Wednesday, January 21, 2015



தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்' (2)


”இந்தியாவில் மோடியைப் பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன்  செயல்படத் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன”. என்பது தொடர்பாக‌ (refer post Dt. December 30, 2014;’ தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’’) 

இங்கு தனிப்பெரும்பான்மை என்பதுதான் முக்கிய காரணி . மோடி அதற்கப்புறம்தான்.”

என்ற கருத்தை, பெரியார் ஆதரவாளர் எனக்குத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை வெற்றி பெறுவதற்கு மோடி முக்கிய காரணியா? இல்லையா? என்பது ஒரு கேள்வி.

அடுத்து,"உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன”." என்பதற்கு "இங்கு தனிப்பெரும்பான்மை என்பதுதான் முக்கிய காரணி ", மோடி முக்கிய காரணி அல்ல என்பது தொடர்பாக, இந்த பதிவில் பார்ப்போம்.

ஊழலில் மோசமான நாடுகளின் தரவரிசையில் கடந்த வருடம் 94ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த வருடம் 85 ஆவதாக சற்று உயர்ந்துள்ளது.
 “India has showed some improvement in addressing corruption this year, ranking 85th among 175 countries as against 94th last year, graft watchdog Transparency International India (TII)”
http://timesofindia.indiatimes.com/india/Indias-ranking-on-global-corruption-index-improves/articleshow/45358144.cms)

குஜராத் முதல்வராக மோடி ஆட்சி செய்த போது, அவரை 'மரண வியாபாரி' (Merchant of Death) என்று கடுஞ்சொற்களால் கண்டித்த சோனியா உள்ளிட்டு, எந்த எதிர்க்கட்சிகளும் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தவில்லை. அந்த பின்னணியுள்ள மோடி, இந்திய பிரதமரானபின், ஊழலுக்கு இடமில்லாமல் ஆட்சியைத் தொடங்கியதும், மத்திய அரசு செயலாளர்கள் முந்தைய ஆட்சிகளில் பணிக்கு தாமதமாக வந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஊழலுக்கும் தாமதத்திற்கும் கோப்புகள் உள்ளாகாமல், உரிய நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு வெளிவருவதைப் பிரதமர் அலுவலகம் கண்காணிப்பது போன்ற காரணங்களால், உலக ஊழல் நாடுகள் தரவரிசையில், இந்தியாவின் தரநிலையானது ஊழல் குறைவில் சற்று முன்னேறியுள்ளதா? ஏற்கனவே மத்திய அரசில் தனிப்பெரும்பான்மை ஆட்சிகள் இருந்த போது இம்முன்னேற்றம் நடந்ததா? போன்ற கேள்விகளுக்கு, விருப்பு வெறுப்பில்லாமல், திறந்த மனதுடன் விடைகளைத் தேடினால் தான் உண்மை தெரியவரும்.

அடுத்து  உலக வர்த்தக அமைப்பு WTO என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? கடந்த ஆட்சியில், 2013 டிசம்பரில், பாலியில் இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தம் காரணமாக, பொது விநியோக ரேசன் பயனாளிகளுக்கும், விவசாயம் உள்ளிட்டு அரசின் உதவிகளுக்கும் என்ன ஆபத்து நேர இருந்தது? (http://scroll.in/article/671157/Why-India-is-right-to-back-out-of-WTO%E2%80%99s-landmark-Bali-package)

உலக வர்த்தக அமைப்பின் WTO வரலாற்றில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு முதல் முறையாக அதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு, 2015 சூலையில் மோடி ஆட்சியில், அந்த உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் மூலம், சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில், இந்தியாவின் நிலை எவ்வாறு பலகீனத்திலிருந்து பலமாக மாறியது? இந்தியாவில் உள்ள ஏழைகளும், விவசாயிகளும் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்?
(“India had plunged the WTO into the deepest crisis in its 20-year history in July by vetoing a deal on streamlined customs rules due to a lack of progress on its demands to be allowed to stockpile food without observing the usual WTO rules on agricultural subsidies.” http://in.reuters.com/article/2014/11/13/india-trade-wto-idINKCN0IX08N20141113:  “India has made its stance clear that it will not easily give in to pressure from the Western world over trade protocols of the World Trade Organisation, as was also discussed during the talks in Bali in December 2013. India fears that agreeing to the trade facilitation agreement (TFA) could compromise its own food security.” http://www.dnaindia.com/money/report-why-is-india-not-agreeing-to-the-wto-trade-facilitation-agreement-2005181)

என்ற கேள்விகளை எழுப்பி பெரியார் கட்சிகளும், தமிழ்/திராவிடக் கட்சிகளும் விவாதித்தார்களா? அல்லது திராவிட ஆட்சிகளின் பலனால் விளைந்த தமிழ்வழி மரணப்பயணத்தை விட, ஐ.நா உள்ளிட்ட பொது அரங்கில் ராஜபட்சேயைக் காப்பாற்றிய சீனாவைக் கண்டிக்காமல், ராஜபட்சேயை எதிர்ப்பதில்(?) ஆர்வம் காட்டியது போல, அது போன்ற, 'உணர்வுபூர்வ' போராட்டங்களில், இது போன்ற கேள்விகள் முக்கியத்துவம் இழந்தனவா?

மேலேக் குறிப்பிட்ட பின்னணியில்,

.”இந்தியாவில் மோடியைப் பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன்  செயல்படத் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன”. என்பது தொடர்பாக‌ (refer post Dt. December 30, 2014;’ தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’’)  

இங்கு தனிப்பெரும்பான்மை என்பதுதான் முக்கிய காரணி . மோடி அதற்கப்புறம்தான்.

என்ற கருத்தை பெரியார் ஆதரவாளர் தெரிவித்துள்ளது சரியா? என்ற கேள்விக்கு, பெரியார் கட்சிகளிலும், தமிழ்/திராவிடக் கட்சிகளிலும் உள்ளவர்கள் , அவரவர், தமது மனசாட்சிக்குட்பட்டு, அறிவுநேர்மையுடன் பதிலைப் பெறுவார்கள் என்பது சரி தானே.

Friday, January 16, 2015



 மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?(1)



“ மோடிக்கு முன்பு இருந்தவர்களின் 'தன்மை(!)' மோடியை நல்லவராகக் காட்டுகின்றது என்ற அடிப்படையில் வரவேற்கத் தக்கது; ஆனால் ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?” என்று நான் சந்தித்த கேள்வி தொடர்பாக;

சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றல்(energy) இருப்பதையும், அந்தந்த நபரின் மனத்தில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) பொறுத்து, தனது தேவைகள், தான் சார்ந்துள்ள குடும்பம், நட்பு, கட்சி, பொது நலன் உள்ளிட்டவைக்கு, அவரின் மனதில் உள்ள முக்கியத்துவ தரஏணி வரிசையில்(hierarchical) , அவருடைய ஆற்றல் விசைகளாக (forces) வெளிப்படும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.  (’ சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds) ‘; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html
 
சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying) போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும்,பிரச்சினைகளிலும் செயலாற்றும் விசைகளின் ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட, தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics) எவ்வாறு விசைகள் பிணைப்புகள்(Bonds)  உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர் மட்டங்களில்,  தொகு விசைகளாக (Resultant Forces)  செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில் , மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான,  வெவ்வேறு, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில், வெவ்வேறு  தொகு விசைகளாக செயல்படுகின்றன.

ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.

உதாரணமாக 1967‍இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, அதற்கான ஆளுமை தனக்கில்லை என்பதை அறிந்து, தான் தனது புற்று நோயால் விரைவில் மரணமடைய விரும்புவதாக, தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததை, அவர் தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்குப் பின்னர், முதல்வரான கலைஞர் கருணாநிதி, பெரியார்,அண்ணாவின் பிறந்த நாட்களை விட, தனது பிறந்த நாளுக்கு, அரசு செல்வாக்கினைப் பயன்படுத்தி, ‘அதீத முக்கியத்துவம்’ கொடுத்தது, தனது நலன், தனது குடும்ப நலன்களையே பிரதானமாகக் கொண்டு ஆட்சி செய்தது போன்ற திசையில் பயணித்தார். அந்த திசையில் அவர் இன்றுவரை'வெற்றிகரமாக', தி.மு.க தலைவராக பயணித்து வருவதற்காக, அவர் கட்சிக்குள்ளும், தமது சமூக வட்டத்திலும், பயன்படுத்திய செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

“தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.” 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

அவ்வாறு சமூகம் சீரழிவுப் பாதையில் பயணிக்கும் போது, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான ஓட்டுநர்களாக தேவைப்படும்,  'தகுதி, திறமைகள்' பற்றி ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html   ) 

தமிழ்நாட்டில் அந்த சீரழிவுப் போக்கில் சிக்காமல் தனி நபராக வாழ்வது என்பது, அதிலும் மேல்நடுத்தர, வசதியில் உயர்ந்த சமூக மட்டங்களில் , இழிவான சமரசங்கள் இன்றி, வாழ்வது என்பது, எவ்வளவு பெரிய சவால் என்பது, தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கே தெரியும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அதை முழுமையாக விளங்கிக் கொள்வது சிரமம் என்பது என் கருத்து.
(http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

இந்திரா காந்தி, கலைஞர் கருணாநிதி போல, மோடி தன்னை வழிபடுவதை ஊக்குவிக்காமல், காக்கைக் கூட்டங்களையும் ஊக்குவிக்காமல், தனிமனித பலகீனங்களுக்கு அரசு செல்வாக்கைப் பயன்படுத்த எவருக்கும் துணிச்சல் இல்லாத அளவுக்கு, செயலளவில் தம்மை நிரூபிப்பவர்களை ஊக்கப்படுத்தி, மத்திய அரசு அலுவலகங்களில் ஊழலைக் குறைத்தும், உயர் அதிகாரிகள் தாமதமாகப் பணிக்கு வருவதைக் குறைத்தும், அது போல பல முன்னேற்றங்களை செயல்படுத்தி வருகிறார்.

திராவிடக் கட்சி ஆட்சிகளில் "அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து'கள் ஏற்படுத்திய விளைவுகளில், தமிழ்நாடு அடைந்துள்ள பல வகையான பாதிப்புகளை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கமற்றவர்கள், 'வெள்ளத்தில் மூழ்கியவர்களை'க் காப்பாற்றுவதில் வெளிப்படுத்தும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

ஏற்கனவே இந்திய அளவில் நோயில் சிக்கிய அமைப்புகளில், ஊழலுக்கும், சாதி, மத பாரபட்சத்திற்கும் இடமில்லாத‌ , நோய் எதிர்ப்பு போக்கை செயலளவில் ஊக்கப்படுத்தி வரும் மோடியின் செயல்பாடுகளின் வெற்றிகள் காரணமாக, அடுத்து, அடுத்து, அரியானா, மகராஷ்டிரம், காஷ்மீர் என்று தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிகளை ஈட்டி வருகிறது. 

அந்த‌ மோடி அலையில் கூட, தமிழ்நாடு தப்பிக்குமா? என்று நான் சந்தேகப்படும் அளவுக்கு தமிழ்நாட்டு பா.ஜ.க இருப்பதையும் பதிவு செய்துள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html)  

அந்த பதிவின் கடைசி பாராக்கள் (கீழே) மீண்டும் நினைவுகூறத்தக்கதாகும்.

“தமிழ்நாட்டில் தினமும் ஆங்கங்கே அடிப்படை வசதிகளுக்காகவும், மோசடி பேர்வழிகளுக்கு எதிராகவும் மக்கள் தாமே போராடி வருவதிலிருந்து, ஒதுங்கி நின்று, 'குறுக்கு வழிகளில்', மற்ற கட்சிகளின் ' ஆதாயத் தலைவர்கள்/தொண்டர்களை' தம் பக்கம் இழுத்து, பயணித்து ஆட்சியைப் பிடிப்பது இனி நடக்க வாய்ப்பில்லை; பா.ஜ.கவாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், என்பதும் என் கணிப்பாகும்.

இந்துத்வாவிற்குள்ளும், வெளியிலும் உள்ள மோடி எதிர்ப்பு சக்திகள் ஒன்றுக்கொன்று உதவியாக செயல்பட்டு, பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பை பலகீனமாக்கி வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/

ஊழல் மூலம் சொத்து சேர்க்க அவசியமில்லாதவர்களும், ஊழல் பசியில்லாதவர்களும், பொது நலனில் உண்மையாக அக்கறை உள்ளவர்களும் அதிக அளவில் பா.ஜ.கவில் சேரும் போது, திராவிடக் கட்சித் தலைவர்கள் பாணியில் உணர்வு பூர்வ பேச்சுக்கள் வெளிப்படுவதையும்,  ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள் அறிமுகப்படுத்திய பொது அசிங்கங்களையும், தவிர்த்து, குஜராத்தில் குஜராத் மொழி, மாநில நலன்களை மோடி பேணிய வழியில், தமிழ் மொழி, தமிழ்நாட்டின் நலன்களுக்காக செயல்படும்போது, அரியானா வழியில் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமைவது சாத்தியமே. ஆனால் தமிழக பா.ஜ.கவானது, 'திராவிட கட்சிகளின்' பாணியில் பயணிக்கும் வரை, அதற்கு சாத்தியமில்லை.

Note: மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா? (2); https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html

 

Wednesday, January 14, 2015



   நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்'(1)



தமிழ்நாடு அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தில் சிக்கி, திருப்பு முனையில் இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த திருப்புமுனை தொடர்பான 'சிகனல்கள்' (signals)  அரசியல் மட்டுமின்றி, இசை உள்ளிட்ட கலைத்துறை படைப்புகளிலும் வெளிப்படும்.( குறிப்பு கீழே) அதில் இசைத்துறையில் வெளிப்படும் 'சிக்னல்களை' இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன் வந்து, உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் 'கொலை வெறி' பாடலாகும்.இந்திய திரை வரலாற்றில் அந்த அளவுக்கு ஒரு பாடல் உலகைக் கலக்கியது கிடையாது. (The popularity of the song was also reported by international media like BBC and Time magazine, who attributed its major crossover world appeal to its universal theme, catchy tune and unique lyrics.Top business schools like Indian Institutes of Management conducted studies to figure out the popularity of this song; http://en.wikipedia.org/wiki/Why_This_Kolaveri_Di)

அதற்கு என்ன காரணம் என்பது பற்றிய, சமூக கறுப்பு வெள்ளை பார்வைக்குறைபாடு நோயில்(Social Colour Blindness)  சிக்காத
( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ), 
எனது ஆராய்ச்சியில்,  இதுவரை வெளிப்பட்டதை இங்கு பதிவு செய்கிறேன்.

பொதுவாக இன்றைய திரைப்படப் பாடல்களில் எழுத்துக்களும் சொற்களும் எளிதில் விளங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுவதாகும்.

"பாடலில் வரும் எழுத்தின் ஒலியானது கீழ்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தான், பாடகரால் சுருதி சுத்தமாக பாட முடியும்.

 1. பாடலில் வரும் எழுத்தின் ஒலி,  பாடலில் அந்த எழுத்துக்கான சுரத்தில் சுருதி சுத்தமாகப் (accurate pitch) பொருந்த வேண்டும்.

2. பாடலில் அந்த எழுத்து ஒலிக்கும் நேரம் (பாடலுக்கான இசைக் குறியீட்டில் உள்ள அடசர காலம் – beat duration of the musical note ) பாடகரின் வாயினுள் அந்த எழுத்தை ஒலிக்கத் தேவைப்படும் செயல்நுட்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்." என்பதையும்,

"இளையராஜா வருகைக்கு முந்தைய திரைப்பாடல்களில் அந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகாத பாடல்கள் அரிது. இளையராஜாவிற்கும் வைரமுத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு,  அந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகாத பாடல்களை வைரமுத்து எழுதி, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்களாக‌ திருத்த மறுத்தாரா என்பதும் ஆய்விற்குரியது." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.('பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைர‌முத்துக்குத் தெரியாதா?’; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )

'கொலை வெறி பாடலில்' உள்ள ஆங்கிலச் சொற்களும், தமிழ்ச் சொற்களும் தெளிவாக புரியும் வகையில், மேலேக் குறிப்பிட்ட இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகியுள்ளன.

அடுத்து அந்த பாடல் உலக அளவில் கலக்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த பாடலில் இடம் பெற்ற சுர அமைப்புகள்(music note structures)  இசை அழகியலில்(Musical aesthetics)  சிறப்பிடம் பெற்றவை என்பதை, எனது அடுத்த கட்ட ஆய்வுகளில் உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.  

' மாலையிட்ட மங்கை'  திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் வரிகளை, இன்றும் கல்லூரி மாணவர்கள் பாட கேட்டிருக்கிறேன். 

அந்த பாடலின் முதல் வரியை,
'செந்தமிழ் செந்தமிழ் செந்தமிழ் தேன்மொழியாள்' 

என்று அதே சுர அமைப்பில் சற்று மாற்றி பாடி,

'வை திஸ் வை திஸ் வை திஸ் கொலைவெறிடி' என்பதுடன் ஒப்பிடலாம், என்ற கருத்தும் வெளிவந்துள்ளதும், ஆராய்ச்சிக்குரியதாகும்.


அதே போல் அவற்றை வெளிப்படுத்திய கருவி இசையும், வாய்ப்பாட்டும் அதற்கு எவ்வாறு வலிவு சேர்த்தன என்பதையும் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.


இசைக்கான இலக்கண நெறிமுறைக்ளை மீறி, ஆட்சி அதிகார எதிர்ப்பு (anti-establishment)  போக்கில் வெளிப்பட்ட பாடல் இதுவாகும். அவ்வாறு வெளிப்படும் இசை உள்ளிட்ட கலைகளில், இசைப்பதர்களின் ஊடே இசை மணிகள் இருப்பதையும், இப்பாடல் வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஆட்சி அதிகார எதிர்ப்பு கலகப் போக்கில்,  பதர்களின் ஊடே, மணிகளான மனிதர்கள் இருக்கும் வாய்ப்பையும் இதன் மூலம் பெறலாம். பதர்களிலிருந்து மணிகளான மனிதர்கள் பிரியும் சமூக தளவிளைவுப் போக்கே (Social polarization)  அடுத்த கட்ட வளர்ச்சி/மீட்சி போக்காக அமையும்.

அதே போல, அப்பாடலில் இடம் பெற்ற ஆங்கில மற்றும் தமிழ்ச் சொற்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் 'வெண்மை' உள்ளிட்ட மேல்த்தட்டு மேற்கத்திய மோகத்தினைக் கிண்டல் செய்தும், தமிழ்நாட்டில் கீழ்த்தட்டில் உள்ள இளைஞர்களின் மனநிலையில்  , வெவ்வேறு வகையிலான ஏக்கங்களுடன் வாழும், மேல்த்தட்டு உள்ளிட்ட‌ , அனைத்து மட்ட மக்களும், குறிப்பாக இளைஞர்களும் இருப்பதைப் படம் பிடித்து காட்டுவது தொடர்பாக, மேலும் ஆய்வு செய்ய வேண்டிய பாடல் இதுவாகும். அது மட்டுமல்ல, அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பாடலில் வாய்ப்பாட்டிற்கும், கருவி இசைக்குமான சுர அமைப்புகள் நன்கு பொருந்தியதும், இப்பாடலின் உலக வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும். 

ஆங்கிலவழிக்கல்வி, மக்களிடமிருந்து அந்நியமாகி பயணிக்கும் 'தனித்தமிழ்' முயற்சிகள் உள்ளிட்ட பல காரணங்களால், தமிழ் மொழியானது, தனது தகவல் பரிமாற்ற வலிமையை, தமிழும் ஆங்கிலமும் கலந்த 'தமிங்கிலீசில்', 'அதிவேகமாக' இழந்து வருகிறது.   தகவல் பரிமாற்றம்(communication)  கோணத்தில், தமிழின் மரணப்பயணம் குறித்து வெளிப்பட்டுள்ள அபாய அறிவிப்பாக, இப்பாடலின் வெற்றி அமைந்துள்ளது.
http://tamilsdirection.blogspot.com/2014_09_01_archive.html


உலகமயமாதலில் ஆங்கிலம் கலந்த மொழியின் தகவல் பரிமாற்ற வலிமையின் ஆதிக்கத்தையும் இப்பாடல் வெளிப்படுத்தியதானது, அதே வழியில் தமிழுக்குப் பதிலாக பிற மொழிச் சொற்களை சேர்த்து, தாம் விரும்பிய கிண்டலை வெளிப்படுத்த, பல மொழிகளில் இப்பாடல் வெளிவந்து, உலகைக் கலக்குவதற்கும் காரணமானது.

இப்பாடல் உருவாக்கத்தில், முக்கிய பங்கு வகித்த நடிகர் தனுஸ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்  ஆகியோருக்கு, இப்பாடலின் வெற்றிக்கான மேலேக் குறிப்பிட்ட காரணங்கள் தெரியாமல் இருந்தால் வியப்பில்லை. இது தொடர்பாக, எனது கீழ்வரும் அனுபவம் கூடுதல் வெளிச்சம் தரலாம்.

1960களின் பிற்பகுதியில், நான் கல்லூரியில் இயற்பியலில்(Physics) ஒலியியல்(Acoustics)  படித்த போது, 'லிசஜோ' படங்கள்(Lissajous Figures)  பற்றிய பாடம் என்னை மிகவும் ஈர்த்தது. அதில் திடப் பொருளில் ஒலி அதிர்வுகள் பயணம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளுடன், அந்த திடப்பொருளின் பண்பு கொண்டிருந்த உறவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்போது கிராமத்திற்கு சென்றிருந்த போது, ஒரு கேணியை ஆழப்படுத்த, அதிலிருந்து அகற்றிய பெரிய பாறைகள் தரை மேல் இருந்தன. அங்கிருந்த, படிப்பறிவற்ற, பணியாள் தனது உளியால், அந்த பாறையைத் தட்டி, ஒலி மூலம் ஆய்ந்து, பின் இலாவகமாக அப்பாறையின் மேல், குறிப்பிட்ட இடங்களில் உளியை வைத்து, ஓங்கி பெரும் சுத்தியல் கொண்டு அடித்த போது, அந்த பாறை, நான்கு சம பாகங்களாக சேதமின்றி பிளவு பட்டது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆனது. அதற்கான இயற்பியல் - ஒலியியல் காரணங்களை, நான் சொன்னாலும், அதைச் செய்தவருக்கு விளங்காது. 

ஆட்சி அதிகார எதிர்ப்பு(anti-establishment)  போக்கில், செவ்விசை செல்வாக்கு இழந்து, பல வகையான மாற்று இசைகள் அந்தந்த கட்ட போக்குகளில் வளர்ந்து, படைப்பாற்றால்(creativity) பாதாளத்தில் உள்ள நிலை அடைந்து விட்டது. இனி அடுத்த கட்ட புதிய இசைக்கான காலம் கனிந்து வருகிறது என்பதை லண்டனில் இருந்து வெளிவரும் 'கார்டியன்'(Guardian)  இதழில் மார்ட்டின் கெட்டில்(Martin Kettle) என்ற எழுத்தாளர் கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

“The popular music that once filled the place it vacated seems in turn to have largely burned itself out. Here, too, creativity is at its lowest ebb since the early 50s. The space awaiting good new music of any kind is immense.”- Guardian, February 1, 2005

'கொலை வெறி'ப் பாடலானது, தமிழ்நாட்டில் அந்த புதிய இசை தோன்றுவதற்கான சிக்னல் ஆகும் என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 'சூது கவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஜிகிர் தண்டா', 'கோலிசோடா' போன்ற படித்த இளைஞர்கள் இயக்கி, வியாபார ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தொடர்பான எனது ஆய்வும், அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சாதாரண மக்களிடமிருந்தும், அவர்கள் சந்தித்துவரும் 'வெட்கக்கேடான' அடிப்படை வசதியின்மை, மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்தும் தொடர்பற்று, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில் பயணிக்கும் கட்சிகள் அடையாளம் தெரியாமல் உதிரும் காலம் நெருங்கி வருகிறது. தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீளும் காலம் அதிக தொலைவில் இல்லை.

குறிப்பு : ஒரு ஊரின் 'கோத்திரத்தை' அந்த ஊரில் உள்ள இசையின் மூலம் ஆய்ந்தறியலாம் என்பதை 'நாலடியார்' கீழ்வரும் வரிகளில் விளக்கியுள்ளது.

'பணிவுஇல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்.'
நாலடியார் 25:2

சீர் என்பது ஒரு பாடலின் சுர இசை, தாளம் உள்ளிட்ட இசை அழகியல் கூறுகளை உள்ளடக்கிய ஒரு இசை முக்கியத்துவம் வாய்ந்த சுர உள் அமைப்பு ( musically significant sub-structure)  ஆகும்.( ‘Musical Sounding of the Letters and the Syllables (11); A Measuring Device to weigh chIr, the Musical Linguistic Sub-Structure’
http://musictholkappiam.blogspot.com/2013/04/normal-0-false-false-false.html )

திருக்குறள்(118) கூறும் 'சமன் செய்து சீர் தூக்கும் கோல்' என்பது இசையில் 'சீரை நிறுக்கும்'  கோல் என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. (http://musicresearchlibrary.net/omeka/items/show/2448)

'கோத்திரம்' என்ற சொல், ஒரு மனிதரின் அல்லது ஊரின் பரம்பரைப் பின்னணியில் இன்றுள்ள பண்பை வெளிப்படுத்தும் சமூகவியல் முக்கியத்துவம் உள்ள சொல்லாகும்.திராவிட மனநோயாளித்தனத்தில் நல்ல‌ 'கோத்திரம்' சிதைந்து, 'கள்வர்' (திருக்குறள் 813) கோத்திரத்தில் தமிழர்கள் அதிகரித்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html) 'மாத்திரை' என்பது பாடலுக்கான இலக்கணத்திற்குட்பட்டு 'சீர்' ஒலிக்க வேண்டிய கால அளவாகும்.

எனவே இன்றைய இசை பற்றிய எனது ஆய்வு, தமிழ்நாட்டில் உள்ள 'சீர்' குலைவுகளையும், அதிலிருந்து மீளும் வாய்ப்புள்ள 'சிக்னல்களையும்', பற்றிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.