Wednesday, December 9, 2020

 

காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் சமூக முதுகெலும்பு முறிந்து பயணித்தவர்கள்,


மோடி ஆட்சியில் 'சூரர்களாக' வெற்றி பெறுவது சாத்தியமாகுமா?


தி.மு. தமது 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில் பக்கம் 24ல் விவசாயிகள் இடைத்தரகர் இன்றி சந்தை விலைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க சட்டம் கொண்டு வருவோம் என உறுதிமொழி கொடுத்து விட்டு, இன்று அதை அமுல்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பது இரட்டை வேடப் போக்காகும். அது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கோரிக்கையை ஆதரிப்பது, பின் ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு எதிராக செயல்பட்டு தமது சொத்து சுகங்களை வளர்ப்பது என்பதானது, கருணாநிதி தமிழ்நாட்டில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய 'அறிவியல் ஊழல்' போக்கின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகும்.

உதாரணமாக, 1996இல் ஜெஜெ - சசி ஆட்சி தமிழ்நாட்டில் தொடங்கியதும், கருணாநிதியின் அறிவியல் ஊழலில் தப்பித்திருந்த மலைகள், தாதுமணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் உள்ளிட்ட அனைத்து கனிவளங்களும் ஊழல் பெரும்பசிக்கு இரையாகத் தொடங்கின. அந்த வரிசையில், சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்தான டூபாண்ட் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. உடனே வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்கள் தூண்டி போராட்டம் வெடித்தது.

A memorandum of understanding authorising construction was signed on 8 June by representatives of Thapar DuPont and Tamil Nadu's Government Industries Department. (https://www.icis.com/explore/resources/news/1995/06/19/24175/thapar-dupont-ditches-goa-for-tamil-nadu-site/ )

Dupont decried (https://www.downtoearth.org.in/news/dupont-decried-29015 )

1996 தேர்தல் அறிக்கையில், தி.மு. ஆட்சிக்கு வந்தவுடன் டூபாண்ட் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் இருந்து விரட்டுவோம், என்ற உறுதி மொழி இடம் பெற்றது. ஆனால் 1996இல் முதல்வரான கருணாநிதி அந்த ஆலையை செயல்பட அனுமதித்தார். ஜெயலலிதா ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் ஏன் அடங்கிப் போனார்கள்? என்பது இன்று வரை நீடிக்கும் மர்மமாகும்.

1996இல் தி.மு. ஆட்சிக்கு வந்து டூபாண்ட் தொழிற்சாலையை அனுமத்தித்தது போல, 2006இல் தி.மு. ஆட்சிக்கு வந்து, துணை முதல்வர் ஸ்டாலின் மீத்தேன் எரிவாயு திட்டத்தினை அனுமதித்து கையெழுத்திட்டார். 2011இல் ஆட்சியை இழந்த பின், அதே மீத்தேன் எரிவாயு திட்டத்தினை எதிப்பவர்களுடன் கூச்சமின்றி கூட்டு சேர்ந்தார்.

கடந்த மன்மோகன் சிங் - தி.மு. கூட்டணி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருந்த 'மைல் கல்' பல இடங்களில் இருந்தது. எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அந்த தவறு சரி செய்யப்பட்டது. இன்று அதே தவறு மோடி ஆட்சியில் வெளிப்பட்டால், தமிழ்நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருக்கும்.

கீழடி முதல் கேந்திர வித்யாலயாவில் தமிழ் வரை மன்மோகன் சிங் - தி.மு. கூட்டணி ஆட்சி காலத்தில் மெளனமாக இருந்து விட்டு, அதை மறைத்து, முன்னெடுத்த 'மோடி எதிர்ப்பு' போராட்டங்களின் விளைவாக, மோடி அரசு சுதாரித்து, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. காங்கிரஸ் தி.மு. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பலன்களோடு ஒப்பிடுவது 2021 தேர்தலில் குவியமாகி, பா.. அணி பெரிய வெற்றி பெற்றால், அதற்கு சமூக முதுகெலும்பு முறிந்து மோடி எதிர்ப்பில் பயணித்தவர்களின் பங்களிப்பானது முக்கிய இடம் பெறும். (‘தமிழ்நாட்டின் சமூக முதுகெலும்பினை முறித்த கருணாநிதியும் பிரபாகரனும் சசிகலாவும்; 'பெரியார்' மண்ணுமல்ல; 'இந்துத்வா' மண்ணுமல்ல; 'தமிழ் மண்'ணுமல்ல;’ https://tamilsdirection.blogspot.com/2020/11/individual-ethical-compass.html)

1965 இந்தி எதிர்ப்பு முதல், எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, சேலம் விமான நிலைய விரிவாக்கம், உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளில் இன்றுவரை போராட்டத்தித் தூண்டி வரும் தலைவர்களின் குடும்பப்பிள்ளைகளில் எவராவது அனிதா, செங்கொடி, முத்துக்குமார் போன்ற எண்ணற்றோர் போன்று தீக்குளித்திருக்கிறார்களா? அல்லது ஒழுங்காகப் படித்தாலும் படிக்க விட்டாலும் நல்ல வகையில் 'செட்டில்' ஆகியிருக்கிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து, அந்த 'சூரர்களின்' யோக்கியதையைக் கண்டுபிடிக்கலாம்.

பல வருடங்களுக்கு முன் என்னை சந்தித்த ஒரு 'பெரியார்' ஆதரவாளரிடம் கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தினேன்.

'1857‍இல் இந்திய மன்னர்கள் ஒன்று சேர்ந்து முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய வியப்பூட்டும் தகவல்கள் வீர சவர்க்காரின் 'எரிமலை' (தமிழில் ‘1857 War of Independence’) நூலில் உள்ளன. வீரத்துடனும், தியாகத்துடனும் போரிட்ட இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும், துரோகம் செய்த இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும் பாரபட்சமற்ற முறையில் தகவல்கள் அந்நூலில் வெளிவந்துள்ளன.'

அடுத்த முறை என்னை சந்தித்த போது, அவர் கீழ்வரும் தகவலை தெரிவித்தார்.

அவருக்கு தெரிந்த 'பெரியார்' கொள்கையாளர் நடத்தி வந்த புத்தகக் கடையில் வீர சவர்க்காரின் 'எரிமலை' புத்தகத்தை வரவழைத்துக் கொடுத்தால், அதைத் தான் விலைக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்த போது, 'அது எனக்கு சிக்கலாகி விடும்' என்று கடை உரிமையாளர் மறுத்திருக்கிறார்.

பொதுவாக, 'பெரியார், பிரபாகரன், கருணாநிதி' போன்றோரை விமர்சிக்காத வலைப்பின்னலில் இடம் பெற்று ஆதாயம் அடைந்து வருபவர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட கடை உரிமையாளரைப் போலவே, 'அந்த வலைப்பின்னலில் உள்ள செல்வாக்கான நபர்களின் சந்தேகத்திற்கு உள்ளாகக் கூடாது' என்று மிகவும் கவனத்துடன் வாழ்கிறார்கள். 'பெரியார், பிரபாகரன், கருணாநிதி' உள்ளிட்டு எவரையும் விமர்சிக்காத 'செல்வாக்கான' நபர்களை ஓரங்கட்டாமல், அவர்களின் வலைப்பின்னல்களில் சிக்கியுள்ள 'அடிமைகளுக்கு' விடுதலை கிடைக்காது. அந்த விடுதலை தாமதமாகும் வரையிலும், தமிழ், தமிழ் உணர்வு அமைப்புகள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தின் அறிவாலயத்திலும், சசிகலா நடராஜன் குடும்பத்தின் முள்ளி வாய்க்கால் முற்றத்திலும் சங்கமமான போக்குகள் தொடரும்.

மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் தமது ஊழல் சொத்துக்களைப் பாதுகாக்க  மத்திய அரசுடன் சமரசமாகி எளிதில் தமிழ்நாட்டின் நலன்களைக் காவு கொடுக்க முடியும். எனவே தான், கடந்த மன்மோகன் சிங் - தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருந்த 'மைல் கல்' பல இடங்களில் இருந்தது. எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. தேர்தல் அறிக்கை வாக்குறுதியை மீறி, 1996இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து டூபாண்ட் தொழிற்சாலையை அனுமத்தித்த போதும், எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த‌ போது ஸ்டெர்லைட் ஆலை பாதகமாக செயல்பட அனுமத்தித்த போதும், எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கிற வேலை வாய்ப்புகளைக் கெடுத்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்திய 'சூரர்கள்', பா.. தலைவர் எல்.முருகன் முன்னெடுத்த 'வேல் யாத்திரைக்கு' எதிராக, 'வேலையில்லாதாவர்கள் யாத்திரை' தொடங்கப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடவில்லை. நேர்மையான சுயசம்பத்தியம் இன்றி, 'போராட்டங்கள்' மூலமாக  வசதியிலும் சொத்திலும் வளர்ந்தவர்கள் யார், யார்? என்ற தேடலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் சமூக முதுகெலும்பு முறிந்து பயணித்தவர்களும், சசிகலா குடும்ப ஆதரவில் பயணித்தவர்களும், மோடி ஆட்சியில் 'சூரர்களாக' ஆடி வரும் ஆட்டங்கள் அடங்கும் காலமும் நெருங்கி விட்டது.

ஆளும் கட்சியாக இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலை பாதகமாக செயல்பட அனுமதித்து விட்டு, எதிர்க்கட்சியான பின், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தை ஆதரித்து, தூத்துகுடி எம்.பியாக தேர்தலில் தி.மு. வெற்றி பெற்றுள்ளது; மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்களின் ஆதரவுடன்.

தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பினை தமது சுயநல குடும்ப அரசியலுக்கே பயன்படுத்தியவர் கருணாநிதி ஆவார்.


இப்படிப்பட்ட
கட்சிகளையும் தலைவர்களையும் ஓரங்கட்டாமல், தமிழ்நாடு தப்பிக்க முடியுமா? என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கினால்,

சில கட்சிகளும் தலைவர்களும் திருந்தி ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள். திருந்த முடியாதவர்கள் சமூகக்குப்பையாக ஒதுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு நிச்சயம் தப்பிக்கும். (‘சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூவின் அபாய எச்சரிக்கை? தமிழ்நாட்டுக் கட்சிகளும் தலைவர்களும் திருந்துவார்களா?’; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_20.html ) 


No comments:

Post a Comment