Tuesday, December 15, 2020

 

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (4) 


தேவநேயப் பாவாணரின் தொல்காப்பியம் ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடி?

 

விஞ்ஞானி நியூட்டனின் சில கண்டுபிடிப்புகள் அடுத்து வந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக தவறானவை, என்று நிரூபிக்கப்பட்டன. அது நியூட்டனுக்கு இழுக்காகாது என்பதும், அறிவியலின் வளர்ச்சி என்பதும் அறிவியல் உலகம் அறிந்ததாகும். அது போலவே, தொல்காப்பியத்தில் வரும் 'ஓசை' மற்றும் 'இசை' ஆகிய சொற்களின் வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டு, தொல்காப்பிய விதிகளைப் புரிந்து கொள்ளாமல், தேவநேயப் பாவாணர் மேற்கொண்ட ஆய்வுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய எனது ஆய்வுகளை தமிழ்ப்புலமையாளர்கள் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தி, சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அது தேவநேயப் பாவாணருக்கு இழுக்காகாது. அத்தகைய அறிவுபூர்வ விவாதத்தின் மூலமாக, எனது ஆய்வுகளில் குறைகள் வெளிப்பட்டால், அதற்கு நன்றி தெரிவித்து, எனது ஆய்வுகளை அக்குறைகளை நீக்கி வளர்த்தெடுக்கவே முயல்வேன்.

"ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழிபெயர்க்கப் போதிய சொற்களுளவா  என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று."- தேவநேயப் பாவாணர், ‘இலக்கணக் கட்டுரைகள்’- ``செந்தமிழ்ச் செல்வி'' நளி 1934 (http://www.tamilvu.org/ta/library-lA465-html-lA465con-151680 )

‘'வடசொல்லைத் தமிழ்ச்செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச்ச.1) மொழிபெயர்ப்பை வழிநூல் வகைக ளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரிய வில்லை. ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்ஙனங் கூறியி ருப்பதால், அது தமிழினின்றும் மொழிபெயர்த்த வடநூல் களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று, அவர்க்கு முன்னமே தொடங்கினதையே உணர்த்துவதாகும். இது வேண்டாத வட சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்கு வதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க.' ‍- தேவநேயப் பாவாணர்- பண்டைத் தமிழகம்

தமிழ் மொழியின் எழுத்தொலிகளின் அடிப்படையில் இசை அழகியலில் (Musical aesthetics) உயரிய 'வண்ணங்கள்' தொல்காப்பியத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பது எனது கவனத்தினை ஈர்த்தது. அந்த வண்ணங்களில் ஒன்று 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.

'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டால், மேலே குறிப்பிட்ட வண்ணம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. 'ஒரூஉ வண்ணம்' தொடர்பான ஆய்வே, என்னை 'ஒரீஇ' தொடர்பான ஆய்விற்கு வழி நடத்தியது. (‘'கடகானா' மூலம் விழித்த ஜப்பானியர்களும், 'கிரந்த' மதிப்பு தெரியாமல் ஏமாந்த தமிழர்களும்’; https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை, நீர் போன்ற பாடல் கூறுகளின் இசையியல் (musicology) பரிமாணமானது தேவநேயப் பாவாணருக்கு தெரியாததால், தொல்காப்பியம் தொடர்பான அவரின் ஆய்வுகளை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடியும் எழுந்துள்ளது. மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்' ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html )

தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளையும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html

தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளையும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html 

தமிழில் லெக்சிகனைப் போலவே, உரைகளுக்கும் அடிமையாகாமல், உண்மையைக் கண்டறியும் துணிச்சலுடனும், அறிவுபூர்வ சான்றுகளின் அடிப்படையில் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ளும் கூடுதல் துணிச்சலுடனும் பயணித்ததாலேயே, தொல்காப்பியத்தில் இசை மொழியியலைக் கண்டுபிடிக்க முடிந்தது.

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை 'நீர்' உள்ளிட்டவற்றின் இசையியல் பரிமாணங்களின் பின்னணியில், தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின் (Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான ‘இசை மொழியியல் (Musical Linguistics) இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது; 'Natural Language Processing (NLP)' துறையில் புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்.

தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது உலகில் உள்ள மொழிகளின் இசைப்பாடலுக்கான உலக இலக்கணமாகும். (universal grammar for musically rendered poems)

Application of ‘Physics of Music’ to ancient Tamil grammar text ‘tholkAppiam’ and other ancient Tamil texts led to the discovery of ‘Musical Linguistics’ (‘Musical Phonetics in Tholkappiam’ in the journal of the international institute of Tamil studies; December 2013  http://www.ulakaththamizh.in/journal)

From the above discovery, the sound of letters had dual aspects; one serving the semantic goal in prose and speech, and the other serving the non-semantic musical goal in musically rendered song.

While linguistics is the scientific study of language, musical linguistics is the scientific study of the musical language employed in the musically rendered poems.

A poem can be rendered as a prosody or musical. In a musically rendered poem, musical structure-based encoding & decoding conveys the musical meaning. while simultaneous speech structure-based encoding & decoding conveys the language meaning.

In Musical Linguistics, the rules of joining the letters for composing the poems are non-semantic and hence language-independent, but musical structure dependent.

AI & NLP involving musical linguistics (https://musicdrvee.blogspot.com/2020/11/ai-nlp-involving-musicallinguistics.html )

'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) எனது பல்துறை (Physics & Music – interdisciplinary) முனைவர் பட்ட ஆய்வாக இருந்தாலும், நான் அடிப்படையில் இயற்பியல் (Physics) பேராசிரியர். தமிழ்நாட்டில் பல்கலைக்கங்களில் தமிழ், மொழியியல் துறைகளில் உள்ள பேராசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பதிவுகளில் உள்ள எனது ஆய்வு முடிவுகளை விமர்சித்து, அவற்றில் உள்ள நிறை குறைகளை வெளிப்படுத்துவதை நான் வரவேற்கிறேன்.

தொல்காப்பியம் மூலமாக வெளிப்பட்டுள்ள 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையில் 'செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) மற்றும் 'Natural Language Processing' மூலமாக, உலக மொழிகளுக்கு 'பாடலில் இருந்து இசை' (lyrical text to music) உள்ளிட்ட பயன் பாட்டுப் பொருட்களை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

மேற்குறிப்பிட்ட விவாதங்களின் மூலமாக, எனது ஆய்வுக்குழுவிற்கு தேவைப்படும் 'தொல்காப்பிய யாப்பிலக்கணம்' மற்றும் 'மொழியியல்' புலமையாளர்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.


குறிப்பு: எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும்.  முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டு, எனது ஆய்வுத்திட்டங்களில் (R & D Projects) உள்ள குழுவினர் எல்லாம், அந்த போக்கில் தயவு தாட்சண்யமின்றி பயணிப்பதும், அந்த திட்டங்களின் வெற்றிகளின் இரகசியமாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html  )

இசையில் கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம் (Guide) தாளம் பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள் ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது. (‘நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்: ‘தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்.’; https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html  )

No comments:

Post a Comment