Friday, December 4, 2020

 

'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' .வெ.ராவின் சொற்களில் 'காலித்தன' 'சண்டித்தன' கட்சிகளா?

.வெ.ரா அவர்களால் 'காலித்தனம், சண்டித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்டங்களை எல்லாம், 'பெரியார்' கட்சிகள் ஆதரித்த போக்கானது, .வெ.ராவின் மறைவிற்குப் பின், தி.மு. ஆதரவு போக்கில் முளை விட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவு போக்கில் வளர்ந்த ஒன்றாகும்

'பெரியார்' கட்சிகள்  'காலித்தனம், சண்டித்தனம்' போராட்டங்களை ஆதரிக்கத் தொடங்கிய வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, நானறிந்த வரையில் முதல் முறையாக, 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' என்ற பெயரில் அனைத்து 'பெரியார்' கட்சிகளும் சங்கமாகி தாங்களே .வெ.ராவால் 'காலித்தனம், சண்டித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.

முகநூலில் கீழ்வரும் தகவல் எனது கவனத்தினை ஈர்த்தது.

'புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய தொடர் வண்டி நிறுத்தப் போராட்டம் திசம்பர் 5 2020' நடத்தப் போவதாக 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' அறிவித்துள்ளது.

அது தொடர்பாக, அந்த அறிவிப்பின் கீழே கீழ்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளேன்.

'பொது மக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கு கேடு விளைவிக்காத வகையில் .வெ.ரா போராடியது தவறா? .வெ.ராவின் போராட்ட முறைகள் நிகழ்காலத்திற்கு ஏன் பொருந்தாது? என்று 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' விளக்கம் தருவார்களா?'

மேற்குறிப்பிட்ட எனது பதிவிற்கு இதுவரை 'பெரியாரிய' ஆதரவாளர்கள் எவரும் விளக்கம் தரவில்லை. அதன் தொடர்ச்சியாகவே இதனை எழுத நேரிட்டது.

1925 வைக்கம் போராட்டம், 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1957 இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்டு, .வெ.ரா அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கும்,

காந்தி 'சத்தியாகிரகம்' என்ற பேரில் மாணவர்களையும் தூண்டி முன்னெடுத்த போராட்டங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு.

பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் சேதம் விளைவித்த வகையில் தான் காந்தியின் போராட்டங்கள் முடிந்தன.

எனவே தான், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், மறியல் போன்ற போராட்டங்களை எல்லாம் காலித்தனம், சண்டித்தனம் என்று .வெ.ரா கண்டித்தார்.

'எரித்தது அரசியல் சட்டமல்ல, வெறும் காகிதமே' என்று கைதுக்குப் பின் தி.மு. தலைவர் கருணாநிதி தெரிவித்த பாணியில் போராடியவர் அல்ல .வெ.ரா. எதிர் வழக்காடி ஜாமினில் வெளியில் வந்தவருமல்ல .வெ.ரா. நீதிமன்றத்தில் எதிர்வழக்காடாமல் அதிகபட்ச தண்டனை வழங்கினாலும் அதனை ஏற்று சிறையில் இருந்தவர் .வெ.ரா.

எனவே தான் அவர் வாழ்ந்த காலத்தில் தமது கொள்கை எதிரிகளாலும் மதிக்கப்பட்டார்.

அவர் வழியில் இருந்து தடம் புரண்டு, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று, 'பெரியார்' கட்சிகளுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இருந்த வேறுபாடு மறைந்து வருவது உண்மையா? அதன் விளைவாக 'பெரியார்' கட்சிகள் மீதுள்ள கோபத்தில் .வெ.ராவையும் இழிவுபடுத்திக் கண்டிக்கும் போக்குகள் வளர்ந்து வருகின்றனவா?

என்று அறிவுநேர்மையுடனும் மனசாட்சியுடன் 'பெரியாரிய' ஆதரவாளர்கள் தம்மை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி திருந்தி பயணிக்க வேண்டும்.

இல்லையென்றால், .வெ.ராவின் சொற்களில் 'காலித்தன', 'சண்டித்தன' கட்சிகளாகவே 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' வரலாற்றில் இடம் பெறும்.

எனது ஆய்வின்படி, நோஞ்சான் தமிழர்களைக் கொண்ட 'நோஞ்சான்'  கட்சிகளாகவே 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' வரலாற்றில் இடம் பெறும்.  

மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரிப்பிரச்சினையில் கர்நாடக பா..கவும், கர்நாடக காங்கிரசும் ஒரணியில் நிற்கும் வலுவுள்ள கட்சிகளாக தம்மை செயல்பூர்வமாக நிரூபித்து வருகிறார்கள்.

An all-party delegation from Karnataka would meet Prime Minister Narendra Modi on Tuesday to convey the state's opposition to the setting up of Cauvery Management Board as demanded by Tamil Nadu to ensure implementation of Cauvery Water Disputes Tribunal award…….Asked if he was worried about the BJP getting political mileage out of the issue, he said "It is not the question of politics -- advantage to BJP or Congress. State is paramount."

Siddaramaiah said he has convened yet another meeting on Tuesday in Delhi in which MPs and Union ministers from Karnataka will discuss the issue before meeting Modi. (https://www.news18.com/news/politics/cauvery-row-karnataka-all-party-delegation-to-meet-narendra-modi-693784.html)

மேற்குறிப்பிட்டது போல, 'கட்சியில் நலன் முக்கியமல்ல, மாநிலத்தின் நலனே முக்கியம்' என்று காவிரி பிரச்சினையில், மத்தியில் யார் ஆண்டாலும், காரியம் சாதிக்கும் நோக்கில் தமிழக கட்சிகள் செயல்பட்டனவா? அவ்வாறு செயல்படுவதற்குப் பதிலாக, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி காரியத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டனவா?

1969இல் முதல்வரான கருணாநிதி சட்டசபையில், ‘காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்' என்று அறிவித்த பின்னும், மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரானதற்கும், தஞ்சை மாவட்டம் தி.மு. ஆதரவு மாவட்டமாக தொடர்ந்ததற்கும், தமிழக காங்கிரஸ், தமிழக பா.. உள்ளிட்ட தேசியக்கட்சிகள் நோஞ்சான் கட்சிகளாக பயணித்தது மட்டும் காரணமல்ல.

'தமிழ் உணர்வு, தனித்தமிழ்நாடு' என்று பயணித்த கட்சிகளும், தி.மு.கவின் குடும்ப ஊழல் ஆட்சியில் மக்கள் பட்ட அவதிகளைப் பற்றி கவலைப்படாமல், தி.மு.கவின் முதுகில் பயணித்த 'நோஞ்சான் கட்சிகளாக' இருந்ததும் கூடுதல் முக்கிய காரணமாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html)

காவிரிப் பிரச்சினையில் 'பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு 22 கட்சிகள் ஒன்று சேர்ந்து, தமிழ்நாட்டில் 'ஆர்.எஸ்.எஸ்-ன் அலுவலகம் முற்றுகை' போராட்டம் நடத்தியதானது எந்த அளவுக்கு அபத்தமானது? (https://tamilsdirection.blogspot.com/2016/09/blog-post.html)

அடுத்து, 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' வெளிப்படுத்தியுள்ள சமூக சிக்னலானது அக்கட்சிகளின் மரணப்பயணத்தின் துவக்கமாகி விட்டதா? என்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் .வெ.ரா அவமதிக்கப்பட்டதானது, தி.மு.கவின் வளர்ச்சிப் போக்கில் அவர் பொது அரங்கில் செல்லாக்காசானதை உணர்த்தியது. இன்று அதே பாணி போராட்டத்தை முன்னெடுத்த 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' மூலமாக 'பெரியார் தந்த புத்தியும்' செல்லாக்காசாகி விட்டதா? என்ற கேள்விக்கு இடம் அளித்துள்ளது.

அதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மூலமாக, அக்கட்சிகளின் தலைவர்களின் மற்றும் பங்கேற்கும் தொண்டர்களின் மனங்களில் உள்ள தேவைகளையும் (Needs), ஈடுபாடுகளையும் (Interests) எவ்வாறு திருக்குறள் (573) வழியில் 'சமூக X-Ray’   பார்வையில் கண்டுபிடிக்கலாம்? என்பதை அடுத்து பார்ப்போம்.

'கத்தி' திரைப்படம் தொடர்பாக சத்யம் தியேட்டரில் தாக்குதல் நடத்தியவர்கள் (தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவின் படி)பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்ற செய்தி வெளிவந்தது.

ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் லைக்கா என்பதற்காக, அந்நிறுவனம் தயாரித்த திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதை எதிர்ப்பவர்கள், .நா உள்ளிட்டு உலக அமைப்புகளில் ராஜபட்சேயின் 'பாதுகாவலராக' செயல்படும் சீனாவை இது வரை கண்டித்ததுண்டா? சீனப் பிரதமர் அண்மையில் இந்தியா வந்தபோது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நின்றாவது அந்த வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார்களா? ராஜபட்சேக்கு சீனாவை விட வலிமையான ஆதரவை வழங்கும் நிறுவனமா லைக்கா?’ என்பது பற்றியும், கடந்த 10 வருடங்களில் வரைமுறையில்லாமல் சீனாவில் தயாரான பொருட்கள் தமிழ்நாட்டுச் சந்தையில் நுழைந்து, தமிழ்நாட்டின் சிறுதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், ‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (6)  தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ - (TCCD)'  நோயாளிகள்மருத்துவரான விந்தைஎன்ற பதிவில்(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) பார்த்தோம். எனவே 'கத்தி' படத்தை எதிர்த்த பெரியார் பெயரில் உள்ள இயக்கங்களில், அறிவுபூர்வமாக சுயவிமர்சனம் செய்து தம்மை வளர்த்துக் கொள்ளும் பண்புள்ளவர்களின் பார்வைக்கு மேற்குறிப்பிட்டப் பதிவு முக்கியமானதாகும்.

அதே போல், மேற்குறிப்பிட்ட சத்யம் தியேட்டரில் நடந்த போராட்டமானது பெரியார் பெயரில் உள்ள எந்த இயக்கமும் மேற்கொண்டிருந்தாலும், அது போன்ற போராட்டங்களை எந்தப் பிரச்சினையிலும் அவர்கள் மேற்கொண்டிருந்தாலும், அத்தகைய போராட்ட முறைகள் பெரியாரால் கண்டிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற கேள்விகளையும் அவர்கள் ஆராய வேண்டும். கால மாற்றத்தில் போராட்ட முறைகள் பற்றிய பெரியாரின் நிலைப்பாடுகள் இந்த காலத்திற்குப் பொருந்தாது, என்று அந்த இயக்கங்கள் தமக்குள் விவாதித்து, இத்தகைய போராட்ட முறைகளே சரியென்று ஏற்று நடைமுறைப்படுத்தி வருகிறார்களா? என்ற கேள்வியையும் அவர்கள் ஆராய வேண்டும். (https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

ஒரு மனிதர் நல்ல அல்லது தீய செயலில் ஈடுபட, அவர் மனதில், அதற்கான தூண்டுதல் எண்ணம் (Motivation) உருவாக வேண்டும்.

செயலில் ஈடுபட தூண்டுதல் எண்ணம் உருவாக, மனதில் அது தொடர்பான ஈடுபாடு (interest) இருக்க வேண்டும்.

மனதில் ஈடுபாடு உருவாக வேண்டுமானால், அதற்கான தேவைகளை (Needs) உணரவேண்டும்.

1944க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்தது. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி  எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. 1944‍இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics)  நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்ச்சி பூர்வவளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய  அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது.  

இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்ச்சி பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்ச்சி பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.(‘ 1938 & 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கு இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள்?’; https://tamilsdirection.blogspot.com/2019/09/1965_28.html)

பெரியார் கட்சிகள் பற்றிய எனது observation. மக்கள் மத்தியில் முன்பு போல ஈவெரா கருத்துக்களை எல்லாம், .வெ.ராவிற்கு இருந்த துணிச்சலுடன் பேச முடியாத நிலையில் தாங்களாகவே ஒருலக்ஷ்மண்கோட்டை வரைந்து கொண்டு, அதைத்தாண்டாமல் பெரியார் கட்சிகள் பயணிப்பதாக தெரிகிறது. ஈவெராவைப் போல் தங்களின் பலத்தையும் பலகீனத்தையும் குறைகளையும் பகிரங்கமாக விவாதித்து திருத்தி பயணிக்காததால் வந்த விளைவாக இருக்கலாம்.

கருணாநிதி சசிகலா குடும்பங்களின் ஊழல் பாதுகாப்பு கவசமாக செயல்பட்டதானது பொதுமக்கள் மத்தியில் வெறுப்பையும் ஈட்டியிருக்கலாம்.  

விடுதலைப்புலிகள் மற்ற குழுக்களின் தலைவர்களையும் போராளிகளையும் கொன்றதால் அக்குழுக்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களும் பெரியார் கட்சிகள் மீது உள்மறை வெறுப்புடன் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவற்றின் தொகு விளைவாக resultant ஈவெராவை இழிவுபடுத்தி கண்டிப்பது வலிமை பெற்று வருகிறது. இந்த போக்கு தொடர்வது தமிழ்நாட்டிற்கு கெடுதலாகும். புத்தியைத் தீட்டும் வலிமையை இழந்து, கத்தியை தீட்டுவது டிஜிட்டல் யுகத்தில் அரசியல் தற்கொலையாகி அதிலும் நோஞ்சானாகி பயணிப்பதானது தமிழ்நாட்டை சமூக காங்கிரின் நோயில் சிக்க வைக்கும் ஆபத்தும் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)

தமிழ்நாடு 'பெரியார்' மண்ணுமல்ல; 'இந்துத்வா' மண்ணுமல்ல; 'தமிழ் மண்'ணுமல்ல; எவ்வாறு 'நோஞ்சான் மண்'? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/11/individual-ethical-compass.html)

.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்பட்டு 'பெரியார்' கட்சிகள் திருந்தி பயணிப்பதே தமிழ்நாட்டிற்கும் நல்லது, இந்தியாவிற்கும் நல்லது, என்பதே எனது ஆய்வு முடிவாகும்.  

குறிப்பு:

மத்திய அரசின் புதிய சட்டங்களின் மூலமாக விவசாயிகளுக்கு உள்ள நன்மைகள் பற்றிய கீழ்வரும் முகநூலில் உள்ள விளக்கம் எனக்கு சரி என்று படுகிறது. அதற்கு சரியான மறுப்பு இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.

https://www.facebook.com/search/top?q=kr%20athiyaman

விவசாயிகளின் போராட்டத்தினை ஆதரிக்கும் 'பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் சரியான மறுப்பு வெளிவந்திருந்தால், அதனை தெரிவிப்பவர்களுக்கு முன்கூட்டியே நன்றி. இனி வெளிவந்தாலும் அதனை வரவேற்று திறந்த மனதுடன் ஆராய இயலும்.

No comments:

Post a Comment