Monday, January 4, 2016


ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (3)

 

ஈ.வெ.ரா வளர்த்த சமூக ஆற்றல்கள் எல்லாம்,

'பெரியார்' சமூக கிருமிகள் செயல்நுட்பத்தில் எவ்வாறு சிக்கியது?



நாம் எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, தியாகத்துடன் வாழ்ந்தாலும், நமது சமூக ஆற்றலை, தத்தம் சுயலாப நோக்கிற்கு 'களவாடும்',  'சமூக கிருமிகள்' யார்? யார்? அந்த 'சமூக ஆற்றல் களவு செயல்நுட்பம்' எவ்வாறு நடைபெறுகிறது? 'சமூக தூண்டல்' (Social Induction) மூலம் எவ்வாறு, இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம் அந்நோயில் சிக்கினார்கள்? என்ற ஆய்வின்றி, தமிழும், தமிழரும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீள முடியுமா?

சமூக மாற்றத்திற்கான சமூக ஆற்றல்கள்(Social Energy)  உருவாகி வளரும் போக்கில், அந்த போக்கில், செல்வாக்கான‌ சமூக தொகுவிசையாக (Social Resultant)  செயல்படும் தலைவர்கள் முயற்சியால்,  நடைபெறும் திசைமாற்றத்தின் தன்மையைப் பொறுத்தே, அதுவரை உருவான சமூக ஆற்றல்கள், ஆக்கபூர்வ திசையில் பயணிக்குமா? அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்குமா? என்பது முடிவாகும்.

சமூக மாற்றத்திற்கு ஆதரவான‌ "மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,"

ஒரு மனிதரை செயலுக்கு தூண்டுபவையாக, அம்மனிதரின் மனத்தில் உள்ள தேவைகளும், ஈடுபாடுகளும் இருக்கின்றன. ஒரு மனிதர் பிறந்து வளரும் போக்கில் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, சமூக சூழல் உள்ளிட்ட காரணிகளின் செல்வாக்கில், அவரின் அடையாளக் கூறுகள் உருவாகும்; அவரின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ற மாற்றங்களுடன்.

'1944இல் ஏற்பட்ட‌ திசை திருப்பல் மூலம் அரங்கேறிய, 'திராவிட, திராவிடர், தமிழர்' அடையாள குழப்பங்களால், தமிழர்களிடம் ஏற்பட்ட‌  அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html ) அதன் தொடர்விளைவாக,  தமிழர்களின் மூளை செயல்பாட்டின், 'தேவைகளில்' (Needs) மற்றும் ஈடுபாடுகளில்' (Interests) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அம்மாற்றங்கள் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் என்னென்ன சீர்குலைவுகள் ஏற்பட்டன? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, வன்முறை, திருட்டு போன்றவையெல்லாம் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதும், கட்சி, கொள்கைகளிடமிருந்து அவர்கள் அந்நியமாகி வருவதும், அதன் தொடர்விளைவுகளா? அதனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இன்றுள்ள சீரழிவுகள் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே, 'மீட்சிக்கான' வழிகளை காட்டும்.' என்பதை இத்தொடரின் முந்தைய பதிவில் பார்த்தோம்.

"ஒரு மக்கள் சமூகத்தின் அடையாளங்கள் ஆனவை,  சமூக வரலாற்றில், அச்சமூகம் சந்திக்கும், சமூக தேவைகளின் அடிப்படைகளிலேயே உருவாகும்." என்பதையும்;

"ஆரிய எதிர்ப்பு நோக்கில், இனம் தொடர்பான சொல்லாக‌ , 'திராவிடர்' என்ற சொல், காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாட்டில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. உலகில் வெளிப்பட்டுவரும் ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில், 'இனம்' என்ற பொருளில், 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்துவது என்பது, அறிவுபூர்வமாக சரியா? “A consensus consequently developed among anthropologists and geneticists that race as the previous generation had known it – as largely discrete, geographically distinct, gene pools – did not exist.”- https://en.wikipedia.org/wiki/Race_%28human_classification%29 அறிவுக்கு தொடர்பில்லாமல், உணர்ச்சிபூர்வமாக, அச்சொல்லை இன்றும் பயன்படுத்துவது தவறில்லையா?

அதே போல, காலனிய ஆட்சிக்கு முன், 'சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது', மொழி உயர்வு, தாழ்வு, சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை தொடர்பான சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை.
'சமூக ஒப்பீடின்' (social comparison) அடிப்படையில் அனைத்து வகையிலான உயர்வு, தாழ்வும், காலனியத்தின் நன்கொடையா? என்பது ஆய்விற்குரியது. இசையில் அவை ‘காலனியத்தின் நன்கொடை’, என்பது தொடர்பான, எனது ஆய்வினை ஏற்கனவே பார்த்தோம். ('இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?'

1944இல், தி.க தோன்றுவதற்கு முன்னரே, நீதிக்கட்சி ஆட்சியில், பிராமணர்கள் அமைச்சர்களாக இருந்ததை, ஈ.வெ.ரா எதிர்க்கவில்லை என்பதானது, ஆனைமுத்து வெளிப்படுத்தியுள்ள அபூர்வ சிக்னலாகும். "1944இல் 'திராவிடர்' என்ற அடையாளத்தில், 'திராவிடர் கழகம்' தொடங்கி, ஒட்டு மொத்த பிராமணர்களையும் எதிரிகளாக பாவித்து, அந்த ஆக்கபூர்வ சமூக தள விளைவினை சீர்குலைத்து, அழிவுபூர்வ உணர்ச்சிகளை ஊக்குவித்து, அழிவுபூர்வ சமூக தளவிளவினை (destructive social polarization)  தூண்டினார்கள்.  
 
சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள் இல்லாத  மனிதர்கள், 'உணர்ச்சிபூர்வ' பேச்சுக்கள், எழுத்துக்கள் மூலம் அறிவுபூர்வ கூறுகளையும், ஒழுக்க நெறிகளையும் சீர்குலைத்து, பொதுவாழ்வில் 'அதிவேகமாக' வளர்ந்தார்கள். அத்தகைய தலைவர்கள், ‘போராட்டங்கள்’ என்ற பெயரில் வன்முறையைத் தூண்டி, தொண்டர்களை 'பலி ஆடுகளாக' போராட வைத்து, வாழ்க்கையைத் தொலைக்கச் செய்து, தமது செல்வம்,செல்வாக்கை 'அதிவேகமாக' வளர்க்கும் போக்கும், பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போக்கும், தமிழ்நாட்டில் அறிமுகமானது. இன்று தொண்டர்கள் விழித்துக் கொண்டு, அவர்களில் சுயசம்பாத்திய தகுதி, திறமைகள் இல்லாதவர்கள் 'கூலி ஆடுகளாகி', பின்னர் 'குட்டித் தலைவர்களாக' வளர்ந்து வருகிறார்கள். 'பலி ஆடுகளுக்கு' பஞ்சம் துவங்கியுள்ளது." என்பதையும்;

பின்வரும் பதிவில் பார்த்தோம்.

"தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம். அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்." என்பதையும் மேலே குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.

ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள்ள உள் முரண்பாடுகளை கணித்து கையாளும் அறிவின்றி, தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் இருப்பதானது, அந்த சிதைவு முயற்சியின் 'ஆக்சிஜன்' என்பதும், என் கருத்தாகும்.

தமிழ்நாட்டில் சிறிய கட்சிகள் முதல், பெரிய கட்சிகள் வரை, சுயலாப ஆதாய அடிப்படையில் பயணிக்கும் தொண்டர்கள், தலைவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களா? அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கையற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா? தமது கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக விமர்சிக்கும் போக்கு ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது உணர்ச்சிபூர்வ எதிர்ப்புகளும், வன்முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றனவா?  தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் அழிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குகிறார்களா? ஆக்கபூர்வ அறிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குகிறார்களா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்று செயல்பாட்டில் உள்ள சமூக இயக்க ஆற்றல்களையும் (Social Kinetic Energy), சமூக நிலை ஆற்றல்களையும் (social Potential Energy)  எவை, எவை, அழிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குபவை? எவையெவை ஆக்கபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குபவை?;

என்று பிரித்து பார்க்க,  நமக்கு தெரியவில்லையென்றால்;

நாம் எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, தியாகத்துடன் வாழ்ந்தாலும், நமது சமூக ஆற்றலை தத்தம் சுயலாப நோக்கிற்கு 'களவாடும்', சமூக கிருமிகளின் 'வெற்றி பயணத்தை' தடுக்க முடியுமா? 'பெரியார்' போர்வையில், 'வெற்றிகரமாக' பயணித்து வரும் சமூக கிருமிகள் யார்? யார்? என்று அடையாளம் கண்டு ஒதுக்கவில்லையென்றால், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான சமூக ஆற்றல் வற்றுவதை தடுக்க முடியுமா; தமிழர்களிடையே அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் 'பதர்கள்' அதிகரித்து வரும் ஆபத்தான சூழலில்? (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

குறிப்பு: 'நேற்று(past) நீ எப்படி இருந்தாய்?' என்று குறை சொல்லி (கடந்த கால அடிமை  செயல்நுட்பம் மூலம், 'நிகழ் கால பிணமாக' வாழ்ந்து- 'Freedom from the Known' by J.Krishnamurti ; http://www.jkrishnamurti.org/krishnamurti-teachings/view-text.php?tid=48&chid=56788 ) ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை கண்டிக்காமல்

ஈ.வெ.ரா, 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை ஆதரிக்குமாறு கோரியபோது, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும், தயக்கமின்றி ஆதரித்தது போல; (ஈ.வெ.ரா அவர்கள் சாகும் வரை பொது சிவில் சட்ட கோரிக்கையை ஆதரித்தே பிரச்சாரம் செய்தார்.. அந்த 'பெரியார் தந்த புத்தியை' இழந்து, இன்று தி.க அதை எதிர்க்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது.)

ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால்; 

குன்றக்குடி அடிகளாரை பாராட்டியது போல, ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை (Bold mine)  பாராட்டி, வரவேற்று; 

சமத்துவமின்மையையும் (inequality), பாரபட்சத்தையும் (discrimination), 'செயல்பூர்வமாக' எதிர்க்க, வாய்ப்புள்ளவற்றில், இன்றும்(present)  நாளையும்(future) ஆர்.எஸ்.எஸுடன்   கூட்டாக செயல்பட்டு, அக்கருத்து 'வெறும் பேச்சா? அல்லது செயல்பூர்வமா?' என்று சமூகவியல் சோதனை (sociological experiment)  மூலம் நிரூபிப்பார் என்பது என் கருத்தாகும்.  

" Without mentioning the debate on intolerance,  Bhagwat emphasised that truth has no place for inequality and discrimination. “Accept all the diversities and look at others with affection in all circumstances. Consider others in your place. They all our ours. The society gets its power from the social unity. A person behaves when he realises that all are equal,” Bhagwat said.

He referred to Ambedkar to insist that political unity cannot be achieved sans economic and social unity. “The Constitution can’t protect us unless we stand united leaving aside social inequality. Equality will be established only when everyone resolves that he won’t exploit anyone,” Bhagwat said echoing Ambedkar’s opinion.": http://www.newindianexpress.com/nation/Embrace-People-of-Different-Beliefs-Ideologies-Bhagwat/2016/01/04/article3210181.ece

( வளரும் )

No comments:

Post a Comment