Friday, February 12, 2016



3 சக்திகளின் தொகுவிளைவில்(Resultant), 3 மாணவிகளின் மர்ம மரணங்களுக்கான நீதி?


நம்பிக்கையூட்டும் திசையில் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கான 'சிக்னல்கள்' (Signals) வெளிவர தொடங்கியுள்ளன. 

தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக, வித்தியாசமான சமுக போராட்டம், வியப்பூட்டும் வகையில் வளர்ந்து வருகிறது. தமது பிரச்சினைகளுக்கும், தமது பகுதி பிரச்சினைகளுக்கும் அரசியல் கட்சிகள் துணையின்றி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகளை செயல்பட வைக்கிறார்கள்; அது போல, நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி மன்றம் மூலமும் செயல்பட வைக்கிறார்கள்.

அந்த வகையில் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம் அரசு எந்திரத்தை செயல்பட வைத்ததன் மூலம்;

அரசியல் வாதிகள், அதிகாரிகள், தரகர்கள், கல்வி கொள்ளையர்கள் கூட்டணியின் கோரமுகமானது, விழுப்புரத்தில் 3 மாணவிகளின் மர்ம மரணங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

"கல்லூரிக்கு வந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் போதிய வசதிகள் இல்லை என வெளியேற முயற்சித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டியும், தாக்கியும் விரட்டியடித்துள்ளது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல முறை மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள், அமைச்சர் தொடங்கி முதலமைச்சர் வரை பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் முறையிட்டு தங்களின் வலுவான எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதன் பிறகே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடந்துள்ளது. விசாரணை அறிக்கையின் மீது கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு சம்பந்தப்பட்ட மாணவர்களை மிரட்டி அச்சுறுத்தியுள்ளது, கொடுமைப் படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் மூன்று மாணவிகள் தலை மற்றும் உடம்பில் காயங்களுடன் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்."


"''எஸ்.வி.எஸ்., கல்லுாரி மாணவியர் மூணு பேர், மர்மமா இறந்து போனாங்கல்லா... இந்த கேசை விசாரிக்கிற, சி.பி.சி.ஐ.டி., போலீசுகாரங்க, சேர்மன் வாசுகியின் டைரி ஒண்ணை பறிமுதல் பண்ணியிருக்காவ வே...

''அதுல, மாணவர்கள் போராட்டங்களை அடக்கவும், மேலிடத்துக்கு விஷயத்தை கொண்டு போகாம மறைக்கவும், அதிகாரிகள், போலீசார்னு பல தரப்புக்கும் இன்னின்ன தேதியில, இவ்வளவு பணம் கொடுத்தேன்னு எழுதியிருக்கு... இதனால, கைநீட்டி பணம் வாங்குனவங்க, பீதியில இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி."

 
மேலே குறிப்பிட்ட கூட்டணியானது, தமிழ்நாட்டில் எப்போது தோன்றி, எப்படி வளர்ந்தது? என்று ஆராய்ந்து, விடைகளை கண்டுபிடித்து, அமுலாக்க தவறினால், மீண்டும், மீண்டும் அதன் பாதிப்புகளை அனுபவிப்பதிலிருந்து தமிழ்நாடு தப்ப முடியுமா?

அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் கொடூரமானது, ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாடு இரையானதன் விளைவே, என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இவ்வளவு பாதிப்புகள் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அளவுக்கு, தவறு செய்யும் போக்கு எப்படி வளர்ந்தது?

எது சரி? எது தவறு? என்று புறத்தில் தான் ஏற்றுக்கொண்ட, மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற, நெறிமுறைகளின்படி;

வெளியில் தெரியாமலும், சட்டத்தின் பிடியில் சிக்காமலும், தவறு புரிய வாய்ப்பிருந்தும், தவறு செய்யாதவர்களே, அகத்திலும், புறத்திலும் நேர்மையானவர்கள் ஆவர்.

மாட்டிக்கொண்டு அசிங்கப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில், தவறு செய்ய துணிச்சலின்றி, தவறு செய்யாதவர்கள் எல்லாம், அகத்தில் சீரழிந்து, புறத்தில் நேர்மையாக காட்சி தருபவர்கள் ஆவர். அத்தகையோர், கீழ்வரும் பிரிவினருடன்,வாய்ப்பு கிடைத்தால், நெருக்கமாகி,  எந்த குற்ற உணர்வுமின்றி, அவர்கள் மூலம் 'பலன்கள்' அனுபவிப்பார்கள்; மர்மமாக 'மரணமடைந்த 3 பெண்களும் தமது குடும்பப்பெண்கள் அல்ல' என்ற நினைப்பில், மனசாட்சியின்றி.

'அச்சம் என்பது மடமையடா' என்ற கொள்கையில், துணிச்சலுடன், கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தவற விடாமல், தவறு செய்பவர்கள் எல்லாம், அகத்திலும் புறத்திலும் சீரழிந்தவர்கள். அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகள்' எல்லாம்,  'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு (?), ஆன்மீகம்' உள்ளிட்ட இன்னும் பல அமைப்புகளின் 'புரவலராகி', சமூகத்தில் 'பெரிய மனிதராக' வலம் வருவார்கள்: மேலே குறிப்பிட்ட இரண்டாம் வகை மனிதர்களை, தமது 'எடுபிடிகளாக்கி'; அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகளை','அதிவேக பணக்காரர்களாக்கி';

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளையும், விழுப்புரத்தில் 3 மாணவிகளின் மர்ம மரணங்களையும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்கள் கொள்ளையையும், தமிழ்நாட்டிற்கு 'பரிசுகளாக' வழங்கி.

'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு' அமைப்புகளில் உள்ளவர்களில் யார், யார், தமிழ்நாட்டை சீரழித்து வரும் ஊழலை எதிர்த்தவர்கள்? யார், யார், அந்த ஊழல் கொள்ளைக்காரர்களிடம் 'நேசமாகி, பலன்கள்' பெற்று, அதை பற்றி மூச்சு விடாமல், 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற 'சடங்குகளில்' பிழைப்பு நடத்துகிறார்கள்?
  
அவர்களில் யார்? யார்?;

'இன்றுள்ள சாதிமுறை, காலனியத்திற்கும் முன் கல்வியில் முன்னேறியிருந்தவர்கள் யார்? மனுநீதியின்படி கல்வி தொடர்பான 'சூத்திரர்' தண்டனைகள், இந்தியாவில், தமிழ்நாட்டில், எந்த மன்னராட்சியில் இருந்தது? இனம், ஆரியர்‍, திராவிடர், பார்ப்பன ஆதிக்கம்,' போன்ற தங்களின் கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்பாக, உலக அரங்கில் என்னென்ன ஆய்வு முடிவுகள் வெளிப்பட்டு வருகின்றன? என்று தேடி, 'அறிவுபூர்வமாக' உரிய மாற்றங்கள் செய்து பயணிப்பவர்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளை பற்றிய சமூக பொறுப்பும் அக்கறையுமின்றி, 'உணர்ச்சிபூர்வ' சூழலை வளர்த்து, 'சுயநல கூட்டணி' உருவாகி வளர்ந்த 'வேகத்தில்', தமிழ்நாட்டில், 'இதற்கு முன் இல்லாத அளவுக்கு', மாணவர்களையும் 'சாதி வெறி' நோய்க்குள்ளாக்கி,  சாதி அமைப்புகளும், சாதி மோதல்களும் வளர்ந்து வருகின்றனவா?

இத்தகைய  சமூக விரோத சக்திகளின் 'பலம்' ஆனது, எந்த சமூக செயல்நுட்பம் அடிப்படையில் செயல்படுகிறது?

அந்த வகை ஆய்விற்கு, சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம், அரசு எந்திரத்தை செயல்பட வைத்துள்ள, விழுப்புரம் 3 மாணவிகளின் மர்ம மரணங்கள் பிரச்சினை, மற்றும் அது பயணிக்கும் திசை, ஆகியவற்றை கூர்ந்து கவனிப்பது பயன்படும்.

அதாவது,  தமிழ்நாட்டில் பெரும்பாலும் நடுத்தர ஏழை மக்களின் 'நீதிக்கான' போராட்டங்களின் சக்திக்கும், அரசு அமைப்புகளில் செல்வாக்குடன் வலம் வரும் சமூக விரோத சக்திகளுக்கும், இடையிலான 'பலப்பரிட்சை'யானது, மேலே குறிப்பிட்ட பயண திசையில் தெளிவாகும்.

பொதுவாக சட்டத்திற்கு அப்பாற்பட்டு, வெளியில் தெரியாமல், செயல்படுபவையெல்லாம், உள்மறையானவை  ' Subterranean  ' என்று அழைக்கப்படும்.

சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம், அரசு எந்திரத்தை செயல்பட வைத்துள்ள மக்களின் சக்தியானது,  'உள்மறை ' - Subterranean - மூலத்திலிருந்து (source)  வெளிப்பட்டதா? அல்லது ஆட்சியாளர்களால் சீர்குலைந்துள்ள முதன்மை போக்கு (Mainstream) நீதி நெறிகளை நிலைநாட்ட, சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks) புத்துயிர் பெறுகிறதா? என்பது ஆய்விற்குறியதாகும். ('திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா: (Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2) ; பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி'
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

நீதி மன்றம் மூலம், அரசு எந்திரம் செயல்பட்டு, நீதியை நிலைநாட்டும் சக்தியானது,  அரசின் சக்தியாகும்.

பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார் (Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை தடை  ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார். https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf

தமிழ்நாட்டில் ‘உள்மறை தடைகளின்’ ‘Subterranean censorship’ தோற்றமும் வளர்ச்சியும், எந்தெந்த காலக்கட்டங்களில் உருவாகி, எவ்வாறு வளர்ந்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்பது ஆய்விற்குரியதாகும்.

'உள்மறை'-‘Subterranean’- சமூக வலிமையுடன், ஆதாயத் தொண்டர்கள் மூலம் வளர்ந்துள்ள‌ அரசியல் கட்சிகள்,  தமிழ்நாட்டின் அரசியல் அரங்கை ஆக்கிரமித்துள்ளது உண்மையா? தேர்தலில்,  அரசியல் கட்சிகளின் 'உள்மறை'  சக்திகளுக்கிடையில், போட்டிகள் நிலவுவது உண்மையா?

அந்த போட்டியில் வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, வெற்றிக்கு உதவிய 'உள்மறை'  Subterranean  சக்திகள், ஆட்சிக்குள் நுழைவதை தவிர்க்க முடியுமா?  

இயல்பாக அரசு எந்திரம் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட விழையும் அரசு எந்திரத்தில் உள்ள சக்திகளுக்கும், தேர்தல் மூலம் அரசுக்குள் இடம் பெற்றுள்ள 'உள்மறை'  - Subterranean -சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு, எந்த திசையில் பயணிக்கும்? என்பதை பொறுத்தே, விழுப்புரம் 3 மாணவிகளின் மர்ம மரணங்களுக்கு விடையும், குற்றவாளிகளுக்கு  உரிய தண்டனையும் கிடைக்கும்.

அதற்கு சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம், அரசு எந்திரத்தை செயல்பட வைத்துள்ள மக்களின்  ' உள்மறை ' - Subterranean - சக்திகள்/ சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks) புத்துயிர் (renewal), மேற்குறிப்பிட்ட முரண்பாடு எந்த திசையில் பயணிக்கின்றன? என்பதை, எந்த அளவுக்கு 'விழிப்புடன்' கண்காணிக்கின்றனர்? என்பதை பொறுத்ததாகும்.  

ஆக, மக்களின் 'உள்மறை' - Subterranean - சக்திகள்/ சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks)  புத்துயிர் சக்திகள்;

ஆட்சிக்குள் நுழைந்துள்ள ஊழல் 'உள்மறை' - Subterranean - சக்திகள்;

இயல்பாக அரசு எந்திரம் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட விழையும் அரசு எந்திரத்தில் உள்ள சக்திகள்;

3 சக்திகளின் தொகுவிளைவில்(Resultant), 3 மாணவிகளின் மர்ம மரணங்களுக்கான 'நீதி' முடிவாகும்.

தமது பிரச்சினைகளுக்கும், தமது பகுதி பிரச்சினைகளுக்கும் அரசியல் கட்சிகள் துணையின்றி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகளை செயல்பட வைக்கிறார்கள்; அது போல, நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி மன்றம் மூலமும் செயல்பட வைப்பதும் எந்த காலக்கட்டத்தில் தொடங்கி, எப்படி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது? நடுத்தர, ஏழை மக்கள் வீதிகளுக்கு வந்து, ஊழல் 'உள்மறை' - Subterranean - சக்திகளை எதிர்த்து, துணிச்சலுடன்  போராடுகின்ற, இந்த காலக்கட்டத்தில், வசதியான தமிழர்களில் யார்? யார்? ஆட்சிக்குள் நுழைந்துள்ள ஊழல் 'உள்மறை' - Subterranean - சக்திகளுக்கு 'நெருக்கமாகி', அந்த சமூக விரோத சக்திகள் எல்லாம், சமூக அங்கீகாரத்துடன் வலம் வர‌ துணை புரிகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை காண, தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள ஆட்சிகளையும், தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களாக மாறி, மாறி ஆட்சி புரிந்து வரும் அரசியல் கட்சிகளின் தோற்றங்களையும், வளர்ச்சிகளையும், ஆய்வுக்குட்படுத்த வேண்டும். 1944இல் திராவிடர் கழகம் தோன்றவில்லையென்றால், இக்கட்சிகள் தோன்றியிருக்குமா? காங்கிரசிலிருந்து வெளியேறி, 1925இல் ஈ.வெ.ரா தொடங்கிய‌ சுயமரியாதை இயக்கம், எந்த அளவுக்கு, சமூக சீர்திருத்த இயக்கமாக வளர்ந்தது? 1944இல் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்கள் தோன்றி, வளர்ந்தது, சமூக உளவியலில் (Social Psychology), என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? அந்த போக்கில், உள்மறை பண்பாடு (Subculture) சக்திகள் ஊடுருவி வளர்ந்தார்களா? அதில் 'உள்மறை'   subaltern or subterranean சக்திகள்  எந்த சமூக செயல்நுட்பத்தில் வளர்ந்தார்கள்?  ( the subculture has referred to a 'whole way of life' or 'maps of meaning' which make the world intelligible to its members. The 'sub' has connoted notions of distinctness and difference from the dominant or mainstream society./ another significant resonance of the prefix 'sub' is that of subaltern or subterranean. Subcultures have been seen as spaces for deviant cultures to renegotiate their position or to win space for themselves. page 410; Cultural Studies: Theory and Practice - Chris Barker) சமூக சீர்திருத்த இயக்கத்தின் பயணத்தை, உள்மறை (Subculture-Subaltern)  பண்பாட்டு சக்திகள் 'கடத்தி' (Hijack), ஆட்சியில் அமர்ந்தது தொடர்பான ஆய்வுகள், வெளிவந்துள்ளதாக தெரியவில்லை. எனவே அது தொடர்பாக, 'முனைவர்' பட்ட ஆய்வு எவரும் மேற்கொண்டால், 'சுயலாப' நோக்கின்றி, அவருக்கு என்னால் உதவ முடியும். ஆங்கில இதழ்களையும்/நூல்களையும், தமிழில் புலமையாளர்களின் நூல்களையும், படித்து விளங்கிக்கொள்ளும் அறிவின்றி, வன்முறை, 'பலவகை தரகு' திறமைகளுடன், 'பெரியார் கொள்கையாளர்களாக', 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு(?)' என்று, இன்னும் பல முகமூடிகளுடன் வாழும், 'பொதுவாழ்வு' கூட்டணி வியாபாரிகள், இன்று தமிழ்நாட்டை சீரழித்து வருவதற்கு, மேற்குறிப்பிட்ட 'சமூக செயல்நுட்பம்' காரணமா? என்பதும் அந்த ஆய்வில் இடம் பெறும்.

'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவுகள் மூலம், அரசியல் நீக்கம் (Depoliticize) வளர்ந்து, அரசியல் கட்சிகள் ஆதாயத் தொண்டர்கள் பலத்தில், கொள்கைக்கு சம்பந்தமில்லாத 'ஆதாய தேர்தல் கூட்டணிகள்' ஏற்படுத்தி, பயணிக்கிறார்களா? கட்சிகளுக்கு சம்பந்தமில்லாத, பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வி மூலம் பயின்ற மாணவர்களிடம், இதுவரை இல்லாத அளவுக்கு, 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வருகிறதா? தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தோடு, 'தனித்தமிழ்' பற்றாளர்களின்,  'சுயநினைவற்ற' பங்களிப்புடன், தமிழர்களிடமிருந்து, 'விலகி', தமிழ் இலக்கணமும் மரணப்பயணத்தில் சிக்க, தமிழ் வேரழிந்த தமிழர்கள் அதிகரித்து வருகிறார்களா? ( 'தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3); சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட உடன், முதல் 48 மணி நேரத்தில், இளைஞர்களும், இளம் நடிகர்களும், மாணவர்களும் பிரமிக்க வைக்கும் வகையில், நிவாரண உதவிகளில் ஈடுபட்டது எதை உணர்த்துகிறது? பொது இடங்களில் திருடர்களையும், பாலியல் குற்றவாளிகளையும், போலீசாக இருந்தாலும், துணிச்சலுடன், பொது மக்கள் பிடித்து, உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் போக்கானது, எந்த காலக் கட்டத்தில் தொடங்கி, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்துள்ளது?

இவையெல்லாம் நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் - சிக்னல்கள் - என்றாலும், தமிழ்நாட்டில், தமிழ் வேரழியும் போக்கில், இந்தியர் என்ற அடையாளம் இதுவரை இல்லாத அளவுக்கு, வலிமையாகவும், வேகமாகவும் வளர்ந்து வருகிறதா? ஆங்கில வழிக்கல்வி மூலம், தமிழ்வேரழிந்து வரும் போக்கில், இது எந்த திசையில் பயணிக்கும்? 

கடந்த 10 வருடங்களில், ஆதாய நோக்கின்றி, உண்மையான ஈடுபாட்டுடன் உள்ள மாணவர்கள், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பில் 'அதிவேக' எண்ணிக்கையில் சேர்ந்து வருகிறார்களா? அத்தகைய ஆதாய நோக்கின்றி, உண்மையான ஈடுபாட்டுடன் உள்ள மாணவர்கள் 'பெரியார்' கட்சிகளின் மாணவர் அமைப்புகளில் 'சேர்வது' என்பது, 'அதிவேகமாக' குறைந்து வருகிறதா?  அவ்வாறு குறைந்து வந்தால், பெரியார் கட்சிகள் ஊழல் எதிர்ப்பில் கவலையின்றி பயணிப்பது; மேற்குறிப்பிட்ட கூட்டணியில் 'பெரியார்' முகமூடி நபர்களுடன் நேசமாக பயணிப்பது; உண்மையா? உண்மையென்றால்,  அவை அதற்கு காரணங்களாகுமா? நெருக்கடி கால ஆட்சியில்  தி.க, தி.மு.க ஆகிய கட்சிகள், சிறைத்தண்டனை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை சந்தித்த பின் நடந்த, 1977 பாராளுமன்ற தேர்தலில், அந்த ஒடுக்கு முறைக்கு காரணமான இந்திரா காங்கிரஸ் கூட்டணியானது, 34 தொகுதிகளை கைப்பற்ற, தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது எதை உணர்த்துகிறது? ( https://en.wikipedia.org/wiki/Indian_general_election,_1977_%28Tamil_Nadu%29 ) மேற்குறிப்பிட்ட 'கூட்டணி' வளர்ந்த சூழலில், விமர்சன போக்கின்றி, 'சுயலாப ரசிகராக', தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் செயல்பட்டதால், 'இடிப்பாரை  இல்லாத ஏமரா' (திருக்குறள் 448) போக்கில், 'தமிழ் ஈழ விடுதலை' முயற்சியானது, முள்ளிவாய்க்கால் அழிவை நோக்கி பயணித்ததா; பல 'புது பணக்காரர்களை' தமிழ்நாட்டில் உருவாக்கி? அதே போல், முள்ளிவாய்க்கால் அழிவின் போது, 2009இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியானது, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 27ஐ கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது, எதை உணர்த்துகிறது?( https://en.wikipedia.org/wiki/Indian_general_election,_2009_%28Tamil_Nadu%29 ) 1983 இனப்படுகொலைக்குப்பின், கிராமம், நகரம், என்ற வேறுபாடின்றி, 'பொங்கிய' 'சமூக ஆற்றல்' ஆதரவானது, ஏன்? எப்படி? இந்த அளவுக்கு குறைந்தது? என்பதும், ஆய்விற்குரியதாகும். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

மேற்கத்திய குறிப்பாயத்திற்கு(Western Paradigm) அடிமையாகாமல், உலக அளவில் 'சீர்திருத்தம், புரட்சி', 'உள்பண்பாடு' (Subculture), 'உள்மறை' (subterranean) தொடர்பாக நடந்து வரும் ஆய்வுகள் பற்றியும், உளவு அமைப்புகள், அரசுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் இரகசிய குழுக்கள் (Secret Clubs; https://en.wikipedia.org/wiki/Secret_society ) எல்லாம், உலகில் உள்ள பிரச்சினைகளை, தமது சுயநலனுக்கு 'நெறிப்படுத்த' (maneuver), எந்தெந்த நாடுகளில், எந்தெந்த அமைப்புகளில், எப்படியெப்படி 'ஊடுருவி' செயல்படுகின்றன? மேலே குறிப்பிட்ட 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம்,போன்ற முகமூடி சுயநல கூட்டணி' போன்ற, உலக நாடுகளில் உள்ள 'பொதுவாழ்வு திருடர்கள்' எல்லாம், 'எந்த பாதுகாப்புடன்' வெளிநாடுகளில் (தமிழ்நாட்டில் கொள்ளை அடித்த பணம் உள்ளிட்டு) 'திருட்டு பணத்தை' பதுக்கி வைத்துள்ளார்கள்? என்பது தொடர்பான ஆய்வுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.  ( 'Hudson’s next task was to estimate the amount of money from crime going into Switzerland’s secret banking system. In this investigation, his last for Chase, Hudson discovered that under US State Department direction Chase and other large banks had established banks in the Caribbean for the purpose of attracting money into dollar holdings from drug dealers in order to support the dollar (by raising the demand for dollars by criminals) in order to balance or offset Washington’s foreign military outflows of dollars.'; http://www.counterpunch.org/2016/02/03/why-michael-hudson-is-the-worlds-best-economist/ ) சட்டத்தின் பிடியில் சிக்காத அளவுக்கு, வெளிநாட்டு வலைப்பின்னலில், ஆம் த்மி கட்சி (AAP)  போன்ற கட்சிகள் சிக்கியுள்ளனவா? (http://canarytrap.in/2014/03/11/kejriwal-indias-biggest-scam/  ) என்பது பற்றி உலக ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு, காலனி ஆட்சி மூலம் 'திணிக்கப்பட்ட' 'மையப்படுத்தப்பட்ட (Centralized), நேர்க்குத்து (Vertical) தரவரிசை (Hierarchical)' அரசியல் குறிப்பாயத்திற்கு (Paradigm) அப்பால், இயல்பான சுயவலிமையுள்ள,  ஒருசீரற்ற(heterogeneous), கிடைத்தள(horizontal), சுயாட்சி(autonomous)  தன்மையில் உள்ள வகையில்,  தமிழ்நாடு உள்ளிட்டு,  இந்தியாவில் உள்ள மாநிலங்களை கணக்கில் கொண்டு, அந்த 'தனித்துவ'(unique)  சமூகவியல் போக்குகளை அடையாளம் கண்டு, 1944 முதல், இன்று வரை தமிழ்நாடு எவ்வாறு பயணித்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது? இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும், 'அந்நிய நலன்களுக்கான' வலைப்பின்னலில் சிக்கி செயல்பட்ட/செயல்படும் அமைப்புகள், மற்றும் 'முற்போக்குகள், பிற்போக்குகள், அறிவுஜீவிகள்' பற்றிய ஆய்வுகளும், அறிவுபூர்வ விவாதங்களும் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது, என்பதும் என் கருத்தாகும்.

3 மாணவிகளின் மர்ம மரணங்கள் உள்ளிட்ட சீர்கேடுகள் பற்றி கவலைப்பட, நமக்கு அருகதை உண்டா; நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், மேற்குறிப்பிட்ட 'கூட்டணி' நபர்கள், அவர்களின் அடிவருடிகள் இருந்து, அவர்கள் மூலம், நாம் 'லாபம்' பெற்று வாழ்ந்து வந்தால்? நம்மை போன்றவர்களின் 'சமூக அங்கீகாரம்' 'வற்றினால்', அந்த 'சமூக விரோத கூட்டணி' 'உதிர்ந்து' போக மாட்டார்களா; அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் 'வெறிச்சோட'?

கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அகத்திலும் புறத்திலும் சீரழியாத தமிழர்கள் எல்லாம், ஒன்று பட்டு, அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும், மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான‌ விடைகளை கண்டாக வேண்டும்; தமிழ் வேரழியாமல், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'இணக்கமாக', தமிழ்நாடு மீட்சி திசையில், பயணிக்க வேண்டுமானால்; சர்வதேச அரசியல் பொருளாதார சவால்களை, 'தனிநாடாக' சந்திப்பதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து, 'ஐரோப்பியர்' அடையாளத்தில் பல தனிநாடுகள் ஒன்றுபட்டு வரும் போக்கில்.( தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3);  'தனி நாடு' உண்மையில் தனி நாடா?: http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

Thursday, February 11, 2016

இப்படியெல்லாம் கூட;

'பெரியார்' கொள்கையாளர்கள் யோசிப்பார்களா? (2)


"இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும்  கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்?"

('தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?'; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

என்று வெளிவந்த பகுதிக்கு, 'பெரியார்' கொள்கையாளர் பின்வரும் கருத்தை தெரிவித்துள்ளார்.

"இடஒதுக்கீடு  சமூகத்தில்   எல்லாபிரிவினருக்கும்  பகிர்ந்து  கிடைக்க  வாய்ப்பளிக்கிறது  அவ்வளவே. சமூகத்தில் மதவெறி, சாதிவெறி, ஆங்கிலமோகம், நுகர்வு வெறி, சுயநல உணர்வு  ஆகியன  உள்ளன. இடஒதுக்கீடு  பெறும்  எல்லா  பிரிவினரிடமும்   இந்த  தன்மை  இருக்கத்தானே  செய்யும். சமூகநீதியை  இதை வைத்து விமர்சிப்பது  சரியான  பார்வையா?"

"எனது பதிவில் எந்த பகுதி, இது போன்ற புரிதலை தங்களுக்கு தந்தது ? என்று குறிப்பிடவும்." என்று நான் கேட்டதற்கு, கீழ்வரும் பதில் கிடைத்துள்ளது.

"கீழே உள்ள  பகுதி:
இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான,' தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? "

அந்த பதிலின் அடிப்படையில், எனது கருத்து வருமாறு:

இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, (ஊழலுடன் பின்னிபிணைந்து ஆங்கில வழி கல்வி வியாபாரமானது, 1970களிலிருந்து வளர்ந்து வரும் சூழலில்) ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வின் முடிவானது;

அந்தந்த பிரிவுகளில் பெரும்பாலும் படித்த, வசதியான குடும்பப்பிள்ளைகளுக்கு கிடைத்து, ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது என்று வெளிப்பட்டால்;
 
அது "இடஒதுக்கீடு  சமூகத்தில்   எல்லாபிரிவினருக்கும்  பகிர்ந்து  கிடைக்க  வாய்ப்பளிக்கிறது" என்றாகுமா? அது தான் சமூக நீதியா?

இன்றும் பெரும்பாலான ஏழை குடும்பங்களின் பிள்ளைகள்  எல்லாம் மேல்நிலைப்பள்ளி வரை,  தமிழ்வழி அரசு பள்ளிகளில் படித்து வருவதால் தான்,  தமிழ்வேர் மர்ணமடையாமல் உள்ளது,  என்ற உண்மையை,  சகாயம் அய்.ஏ.எஸ் அவர்களும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை போன்றவர்களும் வெளிப்படுத்தி வருகிறார்கள். விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படிக்கும் வசதியான குடும்பப்பி
ள்ளைகளின் பெரும்பாலோரின் தமிழ்வேர் சீரழிந்து, அவர்களால், தமிழ்நாட்டில் தமிழ் இதழ்களை கூட படிக்க முடியாத நிலை வளர்ந்து வருகிறது. அந்த சூழலில், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில், அந்தந்த பிரிவுகளில், முன்னுரிமை கொடுத்தால், அது தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தை தடுக்காதா? இடஒதுக்கீட்டின் பலன்கள், தமிழ் வேரழிந்த மாணவர்களுக்கு கிடைப்பதானது, தமிழ்ச் சமூகத்திற்கு வளர்ச்சியா? அல்லது தமிழ் வேரழிவு நோய் வீக்கமா?

அந்த வேறுபாடு தெரியாமல்;

"சமூகத்தில் மதவெறி, சாதிவெறி, ஆங்கிலமோகம், நுகர்வு வெறி, சுயநல உணர்வு  ஆகியன  உள்ளன. இடஒதுக்கீடு  பெறும்  எல்லா  பிரிவினரிடமும்   இந்த  தன்மை  இருக்கத்தானே  செய்யும்." என்று;

எனது பதிவுகளை படித்து வரும் ''பெரியார்' கொள்கையாளர்' கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படியெல்லாம் கூட; 'பெரியார்' கொள்கையாளர்கள் யோசிப்பார்களா? என்று எனக்கு தோன்றுவது, எப்படி தவறாகும்? 

பொதுவாக வாதத்தில் வெளிப்படும் குறைபாடுகள் பற்றிய விளக்கத்திற்கு; fallacy ; https://en.wikipedia.org/wiki/List_of_fallacies 
('எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்' ; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

'பெரியார்' கொள்கையாளர்களின் வெளியீடுகள் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட குறைபாடுகளுக்கான உதாரணங்களை அடையாளம் கண்டு, வெளிப்படுத்தும் நோக்கிலான,  முனைவர் பட்ட ஆய்வில் எவரும் ஈடுபட்டால், அவருக்கு உதவ முடியும்.


Tuesday, February 9, 2016


இப்படியெல்லாம் கூட; 

பெரியார் கொள்கையாளர்கள் யோசிப்பார்களா?(1)




எனது பதிவுகளை படித்து வரும் ஒரு 'பெரியார்' கொள்கையாளர், அண்மையில், எனக்கு எழுதிய மடலில் உள்ள கீழ்வரும் கருத்தானது,  'இப்படியெல்லாம் கூட, எனது பதிவுகளை தவறாக புரிந்து கொள்ளும் அளவுக்கு, பெரியார் கொள்கையாளர்கள் யோசிப்பார்களா?' என்ற வியப்பை ஏற்படுத்தியது.

"பிராமணர்  தரப்பு  நியாயங்களை  வெளிப்படுத்துவதுபோல்சிலகாலம்  தாழ்த்தப்பட்டோர் வசிக்கும்  பகுதிகளில்  குடியிருந்தால்  உங்கள்  கருத்து  தீவிர  தலித்வாதமாய்   வெளிப்படலாம்  என்றே  நான்  நினைக்கிறேன்."

அவருக்கு கீழ்வரும் பதிலை அனுப்பினேன்.

"நான் அதிகமாக பிராமணர்களுடன் இருந்த காலத்தில், அவர்களில் பலர் எனக்கு நண்பர்களாயிருந்த காலத்தில் தான், பெரியார் இயக்கத்திற்குள் அடியெடுத்து வைத்தேன். நான் இப்போது வசிக்கும் பகுதியில் பிராமணர்கள் இல்லை. வீடு, பணியிடம் என்று பார்த்தால், தலித்துகளே அதிகமாக உள்ளனர்.

விவாதத்திற்குள் நிற்காமல், விவாதத்திற்குள் ஈடுபடுபவர்களை எடைபோடும் தவறை, நான் செய்ததில்லை ; தெரிந்தால் திருத்திக்கொள்ள தயங்கியதில்லை. ('எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்' ; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html ) அந்த வியாதியுள்ளவர்களுடன் நான் பழகுவதில்லை. எனவே உங்களை சந்திக்கும் தகுதி எனக்கில்லை, அல்லது என்னை சந்திக்கும் தகுதி உங்களுக்கில்லை; இரண்டுமே சரியாக இருக்கலாம். எனவே அந்த நிலை மாறும் வரை, நாம் சந்திப்பதில் பலன் இல்லை."

எனது பதிவுகளில் எந்தெந்த பகுதிகள், மேலேக்குறிப்பிட்ட கருத்துக்கு அடிப்படைகள் என்பதை அவரோ, அல்லது அவர் போன்ற பிற 'பெரியார்' கொள்கையாளர்களோ எனது பதிவின் கீழ் உள்ள 'வாசகர் கருத்து' (comment) பகுதியில் பதிவு செய்வதை, உண்மையான ஆவலுடன், வரவேற்கிறேன். கீழ்வரும் பதிவுகள் உள்ளிட்டு, எந்த பதிவிலிருந்தும், அவர்களது கருத்திற்கான சான்றுகளை முன்வைக்கலாம்.

'பார்ப்பனர் நலன்': 'மூடநம்பிக்கையா'? 'பகுத்தறிவா'?

"திராவிட இயக்கத்தால் வளர்க்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பை' உள்ளடக்கிய தமிழுணர்வு என்பதானது, தமிழ்நாட்டை சீரழித்த 'தரகு நோய்' வளர்ச்சிக்கே உதவியுள்ளது என்பதையும், அதனால் தமிழ்நாட்டில் அறிவுப்புலம் வறண்ட பாலைவனம் ஆகும் திசையில் பயணிப்பதையும், அதை  நோக்கி , நான் ஆய்வுக்கவனம் செலுத்த, அந்த அனுபவங்களே முக்கிய காரணமாகும்." என்பதை கிழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.
' தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8)
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்'

இதுவரை எந்த வாச‌கர் கருத்தையும் அகற்றவில்லை; இனியும் அகற்றப் போவதில்லை; உரிய சான்றுகளின் அடிப்படைகளில், பகிரங்கமாக எனது கருத்தை திருத்திக்கொள்ள தயங்கியதில்லை. சார்பற்ற (Objective)  பார்வையின்றி, நான் 'வசிக்கும்  பகுதி' காரணமாக, 'அதன் சார்பான' 'நியாயங்களை  வெளிப்படுத்துவ'தாக, அதை அறிவுபூர்வமாக நிரூபிக்காமல், 'நீதிபதி' போல, 'தீர்ப்பு' வழங்கி. என்னை 'அசிங்கப்படுத்தி', 'பெரியார் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் விமர்சிக்கும் 'சமூக கடமையிலிருந்து' விலகச் செய்யலாம்', என்ற நினைப்பும், வெற்றி பெறாது; என்பதையும் தெளிவுபடுத்த விழைகிறேன்.

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் தி..தலைவர் கி.வீரமணியின் 'ஒற்றர் நான்' என்று,  மாநில அளவில் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே, என்னை சந்தேகக்கண்ணுடன் அணுகி, புறத்தில் என்னுடன் 'நண்பர்கள்' போல் பழகியிருக்கிறார்கள் என்பதை, பெரியார் இயக்கத்தை விட்டு விலகி, சில காலம் கழித்தே எனக்கு தெரியவந்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( ' "கி.வீரமணியின் ஒற்றர் நீங்கள்"; &  "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் ";        இரண்டு வதந்திகளும், விளக்கங்களும்';  http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

ஒரு இயக்கத்தில் உள்ளவர்கள் மற்றவர் மீது உள்ள ஐயங்களை, வெளிப்படையாக தெரிவித்து, உண்மையை அறிந்து கொள்ள, அந்த இயக்கத்தில் திறந்த மனதுடன், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள், நடைபெற வேண்டும். அதற்கு பதிலாக 'கிசு கிசு' பாணியில் 'சந்தேகங்கள்' 'உண்மைகள்' போல வலம் வந்தால், அது அந்த இயக்கமானது, பொதுநலனிலிருந்து விலகி, 'சுயநலன்களை' ஊக்குவிக்கும் திசையில் பயணிப்பதன் அறிகுறியே ஆகும்.

திறந்த மனதுடன், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள்  நடைபெற்ற ஒரு இயக்கத்தில், மேற்குறிப்பிட்ட நோய் நுழைந்த வரலாற்று பின்னணியையும்,  கீழ்வருமாறு பதிவு செய்துள்ளேன்.


'திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் 'குடிஅரசு' இதழை .வெ.ரா தொடங்கினார்.

தன்னை எதிர்த்து ஜீவா, முத்துச்சாமி வல்லத்தரசு உள்ளிட்டு பலர் அனுப்பிய மடல்களை அப்படியே 'குடி அரசு' இதழில் வெளியிட்டு, விளக்கம் கொடுத்து, பயணித்தவர், 1944 முதல் , அப்போக்கிலிருந்து திசை திரும்பி, உணர்ச்சிபூர்வமாக, விவாதிப்பவரின் 'யோக்கியதையை' எடை போட்டு, விவாதத்தில் நுழைத்து,  அண்ணாதுரையை விமர்சித்து பயணித்ததால், அண்ணாதுரை வலுவாகி; பொது அரங்கில் அவ்விவாத நோய் அரங்கேற;

1949இல் தி.மு., தோன்றியதும், அந்த உணர்ச்சிபூர்வ மோதலானது வீரியம் பெற்று, அதில் பாரதிதாசன், இன்றும் பிரசுரிக்க முடியாத அளவுக்கு, அண்ணாதுரை மீதும், ஜீவா மீதும் வசைமாரி 'எழுதி வெளியிட';

அதன் அடுத்த கட்டமாக, 'ஆபாச பேச்சாளர்களும், எழுத்தாளர்களும்' பொது அரங்கில் வலம் வர;

தமிழ்நாட்டின் பொது அரங்கில், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள் மறைய; அந்த போக்கில், அடிப்படைக்கல்வி முதல் பல்கலைக்கழகங்கள்  உள்ளிட்ட  அரசு துறைகளிலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய அரசு துறைகளிலும், ஊழல் வளர;


மேற்குறிப்பிட்ட வரலாற்று பின்னணியில், அந்த உணர்ச்சிபூர்வ 'கிசுகிசு' இருட்டில், அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'முற்போக்கு' வேடமிட்ட, சுயலாப கள்வர்கள் வளர்ந்தார்கள்; திருச்சி பெரியார் மையம் அதில் சிக்கி, எனக்கு அதிர்ச்சியையும், நம்பமுடியாத இழப்புகளையும் ஏற்படுத்தி; அந்த 'சுயலாப கள்வர்' உருவான தோற்றம் பற்றிய ஆய்வில், என்னை ஈடுபட தூண்டி; மனித உறவுகளை காவு கொடுத்து பொருள் ஈட்டுவோரை, 'வரைவில் மகளிர்' என்று திருக்குறள் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் 187 அடையாளம் காட்டியுள்ளது.  அதே அதிகாரத்தில், அத்தகையோருடன் உறவு கொண்டு, 'பலன் அனுபவிப்பவர்களை', 'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் என்றும், திருக்குறள் அடையாளம் காட்டியுள்ளது. சட்டத்தின் பிடியில் சிக்காமல், சமூகத்திற்கு கேடான ( விழுப்புரம் 3 கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம், தமிழ்நாட்டில் ஊழல் காரணமான வெள்ள பாதிப்புகள், மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்ற இன்னும் பல) ஊழல் வழிகளில் பணம் ஈட்டுவோரை 'வரைவில் மகளிர்' என்றும், 'அந்த' பணத்தின் பலன்களை அனுபவிக்கும், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சார்ந்த 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முற்போக்கு', 'பிற்போக்கு' அமைப்புகளில் உள்ளவர்களையெல்லாம் 'இருட்டறையில் பிணம் தழுவியவர்கள்' என்றும், திருக்குறள் 'பொருட்பாலில்' அடையாளம் காட்டியுள்ளது. ஊழல் ஒழிப்பு ஒழுங்காக நடந்தால், அவர்கள் எல்லாம் விசாரணை வளையத்திற்குள்  வந்தாக வேண்டும்."
('தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது  'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?;'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?';

அது மட்டுமல்ல,சென்னையில் 'ஊழல்' வெள்ள பாதிப்புகள் உள்ளிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பாதிப்புகள் எல்லாம் பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடின்றி, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்ததையும், நல்லவர்கள் எல்லாம், எந்த சாதி,மதம்,மொழி என்ற வேறுபாடின்றி, (ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில்வது உள்ளிட்டு இன்னும் பல) உதவி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இது தொடர்பாக கீழ்வரும் பதிவையும் வெளியிட்டுள்ளேன். 

'1925 முதல் வெளிவந்த 'குடி அரசு' மற்றும் பின் வெளிவந்த திராவிட இயக்க இதழ்கள், புத்தகங்கள், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ உள்ளிட்ட மார்க்சிய அறிஞர்களின் நூல்கள், ஜீன் பால் சாத்ரே(http://en.wikipedia.org/wiki/Jean-Paul_Sartre), சாம்ஸ்கி (http://en.wikipedia.org/wiki/Noam_Chomsky )  உள்ளிட்ட பல நவீன சிந்தனையாளர்களின் கட்டுரைகள், எல்லாவற்றையும் விட, பெரியார்  இயக்கங்களில், குறிப்பாக திருச்சி பெரியார் மையத்தில் கிடைத்த, மதிப்பு வாய்ந்த உள்ளிடான (Valuable input), 'அனுபவங்கள்'  போன்றவை துணையுடனே தான், நான் 'திராவிட மன நோயாளித் தனத்தின்' தோற்றத்தையும், வளர்ந்த செயல்நுட்பத்தையும் கண்டுபிடிக்க முடிந்தது.'

'திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூகசெயல்நெறி மதகுகள் (2) ; பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி'

எனக்கு முன்பின் தெரியாதவர்களாக இருந்து, சுயலாப நோக்கற்ற எனது பொது வாழ்வையும், ஆய்வுகளையும் தாமாகவே அறிந்து, எனக்கு 'நம்ப முடியாத' உதவிகள் புரிந்த,  'அனைவருமே' ( நான் பிராமணர் அல்ல, தலித் அல்ல என்பது தெரிந்தும்),  'பிராமணர்கள், தலித்துகள்' ஆவர்.

ஆனால் என்னுடன் பழகி, உதவிகள் பெற்று, 'நன்றி கெட்டவர்களாகவும், இழிவின் இலக்கணமாகவும்' வெளிப்பட்ட 'அனைவருமே' 'பெரியார் கொள்கையாளர்கள்' ஆவர்; வணங்குதற்குரிய அரிய நண்பர்கள் சிலர், பெரியார் இயக்கத்தில் இருந்த போது, எனக்கு கிடைத்ததை ஈடுகட்ட போலும்.( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) 'பெரியார் மையம்' மூலம், புறத்தில் நான் ஏமாந்து , பழகியவர்களை தவிர, மாணவ பருவத்திலிருந்து, இன்று வரை, உண்மை, நேர்மை, உறவில் சுயலாப நோக்கற்றவர்கள் தான், எனது சமூக வட்டத்தில் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். என்னை போன்று வாழ்ந்து வருபவர்கள், 1967க்கு முன் பெரும்பான்மையாக இருந்து, இன்று சிறுபான்மையாக உள்ளார்கள் என்பது என் கருத்து. எனவே எனது சமூக வட்டத்தில், எவரை அனுமதிப்பது? என்பதில், மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்கிறேன்.

அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான(Transparency) , தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability),  தமிழ்நாட்டின் பொது அரங்கு, 1944க்கு முன் இருந்ததால், காங்கிரசானாலும், நீதிக்கட்சியானாலும், கம்யூனிஸ்டானாலும் நேர்மையான தலைவர்களே பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். 1944 முதல், உணர்ச்சிபூர்வ இருட்டு வளர்ந்து, அந்த போக்கை சிதைத்ததால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர்கள் அரிதாகி விட்டார்கள். என்னைப் போன்றவர்கள் 'பிழைக்கத் தெரியாதவராகவும்', 'ஒற்றராகவும்', , "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " என்பதாகவும் , பரப்புரை பரவ; ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்கள் எல்லாம், சட்டத்தின் பிடியில் சிக்காத, 'வாழ்வியல் புத்திசாலிகளாக', 'முன்மாதிரிகளாக' வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
 (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில், எனது பங்களிப்புடன் நடந்த மாணவர் போராட்டங்களில், அதிக துணிச்சலையும்ஆர்வத்தையும் வெளிப்படுத்தியவர்கள், ஒப்பீட்டளவில் தலித் மாணவர்களே ஆவர். தமிழ்நாட்டின் சமூகவியல் ஆய்வில், கணக்கில் கொள்ள வேண்டிய முக்கிய 'சிக்னல்கள்' (signals) இவை ஆகும்.   

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நெருக்கமாகி, விடுதலைப்புலி தலைவர்கள் ராகவன், பிரபாகரன், பேபி, ஆண்டன் பாலசிங்கம், மாத்தையா உள்ளிட்ட இன்னும் பலருடன் பழகி, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் எண்ணிக்கையிலும், பணபலத்திலும், தமிழ் நாட்டு சமூக அங்கீகாரத்திலும், குறைந்த நிலையில் இருந்த போது,  காலூன்றி நடக்க, 'துணை' புரிந்து, தவறான திசையில் பயணிப்பதை முன்கூட்டியே ஆண்டன் பாலசிங்கத்திடம் எச்சரித்து, பின் அவற்றை திருச்சி பெரியார் மையம் மூலம் புத்தகங்களாக வெளியிட்டு,; மார்க்சிய லெனினிய குழுக்களுடன் அறிவுபூர்வ விவாதங்கள்  மேற்கொண்டு, தமிழ்நாட்டு நக்சலைட் தலைவர்களுடன் பழகிய; இளையராஜா, வீ.ப.கா சுந்தரம் உள்ளிட்ட இன்னும் பல இசை மேதைகளுடன் பழகிய; எனது வாழ்க்கை வரலாறு எழுதும் போது, விருப்பு, வெறுப்பற்ற அணுகுமுறையில், மேலே குறிப்பிட்டவை தொடர்பான கூடுதல் வெளிச்சத்தை, வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.

பொது அரங்கில் விவாத புலத்தினை, புலமையாளர்கள், 'அசிங்கப்படாமல்' ஒதுங்க விரும்பும், விவாத புலமாக்கியதன் விளைவுகளால், தமிழ்நாட்டில் அறிவுப் புலம் சீர் கெட்டதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html )

புழுதிவாரி தூற்றுவார்களே என்று அஞ்சி;
புலமையாளர்கள் பொதுஅரங்கில் விவாதத்தை தவிர்ப்பதானது;

சுயநல கள்வர்கள் ஆதிக்கத்தில் தமிழும், தமிழர்களும் வேரழியும் மரணப்பயண போக்கிற்கு துணை புரிவதாகும். அந்த தவறை நான் செய்யப் போவதில்லை. நம்மையும், நமது சமூக வட்டத்தையும், சுயநலகள்வர்களிடமிருந்து பாதுகாத்தே, நமது சமூக ஆற்றல் ( அறிவு/உடல் உழைப்பு,நேரம், பணம்) தமிழின், தமிழர்களின் மீட்சிக்கு பயன்படுவதை உறுதி செய்ய முடியும்.

குறிப்பு:

மேலே குறிப்பிட்ட 'பெரியார்' கொள்கையாளர் எனது பதிவுகள் குறித்து, தெரிவித்த இன்னொரு கருத்து:


"உங்கள்  கட்டுரைகள்  ஒரு  குறிப்பிட்ட  தலைப்பில்  ஆழமாக  இல்லாமல், ஒரே கட்டுரையில்  பல  செய்திகளை தொடர்ச்சியில்லாமல், முழுமை பெறாமல்  உள்ளது. "

அதற்கு நான் அவருக்கு அனுப்பிய பதில் வருமாறு:

"கட்டுரைகள் சம்பந்தப்பட்ட பொருளின் தன்மையை பொறுத்து, தொடர்ச்சியாக படித்து விளங்கிக் கொள்வது என்பது ஒரு நீளவாக்கு (linear)  படித்தல் முறை. அந்தந்த பக்கங்களில் அடிக்குறியிட்ட தகவல்களையும், குறிப்பு(Referred)  கட்டுரைகளையும், நூல்களையும் தேடி, படித்து, விளங்கிக் கொள்வது அதற்கு அடுத்த கட்ட புரிதல். புத்தகங்களில் பின் பக்கம் ஆங்கில நூல்களில் , (தமிழில் 1967க்கு முன் வந்த பெரும்பாலான நூல்களில்) அகரவரிசையில் உள்ள,  பொருள் பட்டியலில், தாம் விரும்பும் பொருளை, தனது விருப்ப வரிசையில் படிப்பது என்பது நீளவாக்கற்ற(non-linear) முறை. நான் எடுத்துக் கொண்ட பொருளின்  பல்துறை பரிமாணங்கள் காரணமாக, ' Non-Linear & Fractal ' (http://fractalfoundation.org/resources/what-are-fractals/ ) என்ற புதிய முறை எனது பதிவுகளில், சோதனை முயற்சியாக வெளிவருகிறது. (அது பற்றி விளக்கி, ஒரு பதிவில் வெளியிட முயல்கிறேன்; நேரம் கிடைக்கும் போது)  உலக அளவில் பல புலமையாளர்கள், எனது பதிவுகளில் வெளிப்படும் கருத்துக்களை,  வெகுவாக பாராட்டி, எனக்கு எழுதியுள்ளார்கள். எனது 'பதிவுகள் ஆழமாக இல்லாமல்' என்று வந்துள்ள முதல் மடல் தங்களுடையதாகும். அந்த முறையில் தங்களால் படித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பது, பலருக்கு இருக்குமானால், அவர்களுக்காக மட்டும் தனியே ஒரு நூல் எழுதுவது பற்றி பரீசிலிக்கிறேன்."



எனது பதிவுகளில் வெளிப்படும் கருத்துக்கள் ஆழமானவையா? ஆழமற்றவையா? என்று படிப்பவர்கள் முடிவு செய்யும் உரிமையை நான் மதிக்கிறேன். 'ஆழமற்றவை' என்று எனக்கு தெரிவிப்பவர்கள், எந்த கருத்து ஆழமற்றது? அக்கருத்துக்கு நான் முன் வைத்த சான்றுகளையும், அக்கருத்துக்கு எதிரான சான்றுகளையும் குறிப்பிட்டு, ஒப்பிட்டு, எதன் அடிப்படையில் ஆழமற்றவை? என்று விளக்கினால், நான் எனது கருத்தை திருத்திக் கொள்ளவோ, அல்லது 'ஆழமற்றது' என்ற கருத்தை திருத்திக் கொள்ளவோ, துணை புரியும். இது, நான் இன்றுவரை,  கடைபிடித்து வரும் அணுகுமுறையாகும்.