Thursday, July 20, 2017

'பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்' (2)


தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தடையாக,    

இனி பயணிக்க முடியாது

 

‘'பிராமணன்', 'பூணூல்', 'தமிழர்', 'பன்றி' ஆகிய சொற்கள் தொடர்பாக, அறிவுபூர்வ அணுகுமுறையில் மேலே குறிப்பிட்ட போராட்டம் ('பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்') திட்டமிடப்பட்டதா?’ என்ற கேள்வியை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_18.html )

“'பூணூல் அறுப்பு' சம்பவங்களும், திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன் தமிழ்நாட்டில் அதிகம் நடந்து வந்தன, தி.க உருவானபின் குறைந்திருப்பதாக பெரியார் பட்டுக்கோட்டை சொற்பொழிவில் குறிப்பிட்டதை, அந்த பேச்சு ஒலிநாடாவில் நான் கேட்டிருக்கிறேன்.” (http://tamilsdirection.blogspot.sg/2015/03/

இந்திய விடுதலைக்கு முன், 'பெரியார்' ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த பின்னணியில்;

'பெரியார்' ஈ.வெ.ரா இந்திய விடுதலைக்குப் பின், முதல்வர் காமராஜரை ஆதரித்த காலக்கட்டத்தில்;

‘தமிழ்நாட்டில் பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில், மத்திய அரசிலும் அவர்கள் செல்வாக்குடன் இருந்ததால் தான், தமிழ்நாட்டிற்கு பாதகங்கள் இன்றி, சாதகங்கள் நிகழ்ந்தன: காமராசராலும் திருச்சி 'பெல்', தூவாக்குடி 'துப்பாக்கி தொழிற்சாலை', ஆவடி 'டேங்க்' தொழிற்சாலை போன்றவை வந்தன. பிராமண எதிர்ப்பில், தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் தமிழ்நாட்டு பிராமணர்கள் செல்வாக்கு குறைந்ததே,1967க்குப் பின் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய‌ வேண்டிய பெரும் திட்டங்கள் எல்லாம்,  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த‌ பெங்களுருக்கு சென்றன; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகள் முளை விட்டு வளர்ந்தன; கச்சத்தீவும் பின்னர் பறி போக‌.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/06/blog-post.html )

'பெரியார்' ஈ.வெ.ரா மறைவிற்கு பின், எந்த காலக்கட்டத்தில் பூணூல் அறுப்பு சம்பவங்கள் அதிகரித்தன? அதில் தி.மு.க ஆட்சிக்கும், எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க ஆட்சிக்கும், பூணுலை அறுத்தவர்களிலும், பாதிக்கப்பட்ட பிராமணர்களிலும் வேறுபாடுகள் உண்டா? பின் ஜெயலலிதா ஆட்சியில் அவை குறைந்தனவா? 'பெரியார்' ஈ.வெ.ரா  மறைவிற்குப் பின், தி.கவில் அதிக இளைஞர்கள் சேர்ந்த காலக்கட்டத்தில், அவை அதிகரித்தனவா? 'அந்த' இளைஞர்களுக்கு வயதான பின், அடுத்த கட்டத்தில், இளைஞர்கள் வற்றிய போக்கில், பூணூல் அறுப்பு சம்பவங்கள் குறைந்தனவா? பூணூல் அறுத்தவர்களில் சுயலாப கணக்கில் (பொது வாழ்வு மூலதனமாக) பூணூல் அறுத்தவர்கள் யார்? சுயலாப நோக்கின்றி, உணர்ச்சிபூர்வமாக, சாகசத்தில் பூணூல் அறுத்தவர்கள் யார்?

1967க்குப் பின் சாதி வெறியும், சாதி மோதல்கள் அதிகரித்த போக்கிற்கும், ஊழலும், அந்த ஊழலை உரசாமல், வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்கள் அதிகரித்த போக்கிற்கும் தொடர்பு உண்டா?

'பெரியார்'  ஈ.வெ.ரா காலத்தில் குறைந்திருந்த‌ பூணூல் அறுப்பு சம்பவங்கள், 'பெரியார்' ஈ.வெ.ரா மறைவிற்கு பின்,  அதிகரித்து, ஊழலும், சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிகரித்து;

ஊழல் மன்னர்களை 'தமிழ்ப் புரவலராக' போற்றி, பிழைத்த, கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அதிகரித்து;

தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிந்ததற்கு;

கீழ்வருவதே முக்கிய காரணம் என்று எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

‘‘ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி, சாகசம், etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.” (http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html ) 1967க்கு முன் இருந்ததை விட,  அதிகமாக சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிகரித்துள்ளதற்கும், மேற்குறிப்பிட்ட சமநிலை சீர்குலைவிற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்கு உள்ளாக வேண்டும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_18.html )

ஊழல் மன்னர்களை 'தமிழ்ப் புரவலராக' போற்றி, பிழைத்த, கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் 1967க்கு பின் தான் 'அதீதமாக' வளர்ந்ததும், அந்த சமநிலை சீர்குலைவின் விளைவேயாகும்; அறிவுபூர்வ விமர்சனப்பார்வையை பின் தள்ளி, உணர்ச்சிபூர்வ போக்கை, ஊழலின் கேடயமாக பயன்படுத்தும் போக்கின் வளர்ச்சியில்.

ஊழல், சாதிவெறி, சாதி மோதல்கள் அதிகரித்துள்ள இன்றைய தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்களுக்கு;

1967க்கு முன் தமிழ்நாடு எப்படி இருந்தது? என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

இன்றும் சுமார் 60 வயதுக்கும் அதிகமானவர்களில்;

கீழ்வரும் மனநோயாளிகளாக வாழ்பவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு எல்லாம், மேலே குறிப்பிட்ட கவலை இருக்கலாம்.

‘மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?

நமது குடும்பப்பிள்ளைகளை நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?

 +2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும், கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?

அதே போல அரசு வேலைகள் அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற இன்னும் பலவற்றில் மூழ்கி;

ஊழல் சாம்ராஜ்யத்தில் மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?
ஏரிகள், ஆறுகள், தாதுமணல், கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?
கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?

அத்தகையோரின் செல்வாக்கு நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;

என்ற மன நிலையில் வாழ்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும், மேல் தட்டு, பணக்காரர்களுமாகவுமே இருக்கிறார்கள்; பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_16.html )

அதே நேரத்தில் இன்று படித்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலோர் எல்லாம், மேலே குறிப்பிட்ட வகையில், 'பொது வாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக' வாழும் தமது பெற்றோர்களை முன் மாதிரியாகக் கொண்டு;

அவர்களால் தமக்கு இலாபம் இல்லையென்றால்;

அவர்களையும், சுற்றத்தையும், " 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வியில்,  'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும் போக்கில்;

தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு. (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_16.html )

‘அந்த போக்கினை முன்கூட்டியே உணர்ந்து, விழித்துக் கொண்டு, தமது குழந்தைகளை 5 வயது வரை எந்த பள்ளியிலும் 'கூண்டில்' அடைக்காமல்;

முதலாம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வியில் பயில வைக்கும் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இளம் பெற்றோர்களையும் நான் அறிவேன்.( http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html ) "

அந்த போக்கில் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கையூட்டும் கீழ்வருவது போன்ற செய்திகள் அதிகரித்து வருவதானது, மீட்சியை நிச்சயமாக்கி விட்டது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் லலிதா ஐஏஎஸ், தன் மகள் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையரான லலிதா ஐஏஎஸ் இதுகுறித்து நம்மிடம் விரிவாகவே பேசினார்.
''என்னுடைய குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. சென்னை மாநகராட்சிப் பள்ளியிலேயே அவள் படிக்கவேண்டும் என்று விரும்பினேன். அதனால் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் தொடக்கப்பள்ளியில் திங்கட்கிழமை அன்று சேர்த்திருக்கிறேன். அவளும் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஆனந்தமாகத் தொடங்கி இருக்கிறாள்.
இந்த தருணத்தில் நானும் ஓர் அரசுப் பள்ளியின் வார்ப்பு என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மகளை சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி .” ( http://tamil.thehindu.com/tamilnadu )
‘அறிவுபூர்வ போக்கில், தவறு என்று வெளிப்பட்டதை பகிரங்கமாக ஏற்று, திருந்தி, பயணித்த 'பெரியார்' ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு சேர்ந்து செயல்பட்டிருப்பார், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html)
'தாய்மொழிவழிக் கல்வி, கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாகுபாட்டை எதிர்த்தல், போன்ற பிரச்சினைகளில், ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து செயல்படும் வாய்ப்புகளை புறக்கணித்து, மாணவர்களும், இளைஞர்களும் விரும்பாத வெறுப்பு அரசியல் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார்' கட்சிகள் இனியும் பயணிப்பதானது, புத்திசாலித்தனமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_18.html )

மீட்சி திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டில், சுயலாப கணக்கில் (பொது வாழ்வு மூலதனமாக) அல்லது சாகசத்தில் பூணூல் தொடர்பான போராட்டங்கள் எல்லாம்;
மீட்சிக்கான தடைகளாகவே ஒதுக்கப்படும்;
ஈ.வெ.ரா சாகும் வரை கடைபிடித்த போக்கிலிருந்து விலகி, பொது மக்களுக்கும், பொது வாழ்வுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் கேடான திசையில் பயணித்தால், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒடுக்கப்படும்.
நெருக்கடிகாலம் முடிந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில், வட மாநிலங்களில் பெரும் தோல்வியை சந்தித்த இந்திரா காங்கிரஸ் கட்சியானது:
தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றது: ஊழலில் சிக்கி ஆளுங்கட்சியாக பயணித்த தி.மு.கவினரை ஒடுக்கிய போக்கிற்கு, பொது மக்களிடம் கிடைத்த ஆதரவின் காரணமாக.
திராவிட அரசியல் கொள்ளையர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும், அறிவுபூர்வமற்ற  'திராவிடர்' கவசத்தில் ஆதரித்து வரும், 'பெரியார்' கட்சிகள் எல்லாம், அறிவுபூர்வமாக விழித்துக் கொண்டால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியும். 

Tuesday, July 18, 2017

 'பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்' (1);


அறிவுபூர்வ விவாதத்திற்கு கேடாகும் உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள்


முகநூலின் வழியாக, கீழ்வருவது எனது கவனத்தை ஈர்த்தது.


"பார்ப்பானை பிராமணனாக்குவதும், தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணூலே"  என்ற காரணத்துடன், 'பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்' என்று 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' விளம்பரம் முகநூலில் வெளிவந்துள்ளது.





அந்த போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வெளிப்படுகின்ற உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் எல்லாம்;

அறிவுபூர்வ விவாதத்திற்கு கேடாகி, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்பதற்காக உருவாகும் மக்கள் ஒற்றுமையை கெடுக்கும்;

என்று கவலைப்பட்டு, இப்பதிவை எழுதினேன்.

வேதகால நூல்களின் படி, குருவிடம் கல்வி பயிலும் மாணவர் சேர்க்கை தொடர்பான நிகழ்வே பூணூல் அணிவித்தல் என்பதும், சூத்திரர், பெண்கள் உள்ளிட்டு சமூகத்தில் அனைத்து பிரிவினரும் அந்நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என்பதும், அந்நிகழ்வு தொடர்பாக பல தடைகள் நவீன காலத்தில் தான், அந்த நூல்களில் இடைச்செருகல் மூலம் இடம் பெற்றன‌ (the details and restrictions in the Upanayana ceremony is likely to have been inserted into ancient texts in a more modern era)  என்பதும் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன. (https://en.wikipedia.org/wiki/Upanayana  )

அது மட்டுமல்ல;

“தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்' காலனிய சூழ்ச்சியா? 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?” என்பது தொடர்பான எனது ஆய்வுகளையும் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html )

மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் சுயலாப கணக்கின்றி பங்கேற்றவர்கள் எல்லாம் சாகச நோக்கில் பங்கேற்றார்களா? அல்லது அறிவுபூர்வமான சமூக நோக்கில் பங்கேற்றார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கு தான் தெரியும்.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற இளைஞர்கள் எல்லாம், சாகச நோயில் (adventurism)  சிக்கும் அபாயம் வளர்ந்துள்ளதையும், நான் எச்சரித்துள்ளேன்.

அந்த நோயின் வளர்ச்சிக்கு, தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான 'பெரியார்' ஈ.வெ.ராவின் பங்களிப்பும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதையும், மேலே குறிப்பிட்ட போராட்டமானது உணர்த்தியுள்ளது.

‘ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி, சாகசம், etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.” (http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html  ) 1967க்கு முன் இருந்ததை விட,  அதிகமாக சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிகரித்துள்ளதற்கும், மேற்குறிப்பிட்ட சமநிலை சீர்குலைவிற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்கு உள்ளாக வேண்டும்.

இத்தகைய சமூக சூழலே, தமிழைச் சரியாக உச்சரிக்க தெரியாத நடிகர்கள் திரைத்துறையில், அதிக செல்வாக்குடன் வலம் வருவதற்கும், அபத்தமான எழுத்துப் பிழைகளுடன் கட்சிகளின்/திரை ரசிகர்களின், 'ஃப்ளக்ஸ் பேனர்கள்' பொது இடங்களில் இடம் பெறுவதற்கும் காரணமா? கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்களை, 'கடவுள்களாக' கருதி, 'கடவுளுக்கான வழிபாட்டு முறைகள்' எல்லாம் இடம் பெயர காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.(‘ தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும்,           'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும் ; http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )

ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளானதன் காரணமாக;

தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் புதைந்துள்ள அறிவுச் செல்வங்கள் எல்லாம்:

'மூட நம்பிக்கைகள்' என்று 'குருட்டு பகுத்தறிவு' பிரச்சாரத்தில் சிக்கி: (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ; & http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

ஆங்கிலம் தெரியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற இளைஞர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி;

அவர்களில் சுயலாப கணக்கில் சிக்காதவர்கள் எல்லாம், சாகச நோயில் சிக்கி;

தமிழையும், தமிழ்நாட்டையும் சூறையாடியவர்களின் பொதுவாழ்வு வியாபாரத்தில் விட்டில் பூச்சிகளாக‌ பலியானவர்கள், அதிலிருந்து தப்பினாலும் தமது கல்வியையும், வேலை வாய்ப்புகளையும் இழந்து, வேறு வழியின்றி 'ஆதாய தொண்டர்களாகவும்' பிழைத்து வருபவர்கள் யார்? யார்?

தமிழரின் ஆணி வேர்களாகிய‌ அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளான பின்னணியில், 1970களின் பிற்பகுதிகளில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அறிமுகமாகி, அந்த போக்கிலான சமூக செயல்நுட்பமே 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக வழி வகுத்ததா? (http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html

என்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

“சமஸ்கிருதத்தில் வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் ஒன்றே மனுஸ்மிரிதி ஆகும். இது போன்ற நூல்களில் உள்ளவையெல்லாம், அந்த நூலாசிரியரின் விருப்பங்களின் வெளிப்பாடுகள் தான் என்பதையும், அன்று நடைமுறையில் இருந்தவை அல்ல என்பதையும், குறிப்பாக ' சூத்திரர் வாயிலும், காதிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும் என்பது போன்ற தண்டனைகளும், ஒரு மனவெறியரின் ஆலோசனைகள் மட்டுமே; அவை நடைமுறையில் வராதவை; என்பதையும் ஏ.எல்.பாஸம் என்ற அறிஞர் ' the wonder that was india' என்ற நூலில் விளக்கியுள்ளார்.( " The reader must always bear in mind  that in the texts on statecraft and Sacred Law the authors describe things not as they were in fact, but as they believed they ought to be................ Similarly the vicious punishments laid down by Manu for religious crimes (for example a sudra who " arrogantly teaches brahmans their duty" shall have boiling oil poured in his mouth  and ears" Page 81) இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளதாக அறிகிறேன்.

தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் உள்ளிட்ட அரசர்கள் ஆண்டபோது, 'சூத்திரருக்கு' கல்வி மறுக்க பட்டது; மீறி படித்தவர்களுக்கு மனுநீதியில் உள்ள தண்டனைகள் அமுலானது'; குறித்து சான்றுகள் இருப்பதாக, எனது தேடலில் வெளிப்படவில்லை.” (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

இந்து கடவுள்களில் பன்றியும் ஒன்று; அக்கடவுளுக்கு கோவிலும் உண்டு. (கடவுள் பன்றி உருவெடுத்த திருமுட்டம் பூவராகர் திருக்கோயில்; http://www.dinamani.com/religion/2017/jun/01 ) முஸ்லீம்களுக்கு பன்றி மத விரோதமான விலங்கு.  மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் பூணூல் போட, பன்றியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அந்த காரணமானது, எந்த அளவுக்கு அறிவுபூர்வமானது? என்று எவராவது விளக்கினால், அந்த விளக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.


பெங்களூர் குணாவின் நூல்களில், 'தமிழர்' என்ற அடையாளத்தில் இருந்து 'பெரியார் ஈ.வெ.ரா'வை நீக்கி, குழப்பியிருந்தது தெரியாமல்;

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்;

என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html )

எனவே 'பிராமணன்', 'பூணூல்', 'தமிழர்', 'பன்றி' ஆகிய சொற்கள் தொடர்பாக, அறிவுபூர்வ அணுகுமுறையில் மேலே குறிப்பிட்ட போராட்டம் திட்டமிடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வன்முறை தவிர்த்து, பொதுச்சொத்துக்களுக்கு சேதமின்றி அறிவுபூர்வ போக்கில் நடந்து வெற்றி பெற்றது, 'பெரியார்' ஈ.வெ.ரா தலைமை தாங்கிய 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம். அதற்கு மாறாக, வன்முறை மிகுந்து, பொதுச் சொத்துக்கள் சேதமாக, உணர்ச்சிபூர்வ போக்கில் நடந்தது, 'பெரியார்' ஈ.வெ.ரா எதிர்த்த, ராஜாஜியும் அண்ணாவும் ஆதரித்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )


‘மனிதர் செயல்பாடு பொருளாதாரம்’ (‘Behavioural economics ) படி:
உலகில் அறிவுபூர்வ பார்வையின்றி பயணிப்பவர்கள் எல்லாம்;
தமது சார்பு நபர்களை ஒன்று சேர்த்து, அவர்கள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கும், மற்றவர்கள் மீது அவநம்பிக்கை வைக்கும் உள்ளார்ந்த சார்பு ( Implicit bias);
மற்றும் நாம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடுகளுக்கு ஆதரவான தகவலை அப்படியே நம்பும் உறுதிப்பாடு சார்பு (Confirmation bias) :
ஆகிய இரண்டு சார்புகளிலும் சிக்கி, உலகில் பொய் செய்திகள் (fake news ) வலம் வர காரணமாகி, பலியாவார்கள்;
என்பதை கீழேயுள்ள‌ குறிப்பு தெரிவித்துள்ளது. அந்த போக்கில் சமூக வண்ணக்குருட்டு நோயில் (Social Colour Blindness),  அந்த நபர்கள் சிக்கும் வாய்ப்பையும் நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )   
அறிவுபூர்வ போக்கில், தவறு என்று வெளிப்பட்டதை பகிரங்கமாக ஏற்று, திருந்தி, பயணித்த 'பெரியார்' ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு சேர்ந்து செயல்பட்டிருப்பார், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.htmlதாய்மொழிவழிக் கல்வி, கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாகுபாட்டை எதிர்த்தல், போன்ற பிரச்சினைகளில், ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து செயல்படும் வாய்ப்புகளை புறக்கணித்து, மாணவர்களும், இளைஞர்களும் விரும்பாத வெறுப்பு அரசியல் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார்' கட்சிகள் இனியும் பயணிப்பதானது, புத்திசாலித்தனமா?

இந்துத்வா எதிர்ப்பு, ஆதரவு உள்ளிட்டு எந்த கொள்கையின் ஆதரவாளர்களாக இருந்தாலும்;

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம்;

எந்த நபரையும், கொள்கையையும் இழிவு படுத்தும் நோக்கமின்றி, அறிவுபூர்வமாக, திறந்த மனதுடன், சுயலாப நோக்கமின்றி;

அறிவுபூர்வ விவாதத்தை ஊக்குவிப்பதில் ஓன்றுசேர வேண்டிய நேரம் வந்து விட்டது;

இந்துத்வா எதிர்ப்பு, ஆதரவு முகாம்களில் சுயலாப கணக்குடன் உணர்ச்சிபூர்வ போக்குகளை ஊக்குவிக்கும் கள்வர்களை எல்லாம் ஒர‌ங்கட்டி. 


குறிப்பு :

‘Behavioural economics suggests that the reason we fall for fake news is because these stories are designed to simultaneously play to our susceptibility to implicit bias as well as confirmation bias. Implicit bias is the human tendency to lump people together into categories of us and them where we implicitly trust members of our own group and distrust all those who are not. Confirmation bias, on the other hand, is our increased willingness to accept information that confirms what we already believe.
When both these biases are operating together, we are doubly vulnerable.’; http://www.livemint.com/Opinion/NvmUUoong1b2xYk9KGeFvI/Needed-A-FactRank-algorithm-to-flag-fake-news.html

Monday, July 17, 2017

பொது அரங்கில் நகைச்சுவைகளை ரசிக்க முடியாமல்;


சொந்த காசில் சூன்யம்’ வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு?(1)


சமூகத்தில் பொது அரங்கில் வெளிப்படும் நகைச்சுவை சம்பவங்களை எல்லாம் ரசிக்க கூட முடியாமல், தவிக்கும் தமிழர்களும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.

தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF   ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.

'it’s a Mad Mad Mad Tamilnadu'  என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html  )

அத்துடன் மீடியா வெளிச்சத்தில் வராமல், தமிழ்நாடு முழுவதும் இன்னொரு வித்தியாசமான நகைச்சுவை போக்கும் அரங்கேறி வருகிறது.

மேலே குறிப்பிட்ட பொதுவாழ்வு வியாபாரிகளை எல்லாம் கோமாளிகளாக கருதி, அந்த நகைச்சுவை காட்சிகளை ரசித்து வருபவர்களில் பெரும்பாலோர் கீழ்நடுத்தட்டு, ஏழைகளாக இருக்கிறார்களா?

மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?

நமது குடும்பப்பிள்ளைகளை நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?

 +2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும், கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?

அதே போல அரசு வேலைகள் அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற இன்னும் பலவற்றில் மூழ்கி;

ஊழல் சாம்ராஜ்யத்தில் மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?

ஏரிகள், ஆறுகள், தாதுமணல், கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?

கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?

அத்தகையோரின் செல்வாக்கு நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;

என்ற மன நிலையில் வாழ்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும், மேல் தட்டு, பணக்காரர்களுமாகவுமே இருக்கிறார்கள்; பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு; தமக்கு கட்டுப்பட்டு வளரும் தமது குடும்பப் பிள்ளைகளையும், அவ்வாறு வாழவே வளர்த்துக் கொண்டு.


இவ்வாறு ‘புத்திசாலித்தனமாக’(?) வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், வெளியில் சொல்ல முடியாத, வெவ்வேறு வகையிலான தண்டனைகளையும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்; தமிழ்நாட்டிற்கு பெரும்பாலும் புதிதாக; 1970களின் பிற்பகுதிகளில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அறிமுகமானதன் பலனாக.

'முதல் தர' ஆங்கில நர்சரி பள்ளியில் சிரமப்பட்டு இடம் வாங்கி, 'எல்லா வழிகளிலும்' நன்கு படிக்க வைத்து, ஐ.ஐ.டியில் சேர்ந்து, பொறியாளராக கை நிறைய சம்பளம் வாங்கிய மகன், தனது அப்பாவை 'நியுசன்ஸாக' கருதி, ஒதுங்கி, 'புத்திசாலித்தனமாக'(?) வாழ‌; அப்பொல்லோ மருத்துவமனையில் தனது தந்தை உயிருக்கே ஆபத்தான நோயில் சிக்கி அனுமதிக்கப்பட்டிருந்த போதும், எந்த கஷ்டத்திலும் பங்கேற்காமல், ஓரிரு முறைகள் பார்வையாளராக வந்து பார்த்து சென்று விட்டார்.

தமிழ்நாட்டிலிருந்து குடியேறி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், ஆங்கிலத்தை பேச்சு மொழியாகக் கொண்டு, ஆங்கில வழியில் பயின்று, வேலையில் சேர்பவர்களிடம், மேற்கத்திய நாகரீக நற்பண்புகள் அகவயமாகி (internalize), வெளிப்படுவது போல;

தமிழ்நாட்டில் தமிங்கிலீசை பேச்சு மொழியாகக் கொண்டு, ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர்களிடம், மேற்கத்திய நற்பண்புகளும், தமிழ் கலாச்சார நற்பண்புகளும் இன்றி, இரண்டும் கெட்டானான 'சுயநல மிருக' பண்புகள் வெளிப்படுகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி படித்து, உயர் வேலை வாய்ப்புகளில் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், உள்நாட்டிலும்/வெளிநாடுகளிலும் பணியாற்றி வருபவர்களில், மேலே குறிப்பிட்ட நபரை போல் இல்லாமல்,

பணத்தை/லாபத்தை முக்கியமாக கருதாமல், பெற்றோர்கள் மீதும், சுற்றத்தினர் மீதும் அன்பு பாராட்டி, உதவி வருபவர்கள் எல்லாம், இந்துக்களில், கிறித்துவ கல்லூரிகளில் படிக்காத முஸ்லீம்களில், நானறிந்த வரையில், உயர்நிலைப் பள்ளி வரை, தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களே ஆவர்.

தமிழ்நாட்டில் முதலில் குறிப்பிட்டது போன்ற சுயநல மிருகங்கள் உருவான சமூக செயல்நுட்பமும், எனது ஆய்வில் இடம் பெற்றுள்ளது.

‘தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா?(எனது அனுபவங்கள் அடிப்படையில்) சுயலாப நோக்கில் மதம் மாறிய கிறித்துவர்களிடமிருந்து, இந்த சமூக செயல்நுட்பமானது, திராவிடக்கட்சிகளால் அகவயபடுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் தேசிய, இந்துத்வா உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் 'இயல்பில் திரிதல்' நோயை தொத்துநோயாக வளர்த்து வருகிறதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

ஆங்கிலவழிக்' கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள்'(http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ); தமது இயல்போடு ஒட்டிய வளர்ச்சியை தொலைத்து, உள்ளார்ந்த‌ ஈடுபாடுகள் (Passions) வாசமற்ற எந்திரர்களாக வெளிப்பட்டு.

மேற்கத்திய வழிபாட்டு போக்கானது, கிறித்துவர்களிடமும், விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கிலவழிக்கல்வி பயிலும் இந்துக்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரிடமும், மேற்கத்திய பாணி முற்போக்காளர்களிடமும், வளர்ந்து, தமிழ் மொழி, பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களிடமிருந்து, அவர்களை எல்லாம் அந்நியமயமாக்கி வருகின்றனவா? என்று அறிவுபூர்வமாக, திறந்த மனதுடன், விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

எந்த மொழியாக இருந்தாலும், மொழி என்பதானது, வெறும் பேசுவது, படிப்பது, எழுதுவது என்பதை தாண்டி;

ஒரு மொழியின் மூலமாக நமது சிந்தனை முறையும், கண்ணோட்டமும் மாற்றங்களுக்கு உள்ளாவதை (‘the language we speak affects the way we think, it also affects the way we view the world around us. We habitually formulate our perceptions of the world in language, according to the particular biases and prejudices inherent in whatever language we know. ‘)  கீழே குறிப்பில் உள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், கீழ்வரும் கருத்தானது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது தெளிவாகும்.

"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; பேச பழகுங்கள்; பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

அந்த ஆபத்திலிருந்து மீள, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டாமா? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html )

குக்கிராமங்களில் கூட ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வரும் தமிழ்நாட்டில்;

அதிகம் படித்த பெற்றோர்களின் அந்த ஆபத்தான திசையில், பாமரர்களும் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அந்த குழந்தைகள் எல்லாம், தமிழ் மொழி, பண்பாடு, வேர்கள் அற்று, வளர்ந்து, தற்கொலை, கொலை, போதை மாத்திரை, திருட்டு போன்ற சமூக நோய்களில், அதன் காரணமாவே சிக்கி;

அதிலும் தப்பித்து உயர்ந்த படிப்பில், உயர்ந்த வேலையில் சேர்ந்த பின்;

பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தை 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வியில்,  'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும் போக்கில்;

தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு.

அந்த போக்கினை முன்கூட்டியே உணர்ந்து, விழித்துக் கொண்டு, தமது குழந்தைகளை 5 வயது வரை எந்த பள்ளியிலும் 'கூண்டில்' அடைக்காமல்;

முதலாம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வியில் பயில வைக்கும் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இளம் பெற்றோர்களையும் நான் அறிவேன்.( http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html )

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்களாக, வரலாற்றின் சுயநினைவற்ற 'மீட்சிக்கான' கருவிகளாக, அவர்களை கருதி பாராட்டுகிறேன். அந்த போக்கில், பாராட்டப்படும் வகையில் வெளிவந்துள்ள காணொளி கீழே:

மேலே காணொளியில் பேசிய தாய் இசைமொழி, அந்த முடிவுக்கு எடுக்கும் முன், திரு.நலங்கிள்ளியுடன் நடத்திய உரையாடலில் ஒரு பகுதி கீழே:

இசைமொழி: அரசுப் பள்ளியில் படித்தால் ஒழுக்கம் கெடாதா?

நான் (திரு.நலங்கிள்ளி): அரசுப் பள்ளியில்தான் ஒழுக்கம் வரும். பகுத்துண்டு வாழும் ஓர்மைப் பண்பாட்டைப் பேணி நிற்பது யார் ? ஒடுக்கப்பட்ட மக்கள்தானே? இன்று அரசுப் பள்ளிகளில் பெருமளவுக்கு நிரம்பியிருப்பது அட்டவணைச் சாதியினர்தானே? அவர்களிடம் இல்லாத எந்த நற்பண்பை உயர் சாதியினரிடம் உங்கள் மகன் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறீர்கள். அரசுப் பள்ளி மறுப்பில் சாதிய ஆதரவு அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் இசைமொழி.

இசைமொழி: நீங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்வீர்கள். உங்கள் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்?

நான்: என் மகள் ஈரோடை, பறை இருவரும் படித்து வளர்வது மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில்தான். என்னிடம் இப்படி கேள்வி கேட்பவர்களிடம் துணிந்து சொல்வேன். அறிவுடனும் நற்பண்புகளுடனும் என் பிள்ளைகள் ஓங்கி நிற்பதற்கு, அவர்களுடன் படிக்கும் எளிய பாட்டாளிப் பிள்ளைகளே காரணம்.

இசைமொழி: கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாது, அரசுப் பள்ளிகள் சுகாதாரமில்லாமல் இருக்கின்றனவே?

நான்: உண்மைதான். சில அரசுப் பள்ளிகள் தூய்மைக் கேடாக இருப்பது உண்மைதான். ஆனால் ஏழைப் பிள்ளைகள், தாழ்ந்சாதிப் பிள்ளைகள் அங்கு படித்து துன்பப்பட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் சொகுசாகத் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது நல்ல மனநிலையா இசைமொழி? நீங்கள் தனியார் பள்ளிக்குச் செலவிடும் தொகையை உங்கள் மகன் படிக்கும் அரசுப் பள்ளிக்குச் செலவிடுங்கள். ஊதியத்துக்குத் துப்புரவுப் பணியாளர்களை அமர்த்துங்கள். இன்னும் மற்ற பெற்றோர்களிடம் பேசி, ஆசிரியர்களுடனும் கலந்துரையாடி பள்ளிக்கான முன்னேற்றங்களைத் திட்டமிடுங்கள். இது உங்கள் மகனிடமும் பொதுநோக்கை விதைக்கும்.

இப்படி இசைமொழி சரமாரியாகத் தொடுத்த வினாக்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்தேன். என்ன இசைமொழி, என் வீட்டில் வரும்போது உங்கள் முகத்தில் கோபம் தெரிந்தது. இப்போது சிறிது புன்னகை பூப்பது போல் தெரிகிறதே என்றேன்.

மேலே குறிப்பிட்ட ' சிக்னல்'கள் எல்லாம், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான ' சமூகவியல் புன்னகை'யாகவே எனக்கு தெரிகிறது. 

குறிப்பு:

“If you have ever tried to learn a new language, you might have noticed that it is not only about learning the alphabet, vocabulary and grammar. It also involves learning a new way of thinking and expressing yourself.

Language carries references to the culture to which it belongs and, by interacting with a language, we gain an insight into a particular culture……..Whorf said, “because the language we speak affects the way we think, it also affects the way we view the world around us. We habitually formulate our perceptions of the world in language, according to the particular biases and prejudices inherent in whatever language we know. Thus, language limits the way we perceive reality, the way we think about it, and the way we talk about it. But it need not do so. If we are aware of those limitations, we can compensate for them and view the world freshly and newly.”……….. From the above, we can see that if language affects the way we speak and is intimately related with culture, there will be a close relationship between the mind and culture through language. Looking at some ancient languages, we find that the more sophisticated the language is, the more developed the civilization, and perhaps the opposite is also true. George Orwell, who made a life-long study of language, held that “the decay of a civilization can be seen in the declining levels of sincerity in the words and minds of its citizens.” ” -  ‘Language and Culture’ -Article By Pinar Akhan; http://library.acropolis.org/language-and-culture/ 

மொழி, இலக்கணம், தொடர்பான மேலே குறிப்பிட்டது போன்ற ஆய்வுகளின் தொடர்பின்றி,

உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் தனித்தமிழ் அமைப்புகளும்,  'சுயநினைவற்ற' ஆபத்துகளே ஆகும்.( http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )