Monday, December 28, 2015



              ஈ.வெ.ராவும் , பாவ்லோ பிரையரும்


"பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடையாளம் காட்டுபவை. பெரியாரைப் பற்றிய கட்டுரையில் இந்த இடத்தில் பாவ்லோ பிரையரை நான் கொண்டுவரக் காரணம், வெறும் கல்விச் சிந்தனையாளர் மட்டுமே அல்ல அவர்; பெரியாரைப் போலவே அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தங்களது இறுதிமூச்சு வரை பேசினார், அவர்களுக்குக் கற்பித்தார் என்பதுதான்."
'பெரியார் எனும் கல்வியாளர்!' பூ. மணிமாறன்

மேற்குறிப்பிட்ட கட்டுரையை படித்தபோது, 'கல்வி' தொடர்பாக, உலக அளவில் புகழ் பெற்ற, பாவ்லோ பிரையரை, நான் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' (மே 1981) என்ற நூலில், கீழ்வரும் வரிகளில், ('பெரியார்' ஆதரவாளர்களின் பார்வைக்கு) முன்வைத்ததானது, ஞாபகத்திற்கு வந்தது.

"சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த ஒருவன், உண்மை நிலையினை சுரண்டலை உணரும்போது, அதனைத் தீர்க்க நடைபெற வேண்டிய, சார்பிலா நடைமுறை மாற்றம், தன் நலனையோ, தான் சார்ந்துள்ள வர்க்க நலனையோ, பாதிக்குமென்றால், அவன் மனநோயாளி போன்று நடப்பான்.' என்று  Paulo Freire தனது 'Pedagogy of the oppressed' என்ற நூலில் சொல்கிறார். Paulo Freire. "
'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' பக்கம்19,

கல்லூரியில் பேராசிரியராகவும் (எனவே சராசரி மனிதரைவிட, அறிவு நிலையிலும், வாழ்வு நிலையிலும் சற்று மேல் நிலையில் இருந்த; பாவ்லோ பிரையரின் கருத்துப்படி, 'சமூக அக்கறை' என்ற பேரில் 'மனநோயாளிகள்' அல்லது 'சுயநல கள்வர்களாக' வாழ, அதிக வாய்ப்புள்ள‌), இன்று அதைவிட மேலான, திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ஆய்வுத்திட்ட ஆலோசகராக ( Project Consultant to R & D Project) பங்களித்து வரும் நான், என்னை தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட அளவுகோல் அடிப்படையிலான சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி வாழ்ந்து வருவதால், 'பாராட்டு, புகழ், செல்வம், செல்வாக்கு' அதிகரிப்பிற்காக, அத்தகையோருக்கு வாலாட்டும் நாயாக வாழாமல்,( http://tamilsdirection.blogspot.com
/2013_10_01_archive.html ) அதனால் வரும் 'இழப்புகளையும், அவமானங்களையும்' ஏற்று, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுக்கும்(Passions), சமூக அக்கறைக்கும் இணக்கமான (Harmonious) வாழ்வுமுறையில், வாழ முடிகிறது.

"மக்களுக்காக தங்களை உண்மையாக அர்ப்பணிப்பவர்கள் எல்லாம், தம்மை தொடர்ந்து சுயவிமர்சனதிற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்."
" Those who authentically commit themselves to the people must re-examine themselves constantly." 'Pedagogy of the oppressed' , P60

ஆனால் 'பெரியார்' ஆதரவாளர்களில் யார், யார், பாரதியைப் போல;
(வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு;http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html),
'சமூக மனநோயாளிகளாக' வாழ்ந்து வருகிறார்கள்? அல்லது 'சுயநல கள்வர்களாக' வாழகிறார்கள்? என்ற ஆய்வினை தாமதப்படுத்துவது என்பதானது, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக மட்டுமின்றி,ஈ.வே.ராவை வரலாற்றில் குற்றவாளியாக்கிவிடும், அபாயத்திலும் முடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

அதாவது ஒரு சமூகத்தை மாற்ற முயலும் அமைப்பில் உள்ளவர்கள் எல்லாம், தமது செயலை, தமது அமைப்பை, எங்கிருந்து? எப்படி பயணித்து? இன்று என்னை நிலையில்? எதை  நோக்கி?, என்று எடை போட துணை புரியும், அமைப்பின் ஒழுக்க நெறிகளை, புரிந்து செயல்படுவதன் அவசியத்தை,  பாவ்லோ பிரையர் சுட்டிக்காட்டியுள்ளார். 
(Such an organization does need, as Freire often suggested, an ethic that people understand and can use to judge what they do, what the organization is, where they have been, and where they are headed.   http://richgibson.com/freirecriticaledu.htm)


தனது அகத்தில், குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில், திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், சமூக மாற்றதிற்கான போராட்டத்தை, முன்னெடுக்கும் மனிதர்,  சந்திக்க வேண்டிய ஆபத்துகளை, நன்கு விளக்கி, வழிகாட்டியுள்ள நூல் 'Pedagogy of the oppressed'. 

அதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது 'பாதுகாப்பு வளையத்தை' (comfort Zone) மேற்குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளவாறு, இழிவான சமரசங்களுடன் உறுதி செய்து, 'புறத்தில்' முற்போக்கு வேடமிட்டவர்கள் முன் நின்றதே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதும் என் கருத்தாகும்.


அடுத்து, தனது தொண்டர்கள் ஆனபின்,  தனது தலைமையில் 'முட்டாள்களாக' இருக்க வேண்டும் என்று,  1948 தூத்துக்குடி மாநாட்டில் ஈ.வெ.ரா அறிவித்ததானது,  எந்த அளவுக்கு, "பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடையாளம் காட்டுபவை."  என்று எழுத அனுமதிக்கும்?' என்பது விவாதத்திற்குரியதாகும்.

ஈ.வெ.ரா தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பாதக விளைவுகள் பற்றிய எனது ஆய்வுகளை விளங்கிக்கொள்ள, 'Pedagogy of the oppressed' என்ற நூலை ஆழ்ந்து படிப்பது துணை புரியும். பழந்தமிழ் இலக்கியங்கள், மற்றும் புராணங்கள் தொடர்பாக, தனது வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை,  நான் வெளிப்படுத்தியுள்ளேன்.


ஈ.வெ.ராவுக்கு இருந்த வரைஎல்லைகள்(limitations) இல்லாததாலேயே, பாவ்லோ பிரையர் தான் சார்ந்திருந்த, கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் இருந்த குறைபாடுகளை ஆராய்ந்து, வெளிப்படுத்தி, மேல்நாட்டில் கிறித்துவர்கள் தமது சமூக மாற்றத்திற்கு, பங்களிப்பு வழங்க துணை புரிந்துள்ளார்; ஈ.வெ.ரா வைப் போல, அவை தொடர்பான இலக்கியங்களை, புராணங்களை முற்றிலுமாக கண்டித்து, வெறுக்காமல். (Freire's method helped Christians rediscover the prophetic call to social change that not only was part of their biblical heritage but had, in fact, been an integral part of the history of adult education in the United States (Clare, 2000); http://www.talbot.edu/ce20/educators/catholic/paulo_freire/#contributions; In Freire's work, the world and the mind exist, but finally as territory in the mind of a god.
For Freire, filled with a lifetime of radical Roman Catholicism, the material world is subordinate to, and plays itself out in, the world of ideas and religion;  http://richgibson.com/freirecriticaledu.htm )

ஈ.வெ.ராவின் வரைஎல்லைகள் காரணமாகவே, வேதங்களுக்கு எதிரான நூல்களும் இருந்த, உலகின் தொன்மை மொழிகளில் நாத்தீகம் பற்றி அதிகம் உள்ள சம்ஸ்கிருத மொழியை (Amartya Sen:  'Identity and Violence; The Illusion of Destiny' Page 35  ), 'பிராமணர்கள், வேதங்கள்' மொழியாக மட்டுமே அடையாளப்படுத்தி, வெறுக்கும் போக்கு வந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அது மட்டுமல்ல, பாவ்லோ பிரையரின் எழுத்துக்களை, 'வேத வாக்காக' கருதாமல், அவர் பற்றி வெளிவந்துள்ள அறிவுபூர்வமான விமர்சனங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ,  பாவ்லோ பிரையர் வழியில், சமூக மாற்றங்களுக்கு ஏன் வழியில்லை? என்பது பற்றிய விமர்சனம்;

"Discourse analysis in the tradition of the idealist Freire will not supply the social forces necessary to make change." ; http://richgibson.com/freirecriticaledu.htm 

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சிக்கல்களுக்கு, அவர் கருத்துக்கள் எந்த அளவுக்கு தொடர்புள்ளவை, தொடர்பற்றவை, என்பது போன்ற அவரின் வரை எல்லைகள் பற்றிய புரிதலும் அவசியம். உதாரணமாக 'ரேஸ்'(Race) என்ற ஆங்கிலச்சொல்லின் பொருளிலின்றி, சங்க இலக்கியங்களில் வரும் 'இனம்' என்ற சொல்லின் பொருள் பற்றி, பாவ்லோ பிரையருக்கு தெரிந்திருந்தால், அவரின் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ள தவறுகள் ஆனவை, அவரின் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்காது என்பதும் என் கருத்தாகும். பாவ்லோ பிரையரின் ஆய்வுகளில், திறனாய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை சரி செய்து, வளர்க்கும் முயற்சிகளுக்கு துணைபுரியக் கூடியது, கீழ்வரும் பதிவாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

No comments:

Post a Comment