தமிழும் தமிழ்நாடும் சீரழிய, ஈ.வெ.ராவை விட அதிகம் பங்களித்தது தேவநேயப் பாவாணரா? (2)
தமிழரின்
பாரம்பரியம் பண்பாடு தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில் தேவநேயப்பாவாணர்?
'தமிழ்நாட்டில்
ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து உச்சமாகி, இன்று மாணவர்கள் உலகத்திலும் கொலை, தற்கொலை, (மேல்நடுத்தட்டு-upper middle
class- குடும்பப்பிள்ளைகளும்
கூட, அதிகவிலையுள்ள Smart Phone போன்றவைகளை) திருட்டு, (மது/போதை மாத்திரை,
சினிமா போன்ற தேவைகளை மறைத்து பொய் சொல்லி) தெருவில்
பிச்சை கேட்டல் போன்றவை எல்லாம் அதிகரித்துள்ள விளைவில் முடிந்துள்ளது.' (https://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_15.html
)
'தாய்ப்பால் பைத்தியம்' மூலம் ஈ.வெ.ராவால் தமிழரின் தாய்மொழி அடையாளத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள்,
தமிழரின் பாரம்பரியம் பண்பாடு தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில் தேவநேயப்பாவாணர்
ஏற்படுத்திய பாதிப்புகள் எல்லாம் சேர்ந்து, தமிழரின் 'சமூக உளவியலில்’ (social
psychology) என்னென்ன பாதிப்புகளை விளைவித்தன? அதன் தொடர்விளைவாக, தமிழர்களின் செயல்பாடுகளின்
பின்னணியில் உள்ள அவர்களின் மனங்களின் தேவைகளும்
(needs) ஈடுபாடுகளும் (interests) எவ்வாறு சீரழிந்தன? என்ற ஆய்வின் மூலமே, மேற்குறிப்பிட்ட
நிலைக்கு தமிழ்நாடு எவ்வாறு வந்தடைந்தது? என்று கண்டுபிடிக்க முடியும்.
சமூகத்தில்
தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் மனிதரின் மனங்களில்
அவை தொடர்புள்ள தேவைகளையும் (Needs) , ஈடுபாடுகளையும் (Interests) தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு
வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers) போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும்
செயல்படுகின்றன? (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html
)
தமிழ்
தொடர்பாக ஈ.வெ.ரா
முன்வைத்த கேள்விகளுக்கு (குறிப்பு கீழே)
தகுந்த அறிவுபூர்வமான விளக்கம் தராத தேவநேயப் பாவாணர்,
மேற்குறிப்பிட்ட ஈ.வெ.ராவின்
தவறான நிலைப்பாட்டிற்கு வலிவு சேர்க்கும் வகையில் எவ்வாறு செயல்பட்டார்? தமிழர்களின் சமயத்தைத் தாழ்த்தி, தமது கிறித்துவ மதத்தை
உயர்த்தி, எவ்வாறு சமூக நேர்மையில் இருந்தும்,
அறிவு நேர்மையில் இருந்தும் தடம் புரண்டு பயணித்தார்?
என்ற விவாதத்தினை இனியும் தாமதப்படுத்தினால், தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு சீரழிவதைத் தடுக்க முடியாது.
அத்தகைய
விவாதத்திற்கு துணை புரியும் வகையில்,
'நண்பர்
திரு.மா.குமார் அவர்கள்
தந்துள்ள பாவாணர் கருத்துகளுக்கு
விரிவாக
இங்குத் தக்க சான்றுகளோடு பதில்
அளிக்கப்பட்டுள்ளது.' முனனவர் இரா.சிவகுமார்' எழுதிய
பதிவில் இருந்து,
கீழ்
வருவதைக் கணக்கில் கொண்டாக வேண்டும்.
“வேர்கனளக்
கண்டால் தான் எந்த குடும்பத்னதச்
சேர்ந்தது ஒரு சொல் என்பதை
நிறுத்த முடியும்.
சுமேருத்
தமிழ் இவர் ஆய்விற்கு பெரிதும்
உதவி இருக்கும். ஆனால் இவர்
சில
சுமேரிய சொற்கனள விவிலியத்தின் வழி ஆய்ந்தாரேத் தவிர
மூல
சுமேரு
இலக்கியங்கனளக் கற்றுத் தனது கருத்துகனளக் கூறவில்னல.
- உலகன்
Source: https://groups.google.com/g/vallamai/c/W7k8pVo_rL4
சுமேருத்
தமிழ் தமிழின் தொன்மைக்கும் மாண்புக்கும் மிகப் பெரிய
அடித்தளம்
என்பதனை அறிஞர் ஐயா கி.லோகநாதன்
மட்டுமின்றி,
இரஷிய
அறிஞரும் ஆய்ந்து கூறியுள்ளது கலைஞர் மு.கருணாநிதி
காலத்தில்
உலகத்தமிழ்ஆராய்ச்சி மாநாட்டிலும்
வெளிப்பட்டது. ஆனால்
இந்தத்
தமிழின் மூலத்தைப் பாவாணர் அவர்கள் ஆழ்ந்து ஆராயாமல்
போனது
அவரின் தமிழ்மொழி ஆய்வின் பெருங்குறையையே
காட்டுகிறது.
கிறித்துவ
மதத்தில் இருக்கும் குறைபாடுகள் எதனையும்
சுட்டிக்காட்டி
அதனை மாற்றி அமைக்கும் முயற்சியில் துணியாத அவர்,
மதத்தால்
கிறித்துவராக இருந்தும் இந்து மதக் கருத்துக்களையும்
நனடமுறைகளையும்
குறையுரைத்துள்ளார் என்பதற்கான சான்றுகளும் வெளிவந்துள்ளன.
பாவாணர்
அவர்கள், இந்து சமயத்தில் அர்ச்சகர் அல்லது தரகர் கூடாது
என்று
சொல்லும் அதே வேளையில் தேவாலாயத்தில்
பாதிரியார் என்னும்
தரகர்
கூடாது என்று சொல்லாதது வியப்பைத்தருகிறது!
‘தமிழர்
திருமணம்’ என்று
நூல் எழுதிய பாவாணர் அவர்கள் தம்
திருமணத்தையும்
தம் மக்களின் திருமணத்தையும் கிறித்துவ
முறைப்படியே
தேவாலாயத்தில் செய்திருக்கின்றார்.”
'சிற்பம், ஓவியம், இசை, புராணங்கள் உள்ளிட்ட
இலக்கியங்கள் என்பவை அவற்றை உருவாக்கியவர்களின் திறமைகளைப் பொறுத்து பல பரிமாணங்களை உள்ளடக்கியவை'
என்பது தொடர்பான அறியாமையில் ஈ.வெ.ரா
பயணித்தது போலவே (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ),
கிறித்துவராகப்
பிறந்து, மேற்கத்திய குறிப்பாயத்திற்கு (western paradigm) அடிமையாகி, தேவநேயப்பாவாணரும்
பயணித்தாரா? என்ற விவாதத்திற்கும் இடம்
இருக்கிறது.
தமிழர்களின்
ஆணிவேர்களாக தாய்மொழித் தமிழும் பாரம்பரியப் பண்பாடும் இருக்கிறது. அதில் ஈ.வெ.ரா
அவர்கள் தமது அறிவு வரைஎல்லைகள்
(intellectual limitations) பற்றிய
புரிதலின்றி, தமிழ் தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில் தாம் கேகரித்த சமூக
ஆற்றலைப் பயன்படுத்தி, பாதிப்புகளை விளைவித்துள்ளார்.
தேவநேயப்பாவாணர்
ஈ.வெ.ராவின் பணியை
எளிதாக்கும் வகையில், தமிழரின் பாரம்பரியம் (HERITAGE) பண்பாடு தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில், தாம் கேகரித்த 'தமிழ்த்தேசிய'
சமூக ஆற்றலைப் பயன்படுத்தி, பாதிப்புகளை எவ்வாறு விளைவித்தார் ? என்ற விவாதத்தினை இனியும்
தாமதப்படுத்தினால், தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு சீரழிவைதைத் தடுக்க முடியாது.
பொதுவாக
கிறித்துவ முஸ்லீம் மதங்களைப் போல, தமிழர்களின் சமயத்தை
('இந்து' மதத்தையும்) அணுகுவதானது அறிவுபூர்வமாகாது. ஏனெனில், கிறித்துவ பைபிள், முஸ்லீம் குர்ரான் போன்று, தமிழர்களின் சமயத்திற்கு பொது நூல் கிடையாது.
அது மட்டுமல்ல, உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்கள் உள்ளிட்ட எண்ணற்ற கடவுள்களில் எந்த கடவுளையும், தாம்
விரும்பும் எந்த முறையிலும் வழிபடும்
உரிமையானது தமிழர் சமயத்திலும் (இந்து மதத்திலும்) இருக்கிறது. கிறித்துவ முஸ்லீம் மதங்களில் ஏசுவையும் அல்லாவையும் மறுப்பவர்களுக்கு மதரீதியிலான தண்டனைகள் உண்டு. ஆனால் தமிழர் சமயத்திலும் (இந்து மதத்திலும்) நாத்திகராக விரும்பி வாழ்பவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.
‘ஒரு
மனிதன் தான் விரும்பும் கடவுளை,
தான் விரும்பும் முறையில் வழிபடுவதற்கும், வழிபடாமல் இருப்பதற்கும், வழிபடும் கடவுளை மாற்றிக் கொள்வதற்கும், கடவுளை மறுப்பதற்கும், இன்று அதிகபட்ச விடுதலை வழங்கியுள்ள ஒரே மதம் இந்து
மதமாகும்.
அது
மட்டுமல்ல, ஒரு மனிதனின் சுய
விடுதலையையும் (Self
liberation), சமூகத்திற்கும்,
இயற்கைக்கும் தொடர்புள்ள வகையில், ஒரு மனிதனுக்கான மனித
உரிமைகள் இருப்பதையும், ஊக்குவிக்கும் மதம் இந்து மதமாகும்.
கிறித்துவ மதப் போக்கிற்கு எதிராக
வெடித்த கிளர்ச்சிகளின் போக்கில், மேற்கத்திய உலகில் முன்னிறுத்தப்பட்ட தனிமனித உரிமைகளின் வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழ்நாட்டில் அதனை இறக்குமதி செய்வதில்
உள்ள ஆபத்துகளையும், நான் எச்சரித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2015/03/12.html
)
எனவே
தான், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நாத்திகர் ஜீன் பெர்ரி லேமான்,
உலக முன்னேற்றத்திற்கு உலக மதமாகும் தகுதியானது,
இந்து மதத்திற்கு இருப்பதாக அறிவித்துள்ளார். (According
to the atheist minded Western writer Jean-Pierre Lehmann , “ The planet needs a sense of moral order,
spirituality and an ethical compass. The Indian religious and philosophical
traditions can provide a great deal of all three.” In his article ‘The Dangers
of Monotheism in the Age of Globalization’ . )
ஈ.வெ.ரா அவர்களின்
நாத்திகப் போக்கானது, தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு சாதகமாகி, எந்த அளவுக்கு (ஈ.வெ.ரா அவர்களே
வலியுறுத்திய) பொது ஒழுக்கத்தையும், பொது
ஒழுக்கத்திற்கான திசை காட்டியையும், ஆன்மீகத்தையும்
(“sense of moral order, spirituality and an ethical compass”) சீர்குலைத்தது? என்பது பற்றிய எனது ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளேன்.’
(‘பொருள் சிதைவில் (Semantic
Distortion) சிக்கி பயணித்த; 'பெரியார்' ஈ.வெ.ராவின்
நாத்திகம்’; https://tamilsdirection.blogspot.com/2017/09/semanticdistortion.html )
தமிழின்
தமிழ்நாட்டின் இன்றைய சீர்கேடுகளுக்கான சமூக செயல்நுட்பமானது வீரியத்துடன்
வளர்ந்த காலக்கட்டம் 1949 முதல் 1967 வரையில் ஆகும். ஈ.வெ.ராவின்
‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்ன பகுத்தறிவுடன் (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html
),
சிலப்பதிகாரத்தையும்
உயர்த்தி, தி.மு.க 'இரட்டைக்குழல்
துப்பாக்கி'(?) வலிமையுடன்,
தமிழை
தமது பொதுவாழ்வு வியாபார மூலதனமாக்கி வளர்ந்த காலக்கட்டம் அதுவாகும். அதே காலக்கட்டத்தில் 'வளர்ந்த'
தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில்
எவருமே ஈ.வெ.ரா
தமிழ் தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை.
தேவநேயப்பாவாணர்,
பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில்
எவராவது ஈ.வெ.ராவின் தமிழ் தொடர்பான கேள்விகளுக்கு அறிவுபூர்வமான விளக்கம் தந்திருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவ்விளக்கத்தினை நான் ஆய்வுக்கு உட்படுத்த
இயலும்.
வேண்டியவர்,
வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி, பிறரின்
ஆய்வுகளை விமர்சிப்பதும், தமது ஆய்வுகளையும் அவ்வாறு
விமர்சிக்க ஊக்குவிப்பதுமே, புலமையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். தமது
ஆய்வுகளை அவ்வாறு விமர்சிப்பதை வெறுப்பவர்கள் எல்லாம் (நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும்) நோஞ்சான்
புலமையாளர்கள் ஆவார்கள்.
நோஞ்சான்
புலமையாளர்களின் ஆய்வுகள் எல்லாம், ஊடக பலத்தில் எவ்வளவு
உயரத்தில் பறந்தாலும், எந்த நேரத்திலும் அறிவுபூர்வ
விமர்சனம் என்ற ஊசியின் மூலம்
வெடித்து சிதற காத்திருக்கும் பிம்ப
பலூன்களே ஆகும். (‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை? ‘; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html
)
தேவநேயப்பாவாணர்
உருவாக்கிய 'தமிழ்த்தேசிய போதையில்' தி.மு.கவின்
வளர்ச்சிக்கு உதவி, 1967 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் மலைகள்,
தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் ஊழல் பெரும்பசிக்கு இரையானதையும்,
அச்சுறுத்தி, கொலை செய்து தனியார்ச்சொத்துக்களை
அபகரித்ததையும் எதிர்க்காத அளவுக்கு 'பெரியார்' போதையும், 'தமிழ்த்தேசிய போதையும் சங்கமமானது. அந்த சங்கமமானது சமூக
உளவியலில் ஏற்படுத்திய பாதிப்புகள் மூலமாகவே, தமிழ்நாட்டில் நோஞ்சான் தமிழர்கள் அதிவேகமாக வளர்ந்தார்கள். (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html
)
தேவநேயப்
பாவாணரின் ‘தமிழ்மொழி ஆய்வின் பெருங்குறையை’ மேலே பார்த்தோம். அவரின்
தொல்காப்பிய ஆய்வில் உள்ள குறைபாடுகளையும் ஏற்கனவே
கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
‘தேவநேயப்
பாவாணரின் தொல்காப்பியம் ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த
வேண்டிய நெருக்கடி?’; https://tamilsdirection.blogspot.com/2020/12/4.html
பழந்தமிழ்
இலக்கியங்களில் ‘தமிழ் இசையியல்’
(Tamil Musicology) தொடர்பான
சொற்களுக்கு தேவநேயப்பாவாணரின் சொல்லாராய்ச்சி சரியான விளக்கம் தரவில்லையா? என்ற ஆராய்ச்சிக்கு உதவும்
வகையில், கிழ்வரும் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளேன்.
தமிழ்
லெக்சிகனில் உள்ள குறைபாடுகளையும், புதிய
ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html
தமிழ்
உரைகளில் உள்ள குறைபாடுகளையும், புதிய
ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html
மேலும்
ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு, கீழ்வரும் நூலும் முக்கியமானதாகும்.
‘DECODING ANCIENT TAMIL TEXTS –
THE PITFALLS IN THE STUDY & TRANSLATION’ ; https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264
மேற்குறிப்பிட்ட
பின்னணியில், தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சியானது, எவ்வாறு தமிழ்ச்சொற்களை பொருள்திரிபுக்கு
(semantic distortion) உள்ளாக்கிய காலனி சூழ்ச்சிக்குத் துணை போனது? என்ற விவாதத்திற்கும்
இடம் இருக்கிறது?
(வளரும்)
குறிப்பு
:
‘தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்….. தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.
– 'பெரியார்' ஈ.வெ.ரா-
“தாய்ப்பால் பைத்தியம்’ என்ற நூலிலிருந்து.
'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே; ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே';
https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html
No comments:
Post a Comment