Wednesday, September 21, 2016

Can the ancient Tamil word ‘paRiah’ be rescued from the misuse in the western world?


The employment of the Tamil word ‘paRiah’ in the following text attracted my attention, in the light of my discoveries related to the origin of the ‘untouchablity’ in music in Tamilnadu, India.

“A decade later, Dawkins played the role of interpreter for an even broader audience. Average effects became selfish genes and individuals became lumbering robots controlled by their genes. Group selection became a pariah concept, taught only as an example of how not to think.”
‘RICHARD DAWKINS IS WRONG ABOUT RELIGION’- by David Sloan Wilson

Why did David Sloan Wilson chose the word ‘pariah’ to communicate the negative dimension of ‘Group selection’? Could he have used the term ‘Negro’, that was “associated it with the long history of slavery, segregation, and discrimination that treated African Americans as second class citizens, or worse” (Smith, Tom W. (1992) "Changing racial labels: from 'Colored' to 'Negro' to 'Black' to 'African American'." Public Opinion Quarterly 56(4):496–514) without objection?

Unlike the word ‘Negro’, introduced by  the Spanish and Portuguese (https://en.wikipedia.org/wiki/Negro) ;

the Tamil word ‘paRiah’ was found in the ancient Tamil texts to mean those who could play a ‘group’ of a kind of percussion instruments; and was designated as the ‘group’ eligible to be identified as the ‘citizens’ of the society. (புறநானூறு 335:  7 -  8: puRanhAnURu 335: 7-8).

How did the word ‘paRiah’ originally meaning a respectable ‘group’ of the citizens, acquire the negative dimension? 

Under what social mechanism, it entered into the ‘group’ of the western world, ‘influencing’ even the reputed writers, who had stopped using the word ‘Negro’, to use the word ‘pariah’ in their writings? 

Worse, how did that social mechanism, influence even the ‘western’ science, to ‘absorb’ the word ‘pariah’ into Mathematics ( ‘In the area of modern algebra known as group theory, the term pariah was introduced by Griess (1982) to refer to the six sporadic simple groups that are not subquotients of the monster group.’- https://en.wikipedia.org/wiki/Pariah_group)?

My research w.r.t the ‘untouchability’ dimension of the ancient Tamil percussion instrument ‘paRai’, had identified the ’colonial mischief’ , as the probable origin of the ‘untouchability’ in music. (http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

The present caste identity system, with ‘paRai’ and ‘paRaiah’ as the ‘untouchables’, was introduced during the colony rule, as explained below.

"colonialism in India produced new forms of civil society which have been represented as traditional forms; chief among these is caste itself.................
colonialism seems to have created much of what is now accepted as Indian "tradition," including an autonomous caste structure with the Brahman clearly and unambiguously at the head, village based systems of exchange, .  isolated ceremonial residues of the old regime state, and fetishistic competition for ritual goods that no longer played a vital role in the political system."
'THE INVENTION OF CASTE: CIVIL SOCIETY IN COLONIAL INDIA'
Nicholas B. Dirks (1988)

The role played by the British administration in the evolution of the caste system, was also explained in the following evidence.

"the permeability of caste groups and the ability of castes and caste associations to react and adapt their caste identity in the relatively short term to their environment. Moreover, it clearly points to the role played by the British administration in the evolution of the caste system."
'British law and caste identity manipulation in colonial
India: the Punjab Alienation of Land Act.' by Guilhem Cassan (2009)

Highly respected ancient percussion instruments grouped as ‘parai’, & ‘citizen group’ called ‘paRiah’, had undergone ‘degradation as the untouchables’, during the colony rule. Worse, even after the Indian independence, and in spite of evidences of their 'respectable' status during the period of the ancient Tamil texts, the Western world not only continued to misuse the word ‘pariah’ in their writings, but also dared to ‘absorb’ the word into Mathematics.

In the concluding part of his article, David Sloan Wilson had noted down the following.

“Toward the end of The God Delusion, Dawkins waxes poetic about the open-mindedness of science compared to the closed-mindedness of religion. He describes the heart-warming example of a scientist who changed his long-held beliefs on the basis of a single lecture, rushing up to his former opponent in front of everyone and declaring “Sir! I have been wrong all these years!”

The western world  “have been wrong all these years!” w.r.t the employment of the Tamil word ‘pariah’ in their writings.

Will David Sloan Wilson take the lead to end the misuse of the Tamil word ‘pariah’ in the western world?

Did the ‘dalit groups’, in India, object to the above unpardonable misuse of the word ‘pariah’ in the western world? If so, what social mechanism prevented the ‘due’ success of their efforts?

Hope David Sloan Wilson, in his research, will consider the ‘group-level adaptation’ of the ‘mischievous negative’ meaning of the Tamil word ‘pariah’ in the western world, in spite of the opposition from the ‘pariah’ group in Tamilnadu to the negative employment of the word.

Will the Indian govt take the necessary steps to rescue the Tamil word ‘pariah’ from the ‘Group Theory’ in Modern Algebra of Mathematics?


Sunday, September 18, 2016

பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்;


தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?     

வீழ்ந்து வருகிறார்களா?      


'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டு, திராவிடக் கட்சிகள் 1967இல் ஆட்சியை பிடித்து, ஆண்டதன் தொகுவிளைவாக, தமிழ்நாடானது, இந்தியாவில் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
( “தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. “ – ‘பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!’ பிரவீண் சக்ரவர்த்தி- விவேக் தேஹேஜியா; http://tamil.thehindu.com/opinion/columns/ )

இன்று வடக்கிலிருக்கும் ஏழைகள் எல்லாம், வேலைக்காக, தெற்கில் இருக்கும் தமிழ்நாட்டை நோக்கி,  'படையெடுத்து வரும்' விபரீதம் அரங்கேறிவரும் அளவுக்கு, தமிழ்நாடு பணக்கார மாநிலமாகி வருகிறது.

“தமிழ்நாட்டில்  கட்டிட வேலைகளுக்கும், மொத்த வியாபாரக்கடைகளில் மூட்டை தூக்கும் வேலைகளுக்கும், கிராமங்களில் விவசாய வேலைகளுக்கும், வட நாட்டிலிருந்து 'தரகர்கள்' மூலம் வருவிக்கும் பணியாட்கள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலை செய்து, தமிழர்கள் உடலுழைப்புத் துறையில் 'பதராகும்' போக்கை வளர்த்து வருகிறர்கள். இந்த 'பதராகும்' போக்கின் ஊடே,   தமிழ்நாட்டில் தமிழர்களில் பலர் , எல்லா வகையான தரகுப் பணிகளிலும் 'நிபுணர்களா'க  செல்வம், செல்வாக்குடன் வளர்ந்து வள‌ர்கிறார்கள்.”; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html

தமிழ்நாட்டில் வசதியில், வாய்ப்புகளில், சொத்துகளை வாங்கி குவிப்பதில், யார் முன்னணியில் இருக்கிறார்கள்? என்ற ஆய்வின் மூலமே, தமிழர்கள் தமிழ்நாட்டில் 'வளர்ந்து' வருகிறர்களா? 'வீழ்ந்து' வருகிறார்களா? தமிழ்நாடு 'பணக்கார'(?) நாடாகி வருவதற்கு காரணமான 'சமூக செயல்நுட்பத்தில்'(?), தமிழர்கள் சீரழிந்து, இயற்கை வளங்களும் சீரழிந்து, தமிழ்வழிக் கல்வியும் (என‌வே தமிழும்) மரணப்படுக்கையில் உள்ளனவா? என்பது தெளிவாகும்.

சுமார் 5 வருடங்களுக்கு முன், திருச்சி காட்டூர் அருகே, புதிதாக உருவாகி இருந்த ஒரு பகுதிக்கு, துக்கம் விசாரிக்க, ஒரு தமிழர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பெரிய பெரிய வீடுகள் இருந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே தமிழரின் வீடுகள் ஆகும். பெரும்பாலான வீடுகள் வடநாட்டினரின் வீடுகளாக இருந்தன.

சுமார் 7 வருடங்களுக்கு முன், வாடகைக் காரில், எனது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து ஏலகிரி மலைக்கு சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் இருந்த நிலங்களில் பெரும்பாலானவற்றை வடநாட்டு பணக்காரர்கள் வாங்கி விட்டதாக, ஓட்டுநர் தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களுக்கு முன், நான் பேராசிரியராக வேலை பார்த்து வந்த நகரத்தில், நான் கேள்விப்பட்ட தகவலானது, எனக்கு மறக்க முடியாததானது.

அந்த நகரத்தில் அதுவரை நடந்த எந்த போராட்டத்திலும், ஒரு வடநாட்டுக்காரரின் கடையானது, சிறு கல்வீச்சுக்கு கூட உள்ளானது இல்லை. அந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் 'ரவுடிகள்' முக்கிய புள்ளிகளுக்கு, கொடுக்க வேண்டியதை கொடுத்து, அந்த வடநாட்டுக்காரர், எந்த பாதிப்புமின்றி வியாபாரத்தில் நன்கு 'வளர்ந்து' வருகிறார்.

திராவிட ஆளுங்கட்சித் தலைவர்களில் யார்? யார்? தமிழர்களையும், தமது கட்சிக்காரர்களையும் 'பதர்' போல‌ இரண்டாம் தரத்தினராக நடத்தி, தம்மை தேடி வரும் வடநாட்டு/வெளிநாட்டு முதலாளிகளையும், வடநாட்டு கட்சிகளைச் சார்ந்தவர்களையும், வாசல் வரை வந்து வழியனுப்புபவர்கள்? அந்த தலைவர்களின் 'எடுபிடிகளான பெரியார் சமூக கிருமிகள்' யார்? யார்? என்பது அந்தந்த கட்சிகளில் மேல் மட்டங்களில் உள்ளவர்களுக்கு தெரியும்; மீடியா வெளிச்சத்திற்கு வராமல்.

தமிழ்நாட்டில் விவரமானவர்களுக்கு பொருள் ரீதியிலும், ஏமாந்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வ ரீதியிலும் 'தீனி' போட்டு, தொண்டர்களை 'வளர்த்து', அவ்வப்போது 'பொது பிரச்சினைகளை' வைத்து, போராடி வரும் 'வாழ்வியல் புத்திசாலி(?) தலைவர்கள்' எல்லாம், வருமானம் ஈட்ட, பல பல புதிய வழிகள் உருவாகி வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இவை போன்றவற்றில்,  விபரமுள்ள மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம், மேற்குறிப்பிட்ட போக்கினை உறுதி செய்யும் தகவல்களே, எனக்கு கிடைத்து வருகின்றன.

தமிழ்நாடு பணக்கார மாநிலமாக வளர்ந்து வரும் போக்கில், 'பணக்காரர்களாக' ஒப்பீட்டளவில்,  பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் 'அதிவேகமாக' வளர்ந்து வருவதற்கு, கிழ்வரும் சமூக செயல்நுட்பமானது காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அகத்தில் ஒழுக்க நெறிகள் ஏதுமின்றி, புறத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம், மனசாட்சியின்றி, தனது செல்வம், செல்வாக்கு உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தும் மனித மிருகங்கள் எல்லாம், 'சிற்றினம்' ஆக, சங்க இலக்கியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அகத்தில் கட்டுப்பாடுகள் அற்ற, சிற்றின மனிதர்களின் செயல்பாடுகள், பெரும்பாலும், பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட ஒழுக்கநெறிகளால், புறத்தில்  எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த சமூகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

அந்த கட்டுப்பாடுகள் எல்லாம், தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்புடைய அடையாளங்கள் எல்லாம், 'முற்போக்கு', 'புரட்சி' என்ற பெயரில்,எந்த அளவுக்கு சிதைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு, அந்த சமுகம் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும். சிற்றின மனிதர்கள் எல்லாம், சமூகத்தில் 'செல்வாக்கான' தீ இனமாக, இயல்பில் பலகீனமானவர்களை எல்லாம், 'தூண்டப்பட்ட' சிற்றினமாக்கி,  'சமூக வலிமை' பெறுவார்கள். அவ்வாறு வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் சமூகத்தில், அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், தவிர்க்க முடியாமல் வெளிப்படும் அறிகுறிகளாகும்.  

வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் சமூகத்தில், செல்வாக்குள்ள சிற்றின மனிதர்களால்,  'சான்றோர்' இனமாக முன்னிறுத்தும் மனிதர்கள் எல்லாம், அந்த   வீழ்ச்சிக்கு பங்களிக்கும் 'தீ இனம்' ஆவர். அது போன்ற 'தீ இன' சான்றோர்கள், தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு, வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு செல்வாக்குடனும், 'ஊழல் பெரும்பசியுடனும்' வலம் வரும் பலர், தமது இளமை காலத்தில், 'சமூக நீதி, தமிழ் இன உணர்வு, தனித்தமிழ்நாடு, புரட்சி' என்று  உணர்ச்சிபூர்வ பேச்சுக்களையும், எழுத்துக்களையும் வெளிப்படுத்தியவர்கள் ஆவர். பொது வாழ்வு கொள்ளைக்கு, முதலில்லா மூலதனமா (capital without investment), அந்த பேச்சுக்களும், எழுத்துக்களும்? என்பதும் ஆய்விற்குரியதாகும். “

“வசதியிலும் செல்வாக்கிலும் இருப்பவர்களுக்கு 'வாலாட்டி', தமது வசதி வாய்ப்பை உயர்த்துவதையே, தமது வாழ்வின் 'இலட்சியமாக' கருதி வாழ்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கலாம்.  அத்தகையோர் சமூகத்தில் மிக சிறுபான்மையாகவும், சமூகத்தின் 'வி.ஐ.பி'(VIP)-க்களாக மதிக்கப்படாமலும், சங்க காலம் முதல் 1967 வரை தமிழ்நாட்டில் இருந்ததாக,  நானறிந்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டுத் தொலைக் காட்சிகளில் 'இசைப் போட்டிகளில்' அதிகமாக வெற்றி பெறுபவர்கள், குறிப்பாக சிறுவர், சிறுமியர்களில்,பெரும்பாலும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கேள்விப்படுகிறேன். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழ்நாட்டில் தரத்தில் உயர்ந்த பொறியியல் கல்லூரிகளில்,  இசைத் தகவல் தொழில்நுட்பம்'  (Music Information Technology) என்ற பாடத்தை நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். அதில் ஒப்பீட்டளவில்,  தமிழ்நாட்டு மாணவர்களை விட , பிற மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களே எனக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். எனது சமூக வட்டத்தில் உள்ள 'திராவிட அபிமானிகளில் பலர்', எனது ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்வதை விட, அந்த ஆய்வுகள் மூலம் எனக்கு எவ்வளவு செல்வம், செல்வாக்கு கிடைக்கிறது/கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வத்துடன் உள்ளார்கள்.

எனவே தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருவதும், 'யாரை/எதை ஏணியாகப் பயன்படுத்தி , போட்டி போட்டு 'மேலான மேற்கத்திய நாகரிக' வாழ்வு வாழ்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாக வளர்வதும்,  ஒரே நோயின் இரு அம்சங்களாகும்.”

14 ஆம் நூற்றாண்டிலிருந்து பிறமொழி 'முஸ்லீம், கன்னட, தெலுங்கு' மன்னர்கள் ஆட்சிகளில் 'தொடர்ந்து' தமிழ்நாடு ஏன் சிக்கியது? (https://en.wikipedia.org/wiki/Bahmani_Sultanate & https://en.wikipedia.org/wiki/Krishnadevaraya#Success_in_Deccan );

என்ற கேள்வி தொடர்பான ஆய்வுகளில், தமிழரின் 'அகச் சீரழிவுக்கும்' முக்கிய இடம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அறிவுபூர்வ ஆராய்ச்சியை விடுத்து, உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பனர்கள் தான் காரணம்' என்று சொல்லி, ஏமாற்றும்/ஏமாறும்  போக்கானது, சீரழிவை கூட்டுவதற்கே வழி வகுத்தது. (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா, தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, 1944இல் 'தடம்' புரண்டு, 'இனம், சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சி வலையில் சிக்கி, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற 'ஆணி வேர்களையே', 'நோய்களாக' கருதி பயணித்து, தமிழர்களின் 'அகச்சீரழிவு போக்கை வேகமாக்கியதன்' விளைவானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வாய்ப்பை மேலும் பலகீனமாக்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அகத்தில் ஒழுக்க நெறிகள் ஏதுமின்றி, புறத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம், மனசாட்சியின்றி, தனது செல்வம், செல்வாக்கு உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தும் மனித மிருகங்களின் பிடியிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் விடுவிக்கும் முயற்சியானது, ஆர்வமுள்ள மனிதர்களின் 'அகத்தில்' இருந்து தான் தொடங்க வேண்டும். அத்தகைய போக்கினை ஊக்குவிக்கும் அமைப்பானது அந்த போக்கில் தான் உருவாகும். சாதி/மத/மொழி/வட்டார அடிப்படைகளில் 'உணர்ச்சிபூர்வ' வெறுப்பை வளர்த்து வரும் கட்சிகள் ஒழியாமல், அறிவு பூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படாமல், அது சாத்தியமில்லை. 

பிறமொழி மன்னர்கள் ஆட்சியிலும், காலனி ஆட்சியிலும், பின் 1967 வரையிலும், முறையாக பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகள், குளங்கள், ஆறுகள், கிரானைட், தாது/ஆற்று மணல், சந்தனக் காடுகள் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை, சீரழிக்கும் - மேலே குறிப்பிட்ட 'முதலில்லா மூலதன'- கொள்ளையர்களிடம், நேரடியாகவும்/மறைமுகமாகவும் பலன்கள் பெறாத 'சான்றோர்கள்'(?), தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? அந்த கொள்ளையர்களின் 'உதவிகளில்'(?) ஈழ விடுதலை முயற்சியானது சிக்கி, சீரழிந்ததா? (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html ) அந்த கொள்ளைகளில், சிலவற்றை மட்டும் 'சுயலாப' நோக்கில், 'சடங்காக' எதிர்க்காமல், தொடர்ந்து, உண்மையாக எதிர்த்து வரும் எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் இருக்கிறார்களா?


மேற்குறிப்பிட்ட சூழலில், நானறிந்தது வரையில், வேறு எவரும் சந்தித்திருக்க முடியாத 'கசப்பான' அனுபவங்களின் பின்னணியில், மீதமுள்ள காலத்தையும், 'ஆக்கபூர்வமாக' கழிக்க ;

அரசு பள்ளிகளில் 'தமிழ்வழிக் கல்வி' மீட்சிக்கு, என்னால் இயன்ற உதவிகளை, எனது நம்பிக்கைக்கு பாத்திரமான மனிதர்கள் மூலம் செயல்படுத்த 'ஏற்பாடு' செய்து விட்டு, சில காலம் வெளிநாட்டில் வாழ்வதன் மூலமே, 'ஆக்கபூர்வமாக' கழிக்க முடியும் என்ற கருத்தானது, என் மனதில் வலு பெற்று வருவதற்கு, கீழ்வரும் போக்கும் காரணமாகும். 


தமிழ்வழிக்கல்வி மீட்சி என்பதானது, தமிழை மரணப்படுக்கையிலிருந்து மீட்கும். தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில்;  

இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல அறிவுப் புதையலாக, பழந்தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன;


என்பதை நிரூபிக்கவல்ல எனது ஆய்வுகளை தொடர்ந்து செய்வதற்கான சூழலும்,ஆதரவும்;

தமிழ்நாட்டில் இல்லை, என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )


எனது R & D projects, மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாகி வரும் வியாபார வாய்ப்புகள் மூலம், எனக்கு வரும் நிகழ்கால/எதிர்கால வருமானங்களை தெரிந்து கொள்வதில் மட்டுமே ஆர்வமுள்ள, தமிழ் உள்ளிட்ட எனது ஆய்வுகள் பற்றி அறியும் ஆர்வமற்ற;

'வாலாட்டி' வசதியாகும் அறிவில் 'நிபுணரான'(?), மற்றும் அறிவு 'வாசனை தெரியாத', மனிதர்களின் 'வாடையின்றி' வாழ, மேலே குறிப்பிட்ட வழியைத் தவிர, வேறு வழி இருப்பதாக, எனக்கு தெரியவில்லை.

Wednesday, September 14, 2016

          The SAME contradiction in the two different formats?


                               Kashmir & Karnataka


In the South Indian media, the river Cauvery issue related violence started dominating over the violence in Kashmir.

The violence in the two different formats attracted my attention to the following text of Adam Smith in ' The Theory of Moral Sentiments' ( Page 273)

" The love of our country seems, in ordinary cases, to involve in two different principles; first, a certain respect and reverence for that constitution or form of government which is actually established; and secondly, an earnest desire to render the conditions of our fellow citizens as safe, respectable, and happy as we can. .................

In peaceable and  quiet times, those two principles generally coincide and lead to the same conduct................

But in times of public discontent, faction, and disorder, those two different principles may draw different ways," (Bold mine) 

In my view, the failure on the part of the opinion leaders like the writers, professors, etc to remove the roots of the probable “public discontent, faction, and disorder" during the "peaceable and quiet times", thorough the open minded & objective debates;

was the main CULPRIT; sustaining the thug-leaders & hatred infected lunatic fringe elements, surviving on the negative emotions of the mutual region/language/caste/religion based hatred;

for the later eruption of the violence, damaging the public property & innocent lives. 

Fanning the negative emotions of the mutual region/language/caste/religion based hatred, during the "peaceable and quiet times", will pollute the social environment with ‘combustible social gases’; waiting for the ‘triggering’ of the ‘social explosion’.

Also w.r.t the above;

what was/is the contribution of the INTER-STATE COUNCIL SECRETARIAT (under Ministry of Home Affairs, Government of India) as ‘ a vibrant organization to support Centre-State and Inter-State coordination and cooperation in India’;( http://interstatecouncil.nic.in/iscs/vision-mission/

“No wonder the state wings of the national parties like Congress, BJP, & communist parties, often in the opposite sides, in the inter-state water disputes like Cauvery, Mullai Periyar, etc, are just  following the regional chauvinistic interests, instead of the national interests. Can these all India parties, with their state wings from the ‘rival’ states opposing each other in the inter-state disputes, claim themselves to be the ‘national’ parties, in the true sense?” ; http://tamilsdirection.blogspot.com/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html 

Did the foreign funded NGOs try to ‘strengthen’ or ‘weaken’, the 'fanning of the negative emotions' of the probable “public discontent, faction, and disorder", during the "peaceable and quiet times"? 

Also why the self-immolation, during the phase of the ‘social explosion’, were confined mostly to the children of the poor & illiterate/semi-literate parents, and NOT the children of the leaders, whose wealth had increased after their entry into the public life? Do the Children of all main separatists' leaders stay abroad for education and not in Kashmir, as reported in the media? (“Children of these (separatists) leaders are tucked away in safe environments in schools in Malaysia, America, London or India,” ; http://zeenews.india.com/news/jammu-and-kashmir/if-jihad-so-pious-why-kashmiri-separatists-children-tucked-away-in-safe-places-asks-rebel-leaders-son_1905358.html) 

Will we wake up, at least now? 

We need to wake up to the above to discharge our 'social role', unless we opt out, to be just a third person, always ensuring 'a safe zone'; directly or indirectly ‘compromising’ with the ‘the thug-leaders & hatred infected lunatic fringe elements.’

Friday, September 2, 2016

தமிழ்நாட்டில் 'சுயநல சக்திகளின்' அழிவு காலம் நெருங்கி விட்டதா?அடுத்த சட்டமன்ற தேர்தலில், எந்த கட்சி எவ்வாறு ஆட்சியை  பிடிக்க முடியும்?


தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் 'ஊழல் கூட்டணி' எவ்வாறு செயல்படுகிற‌து?

 என்பதை, 'கழிவறை' பிரச்சினை மூலம் வெளிப்படுத்திய;

'ஜோக்கர்'  என்ற திரைப்படமானது,  வியாபார ரீதியிலும் வெற்றி பெற்று, வருவதானது, ஒரு அபூர்வ ‘சிக்னலாகும்’(Signal). 'ஜோக்கர்' படத்தில் வரும் மனநிலை பாதிக்கப்பட்டவராக இல்லாமல்; 'சாகச' நோயில் சிக்காமல், தாங்கக்கூடிய இழப்புகளை விரும்பி ஏற்று, விளம்பரமின்றி ஊழல் ஒழிப்புக்கு பங்களிப்பவர்கள், வளர்ந்து வரும் காலக்கட்டம் இது என்பதும்,  அவ்வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். 'தமிழ்/தமிழின‌ உணர்வு வியாபாரிகள்' ஆதிக்க சூழலில், சுயலாப நோக்கற்ற தமிழ் ஆதரவாளர்கள்/புலமையாளர்களும் 'ஜோக்கர்'களாக, தமிழ்நாட்டில் வாழ்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  

'செல்வாக்கான' தலைவர்களிடம், 'இன்று வாலாட்டி' பிழைத்து வரும் 'அறிவு ஜீவிகள்', 'அந்த' தலைவர்களின் இறப்பை எதிர்நோக்கி, அவர்களின் 'வண்டவாளங்களை' எழுத்தாக்கி 'செழிக்க', இப்போதே திட்டமிட்டு, 'செயலாற்றி' வரும் போக்கில், தமிழ்நாடே 'ஜோக்கர் நாடாகி' வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  

'இந்துத்வா' எதிர்ப்பு கண்ணோட்டமுடைய எனது நண்பர், கீழ்வரும் எனது கணிப்பு சரியென்று தெரிவித்துள்ளார்.

தமிழக பி.ஜே.பி  கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் தாம்  வாழும் ஊர்களில் எல்லாம், பிரதமர் மோடியின்  'தூய்மை இந்தியா' திட்டம் மூலம்;

தத்தம் பகுதியில் இருக்கும் கழிவறை மற்றும் குப்பை பிரச்சினைகளில் செயல்பூர்வமாக தொடர்ந்து, கவனம் செலுத்தியிருந்தால்;

கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெற்றிருப்பார்கள் என்பது எனது கணிப்பாகும்.

அவ்வாறு நடந்திருந்தால், 'ஜோக்கர்' திரைப்படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்குமா? தமிழ்நாட்டை ஆண்ட/ஆளும் முதல்வர்களுடன், நெருக்கமாக இருந்த/இருக்கும் தலைவர்கள், அந்த படத்தை பார்த்து கண்ணீர் விடும் 'சமூக நகைச்சுவை'யானது,  அரங்கேறியிருக்குமா? திராவிட கட்சிகளின் பாணியில், ஆளுயர மாலை, மலர்க் கிரீடம், குழு அரசியல், ஆகிய‌ நோய்களில், தமிழக பா.ஜ.க சிக்கியிருக்குமா? உண்மையான நாட்டுப்பற்றுள்ள‌ கட்சிக்காரர்கள் யார்? 'ஆதாய' நோக்கிலான கட்சிக்காரர்கள் யார்? உறுப்பினர் எண்ணிக்கை அளவுக்கு சீரங்கம் இடைத் தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலில், வாக்குகள் கிடைத்ததா? என்று பிரித்தறிய முடியாத குழப்பத்தில், பா.ஜ.க தலைமை சிக்கியிருக்குமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

1944இல் தி.க தோன்றியதன் விளைவாக, 1949இல் தி.மு.க உருவாகி , 1967இல் ஆட்சியைப் பிடித்ததானது; மக்கள் பங்கேற்புடன் இருந்த அரசியலானது, ஆதாய அரசியல் வளர்ந்த அதிவேகத்தில் சீர் குலைந்ததா; 'திருச்சி பெரியார் மையம்' மூலம் மேற்குறிப்பிட்ட  ஊழல் கூட்டணியில் இடம் பெற்று 'வளர்ந்த', 'பெரியார் சமூக கிருமிகளையும்' உருவாக்கி(  http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html) குப்பை, தண்ணீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, டாஸ்மாக் கடை அகற்றல் உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளுக்கு, கட்சிகளை ஓரங்கட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் ஆங்காங்கே தாமாகவே போராடி வருவதானது, அரசியல் நீக்கத்தை (Depoliticize) உணர்த்துகிறதா? பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும், அதில் சிக்கியுள்ளனவா? என்ற ஆய்வை தொடங்கியாக வேண்டும்.

மக்கள் பங்கேற்புடன் உண்மையான ஜனநாயக அரசியல் அரங்கேறும்போது, ஆதாய தொண்டர்கள் பலத்தில் பயணித்து வரும் அனைத்து கட்சிகளும், சுவடின்றி அழிந்து விடும்; 'ஆதாய அரசியலில்', ஆங்கிலவழிக்கல்வி வியாபார  சுனாமியில், தொடங்கிய தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்)  மரணப்பயணமும் தடுத்து நிறுத்தப்படும்.

ஒரு சமூகத்தில் ஜனநாயக அரசியலில், தமது வாழும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள, மக்கள் பங்கேற்பதானது, முக்கிய பங்கு வகிப்பதை, ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

“இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம், மக்களை ஜனநாயக முறைக்கு உட்படுத்தும் (inclusive process)  முயற்சியானது, பிரதமர் மோடியால் துவங்கப்பட்டுள்ளது. " civic participation is critical for democracies to function" - Robert D.Putnam  ' Making Democracy Work: Civic Traditions in Modern Italy'” என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்  ‘திராவிடச் சிக்கல்கள்’;  http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

ஆனால் திராவிடக் கட்சிகளைப் போலவே, தமிழக பா.ஜ.கவும் ஊடக விளம்பரமாக அந்த 'தூய்மை இந்தியா' திட்டத்தை அணுகியுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அது போலவே, தாய்மொழிவழிக் கல்விக்காக, ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளை, தமிழக பா.ஜ.க உணர்ந்துள்ளதா?

“10 வயது வரை  இந்தியா முழுவதும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்குமாறு, ஆர்.எஸ்.எஸ் கொடுத்து வரும் அழுத்தமானது; (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?’; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  & 'RSS groups turn the page for mother tongue lectures in IITs and IIMs'; http://www.newindianexpress.com/nation/Teaching-trouble-RSS-groups-turn-the-page-for-mother-tongue-lectures-in-IITs-and-IIMs/2016/08/14/article3579133.ece )

புதிய கல்வி கொள்கையில், 'மாநில அரசுகள் விரும்பினால்' என்று நீர்த்து போகவும் வாய்ப்புள்ளது; தாய்மொழிவழிக் கல்வி பற்றிய பரிந்துரையை புறக்கணித்து, 'கல்வி வியாபாரத்திற்கு' உதவும், 'புதிய கல்வி கொள்கை' எதிர்ப்புகள் வெளிப்பட்டு வரும் சூழலில்.;(http://www.thehindu.com/news/cities/bangalore/draft-national-education-policy-rekindles-debate-on-mother-tongue/article8930355.ece), ஆங்கிலவழிக்கல்வி காரணமாக, தமிழக சட்டசபையில், திராவிட கட்சிகளின் இளம் எம்.எல்.ஏக்கள் பேசும் விவாதங்களில், ஆங்கிலம் செல்வாக்கு செலுத்தி வரும் சூழலில். (http://timesofindia.indiatimes.com/city/chennai/They-are-Tamil-leaders-but-inside-assembly-debate-in-English/articleshow/53692205.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section )”; http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2016-08-14T02:41:00-07:00&max-results=7 )

தமிழ்வழிக் கல்வியானது (எனவே தமிழும்) மரணப் படுக்கையில் உள்ள நிலையில், புதியகல்விக் கொள்கையில்,  தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு இருக்கும் வாய்ப்பையும், 

தமிழ்நாட்டில் புதியகல்விக் கொள்கை எதிர்ப்பில் கெடுத்துவரும் முயற்சியை,

தமிழக பா.ஜ.க வலிமையாக எதிர்த்ததா? இனியாவது எதிர்க்குமா? (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

'புதிய கல்வி கொள்கையில், சமஸ்கிருதம் படிக்க  விரும்பினால்,  வாய்ப்புகள் உருவாக்க பரிந்துரைத்துள்ளது போல,  இந்தியாவில் தமிழையும் அந்த வரிசையில் சேர்க்க,  தமிழக பா.ஜ.க குரல் எழுப்புமா?  தமிழக பகுத்தறிவாளர்கள், வேதத்தை எதிர்ப்பதற்கும், உதவும் நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதை, தமிழக பா.ஜ.க இதுவரை வெளிப்படுத்தினார்களா? இது போன்ற முயற்சிகள் இன்றி, தமிழ்நாட்டில் பா.ஜ.க வேர் பிடிக்க முடியுமா?

அது போலவே, வெளிநாட்டு நிதி  உதவியில் என்.ஜி.ஒ என்ற பெயரில் வலம் வரும் நபர்களின் 'ஊழல்' சுயரூபங்களை, மோடி அரசானது,  வெளிப்படுத்தி வரும் முயற்சிகளை, தமிழக பா.ஜ.க அறிவார்களா?

“சமூகத்தில் பிளவையும், அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளாக (மத கலவரங்கள், 'என்கவுண்டர்' (Encounter) மரணம் போன்றவற்றிலும் கூட, பாரபட்ச அணுகுமுறையில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களை மட்டுமே குவியப்படுத்திதேர்ந்தெடுத்து, சாதாரண மக்களை 'காவு' கொடுத்து, 'போராடி',  'புகழுடன்' வலம் வரும், மேல் தட்டு வசதி வாய்ப்புகளுடன் வாழும், சமூக நீதி/மனித உரிமை காவலர்கள்;

தனிப்பட்ட முறையில், 'ஒழுக்கக்கேடான பெரிய மனிதர்களுடன், நெருக்கமான நட்பு கொண்டு;

அந்த பெரிய மனிதர்களின் சட்ட விரோத கொடுமைகளுக்குள்ளானவர்கள், உதவி கோரி நாடினாலும்,  சந்திக்க கூட மறுத்த கொடுமையையும், நான் அறிவேன். அந்த கொடுமைகாரர்களின் 'சுயரூபம்' அம்பலமாகாமல், 'நாம்' என்று சமூக நீதி/மனித உரிமை ஆதரவாளர்களை ஏமாற்றி வருவதையும், நான் அறிவேன். அது போலவே, அகத்தில் சீரழிந்து, ஊழலில் ஈடுபடும்  துணிச்சலற்ற (?) ‘கோழை யோக்கியர்கள்எல்லாம், 'ஊழல் வழி' 'அதிவேக' பணக்காரர்களுக்கு, 'வெண்சாமரம்' வீசி வரும்,  இழிவான போக்கையும், நான் அறிவேன்.” என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/08/depoliticize-10-race-caste.html )

புதிய கல்வி கொள்கை எதிர்ப்பில் முன்னணியில் உள்ள, இந்திய 'இடது சாரி' அறிவுஜீவிகளை, ‌  KGB என்ற ரஷ்ய உளவு அமைப்பானது, எவ்வாறு தமது சுயநலனுக்கான எடுபிடிகளாக மாற்றுகிறது?  என்பதை விளக்கும் வீடியோ: https://www.youtube.com/watch?v=5It1zarINv0&feature=youtu.be&t=1896  


அமெரிக்காவின் ஃபோர்ட் பவுண்டேசன்(Ford Foundation) - சி.ஐ.ஏ(CIA) இந்தியாவில் வலதுசாரி அறிவுஜீவிகளை எவ்வாறு தமது சுயநலனுக்கான எடுபிடிகளாக மாற்றுகிறது? என்பதை விளக்கும் இணைய தளம்: http://canarytrap.in/2014/03/11/kejriwal-indias-biggest-scam/  &  https://www.facebook.com/notes/surajit-dasgupta/the-cia-ford-ngo-congress-nac-aap-nexus/10152395314509630/ 

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்திய விடுதலைக்கு முன், நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான கோப்புகளும், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின், உளவு அமைப்புகளின் 'வேட்டைக்காடாக' இந்தியா இருந்துள்ளது தொடர்பான தகவல்களும், ஆங்கில ஊடகங்களிலும், புத்தகங்களிலும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்திரா காந்தி பிரதமராயிருந்த காலத்தில், மொரிசியஸ் நாட்டின் தேர்தலில், தமக்கு வேண்டியவர் வெற்றி பெற்று, அதிபராக, இந்திய உளவு அமைப்பு 'ரா' மேற்கொண்ட வெற்றிகர திட்டமும், புத்தகமாக வெளிவந்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகளின் ஆதரவில், அப்படி செயல்படுபவர்களில் யார்? யார்? 'அந்த வழிகளில்' மேல்தட்டு வசதியில் வாழ்ந்து கொண்டு, தம்மை 'வழிபடும்' எடுபிடி சமூக வட்டத்தின் பங்களிப்பில், சாதாரண மக்களிடமிருந்து அந்நியமாகி, 'அரசியல் நீக்கத்திற்கும்' (depoliticize) பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

எனவே தமிழ்நாட்டில் உளவு அமைப்புகளின் வலைப்பின்னலில் சிக்கி செயல்படுபவர்களின் 
- 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு- சுயநல‌ 'சுயரூபமும்' வருங்காலத்தில் அம்பலமானால், வியப்பில்லை.

அரசியல் நீக்கத்தில், ‘2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம், அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா?’
என்ற 'சிக்னல்' வெளிப்பட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.; http://tamilsdirection.blogspot.in/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html

ஆளுங்கட்சி, எதிர்கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணியில் இருந்த‌ இ.ஜ.க உள்ளிட்ட கட்சிகளில் உள்ளவர்கள் சந்தித்து வரும் 'ஊழல்' தொடர்பான வழக்குகளும்;

ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணைபுரியும் வாய்ப்புள்ள, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இருந்து வரும் 'இருளுக்கு' எதிரான குரலை உச்சநீதிமன்ற நீதிபதியே எழுப்பியுள்ளதும் ( http://www.newindianexpress.com/nation/TNIE-Exclusive-Justice-Chelameswar-skips-SC-Collegium-meet-for-want-of-transparency-in-judges-appointments/2016/09/02/article3608194.ece );

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சந்தித்து - வரும்  உட்கட்சி பிரச்சினைகளும்;

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் முறையாக, போர்க்கொடி உயர்த்தியுள்ள செய்தியும் (http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-ias-officers-associations-confidential-general-body-meeti-261786.html);

மேற்குறிப்பிட்டவை தொடர்பாக, அடுத்தடுத்து வெளிப்பட்டு வரும் செய்திகளும்;

'ஆதாய அரசியல்' போக்கில் பயணித்து அரசியலானது,  சீர்குலைவை சந்தித்து வருவதையே,  உணர்த்துகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியத்கும்.

தமிழ்நாடானது 'ஆதாய அரசியலிலிருந்து' விடுதலை ஆகி, ஆக்கபூர்வ திசையில் பயணிக்க இருப்பதையே, மேற்குறிப்பிட்டவை உணர்த்துகின்றன.

தமிழக பா.ஜ.கவானாலும் சரி, வேறு எந்த கட்சியானாலும் சரி,

அந்த சிக்னலை உணர்ந்து, 'சுயநல' போக்கிலிருந்து விடுபட்டு, தமதளவில் அகத்தில் தூய்மையாக்கும் பணியை தொடங்கி;

புறத்தில், தாம் வாழும் பகுதியில் 'தூய்மை' இந்தியா திட்டத்தை ஆதரித்து;

பேச்சையும், எழுத்தையும் குறைத்து, செயல்மூலம் பேசத் தொடங்கினால் மட்டுமே;

தமிழ்நாட்டு அரசியலில் வேர் பிடித்து;

ஊழலை ஒழிக்கும் நம்பிக்கையை மக்கள் மனதில் 'செயல்பூர்வமாக' விதைத்து;

அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியையும் பிடிக்க முடியும்; சாதி, மத அடிப்படைகளிலான பாரபட்சத்தை நீக்குவதிலும், தாய்மொழிவழிக் கல்வியை ஊக்குவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் ‘செயல்பூர்வமாக’‌ கவனம் வெலுத்தி வரும் சூழலில், (அப்படியா? என்ற ஆச்சரிய போக்கு நீடிப்பதற்கு, தமிழக பா.ஜ.கவின் மேலே குறிப்பிட்ட குறைபாடுகளே காரணமாகும்)