தமிழும் தமிழ்நாடும் சீரழிய,
ஈ.வெ.ராவை விட
அதிகம் பங்களித்தது தேவநேயப் பாவாணரா? (1)
தமிழ்வழிக்கல்வியின்
மரண அறிவிப்பு நெருங்கி விட்டது. (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_23.html)
பணக்கார
மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில் தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா? (https://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html)
தமிழும் தமிழ்நாட்டில் தமிழர்களும் சீரழிந்து வருவதை மேலுள்ள பதிவுகள் விளக்கியுள்ளன.
2016 சனவரியில்,
'தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? ‘ (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)
என்ற பதிவில், கீழ்வரும் கருத்தினை வெளியிட்டேன்.
'இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும் கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்?'
மேற்குறிப்பிட்ட பதிவிற்கு 'பெரியார்' கட்சிகளிடமிருந்து இன்றுவரை எந்த மறுப்பும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. இனி வெளிவந்தாலும் வரவேற்பேன்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளை விட சிறப்பாக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, மூடும் அபாயத்தில் இருந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு செய்து, மேற்குறிப்பிட்ட சமூகநீதி திசையில் ஈபிஎஸ் ஆட்சி பயணிப்பதானது, நான் எதிர்பார்க்காத அதிசயமாகும். (குறிப்பு கீழே)
மேற்குறிப்பிட்டது உள்ளிட்ட
எனது பதிவுகளில், தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி,
காலனிய ஆட்சியில் 'இனம், சாதி' பொருள் திரிபு (semantic distortion) சூழ்ச்சி பற்றிய
தெளிவின்றி, 1944இல் ஈ.வெ.ரா 'திராவிடர் கழகம்' தொடங்கி, 1949இல் தி.மு.க தோன்றக் காரணமானார்
என்பதையும்;
அதன் விளைவாக, தமிழரின் 'மானமும்
அறிவும்' எவ்வாறு சீர்குலைந்து, இன்று தமிழ்நாடானது தன்மான மீட்சிக்காகக் காத்திருக்கிறது?
என்பதையும்; (https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post.html )
ஏற்கனவே விளக்கியுள்ளேன். இசை
ஆராய்ச்சிக்கு முன், 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்த காலத்தில், ஈ.வெ.ராவின் தமிழ்
தொடர்பான 'தாய்ப்பால் பைத்தியம்' நிலைப்பாட்டினை ஏற்று, நான் ''சமரசமற்ற பார்ப்பன
எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' திசையில் பயணித்தேன்.
ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது
பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார்
மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப்
போக்கில்' ஈழ விடுதலை பயணித்ததும்;
எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின்
காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான், இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.
இசை இயற்பியல் (Physics of
Music) ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள்
(intellectual limitations) பற்றிய தெளிவின்றி, ஈ.வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள்,
புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு
தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த
சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது
வரவேற்க வேண்டியதாகும். (https://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html)
அது போலவே, தேவநேயப் பாவாணரை
முன்நிறுத்தும் தமிழ்த்தேசியர்களிடம் இருந்தும் விமர்சனங்கள் வெளிவருவதை ஆவலுடன் வரவேற்கிறேன்.
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
பிராமணர்கள் பங்கேற்றதையும், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை ராஜாஜி மற்றும் அவர்
சார்பு பிராமணர்கள் ஆதரித்ததையும், பிராமணர்கள் அமைப்பில் ஈ.வெ.ரா உரையாற்றியதையும்
கணக்கில் கொண்டால், ஈ.வெ.ராவின் 'பார்ப்பன எதிர்ப்பு' என்பதானது, 'பிராமண எதிர்ப்பு
செனோபோபியா' ஆகாது. (https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)
ஆனால் பெரும்பான்மையிரான தமிழ்த்தேசியர்கள்
'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா'வில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
ஈ.வெ.ராவை எதிரியாக அணுகும் தமிழ்த்தேசியரின் தவறான கருத்தினையும்,
தமிழ்த்தேசியர்கள் சமூக முதுகெலும்பு முறிந்து பயணித்ததையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
'ஒரு தமிழ்த்தேசியர் கீழ்வரும்
கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
‘ "ஈவேரா வை தமிழ் தேசியவாதிகள்;
நான் உட்பட விமர்சிப்பதற்குக் காரணம் கண்டிப்பாக அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லவே
அல்ல. அவரின் திராவிடக் கொள்கையால் என் தமிழ் இனத்துக்கு தமிழ் அடையாளத்துக்கு, தமிழ்
மெய்ஞானத்திற்கு நேர்ந்து விட்ட படுபாதகத்தினால் தான் என்பது மட்டுமே உண்மை. இதே ஈவேரா
அவர்களை நான் தமிழன் அல்லாத தமிழ் நாட்டு தெலுங்கராகவோ, மலையாளியாகவோ, கன்னடராகவோ இருந்தால்
தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவேன் அன்றோ. காரணம் அவரின் திராவிடக் கொள்கையால்
இவர்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள் பலவாகும்."
ஈவெராவின் தொண்டுகளால் எவ்வாறு
மலையாளிகளும் கன்னடர்களும் தெலுங்கர்களும் பலனடைந்தார்கள்? என்பதை உரிய சான்றுகளுடன்
எந்த தமிழ்த்தேசியராவது விளக்கினால் நன்று.
மேற்குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்தியவர்,
பிரபாகரனையும் பெருஞ்சித்தரனாரையும் உயர்த்தி ஈவெராவைத் தாழ்த்தியுள்ளார்.1980களில்
பிரபாகரன் எதிர்த்த புளோட் உமா மகேசுவரனை பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள்
ஆதரித்தார்கள். பெரியாரிஸ்ட்களான கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களின்
ஆதரவே விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பிரபாகரன் புளோட் உமா மகேசுவரன்
உள்ளிட்ட பிற குழுக்களின் தலைவர்களையும் ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமின்றி
சுட்டுக்கொன்ற போது, பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் அதை விமர்சிக்காமல்
மெளன சாட்சிகளாகப் பயணித்து, பின் பிரபாகரன் தீவிர ஆதரவாளர்கள் ஆனார்கள்.' (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_11.html
)
காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ்,
லெனின், காந்தி, நேரு,
பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான சிக்கலில்
எவ்வாறு ஈ.வெ.ரா சிறைபட்டுள்ளார்? என்பதையும்,
கீழ்வரும் பேரா.தா.மணி முகநூல் விவாதத்தில் வெளிப்படுத்திய கருத்து தொடர்பான
கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.
https://tamilsdirection.blogspot.com/2020/10/unique.html
தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
வாழும் தமிழ்த்தேசியர்கள் 'வழிபடும்' தேவநேயப் பாவாணரின் ஆய்வுகளை எல்லாம் எனது ஆராய்ச்சிக்கு
உட்படுத்தியுள்ளேன்.
நடுநிலைப்பள்ளி ஆசிரியராகப்
பணியாற்றி, பின் உயர்நிலைப்பள்ளி, கல்லூரி ஆசிரியர் என்று உயர்ந்த தேவநேயப் பாவாணரின்
ஆய்வுகள் 'ஆய்வு வழிமுறை' (Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே
மேற்கொள்ளப்பட்டவையா? என்ற கேள்விக்கான நியாயத்தையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன்.
(https://tamilsdirection.blogspot.com/2020/12/3-researchmethodology-plato-b.html)
எந்த மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களும்,
அந்த மொழியையே எதிரியாகக் கருதும் செனோபோபியா நோயில் சிக்கமாட்டார்கள்.
உதாரணமாக, இன்று தமிழ்நாட்டில்
தமிழ்வழிக்கல்வியையும், எனவே தமிழையும் மரணப்பயணத்திற்கு உள்ளாக்கி வரும் ஆங்கிலத்தின்
ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள், ஆங்கில மொழியையே எதிரியாகக் கருதினால், அது 'ஆங்கில எதிர்ப்பு
செனோபோபியா' நோயாக மாறும் ஆபத்தும் இருக்கிறது.
'ஆய்வு வழிமுறை' (Research
Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்ட தேவநேயப் பாவாணரின்
ஆய்வுகள் மூலமாக தமிழ்த்தேசியர்கள் மட்டுமின்றி, பெரியாரிஸ்டுகளும் 'சமஸ்கிருத எதிர்ப்பு
செனோபோபியா' நோயில் சிக்கி விட்டதாகத்தெரிகிறது.
நான் மிகவும் மதிக்கும் பெரியாரிஸ்ட்
வெளிப்படுத்திய கீழ்வரும் முகநூல் பதிவு அதற்கான உதாரணமாகும்.
"தோழர் வாலாச வல்லவன்
அவர்களின் பதிவு:
தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும்
இரண்டாயிரமாண்டு பகை இப்போது பகை உச்சகட்டத்தை அடைந்துள்ளது."
மேற்குறிப்பிட்ட பதிவின் கீழே,
கீழ்வரும் கருத்தினை நான் பதிவு செய்தேன்.
'பழந்தமிழ் இலக்கியங்களிலோ,
கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகளிலோ, 'சமஸ்கிருத எதிர்ப்பு' இருந்ததற்கு சான்றுகள்
உண்டா?
காலனி ஆட்சியில் தமிழர்கள்
நோஞ்சான்களாக வளர்ந்து, தமிழானது சமஸ்கிருத கலப்பில் வீழ்ந்ததா? அதன் தொடர்ச்சியாகவே,
இன்று தமிழ் ஆங்கிலத்திடம் வீழ்ந்து வருகிறதா? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு)
மறந்து, வெறுப்பு அரசியலில் நோஞ்சான்களாகப் பயணிப்பது இனியும் தொடரலாமா? என்ற விவாதத்திற்கும்
இடம் இருக்கிறது.
லத்தீன் மொழியின் ஆதிக்கத்தில்
இருந்து ஐரோப்பிய மொழிகள் விடுதலை பெற்ற பின்னர், இன்று ஐரோப்பிய நாடுகளில் லத்தீன்
மொழியில் உள்ள அறிவுப்புதையல்களை போற்றுகிறார்களா? தூற்றுகிறார்களா? என்று ஆராய வேண்டும்.
அப்போது தான், சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் கூறி, சமஸ்கிருத மொழியையே
இழிவுபடுத்தி கண்டிக்கும் தமிழர்கள், உலக அறிஞர்கள் பார்வையில் கேலிப்பொருளாகி வருவதும்
புரியும். விழிக்கவில்லை என்றால், உணர்ச்சிபூர்வ முட்டாள்கள் என்ற முத்திரையில் தமிழர்கள்
சிக்க நேரிடும்.' (‘சமஸ்கிருதம் செத்த மொழி என்பது அபத்தம்; தமிழ்நாட்டில் தமிழ் சாகும்
மொழி?’; https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_9.html)
அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும்
'பெருமைகள்' மூலமாக, தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் பற்றி ஏற்கனவே
எச்சரித்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html
)
அதைவிட இன்னும் மோசமாக, தமிழின்
தமிழ் இசையின் வளர்ச்சியையேக் கெடுக்கும் அளவுக்கு ஆபத்தானதாக, தேவநேயப்பாவாணரின் தொல்காப்பியம்
தொடர்பான ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன. அது பற்றிய விவாதத்தினை முன்னெடுக்கவே, கீழ்வரும்
பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
தேவநேயப் பாவாணரின் தொல்காப்பியம்
ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடி? https://tamilsdirection.blogspot.com/2020/12/4.html
தமிழும் தமிழ்நாடும் சீரழிய,
ஈ.வெ.ராவை விட அதிகமாக எவ்வாறு தேவநேயப் பாவாணர் பங்களித்ததுள்ளார்? என்பதற்கான திறவுகோலை
மேற்குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன்.
தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு
தேவநேயப் பாவாணரின் தொல்காப்பிய ஆய்வுகள் எந்த அளவுக்கு தடைகளாக நீடிக்கின்றன? என்பதை
அடுத்த பதிவில் பார்ப்போம்.
(வளரும்)
குறிப்பு
எம்.ஜி.ஆர் ரசிகர்களை கேலி செய்து எழுதி பாராட்டப் பெற்ற ஜெயகாந்தன் தமது கடைசி காலத்தில் கருணாநிதியின் அடிவருடி ஆனார். அவரை ஏற்கனவே பாராட்டியவர்கள் எல்லாம், அதற்காக அவரைக் கேலி செய்யவில்லை.
நானறிந்தவரையில், (1967க்கு முன் தி.மு.கவிலும்) எம்.ஜி.ஆரைக் கேலி செய்தவர்களும் சிவாஜி ரசிகர்களாகப் பயணித்தவர்களிலும் பெரும்பாலோர், சமூக முதுகெலும்பு முறிந்த சுயநல ‘புத்திசாலிகளாக’(?) வெளிப்பட்டார்கள்.
தி.மு.கவை கருணாநிதி தமது குடும்பக் கட்சியாக மாற்ற முடிந்ததற்கு அத்தகையோரும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும்;
அதற்கு எதிரான போக்கானது எம்.ஜி.ஆர் மூலமாக வெளிப்பட்டு, எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில், அந்த குடும்ப அரசியல் வீழ்ந்து கிடந்ததற்கு, எம்.ஜி.ஆர் ரசிகர்களும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும், எனது ஆய்வு முடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)
ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின்,
கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் பிடியில் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போவதும் இன்று நம்மிடையே வாழும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/11/individual-ethical-compass.html )
'எங்க வீட்டுப் பிள்ளை'யில் கோழையான எம்.ஜி.ஆருக்கு வீரமூட்டியது கிராமப்புறச் சூழலே ஆகும். இன்றும் கிராமப்புற எம்.ஜி.ஆர்கள் மூலமாகவே, நகர்ப்புற கோழை எம்.ஜி.ஆர்களும் வீரர்களாக மாறும் சமூகத் தூண்டல் (Social Induction) அதிசயமும், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது. முதல்வர் ஈ.பி.எஸ் தம்மால் இயன்ற அளவுக்கு தமது கிராமப்புற வேர்களுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறார். சுயலாப நோக்கின்றி, தன்மானத்துடன் வாழ்வதற்காக இழப்புகளை விரும்பி ஏற்று பயணிக்கும் புலமையாளர்களின் பங்களிப்பானது, அந்த அதிசயத்திற்கு சமூக வினையூக்கியாக (Social Catalyst) அமையும். (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_15.html)
No comments:
Post a Comment