'ஆர்.எஸ்.எஸ் -ன் அலுவலகம் முற்றுகை' போராட்டம்:
தேச கட்டுமான
(Nation Building) சீர் குலைவினை
தடுக்குமா? துரிதப் படுத்துமா?
'பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு
22 கட்சிகள் ஒன்று சேர்ந்து, தமிழ்நாட்டில் 'ஆர்.எஸ்.எஸ் -ன் அலுவலகம் முற்றுகை' போராட்டம்
நடத்திய செய்தி வெளிவந்துள்ளது.
உச்ச
நீதி மன்ற உத்திரவின்படி, தமிழ்நாட்டிற்கு
தண்ணிர் தர மறுத்து வருவது
கர்நாடகத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ்
கட்சியே.
தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சிக்கு அதை கண்டிக்கும் துணிவில்லாத
நிலையில்;
சென்னையில்
உள்ள சத்தியமூர்த்தி பவனில் மேற்குறிப்பிட்ட கட்சிகள்
போராட்டம் நடத்திருந்தால், அப்போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மிகுந்திருக்கும்; (காலையில் கைது செய்யப்பட்டு, மாலையில்
விடுதலையானவர்களின் - 22 கட்சிகளை சேர்ந்தவர்களின்-
எண்ணிக்கை 325; http://www.eenaduindia.com/states/south/tamil-nadu/chennai-city/2016/09/21090444/325-arrested-for-attempting-to-lay-siege-to-RSS-office.vpf
)
தமது
முகத்தை காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாடு காங்கிரஸானது,
கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து அறிக்கை
வெளியிட்டிருப்பார்கள். அது கர்நாடக அரசுக்கு
தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மேற்குறிப்பிட்ட
அமைப்புகள் மோடியை கண்டித்துள்ளது போல,
சோனியா, ராகுலை கண்டித்து, அறிக்கையாவது
வெளியிட்டுள்ளார்களா?; காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தலைவரான, கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகர்ஜூன் கார்கே, உச்சநீதி மன்ற ஆணையை எதிர்த்து, கருத்து தெரிவித்துள்ள சூழலிலும். ( https://in.news.yahoo.com/sc-keeps-passing-non-implementable-orders-maintaining-law-024011907.html )
மத்திய
அரசில் காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்களைப்
போலவே, இப்போது பா.ஜ.க ஆட்சியில் , கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பவர்களும்,
காவிரிப் பிரச்சினையில் உச்சநீதி மன்ற ஆணைப்படி, தமிழகத்திற்கு தண்ணிர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
காங்கிரஸ்,
பா.ஜ.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில்;
அகில
இந்திய கட்சிகளின் அந்தந்த மாநில கிளைகள், எதிரெதிர் நிலைப்பாடுகள் எடுத்து வருவதானது,
இந்தியாவில் 'தேச கட்டுமானம்' சீர்குலைவதற்கு முக்கிய காரணமாகி வருவதை, ஏற்கனவே பதிவு
செய்துள்ளேன். (Is BJP aware of the derailing of the Indian nation building
process?; http://tamilsdirection.blogspot.sg/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html
)
காவிரிப்
பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான வன்முறையை
ஏவி விட்டவர்கள் யார்? யார்? என்பது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவர தொடங்கியுள்ளன.
“பெங்களூர் பற்றி எரிய காரணம் "கன்னட பிரகாஷ்"... கூடுதல் கமிஷனர் ரெட்டி
செய்த தவறு.. பரபர தகவல்கள்!”
அகில
இந்திய கட்சிகளின் மாநிலத்தலைவர்களே 'இந்தியர்' என்ற அடையாளத்தை புறக்கணித்து, 'கன்னடர்',
'தமிழர்' போன்ற மாநில அடையாளங்களை முன்னிறுத்தி வரும் சூழலில்,
அந்தந்த
கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களில் சிலர், 'வன்முறை'களில் ஈடுபடுவதில் வியப்பில்லை.
கர்நாடக
மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது, தமிழர்கள் மீதான வன்முறையைத் தூண்டியதாக ஊடகங்கள்
செய்திகள் வெளிவந்தனவா? அவ்வாறு வெளிவரவில்லையென்றாலும், சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை
முற்றுகையிட்ட கட்சிகள், தனிப்பட்ட முறையில் கண்டுபிடித்த, நம்பத்தகுந்த ஆதாரங்களை
வெளியிட்டுள்ளார்களா?
மேற்குறிப்பிட்ட
கேள்விகளுக்கு சரியான விடைகளை தர வேண்டிய நெருக்கடியை, முகநூலில் வெளிவந்துள்ள கீழ்வரும்
கருத்து ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில்
வெளிப்பட்ட ஒரு கருத்து:
“தண்ணீர்
தர மறுப்பது காங்கிரஸ். ஆனால் போராட்டம அரசியல்
கட்சி அல்லாத ஆர்.எஸ்.எஸ். க்கு எதிராக.
எல்லாம்
அந்நிய நிதியை நிறுத்தியதன் விளைவு.
எப்படியெல்லாம் காங்கிரசை காப்பாற்றுகிறார்கள், அதனிடம் மீள முடியாத
அடியை வாங்கிக் கொண்டே..!”
அதாவது
மேற்குறிப்பிட்ட கட்சிகளில் யார்
? யார்? வெளிநாட்டு
நிதியில், சோனியாவுக்கு சாதகமாக செயல்படும்
என்.ஜி.ஓக்களுக்கு (NGOs) நெருக்கமானவர்கள்?
'அந்த'
என்.ஜி.ஓக்களின் மீது,
வெளிப்படையான, கணக்கு பொறுப்புள்ள வகையில்(Transparency
& Accountability in funds & activities), தவறுகள் புரிந்தவர்கள் மீது, மோடி அரசானது,
நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில்;
'அந்த'
அமைப்புகளின் தூண்டுதலில், காவிரிப்பிரச்சினையை காரணம் காட்டி, மேற்குறிப்பிட்ட
போராட்டம் நடந்துள்ளதா? என்ற கேள்வியை;
மேற்குறிப்பிட்ட
முகநூல் பதிவு எழுப்பியுள்ளது.
ஈ.வெ.ரா எதிராக
செயல்படும் அமைப்புகளிலும், 'பெரியார்' கட்சிகளிலும் யார்? யார்? அந்த
'வெளிநாட்டு நிதி என்.ஜி.ஓ வலைப்பின்னலில்' இடம்
பெற்றுள்ளவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
இந்தியாவில் சட்டத்தின் செயல்பாட்டை(Rule of the Law) கேலிக்குள்ளாக்கி வரும், உச்சநீதி மன்ற ஆணைகளை, அந்தந்த மாநில 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில அரசுகள் 'செல்லாக் காசாக்கி' வரும் சூழலில்,-(http://swarajyamag.com/politics/cauvery-bcci-sahara-why-sc-orders-are-increasingly-being-defied-by-many );
அந்தந்த மாநில 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள் செல்வாக்குடன் வளர்ந்து வர, அகில இந்திய கட்சிகளின் மாநில கிளைகள் எல்லாம், அந்த போக்கிற்கு 'எதிர் நீச்சல்' போட அஞ்சி, 'அந்த போக்கின்' 'வால்களாக' பயணித்து வருகிறார்கள்; என்பது தான் இன்றுள்ள நிலைமையாகும்.
அந்தந்த மாநில 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள் செல்வாக்குடன் வளர்ந்து வர, அகில இந்திய கட்சிகளின் மாநில கிளைகள் எல்லாம், அந்த போக்கிற்கு 'எதிர் நீச்சல்' போட அஞ்சி, 'அந்த போக்கின்' 'வால்களாக' பயணித்து வருகிறார்கள்; என்பது தான் இன்றுள்ள நிலைமையாகும்.
அந்த
போக்கிற்கு எதிராக, முதல்முறையாக, கர்நாடக மாநில பா.ஜ.கவை கண்டித்து, தமிழக இந்துத்வா
ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், முகநூலில் வெளிவந்துள்ளன.
“இந்த
விஷயத்தில் பிஜேபியின் அணுகுமுறை "அப்பட்டமான ஓட்டுவங்கி அரசியல்" தான்.
சரிதான்..
ஆனால் இன்று சதானந்த கவுடா சொல்லியிருப்பதைப் பாருங்கள்.”
“முல்லை
பெரியார் பிரச்சனையின் போது பா.ஜ இரண்டு மாநில மக்களை ஒன்றிணைத்து மனித சங்கிலி நடத்தியது.
அதுபோல தற்போதும் நடத்த வேண்டும்.”
“கர்நாடகா
எரிகிறது. பிரதமர் அமைதிக்கு அழைப்பு விடுகிறார். உள்துறை அமைச்சர் அழைப்பு விடுக்கிறார்.
சோனியாவும் ராகுலும் ஏன் இன்னமும் வாய் திறக்கவில்லை ?”
அகில
இந்திய கட்சிகளின் சுயநல அரசியல் போக்கின்
காரணமாக, இந்தியாவில் தேச கட்டுமானது சீர்குலைவது,
என்பதன் காரணமாக;
தமது
நிதி உதவியில் செயல்படும் - இந்தியாவில் பயங்கரவாதிகளின், பிரிவினைவாதிகளின் 'மனித உரிமை காவலர்களாக'(?) வலம் வரும் - என்.ஜி.ஓக்கள்
துணையுடன், தேச கட்டுமான சிதைவு போக்கின் ஊடே, 'ஒன்றுபட்ட' இந்திய சந்தையின் (market) பலன்களை 'அனுபவித்து' வரும், உலக ஆதிக்க சக்திகள்
தமது சுயநலனுக்கு உகந்த
தருணத்தில், 'சோவியத் ஒன்றியம் பிளவுபட்டது போல', 'எளிதில்' இந்தியாவை சிதற'
வைக்க வாய்ப்புள்ளதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.
அவ்வாறு
இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் போது, அந்தந்த மாநில
'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள் '
ஆட்சி'களில், ஆப்பிரிக்க
நாடுகளை விட, மோசமான
நிலையை , இந்திய 'தனிநாடு'
மாநிலங்கள் அடையும்.
இந்தியாவில்
இன்று பணக்கார மாநில வரிசையில்
இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டில், பிற மாநில மற்றும் வெளிநாட்டினர் 'வளர்ந்து'
வருவதையும், 'திராவிட மன நோயாளிகளாக' தமிழர்கள் 'வீழ்ந்து' வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் (http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html
); தமிழ்நாட்டில் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும், 'திறமைசாலி' தமிழர்களில் பெரும்பாலோர், 'பிழைப்பிற்காக' - அவர்களில் பலர் குடும்ப வாழ்க்கையின் 'பலன்களை' துறந்து, 'பணம் ஈட்டும் எந்திரர்களாக' - வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வெளியேறும் போக்கில்; பணம் சம்பாதிப்பதற்காக, 'எதையும்' இழக்கத் தயாரான தமிழர்களின் எண்ணிக்கையானது, 'அதிவேகமாக' அதிகரித்து வரும் போக்கில்; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாதபடி;
'தமிழர் சமூக தற்கொலை' போக்கில், தமிழ்நாடு பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, நிபந்தனைகளுடன் பரோலில் சென்னை வந்த போது, சசிகலா ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்றுள்ளனர். (https://tamil.oneindia.com/news/india/sasikala-going-chennai-from-bengaluru-car-297784.html ) 2ஜி வழக்கில் டெல்லி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கனிமொழியை, சென்னை விமான நிலையத்தில் எண்ணற்ற தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். 1967க்கு முன், கட்சிகளில் வெட்கப்பட வேண்டியவைகளாக இருந்தவை எல்லாம், இன்று திராவிடக் கட்சிகளில் பாராட்டப்படுபவையாக மாறி உள்ளன.
'தமிழர் சமூக தற்கொலை' போக்கில், தமிழ்நாடு பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, நிபந்தனைகளுடன் பரோலில் சென்னை வந்த போது, சசிகலா ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்றுள்ளனர். (https://tamil.oneindia.com/news/india/sasikala-going-chennai-from-bengaluru-car-297784.html ) 2ஜி வழக்கில் டெல்லி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கனிமொழியை, சென்னை விமான நிலையத்தில் எண்ணற்ற தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். 1967க்கு முன், கட்சிகளில் வெட்கப்பட வேண்டியவைகளாக இருந்தவை எல்லாம், இன்று திராவிடக் கட்சிகளில் பாராட்டப்படுபவையாக மாறி உள்ளன.
எனவே
இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு
'நெருக்கமான', 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, தமிழ்நாட்டில் 'வளர்ச்சியில்'
வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும்
வெளிநாட்டின மக்களுக்கு- சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக, இன்றைய
தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில்
'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை. எனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும். இந்துத்வா முகாமில் அதற்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், எதிர்ப்பாக இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். 'அந்த' இன்னொரு இந்துத்வா பிரிவினரும், 'பெரியார் கட்சிகள்' உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பாளர்களும், ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும் கெடுத்து, தேச கட்டுமானத்தை சீர் குலைத்து வரும் திசையில், 'ஒன்றாக' பயணிக்கிறார்கள்; என்பதும் எனது 'அறிதல்' (Observation) ஆகும்.
வரலாற்றில்
நடைமுறையில் உண்மைகளை புறக்கணித்து, 'உணர்ச்சிபூர்வ கறபனைகளில்' பயணிக்கும் எந்த போக்கும், எதிரான விளைவுகளை சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது.
“What you think is what you
get...no matter how absurd. And then, reality imposes itself, and you get
something else altogether, often the exact opposite of what you wanted.
Reality doesn't care what you
think. Thoughts hardly matter. Reality happens whether you want it or not.
Nobody threatens his weatherman when the temperature falls; everyone knows it's
not his fault.” : https://www.equitymaster.com/diary/detail.asp?date=01/21/2016&story=2&title=Reality-Happens-Whether-You-Want-It-or-Not&utm_source=VKD&utm_medium=mail&utm_campaign=e-letter&utm_content=VKD
“1925இல் காங்கிரசிலிருந்து
வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா, தமது
'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, 1944இல்
'தடம்' புரண்டு, 'இனம், சாதி' தொடர்பான
மேற்கத்திய சூழ்ச்சி வலையில் சிக்கி, தாய்மொழி,
பாரம்பரியம், பண்பாடு போன்ற 'ஆணி
வேர்களையே', 'நோய்களாக' கருதி பயணித்து, தமிழர்களின்
'அகச்சீரழிவு போக்கை வேகமாக்கியதன்' விளைவானது,
தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வாய்ப்பை மேலும் பலகீனமாக்கியுள்ளதா? என்பதும்
ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html
)
அத்தகைய சூழலில், மேலே குறிப்பிட்டுள்ளவாறு, இந்தியாவானது சிதறலுக்கு உள்ளாகும் நிலையில், ‘தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு விதை போட்ட குற்றவாளி‘ என்ற வரலாற்றுப் பழிக்கு ஈ.வெ.ரா உள்ளாக வாய்ப்பிருப்பதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.
“வெள்ள
நிவாரணப் பணியில் பங்களித்த, கட்சிசாரா
இளைஞர்களும், மாணவர்களும், 'மூல காரணத்தை' தேடி,
கண்டுபிடித்து, அவர்களின் கோபமானது, சென்னை வெள்ளம் போல,
பெருக்கெடுப்பதற்கு முன், 'பெரியார்' சமூக
கிருமிகளிடமிருந்து, 'ஈ.வெ.ரா'வைக் காப்பாற்ற முடியுமா?
அதிலும் சுமார் 50 வருடங்களுக்கு முன் வெளிப்படுத்திய, 'தமிழ்,
மதுவிலக்கு, திராவிடர் 'இனம்' (?)' தொடர்பான நிலைப்பாடுகளை, ஈ.வெ.ரா
அறிவுறுத்தியபடி, 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு
உட்படுத்தாமல், இன்றும் அந்த பழைய
நிலைப்பாடுகளையே (சுயநல போக்கிலோ அல்லது
'திராவிட' மனநோயாளியாகவோ) முன்னிறுத்தினால், 'தமிழ், தமிழர்' பகையாக
'பெரியாரை' முன்னிறுத்தும், 'பெரியார் எதிர்ப்பாளார்களின்' சூழ்ச்சிக்கு துணை போய், 'பெரியாரை'
தமிழ்நாட்டு மக்களின் 'கோப வெள்ளத்திற்கு' இரையாக்கி
விடாதா, ம.பொ.சி,
பெங்களுர் குணா வழியில், வழக்கறிஞர்
பா. குப்பனின் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ.
ரா’ போன்ற நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும்
சூழலில்?”
வ.உ.சி, ஈ.வெ.ரா,
சத்தியமூர்த்தி,
வாஞ்சிநாதன்
உள்ளிட்ட எண்ணற்றோர்;
இந்திய விடுதலை போராட்டத்தின் மீது செல்வாக்கு செலுத்திய வெளிநாட்டு உளவு அமைப்புகளின்
வலைப்பின்னலில் சிக்கி, ‘சொகுசாக’ (http://tamilsdirection.blogspot.my/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html
) அல்லது பொதுவாழ்வில்
சொத்து சேர்க்கும் 'அரசியல் வியாபாரிகளாக' பயணித்தார்கள்
என்று அவர்களின் 'கொள்கை எதிரிகள்' கூட
குற்றம் சுமத்த மாட்டார்கள்.
அவர்களின்
தியாகங்கள் எல்லாம் 'அரசியல் வியாபாரிகள்' ஆதிக்கத்தில்,
தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழியும் விளைவில் முடிவதை அனுமதிக்கலாகுமா? அவர்களின் தியாகங்களை கருத்தில் கொண்டு, உலக உளவு அமைப்புகளின் வலைப்பின்னலின் செயல்பாடு பற்றியும், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, கொலை, தற்கொலை, திருட்டு உள்ளிட்டவை அதிகரிக்க 'வழி வகுக்கும்' வெளிநாட்டு இறக்குமதிகள் பற்றியும், 'மீடியா' வெளிச்சத்தில் வலம் வந்து, அம்பலப்படுத்தி வரும், எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை இனியும் தவிர்க்கலாகுமா?
சுயலாப
நோக்கற்ற, நேர்மையான சுயசம்பாத்தியமுள்ள, சமூக அக்கறையுள்ளவர்கள் எல்லாம்,
'உணர்ச்சிபூர்வ'
போக்குகளிலிருந்து விடுபட்டு, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதில் ஒன்றுபட்டு செயல்பட்டால், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீள வாய்ப்பு இன்னும்
இருக்கிறது;
என்பதே
எனது கருத்தாகும்.
"வரலாற்றில், மேற்குறிப்பிட்ட வகையில் வாழும், (நான் உள்ளிட்டு எவருக்கும்), ஒரு மனிதரின் சமூக பங்களிப்பில் ஏற்படும் விளைவுகள் ஆனவை, கீழ்வரும் காரணிகளைப் பொறுத்ததாகும்.
"வரலாற்றில், மேற்குறிப்பிட்ட வகையில் வாழும், (நான் உள்ளிட்டு எவருக்கும்), ஒரு மனிதரின் சமூக பங்களிப்பில் ஏற்படும் விளைவுகள் ஆனவை, கீழ்வரும் காரணிகளைப் பொறுத்ததாகும்.
1. சம்பந்தப்பட்ட மனிதரின் , அவருக்கு புரிந்த மற்றும் புரியாத, தனிமனித வரை எல்லைகள்(limitations);
2. அந்த வரை எல்லைகளுக்குட்பட்டு, சமூகத்தில் உள்ள ஆற்றல்களையும், செயல்பாட்டில் உள்ள விசைகளையும் கணக்கில் கொண்டு,உருவாக்கி செயல்படுத்தும் முழுசெயல் திட்டமும்(strategy), உடனடி செயல் திட்டமும்(tactics);
3. தனிமனிதரின் வரை எல்லைகளுக்கப்பால் உலகம், மற்றும் இயற்கை புலங்களில் உள்ள 'எதிர்பாரா' ஆற்றல்கள்(Energy) மற்றும் வெளிப்படும் விசைகள்(Forces);
4. மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்கும் மனிதரின் வயதாகும் போது, ஏற்படும் மாற்றங்கள் (Physically & mentally dependent) காரணமாக, அவர் ஏற்கனவே பயணித்த தடத்தில், பகுதியாக தடம் புரண்டு, வெளிப்படுபவை;
மேற்குறிப்பிட்ட காரணிகளின் செல்வாக்கின் தொகுவிளைவாக(Resultant), சமூக இயக்கவியலில் (Social Dynamics), மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவரின் பயணத்தில், ஏற்படுத்தும் 'திசை மாற்றமானது', தவறாக அமைந்து விட்டால், அழிவுபூர்வ விசைகளின் செல்வாக்கில், கால ஓட்டத்தில், சமூகத்திற்கு பாதகமான எதிர்த்திசையில் திருப்பும் சமூக சுழற்சிக்கு(social torsion) உள்ளாகி, அந்த தலைவருக்கும், அந்த சமூகத்திற்கும் கேடாக முடியுமா? என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்விற்கு, உதவும் தகவல்கள் வருமாறு:
[ஈ.வெ.ராவுக்கு கல்வி தொடர்பாக இருந்த வரைஎல்லைகள்(limitations) இல்லாத, லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட 'திசை மாற்றமானது'; 'தனி நாடு' (லீ குவான் யூ உள்ளிட்டு) கோரிக்கையின்றி, தனிநாடான சிங்கப்பூரில், சாலை சந்திப்புகளில் போலீஸ் பகிரங்கமாக லஞ்சம் வாங்கும் அளவுக்கு மோசமான நிலை; மலேசியா நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவு; என்ற நிலையிலிருந்து, இன்றுள்ள சிங்கப்பூராக எவ்வாறு முன்னேறியது? முன்மாதிரியாக வாழ்ந்த தலைவருக்கும், கட்சிக்கும், 'சுருதி பேதமின்றி' பயணித்தது முக்கிய காரணமா? என்பது தொடர்பான அரிய பாடங்களை தரவல்லதாக, லீ குவான் யூ வாழ்க்கை வரலாறும், சிங்கப்பூர் வரலாறும் அமைந்துள்ளன.]
திருப்பாதிரிபுலியூர் ஞானியார் ஸ்வாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் தமது 'குடிஅரசு' இதழை துவக்கியவர் ஈ.வெ.ரா ஆவார்.
http://www.tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/
( இதில் வியப்பென்னவென்றால், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்த நான், எனது இசை ஆராய்ச்சிகளின் போக்கில் , எதிர் திசையில், சைவத்தை நோக்கி பயணிக்கிறேன்.
http://www.musicresearch.in/categorydetails.php?imgid=137 &http://veepandi.blogspot.in/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html)
அதன்பின் ஈ.வெ.ரா திசை திரும்பி, அண்ணாதுரையின் வருகை காரணமாக, தமிழ்நாட்டில் 'புதிதாக' வெளிப்பட்ட கூடுதல் ஆற்றல்கள் பற்றி 'தவறாக' கணித்து, அவரை 'வளர்த்து', 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாக்கி, அதன் பின்விளைவுகள் சமூகக்கேடாகும் 'சுருதி பேத' அபாயத்தை உணர்ந்து, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் அதை வெளிப்படுத்தியது;
[ஈ.வெ.ராவுக்கு கல்வி தொடர்பாக இருந்த வரைஎல்லைகள்(limitations) இல்லாத, லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட 'திசை மாற்றமானது'; 'தனி நாடு' (லீ குவான் யூ உள்ளிட்டு) கோரிக்கையின்றி, தனிநாடான சிங்கப்பூரில், சாலை சந்திப்புகளில் போலீஸ் பகிரங்கமாக லஞ்சம் வாங்கும் அளவுக்கு மோசமான நிலை; மலேசியா நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவு; என்ற நிலையிலிருந்து, இன்றுள்ள சிங்கப்பூராக எவ்வாறு முன்னேறியது? முன்மாதிரியாக வாழ்ந்த தலைவருக்கும், கட்சிக்கும், 'சுருதி பேதமின்றி' பயணித்தது முக்கிய காரணமா? என்பது தொடர்பான அரிய பாடங்களை தரவல்லதாக, லீ குவான் யூ வாழ்க்கை வரலாறும், சிங்கப்பூர் வரலாறும் அமைந்துள்ளன.]
திருப்பாதிரிபுலியூர் ஞானியார் ஸ்வாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் தமது 'குடிஅரசு' இதழை துவக்கியவர் ஈ.வெ.ரா ஆவார்.
http://www.tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/
( இதில் வியப்பென்னவென்றால், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்த நான், எனது இசை ஆராய்ச்சிகளின் போக்கில் , எதிர் திசையில், சைவத்தை நோக்கி பயணிக்கிறேன்.
http://www.musicresearch.in/categorydetails.php?imgid=137 &http://veepandi.blogspot.in/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html)
அதன்பின் ஈ.வெ.ரா திசை திரும்பி, அண்ணாதுரையின் வருகை காரணமாக, தமிழ்நாட்டில் 'புதிதாக' வெளிப்பட்ட கூடுதல் ஆற்றல்கள் பற்றி 'தவறாக' கணித்து, அவரை 'வளர்த்து', 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாக்கி, அதன் பின்விளைவுகள் சமூகக்கேடாகும் 'சுருதி பேத' அபாயத்தை உணர்ந்து, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் அதை வெளிப்படுத்தியது;
பின் அதிலிருந்து, 'சமூக நன்மை' என்று கருதி, சறுக்கி, அடுத்த நடந்த மாநாட்டில், அண்ணாதுரையை சாரட்டில் உட்காரவைத்து, ஈ.வெ.ரா ஊர்வலத்தில் நடந்தது; அதன்பின் அந்த 'சறுக்கலால்' பலனில்லை என்று உணர்ந்து, மணியம்மையை 'வாரிசாக்கியது' (அன்று அமுலில் இருந்த இந்து சட்டப்படி, வாரிசாக்க ஆணென்றால் 'மகனாக' தத்து எடுக்கலாம்; பெண்ணென்றால் சட்டப்படி 'மனைவியாக்குவதன்' மூலமே தான் வாரிசாக்க முடியும்);
உண்மை தெரிந்தும், சமூகத்தின் 'பொது கருத்து' சூழலை பயன்படுத்தி, அண்ணாதுரையின் தி.மு.க வானது,( 'பெரியார்' எதிர்ப்பில் தி.மு.க வின் வால்களாக, - ராஜாஜியின் ஆசியோடு- செயல்பட்டு, பின் தி.மு.க ஆட்சியில் 'பலன்களும்'அனுபவித்த, ம.பொ.சி, ஆதித்தனார், போன்றோரின் 'தமிழர்' கட்சிகளும், துணை புரிய) ஈ.வெ.ராவை 'வெற்றிகரமாக' இழிவு படுத்த முடிந்தது;
அந்த போக்கில், உடல் அளவிலும்(physically), மன அளவிலும்(mentally) தனது சுயசார்பை பகுதியாக(partly) இழந்து, ஈ.வெ.ரா பிறர் சார்பானது;
என்று பகுத்தாய்ந்து தான், அவரை 'முன்மாதிரியாக' கொண்டு , நான் செயல்படுகிறேன்; ஒரு கூட்டு முயற்சியாக செய்ய வேண்டியதை, தனி ஆளாக முயலும்போது, தவிர்க்க முடியாமல் உள்ள வரை எல்லைகள் பற்றிய புரிதலோடு.
புதிய சான்றுகளின் அடிப்படையில், தவறு என்று பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்ளும் ஈ.வெ.ராவின் துணிச்சலை, என்னால் இயன்ற அளவு அகவயப்படுத்தி வாழ்வதால்; ஈ.வெ.ராவிற்கு இருந்த 'கல்வி' தொடர்பான வரைஎல்லைகள் எனக்கு இல்லையென்றாலும், அதையும் மீறி, மேற்குறிப்பிட்ட வரை எல்லைகளின் 'பாதகங்களும்' கால ஓட்டத்தில் வெளிப்படும், பிறர் பங்களிப்பால், 'சரி செய்யப்படும்' என்ற நம்பிக்கையில்."
No comments:
Post a Comment