Wednesday, December 16, 2015



வெள்ள நிவாரணங்களும், நடிகர் தனுஷின் வெற்றிப்படங்களும் உணர்த்தும் 'சிக்னல்'?(1)

 

ஏற்கனவே 'கோலோச்சி வந்த' 'குறிப்பாயங்களின்' (paradigm) மரண அறிகுறிகளா?


'ராஜா அம்மணமாயிருக்கிறார்' ( உலகப்புகழ் பெற்ற சிறுகதை: https://en.wikipedia.org/wiki/The_Emperor%27s_New_Clothes ) என்று என்னைப் போன்றவர்கள் எச்சரித்தாலும், கண்டுகொள்ளாமல், 'உணர்ச்சிபூர்வ மேற்கத்திய அறிவு ஆணவத்தொடு', தமிழ்நாட்டில் 'இந்துத்வா' எதிர்ப்பு அறிவுஜீவிகள் பயணிக்கிறார்களா? என்பதற்கு சான்றாக, மறைந்த 'முற்போக்கு' பேரா. M.S.S பாண்டியன் எழுதி, வெளிவந்த 'M.G.Ramachandran in film and politics- The Image Trap’ நூல் பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

'இந்துத்வா எதிர்ப்பில்' காட்டிய ஆர்வத்தை, தமிழ்நாட்டில் ஏரிகள், ஆறுகள், கிரானைட், தாது மணல், சந்தன மரங்கள் உள்ளிட்ட காடுகள், கடந்த சுமார் 40 வருடங்களாக, 'ஊழல் கோரப்பசிக்கு' இரையாகி வந்துள்ளது பற்றியும், 'கல்வி வியாபார' ஆங்கிலவழிக்கல்வி புற்றீசல் வளர்ச்சி மூலம், தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் குறித்தும், ஏதேனும் எழுதி, வெளியிட்டிருக்கிறார்களா? அதே போல், 'இந்துத்வா ஆதரவில்' ஆர்வம் காட்டியவர்களில், இது போன்ற பாதிப்புகளில், 'மெளனம்' கடைபிடிப்பதில், 'இந்துத்வா எதிர்ப்பாளர்களுடன்', செயலில் (ipso facto)  'ஒன்றாக' பயணித்தவர்கள் யார்? யார்? அந்த கொள்ளையில் 'வாய்க்கரிசி' பெற்று, தமிழையும், தமிழ்நாட்டையும் 'சூது கவ்வ' துணை போன, 'இந்துத்வா எதிர்ப்பு', மற்றும் 'இந்துத்வா ஆதரவு' முகாம்களில் உள்ள 'மாமக்களின்' 'டிரவுசர்' (வெளிவேடம்) ஆனது, வெள்ள பாதிப்புகள் மற்றும் 'உடனே' வெளிப்பட்ட நிவாரணங்கள் மூலம், கழன்று விட்டதா? ['மாமா டிரவுசர் கழண்டுச்சு' ('சூது கவ்வும்') திரைப்படப்பாடல்]

உலக அளவில் இலக்கிய சாதனைகள் எல்லாம், சமூகத்துடனும், இயற்கையுடனும், 'சுயலாப நோக்கற்ற உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்'(Passions), 'பாதுகாப்பு வளையச் சிறையில்' சிக்காமல், பயணித்தபோது வெளிப்பட்டவையே ஆகும்.  மேலேக்குறிப்பிட்ட பிரச்சினைகளில், மேற்குறிப்பிட்ட 'மெளனம்' வெளிப்படுத்திய  'மாமாக்கள்' போல பயணித்து வரும், 'இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு' இன்றைய எழுத்தாளர்கள் யார்?யார்? "தமிழிலே முயல், ஆமையைத் தொடர்புபடுத்தி ஒரு ஓட்டப் பந்தய கதை உண்டு. முயல் அசட்டையாக தூங்கிக் கொண்டிருக்கும்போது ஆமை முந்திக் கொண்டதைப் போல மலையாளம் முந்தி நிற்கிறதா?" (சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.மாதவன் சிறப்பு பேட்டி; http://tamil.thehindu.com/tamilnadu/ ) தமிழ் இலக்கியமானது 'ஆமை' போல், ஏன் பின்தங்கியது? மலையாள எழுத்தாளர்களிடையே, தமது மொழி, கேரளத்தை 'ஊழல் கோரப்பசியில்' சூறையாடல், தொடர்புள்ள பிரச்சினைகளில், தமிழ்நாடு அளவுக்கு 'மெளனம்' கடைபிடித்து, பிரபலமாகியுள்ளவர்கள் இருக்கிறர்களா?

தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட 'மாமாக்கள்', அவ்வாறு பயணிப்பதற்கும், இன்று சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை, 'அரசியல் சுயநல பொதுவாழ்வு கொள்ளை'யர்களின், 'அதிவேக செல்வம்,செல்வாக்கு' வளர்ச்சிக்கு 'பயன்படுவதற்கும்', தொடர்பு இருக்கிறதா? அந்த 'அதிவேக செல்வம்,செல்வாக்கு' வளர்ச்சிக்கும், சென்னை உள்ளிட்டு தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் வெள்ளபாதிப்புகளுக்கும் தொடர்பிருக்கிறதா?

என்ற ஆராய்ச்சிக்கு, சமூக ஆற்றல்கள் ஒரு சமூகத்தில் எவ்வாறு உருவாகி, என்னென்ன திசை மாற்றங்களுக்குள்ளாகும் என்பதை, முந்தைய பதிவில் பார்த்தோம்.

இன்று என்ன நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக, சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை' (signals), உணர்ச்சிபூர்வ இரைச்சலிலிருந்து, பிரித்தெடுத்து ஆராய வேண்டும்.

அத்தகைய ஆராய்ச்சிக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டுமானால், தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மை 'மூலங்களிலிருந்து'(sources) தான் தொடங்க வேண்டும்.

உதாரணமாக ஒரு ஊரில் (செல்வாக்கில் வளர்ந்து, அல்லது வீழ்ந்து, அல்லது புதிதாக முளைவிடும்) வலம் வரும் இசையை ஆராய்ந்து, அந்த ஊரின் வரலாற்றுப்பின்னணியையும், இன்றைய 'யோக்கியதையையும்', கண்டுபிடிக்க முடியும் என்று சுட்டிக்காட்டும் சான்று வருமாறு:

'பணிவு இல் சீர், மாத்திரை இன்று நடக்குமேல், வாழும் ஊர் கோத்திரம் கூறப்படும்.'
நாலடியார் 242

சீர் என்பதானது, நேரசை, நிரையசை என்ற இருவகை (எழுத்தின் இசையொலியால் உருவான) அசைகளின் கூட்டால் உருவாகி, தன்னுள் பாலைநிலை, பண்ணுநிலை, வண்ணகூறுபாடு, தாளக்கூறுபாடு ஆகியவற்றை கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இசைஉட்கூறு (significant musical substructure) ஆகும்.( சிலப்பதிகாரம்: அரங்:26 உரை)

ஒரு சமூகத்தில் உள்ள இசையின் வரலாறும், அந்த சமூகத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது தொடர்பான ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. 

உதாரணமாக‌ , தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன் வந்து, உலக அளவில் புகழ்பெற்ற திரைப்பட 'கொலை வெறி' பாட‌லை, ஆய்வுக்கு உட்படுத்திய பதிவு

இன்று சமூகத்தில் உள்ள இசை, நாட்டியம், நாடகம் மட்டுமின்றி, புதிதாக வளர்ந்துள்ள திரைப்படங்களையும், ஆய்வு செய்வதற்கான 'திறவு கோலாக', மேற்குறிப்பிட்டவை உள்ளன.

அந்த ஆய்வை மேற்கத்திய ஆய்வுமுறைகளின் மூலம், எவ்வளவு தவறாக மேற்கொள்ள முடியும்? என்பதற்கு மேலேக்குறிப்பிட்ட '  M.G.Ramachandran in film and politics- The Image Trap’  நூல் சான்றாக இருக்கிறது. 

எனவே மேற்கத்திய வழிபாடு போக்கின்றி, திறந்த மனதுடன், அந்த மேற்கத்திய ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு, நாலடியார் தெரிவித்துள்ள திறவுகோலின் அடிப்படையில், எவ்வாறு ஆய்வு மேற்கொள்வது? என்ற திசை பற்றி, சுருக்கமாக பார்ப்போம்.

திரைப்பட நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டு, இன்று வளர்ந்து வரும் தனுஷ் வரை, ஒவ்வொரு நடிகரின் வெற்றி பெற்ற/தோல்வியுற்ற‌ திரைப்படங்களும் மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கான, 'சிக்னல்களைக்' கொண்டுள்ள புதையலாகும்.

உதாரணமாக,  'வீட்டுக்கு அடங்கி'  'ஒழுக்கமாக(?) நன்கு படித்த' பிள்ளைகள், 'சிக்கல்கள்' வரும்போது, எவ்வளவு இழிவான 'சுயநலக்கள்வர்'களாக‌ நடந்து கொள்கிறார்கள்? பெற்றோர்களால் 'ஊதாரி' என்று கண்டிக்கப்படுபவர்கள், எவ்வளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள்?' என்பதை, கதாநாயகனை மையமாக வைத்து, வெளிப்படுத்தியதில், 'புதிய போக்கை' முதலில் அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றது;  'வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட தனுஷ் நடித்த  படங்களா? என்பது ஆய்விற்குரியது.

இசையில் 'சீர்' எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அது போல ஒரு சமூகத்தில் 'சீரான ' மனிதர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சமூகம் 'சீரழிவு' திசையில் பயணித்தால், அந்த சமூகத்தின் 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்துள்ளார்கள் என்பது காரணமாகும். அந்த நிலையில் மீட்சியின் அறிகுறியாக, சாதாரண மனிதர்களிடையே, அல்லது முன்பு 'சீரழிந்தவர்களாக' கருதப்பட்டவர்களிடையே, 'சீரான' மனிதர்கள் வெளிப்படும் போக்கானது துவங்கும். 

அப்படிப்பட்ட திருப்புமுனை சூழலில், வெளிப்படும் திரைப்படங்களும், பாடல்களும்  அவற்றை பிரதிபலிக்கும். இன்று திரையரங்குகளில் அதிகமாக குவிபவர்கள் இளைய சமூகத்தினர் என்பதால், வியாபார ரீதியில் , வெற்றிபெறும்/தோல்வியுறும் படங்களும், பாடல்களும், அந்த திருப்புமுனையின் போக்கை கணிக்க உதவும், மதிப்புமிக்க 'சிக்னல்கள்' (Valuable Signals) ஆகும்.

புதுக்கோட்டையில் விளம்பரம் உள்ளிட்ட சுயலாப நோக்கின்றி, வசதியற்ற/அனாதை பிணங்களை 'உரிய மரியாதைகளுடன்' எரியூட்டி/அடக்கம் செய்தல் உள்ளிட்ட பல தரும காரியங்கள் செய்து வரும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், சில வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, தெரிவித்த தகவலானது, மேற்சொன்னதுடன் ஒப்பிடக்கூடியது ஆகும்.

திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், ஒரு பகல் பொழுதில், விபத்துக்குள்ளான பேருந்தில், ப‌லர் படுகாயம் அடைந்து, சாலையில் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பொருட்படுத்தாமல், அந்த வழியில் பல வாகன‌ங்கள் கடந்து சென்றன. குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், தனது இரு கைகளையும் விரித்து, சாலையில் நடுவில் நின்று, மிரட்டி, வாகனங்களை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவர்களை அந்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைத்தார்.

அக்கருத்தை மையமாக வைத்து, சங்கரின் 'அந்நியன்' வியாபாரரீதியில் வெற்றிபெற்றதும், கவனிக்கவேண்டிய 'சிக்னல்' ஆகும்.

சென்னை வெள்ளை நிவாரணத்தில், பாதிக்கப்பட்டவர்கள், எந்த சாதி, மதம் என்று பாராமல், உண்மையான மனித நேயத்துடன்,  'இந்துத்வா, முஸ்லீம்' உள்ளிட்டு கட்சி சாராத இளைஞ‌ர்களின் (இந்து கோவிகளில் வெள்ளச்சேதம் ஏற்படுத்திய கழிவு குப்பைகளை, முஸ்லீம் இளைஞர்கள் அகற்றியது உள்ளிட்ட‌), இளைய திரைப்பட நடிகர்களின்  பங்களிப்பானது, 'தலை'யாக வெளிப்பட்டவுடன், எல்லா அரசியல் கட்சிகளும், தலைவர்களும் 'முகத்தை'க் காப்பாற்றிக் கொள்ள, 'வாலாக' வரவில்லையா? 

சாலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஏழைகளும், நடுத்தர மக்களும் காட்டும் அக்கறையை, காரில் பயணிக்கும் வசதியானவர்கள் பொதுவாக (விதி விலக்குகள் இருக்கலாம்) காட்டுவதில்லை. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப்பின், 'அந்த' மனிதாபிமானமானது, வசதியானவர்களிடமும் வெளிப்பட தொடங்கியுள்ளதை ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. 


செயல் மூலம் இசைக்கப்பட்டது 'மாமா டிரவுசர் கழண்டுச்சு'


'மாமா டிரவுசர் கழண்டுச்சு' ('சூது கவ்வும்') திரைப்படப்பாடலை, செயல் மூலம் 'இசைக்கச்செய்த', இளம் நடிகர்களையும், சாதி, மத பேதமின்றி சேவை செய்த இளைஞர்களையும் மனமாற பாராட்டி, வணங்குகிறேன். ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிக‌ளில் வெளிப்பட்டு வருவது போல, இனி, சமூகத்தில், உறவினர்/நண்பர் குடும்ப நிகழ்ச்சிகளில், 'அரசியல் கொள்ளையர்கள்' கேலி, கிண்டலுக்கு இலக்காகப் (Objects of jokes & hatred) போவதானது, அடுத்து தமிழ்நாட்டில் அரங்கேறினால், வியப்பில்லை. அந்த 'சுயநலக்கள்வர்களின்' குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், சுயமரியாதையும், மனசாட்சியுமுள்ளவர்களை எல்லாம், அந்த கேலி, கிண்டல்கள் 'தட்டி, எழுப்ப', அந்த கள்வர்களின் ஆட்டமும் அடங்குவதும், அதிக தொலைவில் இல்லை.

மோடி ஆட்சியில் ஊழல் ஒழிப்பு மந்தமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ள சூழலில் 
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/), 'வெள்ள நிவாரணம்' மூலம் 'புத்துயிர் பெற்ற' சமூகசெயல்நெறி மதகுகள் மூலம் 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html) இந்தியாவிற்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டு இளைஞர்களும், இளம் நடிகர்களும் 'தலை'யாக செயல்பட, 'சுயநல கள்வராக' வாழாத தமிழர்கள் எல்லாம், அனைத்து கட்சிகளிலுமுள்ள ஊழல் அரசியல்வாதிகளை ஓரங்கட்டி, தமிழ்நாட்டை மீட்கத் தொடங்கி விட்டார்கள். எனவே தமிழின் மீட்சியும் சாத்தியமாகிவிட்டது. "நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்." -'கக்கா போவதும் அரசியல்தான்!' -  சமஸ்: 
http://tamil.thehindu.com/opinion/columns

ஏற்கனவே 'கோலோச்சி வந்த' 'குறிப்பாயங்களானது'(paradigm: Intellectual perception or view, accepted by an individual or a society as a clear example, model, or pattern of how things work in the world), தலைகீழ் மாற்றங்களுக்குள்ளாகி, ஆக்கபூர்வ திசையில் பயணிப்பதன் அறிகுறிகளையே, தனுஷின் வெற்றிப்படங்கள் உள்ளிட்ட, மேற்குறிப்பிட்ட 'சிக்னல்கள்' உணர்த்துகின்றனவா? மக்களிடமிருந்து 'அந்நியமாகி', அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'பல முகமுடிகளுடன்' செல்வம், செல்வாக்கு ஈட்டிய செயல்நுட்பங்களால் செல்லறித்து போன, அந்த 'குறிப்பாயங்களானது',  சமூக அருங்காட்சியத்தில்  'இடம்' பெறப்போவதையும் அவை உணர்த்துகின்றனவா? ஏற்கனவே 'கோலோச்சி வந்த' 'குறிப்பாயங்களின்' அடிப்படையில், சமூகத்தின் வளர்ச்சிக்கு முன்னணியில் இருக்க வேண்டிய கட்சிகளும், நன்கு படித்து நன்கு 'செட்டில்' ஆனவர்களும், பொதுநலக்கேடான சுயநல நோக்கில்,  பெரும்பாலும் பயணிக்கையில், சாதாரண மனிதர்களிடையே, 'நம்பிக்கை நட்சத்திரங்கள்' வெளிப்படத் தொடங்கியுள்ளன.

(வளரும்)

No comments:

Post a Comment