்க நாடுகளுடன் எண்ணிக்கையிலும் சீரழிவிலும் போட்டி போடும் நிலை வரும்; என்பது போன்ற; 'மேற்கத்திய' உலகில் வெளிவந்துள்ள புத்தகங்களின் 'ஆருடம்' உண்மையாகி விடும்.
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_24.html

அரசு தம் வசமுள்ள வன்மை அதிகாரத்தை(Hard power)  சட்டத்தின் செயல்பாட்டிற்கும், மென்மை அதிகாரத்தை (Soft Power) அரசின் கல்வி, பண்பாடு போன்ற துறைகள் மூலம் சமூக செயல்நெறி மதகுகளை வலிமைப்படுத்தவும் பயன்படுத்துவது நல்ல ஆட்சியின் வெளிப்பாடு ஆகும்.

காலனி ஆட்சியில்,மென்மை அதிகாரம் உளவுத்துறைகள் கூட்டு முயற்சியில், காலனி ஆட்சிக்குச் சாதகமாக மக்களைப் பிளவு படுத்தும் 'கட்சிகளும்', தலைவர்களும், ஊக்குவிக்கப்பட்டார்கள்.

“இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌  சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா?” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன்,கவிஞர் தாமரை;உள்மறை இரகசியத் தடைகளும் (‘Subterranean censorship’), குடும்பச் சீர்குலைவுகளும்’;
http://tamilsdirection.blogspot.in/2015/03/12.html )


திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போது, மோடி போன்ற ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராகியிருந்தால், மேலேக் குறிப்பிட்ட சீரழிவு திசையில் தமிழ்நாடு பயணித்திருக்காது.  தமிழ்நாட்டில், காமராசர் தோல்விக்குக் காரணமான சக்திகளை, இந்திய அளவில் முறியடித்து இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ளவர் மோடி என்பது என் கருத்து.
http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2014-01-01T00:00:00-08:00&updated-max=2015-01-01T00:00:00-08:00&max-results=50 ஆனால் தமது அரசு வசம் உள்ள மென் அதிகாரம் ஆற்ற வேண்டிய பணிகளை, வன் அதிகாரம் மூலம் மத்திய அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் செயல்படுத்தத் துவங்கியுள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட  மோடியின் வெற்றி தற்காலிகமாகி, தமிழ்நாடு பயணித்து வரும் சீரழிவு திசையில்,  'தமிழ் வேரற்ற' தமிங்கிலிசர்களாக தமிழர்கள் வளர்ந்து வருவது போல், வரும் காலத்தில் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் 'வேரற்ற' இந்தியர்கள் வளரும் விளைவிலேயே அது முடியும். எனவே நாட்டின் மீதும், மக்களின் மீதும் உண்மையான அக்கறையுடன் 'சுயநல பொது வாழ்வு' நோக்கற்றவர்கள் அனைவரும் விழிப்புடன், 'வேடன் வலையில் சிக்கிய பறவைகள்' போல், ஒன்றுபட்டு செயல்பட்டால் தான்  - ஒன்றுக்கொன்று தொடர்புடைய வெளிநாட்டு, உள்நாட்டு சதி வலையிலிருந்து -  தப்பிக்க முடியும்.

குறிப்பு: படிக்கவும் https://www.facebook.com/yaadhumaagi/videos/vb.728633197205063/1372096319525411/?type=2&theater  & https://swarajyamag.com/politics/cow-politics-if-bjp-wants-to-lose-2019-this-is-the-right-way-to-go-about-it

Monday, March 2, 2015



பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன்,கவிஞர் தாமரை;

உள்மறை இரகசியத் தடைகளும் (‘Subterranean censorship’), குடும்பச் சீர்குலைவுகளும்


பெருமாள் முருகேசனைத் தொடர்ந்து, எழுத்தாளர் புலியூர் முருகேனின் நூலை எதிர்த்தும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
After Perumal Murugan, another Tamil writer has landed in controversy. The bone of contention this time is a novel penned by Puliyur Murugesan. On Wednesday, a group of people allegedly attacked the 45-year-old writer in his village in Karur and demanded police action against him saying the book insulted their community.
According to sources, the police had already planned to register a case against Murugesan as soon as the contents of the book triggered riots in Karur town. After a series of discussions with law experts, police registered a case against the author under five IPC sections - 153 (wantonly provocating riot), 292 (writing and circulating obscene contents), 502 (sale of book containing defamatory matter), 504 (intentional provocation of breach of peace and 505 (causing fear or alarm to public).

ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள், 'மெட்ராஸ் கஃபே' (Madras Café) உள்ளிட்டு தமக்குப் பிடிக்காத திரைப்படங்களை எதிர்த்துப் போராடி ,தடையில் வெற்றியும் பெற்றதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் நூல்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களும், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களும்; கருத்துரிமை எதிர்ப்பில் ஒரே வகையா? இல்லையா? பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட‌  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

அதே போல், விடுதலைப்புலி ஆதரவாளர்களில் (குறிப்பாக அந்தந்த பகுதிகளில்)  யார் யார்  பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் கருத்துரிமை மீது மேற்கொண்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

பாதிக்கப்பட்டதாகக் கருதிய மக்கள், பாதிப்புக்குள்ளாக்கியதாகக் கருதிய பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் உள்ளிட்ட  எழுத்தாளர்களை எதிர்த்து,போராடினார்கள். பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்  சார்ந்த சாதியினரையோ அல்லது கட்சியினரையோ தாக்கவில்லை.

ஆனால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆய்விற்காகவும், ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் வந்திருந்தவர்களை, 'சிங்களவர், பெளத்தர்' என்ற காரணத்திற்காக தாக்கியவர்கள் தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் செயல்படும் கட்சியினர் ஆவர். (http://dbsjeyaraj.com/dbsj/archives/18826 )

பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் மேற்குறிப்பிட்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை எதிர்ப்பாளர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் நடத்திய  போராட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்மறை இரகசியத்தடை  ‘Subterranean censorship’ என்று அழைக்கப்படும்.

பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார்(Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை இரகசியத்தடை  ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார். https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf

தமிழ்நாட்டில் ‘உள்மறை இரகசியத்தடைகளின்’ ‘Subterranean censorship’ தோற்றமும் வளர்ச்சியும், எந்தெந்த காலக்கட்டங்களில் உருவாகி, எவ்வாறு வளர்ந்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்பது ஆய்விற்குரியதாகும்.
ஒரு சமூகத்தின் செயல்பாடு ஆனது அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of the law), மற்றும் சமூக செயல்நெறி மதகுகள்(social functional checks)  மூலம் நெறிப்படுத்தப்படுபவையாகும்.

சமூகத்தில் உள்ள மனிதர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 'அரசியல்' செயல்நுட்பம் மூலம் அரசால் உருவாக்கப்பட்டு அமுலாவதே அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of law) ஆகும்.

சமூகத்தில் அரசியல் புலத்திற்கான வரை எல்லைகளுக்கு அப்பால், அந்த சமூகத்தின் பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளில் உருவாகி செயல்படுவதே, அந்த சமூகத்தின் செயல்நெறி மதகுகள்(social functional checks) ஆகும். (refer ’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி”;
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

சட்டபூர்வ செயல்பாடும், சமூக செயல்நெறி மதகுகளின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும்போது, அந்த சமூகத்தில் குற்றங்கள் சிறுமமாக, இணக்கமான சூழலில் அச்சமூகம் வளர்ச்சி திசையில் பயணிக்கும்.

சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை அரசுக்கு இருக்கும்.

பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள், கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,அவற்றின் செயல்பாட்டிற்கு வலிமை இருக்கும்.
சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.

“இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌  சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா? உரிய நீதி பெறுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும்,ஊழல் தொடர்புள்ள அரசு வக்கீல், நீதிபதிகள் உள்ளிட்ட குறைபாடுகளும் எந்த அளவுக்கு இருக்கின்றன? அவை மேற்குறிப்பிட்ட சமசீரற்ற பண்பு வலிமை பெற எந்த அளவுக்கு துணை புரிந்துள்ளன? போன்ற கேள்விகளின் வலிமையை 'மாதொரு பாகன்' 'மனித உரிமை மீறல்' பிரச்சினை வெளிப்படுத்தியுள்ளது.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer  ‘மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்;  'மாதொரு பாகன்'  எழுப்பும் கேள்விகள்’;
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )  

அந்த சமசீரற்ற பண்பு உள்மறை இரகசியத்தடைகள் மூலம் வெளிப்படுவது போல, சமூகத்தின் மற்ற பரிமாணங்களிலும் வெளிப்படும்.

“தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணமும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள்,கிரனைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்படுவதும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை,கொலை, கொள்ளை,வன்முறை, குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள், திருமணமான சில வருடங்களுக்குளேயே விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக நோய்கள் ஆகும். இவை தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதித்துள்ள கடுமையான நோயின் வெளிப்பாடுகள் ஆகும்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer ’ 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 ) 'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்’;
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள்,விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் தமிழ்நாட்டில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி புற்றீசல் போல்  வளர்ந்து வருவது பற்றி, இதுவரை, 'தமிழ், தமிழர் அமைப்புகள் கவலைப்பட்டிருக்கிறர்களா? அல்லது தங்களின் உள்மறை இரகசியத்தடை தொடர்புள்ள சமூக ஆற்றலை, தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய போக்கினால், தமிழர் அமைப்புகளும், தலைவர்களும் அதிகரித்து வருகிறர்களா? எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டில் தமிழர் குடும்பங்களில் 'சமூக எபோலா' நோய் போல, 'அதிவேகமாக'ப் பரவிவரும் குடும்ப சீர்குலைவுகளை, 'தமிழர் அமைப்புகள்' விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, அந்த அமைப்புகளில் 'அதிக அனுபவம்' பெற்ற கவிஞர் தாமரை உருவாக்கியுள்ளார். (அவரின் பத்திரிக்கையில் வெளிவந்த பொதுவிவாதத்திற்கான பகுதியும்,  சில மடல்களும் கீழே )

'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' போன்ற முகமூடிகளுடன், அல்லது அரசு பதவியில் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 'செல்வம், செல்வாக்கு' ஈட்டி வருபவர்களின் 'வாழ்வியல் வெற்றி இரகசியம்' பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

“நான்காவது இரகசியம்:  புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த‌ நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.” (refer  ‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html  )

குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளைக் காவு கொடுத்து, தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வரும், 'வாழ்வியல் வெற்றியாளர்களை' அடையாளம் கண்டு ஒதுக்கும் பொது விவாதத்தை, கவிஞர் தாமரை தூண்டியுள்ள 'விவாதத் தீ'யை உரிய முறையில் பயணிக்கச் செய்தால், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் மீட்சிக்கான சமூக ஆற்றலானது, தவறான உள்மறை இரகசியத்தடைகளிலும், குடும்ப சீர்க் குலைவுகளிலும் விரயமாவதைத் தடுத்து, மீட்சி திசையில் பயணிக்க வழி ஏற்படும். தவறினால், அடுத்த சில வருடங்களில் அவ்விவாதத்தைத் தவிர்க்கும், 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' அமைப்புகள் சுவடின்றி உதிர்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.

‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’  திருக்குறள் 4
தனக்கே தலைமை, செல்வம், செல்வாக்கு போன்ற விருப்பும்(desire), தனது சுயநலன்களுக்குப் பயன்படாதவர்கள் மீது வெறுப்பும், என்பது போன்ற தனிமனித பலகீனங்கள் இல்லாத பண்பினை அகவயபடுத்தியவர்களைக் (internalize)  கொண்ட  இயக்கமும், தலைமையுமே, இனி தமிழ்நாட்டில் எடுபட முடியும்.

கவிஞர் தாமரையின் அறிக்கையும், வெளிவந்த சில கருத்துக்களும்;

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.------------ மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன்----------- அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார்? எனவே அது என்னவகைப் புரட்சி, அதன் நன்மை / தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.  -------- நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.
நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.
எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் / திராவிடத் தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.----------- நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர், கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள்?
http://tamil.thehindu.com/tamilnadu

வெளிவந்துள்ள சில கருத்துக்கள்:

1.   தியாகு. தூக்கு தண்டனைக் கைதியாக இருந்த போது, 'பரோலில்' வெளிவந்து, தனது நண்பரின் சகோதரியை மணந்து, கர்ப்பமாக்கி விட்டு, சிறை சென்ற பின் குழந்தை பிறந்தது உண்மையா? தனது குழந்தையின் தகப்பனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு 'அந்த மனைவி' கொடுத்த கருணைமனு காரணமாக தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் பெற்றதா? பின் சிறையிலிருந்து விடுதலையாகி, விடுதலைப் புலி ஆதாவாளராக, தாமரையைக் 'காதலித்து' திருமணம் செய்தது உண்மையா? 'என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவு' எடுத்தது உண்மையானால், அவர்களும் 'அந்த மனைவிக்கு' துரோகம் இழைக்கத் துணை போனார்களா? அந்த மனைவிக்கு' துரோகம் இழைத்து தாமரை தியாகுவை மணந்தது சரியா? இந்த தவறுகளை 'சரியான ஜனநாயகத் தீர்வு' என்று நியாயப்படுத்தலாமா?


2.   --சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் செய்கிற செயலாக இல்லை இது -- நல்ல ஜோக்!

3.   தமிழை வைத்து வணிகம் செய்யும் பலர் இணைவி துணைவி பிணைவி என வாழ்வது சகஜமாகி எத்தனையோ காலமாகிறது ஒழுக்கம் பற்றிப் பேசும் தானைத் தலிவர்களே களவொழுக்கம் கள்ளத்தொடர்பு மாற்றான் தோட்டத்து மல்லிகை என அலைவதும் உண்டு இரண்டாம் முறை தோற்ற தாமரை பாவம்

4.  இவர் தனது முதல் கணவரை விட்டு வந்தவர்.அது இவரது தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது கணவர் அதுதான் இப்போது ஓடி போயிருப்பவர், அவரும் தன் மனைவியும் மற்றும் ஒரு மகளையும் விட்டு இவருடன் இணைந்தார்.அந்த முதல் மனைவிக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் யார் வாழ்கை கொடுப்பார்கள்/கொடுத்தார்கள்.இந்த தமிழ் தேசியம்,திராவிட புரட்டு இதெல்லாம் பணம் சம்பாதிக்க ஒரு வழி- புண்ணாக்கு .அப்படி போகும் வழியில் தன் உடல் பசிக்கு ஏதேனும் கிடைத்தால் அது போனஸ்.இதை சீரியஸ் ஆக நினைத்து ஏமாறும் அப்பாவிகளும் இருக்கிறார்கள், தாமரையை போல. இவர் பல வருடங்களாக புலம்புவதே வேலையாக வைத்து கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழ் செனிமாவை பொறுத்தவரை ஒரு முதல் தர கவிஞர்.

"    " in the immediate aftermath of that protest by her, Thiyagu had agreed that an investigation committee be set up to look into her allegations against him. "That committee comprised renowned writers, and it has been investigating what actually happened. It's almost a year now, and if they let me know their findings, I'd like to make that public so that other women are aware of what all can go wrong in a marriage. And I have decided that till I announce that result, I will not attend any public events in a personal capacity"
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/My-life-is-not-a-love-poem-Thamarai/articleshow/50772132.cms