Wednesday, June 24, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6)



'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான;

நல்ல விதைகளும், நச்சு விதைகளும்


திறமைமிக்க விவசாயிகள் விதையையும், அதை விதைத்து பராமரிக்கும் முறையையும் வைத்தே, அறுவடை எப்படி இருக்கும்?  என்று கணித்து விடுவார்கள். 

அது போல சமூகத்தில் புதியவை முளைவிட்டு, வளரும் போக்கானது, அதற்கான 'அறுவடையில்' முடிவதைத் தடுக்க முடியாது. அந்த வகையில் 1944இல் முளைவிட்டு, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவானது, வளர்ந்து, எவ்வாறு அரசியல் நீக்கத்தை(depoliticize)  உருவாக்கி வளர்த்தது? என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

அந்த அரசியல் நீக்கமானது, பொதுவாழ்வில், எவ்வாறு கொள்கைகளை சருகாக்கி, தனிநபர் வழிபாட்டையும், மேற்கத்திய வழிபாட்டு போக்கிலான, 'சமூக ஒப்பீடு நோயையும்'(social comparison) , திராவிட மனநோயாளித்தனமாக வளர்த்தது?  அந்த போக்கிலேயே, தமிழ், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, கனி வளங்கள் உள்ளிட்டு அனைத்தையும் 'ஊழல் கோரப் பசியுடன்' சூறையாடி, அகத்தில் சீரழிவைத் தூண்டி, நம்பமுடியாத அளவுக்கு, இழிவான மனிதர்களை 'வளரச் செய்த' 'அறுவடையில்', இன்று மரணவாயிலில் உள்ளது?  என்பதையும் பார்த்தோம்.

இயற்கையில் 'அறுவடை' முடிந்தபின், அடுத்த விவசாயத்திற்கான விதைகள் தயாராகி விடும். மனிதர்கள் தொடர்பின்றி, வளரும் காடுகளிலும் முதிர்ந்த மரங்கள் மரணமடையும் போது, புதிய மரங்கள் வளர்ந்து காடுகளை அழியாமல் காக்கும் இயற்கையும் அப்படியே.

அப்படியென்றால், தமிழ்நாட்டில் முளை விட்டுக்கொண்டிருக்கும் 'புதிய விதைகள்' யாவை? அவற்றில் 'நல்ல விதைகள் யாவை? நச்சு விதைகள் யாவை? நச்சு விதைகளை அடையாளம் கண்டு, முளையிலேயே அகற்றாவிட்டால், தமிழ்நாடு மீண்டும் ஒரு நச்சு அறுவடையை சந்தித்தாக வேண்டும். அந்த அறுவடை நடைபெறும்போது, தமிழும், பாரம்பரியமும்,பண்பாடும் தமிழர்களிடையே மறைந்து, தமிழ் வேரற்ற தமிங்கீலிசர்கள் நாடாக தமிழ்நாடு மாறி விடும். தமிழ்நாட்டில் அறிவிலும், உழைப்பிலும், பிற மாநிலத்தவர் செல்வாக்குடன் வாழ, அவர்களை நத்தி பிழைக்கும் தரகர்களும், திருடர்களுமாக அந்த வேரற்ற தமிங்கீலிசர்கள் வாழ்வார்கள். ('காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2)- தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

எனவே தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான முளைவிடும் நல்ல  விதைகளாக, நாம் வளர முடியுமா? நச்சு விதைகளை அடையாளம் கண்டு, ஒதுக்கி, நல்ல விதைகளை ஊக்குவிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கான விடைகளில் தான், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் எதிர்காலம் நிர்ணயமாகும்.

"நம்மையும், நமது சமூக வட்டத்தையும் சீர் செய்து, பயணிக்கையில், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான தெளிவான அறிகுறிகள் தெரிவதோடு, நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(passions)  இயைந்த, இயல்பான மகிழ்ச்சியோடு கூடிய வாழ்வு வாழ முடியும்." என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். 

நமது சமூக வட்டத்தை சீர் செய்ய உதவும் செயல்நுட்பம் பற்றியும், அதில் வெற்றி பெற, 'நல்ல விதையாக' நாம் வளர,  நமது அகவாழ்வில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வ மாற்றங்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

“ நமது மூளை ஆனது,  கணினி செயலாற்றி (processor)  போன்றுள்ள ஒரு மனித செயலாற்றி ஆகும். நமது மூளை என்னும் செயலாற்றியானது,  உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions) , அன்பு, லாபநட்ட நோக்கில்லாத சேவை போன்ற ஆக்கபூர்வ உணர்வுகளில் ( Positive feelings)  செயல்படும்போது, நாம் ஒரு ஆக்கபூர்வ அலையியற்றி  ( Positive Oscillator) போல் வாழ்வோம். மாறாக சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, அழுக்காறு, ஏமாற்றம்,கோபம், வெறுப்பு, வஞ்சம்,பழி வாங்கல், சுய அனுதாபம், போன்ற எதிர் உணர்வுகளில் செயல்படும்போது, நாம் ஒரு அழிவுபூர்வ அலையியற்றி  (Negative Oscillator) போல் வாழ்வோம். நேர் உணர்வுகள் (Positive Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது,  நோய்கள் நம்மை அண்டாது. எதிர் உணர்வுகள் (Negative Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது, நோய்கள் நம்மை தாக்கும். https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM

ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான நபர்,  தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும் நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள் எல்லாம்,  அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.” என்பதையும்; ஏற்கனவே பார்த்தோம்.  (“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்;  "Comparison is the thief of joy" Theodore Roosevelt; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

"தமிழ்நாட்டில்  ஒருவர் தனது குடும்பம், நட்பு உள்ளிட்ட‌  சமூக வட்டத்தில் இன்னொருவருடன் இயல்பாக உரையாடுவது, என்பது பெரும்பாலும் முடியாத காரியமாகி வருகிறது. தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகுவது; கீழான நபர் எனில் ஒதுக்குவது: சம அளவில் உள்ள நபர் எனில் இயன்ற அளவுக்கு தம்மை விட கீழ் என மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பது; 

மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளில் ஒரு நபர் நம்மிடம் எந்த வகையில் பழகினாலும், அது ஒரு இயல்பான மனிதர் பழகுவதாக இல்லாமல் செயற்கையாகத் தானே இருக்கும்." என்பதையும்;

"நமது மனத்தின் விருப்பு வெறுப்பற்ற நிலையை சுழி நிலையாகவும், அன்பு,  கருணை, உதவுதல் போன்ற உணர்வுகளை நேர் (Positive) மதிப்புகளாகவும், கோபம், வெறுப்பு, பழி வாங்கல் போன்ற உணர்வுகளை, எதிர் (Negative)  மதிப்புகளாகவும் கொள்வோம்.

பொதுவாக, நமது வாழ்வு மேற்குறிப்பிட்ட நேர் மற்றும் எதிர் மதிப்புகளுக்கிடையில் ஊசலாடும், அலையைப்(wave)  போன்றே அமைந்திருக்கும். நமது மனதில் கீழ்வரும் மாற்றத்தை நாம் விரும்பி ஏற்படுத்தினால், நமது அக வாழ்வும் அதற்கேற்ற வகையில் மாறிவிடும்.

ஒரு மின்கடத்தியில் (Electrical conductor)  நேர் மின்னூட்டங்கள்(Positive charges)  இருக்கலாம். அல்லது எதிர் மின்னூட்டங்கள் (negative charges) இருக்கலாம்.நேர் மின்னூட்டங்களாக இருந்தாலும், எதிர் மின்னூட்டங்களாக இருந்தாலும், அந்த கடத்தி பூமியுடன் தொடர்பு கொண்டால் (Earthed) , அம்மின்னூட்டங்களை பூமி ஏற்றுக் கொள்ள, மின்கடத்தியில் உள்ள மின்னூட்டங்கள் வெளியேறிவிடும். நமது மனதுக்குள் நாம் அனுமதிக்கும் நேர் உணர்வுகளை, நேர் மின்னூடங்களாகவும், எதிர் உணர்வுகளை எதிர் மின்னூட்டங்களாகவும், கற்பனை செய்து கொள்ளலாம். நாம் நமக்கு எஜமானனாக வாழ்வது உண்மையானால், தனது விருப்பத்திற்க்கேற்றார்ப் போல் செயல்படும், வித்தியாசமான‌ மனித மின்கடத்தியாக ( Human conductor with options)   நமது வாழ்வை, நாம் மாற்றலாம். நமது மனதை, எதிர் உணர்வுகளுக்குள்ளாக்கும் மனிதர்களையும், மற்ற காரணங்களையும் , பூமியுடன் தொடர்பு கொள்வது போல், உலகில் உள்ள மற்ற மனிதர்களில், மற்றவற்றில் ஒன்றாக, மனதில் கருதி, பூமித் தொடர்பு அகற்றல் (Earthed)  மூலம், எதிர் உணர்வுகளை அகற்றலாம். 

நமது மனதை விருப்பப்படும்போது, 'பூமித் தொடர்பு' கொள்ளும் திறமையை வளர்த்துக் கொண்டால், எதிர் உணர்வுகளுக்கு இடம் இருக்காது. அவ்வாறு மாற்ற வேண்டுமானால், எதிர் உணர்வுகளின் மூலங்களாக செயல்படும் மனிதர்களையும், இடங்களையும், சூழலையும், நமது மனதளவில் உலகில் உள்ள, மற்ற மூன்றாம் மனிதர்களைப் போலக் கருதும் திறமை வேண்டும். அதாவது மனதளவில் அந்த உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும். அதை அவர்களுக்குத் தெரிவித்து புண்படுத்துவதும் எதிர் உணர்வுக்கு இடமளிப்பதே ஆகும். எனவே அவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் அவர்கள் எதிர்பார்க்கும், உங்களால் இயன்ற பொருள் உதவிகள் வழங்குவதை, நீங்கள் நிறுத்தவில்லையென்றால், அதை அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை.அவ்வாறு விடுபடும்போது, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளையும் விரும்பி ஏற்க வேண்டும்; நம்மிடம் உதவிகள் பெற்றுக் கொண்டே, நாம் கைவிட்டு விட்டதாக நம்மை இழிவுபடுத்தி, 'பிரச்சாரம்' செய்வது உள்ளிட்டு.

அதனால் 'லாப' மடையும்  அந்த நபர்கள் நம்மை முட்டாளாகக் கருதுவதைப் பற்றி கவலைப்படக் கூடாது." என்பதையும்; ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. September 14, 2014;’தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation';
http://tamilsdirection.blogspot.in/2014/09/v-behaviorurldefaultvmlo.html)   
'செல்வம், செல்வாக்கு, பாராட்டு'களுக்கு ஏங்கும் மனநோயாளிகளின் எதிர்ப்புகளை மலடாக்கி, மீட்சிக்கு பங்களிக்கும் செயல்நுட்பம் இதுவாகும்.

மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை பின்பற்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான,  நல்ல விதையாக நாம்  வளரமுடியும்; நச்சு விதைகளை அடையாளம் கண்டு ஒதுக்க முடியும். அரசியல் நீக்கம் மூலமாக, கொள்கைகள் சருகாகி, அரசியல்  அடித்தளம் இழந்து, 'ஆதாயத் தொண்டர்கள்/ஆதரவாளர்கள்' பலத்தில், வெளிச்சம் போடுபவர்களின் அரசியல் மரணம் நெருங்கியுள்ள சூழலில், தமிழ்நாடு உள்ளது. எனவே மீட்சிக்கான அடித்தளத்தினை, நம்பிக்கையுடன் உருவாக்க,  நம்மால் முடியும்.

(வளரும்)

Saturday, June 20, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (5) 

                        மீட்சிக்கான வழி முறைகள் ?


ஒரு குழந்தை பிறந்து, வளரும்போது, அது பிறந்த நாடு, மொழி, சமூகம், குடும்பம் ஒட்டிய அடையாளங்கள், சமூக இயற்கை செயல்முறையாக (socio-natural process), இயல்பாக வளருகின்றன. அந்த வளர்ச்சி போக்கில்,பெற்றோர்கள், ஆசிரியர்கள்,ஊடகங்கள் மூலமாக சமூக தூண்டல் செயல்முறையும் ( socio-induced process) இடம் பெறலாம்.

வயது வந்த பின்னர் (after reaching adulthood),அவரிடம் இருக்கும் அடையாளக் கூறுகள், அவர் பெறும் சுய‌ அறிவு, அனுபவங்களைப் பொறுத்து, மாற்றங்களுக்கும் உள்ளாக வாய்ப்புகள் உண்டு. 

சமூக ஒப்பீடு (social comparison)  நோய் உள்ளிட்ட சமூக மனவியல் (social psychology)  பாதிப்புகளுக்குள்ளானவர்கள் எல்லாம், பொது வாழ்வில் பிரச்சாரங்கள் மூலம் அரங்கேறும் 'அடையாளப் பொறி'களில் ( Identity imprisonment) சிக்கி, தூண்டப்பட்ட‌ அடையாள எந்திரர்களாக (Induced Identity processed human robots)  வாழவும் வாய்ப்புகள் உள்ளன.

செல்வம், செல்வாக்கு, பாராட்டு போன்றவற்றிற்கு ஏங்கும் மனநோயாளிகளாக வாழாமல், மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும், தொடர்ந்து தமது அறிவை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் எல்லாம்,  அவ்வாறு சிக்குவதற்கு வாய்ப்பு குறைவு; சிக்கினாலும் பின்னர் தப்பித்து, அந்த நோய்களிலிருந்து பிறர் சிக்காமல் காப்பதற்கும் பங்களிப்பு வழங்க முடியும்.

எல்லாவற்றையும் எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடியாது. எனவே சரியான வழிகாட்டிகளாக,  திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் சான்றோர்கள்,  சமுகத்திற்கு தேவைப்படுகிறார்கள். சான்றோர்கள், விஞ்ஞானிகள் போன்ற புலமையாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களையும்,  எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியாது. தமது வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, தமக்கு விளங்காதவைகளை, தவறாக புரிந்து கொண்டு, இழிவு படுத்துவதும், கண்டிப்பதும் தவறாகும்.

இசையில் கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம்(Guide),   தாளம் பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள் ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது.

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களைப் படித்து, விளங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழில் புலமை பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கு இல்லாததில் வியப்பில்லை. பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த " கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும்." என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ).  எனவே  'திராவிடர்', 'திராவிட', 'தமிழர்' அடையாளச் சிதைவுகள் காரணமாக, சமூக இயக்கவியலில் (social dynamics)  என்னென்ன பாதிப்புகள் தோன்றி வளரும் என்பதும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னால் படிக்க இயலும் அளவுக்கு உள்ள தமிழ்ப் புத்தகங்களைப் படித்து, தமிழ் இலக்கியங்கள் தமிழர்க்குக் கேடானவை, ஒதுக்கப்பட வேண்டியவை என பெரியார் முடிவு செய்தார்.

அந்த பின்னணியில், 1944இல் திராவிடர் கழகம்' உருவான பின், ஏற்கனவே இருந்த அறிவுபூர்வ போக்குகள் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகளுடன், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவுகள் அரங்கேறின‌. அதன் தொடர்விளைவாக,  காலனிய மனநோயாளித்தனம் அறிமுகப்படுத்திய, மேற்கத்திய வழிபாட்டு போக்கிலான, 'சமூக ஒப்பீடு நோயானது'(social comparison) , திராவிட மனநோயாளித்தனமாக வளர்ந்து, இன்று உச்சக்கட்டத்தில் உள்ளது.  தமிழ், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, கனி வளங்கள் உள்ளிட்டு அனைத்தையும் 'ஊழல் கோரப் பசியுடன்' சூறையாடி, நல்ல வேலையாக தற்போது மரணப் போக்கில் உள்ளது; தப்பிப்பதற்கான வாய்ப்பில். 

சாதாரணத்தமிழர்கள்  அரசியல் நீக்கத்தில் (depoliticize)  வெறுத்து ஒதுங்க, 'ஆதாய'த் தொண்டர்கள், 'ஆதாய' தமிழ்/திராவிட ஆதரவாளர்கள், 'ஆதாய'த் தமிழ் அறிஞர்கள், துணையுடன், அந்த மனநோயாளித்தனமானது,  சாகும் தருவாயில் உள்ளது. அந்த நோயிலிருந்து மீண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீள, ஆக்கபூர்வமான வாய்ப்புகள்  உள்ளதாக எனக்குப் படுகிறது.

தாய்மொழி, பாரம்பரிய அடிப்படையிலான பண்பாடு போன்றவற்றிற்கு எதிராக சமூக அளவில் வளர்ந்த‌ அடையாளச் சிதைவையும், அரசியல் நீக்கத்தையும், அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும்,  ஆழமாக கூர்ந்து கவனித்து, உரிய பாடங்கள் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனது வாழ்வில் நான் பட்ட , (தப்பிக்க வாய்ப்புகள் இருந்தும், ஆய்வுக்காக விரும்பி அனுபவித்தவை உள்ளிட்ட) துயரங்களும், இழப்புகளும், அவமானங்களும், இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய வாழ்க்கைப் பயணமாகவே எனக்கு படுகிறது. எனது உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions)  அகத்திலும், 'உடுக்கை இழந்தவன் கை' (திருக்குறள் 788) போன்ற நட்புகள் புறத்திலும், 'வாழ்க்கையில் மூழ்காமல்' நான் மீண்டு வாழ, (இப்பதிவுகள் வர)  வழி செய்ததையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக, அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், அகத்தில் சீரழிவைத் தூண்டி, நம்பமுடியாத அளவுக்கு இழிவான மனிதர்களை 'வளரச் செய்த' 'திராவிட செயல்நுட்பத்தை'  நான் கண்டுபிடிக்க முடிந்ததையும்,  குறிப்பிட வேண்டும். இசைத்துறை உள்ளிட்டு, எனது பல கண்டுபிடிப்புகளை விட‌, அது சமூக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கிய‌ கண்டுபிடிப்பாகும். அந்த கண்டுபிடிப்பிற்கு நான் கொடுத்துள்ள விலையானது, தமிழ்நாட்டு நிகழ்கால வரலாற்றில், நானறிந்த வரையில், வேறு எவரும் கொடுத்திராத விலையாகும்.

1944இல் முளைவிட்ட, 'திராவிடர், திராவிட, தமிழர்'  அடையாளச் சிதைவு என்பது, மனித மூளைகளின் செயல்நுட்பத்தில் (processing)  ஏற்படுத்திய‌ மாற்றங்கள் ஆனவை, எந்த அளவுக்கு, அவர்களின் தேவைகளையும் (needs), ஈடுபாடுகளையும் (interests), சமூகத்திற்கு கேடானவையாக மாற்றும்? என்ற சமூக ஆய்விற்கான, சுயநல மனித மிருகங்கள், தமிழ்நாட்டில் கணிசமான அளவில் வளர்ந்துள்ளார்கள்.

அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், அவற்றால் ஏற்பட்ட விளைவுகளாகிய‌ தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தையும், ஆங்கிலவழிக்கல்வி மூலமாக,  தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்கள் சிதைந்து, வேரற்ற 'தமிங்கிலீசர்கள்' தமிழ்நாட்டில் 'சமூக புற்று நோய்' போல, 'அதிவேகமாக' வளர்ந்து வருவதையும், தடுத்து நிறுத்தியாக வேண்டும். 'நம்மால் என்ன செய்ய முடியும்?' என்று மனம் தளராமல், அவரவர் தமக்குள்ள வசதி, வாய்ப்புகளையெல்லாம், தத்தம் அறிவு , அனுபவ அடிப்படையில் எப்படி ஆக்கபூர்வமாக பங்களிப்பு வழங்க முடியும்? என்ற கேள்விக்கான திறவுகோல் பற்றி அடுத்து பார்ப்போம்.

“சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றல்(energy) இருப்பதையும், அந்தந்த நபரின் மனத்தில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) பொறுத்து, தனது தேவைகள், தான் சார்ந்துள்ள குடும்பம், நட்பு, கட்சி, பொது நலன் உள்ளிட்டவைக்கு, அவரின் மனதில் உள்ள முக்கியத்துவ தரஏணி வரிசையில்(hierarchical) , அவருடைய ஆற்றல் விசைகளாக (forces) வெளிப்படும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying) போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும், பிரச்சினைகளிலும் செயலாற்றும் விசைகளின் ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட,  தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே(forces)  ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics),  எவ்வாறு விசைகள் ஆனவை,  பிணைப்புகள்(Bonds)  உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர் மட்டங்களில்,  தொகு விசைகளாக (Resultant Forces)  செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில் (Social Mechanics)  , மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான,  வெவ்வேறு, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில், வெவ்வேறு  தொகு விசைகளாக செயல்படுகின்றன.

ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ, சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.

அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
( http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் ஏற்படுத்திய தீய திசைகளில், மனசாட்சியை அடகு வைத்து, தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்து, பயணித்து, 'அதிவேக பணக்காரராகும்' 'திராவிட' மனநோயாளிகள் எல்லாம், சமூகத்திற்கு கெடுதலான தொகுவிசைகளாக செயல்படுபவர்கள் ஆவர். அத்தகையோர் கடைபிடிக்கும் 'வாழ்வியல் வெற்றியின்' இரகசியங்களை ஏற்கனவே பார்த்தோம். (’தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்; வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’; http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html )

மனசாட்சியுடன் கூடிய சுயவிமர்சனம் மூலம் நமது அகத்தில் உள்ள, அடையாளச் சிதைவு உள்ளிட்ட‌ கழிவுகளை நீக்கிய பின்னரே,  'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க முடியும். அவ்வாறு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்க, கீழ்வரும் தற்காப்பு செயல்முறையும் முக்கியமாகும்.

"எபோலா வைரஸ் நோயாளிகளை குணமாக்க முயலும் மருத்துவர்களே மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் அவர்களுக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். அது போல, 'சமூக எபோலா' அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்,   நமக்குப் பிடித்த 'ஆன்மீகம், பகுத்தறிவு, இந்துத்வா, முஸ்லீம், தலித்' உள்ளிட்டு இன்னும் பல முகமூடிகளுடன் நம்முடன் உறவு கொண்டாலும்,   நாம் அவர்களிடம் மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் நமக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்." என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html ) அத்தகையோரிடம் பழகி, நாம் அந்த சமூக தொற்று நோயிலிருந்து தப்பித்தாலும், நமது நட்பு, குடும்பம் உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில் உள்ளவர்கள், அந்நோயில் சிக்கும் அபாயமும் உண்டு. எனவே அவர்களை ஒதுக்கி வாழ்வதே, சமூக தற்காப்பு புத்திசாலித்தனமாகும்.

மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில், நம்மையும், நமது சமூக வட்டத்தையும் சீர் செய்து, பயணிக்கையில், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான தெளிவான அறிகுறிகள் தெரிவதோடு, நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(passions) இயைந்த, இயல்பான மகிழ்ச்சியோடு கூடிய‌ வாழ்வு வாழ முடியும். தமிழ், தமிழர், தமிழ்நாடு சீரழிவிற்கு பங்களித்த குற்ற உணர்வின்றி, விளம்பரமற்ற பங்களிப்பினை, மீட்சிக்கு வழங்கி, மனநிறைவுடன், மரணத்தை சந்திக்க முடியும்.

 (வளரும்)

Tuesday, June 16, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (4)

 

'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?



தி.மு.க உருவான வருடம் 1949. அதற்கும் முன்னேயே, திராவிடர் கழக  மாநில பொறுப்பாளாராக அண்ணாதுரை இருந்து கொண்டு, 'பிரிவினை' கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இருந்த நிலையில், 1947 இல், 'இந்திய விடுதலையை' துக்க தினமாக பெரியார் ஈ.வெ.ரா அறிவித்ததை, மறுத்து, அதை 'இன்ப நாளாக' அண்ணாதுரை வரவேற்றது கொள்கைபூர்வமா? அல்லது 'எதிர் நீச்சலுக்கு' அஞ்சிய சமரசமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அப்போது அவரை கட்சியை விட்டு, பெரியார் ஈ.வெ.ரா நீக்காதது ஏன்? திராவிடர் கழகத்தை விட்டு, அண்ணாதுரை வெளியேறாதது ஏன்? என்பவையெல்லாம் ஆய்விற்குட்பட்டதாகும். 

“ 'திராவிடர் ' என்ற இன ரீதியிலான சொல்லை விடுத்து, நிலப்பரப்பு ரீதியிலான ' திராவிட 'என்ற சொல்லை ஏற்று, திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி வளர்ந்த வேகத்தில்,' திராவிடர் ' என்ற சொல்லும் வலுவிழந்தது.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

' பெரியார் குறுகிய இன (Race) அடிப்படையில், 'திராவிடர்' என்று பயன்படுத்தினார். ஆனால் நாங்கள் பரந்த புவியியல் (geographic)  அடிப்படையில் 'திராவிட' என்று சொல்கிறோம்' என்ற வகையில் விளக்கம் கொடுத்து, பிராமண‌ர்கள் தி.மு.கவில் சேர்க்கப்பட்டனர். அதற்குப்பின் 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் ' - 'திராவிட' மற்றும் 'திராவிடர்' அடிப்படைகளில்-  செயல்படும்' என்று அண்ணாதுரை அறிவித்தது சரியா? என்பது ஆய்விற்குரியதாகும். 

அது மட்டுமல்ல, மொழிவாரி மாநிலப் பிரிவினையில், சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடாக சுருங்கிய பின்னும், 'திராவிட நாடு, திராவிடருக்கே' என்று முழங்கியது சரியா? 'திராவிட' என்ற சொல்லின் கவர்ச்சியை இழக்க விரும்பாதது , அதற்கு காரணமா?

'திராவிட கவர்ச்சி அரசியலில்' தமிழர்களின்  தாய்மொழி,பாரம்பரியம்,பண்பாடு போன்ற ஆணிவேர்கள், தி.மு.க வளர்ந்த வேகத்தில், எந்த அளவுக்கு சிதைந்தது? என்பதும் ஆய்விற்குரியாகும்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த தவிர்க்க முடியாத வரை எல்லைகள் (limitations) காரணமாக, தமக்கிருந்த அறிவு நேர்மையுடனும், சமூக பொறுப்புடனும் அவர் மேற்குறிப்பிட்ட ஆணிவேர்கள் தமிழர்க்கு கேடானவை என்று அறிவித்தார்.  தி.மு.க, 'இரட்டைக்குழல்' துப்பாக்கியாக, பெரியாரின் அந்த நிலைப்பாடுகளை ஏற்று செயல்பட்டார்களா?  பெரியாருக்கிருந்த‌ வரை எல்லைகள் இல்லாத அண்ணதுரைக்கு, பெரியாரின் அந்த நிலைப்பாடுகள் தவறு என்று தெரியவில்லையா? தெரிந்து பெரியாருக்கு அதை தெளிவுபடுத்த என்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதை செய்யாமல், சேர, சோழ, பாண்டிய அரசர்களையும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களையும் 'கவர்ச்சி தமிழ், கவர்ச்சி தமிழ் உணர்வு' என்று சிறைபிடித்து, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்ததில், தி.கவை விஞ்சி, தி.மு.க சாதனை படைத்ததா? அந்த சாதனையின் அடித்தளத்திலேயே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்வழிக் கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சமூக புற்று நோய்' போல் அதிவேகமாக பரவியதா? அந்த புற்றுநோயில் சிக்கி, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், குற்ற உணர்வே இல்லாமல், மேடைப்பேச்சில், எழுத்தில், 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாகவும், புரவலர்களாகவும் வெளிச்சம் போடும் 'தமிழ்வேர்க்கொல்லிகள்' போல், தமது சுயநல 'தமிழுணர்வு கணக்குகளில்' தமிழைச் சிறைபிடித்து, வளர்ந்தார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.
  
காலனிய அறிமுகத்திற்குப் பின், ஆங்கிலத்தில் இருந்த 'ரேஸ்'(Race)  என்ற சொல்லின் பொருளை, தமிழில் ஏற்கனவே வழக்கில் இருந்த‌ 'இனம்' என்ற சொல்லின் பொருளாக 'திரித்ததால்' , அந்த திரித்தலில், 'திராவிடர்', 'திராவிட' அடையாளங்கள், 'இரட்டைக்குழல் துப்பாக்கியாக' இணைந்ததால் , விளைந்த பலன்களா இவை? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, புவியியல் அடிப்படையிலும், உயிரணு அடிப்படையிலும் தெளிவாக வேறுபடுத்தி அடையாளம் காணப்படும் பொருளில் (as largely discrete, geographically distinct, gene pools) பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றினை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில், 'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம். ('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460'; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)

மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race)  என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட‌ பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது. 

தமிழில் 'பண்' என்ற சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளைக் கருத்தில் சொள்ளாமல், 'தனித்தமிழ்' பற்றில், தமிழில் 'ராகம்' என்ற சொல்லிற்கு பதிலாக, மொழிபெயர்ப்புகளில், 'பண்' என்ற சொல்லை அறிமுகப்படுத்திய தவறைவிட, மிக மோசமான தவறு, மேற்குறிப்பிட்டதாகும்.

தொல்காப்பியத்தில் வரும் 'ஒரீஇ' சூத்திரத்தை தவறாக புரிந்து கொண்டு, பிறமொழிச்சொற்களை ஓசை அடிப்படையில் (Phonetic)  தமிழெழுத்துக்களுடன் பயன்படுத்தாமல், பொருள் மொழிபெயர்ப்புடன் (semantic) பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

("Also will they refute the evidences in the previous posts confirming that the orIi process in tholkAppiam  was a phonetic adoption with reduced acoustic distortions in the Tamil words imported from the foreign languages, without distorting their meanings?

Also can they deny the distortion in the meaning of the foreign words in the semantic adoption in which the new word is created by combining a semantically relevant word-root or word in the host language- Tamil?

The magnitude of the distortion in the meaning would depend on the inevitable differences in the meaning between the foreign word and the semantically created new word in Tamil.( eg. Tamil 'paN ' for Sanskrit 'Raga')"(

அந்த அபாயம், சமூகத்தில் எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு, ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்'(Race)  என்ற பொருளில், தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை தவறாகப் பயன்படுத்தியது சான்றாக உள்ளது.

மனிதர்களின் சமூக அடையாளங்கள் அடிப்படையில், அவர்களின் மனங்களில் தோன்றும் தேவைகளும் (needs), ஈடுபாடுகளும் (interests) , அவர்களின் சமூக செயல்பாடுகளுக்கான சமுக ஆற்றலை எவ்வாறு உருவாக்குகின்றன என்ற சமூக செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’;
https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html ) 

மனிதர்களின் பண்புகள் அடிப்படையில், தமிழில் வழக்கத்தில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, தவறாக ஆங்கிலத்தில் இருந்த 'ரேஸ்' (Race)  என்ற பொருளில் திரித்த‌, காலனிய சூழ்ச்சியில், 'திராவிடர் இனம்' என்ற அடையாளமானது, உணர்ச்சிகர போதையில், கவர்ச்சிகரமான பேச்சு, எழுத்து மூலம் தமிழர்களின் சமூக அடையாளமாக திணிக்கப்பட்டதா? அது தமிழர்களின் இயல்பில் , அரசியல் நீக்கம் உள்ளிட்டு என்ன வகைகளிலான திரிதலை ஏற்படுத்தியது?

'இனம்' திரிந்தது ஆனது, தமிழர்களின் இயல்பில் திரிதலைத் தூண்டியதா? (''காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (3)  இயல்முறி  வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்கள்';
https://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html ) 

தமிழர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்கள் தமிழர்க்குக் கேடானவை என்ற நிலைப்பாடு, அத்திரிதலின் 'வினையூக்கி' (catalyst) ஆனதா? தமிழர்களிடம் குடும்பம், நட்பு உள்ளிட்ட‌ சமூக உறவுகளில், இயல்பாக இருந்த அன்பானது, லாபநட்ட கணக்கில் சிறைபட்டு, தமிழர்களிடையே 'சுயலாப கள்வர்கள்' அதிவேகமாக வளர்வதற்கு, 'திராவிடர்' அடையாளம் ஏற்படுத்திய அடையாளச் சிதைவுகளும், அதன் தொடர்விளைவாகிய 'இயல்பில் திரிதலும்' காரணங்களாகினவா? அந்த 'சுயலாப கள்வர்கள்' பங்களிப்பால், அரசியல் கட்சிகள் 'ஆதாயத் தோண்டர்களை' நம்பி, பயணிக்கும் அரசியல் நீக்கமானது (depoliticize) அதிகரித்துள்ளது.

தமிழர்களிடையே தற்போது நிலவிவரும் அரசியல் நீக்கமானது (depoliticize), அரசியல் கட்சிகள் 'ஆதாயத்தொண்டர்கள் பலத்தில்' சருகாகி, உதிர்ந்து, தமிழ்நாடானது அழிவுதிசையிலிருந்து மீண்டு, ஆக்கபூர்வமான அரசியல் திசை நோக்கி, திரும்பிக் கொண்டிருப்பதற்கான 'சிக்னலா' (signal)? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மனசாட்சியுடனும், திறந்த மனதுடனும், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடனும் வாழ்பவர்கள் தான், இனி 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு, பங்களிப்பு வழங்க முடியும் என்பதை உலக ஆய்வுகள் உணர்த்துகின்றன.  “ 'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு,வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்ச்சிபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html “ ( 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 ) 'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்’; https://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html  )


(வளரும்)