Sunday, January 22, 2017

                                       1938  -  1965  -   2017


எச்சரிக்கை:
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு டிவிட்டரில் கூறியுள்ளது:" அவசர சட்டம், தமிழக சட்டசபையில் சட்டமாக உருமாறும்போது, அது நிரந்தர சட்டமாகிவிடும். அநேகமாக விரைவிலேயே அதை அரசு செய்யப்போகிறது. எனவே பிரச்சினையில்லை" என கூறியுள்ளார். (http://www.newindianexpress.com/cities/chennai/2017/jan/22/apprehensions-of-jallikattu-agitators-unfounded-katju-1562344.html ) இது சரி என்றால், போராட்டம் தொடர்வது, தவறாகாதா? 10 ஆண்டுகளாக சொந்த செலவில் சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ராஜசேகர், தமிழக முதல்வருக்கு சட்ட ஆலோசனை வழங்கவும், 4 துறை அமைச்சர்களை சந்திக்கும் குழுவிலும் இடம்பெற்றுள்ள நிலையிலும், ஆளாளுக்கு 'எது நிரந்தர சட்டம்?' என்று குழப்பி வருவது சரியா? ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டு போராட்டத்தை தூண்டியவர்கள் தெளிவுபடுத்தி, போராட்டத்தை நெறிப்படுத்துவது, அவர்களின் சமூக கடமையாகாதா? 

தவறினால், அக்குழப்பம் சட்டம் ஒழுங்கு சிக்கலாகி, தடியடி, துப்பாக்கி சூடு என்று பல உயிர்களை 'காவு' வாங்கினால், பலியாக போவது குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளே, 1965 போல, தற்போது 1938 வழியில் நடைபெற்று வரும் போராட்டமானது திசை மாறினால்.
ஆதியின் சரியான எச்சரிக்கை: https://www.facebook.com/hiphoptamizha/?hc_ref=SEARCH
'The Godfather'  ( https://en.wikipedia.org/wiki/The_Godfather_(novel)மற்றும் 'The Aquitaine Progression' (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression ) ஆங்கில நாவல்களை படித்தவர்களால், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில், முதல்வரையும், பிரதமரையும்,இழிவுபடுத்திய, போராட்டத்தில் 'ஊடுருவிய'  'சுயநல சக்திகள்' பற்றியும், 'பீட்டா' அமைப்பின் சர்வதேச சூழ்ச்சி பற்றியும் (http://www.nathanwinograd.com/?cat=10 ), அந்த 'சூழ்ச்சிக‌ள்' தெரியாமல், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில்,  'நிதானம்' தவறி, 'உளறியவர்கள்' பற்றியும், விளங்கிக் கொள்ள முடியும். 10 வருடங்களுக்கு மேலாக போராடி வரும் போராட்டக் குழுவின் விளக்கத்தை ஏற்காமல் (https://www.youtube.com/watch?v=TpNSc32jLew ) ; வன்முறைகளுக்கு இடம் கொடுத்து, மறுநாள் 'நீதியரசர் ஹரி பரந்தாமன் ஜல்லிக்கட்டு சட்டம் பற்றி விளக்கிக் கூறியதை அடுத்து மாணவர்கள் மெரினா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.'(http://tamil.thehindu.com/tamilnadu/) என்பதும் கவனிக்கத்தக்கதாகும்; 1965 திசை திருப்பல் முயற்சியானது, முளையிலேயே, நல்ல வேளையாக ஒரு நாளிலேயே முடிவுக்கு வந்ததும். 

                                            -----------------

'ஜல்லிக் கட்டு' போராட்டத்தில், 'திராவிட' கட்சிகளும், அந்த கட்சிகளின் 'வால்களாக' பயணித்த 'தேசிய' கட்சிகளும், தமிழ்நாட்டில் 'அந்நியமாகியுள்ளதானது', உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் கேடுகளில் முடிந்த, காந்தியின் 'அகிம்சை' வழியிலிருந்து மாறுபட்டு, உலக வரலாற்றிலேயே முதல் முறையாகவா? என்ற கேள்வி எழும் வகையிலும்;

ஊழல் அரசியலில், கட்சித் தலைவரின் காலில் விழும் அவமரியாதை முதல்வர்கள், அமைச்சர்களின் பங்களிப்பால், இந்திய அளவிலும், உலக அளவிலும், ஈடு இணையற்ற தலைக்குனிவுக்கு உள்ளாகி, 'அவமரியாதை நாடா, தமிழ்நாடு?' என்ற கேள்வி அரங்கேறி வந்துள்ள சூழலில்;

கட்சிகளையும், தலைவர்களையும் ஓரங்கட்டி;

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, அந்த அவமரியாதையிலிருந்து, தமிழ்நாட்டை மீட்கும் வகையில், 'மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டமானது, அரங்கேறிவருகிறது.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஈ.வெ.ராவை அவமதித்து, பொதுச் சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில், அண்ணாவும், ராஜாஜியும் தூண்டி, நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான திசையில், தமிழ்நாடு பயணித்து, சீரழிவின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது.  

‘1944க்கு முன்  ‘பெரியார்’ தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன?சமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு,காந்தி காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.’ (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த 'ஜல்லிக்கட்டு மீட்சி' போராட்டமானது, 1965 போராட்டத்திற்கு எதிரான திசையில், 1938ஐ நோக்கி, 1938 போராட்ட திசையில், அதனையும் விஞ்சி, சாதனை படைத்துள்ளது.
(‘Not expecting support from any organisation nor political parties has been the hallmark of the demonstrations led predominantly by students and young working professionals, demanding revocation of ban on jallikattu.  In the same way, they have steadfastly remained independent in arranging food, water and cleaning the leftovers at Marina.’; http://www.newindianexpress.com/cities/chennai/2017/jan/20/jallikattu-agitators-in-chennai-continue-to-be-self-reliant-for-food-water-1561514.html )

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பயணித்த திசையிலிருந்து, 1944இல் 'ஆரியர் - திராவிடர்' மோதல் அறிமுகத்தோடு, திசை திரும்பி பயணித்தன் விளைவே, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதும்;

அந்த திசையில் தமிழ்நாடு பயணித்த போக்கில், காலனிய சூழ்ச்சியின் அடுத்த கட்ட தொடர்ச்சியாக, வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்களின் ஒத்துழைப்போடு, அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட 'பீட்டா' அமைப்பும் (http://www.nathanwinograd.com/?cat=10  )  வளர்ந்து, சூழ்ச்சி வலையில் ஜல்லிக்கட்டை ஒழித்ததானது;

தமிழ்நாட்டின் அழிவு திசை பயணத்திற்கு எதிரான சமூக ஆற்றல்கள் எல்லாம், சென்னை வெள்ள நிவாரணத்தை குவியப் புள்ளியாக்கி, வெளியாகி, அந்த புதிய சமூக செயல்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக‌, 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பையும் 'குவியப் புள்ளியாக்கி, வெற்றி நோக்கி பயணிக்கும் சமூக செயல்நுட்பத்தை நான் கண்டுபிடித்து, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

‘மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும்.’(http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html )

ஊழல் அரசியலில் தமிழ்நாடு பயணித்ததால் விளைந்த காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சினைகளில், உச்சநீதிமன்ற ஆணைகளும் செல்லாக்காசாகி வரும் சூழலில்;

அதே ஊழல் அரசியல் காரணமாகவும், மேற்கத்திய ஆதிக்கத்தில்  'ஆரிய - திராவிட' பிரிவினை சூழ்ச்சியில், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவைக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும், தமிழரின் அடையாளத்திற்கு ஆபத்தாக கருத்தப்பட்ட சூழலில்;

'மாணவர்களின், இளைஞர்களின், 'சமூக உளவியலில்' அதிகரித்து வந்துள்ள 'அவமரியாதைக்கு' எதிரான 'சுயமரியாதை' 'தீயானது',

கிராமம், விவசாயம், பண்பாடு, சுயமரியாதை, வீரம் உள்ளிட்ட பல பரிமாணங்களை உள்ளடக்கிய‌ 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பானது', அந்த‌ 'சுயமரியாதை தீ' வெளிப்படுவதற்கு வாய்ப்பானது;

எனவே மாணவர்களை, இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் கல்விக் கொள்ளை திசைக்கும் எதிராக பயணிக்கும் அறிகுறிகளுடன், அது அரங்கேறியுள்ளது.

மேலே குறிப்பிட்ட சமூக செயல் நுட்பத்தை, ஓரளவு அடையாளம் கண்டு, ''இந்திய இளைஞர்களுக்கு வழி காட்டும் தமிழ் எழுச்சி' (‘Tamil spring awaits India's youth’) என்ற தலைப்பிலான, கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது. 

‘How much of our history and past, our culture and spirituality, our identity and authenticity as a people, shall we pawn for the glitter and titillations of modernity? Should we sever our roots to be transplanted into the global village? Can material gains compensate for all that we are robbed of in the process? Is modern culture all sanity and our native cultures a domain only of embarrassment? Shouldn’t we critique the seed of cultural inferiority our colonial masters planted in our collective consciousness and muster up the courage to look at the warts on the faces of the western cultural monolith? How come, as Krishnamachari Srikkanth asked, boxing is not cruelty and Jallikattu is?


வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex), வெற்றிகரமாக விதைத்த காலனிய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி; ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்' ; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

தமிழில்   ஏற்கனவே வழக்கில் இருந்த 'இனம்', 'சாதி' ஆகிய சொற்களின் பொருளை திரித்து,  'ஆரிய - திராவிட' பார்வையில், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை கெடுதலாக சித்தரித்து பயணித்த போக்கில்,  (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

தமது கடந்த கால வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், ஆன்மீகம், தனித்துவமான அடையாளம் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'உலகமயமாதலின்' மூலமாக செயல்படும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு எதிராக, ஆக்கபூர்வ சுயமரியாதை மீட்சி திசையில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' என்பதை குவியப் புள்ளியாகக் கொண்டு, படித்த இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் முன்னணி வகிக்க, கிளர்ந்தெழுந்துள்ளது; ஜல்லிக்கட்டு காளையைப் போலவே;

'ஆரிய - திராவிட' காலனிய சூழ்ச்சியையும் அவமரியாதை போக்கின் கவசமாக ஒதுங்கச் செய்து. (http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html  ) 

அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வமாக 'பெரியார் கொள்கையில்' இனியும் பயணிப்பதானது, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் தமிழர் சுயமரியாதை மீட்சி நோக்கில், 'ஜல்லிக்கட்டு' எதிர்ப்பில் வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும், உள்ளாகும் எதிர்க்குவியமாகும் ஆபத்தில், 'பெரியாரை' சிக்க வைத்து விடும்; தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு பற்றிய அவரின் தவறான நிலைப்பாடுகள் காரணமாக.

' ‘பெரியாரின்’  முழு பொதுவாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி, 'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.' (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

குறிப்பு:

1. ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவை மட்டுமே குற்றம் சொல்லும் சொந்தங்களுக்கு...,’ 

2. 'நண்பர்களே
தற்போது மெரினாவில் மைக் பிடித்த நண்பர்கள் முதல்வரை வாடா போடா என்று ஒருமையில் பேசி வருகின்றனர் 

கூட்டம் கூடிவிட்டதால் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாமா நண்பர்களே
இந்த போராட்டமே அம்மாவோ ஐயாவோ இருந்திருந்தால் நடைபெற்றிருக்குமா 
காவல்துறை உதவியில்லாமல் நடைபெற்றிருக்குமா

சிந்தியுங்கள்'
https://www.facebook.com/gauthaman.br

Thursday, January 19, 2017

                    ‘துக்ளக்’கும், சசிகலா நடராஜனும்


'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணியில் நடராஜன்


“நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் (சசிகலா) நடராஜன்.

மேலே குறிப்பிட்ட செய்தியில், ஜெயலலிதாவிற்கு தனது மனைவி சசிகலாவும், தானும், தனது குடும்பத்தினரும் எந்த அளவுக்கு பக்கபலமாக இருந்து 'தொண்டு' செய்தோம், என்பதை பட்டியலிட்டு;

 அதன் தொடர்ச்சியாக, சசிகலா தொடர்பாக;

"இன்று அவர் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். வெட்கமாக இல்லையா, என அவர்களை கேட்கிறேன். இந்த விஷமத்தை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன்" என்று சூளுரைத்துள்ளார்.

'சசிகலா ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார்' என்பது விஷமமான தகவல் என்றும், அதை சுயலாப உள்நோக்கத்துடன், சில 'விஷமிகள்' பரப்பி வருகிறார்கள், என்ற நடராஜனின் கூற்றை ஏற்றுக் கொண்டாலும்;

'அந்த விஷமமான' தகவலானது தமிழ்நாடெங்கும், குறிப்பாக கிராமப்புறங்களில், 'காட்டுத்தீ'  போன்று ஏன் பரவி வருகிறது?

இன்றைக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு, ஜெயலலிதா சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;

'அந்த சதி' பற்றிய நடராஜனின் விளக்கம் மூலமாகவே,  'காட்டுத்தீ' போல பரவி வரும்,  'அந்த வதந்தியை' முறியடிக்க முடியும்;

என்ற பொதுமக்களின் கருத்துருவாக்கம்  (Public Opinion Formation)  பற்றிய சமூக செயல்நுட்பம்' நடராஜனுக்கோ, அல்லது அவரின் ஆலோசகர்களுக்கோ தெரியாதா?

‘பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion Formation) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம், 'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக் கவ்வுவார்கள், என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.’ என்பதையும்;

'நேற்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள, இன்று எதற்காக சசிகலா காலில் விழுகிறார்கள்? நாளை எவர் காலில் விழுவார்கள்? தமது சொந்த, பந்தங்கள் மதிப்பதற்கு, பணம் சம்பாதிக்கஇப்படி அவமரியாதையாக வாழ வேண்டுமா? இப்படி வாழ்பவர்களை மதிக்கும், அவர்களின் சொந்த பந்தங்களின் யோக்கியதையும் இப்படித்தானா? நமது யோக்கியதையும், நமது சொந்த பந்தங்களின் யோக்கியதையும் அதே போக்கில் தான் உள்ளதா? என்ற கேள்வியை மனசாட்சியுடன் எழுப்பி, விடைகள் கண்டு, உரிய திருத்தங்களுடன் பயணிக்கவில்லையென்றால், நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

1925இல் .வெ.ரா அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் பலனா, இவையெல்லாம்? என்று சசிகலா மட்டுமல்ல, அவரை ஆதரிக்கும் தி. தலைவர் கி.வீரமணி மட்டுமல்ல;

ஆட்சிக்கனவில் மிதக்கும் அனைத்து கட்சிகளும், தலைவர்களும் விடைகள் கண்டு, சுதாரிக்க வில்லையென்றால்:

விஜயகாந்த் சந்தித்துள்ள விளைவினை விட, இன்னும் மோசமான விளைவுகளையே சந்திப்பார்கள்? ' என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம்
(http://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html )

'அந்த சதி' பற்றிய நடராஜனின் விளக்கம், ஏற்கனவே வெளிவந்துள்ளதா

என்று இணையத்தில் தேடியபோது, கீழ்வரும் காணொளி கிடைத்தது.

'பட்டுப்புடவையை இரவல் கொடுத்த மாதிரி', தமிழகம் என்ற 'பட்டுப் புடவையை' ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு, அந்த பட்டுப் புடவைக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது, என்று தான் ஜெயலலிதாவை கவனமுடன் பார்த்து வந்துள்ளதாகவும்;

"இனி அப்படி இருக்க மாட்டேன்" என்றும்;

"அரசியலில் வெளிப்படையாக வா என்று அவர் (ஜெயலலிதா) அழைத்திருக்கிறார். அவரது நடவடிக்கை (நடராஜனை சிறையிலடைத்தது) மூலம் அழைத்திருக்கிறார். அதை ஏற்று அரசியலில் வெளிப்படையாக, நான் வருவேன்." என்பது உள்ளிட்டு, இன்னும் பல 'வியப்பூட்டும்' தகவல்களை எல்லாம், மேலே குறிப்பிட்ட பேட்டியில் நடராஜன் வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது "மத்தியில் இனி கூட்டாட்சி தான். தனித்து எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று நடராஜன் கணித்து, சசிகலாவுடன் உள்ள தனது "உறவு உடைந்தது உடைந்தது தான்' என்று தெரிவித்து, சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் உறவு விரிந்ததற்கு துக்ளக் சோவே காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=_hARl0Vgo4M )

அவ்வாறு அரசியலில் வெளிப்படையாக பயணித்து வந்த நடராஜன்;

நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்என்று துவக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதானது, அரசியல் நகைச்சுவை ஆகாதா

அரசியல் அரங்கில் இது போன்ற நகைச்சுவைகளை வழங்கி, 'துக்ளக்' சோவிற்கு துணை புரிந்து வந்தவர் தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆவார். ஆனால் அந்த நகைச்சுவையை தன் மீதான தனி மனித தாக்குதலாக, அவர் கருதாமல், தனிப்பட்ட முறையில் சோ வுடன் நட்பு பாராட்டினார்.

அதே போல, ஜெயலலிதாவை அரசியலில் ஆதரித்து வந்த சோ, 1996 பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடிக்கவும் பங்களித்தார், பகிரங்கமாகவே. அதற்காக ஜெயலலிதாவும் சோவை வெறுக்கவில்லை.

அது மட்டுமல்ல, 'சசிகலா' தமிழக அரசின் செயல்பாடுகளில் 'சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக' இருப்பது தவறு என்பதையும் பகிரங்கமாக  'துக்ளக்' சோ  வெளிப்படுத்தியிருக்கிறார். (https://www.youtube.com/watch?v=J-voqvypEyI

துக்ளக் சோவும் சரி, இப்போது துக்ளக் இதழின் ஆசிரியராக உள்ள குருமூர்த்தியும் சரி, தங்களின் சொத்து, சுகத்திற்காக பொதுவாழ்வில் இருக்கிறார்கள், என்று அவர்களால் எதிர்க்கப்பட்ட எவரு‌ம் கூடகுற்றம் சுமத்தியதில்லை. பொது அரங்கில் துணிச்சலுடன் விவாதத்தை சந்திக்க துக்ளக் சோவும், குருமூர்த்தியும்  தயங்கியதில்லை.

பா.ஜ.கவை பகிரங்கமாக ஆதரித்து கொண்டே, அக்கட்சியின் குறைகளையும், மோடி ஆட்சியின் நிலைப்பாடுகளில் உள்ள தவறுகளையும் 'பகிரங்கமாக' சுட்டிக்காட்டி வந்தவர்கள், துக்ளக் சோவும், குருமூர்த்தியும், ஆவர். குருமூர்த்தி சார்ந்துள்ள 'சுதேசி இயக்கம்', மோடி அரசை ஆதரிக்க வேண்டியவைகளில் ஆதரித்தும், எதிர்க்க வேண்டியவைகளை பகிரங்கமாக எதிர்த்தும், செயல்படும் இயக்கமாகும். 1967க்குப் பின், திராவிட கட்சிகளில் சோ, குருமூர்த்தி போன்றவர்கள், ஆதரவாளர்களாக‌ இருந்திருந்தால், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் போன்ற நோய்களில், அக்கட்சிகள் சிக்கியிருக்குமா? பா.ஜ.க போன்று, திராவிடக் கட்சிகளில், அவர்களை 'சகித்துக்' கொள்வார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவை ஆகும்.

குருமூர்த்தி 'பொது அரங்கில் பகிரங்கமாக ஊழல் குற்றம் சுமத்தி, விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்த போது, அவ்வாறு விவாதிக்காமல் பின்வாங்கியவர்கள் வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் .சிதம்பரம் (http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3341680/Gurumurthy-takes-jibe-former-finance-minister-Chidambaram-16-business-premises-raided-tax-officials.html ) , தயாநிதி மாறன் (http://www.thehindu.com/news/national/tamil-nadu/gurumurthy-challenges-dayanidhi-maran-to-debate-on-bsnl-exchange-scam/article6815547.ece ) உள்ளிட்ட பலர் அடங்குபவர்.

சசிகலாவை துக்ளக் சோ எதிர்த்த அதே நோக்கில், துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தியும், சசிகலாவின் குடும்ப அரசியலை எதிர்த்து, தொடர்ந்து துக்ளக்கில் எழுதி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே துக்ளக் ஆண்டு விழாவில் பேசினார்.

அதை மறுத்து, சசிகலாவோ, அல்லது ஒரு இதழின் ஆசிரியராக இருக்கும் நடராஜனோ பத்திரிக்கைகளில் எழுதினாலோ, மேடைகளில் பேசினாலோ, அந்த குடும்ப அரசியல் சரியா? தவறா? என்பது பொது மக்களுக்கு தெளிவாகும்.

தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதியோ, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோ, தம்மை பகிரங்கமாக எதிர்த்த, துக்ளக் சோவை, 'மறைந்திருந்து' தாக்குவதாக சொல்லவில்லை, என்பதை கவனத்தில் கொள்ளாமல்;

தனது இதழ் சார்பாக கூட்டம் போட்டு, குருமூர்த்தியின் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை மறுத்திருக்கும்;

அல்லது தனது இதழில் தலையங்கம் மூலமோ, கட்டுரைகள் மூலமோ மறுத்திருக்கும்;

வாய்ப்புகளை நடராஜன் நாடாமல்;

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை "தைரியம் இருந்தா வெளியில வா. ஏன் மறைந்திருந்து தாக்குற?", என்று நடராஜன் குற்றம் சுமத்தினால்;

அது 'வின்னர்' திரைப்பட வடிவேல் பாணியில், காமெடி ஆகாதா

அந்த 'காமெடி வசனத்தில் ஆரிய திராவிட கருத்து' இடம் பெற்றதற்கு, தி.க. தலைவர் கி.வீரமணி மூலகாரணமா? 
(http://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html )

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், சுப்பிரமணியசுவாமிக்கு ஏன் 'இசட்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது?  என்று எவரும் கேட்கவில்லை

பயங்கரவாதத்தையும், ஊழலையும் எதிர்த்து போராடி வருபவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்களில் இருந்து, அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த அடிப்படையிலேயே சுப்பிரமணிய சுவாமி, குருமூர்த்தி, போன்றஇன்னும் பலருக்கு அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

சுப்பிரமணிய சுவாமி, குருமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் எவர் சொத்தையும் அச்சுறுத்தி மிரட்டி வாங்கவில்லை; கொலை செய்யவில்லை. அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம், வெளியில் செல்லும்போது, தமக்கான சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வர்.

மேலே குறிப்பிட்ட பின்னணியில், 'குருமூர்த்திக்கு ஏன் பாதுகாப்பு?' என்று நடராஜன் வினா எழுப்புவதும் நகைச்சுவை ஆகாதா?

சென்னையில் சட்ட விரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட இணைப்பகம் செயல்பட்டது தொடர்பானசி.பி. வழக்கில் சிக்கிய தயாநிதி மாறன்", " ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளரை" திருப்தி செய்வதற்காக சி.பி.அய் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதானது, ‘திராவிட சந்தர்ப்பவாதத்தின் உச்சமா? என்பதை ஏற்கனவே பார்த்தோம்
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.htm )

ஆனால் தயாநிதி மாறன் கூட, நடராஜனைப் போல, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை "தைரியம் இருந்தா வெளியில வா. ஏன் மறைந்திருந்து தாக்குற?", என்று மீடியா வெளிச்சத்தில் பேசவில்லை

ஏனெனில், அப்படி பேசினால், அது 'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணி நகைச்சுவை ஆகிவிடும்  என்று தயாநிதி மாறனுக்கும் தெரியும்; . சிதம்பரத்திற்கும் தெரியும். ( https://www.youtube.com/watch?v=i3Cuk0rck18

'வின்னர்' திரைப்பட வடிவேலு நகைச்சுவையை விட, உலகப் புகழ் பெற்ற நகைச்சுவையை, நிகழ்கால தமிழக அரசியல் சூழலில் கையாண்டுள்ளார், எழுத்தாளர் வாஸந்தி. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes

‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;

ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம்.

ஆனால் சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

பா.ஜ.க உள்ளிட்ட தேசிய, திராவிட கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோராமல், ஒதுங்கியுள்ள சூழலில்; 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்; 

சசிகலாவிற்கு எதிரான சமூக ஆற்றல்களின் ஒரே குவியப் புள்ளியாக;

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவும், தமிழ்நாட்டு 'அறிவு ஜீவிகளை' பார்த்து, 'அந்த சிறுவன் கை கொட்டி சிரிக்கும்' ஒலியே ஆகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html

குறிப்பு:


1.    .பி.எஸ் முதல்வராக இருந்த போது, பொது அரங்கில், 'மீடியா வெளிச்சத்தில்' தமிழக முதல்வரை ஜெயலலிதா அவமதித்ததில்லை; காரணம் அதன் விளைவுகள் தம்மை எந்த அளவுக்கு பாதிக்கும்? என்று 1996 தேர்தல் தோல்வியானது அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது.

ஆனால் சசிகலா, தமிழக முதல்வரை மட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளின் மாண்புகளை எந்த அளவுக்கு அவமதித்து நடந்து வருகிறார்? என்பதை;

''சின்னத்தனம்', சுயமரியாதை இழப்பு' என்ற தலைப்பில், துக்ளக்'( 26.01.2017) தலையங்கம் விளக்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்;

'சின்னம்மா, சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா..' என்று "இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது."; ( http://tamil.oneindia.com/news/tamilnadu/a-young-woman-protest-at-jallikattu-protest-marina-beach-going-viral-272260.html )

2.   சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை எல்லாம் 'தாமதமான' வால்களாக்கி;

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவியபோக்கு என்பது;

தமிழ்நாட்டின் மீட்சியின் தொடக்க அறிகுறி என்பது தொடர்பான‌,  எனது பதிவுகளை படித்து வந்துள்ளவர்களுக்கு,  'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் என்பது,  எவ்வாறு அதன் தொடர்ச்சியே ஆகும்? என்பதும் விளங்கும்.

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை (structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html