Monday, December 7, 2015


  கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும்(1)

                   

                   நமக்கு பாடங்கள்?



ஒரு மனிதருக்கு ஏற்படும் கோபமானது, அந்த மனிதரின் வெற்றி நோக்கிய பயணத்திற்குதவும் சிக்னலை(signal)  கொண்டது என்பதானது,  கீழ்வரும் பதிவில் விளக்கப்பட்டுள்ளது.
"Anger- A key to success"; 

கோபத்திற்கு அடிமையானால், அது தோல்விக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது.

திராவிட இயக்க வரலாற்றில் மேற்குறிப்பிட்ட தோல்வியில் 'பெரியார்' பயணித்தாரா? என்பதும், மேற்குறிப்பிட்ட வெற்றியில் அண்ணா பயணித்தாரா? என்பதும், கீழ்வரும் தகவலின் அடிப்படையில் ஆய்விற்குரியதாகும்.

"சுயலாப உள்நோக்கில், 'விவாதம்' என்ற பெயரில், தம்மை இழிவு படுத்துபவர்கள் மீது, கோபப்படாமல், புறக்கணிப்பதன் மூலம், நமது சமூக ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க முடியும் என்பதற்கு, 1944க்கு முன் இருந்த ஈ.வெ.ரா சிறந்த முன்னுதாரணம் ஆவார். 1944க்குப்பின், அதிலிருந்து அவர் நழுவி, 1949க்குப்பின், அண்ணா உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் மீது, 'கோபத்தில்' வசை மாறி பொழிந்தது, தி.மு.கவின் வளர்ச்சிக்கே உதவியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த வசை மாறி தொடங்கியதுமே, 'நாம் வெற்றி பெற்று விட்டோம்' என்று, அண்ணா கருத்து வெளியிட்டதாகவும் தகவல் உண்டு. தி.மு.கவில் அண்ணா மட்டுமே, பதிலுக்கு 'பெரியார்' மீது 'வசைமாறி' பொழியாதவர் ஆவார்."

ஆனால் அண்ணா பெற்ற வெற்றியால், தமிழ்நாட்டிற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போனதா? என்ற ஆராய்ச்சிக்குதவும் தகவல் வருமாறு;

" 1967‍இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, அதற்கான ஆளுமை தனக்கில்லை என்பதை அறிந்து, தான் தனது புற்று நோயால் விரைவில் மரணமடைய விரும்புவதாக, தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததை, அவர் தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்."

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணமான ஏரிகள், ஆறுகள் ஆக்கிரமிப்பு, கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட கனிவளக் கொள்ளைகள், தமிழ்வழிக்கல்வியின் (எனவே) தமிழின் மரணப்பயணம், உள்ளிட்ட இன்னும் பல பாதிப்புகள் எல்லாம், மேலேக்குறிப்பிட்ட அண்ணாவையே மனமுடையச் செய்த, 'வெற்றி'யின் பலன்களா? என்பதும் ஆய்விற்குரியவையாகும்.

அதிலும் ஒரு அமைப்பின் (குடும்பம், கட்சி, etc ) பொதுவான பண்புகளுக்கும், அந்த அமைப்பின் தலைவரின் பண்புகளுக்கும்,  'சுருதி பேதம்' இருந்தால், என்ன ஆகும்? என்ற ஆய்விற்கும் 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் மிகவும் பயன்படக்கூடியவை ஆகும். அந்த சுருதி பேதமானது, தமிழ்நாட்டின் சமூக சூழலை களங்கமாக்கி, 'வித்தியாசமான சமூக கிருமிகள்' உருவானதன் விளைவாகவே, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாமாகவே முன்வந்து செய்த உதவிகளுக்கு, 'தடைகள்' வெளிப்பட்டதா? உலக வரலாற்றில், இது போன்ற இழிவுக்கு முன்னுதாரணம் உண்டா? அந்த சமூக களங்கமே, தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ளதா?  அந்த ஆய்வின் மூலமே தமிழ்நாட்டில் உள்ள 'சமூக முச்சுத்திணறல்' (social suffocation) பற்றியும், திறந்த சமூகவெளி காற்றை (social breathing)  எவ்வாறு சுவாசிக்க முடியும்? என்பது பற்றியும் அறிய முடியும். "மூச்சுத் திணறல் ஏற்படுத்தி வந்த 'சமுக நோய்த் துகள்களும்' , அவற்றைப் பாதுகாத்து வரும் அமைப்புகளும், காணாமல் போகும் காலம் தொலைவில் இல்லை." என்பதையே, வெள்ள நிவாரணத்தில் வெளிப்பட்ட, அரசியல் கட்சிகளைச் சாராதோரின், 'அபரீதமான பங்களிப்பு' உணர்த்துகிறதா?  
http://tamilsdirection.blogspot.in/2014/09/v-behaviorurldefaultvmlo.html

உணர்ச்சிபூர்வ சமூக மாசுபடுதலில்(Social Pollution)  சிக்கி, அத்தகைய சமூக சுவாசமின்றி(social breathing failure), தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் எவ்வாறு பாதிப்புகள் வந்தன? எப்படி மீள்வது? என்பவை தொடர்பான முயற்சிகள், ஆக்கபூர்வ திசையில் பயணிக்க முடியுமா? அத்தகைய ஆய்வுடன் தொடர்புடையவை வருமாறு;

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும், ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள வகையில் சொந்த வாழ்வு, மற்றும் சமூக வாழ்வு (இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு ,etc) என்ற இரண்டு பரிமாணங்கள் உள்ளன. அந்த இரண்டு பரிமாணங்களுக்கிடையில், சுருதி பேதத்துடன் ஒரு மனிதர் வாழ்வதால், ஏற்படும் விளைவுகள் என்ன? அவருடைய வெற்றியும், தோல்வியும் சமூகத்தில் எந்த அளவுக்கு விளைவினை ஏற்படுத்தும்? என்பதானது, சமூகத்தில் அவருக்குள்ள செல்வாக்கைப் பொறுத்ததாகும். எனவே தலைவர்களின் வெற்றி, தோல்விகள் என்பவை, சாதாரண மனிதரின் வெற்றி, தோல்விகளை விட, சமூகத்தில் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வெள்ளிடைமலை.

ஒரு சமூகத்தில் ஆற்றல்கள் எவ்வாறு உருவாகின்றன? எவ்வாறு செயல்படுகின்றன? என்பது பற்றிய புரிதலே, தவறான திசையில் ஆற்றல்கள் செலவாவதை கண்டுபிடித்து, சரியான திசை நோக்கி திருப்பி, சமூகத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்க துணை புரியும். அந்த செயல்நுட்பம் வருமாறு.

சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றல்(energy) இருப்பதையும், அந்தந்த நபரின் மனத்தில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) பொறுத்து, தனது தேவைகள், தான் சார்ந்துள்ள குடும்பம், நட்பு, கட்சி, பொது நலன் உள்ளிட்டவைக்கு, அவரின் மனதில் உள்ள முக்கியத்துவ தரஏணி வரிசையில்(hierarchical) , அவருடைய ஆற்றல் விசைகளாக (forces) வெளிப்படும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 (’ சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds) ‘; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

" ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.

எனவே சுயநல நோக்கின்றி, சமூக அக்கறையில் தியாகம் புரிந்து வாழ்ந்தவர்கள், எந்த கொள்கையாளராக இருந்தாலும் பாராட்டத்தக்கவர்களே ஆவர். அதற்கும், அவர்களால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளைக் கண்டுபிடித்து, சமூக ஆற்றல் செயல்பாட்டினை, சரியான திசை நோக்கி,  திருப்ப முயற்சிப்பதையும்,  குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில், 'வழிபாட்டு போதை'யில் சிக்கி, தமக்கு பிடித்த தலைவர்களின் 'தொண்டுகளால்' ஏற்பட்ட விளைவுகளை, பாரபட்சமற்ற, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், ஆராயாமல், நமது வாழ்வை சரியான திசையில் நெறிப்படுத்தி வாழ முடியாது, என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில், இழிவான சமரசங்களுடன் வாழ்ந்து கொண்டு, சமூகத்தில் வெளிப்படும் அநீதிகளைக் கண்டு கோபப்படுவதில் நியாயம் இருக்குமா? அதே போல, தமக்கு வேண்டியவர்களின் 'ஊழல்'கள் பற்றி, மூச்சு விடாமல், நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் (வெள்ள பாதிப்புக்கான காரணங்கள், நிவாரண உதவிகளுக்கு ஏற்பட்ட 'தடைகள்' உள்ளிட்ட‌)   ஊழல்கள் மீது கோபப்படுவதில் நியாயம் இருக்குமா? 'நியாயமான கோபங்கள்' வெளிப்படுத்தும் சிக்னல்களை, அறிவுபூர்வமாக நெறிப்படுத்தாமல், ஆக்கபூர்வமான விளைவுகள் ஏற்படுமா? அது போன்ற 'நியாயமான கோபங்களை',  அறிவுபூர்வமாக நெறிப்படுத்தும் முயற்சியாக, எனது சமூக வட்டத்தில், 'மகத்துவமான மனித உறவுகளையும், மனித  மதிப்பீடுகளையும்(human values)  காவு கொடுத்து, செல்வம், செல்வாக்கிற்கு வாலாட்டும் மனித நாய்களை' அடையாளம் கண்டு அகற்றி வருகிறேன்; அதனால் ஏற்படும் பாதகங்களை 'விரும்பி' ஏற்று; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கிய, ஒரு சமூகவியல் பரிசோதனை(sociological experiment)  முயற்சியாக. நேர்மையான சுயசம்பாத்தியத்துடன், எளிமையான வாழ்க்கையுடன், சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில் சிக்கி, 'பாராட்டு, புகழ், செல்வம், செல்வாக்கு' போன்றவற்றிற்கு ஏங்காமல், வாழ்பவர்களின் சமூக வட்டத்தில், இடம் பெறும் வாய்ப்புகள் அதிகரிப்பதானது, அப்பரிசோதனையில் நான் பெற்று வரும் வெற்றிகளாகும்.

கோபம், மகிழ்ச்சி உள்ளிட்டு, நமது மூளையில் உருவாகும் எண்ணங்கள் காரணமாக வெளிப்படும் உணர்வுகள் எல்லாம், நமது மூளையின் செயல்பாடுகளின் விளைவே ஆகும். நமது உடல்நலன், ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை உள்ளிட்டு, தேவைகளின் (needs) அடிப்படையில் தோன்றும் ஈடுபாடுகளுடன்(interests) தொடர்புடைய,  நமது எண்ணங்கள் ஆனவை, நமது வாழ்வின் மீது,  முக்கிய செல்வாக்கு செலுத்துகின்றன.
( https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM )

உணர்ச்சிபூர்வ போக்குகளுக்கு அடிமையாகாமல், நமது கோபத்தை சிக்னலாகக் கருதி, அதற்கு நாம் அடிமையாகாமல், அறிவுபூர்வ போக்கில் பயணிப்பதன் மூலமே, நமக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் வாழ முடியும். அப்படி வாழ்பவர்கள் எண்ணிக்கையிலும், வலிமையிலும் அதிகரிக்கும்போது, அந்த சமுகத்தின் மீட்சியை, உள்நாட்டு/வெளிநாட்டு சுயநல சக்திகள் உள்ளிட்டு, எவராலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment