தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8)
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்
“தமிழ்நாட்டில்
பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி, பெரும்பாலான, குறிப்பாக வசதி வாய்ப்புகளில்
உயர்ந்து வாழும் குடும்பங்களில், ஆங்கில வழி, மற்றும் திரிந்த மேற்கத்திய மோகத்தில்,
சமூக ஒப்பீடு நோயில் சிக்கியுள்ள பெற்றோர்களின் கனவுகளுக்காக, ஒரு வகையிலான சமூகச்
சிறைக் கூண்டுகளில் குழந்தைகள் வளர்வது சகிக்க முடியாத கொடுமையாகும்.” என்பதை முந்தையப்
பதிவில் பார்த்தோம். அதே போல், “ செல்வாக்குள்ள நபர்களிடம் நாய்போல் குழைந்து காரியம்
சாதிக்கும் திறமைகளை வளர்ப்பதில் அறிவு உழைப்பைக் குவியப்படுத்தி(focused) , செயல்பட
வைப்பது இந்த 'தரகு' நோயின் சிறப்பம்சமாகும்.” என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம். https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_15.html
தமிழ்நாட்டில்
பாரம்பரியப் பண்பாடு மதிப்புகளைக் காவு கொடுத்து, அந்த 'தரகு நோயில்' ஒப்பீட்டளவில்
பிராமணர்களை விட அதிகம் சிக்கியவர்கள் பிராமணரல்லாதோரே என்பதும்,அதில் 'தீவிரமாக சிக்கியுள்ளதாக'
நான் கண்டவர்கள் பெரும்பாலும் பெரியார் இயக்கத்தில் உள்ளவர்களாகவும், கிறித்துவர்களாகவும்
உள்ளார்கள் என்பதும் என் அனுபவமாகும். விரிவான சமுக ஆய்வின் மூலம் இது சரியா/ அல்லது
தவறா? என்பதும் வெளிப்படலாம்.( குறிப்பு கீழே)
“இன்று வரை தமிழிசை
தொடர்பான எனது ஆய்வுகளைப் பாராட்டி, ஊக்குவித்து, எதிர்பாராத உதவிகள் புரிந்து வருபவர்கள்
பிராமணர்கள், கர்நாடகம், ஆந்திரம்,வட மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களும், வெளிநாட்டு
அறிஞர்களுமே ஆவர்.” என்பதையும், இலங்கையைச் சேர்ந்த 'தமிழ் முற்போக்கு' பேரா.சிவத்தம்பி
உள்ளிட்டு தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் மத்தியில் எனது இசை ஆய்வுகளுக்குக் கிடைத்த 'வினோதமான
வரவேற்பு’ பற்றியும், 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்' என்ற தலைப்பில் பதிவு
செய்துள்ளேன். https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html
சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், சென்னைப்
பல்கலைக் கழகம் உள்ளிட்டு தமிழ்நாட்டில் எனது இசை ஆய்வுகள் தொடர்பான கசப்பான அனுபவங்கள், தமிழின் மீட்சி நோக்கில், பொது விவாதத்திற்கு உரியவை ஆகும்.
திராவிட
இயக்கத்தால் வளர்க்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கிய தமிழுணர்வு'
மேலேக் குறிப்பிட்ட 'தரகு நோய்' வளர்ச்சிக்கே உதவியுள்ளது என்பதையும், அதனால் தமிழ்நாட்டில்
அறிவுப்புலம் வறண்ட பாலைவனம் ஆகும் திசையில் பயணிப்பதையும், நோக்கி நான் ஆய்வுக்கவனம் செலுத்த, அந்த அனுபவங்களே
முக்கிய காரணமாகும். தமிழின் மரணப் பயணம் தொடங்கி விட்டதா? என்ற ஆய்வும் அந்த முயற்சியின்
தொடர்ச்சியே ஆகும். திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், விமர்சனங்களை வரவேற்றுப்
பயணிக்கும் அந்த ஆய்வு முயற்சியில் கீழ்வரும் வாய்ப்பு வெளிப்பட்டுள்ளது எனக்கே வியப்பாக
அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றி, தமிழின்
மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது என்பது எனது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
அது தவறு என்ற அறிவுபூர்வமாக நிரூபிப்பதை நான் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டுப்
பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்று எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ள வாய்ப்பானது,
தமிழ்நாட்டிலிருந்து சென்னையை இழக்க பிராமணர்கள் விடமாட்டார்கள் என்ற பெரியார் ஈ.வெ.ரா
அவர்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையுடன் ஒப்பிடக்கூடியதாகும். அதைப் பற்றி அடுத்து சுருக்கமாகப்
பார்ப்போம்.
இந்திய
விடுதலைக்குப் பின் இருந்த சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கேரளா உள்ளிட்டு அண்டை மாகாணங்களின்
பெரும்பகுதி இருந்தது. பின் 1953- இல் மொழிவாரி மாகாணங்கள் உருவான போது, சென்னையை ஆந்திர
மாநிலத்தில் சேர்க்குமாறு தெலுங்கர்கள் போராடினார்கள். அது தமிழ்நாட்டுக்கே சொந்தம்
என்று ம.பொ.சி உள்ளிட்டு தமிழர்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தில் பங்கேற்காத பெரியார்,
தமிழ்நாட்டு பிராமணர்கள் சென்னையைத் தமிழ்நாடு இழக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்றும்,
எனவே அதற்காக தாம் போராட வேண்டியத்தில்லை என்றும் தனது நிலையைத் தெளிவுபடுத்தினார்.
அதே போல் சென்னையைத் தமிழ்நாடு இழக்கவில்லை.
(During
the reorganization of states in India on linguistic lines, in 1953, Telugu
speakers wanted Madras as the capital of Andhra Pradesh and coined the slogan
"Madras Manade" (Madras is ours). The demands for the immediate
creation of a Telugu-speaking state were met with after Tirupati was included
in Andhra State and after the leaders who led the movement were convinced to
give up their claim on Madras.
எனவே
தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்
என்ற கணிப்பானது, தமிழ்நாட்டிலிருந்து சென்னையை
இழக்க பிராமணர்கள் விடமாட்டார்கள் என்ற
பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையுடன் ஒப்பிடக்கூடியதாகும்..
அது
போன்ற நிலையை பெரியார் மேற்கொண்டது பற்றிய சிறிய விளக்கத்தினை அடுத்து பார்ப்போம்.
தாய்மொழி, பாரம்பரியம்,பண்பாடு,வாழும்
நிலம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடைய அடையாளக் கூறுகள் ஆகும். “தமது
மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள்.
அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug
use) போன்றவை அதிகரிக்கும்.” (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)
என்ற
சான்றினையும் இத்தொடரின் முதல் பதிவில் பார்த்தோம். தமிழர் என்ற அடையாளத்திலுள்ள பல
கூறுகளில் தாய்மொழிக்கும், வாழும் நிலத்திற்கும், பாரம்பரியம் பண்பாடு போன்றவற்றிற்கும்
இடையே உள்ள 'சமூகவியல் முக்கியத்துவம்' வாய்ந்த நெருக்கமான தொடர்புகள் பற்றி பெரியாருக்கு
தெரியவில்லை.எனவே தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை
என்று கருதியதோடு, வாழும் நிலத்தின் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியவில்லை. எனவே
அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு 'தனித் தமிழ்நாடு' கிடைத்தாலும் பரவாயில்லை என்ற வகையில்
அவர் கருத்து தெரிவித்தார்.
இன்றும்
பெரியார் இயக்கத்தவர்கள் அந்த தவறான நிலைப்பாடுகளைத் திருத்தி, சரியான திசையில் பயணிக்க
விரும்புவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தென்பட்டால், அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழின்
மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், 'தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்'
என்ற கட்டுரையை உருவாக்கி தமிழ், தமிழுணர்வு, பெரியார் கொள்கை ஆதரவாளர்கள், இந்துத்வா
ஆதரவாளர்கள் உள்ளிட்ட எனது சமூக வட்டத்தில் சுற்றுக்கு விட்டேன்.இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட
வடிவம் (abridged version) 'சுதேசி செய்தி'
(நவம்பர் 2013) இதழில் வெளிவந்துள்ளது.
https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html
https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html
நன்கு
படித்து,பாரம்பரியப் பண்பாடு மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களை,
குறிப்பாக நன்கு படித்து பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து
வாழும் பிராமணர்களை, வாசகர்களாகக் கொண்டுள்ள இதழ் அதுவாகும்.
குழந்தைகள்
பிற்காலத்தில் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், படைப்பாளர்களாகவும் வர வேண்டுமானால்,
குழந்தைப் பருவத்தில் புலன் உணர்வுகள் தொடர்புள்ள மூளை வளர்ச்சி நன்றாக நடைபெற வேண்டும்.
அதற்கு 10 வயது வரை அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருப்பது நல்லது என்று உணர்த்தியுள்ள
உலக ஆய்வுகள் பற்றிய சான்றுகள் மேலேக் குறிப்புட்டுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
10 வயதிற்குப்பின் ஆங்கில வழியில் படிக்க வைத்தாலும் அந்த பலன்கள் உண்டு. மாறாக விளையாட்டுப்
பள்ளி முதல் ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த பலன்கள் கிடையாது.ஐ.ஐ.டி
நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெரும்பாலோர் இந்தி தாய்மொழியிலேயே பள்ளிக்கல்வி
கற்று, இந்தியிலேயே நுழைவுத் தேர்வு எழுதியவர்களா
என்பது பற்றியும், தமிழ்நாட்டில் விளையாட்டுப்
பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், 8- ஆவதிலேயே நுழைவுத் தேர்வு பயிற்சியைத்
தொடங்கினாலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மிகக்குறைவு என்பது பற்றியும்
தமிழ்நாட்டு பெற்றோர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்ட வேண்டும்.
இந்த ஆய்வுகளும், விவாதங்களும் தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின்
பார்வைக்குச் செல்லுமானால், முதலில் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளவை சரியா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வார்கள். உறுதிப்படுத்தியபின், தங்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத் தாய்மொழி
வழியில் படிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் மத்தியில் அப்படிப்பட்ட
ஆர்வம் வெளிப்பட்டுள்ளதை அறிந்தவுடன், சென்னையில் புகழ் பெற்ற 'பத்மா சேஷாத்திரி' போன்ற
கல்விக் குழுமங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழி, தெலுங்கு வழி, இந்தி வழி என்று
5ஆம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியும், 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியும்
இருக்குமாறு வகுப்புகள் துவங்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில்
உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் குடும்பப் பிள்ளைகள் அடிப்படைக்
கல்வியைத் தமிழ்வழியில் படிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் வழியில் பிராமணரல்லாத படித்த
பெற்றோர்கள் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அதன்பின் 'தமிழ், தமிழுணர்வு,
பகுத்தறிவு, திராவிட'க் கட்சித் தலைவர்களும் முக்கிய நபர்களும் தங்கள் குடும்பப் பிள்ளைகளையும்
தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள். அந்த போக்கு கிராமங்களிலும் பரவ, தமிழ்நாட்டில் கடந்த
பல வருடங்களில் படிக்க மாணவரின்றி மூடப்பட்ட/மூடப்பட்டு வரும் ஆயிரகணக்கான அரசுப் பள்ளிகள்
ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படும்.
இதில்
வியப்பென்னவென்றால், மேற்கூறிய வாய்ப்பின் சாத்தியம் பற்றி, கல்லூரி மாணவர்கள் முதல்
வயதான பிராமணரல்லாதோரிடமும், பெரியார் ஆதரவாளர்களிடமும் நான் கேட்ட போது, விதி விலக்கின்றி
அனைவருமே, 'பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் படிக்க வைத்தால், மற்றவர்கள்
அனைவரும் உடனே தங்கள் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள்' என்று கருத்துத்
தெரிவித்தார்கள்.
'சுதேசி
செய்தி'யில் எனது கட்டுரை வெளியானபின், தொடர்ந்து அது போன்ற கட்டுரைகளை வெளியிட்டு
வருகிறார்கள். சுதேசி இயக்கம்' இந்தியாவில் உள்ள குழந்தைகள் எல்லாம் தாய்மொழி வழியிலேயேப்
படிக்க வேண்டும் என்பதை ஆதரித்து செயல்படும் இயக்கமாகும். எனவே மேலேக் குறிப்பிட்டவாறு
அடிப்படைக் கல்வியில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்போக்கு முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்பது நிரூபணமாக வாய்ப்பிருக்கிறது.('Researchers Find Brahmins Speak Tamil Better than Most Others'; http://www.newindianexpress.com/cities/chennai/Researchers-Find-Brahmins-Speak-Tamil-Better-than-Most-Others/2016/02/17/article3281707.ece )
கோபம்,வெறுப்பு, பழி வாங்கல், மக்கள் மன்றத்தில் அறிவுபூர்வ விவாதததைத் தவிர்த்து புத்தகங்களை, திரைப்படங்களை அரசு தடை செய்யக் கோருதல் போன்ற 'உணர்ச்சி போதை'ப்
போக்குகளின் வளர்ச்சியும், ஆங்கில வழி வளர்ச்சி போக்கும் ஒரே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில்
நடந்துள்ளதா? என்பதும், அவை சமூக உளவியலில் ஒன்றையொன்று வளர்த்ததா? என்பதும் ஆய்விற்குரியவையாகும்.
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் துணையுடன் தமிழ்வழிக்
காப்பாற்றப்படும் போக்கில், உணர்வு போதைப் போக்குகள் வலிவிழந்து, மக்கள் மன்றத்தில்
அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படும் போக்குகள் வளர்ந்தால், வியப்பில்லை.
குறிப்பு:அந்த
விரிவான சமூக ஆய்வில் கீழ்வருபவை இடம் பெற வேண்டியவையாகும்.
தமிழக
வரலாற்றில், மண்டைக்காடு தவிர்த்து, இது வரை நடந்துள்ள சாதி/மத கலவரங்கள், பயங்கரவாத
சம்பவங்களில் ஈடுபட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் பெரும்பாலும் இந்துக்களாகவும்,
முஸ்லீம்களாகவும் இருந்தது உண்மையா? அக்கலவரங்களில் 'குற்றவாளிகளாக'க் கைது செய்யப்பட்டவர்களின்
மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும், வழக்குகளில் ஆதரவு கொடுத்தும் வருபவர்கள் பெரும்பாலும்
வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்.ஜி.ஓ(N.G.O) கிறித்துவர்களே என்பதும் உண்மையா? அவர்கள்
சாதி/மத ஒற்றுமை, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு துணை நின்றிருக்கிறர்களா? வீர
சவர்க்கார் எழுதிய 'எரிமலை' நூலில், முதல் இந்திய விடுதலைப் போரில் தியாகத்துடன் பங்கேற்ற
இந்துக்கள், முஸ்லீம்கள் பற்றியும், துரோகம் செய்த இந்துக்கள், முஸ்லீம்கள் பற்றியும்
விருப்பு வெறுப்பின்றி சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார். வடநாட்டு கிறித்துவர்கள்
பற்றி ஒரு குறிப்பும் அந்த நூலில் இல்லை. ஒரு வேளை அந்த போர் தமிழகம், கேரளம் உள்ளிட்ட
பகுதிகளிலும் விரிந்திருந்தால் அதற்கான வாய்ப்பு வந்திருக்கலாம்.
ஐயா
ReplyDeleteயாரும் வைதீக பிரமணர்களுக்காக காத்திருக்க வேண்டாம். இது “பெரியாரிசம்” தரும் நச்சு - எல்லாவற்றிற்க்கும் பிராமணர்கள்தான் பொருப்பு என்பது. இதுவே ஈ.வெ.ரா.வின் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி, தங்களுக்கு பிரியமான சப்ஜெக்டுகளை தமிழிலேயே எழுதினால் , அது முதல் படி. இதில் “தூயதமிழ்” ஆட்களின் உணர்சிமிக்க, பின் நோக்கிய கருத்துகளையும், கோஷங்களையும் சட்டை செய்யாமல் இருந்தால் போதும். “தூயதமிழ்” ஆட்கள் தமிழை அழிவின் விளிம்பிற்க்கு அழைத்து சென்றுவிட்டனர்
விஜயராகவன்.
பிழை திருத்தம்
ReplyDelete”இதுவே ஈ.வெ.ரா.வின் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி” என்பதை ”எல்லோரும் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி” என படிக்கவும்.
வி
ஐயா,
Delete'தமிழ், தமிழ் வழிக்கல்வி'க்கு ஆதரவாக மேடையில் பேசுவதை,இதழ்களில் எழுதுவதைத் தமது குடும்பத்தில் நடைமுறைப்படுத்தாதன் மூலம், தமிழ்/திராவிட இயக்கத்தினர் தமிழின் மரணப் பயணத்தைத் தூண்டிய குற்றவாளிகள் ஆனார்கள். கூடவே சாதாரணத் தமிழர்களின் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள். தமிழின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்கு,
“இதுவே எல்லோரும் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி தமிழிலேயெ பேசி, தங்களுக்கு பிரியமான சப்ஜெக்டுகளை தமிழிலேயே எழுதினால் , அது முதல் படி. இதில் “தூயதமிழ்” ஆட்களின் உணர்சிமிக்க, பின் நோக்கிய கருத்துகளையும், கோஷங்களையும் சட்டை செய்யாமல் இருந்தால் போதும். “தூயதமிழ்” ஆட்கள் தமிழை அழிவின் விளிம்பிற்க்கு அழைத்து சென்றுவிட்டனர். “என்பது சரியே. பிராமணர்கள் பற்றிய விவேகானந்தரின் கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.
swami vivekananda's view on ‘Brahmins’
THE FUTURE OF INDIA
Volume 3, Lectures from Colombo to Almora
“The Brahminhood is the ideal of humanity in India, as wonderfully put forward by Shankaracharya at the beginning of his commentary on the Gitâ, where he speaks about the reason for Krishna's coming as a preacher for the preservation of Brahminhood, of Brahminness.
It is the duty of the Brahmin, therefore, to work for the salvation of the rest of mankind in India. If he does that, and so long as he does that, he is a Brahmin, but he is no Brahmin when he goes about making money. You on the other hand should give help only to the real Brahmin who deserves it; that leads to heaven. But sometimes a gift to another person who does not deserve it leads to the other place, says our scripture.
You must be on your guard about that. He only is the Brahmin who has no secular employment. Secular employment is not for the Brahmin but for the other castes. To the Brahmins I appeal, that they must work hard to raise the Indian people by teaching them what they know, by giving out the culture that they have accumulated for centuries. It is clearly the duty of the Brahmins of India to remember what real Brahminhood is. As Manu says, all these privileges and honours are given to the Brahmin, because "with him is the treasury of virtue".
But it is one thing to gain an advantage, and another thing to preserve it for evil use. Whenever power is used for evil, it becomes diabolical; it must be used for good only. So this accumulated culture of ages of which the Brahmin has been the trustee, he must now give to the people at large, and it was because he did not give it to the people that the Mohammedan invasion was possible.
It was because he did not open this treasury to the people from the beginning, that for a thousand years we have been trodden under the heels of every one who chose to come to India. It was through that we have become degraded, and the first task must be to break open the cells that hide the wonderful treasures which our common ancestors accumulated; bring them out and give them to everybody and the Brahmin must be the first to do it. There is an old superstition in Bengal that if the cobra that bites, sucks out his own poison from the patient, the man must survive. Well then, the Brahmin must suck out his own poison.”
அன்புடன்,
செ.அ.வீரபாண்டியன்
எனது மண்ணிலும் பாரம்பரியத்திலும் பண்பாட்டிலும் வேர்பிடித்த ஒரு சமூக அறிவியல் ஆய்வாளனாக முனைவர் வீரபாண்டியன் அவர்களது ஈவெராவைப்பற்றிய அவதானிப்பை துல்லியமானது என்று கருதுகிறேன். "தாய்மொழிக்கும், வாழும் நிலத்திற்கும், பாரம்பரியம் பண்பாடு போன்றவற்றிற்கும் இடையே உள்ள 'சமூகவியல் முக்கியத்துவம்' வாய்ந்த நெருக்கமான தொடர்புகள் பற்றி பெரியாருக்கு தெரியவில்லை". இது சரியானது துல்லியமானது. "எனவே தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை என்று கருதியதோடு, வாழும் நிலத்தின் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியவில்லை". இந்த விளக்கம் ஆய்வுக்குறியது. ஈவெரா மேற்குலகின் விழுமியங்கள்(மதிப்புகள்), சட அறிவியல் மற்றும் பொருள்துறையில் அவர்கள் அடைந்த வியத்தகு வளர்ச்சியை வியந்தார். அவர்களது வளர்ச்சிக்கு அவர்களது விழுமியங்களே குறிப்பாக மறுமலர்ச்சிக்குப் பின்னதாய பகுத்தறிவு முனைப்பே காரணம் என்று கருதியதாக இருக்கலாம்.
ReplyDeleteஸ்ரீ ராஜேஷ் ராவ் அவர்கள் பரிந்துறைத்த படிக்கு இந்த ப்ளாக்கை வாசிக்க நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteயதார்த்தங்களை காய்த்தல் உவத்தலில்லாமல் பகிர விழையும் தங்களது பதிவுகளுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னர் பத்ரிநாத் யாத்ரையாக சென்றிருந்தேன். ப்ரம்மசாரியாக தனிமையில் சென்றிருந்தேன். அங்கிருந்த அஷ்டாக்ஷரி மடத்தில் தங்கியிருந்தேன். விடியற்காலை நேரம். பல்லாண்டு பல்லாண்டு என்று அடியார்கள் குழாமாக திருப்பள்ளியெழுச்சி சேவிப்பது காதில் ஒலிக்க அடித்துப் பிடித்து எழுந்து ......... விடுவிடென மடத்திலேயே ஒரு காக்காய் குளியல் போட்டு சன்னதிக்குச் சென்றேன். அத்தனை பேரும் பக்கத்து மாகாணத்து ஆந்திரக்காரர்கள். தெலுகினை தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாம் பல்லாண்டு பாசுரத்தில் *டு*வினை குற்றியலுகரமாக ஒலிப்போம். குற்றியலுகரத்தில் பழக்கமில்லாத அந்த அடியார்கள் முழு உகரமான ஒலிப்புடன் அதை ஓதினார்கள். அஹங்காரத்தில் ஆட்பட்டிருந்த எனக்கு ஒரு மெல்லிய முறுவல். அப்படி இப்படிப் பார்க்கையில் பலர் கையில் புத்தகங்கள். அதைப்பார்த்தே பாசுரங்களை வாசித்தார்கள் எனத் தெரிய வந்தது. நித்யானுசந்தானத்துக்கு வேண்டிய அனைத்து பாசுரங்களும் தெலெகு லிபியில் அச்சிடப்பட்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது. பூஜைகள் முடிந்து தீர்த்தம் பெற்று சடாரி வாங்கிக்கொண்டேன். அங்கிருந்த பூஜாரியுடன் ஹிந்தியில் சம்பாஷித்த போது ஆச்சரியம் இன்னமும் அதிகரித்தது. அவர் பெயர் ஸ்ரீ பாகவதாசார்யர். அவர் நேபாள ப்ராம்மணர். தென் கலை சம்ப்ரதாயத்தைச் சார்ந்த த்ரிதண்டி ஸ்ரீமன் நாரயண ஜீயர் ஸ்வாமிவாரு எனப்படும் சின்னஜீயர் ஸ்வாமிவாரு அவருடைய மடத்தின் பத்ரிநாத் கிளை அஷ்டாக்ஷரி மடமும் அதில் உள்ள ஆலயமும் எனத் தெரிய வந்தது. நேபாளியான ஸ்ரீ பாகவதாசார்யருடைய ஐந்து வயது மகன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அருகில் வந்தான். ஆப் கா நாம் க்யா ஹை என்று அந்த சிறுவனிடம் வினவினேன். அந்தக்குழந்தை சொன்ன பதில். *********அடியேன் ராமானுஜதாஸன் பத்ரிநாராயணன்***** என்று. வியப்புகள் பெருகிக்கொண்டே சென்றன. அந்த நேபாள ப்ராம்மணரான ஸ்ரீ பாகவதாசார்யர் ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமிகள் நடத்தி வந்த விஜயவாடா பாடசாலையில் படித்ததாகச் சொன்னார். விஜயவாடா ஆந்த்ரத்தில் இருப்பதால் நாலாயிரத்தையும் தெலெகு லிபியில் அத்யயனம் செய்ததாகச் சொன்னார். குற்றியலுகரத்துக்குப் பிழை கண்ட குறுமதி தாழ்ந்தது. கண்கள் பனித்தன. எம்பெருமானார் நம்முடைய கலாசாரத்துக்கு இட்ட அஸ்திவாரம் கண்களிலிருந்து தாரையாக வழிந்தது.
நேபாளத்து ப்ராம்மணர் தெலெகு லிபியில் திவ்யப்ரபந்தம் முழுவதையும் அத்யயனம் செய்ததும்....... அவருடைய சிறுவயது மகன் கூட பண்பாடு பிறழாமல் *****அடியேன் ராமானுஜதாஸன்******* என்ற விகுதியுடன் தன்னுடைய பெயரைச் சொல்லியதும் என்வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்கள். இன்று வரை தமிழ் வாழ்கிறது என்றால் உடையவர் இட்ட அஸ்திவாரத்தால் என்று கூரை மீது ஏறிச்சொல்வேன்.
நான் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சாராத சாமானியன் என்பதையும் அந்த சம்ப்ரதாயத்தின் மீது அளவுகடந்த மதிப்புள்ளவன் என்பதையும் கூட குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்கிறேன்.
ஆழ்வார் திருவடிகளே சரணம் அடியேன் சரணம்
ஆண்டாள் திருவடிகளே சரணம் அடியேன் சரணம்.