Thursday, December 24, 2015



ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (1)


வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்',

இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்கவும் வாய்ப்பிருந்ததா?



ஈ.வெ.ராவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் 'தொகுத்து' வெளியிட்டு வருபவர்களும், அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருபவர்களும் பாராட்டுக்குரியவர்களே ஆவர். ஆனால் இது போன்ற முயற்சிகளுக்கு முன்னர், உலக அளவில் ஆய்வாளர்களுக்கு உதவி வந்தது, திரு.வே.ஆனைமுத்து தலைமையில் கூட்டுமுயற்சியாக வெளிவந்த 'ஈ.வெ.ராவின் சிந்தனைகள்' கூட்டுத்தொகை நூல்களாகும்.

ஈ.வெ.ரா, அவர் வழியில் 'எளிமையை கைவிடாமல்' வாழ்ந்த வே.ஆனைமுத்து, மற்றும் காந்தி, நேரு, பிரபாகரன், கோட்சே உள்ளிட்ட தலைவர்களை, அவர்களின் சொந்தவாழ்வு அடிப்படையில், அவர்களை பாராட்டுவதையும்/கண்டிப்பதையும், அவர்களின் பொதுவாழ்வால்,  சமூகத்துக்கு ஏற்பட்ட விளைவுகளை பாராட்டுவதையும்/ கண்டிப்பதையும், குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை, என்பதை எனது பதிவுகளில் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

1970களில் "புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக, அந்த தமிழ்வழிக்கல்வி வீழ்ச்சி ஓட்டத்திலேயே,  தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார்."  என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலே குறிப்பிட்ட காலக்கட்டதில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் பயணித்த போக்கில், நான்  'எதிர் நீச்சலில்', எனது பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, அவர்கள் வளர்ந்த பின் , மற்ற பெரியார்/தமிழ் ஆதரவாளார்கள் தத்தம் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்தது அறிந்து, என் மேல் கோபமும்/வெறுப்பும் கொள்ள;

'பெரியார் முகமூடியில்' 'சுயநல கள்வராக' இருந்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வலுவாகி, 'ஒழுக்கக்கேடான' குறுக்கு வழிகளில், 'செல்வர் ஆகி', தனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்க வைத்து, அந்த போக்கில் 'வளர்ந்த' சமூக கிருமிகளை, எனது 'சமூக வட்டத்தில்' அனுமதித்த 'பாவத்தின்' விளைவாக‌, அந்த கிருமிகள் மேற்குறிப்பிட்ட 'கோபத்தையும் வெறுப்பையும்' (அதன் நியாயங்களை நான் உணர்ந்து, ஆனால் விளக்க முடியாதிருந்த நிலையில்) பயன்படுத்தி, தமது 'செல்வம், செல்வாக்கு' வெளிச்சத்தில் 'ஏமாற்றி', என் குடும்பத்தின் 'மதிக்கத்தக்க வாழ்வியல் புத்திசாலி' முன்மாதிரியாக (Role Model);

'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும்' வாலாட்டுபவர்கள் குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும்,  'கிருமிகளே' என்ற நிலைப்பாட்டில்; கிருமிகளின் வாடையின்றி, ஒதுங்கி, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும்(Passions), வணங்கத்தக்க மனிதர்களை எனது சமூக வட்டமாகக் கொண்டும், வாழ்கிறேன்; கொள்கை வேடங்களில் ஏமாந்து, 'சமூக கள்வர் தடைகளின்றி',  நாம்  பயணிப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றிய தெளிவுடன்; இயல்பில் சிற்றினமானவர்கள் நம்மிடம் எவ்வளவு வருடங்கள் பழகியிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாக' வெளிப்படுவார்கள் என்ற 'பாடம்' கற்று.

 'பெரியார் கள்வர்களை' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததன் காரணமாக, எனக்கு தெரிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தவர்கள், அந்த 'பெரியார் கள்வர்கள்' போட்ட 'செல்வ, செல்வாக்கு' வெளிச்சத்தில் சிக்கி, தமது 'மூளை செயல்பாட்டை (Brain processing) ' திசை திருப்பலுக்குள்ளாக்கி, 'பெரியார் கள்வர்கள்' போல் , பயணிப்பதை, அறிந்து, சமூகத்தில் எனது சமூக வட்டத்தையே பாதித்துள்ள, அந்த நோய், எப்போது? எப்படி பரவியது? என்று, எனது இசை ஆய்வு முயற்சிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே,  இந்த பதிவு உள்ளிட்ட,  எனது பதிவுகளாகும்.

'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த நிலையில், " திராவிட நாடு பிரிவினை நடக்காததற்கு காரணங்கள் யாவை? ராஜாஜிக்கும், நேருவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காரணமா? அல்லது திராவிடநாடு பிரிவினைக்காக விமானப்பயணம் மேற்கொண்ட (குடிஅரசு இதழ்களில் புகைப்படங்களுடன், அவரை வழியனுப்பும் செய்திகள் வெளிவந்துள்ளன) சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் - 'நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போல‌' - இறந்தது காரணமா? அது விபத்தா? அல்லது சதியா? என்பது போன்ற கேள்விகளுக்கு , பிரிட்டனின் உளவு அமைப்பு MI5   கோப்புகள்  declassify-இரகசிய நீக்கமாகும்போது-   தெரியும். அவ்வாறு விடைகள் தெரியும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பது என் கருத்து. " என்பதை, முன்பு பார்த்தோம்.

1944இல் ஈ.வெ.ரா,  'திராவிடர் கழகத்தை' துவக்கி, தவறான திசையில் பயணிக்காமல் இருந்திருந்தால், வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்' , இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்குமா? என்பது தொடர்பான தகவல்களை அடுத்து பார்ப்போம்.

1944க்கு முன் நீதிக்கட்சியிலும், காங்கிரசிலும் இருந்தவர்களில், பிராமணர்கள் உள்ளிட்டு அனைத்து சாதிகளிலும் இருந்த படித்த, நேர்மையான, சொந்த பணத்தை பொதுவாழ்விற்கு செலவழித்து, அரசியல் மூலம் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள் எல்லாம், அவரவர் அறிவு, அனுபவத்தில், சமூக நீதி நோக்கில், சாதி அடிப்படையில் பின்தங்கியிருந்தவர்களை, முன்னேற்ற எடுத்த, பிரமிப்பூட்டும் முயற்சிகள் பற்றி, ஆய்வதற்கான தொடக்க சான்றுகளை (prima facie evidences)  ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) அத்தகையோரை முற்றிலுமாக ஒதுக்கி, எல்லா பிராமணர்களையும் எதிரிகளாக கருதி, அரசியலை வைத்து பிழைக்க வேண்டியவர்களை முன்னிறுத்தி, ஈ.வெ.ரா மேற்கொண்ட பயணத்தில், ஆக்கபூர்வமான சமூக ஆற்றல்கள் இழப்பு எவ்வளவு ஏற்பட்டன? (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

அதையும் மீறி, 'தேசிய அரசியலில்', 'வடநாட்டு தலைவர்கள்' செல்வாக்கின் கீழ், தமிழக தலைவர்கள் செயல்பட வேண்டிய நெருக்கடியை உணர்ந்திருந்த எதார்த்தத்தில், தமிழ்நாட்டின் நலன்களைப் புரிந்து, ராஜாஜியும் அவர் சார்பு பிராமணர்களும் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரித்தது; (பொதுவாக ராஜாஜியின் 'வால்' போல, செயல்பட்ட ம.பொ.சி,  இதில், ராஜாஜியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கியிருந்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.)

விடுதலைக்குப்பின் இந்திய அரசியல் நிர்ணயசபை விவாதங்களில் சென்னை மாகாண பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள்;

மற்றும் இந்திய விடுதலைக்குப் பின், 1952 பொது தேர்தலில் காங்கிரஸ் 'பெரும்பான்மை' பலம் பெற முடியாத அளவுக்கு, பிரிவினைக்கு ஆதரவு வெளிப்பட்டது;

போன்றவற்றையெல்லாம், கணக்கில் கொண்டால், 1944இல் ஈ.வெ.ராவின் திசை திரும்பலால், ஏற்பட்ட சமூக ஆற்றல் இழப்பு எவ்வளவு? என்ற ஆய்வின் முக்கியத்துவம் புலப்படும்.

அது மட்டுமல்ல, அந்த 1944 திசை திருப்பலிலிருந்து,  1949இல் அண்ணாதுரை விலகி, பிராமண‌ர்களை தி.மு.கவில் சேர்க்கும் கொள்கை திருத்தம் செய்தது;  அதன்பின் ராஜாஜி ஆதரவுடன் தி.மு.க வளர்ந்த வேகத்தில், தி.கவானது,  இளைஞர்களை விட்டு விலகி பலகீனமானது; போன்றவையும், அந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும். 

நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்த போது, அது தொடர்பாக, ஈ.வெ.ரா என்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தார்? பின் அண்ணாதுரையின் அல்லது வேறு எவரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு, அதிலிருந்து நழுவி, 1944இல் ஒட்டு மொத்த பிராமணர்கள் அனைவரையும் எதிர்க்கும் நிலைப்பாடு மேற்கொண்டார்? 

அந்த ஆய்வுக்கு மிக முக்கிய பங்களிக்கும், ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னலை',  ஏற்கனவே பார்த்தோம்.

திரு.ஆனைமுத்து அவர்கள், "1988-இல் தனது 'சிந்தனையாளன்' இதழில், நீதிக்கட்சி காலத்தில் பெரியாரின் நிலைப்பாடுகள் பற்றி தவறான தகவல்களை வெளிப்படுத்தி, அந்நிலைப்பாடுகளைக் குறை கூறியிருந்தார். ;குடிஅரசு' இதழ்களை அடிப்படையாகக் கொண்டு, அவரின் தகவல்களும், விமரிசனமும் தவறு என்று நிரூபித்து, 'சிந்தனையாளன்' முகவரிக்கு , 'திருச்சி பெரியார் மையம்' சார்பில் விளக்கம் அனுப்பப்பட்டது. பதில் ஏதும் இல்லாத நிலையில், அதை சில நூறு படிகள் உருட்டச்சு ( அப்போது  Xerox  கிடையாது) செய்து, பெரியார் தொண்டர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றோம்.ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த பதிலும் வரவில்லை. பின் அதையே 1988 மே மாதத்தில் சில ஆயிரம் படிகள் அச்சிட்டு, ரூ 1 ந்ன்கொடை என்று விநியோகிக்கப்பட்டது. அனைத்தும் தீர்ந்து போன நிலையில், 1989 டிசம்பரில் இரண்டாவது பதிப்பாக சில ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. 'ஆனைமுத்துவுக்கே மறுப்பா' என்று வியப்புடன் அதை வாங்கிச் சென்றவர்கள் கூட, அப்புத்தகம் பற்றிய தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.


அதன்பின் அவரின் 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில், வெளியிடப்பட்ட 'கொள்கை விளக்கமும் விதி முறைகளும்' என்ற புத்தகம் எனது பார்வைக்கு வந்தது. பெரியாரியல் நோக்கில் அப்புத்தகத்தில் இருந்த குறைபாடுகளை உரிய சான்றுகளுடன் விளக்கி,அந்நூலின் மீது 'பெரியார் மையத்தின் விமர்சனம்' என்ற தலைப்பில் சிறு நூலை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு,நன்கொடை 50 காசுகள் என்று விநியோகிக்கப்பட்டது.

நான் திருச்சி பெரியார் மையத்திற்கு பங்களிப்பு வழங்கிய காலம் வரை, மேலேக் குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுக்குமே எந்த மறுப்பும் வரவில்லை.அதன்பின் மறுப்பேதும் வந்துள்ளதா என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது."

மேலேக்குறிப்பிட்ட 'சிந்தனையாளன்' கட்டுரையில், நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை ஆதரித்து, ஈ.வெ.ரா தவறு புரிந்ததாக ஐயம் எழுப்பியிருந்தது. திருச்சி பெரியார் மையத்தில், 'பெரியார் போதையில்', அதை மறுத்து விளக்கம் வெளியிட்டிருந்தோம்; ஒரு  சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்த, (நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, ஈ.வெ.ரா ஆதரித்திருந்த‌)  'சிக்னல்' அதில் வெளிப்பட்டுள்ளதை கவனிக்காமல்; திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் 1947இல் ஆதரித்திருந்த பின்னணியில். 

நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, 'ஈ.வெ.ரா ஆதரித்தது தவறு', என்ற தொனியில் 'சிந்தனையாளன்' வெளியிட்ட கட்டுரையில் இருந்தது. அது சமூக மீட்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி,  'ஈ.வெ.ரா மேற்கொண்ட சாதுர்யமான தந்திரம்' என்று, 'பெரியார் மையம்' வெளியீட்டில், ஈ.வெ.ராவை நியாயப்படுத்தியிருந்தோம். ஆனால் அது, பின்னர் 1944இல், 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பாக'  திசை திரும்பியதானது, நடைமுறையில்,  சமூக வீழ்ச்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி முடிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதன் காரணமாகவே, 'சென்னை மாகாணம்' தனிநாடாக, பிரிய இருந்த வாய்ப்பானது, சீர் குலைந்ததா? ன்ற கேள்வியை எழுப்ப, அந்த 'சிந்தனையாளன்' 'சிக்னல்' துணை புரிந்துள்ளது. எந்த நோக்கத்திற்காக ஒரு உண்மை தகவலானது, ஒரு கட்டுரையில் வெளிப்பட்டிருந்தாலும், அந்த நோக்கத்திலிருந்து, அந்த உண்மை தகவலை பிரித்து, அந்த தகவல் வெளிப்பட்ட சூழலையும், இன்றைய சிக்கலையும் கருத்தில் கொண்டு, ஆய்வதற்கு வாய்ப்புள்ளதற்கும், அந்த 'சிந்தனையாளன் சிக்னல்', ஒரு உதாரணமாகும்.

அதே போல தமிழ்மொழி, பாரம்பரியம்,பண்பாடு போன்ற சமுக ஆணிவேர்களாகிய, சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து விலகி,  ஈ.வெ.ரா பயணித்ததும், 1944க்கு முன்னும், பின்னும் என்ற கோணத்தில் ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. 

அவ்வாறு சமூக ஆற்றல் மூலங்களையும், அனைத்து பிராமணர்களையும் பகையாக மக்களுக்கு அறிவித்து பயணித்ததும், அதற்கு முரணாக திராவிட நாடு பிரிவினை கோரிக்கைக்கு ஆதரவாக,  ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை கோரி பெற்றதும், ஈ.வெ.ரா விரும்பிய திசைக்கு, எதிரான திசையில் அவர் இயக்கத்தைப் பயணிக்க செய்து, தமிழ்நாட்டில் அகத்தில் பலகீனமானவர்களின், மூளை செயல்பாட்டை (Brain processing), 'சுயநல கள்வராகும்' திசை திருப்பலுக்குள்ளாக்கி, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும், இன்றுள்ள பாதகங்களில் முடிந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது 1944 திசை திருப்பலின் மூலம், அரசியலை வைத்து பிழைக்க வேண்டியிருந்த  சிற்றினமானது,  'செல்வாக்கான தீ இனமாக' வளர்ந்த போக்கில், 'சமூக தூண்டல்' (Social Induction) எனும் சமூகவியல் வினை(Sociological Process)  மூலம், இயல்பில் பலகீனமானர்களின் மூளைகளையும், தமது மூளை போல, எனது சமுக வட்டத்தில் இயல்பில் பலகீனமானவர்களிடம் வெளிப்பட்டது போல‌, 'சிற்றினமாக' செயல்பட வைத்ததன் தொகுவிளைவுகள் தான், வெள்ள பாதிப்புகளாகவும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், சந்தன மரம் உள்ளிட்ட காடுகள் ஆகிய இயற்கை வளங்களை சூறையாடியுள்ளதாகவும், அந்த போக்கில் தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தூண்டி,  வெளிப்பட்டுள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1944இல் ஈ.வெ.ரா 'திராவிடர் கழகத்தை' துவக்கி, தவறான திசையில் பயணிக்காமல் இருந்திருந்தால், ஈ.வெ.ராவின் பயணத்தில் நீதிக்கட்சியில் இருந்த பிராமணர்களின் ஆதரவுடன், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவுகளும், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுமின்றி, (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html ) காங்கிரசில் இருந்த ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்கள் ஆதரவுடன், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை உயிராய் நேசித்த தமிழர்களின் ஆதரவுடன், பெருக்கெடுத்திருக்கும் சமூக‌ ஆற்றல் வெள்ளத்தில்; 

வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்' இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கிறது; இரண்டாம் உலகப்போரின் முடிவில், இந்தியாவை விட்டு, 'அவசரமாக' வெளியேற வேண்டிய நெருக்கடியில் பிரிட்டன் அரசு சிக்கியிருந்த சூழலில். 

தமிழ்நாட்டுக்கு பாதகமான 1944திசை திருப்பலில், கணிசமான சமூக ஆற்றல் விரயப் போக்குகள் ஆனவை,  'வீரியமாக' வளரத்தொடங்கியிருந்த சூழலில், ஈ.வெ.ரா பயணித்தபின், "நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை":
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html


1944இல் 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பு' என்ற 'திசை திருப்பல்' மூலம் முளைவிட்டு, வளர்ந்து, பின் 1949இல் 'பிராமணர்களை' ஏற்றுக் கொண்டு, ஆனாலும் 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்று 'முழங்கி', ஈ.வெ.ராவின் இணையற்ற தியாக வாழ்வால், அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்களாலும், உருவான 'சமூக ஆற்றல்களை' கபளிகரம் செய்து,  ஈ.வெ.ராவையே வீழ்த்தி,  வளர்ந்து, இப்போது உச்சத்தில் உள்ள, சமூக தூண்டல்' (Social Induction) எனும் சமூகவியல் வினை(Sociological Process)  மூலம், இயல்பில் பலகீனமானர்களின் மூளை செயல்பாட்டை(Brain processing) , சீரழிக்க காரணமான;


புறத்தில் 'பெரியார்' ஆதரவாளர்களாகவும், அகத்தில் 'சுயநல கள்வராக' சீரழிந்து, வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான' முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாகவும்', அந்த நோயைப்பரப்பும் சமூக கிருமிகளாகவும் இருப்பவர்களிடம், சுயநலநோக்கின்றி 'பெரியார் ஆதரவாளர்களாக' இருப்பவர்கள் எல்லாம், இனியும் தொடர்ந்து ஏமாறப்போகிறர்களா? அல்லது தம்மிடமுள்ள உணர்ச்சிபூர்வ போக்குகளை ஓரங்கட்டி, அறிவுபூர்வமாக ஏன், எப்படி, எவ்வாறு தவறு நடந்தது? என்று ஆய்ந்து, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கப்போகிறார்களா, வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக 'இடம்' பெறப்போவதை தடுப்பதற்காக? இனி எவ்வாறு செயல்பட்டால், மீட்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்?
 
(வளரும்)

Saturday, December 19, 2015



வெள்ள நிவாரணங்களும், நடிகர் தனுஷின் வெற்றிப்படங்களும் உணர்த்தும் 'சிக்னல்'?(2)

 

அடுத்த 'தமிழ் வேரழிப்பு'  வெள்ளம், 'தமிழ் வாசகர்களின்' எண்ணிக்கையை அழிக்குமா?

 

 கண் கெட்ட பின் 'சூரிய நமஸ்காரம்' செய்யப்போகிறோமா?


"உலக அளவில் இலக்கிய சாதனைகள் எல்லாம், சமூகத்துடனும், இயற்கையுடனும், 'சுயலாப நோக்கற்ற உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்'(Passions),'பாதுகாப்பு வளையச் சிறையில்' சிக்காமல், பயணித்தபோது வெளிப்பட்டவையே ஆகும்." என்பதுடன், "தமிழ் இலக்கியமானது, 'ஆமை' போல் ஏன் பின்தங்கியது?" என்ற கேள்வியையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

தகவல் தொழில் நுட்பம், வியாபரம் உள்ளிட்டு 'அதிக வருமானம்' உள்ள துறைகளில் இருந்தவர்களும், 'அரசியல், தரகு, திருட்டு, ஊழல்' உள்ளிட்டு பல‌ 'குறுக்குவழி' பணக்காரர்களும் ஆகிய இரண்டு பிரிவினரும், சென்னையில் 'அதிவேகமாகும் வளரும் முதலீடு' என்று கணக்கிட்டு, சென்னையில் வீடுகள் வாங்கியவர்கள் எல்லாம், இன்று 'வெள்ள பாதிப்பு அதிர்ச்சியில்' உறைந்துள்ளார்கள். உலகை பாதித்துவரும் 'பருவ மாற்றங்களில்' வெள்ள அபாயாத்தில் மீண்டும், மீண்டும் சிக்க உள்ள நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
' If climate change is indeed the culprit, then the Chennai floods should come as a severe warning to authorities since there could be many more such episodes in the near future across the country.'
'Southern India could continue to experience higher than normal rainfall and this could cause further flooding due to El Nino, a phenomena which sparks global weather extremes, according to a United Nations report.'

சென்னையில் இனி வீடுகள் வாங்கப்போகும் 'புத்திசாலிகளின்' எண்ணிக்கையானது, அதிவேகமாக குறைந்தால், வியப்பில்லை. ( Ganesan says, “No, not anywhere in Chennai..”; http://www.thehindubusinessline.com/portfolio/people/lessons-from-chennai-floods-why-home-buyers-should-know-geography/article7983497.ece )

மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவினரில் யார்? யார்?, முந்தைய பதிவில் வெளிப்பட்டிருந்தவாறு , தனுஷ் நடித்த படங்களில் வெளிப்பட்ட செயல்நுட்பத்தில் ஒன்றுபட்டவர்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

சென்னையில் , குறிப்பாக கடந்த 10 வருடங்களில், வீடு வாங்கியவர்களில் யார்?யார்?
'உணவு, உடை, நாகரிகம், மொழி உள்ளிட்டு. நமது பாரம்பரியத்திடமிருந்தும், இயற்கையிலிருந்தும்  விலகி, 'சமூகம் எக்கேடு கெட்டால் என்ன?' என்று 'தெளிவாக', 'நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக' வாழ்ந்து, 'பணம் சம்பாதித்து', வீடு வாங்கியவர்கள் ?
 
அத்தகைய குடிமக்கள் (citizens) 'அதிவேகமாக' அதிகரித்து வரும் , தமிழ்நாட்டில், ஊழலற்ற, நேர்மையான, சமூக அக்கறையுள்ள அரசு வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் நேர்மை இருக்கிறதா? அவ்வாறு வாழ்ந்து கொண்டு, சென்னை வெள்ள பாதிப்பிற்குப் பின்னும் திருந்த மறுக்கும் 'சமூக கிருமிகளை', நமது சமூக வட்டத்திலிருந்து வெறுத்து ஒதுக்காமல், 'அத்தகைய அரசு வேண்டும்' என்று நாமும் எதிர்பார்ப்பதில் நேர்மை இருக்கிறதா?

முந்தைய பதிவில் உள்ள,  'மாமா டிரவுசர் கழண்டுச்சு' ('சூது கவ்வும்') திரைப்படப்பாடலை செயல் மூலம் 'இசைக்கச்செய்த', இளம் நடிகர்களும், சாதி, மத பேதமின்றி சேவை செய்த இளைஞர்களும், மீட்சிக்கான திசையைக் காட்டி விட்டார்கள். நமக்கு வேண்டிய 'சமூக கிருமிகளை' விட்டு விலகி, நாம் பயணிக்க போகிறோமா? அல்லது மீண்டும், மீண்டும் வெவ்வேறு வகைகளிலான வெள்ள பாதிப்புகளில் சிக்க போகிறோமா?

 " தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருவதும், 'யாரை/எதை ஏணியாகப் பயன்படுத்தி , போட்டி போட்டு 'மேலான மேற்கத்திய நாகரிக' வாழ்வு வாழ்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாக" வாழ்பவர்கள் அதிகரிப்பதும்; (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
"தமிழ் இலக்கியமானது, 'ஆமை' போல் ஏன் பின்தங்கியது?" என்ற கேள்விக்கு பதிலாகாதா? அதாவது, வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்திய மூல காரணங்களே, இதற்கும் காரணம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியுமா?

'புலமையும், புலமையாளர்களும் விரயம் (waste) ' என்று ஒதுக்கி, 'பெரியார் தந்த புத்தியில்' 'சுயநலக்கள்வர்களாக' வளர்ந்து, நேர்மையாகவும், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்ந்து வந்தவர்களையும், திசை திருப்பும் 'மோசமான‌ முன்மாதிரிகள்' (Bad Role Model) வளர்ந்து வரும் தமிழ்நாட்டில், புலமையானது ஆமை போல பின்தங்க, எஞ்சிய புலமையாளர்களில், வாய்ப்புள்ளவர்கள் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் குடிபெயர மாட்டார்களா? அந்த 'மோசமான முன்மாதிரிகளை', தனிமைப்படுத்தி ஒதுக்காமல், தமிழ்நாட்டில் உள்ளார்ந்த ஈடுபாடுகளின்(Passions), புலமையின் வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா?

திருவனந்தபுரத்தில்,  மலையாள மொழிச் சூழலில் வளர்ந்து, தமிழ் இலக்கியத் துறையில் சாதித்த, எழுத்தாளர் ஆ.மாதவன், தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தால், அந்த சாதனை வெளிப்பட்டிருக்குமா?

தமிழ்நாட்டில், மேற்குறிப்பிட்ட 'வாழ்வியல் நோயில்' கிராமங்களும் சிக்கி, 2வயது முதல் ஆங்கில வழி விளையாட்டுப்பள்ளியில் சேர்க்கும் நோயானது, நம்பமுடியாத 'அதி வேகத்தில்' வளர்ந்து வருகிறது. அதனால் 'மூடப்பட்டு வரும்' அரசு தமிழ்வழிப் பள்ளிகள் போக, எஞ்சியுள்ள பள்ளிகளிலும், தத்தம் அரசு வேலைகளைக் காப்பாற்றிக்கொள்ள, என்னென்ன 'தில்லுமுல்லு' வழிகளில், 'போலி மாணவர்கள்' படிக்கிறார்கள்? என்பது வியப்பூட்டும் ஆய்வாக அமையலாம். 

தமது குடும்பப்பிளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் தமது மேடைப்பேச்சில், எழுத்தில் 'தமிழ்வழி' ஆதரவாளர்களாகவும், 'தாய்த்தமிழ்க்கல்வி' புரவலர்களாகவும், இருப்பதானது, அந்நோய் எதிர்ப்பு முயற்சிகளுக்கு கேடாக தொடர்கிறது; "ஓம்புள்ளை மட்டும் இங்கிலீஸ்ல படிச்சு உருப்படுணும். ஏம்புள்ளை  தமிழ்ல படிச்சு வீணாகுணுமா?" என்று கேட்பதால்.

தமிழ்நாட்டில் இன்று "ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், தமிழையும் ஒரு பாடமாகப் படித்தாலும், தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்கத் தெரியாது. பேருந்துகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழில் இருப்பதைப் படிக்க முடியும்.

ஆனால் இம்மாணவர்களில் பெரும்பாலோர் தமது கல்வி, தாம் பயன்படுத்தும் 'டிஜிட்டல்' கருவிகள்(digital devices), வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள், கிரிக்கெட் போன்றவற்றில்  'லேடஸ்ட்'(latest)  தகவல்களை, நுனிவிரலில் வைத்து அசத்துகிறார்கள்.

தமிழ்வழிக் கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக' வளரும் இது போன்ற மாணவர்களில், தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப் பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும் அரிதாகி வருகிறது."

தமிழ்நாட்டில் தினசரி மற்றும் வார பத்திரிக்கைகளை கடைகளில் காசு கொடுத்து வாங்குபவர்கள் யார்? அப்பத்திரிக்கைகளை படிப்பவர்கள் யார்? 

விளையாட்டுப்பள்ளி முதல் தொடர்ந்து ஆங்கிலவழியிலேயே படிக்கும் மாணவர்களில், இன்று +2/கல்லூரி மாணவர்களில்,  தமிழில் படிக்க தெரிந்தவர்கள் எத்தனை பேர்?

கடந்த சில வருடங்களாக, இயன்ற வரையில், மிகுந்த கவலையுடன், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளை பெற்று, ஆராய்ந்து வருகிறேன்.

இன்று சுமார் 50 வயதைத் தாண்டியவர்கள் எல்லாம்,  காலஓட்டத்தில் , இந்த உலகை விட்டு மறையும் போது, தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை 'வேகமாக' குறைந்து;

இன்று +2/கல்லூரி படிக்கும் மாணவர்கள் எல்லாம், வேலைக்குப்போய், திருமணமாகி வாழ்வில் 'செட்டில்' ஆகும்போது;

இன்னும் சுமார் 10 முதல் 15 வருடங்களுக்குள், தமிழ்நாட்டில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையானது, 'அகல பாதாளத்தில்' வீழும்; தமிழ் வாசகர்களை வீழ்த்தும் 'வெள்ளமானது', 'சுனாமி' போல, தாக்கினால், வியப்பில்லை.

தமிழ்நாட்டில், இன்று ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாமல், 'கொச்சை ஆங்கிலம்' பேசும் 'ஆங்கிலோ-இந்தியர்களை' நான் பார்க்கிறேன். அது போல, தமிழில் எழுத, படிக்க தெரியாத, தமிழும், ஆங்கிலமும் கலந்த 'கொச்சைத்தமிழில்‍ - 'தமிங்கிலீசில்' - மட்டுமே பேசத் தெரிந்த‌ மாணவர்கள், தமிழ்நாட்டில், நமது குடும்பங்களில் அதிவேகமாக வளர்ந்து வருகிறார்கள். 

அவர்களுக்கெல்லாம் 'தாய்மொழிவழி அடிப்படைக்கல்வி'யில்லாததால், 'புலன் திறன் மூளை வளர்ச்சியில்'(Cognitive Skills related brain development) குறைந்து, வளர்ந்து வருகிறார்கள்; தமது வாழ்வில் சாதிக்க வேண்டியதை விட, குறைவாகவே சாதித்து.

(தாய்மொழிவழிக்கல்வி  குறித்த உலகளாவிய ஆய்வுத்தகவல்கள் கொண்ட அரிய நூல்: 'மொழிச்சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்: கல்வி, அறிவு, அறிவியல் மற்றும் ஆங்கிலம் பயிவதற்குத் தாய்மொழியே திறவுகோல்' ஆங்கிலத்தில் ஜோகாசிங்; தமிழில் கண.குறிஞ்சி (94433 07681) புதுமலர் பதிப்பகம், ஈரோடு )
 

சென்னையில் வெள்ளம் பாதித்தபின் தான், ஏன் வீடு வாங்கினோம்? என்று கவலைப்படுபவர்களை இன்று பார்க்கிறோம்? 'திரிந்த மேற்கத்திய' மோகத்தில், தமிழ் வேரற்ற,  நுகர்வெறி (Consumer thirst) மிருகங்களாக,  நமது குழந்தைகள் வளர்ந்து, அவர்களிடம் நாம் பெறப்போகும் 'பரிசுகள்', வெளியில் சொல்லமுடியாத, இழிவான துன்பங்களாக தாக்கப்போகிறது' என்ப‌தற்கான அறிகுறிகள், இப்போதே வெளிப்பட தொடங்கிவிட்டன. 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' செய்யப்போகிறோமா? தமிழ் வேரற்ற (பிராமணர் - பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி) தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடாக வேண்டுமா? அந்த வெள்ள அபாயத்தைத் தவிர்க்க, தாய்மொழிவழிக்கல்விக்கு புத்துயிர் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் 'முனைப்புடன்' செயல்படத்துவங்கியுள்ளது.( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) இனியும் 'பெரியார்' ஆதரவாளர்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால், 'பெரியார்' சமூக கிருமிகளோடு, பதர்களும், மணிகளும் வேறுபாடின்றி, அந்த 'தமிழ் வேரழிப்பு வெள்ளத்தில்' ஒன்றாக அடித்து செல்லப்படுவதை தவிர்க்க முடியுமா? தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளோடு, புலமை விழ்ச்சியோடு தமிழ்வேரழிப்பு வெள்ள  பாதிப்புகளுக்கும், 'பெரியார்' மூலம் உருவான 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாகவே, அவரின் (அவர் வழியில் என் போன்ற எண்ணற்றவர்களின்) சுயநலம் பாரா உழைப்பும் தியாகமும் பயன்பட்டதாக, முடிய வேண்டுமா?
http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html