Thursday, January 7, 2016



                        தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம்


எனது ஆய்வுத்திட்டங்களில் (R & D Projects) ,  நானே வியக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள கீழ்வரும் முன்னேற்றங்கள் காரணமாக, திருச்சியில் அலுவலர்கள், வாகன வசதியோடு ஒரு ஆய்வு மையம் (Research Center)  விரைவில் தொடங்க உள்ளேன். 

ஒழுக்கக்கேடான வழிகளில் வளரும், 'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும்' வாலாட்டுபவர்கள் குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும், 'கிருமிகளே' என்ற நிலைப்பாட்டில்;( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) கிருமிகளின் வாடையின்றி, ஒதுங்கி, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும் (Passions), வணங்கத்தக்க மனிதர்களை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழும் போக்கில் விளைந்ததே, கீழ்வருவது உள்ளிட்ட , இன்னும் பல சாதனைகள் ஆகும்.

"கட்டிடவியல்(Architecture)  என்பது உறைந்த இசை (Frozen Music)  என்பதானது, கி.முவில் வாழ்ந்த 'விட்ருவியஸ்' (Vitruvius : https://en.wikipedia.org/wiki/Vitruvius), முதல், நவீன காலத்தில் லேன்னிஸ் செனாக்ஸிஸ் (Lannis Xenakis: https://en.wikipedia.org/wiki/Iannis_Xenakis) உள்ளிட்டு பலர், கட்டிடவியலில் உறைந்துள்ள இசையைக் கண்டுபிடிக்க அரிய ஆய்வுகள் மேற்கொண்டனர்." என்பதையும்;

"மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள , தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி  (NIT Trichy) உயர்க் கல்வி நிறுவனத்தில்,  தற்போது  என்னைத் திட்ட ஆலோசகராகக்(Project Consultant to R & D ) கொண்டு ,   கட்டிடவியல் (architecture), கணினிவியல் (Computing Technology)  வல்லுநர்கள் கொண்ட ஆய்வுக்குழு மூலம் வளர்ந்து வருவதையும்";

கி.முவில் தொடர்ந்த முயற்சி, பல கட்டங்களை(phases) கடந்து, முதல்முறையாக, கட்டிடவியலில் உறைந்துள்ள இசை தொடர்பான 'முழு லாஜிக்கை' (Complete Logic) நான் கண்டுபிடித்து, எனது குழுவினரின் பங்களிப்போடு கணினி வழி செயல்நிருபணம் செய்து முடித்துள்ளதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

ஆய்வுக்குழுவின் தலைவராக உள்ள  பேராசிரியர் விரும்பியவாறு, ஒரு கட்டிடத்தின் படத்தில் உறைந்துள்ள இசைக்கூறுகளை, எனது ஆய்வு உதவியாளர் (Research Assistant & Ph.D Scholar)  கணினி மூலம் பிரித்தெடுத்து கொடுக்க, நான் அவற்றை மூலமாக (Source) கொண்டு,  தமிழில்  ஒரு பல்லவி, சரணத்துடன் பின்னணி இசையும் கணினி மூலம் உருவாக்கி, ஒரு மாணவி அதை பாடி, அந்த 'பிரித்தெடுத்தல்' செயல்நுட்பம் ( Deciphering Technique), கடந்த வாரம் 'வெற்றிகரமாக' ஒத்திகை பார்க்கப்பட்டது; அடுத்து  NIT Director, தொடர்ந்து மத்திய அரசின் உயர்நிலை கண்காணிப்புகளுக்காக (Review).

எனது மற்ற ஆய்வுத் திட்டங்கள்(R & D projects) பற்றியும் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். 

பிறரின் பாராட்டுகளுக்கு ஏங்கி, 'சுயமரியாதை'யை இழந்து,  'வாலாட்டி' வாழும் 'மனித கிருமிகளான சுயலாப கள்வர்களாக' வாழாமல், தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions)  வாழும்போது தான், இது போன்ற சாதனைகளை படைக்கும் வாய்ப்புகள் கிட்டும் என்பதும், என் வாழ்க்கை உணர்த்தும் பாடமாகும்.

மேற்குறிப்பிட்ட வளர்ச்சி பின்னணியில், துவக்கத்தில் குறிப்பிட்ட ஆய்வு மையம் தொடங்குவது அவசியமாகி விட்டது; இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என்னையும், எனது ஆய்வுகளையும் அறிந்த 'நல்ல உள்ளங்கள்', தாமாகவே முன்வந்து, எனது முயற்சிகளுக்கு ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ள‌ நிலையில்.

அந்த 'பலத்திலேயே', 'தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம்', கீழ்வரும் நோக்கில் தொடங்க முடிவு செய்துள்ளேன்.

தமிழ்நாட்டில் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகள் கிராமப்புறங்கள் வரை புற்றீசல் போல், வளர்ந்து வருவதையும், தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் படித்து, இன்று +2, கல்லூரி மாணவர்களாயிருக்கும் மாணவர்கள் பலரால், தமிழ் பத்திரிக்கைகள் படிக்க இயலாது, பேருந்து பலகையில் உள்ள ஊர்ப்பெயர்களை மட்டுமே படிக்கத் தெரியும் என்பதையும், அரசு/அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகள், படிக்க மாணவரின்றி, ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு வருவதையும், எஞ்சியுள்ள பள்ளிகள் பலவற்றில், 'போலி மாணவர்கள்' படித்து வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-12-21T01:54:00-08:00&max-results=7&start=3&by-date=false
குழந்தைகள் 10 வயது வரை, தாய்மொழிவழிக் கல்வி மூலம் பயின்றால் தான், அவர்களின் புலன் திறன் மூளை வளர்ச்சி(cognitive skills related brain development) பெற்று, அவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக வளர முடியும் என்பது பற்றி, உலக அளவிலும், யுனெஸ்கோ(UNESCO) சார்பிலும், பல ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளன; பல நூல்களும் வெளிவந்துள்ளன.  http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html
'தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள் ; ஜெர்மனில் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளிகளே'; 
http://www.kalviyeselvam.blogspot.in/2016/01/blog-post_7.html#more 

தமிழ்நாட்டில் ஜெயமோகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், வசதி மிக்கவர்களும், தத்தம் பிள்ளைகளை இந்த காலத்திலும், தமிழ்வழி அரசு பள்ளிகளில் படிக்க வைத்துள்ளது பற்றிய தகவல்களும், ஊடகத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

'தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம்', தன்முனைப்பு, தனிநபர் முக்கியத்துவம் இன்றி, தமிழ்வழிக்கல்வியை 'சுயலாப' நோக்கின்றி, ஆதரித்து செயல்படும் நபர்களோடும், அமைப்புகளோடும், தொடர்பு கொண்டு, கீழ்வரும் பணிகளை நிறைவேற்றும்.

1.  தாய்மொழிவழிக் கல்வி மூலம் பயில்வதால் வரும் பலன்கள் தொடர்பாக, இந்தியாவிலும், உலகிலும் வெளிவந்துள்ள ஆய்வறிக்கைகள் மற்றும் நூல்களை தமிழில், இளம் பெற்றோர்கள் பார்வைக்கு, எல்லா வழிகளிலும் கொண்டு செல்லல்;

2. தமிழ்வழிக்கல்வியில் 'சுயலாப' நோக்கின்றி, உண்மையாக ஆதரிப்பவர்கள் எல்லாம், வாய்ப்புள்ள ஊர்களில்;

அரசு/அரசு உதவி பெறும் தமிழ்வழி ஆரம்பப் பள்ளிகளை 'தத்து' எடுத்து, தரம் உயர்த்த துணை புரிந்து, அம்முயற்சிகளை ஒருங்கிணைத்தல்;

திருச்சி பெரியார் மைய அனுபவங்கள் அடிப்படையில், 'சுயநல கள்வர்' நோய் இல்லாத குழுவை உறுதி செய்து, வரும் நன்கொடைகளை உடனே ஏற்றுக்கொள்ளாமல், பணிகளின் வளர்ச்சிக்கேற்ற வகையில் ஏற்று, பணிகளையும், வரவு செலவுகளையும் நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து, அவர்களில் ஆர்வமுள்ளவர்கள் பணிகளை பார்வையிட்டு, வழங்கும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, செயல்பட எண்ணியுள்ளேன்.

1970களின் பிற்பகுதிகளில், தமிழ்நாட்டில் 'ஊழல் அரசியல்' உந்துதலில், ஆங்கிலவழிப் பள்ளிகள் புற்றீசல் போல் வளர்ந்து, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மோசமான முன்னுதாரணமாக தமிழ்நாடு வளர்ந்து, இன்று சீரழிவின் உச்சத்த்தை தொட்டு, இயற்கையின் போக்கில், திருப்புமுனை கட்டத்தில் உள்ளது. தமிழ்வழிக்கல்வி மீட்பு மையத்தின் வெற்றிப்பயணமானது, பிற மாநிலங்களின் மீட்சிக்கும், தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழும் விளைவில் முடியும், என்பதும் என் கணிப்பாகும்.

கூடுதலாக;

'காலனி ஆட்சி தொடங்கும் முன், தமிழ்நாடு இருந்த நிலை, இன்றுள்ள நிலை, இடையில் நடந்தவை' என்று;

இதுவரை வெளிவந்துள்ள அனைத்து ஆய்வுகளையும் திரட்டி,  ' On growth & Form'  முன்மாதிரியில், (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html );

நான் உருவாக்கி வரும்,  'சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வடிவம்' (On  social growth and form) என்ற  குறிப்பாயத்தில்(Paradigm),  ஒரு மிக பெரிய நூல் எழுதுவது பற்றியும், திட்டமிட்டு வருகிறேன்;

ஈ.வெ.ரா வழியில்,  மான, அவமானங்கள் பற்றிய கவலையின்றி, ஆனால் எனது வரை எல்லைகள்(limitations) பற்றிய தெளிவுடனும்; சமூகத்தோடும், இயற்கையோடும் இயல்பான உறவுடனும்; குறிப்பாக எனது குழுவில், 'சுயலாப கள்வராக' எவரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு; 'பெரியார் கள்வர்களை', 'திருச்சி பெரியார் மையம்' மூலம், எனது சமூக வட்டத்தில் அனுமதித்து, 'அரிய' பாடங்கள் கற்றுள்ள பின்னணியில்.
http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html


எனவே தமிழ்வழிக்கல்வி மீட்பு மையமும், தமிழ்நாட்டின் திருப்புமுனை போக்கினை, ஆக்கபூர்வமாக நெறிப்படுத்தும் முயற்சிகளுக்கு, பங்களிப்பு வழங்கக்கூடிய, மேற்குறிப்பிட்ட நூல் எழுதும் முயற்சியும், பரிமாற்ற தொடர்பிலான (complimentary), தத்தம் இலக்குகளை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் எதிரெதிர் கொள்கைகளில் உள்ளவர்கள், உணர்ச்சிபூர்வமின்றி, 'பிறர்பார்வை அறிதல்' (Empathy) வழியில் அறிவுபூர்வமாக, விவாதிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன். 

'தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம்' அறிமுக விழாவிற்கும்;

விவாதங்களை வரவேற்கும் நோக்கில் உருவாகிவரும், மேலேக்குறிப்பிட்ட புத்தகங்களில், முதல் புத்தகத்திற்கான முன்னுரைகளுக்கும்;

'பெரியார்' மற்றும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்புகளின் தலைவர்களையும் அணுக எண்ணியுள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, 'பெரியார்' ஆதரவு கல்லூரி மாணவர்களிடையே, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கல்லூரி மாணவர்களிடையே, 'பெரியார்' தலைவர்களும், உரையாற்றும் நிகழ்ச்சிகளை, ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு வருகிறேன்.

No comments:

Post a Comment