ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (1)
வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்',
இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்கவும் வாய்ப்பிருந்ததா?
ஈ.வெ.ராவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும்
'தொகுத்து' வெளியிட்டு வருபவர்களும், அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருபவர்களும்
பாராட்டுக்குரியவர்களே ஆவர். ஆனால் இது போன்ற முயற்சிகளுக்கு முன்னர், உலக அளவில் ஆய்வாளர்களுக்கு
உதவி வந்தது, திரு.வே.ஆனைமுத்து தலைமையில் கூட்டுமுயற்சியாக வெளிவந்த 'ஈ.வெ.ராவின்
சிந்தனைகள்' கூட்டுத்தொகை நூல்களாகும்.
ஈ.வெ.ரா, அவர் வழியில் 'எளிமையை கைவிடாமல்' வாழ்ந்த
வே.ஆனைமுத்து, மற்றும் காந்தி, நேரு, பிரபாகரன், கோட்சே உள்ளிட்ட தலைவர்களை, அவர்களின்
சொந்தவாழ்வு அடிப்படையில், அவர்களை பாராட்டுவதையும்/கண்டிப்பதையும், அவர்களின் பொதுவாழ்வால்,
சமூகத்துக்கு ஏற்பட்ட விளைவுகளை பாராட்டுவதையும்/ கண்டிப்பதையும், குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை,
என்பதை எனது பதிவுகளில் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
1970களில் "புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள்
தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள்
எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக, அந்த தமிழ்வழிக்கல்வி வீழ்ச்சி ஓட்டத்திலேயே, தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க
வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ
படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள்
அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து
போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை
உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார்." என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மேலே குறிப்பிட்ட காலக்கட்டதில், பெரும்பாலான தமிழ்/திராவிட
இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் பயணித்த போக்கில், நான் 'எதிர் நீச்சலில்', எனது பிள்ளைகளை தமிழ்வழியில்
படிக்க வைத்து, அவர்கள் வளர்ந்த பின் , மற்ற பெரியார்/தமிழ் ஆதரவாளார்கள் தத்தம் பிள்ளைகளை
ஆங்கிலவழியில் படிக்க வைத்தது அறிந்து, என் மேல் கோபமும்/வெறுப்பும் கொள்ள;
'பெரியார் முகமூடியில்' 'சுயநல கள்வராக' இருந்து,
'திருச்சி பெரியார் மையம்' மூலம் வலுவாகி, 'ஒழுக்கக்கேடான' குறுக்கு வழிகளில், 'செல்வர்
ஆகி', தனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்க வைத்து, அந்த போக்கில் 'வளர்ந்த' சமூக கிருமிகளை,
எனது 'சமூக வட்டத்தில்' அனுமதித்த 'பாவத்தின்' விளைவாக, அந்த கிருமிகள் மேற்குறிப்பிட்ட
'கோபத்தையும் வெறுப்பையும்' (அதன் நியாயங்களை நான் உணர்ந்து, ஆனால் விளக்க முடியாதிருந்த நிலையில்) பயன்படுத்தி, தமது 'செல்வம், செல்வாக்கு' வெளிச்சத்தில் 'ஏமாற்றி', என் குடும்பத்தின் 'மதிக்கத்தக்க வாழ்வியல் புத்திசாலி' முன்மாதிரியாக
(Role Model);
'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும்' வாலாட்டுபவர்கள்
குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும்,
'கிருமிகளே' என்ற நிலைப்பாட்டில்; கிருமிகளின் வாடையின்றி, ஒதுங்கி, எனது உள்ளார்ந்த
ஈடுபாடுகளுடனும்(Passions), வணங்கத்தக்க மனிதர்களை எனது சமூக வட்டமாகக் கொண்டும், வாழ்கிறேன்; கொள்கை வேடங்களில் ஏமாந்து, 'சமூக கள்வர் தடைகளின்றி', நாம் பயணிப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றிய தெளிவுடன்; இயல்பில் சிற்றினமானவர்கள் நம்மிடம் எவ்வளவு வருடங்கள் பழகியிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட, மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாக' வெளிப்படுவார்கள் என்ற 'பாடம்' கற்று.
'பெரியார் கள்வர்களை' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததன் காரணமாக, எனக்கு தெரிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தவர்கள், அந்த 'பெரியார் கள்வர்கள்' போட்ட 'செல்வ, செல்வாக்கு' வெளிச்சத்தில் சிக்கி, தமது 'மூளை செயல்பாட்டை (Brain processing) ' திசை திருப்பலுக்குள்ளாக்கி, 'பெரியார் கள்வர்கள்' போல் , பயணிப்பதை, அறிந்து, சமூகத்தில் எனது சமூக வட்டத்தையே பாதித்துள்ள, அந்த நோய், எப்போது? எப்படி பரவியது? என்று, எனது இசை ஆய்வு முயற்சிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே, இந்த பதிவு உள்ளிட்ட, எனது பதிவுகளாகும்.
'பெரியார் கள்வர்களை' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததன் காரணமாக, எனக்கு தெரிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தவர்கள், அந்த 'பெரியார் கள்வர்கள்' போட்ட 'செல்வ, செல்வாக்கு' வெளிச்சத்தில் சிக்கி, தமது 'மூளை செயல்பாட்டை (Brain processing) ' திசை திருப்பலுக்குள்ளாக்கி, 'பெரியார் கள்வர்கள்' போல் , பயணிப்பதை, அறிந்து, சமூகத்தில் எனது சமூக வட்டத்தையே பாதித்துள்ள, அந்த நோய், எப்போது? எப்படி பரவியது? என்று, எனது இசை ஆய்வு முயற்சிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே, இந்த பதிவு உள்ளிட்ட, எனது பதிவுகளாகும்.
'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும்,
அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த நிலையில், " திராவிட நாடு பிரிவினை நடக்காததற்கு காரணங்கள் யாவை? ராஜாஜிக்கும், நேருவுக்கும்
இடையில் நிலவிய பனிப்போர் காரணமா? அல்லது திராவிடநாடு பிரிவினைக்காக விமானப்பயணம் மேற்கொண்ட
(குடிஅரசு இதழ்களில் புகைப்படங்களுடன், அவரை வழியனுப்பும் செய்திகள் வெளிவந்துள்ளன)
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் - 'நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போல' - இறந்தது
காரணமா? அது விபத்தா? அல்லது சதியா? என்பது போன்ற கேள்விகளுக்கு , பிரிட்டனின் உளவு
அமைப்பு MI5 கோப்புகள் declassify-இரகசிய நீக்கமாகும்போது- தெரியும். அவ்வாறு விடைகள் தெரியும் காலம் அதிக
தொலைவில் இல்லை என்பது என் கருத்து. " என்பதை, முன்பு பார்த்தோம்.
1944இல்
ஈ.வெ.ரா, 'திராவிடர் கழகத்தை' துவக்கி, தவறான
திசையில் பயணிக்காமல் இருந்திருந்தால், வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்' ,
இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்குமா?
என்பது தொடர்பான தகவல்களை அடுத்து பார்ப்போம்.
1944க்கு முன் நீதிக்கட்சியிலும், காங்கிரசிலும்
இருந்தவர்களில், பிராமணர்கள் உள்ளிட்டு அனைத்து சாதிகளிலும் இருந்த படித்த, நேர்மையான,
சொந்த பணத்தை பொதுவாழ்விற்கு செலவழித்து, அரசியல் மூலம் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள்
எல்லாம், அவரவர் அறிவு, அனுபவத்தில், சமூக நீதி நோக்கில், சாதி அடிப்படையில் பின்தங்கியிருந்தவர்களை,
முன்னேற்ற எடுத்த, பிரமிப்பூட்டும் முயற்சிகள் பற்றி, ஆய்வதற்கான
தொடக்க சான்றுகளை (prima facie evidences) ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html
) அத்தகையோரை முற்றிலுமாக ஒதுக்கி, எல்லா பிராமணர்களையும்
எதிரிகளாக கருதி, அரசியலை வைத்து பிழைக்க வேண்டியவர்களை முன்னிறுத்தி, ஈ.வெ.ரா மேற்கொண்ட
பயணத்தில், ஆக்கபூர்வமான சமூக ஆற்றல்கள் இழப்பு எவ்வளவு ஏற்பட்டன? (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)
அதையும் மீறி, 'தேசிய அரசியலில்', 'வடநாட்டு தலைவர்கள்' செல்வாக்கின் கீழ், தமிழக தலைவர்கள் செயல்பட வேண்டிய நெருக்கடியை உணர்ந்திருந்த எதார்த்தத்தில், தமிழ்நாட்டின் நலன்களைப் புரிந்து,
ராஜாஜியும் அவர் சார்பு பிராமணர்களும் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரித்தது; (பொதுவாக ராஜாஜியின் 'வால்' போல, செயல்பட்ட ம.பொ.சி, இதில், ராஜாஜியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கியிருந்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.)
விடுதலைக்குப்பின் இந்திய அரசியல் நிர்ணயசபை விவாதங்களில்
சென்னை மாகாண பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள்;
மற்றும் இந்திய விடுதலைக்குப் பின், 1952 பொது தேர்தலில்
காங்கிரஸ் 'பெரும்பான்மை' பலம் பெற முடியாத அளவுக்கு, பிரிவினைக்கு ஆதரவு வெளிப்பட்டது;
போன்றவற்றையெல்லாம், கணக்கில் கொண்டால், 1944இல்
ஈ.வெ.ராவின் திசை திரும்பலால், ஏற்பட்ட சமூக ஆற்றல் இழப்பு எவ்வளவு? என்ற ஆய்வின் முக்கியத்துவம்
புலப்படும்.
அது மட்டுமல்ல, அந்த 1944 திசை திருப்பலிலிருந்து,
1949இல் அண்ணாதுரை விலகி, பிராமணர்களை தி.மு.கவில் சேர்க்கும் கொள்கை திருத்தம் செய்தது;
அதன்பின் ராஜாஜி ஆதரவுடன் தி.மு.க வளர்ந்த
வேகத்தில், தி.கவானது, இளைஞர்களை விட்டு விலகி
பலகீனமானது; போன்றவையும், அந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்.
நீதிக்கட்சியில்
பிராமணர்கள் இருந்த போது, அது தொடர்பாக, ஈ.வெ.ரா என்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தார்?
பின் அண்ணாதுரையின் அல்லது வேறு எவரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு, அதிலிருந்து நழுவி, 1944இல் ஒட்டு மொத்த பிராமணர்கள்
அனைவரையும் எதிர்க்கும் நிலைப்பாடு மேற்கொண்டார்?
அந்த ஆய்வுக்கு மிக முக்கிய பங்களிக்கும், ஆனைமுத்து
வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னலை', ஏற்கனவே
பார்த்தோம்.
திரு.ஆனைமுத்து அவர்கள், "1988-இல் தனது 'சிந்தனையாளன்'
இதழில், நீதிக்கட்சி காலத்தில் பெரியாரின் நிலைப்பாடுகள் பற்றி தவறான தகவல்களை வெளிப்படுத்தி,
அந்நிலைப்பாடுகளைக் குறை கூறியிருந்தார். ;குடிஅரசு' இதழ்களை அடிப்படையாகக் கொண்டு,
அவரின் தகவல்களும், விமரிசனமும் தவறு என்று நிரூபித்து, 'சிந்தனையாளன்' முகவரிக்கு
, 'திருச்சி பெரியார் மையம்' சார்பில் விளக்கம் அனுப்பப்பட்டது. பதில் ஏதும் இல்லாத
நிலையில், அதை சில நூறு படிகள் உருட்டச்சு ( அப்போது Xerox கிடையாது)
செய்து, பெரியார் தொண்டர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றோம்.ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த
பதிலும் வரவில்லை. பின் அதையே 1988 மே மாதத்தில் சில ஆயிரம் படிகள் அச்சிட்டு, ரூ
1 ந்ன்கொடை என்று விநியோகிக்கப்பட்டது. அனைத்தும் தீர்ந்து போன நிலையில், 1989 டிசம்பரில்
இரண்டாவது பதிப்பாக சில ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. 'ஆனைமுத்துவுக்கே
மறுப்பா' என்று வியப்புடன் அதை வாங்கிச் சென்றவர்கள் கூட, அப்புத்தகம் பற்றிய தங்களின்
நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
அதன்பின் அவரின் 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக்
கட்சியின் சார்பில், வெளியிடப்பட்ட 'கொள்கை விளக்கமும் விதி முறைகளும்' என்ற புத்தகம்
எனது பார்வைக்கு வந்தது. பெரியாரியல் நோக்கில் அப்புத்தகத்தில் இருந்த குறைபாடுகளை
உரிய சான்றுகளுடன் விளக்கி,அந்நூலின் மீது 'பெரியார் மையத்தின் விமர்சனம்' என்ற தலைப்பில்
சிறு நூலை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு,நன்கொடை 50 காசுகள் என்று விநியோகிக்கப்பட்டது.
நான் திருச்சி பெரியார் மையத்திற்கு பங்களிப்பு வழங்கிய
காலம் வரை, மேலேக் குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுக்குமே எந்த மறுப்பும் வரவில்லை.அதன்பின்
மறுப்பேதும் வந்துள்ளதா என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது."
மேலேக்குறிப்பிட்ட 'சிந்தனையாளன்' கட்டுரையில், நீதிக்கட்சியில்
பிராமணர்கள் இருந்ததை ஆதரித்து, ஈ.வெ.ரா தவறு புரிந்ததாக ஐயம் எழுப்பியிருந்தது. திருச்சி
பெரியார் மையத்தில், 'பெரியார் போதையில்', அதை மறுத்து விளக்கம் வெளியிட்டிருந்தோம்; ஒரு
சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்த, (நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, ஈ.வெ.ரா ஆதரித்திருந்த) 'சிக்னல்' அதில் வெளிப்பட்டுள்ளதை கவனிக்காமல்;
திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் 1947இல் ஆதரித்திருந்த
பின்னணியில்.
நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, 'ஈ.வெ.ரா ஆதரித்தது தவறு', என்ற தொனியில் 'சிந்தனையாளன்' வெளியிட்ட கட்டுரையில் இருந்தது. அது சமூக மீட்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி, 'ஈ.வெ.ரா மேற்கொண்ட சாதுர்யமான தந்திரம்' என்று, 'பெரியார் மையம்' வெளியீட்டில், ஈ.வெ.ராவை நியாயப்படுத்தியிருந்தோம். ஆனால் அது, பின்னர் 1944இல், 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பாக' திசை திரும்பியதானது, நடைமுறையில், சமூக வீழ்ச்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி முடிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதன் காரணமாகவே, 'சென்னை மாகாணம்' தனிநாடாக, பிரிய இருந்த வாய்ப்பானது, சீர் குலைந்ததா? என்ற கேள்வியை எழுப்ப, அந்த 'சிந்தனையாளன்' 'சிக்னல்' துணை புரிந்துள்ளது. எந்த நோக்கத்திற்காக ஒரு உண்மை தகவலானது, ஒரு கட்டுரையில் வெளிப்பட்டிருந்தாலும், அந்த நோக்கத்திலிருந்து, அந்த உண்மை தகவலை பிரித்து, அந்த தகவல் வெளிப்பட்ட சூழலையும், இன்றைய சிக்கலையும் கருத்தில் கொண்டு, ஆய்வதற்கு வாய்ப்புள்ளதற்கும், அந்த 'சிந்தனையாளன் சிக்னல்', ஒரு உதாரணமாகும்.
நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, 'ஈ.வெ.ரா ஆதரித்தது தவறு', என்ற தொனியில் 'சிந்தனையாளன்' வெளியிட்ட கட்டுரையில் இருந்தது. அது சமூக மீட்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி, 'ஈ.வெ.ரா மேற்கொண்ட சாதுர்யமான தந்திரம்' என்று, 'பெரியார் மையம்' வெளியீட்டில், ஈ.வெ.ராவை நியாயப்படுத்தியிருந்தோம். ஆனால் அது, பின்னர் 1944இல், 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பாக' திசை திரும்பியதானது, நடைமுறையில், சமூக வீழ்ச்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி முடிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதன் காரணமாகவே, 'சென்னை மாகாணம்' தனிநாடாக, பிரிய இருந்த வாய்ப்பானது, சீர் குலைந்ததா? என்ற கேள்வியை எழுப்ப, அந்த 'சிந்தனையாளன்' 'சிக்னல்' துணை புரிந்துள்ளது. எந்த நோக்கத்திற்காக ஒரு உண்மை தகவலானது, ஒரு கட்டுரையில் வெளிப்பட்டிருந்தாலும், அந்த நோக்கத்திலிருந்து, அந்த உண்மை தகவலை பிரித்து, அந்த தகவல் வெளிப்பட்ட சூழலையும், இன்றைய சிக்கலையும் கருத்தில் கொண்டு, ஆய்வதற்கு வாய்ப்புள்ளதற்கும், அந்த 'சிந்தனையாளன் சிக்னல்', ஒரு உதாரணமாகும்.
அதே போல தமிழ்மொழி,
பாரம்பரியம்,பண்பாடு போன்ற சமுக ஆணிவேர்களாகிய, சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து விலகி,
ஈ.வெ.ரா பயணித்ததும், 1944க்கு முன்னும், பின்னும்
என்ற கோணத்தில் ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.
அவ்வாறு சமூக ஆற்றல் மூலங்களையும், அனைத்து பிராமணர்களையும்
பகையாக மக்களுக்கு அறிவித்து பயணித்ததும், அதற்கு முரணாக திராவிட நாடு பிரிவினை கோரிக்கைக்கு
ஆதரவாக, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின்
ஆதரவை கோரி பெற்றதும், ஈ.வெ.ரா விரும்பிய திசைக்கு, எதிரான திசையில் அவர் இயக்கத்தைப் பயணிக்க செய்து, தமிழ்நாட்டில் அகத்தில் பலகீனமானவர்களின், மூளை செயல்பாட்டை (Brain processing), 'சுயநல கள்வராகும்' திசை திருப்பலுக்குள்ளாக்கி, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும், இன்றுள்ள பாதகங்களில் முடிந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது 1944 திசை திருப்பலின் மூலம், அரசியலை வைத்து பிழைக்க வேண்டியிருந்த சிற்றினமானது, 'செல்வாக்கான தீ இனமாக' வளர்ந்த போக்கில், 'சமூக தூண்டல்' (Social Induction) எனும் சமூகவியல் வினை(Sociological Process) மூலம், இயல்பில் பலகீனமானர்களின் மூளைகளையும், தமது மூளை போல, எனது சமுக வட்டத்தில் இயல்பில் பலகீனமானவர்களிடம் வெளிப்பட்டது போல, 'சிற்றினமாக' செயல்பட வைத்ததன் தொகுவிளைவுகள் தான், வெள்ள பாதிப்புகளாகவும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், சந்தன மரம் உள்ளிட்ட காடுகள் ஆகிய இயற்கை வளங்களை சூறையாடியுள்ளதாகவும், அந்த போக்கில் தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தூண்டி, வெளிப்பட்டுள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
1944இல் ஈ.வெ.ரா 'திராவிடர் கழகத்தை' துவக்கி, தவறான
திசையில் பயணிக்காமல் இருந்திருந்தால், ஈ.வெ.ராவின் பயணத்தில் நீதிக்கட்சியில் இருந்த
பிராமணர்களின் ஆதரவுடன், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவுகளும், அவற்றால்
ஏற்பட்ட பாதிப்புகளுமின்றி, (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html
) காங்கிரசில் இருந்த ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்கள் ஆதரவுடன், தமிழ்மொழி,
பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை உயிராய் நேசித்த தமிழர்களின் ஆதரவுடன், பெருக்கெடுத்திருக்கும்
சமூக ஆற்றல் வெள்ளத்தில்;
வேறு
வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்' இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்கவும்
வாய்ப்பிருந்திருக்கிறது; இரண்டாம் உலகப்போரின் முடிவில், இந்தியாவை விட்டு, 'அவசரமாக'
வெளியேற வேண்டிய நெருக்கடியில் பிரிட்டன் அரசு சிக்கியிருந்த சூழலில்.
தமிழ்நாட்டுக்கு பாதகமான 1944திசை திருப்பலில், கணிசமான சமூக ஆற்றல் விரயப் போக்குகள் ஆனவை, 'வீரியமாக' வளரத்தொடங்கியிருந்த சூழலில், ஈ.வெ.ரா
பயணித்தபின், "நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை":
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html
1944இல் 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பு' என்ற 'திசை
திருப்பல்' மூலம் முளைவிட்டு, வளர்ந்து, பின் 1949இல் 'பிராமணர்களை' ஏற்றுக் கொண்டு,
ஆனாலும் 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்று 'முழங்கி', ஈ.வெ.ராவின் இணையற்ற தியாக வாழ்வால்,
அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்களாலும், உருவான 'சமூக ஆற்றல்களை' கபளிகரம் செய்து, ஈ.வெ.ராவையே வீழ்த்தி, வளர்ந்து, இப்போது உச்சத்தில் உள்ள, சமூக தூண்டல்'
(Social Induction) எனும் சமூகவியல் வினை(Sociological Process) மூலம், இயல்பில் பலகீனமானர்களின் மூளை செயல்பாட்டை(Brain
processing) , சீரழிக்க காரணமான;
புறத்தில் 'பெரியார்' ஆதரவாளர்களாகவும், அகத்தில்
'சுயநல கள்வராக' சீரழிந்து, வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான' முறையில், 'அதிவேகமாக'
செல்வம் ஈட்ட, மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல
மிருகமாகவும்', அந்த நோயைப்பரப்பும் சமூக கிருமிகளாகவும் இருப்பவர்களிடம், சுயநலநோக்கின்றி
'பெரியார் ஆதரவாளர்களாக' இருப்பவர்கள் எல்லாம், இனியும் தொடர்ந்து ஏமாறப்போகிறர்களா?
அல்லது தம்மிடமுள்ள உணர்ச்சிபூர்வ போக்குகளை ஓரங்கட்டி, அறிவுபூர்வமாக ஏன், எப்படி,
எவ்வாறு தவறு நடந்தது? என்று ஆய்ந்து, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கப்போகிறார்களா,
வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக 'இடம்' பெறப்போவதை தடுப்பதற்காக? இனி எவ்வாறு செயல்பட்டால்,
மீட்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்?
(வளரும்)
தங்கள் பதிவில் ஆனைமுத்து அவர்களின் அபூர்வ சிக்னல் எது என தெரியவில்லை.
ReplyDeleteகூடுதலாக ஒரு தகவல்,மா.பெ.பொ.கட்சி சார்பில் 2016 சனவரி 09ல் நடைபெற இருக்கிறது. மேலும் 2015 டிசம்பர் சிந்தனையாளன் இதழ் தலையங்கத்தில் உள்ளவை:
“தொல்காப்பியம்,திருக்குறள்,புறநானூறு,அகநானூறு,கலித்தொகை,பெரிய புராணம்,கம்பராமாயணம் இவற்றுக்கு உரைகள் எழுதுவதை அடியோடு ஒத்திவைத்துவிட்டு, இவற்றுள் புதிந்து கிடக்கும் அறிவியல்-கலை-பொருளியல்-அரசியல்-பண்பியல் பற்றிய பல்துறை வேர்ச் சொற்களைத் திரட்டிதாருங்கள்” என தமிழறிஞர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.தமிழுக்கு ஆதரவாக பல்வேறு செய்திகளையும் தலையங்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.
"மேலேக்குறிப்பிட்ட 'சிந்தனையாளன்' கட்டுரையில், நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை ஆதரித்து, ஈ.வெ.ரா தவறு புரிந்ததாக ஐயம் எழுப்பியிருந்தது." என்பது, எனது பார்வையில்,முக்கிய 'சிக்னல்' ஆகும்.
Delete2006 சனவரி 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்திருந்த கட்டுரை, ஆனைமுத்து பார்வைக்கு போனதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. எப்படியிருந்தாலும்,"இவற்றுள் புதிந்து கிடக்கும் அறிவியல்-கலை-பொருளியல்-அரசியல்-பண்பியல் பற்றிய பல்துறை வேர்ச் சொற்களைத் திரட்டிதாருங்கள்” என தமிழறிஞர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது பாராட்டத்தக்கது. 2006 முதல் "இவற்றுள் புதிந்து கிடக்கும் அறிவியல், இசை' உள்ளிட்ட, வெளிவந்துள்ள, எனது ஆய்வுமுடிவுகளை , ஆனைமுத்து உள்ளிட்டு, யார், யார் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்? புறக்கணித்தார்கள்? என்பது அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.
மேற்கண்ட பதிலில் “தமிழ்வழிக்கல்வி மாநாடு” 2015 சனவரி 09ல் என்பது விடுபட்டுள்ளது.
ReplyDelete