Monday, December 12, 2016



தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில்: 

'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா?


இன்று நாம் வாழும் தமிழ்நாடானது, ஒரு காலத்தில், தலைவர்களிடம் அவர்களின் நிலைப்பாடுகளை விமர்சித்து, நேரடியாக கேள்விகள் எழுப்பி, விளக்கங்கள் பெறும் அறிவுபூர்வ திசையில் பயணித்தா? என்ற வியப்பும், இன்பமும் தரும் ஆய்வில் ஈடுபட விரும்புபவர்கள் எல்லாம், 1925 முதல் 1944 வரை வெளிவந்த 'குடிஅரசு' உள்ளிட்டு, ஈ.வெ.ரா அவர்கள் வெளியிட்ட இதழ்களை படிக்கலாம்.

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் அவற்றை அனுபவித்த என்னை விட, அவற்றில் ஆழ்ந்த புலமை உள்ளவர் தஞ்சை மருதவாணன் அவர்கள் ஆவார்.(குறிப்பு கீழே) அவர், தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்திய கீழ்வரும் 'புலன் அறி தகவல்'(Observation) எனக்கும் வியப்பானது.

‘ஒருவரை மேடையில் வைத்துக் கொண்டு, 'அய்யா' (ஈ.வெ.ரா) 'அதீதமாக' புகழ்ந்து பேசினால், அந்த நபர் புகழுக்கு மயங்குபவர் என்றும், அதைப் பயன்படுத்தி, சமூகத்திற்கு நன்மை செய்ய அய்யா முயல்கிறார்' என்றும் அர்த்தம். திராவிடர்/திராவிட கட்சிகளில், 'அந்த பலகீனங்கள்' இருந்த தலைவர்கள் யார்? யார்? மேற்கண்ட செயல்நுட்பத்தில் ஈ.வெ.ரா பெற்ற வெற்றி, தோல்விகள் யாவை? அவற்றால் தமிழ்நாட்டிற்கு விளைந்த சாதக, பாதகங்கள் யாவை? என்ற ஆய்விற்கான நேரமும் வந்துவிட்டதாக கருதுகிறேன்.

எனவே ஈ.வெ.ரா அவர்கள் எதையும், யாரையும் புகழ்வதும், கண்டிப்பதும் அவரது சமூக பயணத்தில் இடம் பெற்ற தனித்துவமான செயல்நுட்பம்(mechanism) ஆகும். காந்தியை அவரின் மரணத்திற்கு முன் கடுமையாக கண்டித்ததும், மரணமடைந்த காந்தியை வானளாவ புகழ்ந்ததும், அதன்பின் அவர் படத்தை எரித்தல், காந்தி பொம்மையை உடைத்தல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்ததும் முரண்பாடல்ல, என்பது அந்த செயல்நுட்பத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும். 

அந்த புரிதல் அந்த கால பிராமணர்களுக்கும் இருந்தது. எனவே தான், இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவினை ஈ.வெ.ரா அவர்கள் பகிரங்கமாக கோரி, அவரகள் ஆதரவையும் பெற முடிந்தது. அந்த புரிதலானது, இந்த கால 'பெரியார்' கொள்கையாளர்களுக்கும், பிராமணர்களுக்கும்  இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நானறிந்தது வரையில், உலகில், வேறு எந்த தலைவரும் அந்த செயல்நுட்பத்தை விளங்கி, பயன்படுத்தவில்லை. எனவே மேற்கத்திய குறிப்பாய(Western Paradigm) அடிப்படையில், ஈ.வெ.ராவை ஆய்வு செய்பவர்கள் எல்லாம், அதை முரண்பாடாகவே கருதுவதில் வியப்பில்லை.

'பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு' உள்ளிட்டு, எதையும் ஈ.வெ,ரா தனது சுயலாபத்திற்காக செய்தார், பேசினார் என்று, அவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட, அவர் மீது குற்றம் சுமத்தியதில்லை.

ஈ.வெ.ரா அவர்கள் உள்ளிட்டு எவர் தொடர்பாகவும்,  எனது பதிவுகளில் எழுப்பப்படும் கேள்விகளும், பாராட்டுகளும், கண்டனங்களும் மேற்குறிப்பிட்ட வகையிலானவையாகும், எனது பதிவுகள் தொடர்பாகவும், அதே வகையில் கேள்விகளையும், பாராட்டுகளையும், கண்டனங்களையும் வரவேற்கிறேன்.

அண்ணாவின் 'தீ பரவட்டும்' நூலைப் படித்தவர்கள் மனதில், அவர் 1967இல் முதல்வரான பின், அவரது ஆட்சியில் சென்னை மெரினாவில் கம்பருக்கு சிலை வைத்தது சரியா? என்ற கேள்வி எழாமல் இருந்தால் தான் வியப்பாகும்.

1949-இல் தி.மு.க தோன்றிய பின், 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயல்படும்' என்ற அறிவிப்பை அறிந்தவர்களுக்கும், அந்த‌ கேள்வி எழாமல் இருந்தால் தான் வியப்பாகும்.

“'திராவிட கவர்ச்சி அரசியலில்' தமிழர்களின்  தாய்மொழி,பாரம்பரியம்,பண்பாடு போன்ற ஆணிவேர்கள், தி.மு.க வளர்ந்த வேகத்தில், எந்த அளவுக்கு சிதைந்தன‌? என்பதும் ஆய்விற்குரியாகும்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த தவிர்க்க முடியாத வரை எல்லைகள் (limitations) காரணமாக, தமக்கிருந்த அறிவு நேர்மையுடனும், சமூக பொறுப்புடனும் அவர் மேற்குறிப்பிட்ட ஆணிவேர்கள் தமிழர்க்கு கேடானவை என்று அறிவித்தார்.  தி.மு.க, 'இரட்டைக்குழல்' துப்பாக்கியாக, பெரியாரின் அந்த நிலைப்பாடுகளை ஏற்று செயல்பட்டார்களா?  பெரியாருக்கிருந்த‌ வரை எல்லைகள் இல்லாத அண்ணதுரைக்கு, பெரியாரின் அந்த நிலைப்பாடுகள் தவறு என்று தெரியவில்லையா? தெரிந்து பெரியாருக்கு அதை தெளிவுபடுத்த என்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதை செய்யாமல், சேர, சோழ, பாண்டிய அரசர்களையும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களையும் 'கவர்ச்சி தமிழ், கவர்ச்சி தமிழ் உணர்வு' என்று சிறைபிடித்து, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்ததில், தி.கவை விஞ்சி, தி.மு.க சாதனை படைத்ததா? அந்த சாதனையின் அடித்தளத்திலேயே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்வழிக் கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சமூக புற்று நோய்' போல் அதிவேகமாக பரவியதா? அந்த புற்றுநோயில் சிக்கி, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், குற்ற உணர்வே இல்லாமல், மேடைப்பேச்சில், எழுத்தில், 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாகவும், புரவலர்களாகவும் வெளிச்சம் போடும் 'தமிழ்வேர்க்கொல்லிகள்' போல், தமது சுயநல 'தமிழுணர்வு கணக்குகளில்' தமிழைச் சிறைபிடித்து, வளர்ந்தார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html )

சங்க காலம் முதல் அரசர்கள், பின் காலனி, அதன்பின் காங்கிரஸ் ஆட்சிகள் வரை, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிற்கு ‘சட்டபூர்வ பாதுகாப்பு’ அமுலில் இருந்தது. பின் 'திராவிட' ஆட்சிகளில், அந்த சட்டபூர்வ பாதுகாப்பானது,   ஊழல் அரசியல் கொள்ளைக்காக, (சுயசம்பாத்திய தகுதி, திமைகள் இல்லாதவர்களால்) நீக்கப்பட்டு, ஊழலின் கோரப்பசிக்கு இரையாகும் போக்கானது, 1967இல் முளைவிடத் தொடங்கியதை உணர்ந்த, வருந்திய‌ அன்றைய முதல்வர் அண்ணா;

“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த (முளையிலேயே கிள்ளும்) வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் ஏன் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க விரும்பினார்கள்? என்ற ஆய்வினை, அவர்களின் விசுவாசிகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? இல்லையென்றால், அதே காரணங்களால் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் ஏற்பட்ட சீரழிவிற்கு, அவர்களும் பகுதி பொறுப்பாளிகள் ஆக மாட்டார்களா? என்ற கேள்விகளை, அவர்களில் சுயலாப நோக்கற்ற சமூக பற்றாளர்கள், இன்றாவது பரிசீலிப்பார்களா?

மேலே குறிப்பிட்ட முளையானது வீரியமாக வளர்ந்து வெளிப்பட்டுள்ள பல ஊழல்களில் ஒன்று 2G ஊழலாகும். ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய பெரும் அரசியல்வாதிகள் எல்லாம் பெரும்பாலும், போதுமான சாட்சிகள் இல்லை, பிறழ் சாட்சிகள் போன்ற காரணங்களால் தண்டனைக்குள்ளாகாமல், 'விடுதலை'யாகி, தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் ஊடகங்களில் அரங்கேறி வருகின்றன. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு, கொள்கை போராட்டம் அடிப்படையில், 'தலித்' மற்றும் 'ஆரிய‍ திராவிட' மோதல் கவசத்தில், பாதுகாக்கும் முயற்சியானது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே நடந்துள்ளது; தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் பங்கேற்புடன்  (http://mediavigil.blogspot.in/2010_11_01_archive.html?view=classic )

முதல்வர் ஜெயலலிதா மறைவதற்கு முன், தமிழ்நாட்டில் ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டிய தூண்கள் எல்லாம், எவ்வாறு சிதைந்துள்ளன? என்பதை, கீழ்வரும் பேச்சில், தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவ்வாறு ஆட்சி நடத்திய முதல்வருக்கு உறுதுணையாக இருந்த, சசிகலாவை ஆதரித்து, அதே கொள்கை போராட்டம் அடிப்படையில், 'ஆரிய திராவிட' மோதல் கவசத்தில், பாதுகாக்கும் முயற்சியிலும் கி.வீரமணி அவர்கள் ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

“ பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் !’

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.”

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."; http://tamil.thehindu.com/tamilnadu

முதல்வர் ஜெயலலிதா பெங்களுரில் சிறையில் இருந்த காலத்தில், குக்கிராமத்திலிருந்து வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, தனது கிராமத்தில், 'சசிகலா செய்த தவறுக்காக தான், அம்மா (ஜெயலலிதா) சிறைக்கு போக நேரிட்டது' என்று, தமது கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் பேசிக் கொள்வதாக‌, தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தன.பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோவில் எப்படி அந்த சதிகாரர்களை மட்டும் சசிகலா அனுமதித்தார்? அமைச்சர்களையும், கவர்னரையும் கூட ஏன் அனுமதிக்கவில்லை? 74 நாட்கள் ஜெயலலிதா முகத்தை புகைப்படம்/வீடியோ மூலமாக கூட காட்டவில்லை? எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது கூட, அவர் சிகிச்சை பெறும் வீடியோ வெளிவரவில்லையா? இவை எல்லாம் ஊடகங்களில் வெளிவந்து, குக்கிராமங்கள் வரை ஊடுருவி விட்டன. இப்போது சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பற்றியும், அதை ஆதரிக்கும் வைகோ, கி.வீரமணி போன்ற பிற கட்சிகளின் தலைவர்களைப் பற்றியும், மக்கள் என்ன நினைப்பார்கள்?   
(http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html

தமிழ்நாட்டில் ஆதாயத்தொண்டர்களின் வலைப்பின்னலையே 'பலமாகக்' கொண்டு, மற்ற கட்சிகள் பயணிக்க, கூடுதலாக மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயணித்து, எம்.ஜி.ஆரையும் விஞ்சி தேர்தலில் சாதனைகள் படைத்தார். இப்போது சசிகலாவை முன்னிறுத்துவதன் மூலம், அந்த வலைப்பின்னலானது, அந்த 'மக்கள் செல்வாக்குடன்' மோதல் போக்கில், பயணித்து, சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும், வைகோ, விஜயகாந்த் போல, வீழ்ச்சியைச் சந்திப்பார்களா? அல்லது வெற்றி பெற்று, தி.மு.கவை 'அந்த வீழ்ச்சியைச்' சந்திக்க வைப்பார்களா?  என்பது அடுத்து வரும் தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். 

ஜெயலலிதாவின் 'தனிமனித மக்கள் செல்வாக்கிற்கும்', அவரது கட்சியின் 'சுயலாப ஆதாய வலைப்பின்னலுக்கும்' இடையே, தமிழ்நாட்டில்  வெவ்வேறு ஊர்களில் இருந்த வெவ்வேறு விதமான பிணைப்புகள்(Bonds) எல்லாம் ;

எந்த அளவுக்கு, எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறது? என்பதைப் பொறுத்தும்;

இந்திய அரசியல் சட்டப்படி, கவர்னரின் கண்காணிப்பில் முதல்வராக பணியாற்றும் தகுதி உள்ள வரையில் மட்டுமே, ஒருவர் முதல்வராக இருக்க முடியும், என்ற நிலையிலும், தமிழக கவர்னர், தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்க்க, அப்போல்லா மருத்துவமனை சென்று, முதல்வரை பார்க்க முடியாமல் திரும்பியது யார் குற்றம்? என்ற கேள்விக்கு விடை கண்டு, உச்ச நீதி மன்றம் தனது மானத்தைக் காப்பாற்றுவதை, அதில் தவறுவதைப் பொறுத்தும்;

சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களின் 'தலை எழுத்தும்' நிர்ணயமாகும்.

தமிழில் மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்' என்ற சொல்லை, ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்'(Race)  என்ற பொருளில் திரித்து, 'ஆரியர் -திராவிடர்'  என்ற இனச்சிக்கலை காலனிய நலன்களுக்காக உருவாக்கிய சூழ்ச்சிகள் பற்றிய சான்றுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளது பற்றியும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

ஏற்கனவே 'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிகரித்து வரும் சூழலில் (http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html   );

ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எல்லாம், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில், கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வரும் சூழலில்,

2G ஊழல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை பாதுகாக்கவும், சசிகலாவை பாதுகாக்கவும்;

தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள், அத்தகையோருக்கு உதவ முற்படுவதும், அதன் விளைவுகளை சந்திப்பதும் அவரின் உரிமையே என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த முயற்சியில், கொள்கை போராட்டம் அடிப்படையில், 'ஆரிய திராவிட' மோதல் கவசத்தை கையாளுவதானது, அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டிய 'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை;

தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில், கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா? அதிலும் பணம் சம்பாதிக்க, எவர் காலிலும், எப்போதும் விழ போட்டி போடும், அவமரியாதை தமிழர்கள் எல்லாம் எண்ணிக்கையில் வளர, 'அந்த கவசம்' பயன்படலாமா? 

குறிப்பு :

பாரதிதாசனின் 'குயில்' இதழில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. திருவள்ளுவரின் உருவம் என்று ஓவியமாகவும், சிலையாகவும் வெளிப்படுத்தியுள்ளவை எல்லாம், அடிப்படையிலேயே தவறானவை, என்று உரிய சான்றுகளுடன், அவர் என்னிடம் ஒருமுறை விளக்கி, என்னை வியப்பில் ஆழ்த்தினார். அது சரி என்றால், என்ன அரசியல் லாபங்களுக்காக, ஓவியமாகவும், சிலையாகவும் 'திருவள்ளுவர்' முன்னிறுத்தப்பட்டார்? அதன் மூலம்,  உணர்ச்சிபூர்வ வழிபாட்டுப் போக்கில், திருக்குறளும் பலியாகியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்
. (தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்''; http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

Tuesday, December 6, 2016


முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும் மரணமும்;

சட்டமும், சமூக நெறிகளும் பற்றிய அபாய எச்சரிக்கைகள்



1967இல்நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஊழல் அரசியலில், ஆதாயத்தொண்டர்கள் வலைப்பின்னலில் சிக்கி, அரசியல் நீக்கமானது (Depoliticize)  வளர்ந்த போக்கில்,  அரசியல் நீக்க(Depoliticize)  கட்டத்தில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் வழிபாட்டிற்கு உரிய தலைவராக எம்.ஜி. ஆர் தனித்துவமாக பயணித்தார். அந்த திசையில் எம்.ஜி.ஆரின் சாதனைகளையும் விஞ்சி, ஜெயலலிதா பயணித்ததும், அண்ணா, எம்.ஜி.ஆர் மரணங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, மரண தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை,  சட்ட ஒழுங்கு சீர் குலைவின்றி, கண்ணீருடனும் ஒழுங்குடனும், மக்கள் இரங்கலை வெளிப்படுத்திவரும் போக்கானது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் அதிசய இரங்கலாகும். 

தமிழ்நாட்டு அரசியலில் 1967இல் ஏற்பட்ட திருப்பு முனையை விட, 2016இல் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமானது, அதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக,  வரலாற்றில் நிரூபணமாகும் என்பது எனது கணிப்பாகும். 1967 ஆட்சிமாற்றத்திற்கு விதையாக, 1944இல் அரங்கேறிய, 'இந்தியர்' அடையாளத்திற்கு எதிரான திசையில், 'வெறுப்பு' அரசியலில், பயணித்த 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களையும் மரணத்திற்குள்ளாக்கி, 'தமிழும், தமிழரும், தமிழ்நாடு' மீள்வதற்கு ஒரே வழியாக, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக, ஆக்கபூர்வ வளர்ச்சி நோக்கிய திசைமாற்றத்தின் துவக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் நிரூபணமானால் வியப்பில்லை. அந்த திசை மாற்றத்திற்கான சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism)  எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எவ்வாறு பங்களித்துள்ளார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாக அமையும்.
 


தமிழில் 'இனம்', 'சாதி' ஆகிய சொற்களின் பொருள் திரிந்து, 1944இல் அறிவுபூர்வ போக்குகள் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகள் முளை விடும் திருப்புமுனையை கண்டுபிடிக்கும் ஆய்வில், நான் ஈடுபட்டதும், ஜெயலலிதா முதல்வர் ஆனதன் பின் விளைவுகளாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களை போலவே, பிறரின் சூழ்ச்சிகள் காரணமாகவோ, அல்லது 'இயல்பான' வரலாற்று நிகழ்வுகள் காரணமாகவோ, சொந்த பந்த ‘உறவறுந்த’‌ தலைவராகவே, ஜெயலலிதா அவர்களும் மறைந்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா   74 நாட்கள் அப்போல்லா மருத்துவமனையில் இருந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்பை அறிவிக்கும் முன், அந்த மருத்துவ மனையிலிருந்த நோயாளிகள் அனைவரும், ஆம்புலன்ஸ்கள் மூலம், பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பபட்டன. இது போன்ற நிகழ்வானது, நானறிந்த வரையில், இந்தியாவிலோ, உலக அளவிலோ, இதற்கு முன் நடந்ததாக தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட ஒளிபரப்பை பார்த்த பிற மாநிலத்தவர்களும், உலக மக்களும், தமிழர்களை பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் என்ன நினைத்திருப்பார்கள்?

மருத்துவமனை நிர்வாகத்திடமும், மருத்துவர்களிடமும், தொலைபேசியில் கேட்டு பெறக்கூடிய தகவல்களை, கவர்னர் உள்ளிட்டு மத்திய அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று, அத்தகவல்களை பெற்று,  மருத்துவமனை முன் தொலைக்காட்சி பேட்டிகளாக, 74 நாட்களிலும்  ஒளிபரப்பியதானது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எந்த அளவுக்கு கேலிக்குள்ளானது? என்பதை அவர்களின் சமூக வலைதள பரிமாற்றங்கள் வெளிப்படுத்தின.

நேரு, 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் போல, உலகில்  பல தலைவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து, சிகிச்சை பலனின்றி உயிர் விட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சிகிச்சையில் அவசர கவனிப்பில்(ICU) இருந்த போதும் கூட, அவர்களை கட்சித்தலைவர்கள் உள்ளிட்டு எவரும் பார்க்க கூட முடியாதபடி தடுக்கப்பட‌வில்லை. ஆனால் இந்திய அரசியல் சட்டப்படி, கவர்னரின் கண்காணிப்பில் முதல்வராக பணியாற்றும் தகுதி உள்ள வரையில் மட்டுமே, ஒருவர் முதல்வராக இருக்க முடியும், என்ற நிலையிலும், தமிழக கவர்னர், தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்க்க, அப்போல்லா மருத்துவமனை சென்று, முதல்வரை பார்க்க முடியாமல் திரும்பியது யார் குற்றம்? ஒன்று, தனது கடமையிலிருந்து கவர்னர் தவறியிருக்க வேண்டும். அல்லது அவரை தடுத்த 'சக்தி'யானது, தமிழ்நாட்டில் இந்திய அரசியல் சட்டத்தை விட, வலிமையான, வெளி அரசியல் சட்ட சக்தியாக (Extra-Constitutional Authority) இருக்க வேண்டும். ((“It is now almost certain that none of Jayalalithaa’s cabinet colleagues had any knowledge of what was going on inside the hospital. Even constitutional functionaries like the Governor could not ascertain the exact health condition of Jayalalithaa.”; http://swarajyamag.com/politics/tamil-nadu-politics-at-the-crossroads-where-does-it-go-from-here & http://www.indiatvnews.com/news/india/was-sasikala-giving-slow-poison-to-jayalalithaa-tehelka-report-says-so-13994.html  ) தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்பவர்கள் எல்லாம்,'அதீத கமிசன்' ஊழலுக்கு பயந்தே, தயங்குவதாக, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எச்சரித்த தகவலும், மேலே உள்ள (மாணவர்களின், இளைஞர்களின் சமூக வலை தளங்களில் 'வைரலாக' (viral) பரவி வரும்) 'தெகல்கா' செய்தியில் உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, ஊழலே முக்கிய காரணம், என்றும் தெரிகிறது.

இது பற்றி எந்த கட்சித்தலைவரோ, அல்லது பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்ததாக தெரியவில்லை. தமிழ்நாடு உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி, இதனை சுயபார்வை (suo motu)  வழக்காக கருதி, விசாரிக்க முனைந்ததாகவும் தெரியவில்லை.

மெரினா கடற்கரையில் புதிதாக சிலை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து, அன்றைய முதல்வர் கருணாநிதி, நடிகர் சிவாஜிக்கு சிலை வைத்தாரா? அதற்காக அந்த முதல்வர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க, 'அஞ்சி' உயர்நீதி மன்றம் பின் வாங்கியதா? என்ற ஆய்வே, மேலே குறிப்பிட்ட கேள்விக்கான விளக்கத்தைத் தரும்.

ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துமனையில் சிகிச்சையில் இருந்த போதும், அவரையும் எவரும் 'பார்க்க கூட முடியாமல்', மருத்துவ மனைக்கு சென்று, திரும்பியதாக வெளிவந்த செய்திகள் உண்மையென்றால், இது 'திராவிட அரசியலில்' புதிதாக அரங்கேறியுள்ள 'பண்பாடா'? என்ற கேள்வி எழும்.

அதே போல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது, ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்ததாக, 'சசிகலா' மீது குற்றம் சுமத்திய செய்தியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.இந்த செய்தி வந்தவுடன், அது எவ்வளவு பெரிய சமூக குற்றம்? என்பதை சசிகலாவின் உறவினர்களில், நண்பர்களில் எவராவது உணர்ந்து, அதனை சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்களா? இல்லையா? அந்த சமூக குற்றத்தை பற்றி, எந்த கட்சித் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்தார்களா? அவ்வாறு கண்டித்திருந்தால், தனது அத்தை முகத்தை உயிரோடு மருத்துவமனையில் ‍‍ 74 நாட்கள் இருந்த‌போதே பார்க்க முடியாத நிலைமை, அந்த பெண்ணுக்கு வந்திருக்குமா? "திங்கட்கிழமை இரவு ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் நடைபெற்ற இறுதிச்சடங்கிலும் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கடைசி வரை போயஸ்தோட்டத்திற்கு தீபாவை நுழைய விடவில்லை." என்பதும் நடந்திருக்குமா?
(http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-s-brother-s-daughter-could-not-pay-last-tribute-269103.html ) 

“ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.”( http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-men-upset-over-sasikala-s-relatives-rajaji-hall-269130.html ) முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தன.பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோவில் எப்படி அந்த சதிகாரர்களை மட்டும் சசிகலா அனுமதித்தார்? அமைச்சர்களையும், கவர்னரையும் கூட ஏன் அனுமதிக்கவில்லை? 74 நாட்கள் ஜெயலலிதா முகத்தை புகைப்படம்/வீடியோ மூலமாக கூட காட்டவில்லை? எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது கூட, அவர் சிகிச்சை பெறும் வீடியோ வெளிவரவில்லையா? இவை எல்லாம் ஊடகங்களில் வெளிவந்து, குக்கிராமங்கள் வரை ஊடுருவி விட்டன. இப்போது சசிகலாவை கட்சியின் பொதுச்செயலளாராக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பற்றியும், அதை ஆதரிக்கும் வைகோ, கி.வீரமணி போன்ற பிறகட்சிகளின் தலைவர்களைப் பற்றியும், மக்கள் என்ன நினைப்பார்கள்? அடுத்த சட்டசபை தேர்தலில் அது எதிரொலிக்காதா?
 

தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவராக இருந்த ஜெயலலிதாவின் மறைவானது ஏற்படுத்தியுள்ள அரசியல் வெற்றிடத்தில், மேலே குறிப்பிட்ட காரணங்களாலும், ஆட்சியில் பதவி வேண்டுபவர்களாலும் உருவாகி, வளரும் அ.இ.அ.தி.மு.கவினரின் 'கொந்தளிப்பும்', வேலையில்லா திண்டாட்ட அதிகரிப்பில், மேலே குறிப்பிட்ட 'தெகல்கா' செய்தி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளரும் கொந்தளிப்பும், எப்போது 'குறைந்த அரசியல் காற்றழுத்த தாழ்வு மண்டிலமாகி', 'அரசியல் புயலை உருவாக்கப் போகிறது? அந்த அரசியல் புயலில் எந்தெந்த கட்சிகளும், தலைவர்களும் சுவடின்றி மறைவார்கள்? போன்றவை தொடர்பான 'அறிகுறிகளை' கவனிக்காமல்; 

தமிழ்நாட்டில் பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சித் தலைவர்களும் மேலே குறிப்பிட்ட தவறுகளை, கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் மட்டுமின்றி, தமிழக மக்களின் அதிகரிக்கும் ‘அரசியல் நீக்க'  (Depoliticize) வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாக போகிறார்களா? சென்னை வெள்ள நிவாரணத்தின் மூலம் வெளிப்பட்ட இளைஞர்/மாணவர் சக்திகள் எல்லாம், அரசியல் வானிலும் வெளிப்படுவதற்கு வழி வகுக்கும் வகையில், அவர்கள் பயணிக்கிறார்களா?

1973இல் எனக்கு திருமணமானபின்,  ஒரு சமயம் எனது மாமனாருடன் காரில், சென்னை தி.நகரிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி, சென்று கொண்டிருந்தோம். காரை ஓட்டிய நபர், போக்குவரத்து விதிக்கு மாறாக (One Way), அண்ணா மேம்பாலத்தில் காரை ஓட்டியபோது, நான் அதை எச்சரித்தேன். அதை என் மாமனாரும், காரை ஓட்டிய நபரும் கண்டுகொள்ளவில்லை. 

1967 வரை 'வைப்பாட்டி/'துணைவி'(?)யுடன் வாழ்ந்ததால், தனது தந்தையின் கோபத்திற்குள்ளாகி, ஊரை விட்டு ஓடி, தலைமறைவாக பணக் கஷ்டத்துடன் வாழ்ந்த என் மாமானாரின் சமூக நிலையானது(Social Status), அவரின் நண்பர் நாமக்கல்லில் பள்ளி ஆசிரியராக இருந்த‌ முத்துச்சாமி, 1967இல் அண்ணா ஆட்சியில் அமைச்சரான பின், என் மாமனார் பணத்திலும், செல்வாக்கிலும் சமூக நிலையில் வளர்ந்து (தமிழ்நாட்டில் சமூக நிலையானது 'திரிதலுக்கு' உள்ளாகி), பின் தனது தந்தையுடன் நேசமானவர் என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) அந்த காரை ஓட்டிய நபரோ, அன்றைய போலிஸ் டி.ஐ.ஜியின் மகன். 

போக்குவரத்து விதியை மீறி, காரை ஓட்டுவதை எச்சரித்த என்னை, அவர்கள் இருவரும் கண்டுகொள்ளாத போக்கில், 1967க்குப்பின் தமிழ்நாடு அந்த போக்கில் தொடங்கி பயணித்ததன் தொடர்ச்சியே, சசிகலாவும், தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவர்களைப் போலவே இன்னும் பலரும், மேலே குறிப்பிட்டது போன்ற தவறுகளில் ஈடுபட காரணம் என்பது என் கருத்தாகும். சமூகநெறிமுறைக்கும், சட்டத்திற்கும் கட்டுப்பாட்டு வாழ்வது முட்டாள்த்தனமோ? என்ற கேள்வி எழும் அளவுக்கும், சமூகசெயல்நெறி மதகுகளின் செயல்பாடுகள் சீர் குலைந்துள்ளன.( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html ) சமூகத்தில் படித்தவர்கள், மற்றும் பதவியிலும், வசதியிலும் உயர்ந்தவர்களில் கணிசமானோரின் 'ஒத்துழைப்பின்றி'(?), சில தனிநபர்களின் 'சாதனைகளாக'(?) தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வாய்ப்புண்டா? அண்ணா அமைச்சரவையில் இருந்த நாமக்கல் முத்துச்சாமியின் வைப்பாட்டி/'துணைவியின் மகளை, 'மேலே குறிப்பிட்ட' தனது மகனுக்கு, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் நடத்தி வைத்த  (மரணமடைவதற்கு முன் நடத்தி வைத்த கடைசி திருமணம்) திருமணம் மூலம் 'சம்பந்தியாகி', ஜானகி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எனது மாமனாரை அனுசரித்து நான் வாழ்ந்திருந்தால், எந்த பண நெருக்கடியையும், அவமானங்களையும் சந்திக்க நேரிட்டிருக்குமா? அவ்வாறு 'சமூக இழிவான சமரசத்துடன்', 'செல்வம், செல்வாக்குடன்' வாழத் தொடங்கியபின், தமிழ்நாட்டில் சட்டமும், சமூக நெறிகளும், சுயநலத்திற்காக 'காவு' கொடுக்கப்படுவதை, அதன் தொடர்விளைவாக, தமிழ்நாட்டின், தமிழரின், தமிழின் சீரழிவைப் பற்றி எழுதும்,பேசும் அருகதை எனக்கு இருக்குமா? அவ்வாறு 'ஒத்துழைத்து' பலன் பெறும் நோக்கமின்றி, 'விரும்பி' அது போன்ற நெருக்கடிகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்காவிட்டால், இது போன்ற பதிவுகள் வெளிவந்திருக்க வாய்ப்புண்டா? மேலே குறிப்பிட்ட 'சமூக இழிவான சமரசத்துடன்', 'பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, சமூக நீதி' போன்ற முகமூடிகளுடன் தமிழ்நாட்டின் சீரழிவிற்கு துணை போகும் சமூக கிருமிகளை, வேறு யாராவது எதிர்த்து வருகிறார்களா? என்ற கேள்விகளை, மனசாட்சியுள்ள, தமிழின் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும், சுயலாப‌ நோக்கற்ற அக்கறையுள்ள தமிழர்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன். 

அவ்வாறு இழப்புகளையும், அவமானங்களையும் 'விரும்பி' அனுபவித்து, எனது 'உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு' (Passions)  நான் பயணித்ததாலேயே, உலகின் கவனத்தை ஈர்த்து வரும் ஆய்வுகளோடு நான் வாழ முடிந்தது; (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html & http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_21.html) பணத்திற்கு விலை போகாத, வணங்கத்தக்க மனிதர்களையும், சாதனையாளர்களையும் உள்ளடக்கிய சமூக வட்டத்தின் ஆதரவுடனும், அன்புடனும். அது மட்டுமல்ல,சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து 'அந்நியமாகி' பயணிக்கும் மாணவர்களும், இளைஞர்களும்,விதி விலக்காக, என்னை போன்று வாழ்பவர்களிடம் கருத்து பரிமாற்றம் (interact)  செய்யும் அதிசயத்தையும் அனுபவித்து வருகிறேன். எனவே எனது பயணத்தில் சந்தித்து வரும் 'தனித்துவமான' இழப்புகளுக்காக, நான் கவலைப்படுவதில் அர்த்தமுண்டோ? 

எனவே அவர்களை மட்டுமே குறை சொல்லுவது சரியாகாது. நமது சுயநலனுக்காக, அது போன்ற தவறுகளை கண்டு கொள்ளாமல், பயணிக்கும் நாம் ஒவ்வொருவரும், உலக அளவில் தமிழரைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் இழிவான கருத்து உருவாவதற்கு காரணங்கள் ஆவோம். எனவே பிறரை குறை சொல்லும் முன், நாம் ஒவ்வொருவரும், மனசாட்சியுடனும், அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும், நம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டாக வேண்டும். அப்போது தான், சுயலாப நோக்கின்றி, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, நாம் பங்களிப்பு வழங்க முடியும்.

Note: I support “'Why secrecy about Jayalalithaa's death?' Gautami asks Modi to probe”
http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/09/why-secrecy-about-jayalalithaas-death-gautami-asks-modi-to-probe-1547142.html


Also  visit;  https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/messages/70460
 

அவசியம் படிக்க வேண்டிய ஆழமான கட்டுரை: 

‘தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?’
சமஸ்
http://tamil.thehindu.com/opinion/columns


“திராவிட இயக்கத்தின் முதல் முதல்வரான அண்ணாவும் ஜெயலலிதாவின் முன்னோடி எம்ஜிஆரும் ஆட்சியில் இருக்கும்போதே இறந்தனர். ஆயினும், அன்றைய நெருக்கடிகளுடன் ஒப்பிட முடியாத சூழல் இன்றைக்கு உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.” என்று குறிப்பிட்ட சமஸ்;


"அண்ணா, எம்.ஜி.ஆர் மரணங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, மரண தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை,  சட்ட ஒழுங்கு சீர் குலைவின்றி, கண்ணீருடனும் ஒழுங்குடனும், மக்கள் இரங்கலை வெளிப்படுத்திவரும் போக்கானது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் அதிசய இரங்கலாகும். " என்பது பற்றி சமஸ் கவனிக்காமல் விட்ட, கட்டுரையின் முக்கிய படுகுழிகள்(pitfalls) தொடர்பாக, திறந்த மனதுடன் ஆய்வில் ஈடுபட்டால், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வெளிச்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 

Saturday, December 3, 2016


 எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (3)



'சுயமரியாதையுள்ள அனாதை'யின், இன்பங்கள் நிறைந்த வாழ்க்கையின் சூட்சமம்


“1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்; 'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக, ராஜாஜியின் துணையுடன் 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?” என்பதையும்; 

நான் " 'அவ மரியாதை' தமிழராக இருக்க விரும்பாததால், தமிழ்நாட்டில் நான் 'குடும்ப உறவற்ற, சுயசம்பாத்தியத்தில், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழும், 'சுயமரியாதையுள்ள‌ அனாதை' என்று அடையாளம் பெறலாம்;" என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

பொதுவாக சமூகத்தில் 'அனாதை' என்றால் ஒரு தாழ்வான பார்வை இருக்கும். உலகில் பிரமிக்க வைக்கும் சாதனைகளை புரிந்த பலர், அனாதையாகவே தமது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர்கள் ஆவர். (http://motivateme.in/10-orphans-who-became-famous-with-their-passion-hard-work/ )

ஆனால் நானோ, "சமூக நோயால் விளைந்த எனது குடும்ப சீர்குலைவை தனிப்பட்ட பிரச்சினையாக அணுகாமல், தமிழ்நாட்டில் சமூக சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக: விரும்பி, 'சுயமரியாதையுள்ள‌ அனாதை'யாக பயணிக்க தொடங்கிய பின், எனது ஆய்வு சாதனைகள், எனக்கே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, எனது சாதி அடையாளத்திலிருந்து 'விடுதலை' பெற்று, எனது சமூக அடையாளம் 'சைவ பறையர்' ஆனது; காலனி ஆட்சியின் சூழ்ச்சியில், 'புதிதாக' அரங்கேறிய 'சாதி(?) ‘உயர்வு – தாழ்வுக்கு’ எதிரான போரிலும் , எனது பங்களிப்பாக; புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரராக 'காட்சி' தந்து, அகத்தில் 'தமது சாதியை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் சமூக கிருமி'களையெல்லாம், எனது 'தீண்டாமை'க்கு உட்படுத்தி.

அது தொடர்பான சமூக செயல்நுட்ப இரகசியங்களை, உண்மையான சுயமரியாதை தமிழராக‌ வாழ விரும்புபவர்களின் பார்வைக்காக முன் வைக்கிறேன்.

“மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்; அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive)  செல்வாக்கு செலுத்துகின்றன.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘நாடு பயணிக்கும் போக்கில்: நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?’; http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

தமிழ்நாட்டின் முக்கிய போக்குகளில், 'வெளிச்சத்திற்கு வராமல், நான் பங்காற்றியவற்றில், சிலவற்றை மேலே குறிப்பிட்ட பதிவில் பதிவு செய்துள்ளேன்.

அதே போல் 1983 சூலை இனப் படுகொலைக்குப்பின், தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' வளர்ந்த ஈழ விடுதலைக் குழுக்களில், எண்ணிக்கையிலும் ஆயுத‍ம் மற்றும் பண  பலத்தில்      PLOT, TELO முதல் இரண்டு இடங்களில் இருக்க, மூன்றாம் இடத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், முதல் இடத்தில் வர காரணமான வெகுசிலரில், நானும் ஒருவனாக இருந்து பங்களித்ததையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

அதே போல, 'சமூக ஒப்பீடு நோயில்' சிக்கி, பாராட்டு புகழுக்கு ஏங்காமலும், தானாக அவை நம்மை தேடி வரும் போது, தமிழ்நாட்டை அந்த நோயிலிருந்து மீட்கும் முயற்சிகளுக்கு, நமது பங்களிப்பாக, அவற்றை தவிர்ப்பதை, சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைத்து, அதிலிருந்து 'தப்பித்த' அனுபவங்களும் எனக்குண்டு. ‘உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டைப் போல், 'குறுக்கு வழிகளில்' பெற்ற 'செல்வம், செல்வாக்கோடு' திருப்தி அடையாமல், 'பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கும் ஏங்கும் மனநோயாளிகளின் எண்ணிக்கையானது, இந்த அளவுக்கு, வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

மறைந்த திரு.கணபதி ஸ்தபதிக்கும் ( கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கோவில்கள் கட்டியவர்) எனக்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும், அதற்கான காரணத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html )  

அவர் எனக்கென்று ஒரு பாராட்டு விழா எடுக்கப் போவதாக,  என்னிடம் தெரிவித்த போது, அவர் மீது கோபப்பட்டு, சில மாதங்கள் தொலைபேசியில் அவருடன் பேசுவதை கூட தவிர்த்து வந்தேன். அதையும் மீறி, சாகும் வரை என் மீது அவர் வெளிப்படுத்தியதானது, 'அன்பு, பாசம்' போன்ற சொற்களில் கூட அடக்க முடியாது என்பதை, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அறிவர்.

அவ்வாறு தமிழ்நாட்டில், எனதளவில், சமுக நோய்களை எதிர்த்து, பயணித்து வந்த நான்,  'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்த(?), 'பெரியார் சமூக கிருமிகள்' எனது குடும்பத்தில் சீர்குலைவை ஏற்படுத்தியதன் விளைவாக

இயல்பில் சிற்றினமானவர்கள், நம்மிடம் எவ்வளவு வருடங்கள் பழகியிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாக' வெளிப்படுவார்கள் என்ற 'பாடம்' கற்று”( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'இசை' தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த நான், அதனை எனது தனிப்பட்ட பிரச்சினையாக அணுகவில்லை. மாறாக தமிழ்நாட்டில் உச்சக்கட்டத்தில் வளர்ந்துள்ள சமூக நோயானது, மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பத்தையே தீண்டியதை, ஒரு 'சமூகவியல் சிக்னலாக' கருதி, அதனையும் எனது ஆய்வு குவியத்தில் கொண்டு வந்து, இது போன்ற பதிவுகளை, கடந்த சுமார் 8 வருடங்களாக வெளியிட்டு வருகிறேன். அதன் காரணமாகவே, உயிருள்ளவை தொடர்பாக வெளிவந்த ' ‘ON GROWTH AND FORM’ ' என்ற நூலை, ஆய்வு நோக்கில் படித்து, '‘ON SOCIAL GROWTH AND FORM’  ' என்ற, சமூகவியல் ஆய்விலும் நான் ஈடுபட நேர்ந்தது.(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html ) அநேகமாக அதன் விளைவாக, சமுகவியலில் (Sociology), ஒரு புதிய பல்துறை (inter-disciplinary) பிரிவு உருவாக, அது வழி வகுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால், எனது இசை ஆய்வுகள் மூலம் எனக்கு கிடைத்த புதிய தொடர்புகளை விட, 'பெரியார் சமூக கிருமிகளின் தோற்றம்' பற்றி தொடங்கிய ஆய்வுகள் மூலமாக‌, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 'வணங்கத்தக்க' மிக பெரிய மனிதர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் வியந்து என்னை ஊக்குவிக்கும் விளைவும் நடந்து வருகிறது. ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில், அதிலும் 'பெரியார் முகமூடியில், சமூக கிருமிகளாக வலம் வருபவர்கள் எல்லாம், தண்டிக்கப்படுவதானது, ஆளும் அரசின் யோக்கியதையைப் பொறுத்ததாகும். ஆனால் நமது சமூக வட்டத்தில், 'அத்துமீறி' பிரவேசித்து, சீர் குலைப்பவர்களை எதிர்த்து, தனி மனித இராணுவம் போல, சமூக விசைகளின் (Social Forces) துணையுடன், சமரசமின்றி, போராட முடியும், என்பதை நான் நிருபித்து வருகிறேன்; ; ஒரு சமூக பொறியியல் செயல்நுட்பமாக (Social Engineering mechanism), சுயமரியாதை உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்த்து, ‘பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு’ எதிரான போரானது, தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும், என்ற நம்பிக்கையில்.  அதுவே அவர்களின் வியப்பிற்கு காரணமாகும்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல் அரங்கேறியதன் காரணமாக, ஒரு காலத்தில், நான் ஏன் 'பண நெருக்கடியில் சிக்கினேன்?' என்பதை பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html) ஆனால் இன்று என் மீது நம்பிக்கை வைத்து, புதிய ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்ள, அவர்கள் தாமாகவே 'நிதி உதவி' செய்ய முன் வருவதும், எனக்குள்ள ஆய்வு பளு காரணமாக, அவற்றை நான் மேற்கொள்ள தயங்கி வருவதும் நிகழ்கால நடப்பாகும். நான் பண நெருக்கடியில் வாழ்ந்த காலத்திலும் கூட, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருபாகரன் என்பவர், சென்னையில் எனது வீட்டிற்கு வந்து, புதுசேரிக்கு அழைத்துச் சென்று, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்றைய தலைவர் விஜய் என்பவரை சந்திக்க செய்தார். அவர் 'உலக இசைகள் எல்லாம் கர்நாடக இசைக்குள் அடக்கம்' என்று, பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் வெளிப்படுத்திய கருத்தை, ஒரு ஆய்வாக (Research Project) செய்து தருமாறு கேட்டுக் தொண்டபோது, அந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை, என்று மறுத்து திரும்பினேன். (தமிழ் இசை, கர்நாடக இசை தொடர்பாக, எனது ஆய்வுகளின் அடிப்படையில்; 'தவறான திசையில் தமிழிசை ஆர்வம்"; http://www.musicresearch.in/categorydetails.php?imgid=82 )

வெளியில் பொதுநலவாதி போல காட்சி தந்து, கிடைக்கும் ஆதரவுகளை எல்லாம்,  தமது சுயநலத்திற்கே சூழ்ச்சிகரமாக பயன்படுத்தும் பொதுவாழ்வு வியாபாரிகளிடம் பெற்ற, பல வகையான கசப்பான அனுபவங்களின் பின்னணியில்; இன்று என்னுடன் எவரும் ஈமெயிலில்(Email) மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். என்னுடன் தொலைபேசியில் பேசுவதற்கும் கூட, நான் 'தனித்துவமான' பாதுகாப்பு தடைகளோடு(security Filters) பயணிக்கிறேன். தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் மிகுந்த பாராட்டும் புகழும் பெற்ற ஒருவர், சில மாதங்களுக்கு முன், என்னுடன் தொலை பேசி தொடர்பு கொண்டு, என்னுடன் 'நெருக்கமாக' முயலும் திசையில் பேசியதை, இயன்றவரை அவரை புண்படுத்தாமலேயே, நான் தனித்து எனது ஆய்வு உலகத்தில் வாழ்வதை தெளிவு படுத்தினேன். அவர் இன்று வரை என்னை தொந்திரவு செய்யவில்லை. 

அதே நேரத்தில், நான் வியக்கும் சாதனை புரிந்தவர்கள் VIP-களாக இருந்தாலும், அவர்களை சந்திப்பதில் தயக்கம் காட்டியதில்லை.

உதாரணமாக,'ஜோக்கர்' திடைப்பட 'சூட்டிங்'கில்(Shooting) பணியாற்றிய உதவி கேமராமேன் கார்க்கி, ஒரு இசை அமைப்பாளர் பரிந்துரையில் என்னை சந்தித்தார். பின் அவர் அப்படத்தில் கேமராமேனாக பணியாற்றும் செழியன் என்பவர்,  இசை தொடர்பாக புத்தகம் எழுதியிருப்பதாகவும், அதை எனக்கு அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். சரி என்றேன். கொரியரில் 10 புத்தகங்கள் பார்சலில் வந்தன. பிரித்து பார்த்தேன். ' The Music School- ஒரு முழுமையான மேற்கத்திய இசைப்பயிற்சி' என்ற தலைப்பில் தொகுப்பு வரிசை நூல்கள்10 (ஒவ்வொன்றும் 100 பக்கங்களுக்கும் அதிகம்). படித்ததும் பிரமித்துப் போனேன். அதில் உள்ள பொருள் நானறிந்தது என்றாலும், தமிழில், அவ்வளவு எளிமையாக, மேற்கத்திய இசை நுணுக்கங்களை எவரும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் என்னால் எழுத முடியாது. நிகழ்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள இசை நூல்களில், எனது நூலும் உள்ளிட்டு, இது போன்ற காலத்தை வென்ற 'மானுமெண்டல்'(Monumental)  நூல் வேறு எதுவும் கிடையாது. (http://www.themusicschool.co.in/) எனவே செழியன் என்னை நேரில் பார்க்க விரும்புவதாக தெரிவித்தபோது, தயக்கமின்றி உடனே சம்மதித்தேன். 'ஜோக்கர்' படம் அப்போது வெளிவராததால், தமிழில் திருப்பு முனையான அந்த படத்தில் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பதும் எனக்கு தெரியாது.

நேரில் சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடி விட்டு, மீண்டும் கணினி இசை என்னிடம் கற்றுக் கொள்ள வருவதாக சொல்லி, சென்றுள்ளார். அத்தகைய சாதனையாளர்கள் போன்றவர்களெல்லாம், எனக்கு தெரிந்தவர்கள் என்று, நான் பழகி வரும் சாதாரண மனிதர்கள் எல்லோரிடமும் சொல்லி, எனக்கு ஒரு முக்கியத்துவ ஒளிவட்டம்(Aura) வந்து விடக்கூடாது, என்பதிலும் நான் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்; அவர்கள் மூலம், எனது சமூகவியல் ஆய்வுக்கு கிடைத்து வரும், 'அரிய உள்ளீடுகளை' (inputs). நான் இழந்து விடக்கூடாது, என்ற எச்சரிக்கை உணர்வுடன்.

இப்படி சமூகத்தில் V.I.P-'க்களாக வலம் வருபவர்களை தவிர்க்கும் நான், எனக்கு தேவையானவற்றிற்காக பெட்டிக்கடையிலிருந்து, டீக்கடை உள்ளிட்டு சாமான்யர்களுடன் அவர்களில் ஒருவராக பழகி வருவதானது, அவ்வப்போது அரசு பேருந்திலும் பயணிப்பதானது, எனது சமூகவியல் ஆய்வுக்கு அரிய உள்ளீடுகளாகவும்(inputs) அமைந்து வருகிறது. அதே நேரத்தில் எனது ஆய்வு தொடர்பான இடங்களுக்கு,  AC காரில் பயணிப்பதும், அங்கு என்னை எனது Hand Bag மற்றும் Laptop- ஐ கூட நான் தூக்க அனுமதிக்காமல், உதவியாளர்கள் துணை வருவதும் நடக்கிறது. 

“தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை ( Social Status என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர’  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.”

'பிறர் தம்மை பெரிதாக நினைக்க வேண்டும்' என்ற ‘சமூக ஒப்பீடு நோயில்’ (Social Comparison Infection) சிக்கி, தமக்கான வாழ்வை இழந்து வாழாமல் (‘“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்;  "Comparison is the thief of joy" Theodore Roosevelt; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html) )

தமது இயல்பு மற்றும் திறமைகளை சரியாக புரிந்து, அவற்றிற்கு இணக்கமான உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions)  வாழும் எவருக்கும், மேலே குறிப்பிட்ட இன்பங்களை அனுபவித்து வாழ்வதானாது, தாமாகவே அமையும். அத்தகையோரின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டில் அதிகரிப்பதானது, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரியும். அந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, என்னால் ஆன பங்களிப்பே, இந்த பதிவு ஆகும். 

அவ்வாறு வாழ்வதில் வெளிப்படும் சாதனைகளை, உலகம் ஏற்றுக் கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல.

இன்றும் அவரை அடக்கம் செய்த கல்லறை எது? என்று தெரியாத அளவுக்கு, புகழின்றி, வறுமையில் இறந்த, இசை மேதை மொசார்ட்(Mozart) (The most famous person to be buried in the St. Marx Cemetery is Wolfgang Amadeus Mozart. Later attempts to locate his mass grave all failed, including a search by his widow, 17 years after Mozart's death, and by Vincent Novello in 1829. In 1855 a gravestone was erected at what was presumed to be the correct spot. Later the stone was transferred to a group of famous musician graves at Zentralfriedhof; https://en.wikipedia.org/wiki/St._Marx_Cemeteryhttps://en.wikipedia.org/wiki/St._Marx_Cemetery );
எழுத்தாளர் பிரான் கஃபா(Franz Kafka : http://en.wikipedia.org/wiki/Franz_Kafka );


உள்ளிட்டு பலரின் சாதனைகள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிச்சத்திற்கு வராமல், அவர்கள் இறந்து பல வருடங்கள் கழித்து, உலகப் புகழ் பெற்றதும் வரலாறு ஆகும். (http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html )
 

அப்படி வாழ்வதற்கான மனநிலையையும், இயற்கையின் அருளையும் பெறுவதற்கான முன் நிபந்தனையாக;

சமூகத்திற்கு கேடாக வாழ்பவர்களையும், அவர்களின் 'செல்வ வெளிச்சத்தில்' மயங்கி, 'நெருக்கமாகுபவர்களையும்', குடும்பமாக, சுற்றமாக, நட்பாக இருந்தாலும், ‘உயிருள்ள பிணங்களாக’ கருதி, ஒதுக்கி, அவர்களை 'மனதில் நினைத்தாலும்', 'இயற்கையின் கோப வெறுப்புக்கு' (Nature’s Curse) உள்ளாக நேரிடும், என்ற விழிப்புணர்வும் அவசியமாகும். நமது வாழ்வும், நேரமும், நமது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடன், நமது முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில், மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு தடைகளுடனும் (security Filters) வாழ்வதும் முக்கியமாகும்.


அந்த மன‌ வலிமையை பெற, நான் அவ்வப்போது நினைவு கூறும் திருக்குறள் (350)
‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’