Friday, February 12, 2016



3 சக்திகளின் தொகுவிளைவில்(Resultant), 3 மாணவிகளின் மர்ம மரணங்களுக்கான நீதி?


நம்பிக்கையூட்டும் திசையில் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கான 'சிக்னல்கள்' (Signals) வெளிவர தொடங்கியுள்ளன. 

தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக, வித்தியாசமான சமுக போராட்டம், வியப்பூட்டும் வகையில் வளர்ந்து வருகிறது. தமது பிரச்சினைகளுக்கும், தமது பகுதி பிரச்சினைகளுக்கும் அரசியல் கட்சிகள் துணையின்றி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகளை செயல்பட வைக்கிறார்கள்; அது போல, நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி மன்றம் மூலமும் செயல்பட வைக்கிறார்கள்.

அந்த வகையில் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம் அரசு எந்திரத்தை செயல்பட வைத்ததன் மூலம்;

அரசியல் வாதிகள், அதிகாரிகள், தரகர்கள், கல்வி கொள்ளையர்கள் கூட்டணியின் கோரமுகமானது, விழுப்புரத்தில் 3 மாணவிகளின் மர்ம மரணங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

"கல்லூரிக்கு வந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் போதிய வசதிகள் இல்லை என வெளியேற முயற்சித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டியும், தாக்கியும் விரட்டியடித்துள்ளது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல முறை மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள், அமைச்சர் தொடங்கி முதலமைச்சர் வரை பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் முறையிட்டு தங்களின் வலுவான எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதன் பிறகே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடந்துள்ளது. விசாரணை அறிக்கையின் மீது கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு சம்பந்தப்பட்ட மாணவர்களை மிரட்டி அச்சுறுத்தியுள்ளது, கொடுமைப் படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் மூன்று மாணவிகள் தலை மற்றும் உடம்பில் காயங்களுடன் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்."


"''எஸ்.வி.எஸ்., கல்லுாரி மாணவியர் மூணு பேர், மர்மமா இறந்து போனாங்கல்லா... இந்த கேசை விசாரிக்கிற, சி.பி.சி.ஐ.டி., போலீசுகாரங்க, சேர்மன் வாசுகியின் டைரி ஒண்ணை பறிமுதல் பண்ணியிருக்காவ வே...

''அதுல, மாணவர்கள் போராட்டங்களை அடக்கவும், மேலிடத்துக்கு விஷயத்தை கொண்டு போகாம மறைக்கவும், அதிகாரிகள், போலீசார்னு பல தரப்புக்கும் இன்னின்ன தேதியில, இவ்வளவு பணம் கொடுத்தேன்னு எழுதியிருக்கு... இதனால, கைநீட்டி பணம் வாங்குனவங்க, பீதியில இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி."

 
மேலே குறிப்பிட்ட கூட்டணியானது, தமிழ்நாட்டில் எப்போது தோன்றி, எப்படி வளர்ந்தது? என்று ஆராய்ந்து, விடைகளை கண்டுபிடித்து, அமுலாக்க தவறினால், மீண்டும், மீண்டும் அதன் பாதிப்புகளை அனுபவிப்பதிலிருந்து தமிழ்நாடு தப்ப முடியுமா?

அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் கொடூரமானது, ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாடு இரையானதன் விளைவே, என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இவ்வளவு பாதிப்புகள் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அளவுக்கு, தவறு செய்யும் போக்கு எப்படி வளர்ந்தது?

எது சரி? எது தவறு? என்று புறத்தில் தான் ஏற்றுக்கொண்ட, மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற, நெறிமுறைகளின்படி;

வெளியில் தெரியாமலும், சட்டத்தின் பிடியில் சிக்காமலும், தவறு புரிய வாய்ப்பிருந்தும், தவறு செய்யாதவர்களே, அகத்திலும், புறத்திலும் நேர்மையானவர்கள் ஆவர்.

மாட்டிக்கொண்டு அசிங்கப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில், தவறு செய்ய துணிச்சலின்றி, தவறு செய்யாதவர்கள் எல்லாம், அகத்தில் சீரழிந்து, புறத்தில் நேர்மையாக காட்சி தருபவர்கள் ஆவர். அத்தகையோர், கீழ்வரும் பிரிவினருடன்,வாய்ப்பு கிடைத்தால், நெருக்கமாகி,  எந்த குற்ற உணர்வுமின்றி, அவர்கள் மூலம் 'பலன்கள்' அனுபவிப்பார்கள்; மர்மமாக 'மரணமடைந்த 3 பெண்களும் தமது குடும்பப்பெண்கள் அல்ல' என்ற நினைப்பில், மனசாட்சியின்றி.

'அச்சம் என்பது மடமையடா' என்ற கொள்கையில், துணிச்சலுடன், கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தவற விடாமல், தவறு செய்பவர்கள் எல்லாம், அகத்திலும் புறத்திலும் சீரழிந்தவர்கள். அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகள்' எல்லாம்,  'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு (?), ஆன்மீகம்' உள்ளிட்ட இன்னும் பல அமைப்புகளின் 'புரவலராகி', சமூகத்தில் 'பெரிய மனிதராக' வலம் வருவார்கள்: மேலே குறிப்பிட்ட இரண்டாம் வகை மனிதர்களை, தமது 'எடுபிடிகளாக்கி'; அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகளை','அதிவேக பணக்காரர்களாக்கி';

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளையும், விழுப்புரத்தில் 3 மாணவிகளின் மர்ம மரணங்களையும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்கள் கொள்ளையையும், தமிழ்நாட்டிற்கு 'பரிசுகளாக' வழங்கி.

'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு' அமைப்புகளில் உள்ளவர்களில் யார், யார், தமிழ்நாட்டை சீரழித்து வரும் ஊழலை எதிர்த்தவர்கள்? யார், யார், அந்த ஊழல் கொள்ளைக்காரர்களிடம் 'நேசமாகி, பலன்கள்' பெற்று, அதை பற்றி மூச்சு விடாமல், 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற 'சடங்குகளில்' பிழைப்பு நடத்துகிறார்கள்?
  
அவர்களில் யார்? யார்?;

'இன்றுள்ள சாதிமுறை, காலனியத்திற்கும் முன் கல்வியில் முன்னேறியிருந்தவர்கள் யார்? மனுநீதியின்படி கல்வி தொடர்பான 'சூத்திரர்' தண்டனைகள், இந்தியாவில், தமிழ்நாட்டில், எந்த மன்னராட்சியில் இருந்தது? இனம், ஆரியர்‍, திராவிடர், பார்ப்பன ஆதிக்கம்,' போன்ற தங்களின் கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்பாக, உலக அரங்கில் என்னென்ன ஆய்வு முடிவுகள் வெளிப்பட்டு வருகின்றன? என்று தேடி, 'அறிவுபூர்வமாக' உரிய மாற்றங்கள் செய்து பயணிப்பவர்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளை பற்றிய சமூக பொறுப்பும் அக்கறையுமின்றி, 'உணர்ச்சிபூர்வ' சூழலை வளர்த்து, 'சுயநல கூட்டணி' உருவாகி வளர்ந்த 'வேகத்தில்', தமிழ்நாட்டில், 'இதற்கு முன் இல்லாத அளவுக்கு', மாணவர்களையும் 'சாதி வெறி' நோய்க்குள்ளாக்கி,  சாதி அமைப்புகளும், சாதி மோதல்களும் வளர்ந்து வருகின்றனவா?

இத்தகைய  சமூக விரோத சக்திகளின் 'பலம்' ஆனது, எந்த சமூக செயல்நுட்பம் அடிப்படையில் செயல்படுகிறது?

அந்த வகை ஆய்விற்கு, சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம், அரசு எந்திரத்தை செயல்பட வைத்துள்ள, விழுப்புரம் 3 மாணவிகளின் மர்ம மரணங்கள் பிரச்சினை, மற்றும் அது பயணிக்கும் திசை, ஆகியவற்றை கூர்ந்து கவனிப்பது பயன்படும்.

அதாவது,  தமிழ்நாட்டில் பெரும்பாலும் நடுத்தர ஏழை மக்களின் 'நீதிக்கான' போராட்டங்களின் சக்திக்கும், அரசு அமைப்புகளில் செல்வாக்குடன் வலம் வரும் சமூக விரோத சக்திகளுக்கும், இடையிலான 'பலப்பரிட்சை'யானது, மேலே குறிப்பிட்ட பயண திசையில் தெளிவாகும்.

பொதுவாக சட்டத்திற்கு அப்பாற்பட்டு, வெளியில் தெரியாமல், செயல்படுபவையெல்லாம், உள்மறையானவை  ' Subterranean  ' என்று அழைக்கப்படும்.

சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம், அரசு எந்திரத்தை செயல்பட வைத்துள்ள மக்களின் சக்தியானது,  'உள்மறை ' - Subterranean - மூலத்திலிருந்து (source)  வெளிப்பட்டதா? அல்லது ஆட்சியாளர்களால் சீர்குலைந்துள்ள முதன்மை போக்கு (Mainstream) நீதி நெறிகளை நிலைநாட்ட, சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks) புத்துயிர் பெறுகிறதா? என்பது ஆய்விற்குறியதாகும். ('திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா: (Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2) ; பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி'
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

நீதி மன்றம் மூலம், அரசு எந்திரம் செயல்பட்டு, நீதியை நிலைநாட்டும் சக்தியானது,  அரசின் சக்தியாகும்.

பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார் (Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை தடை  ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார். https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf

தமிழ்நாட்டில் ‘உள்மறை தடைகளின்’ ‘Subterranean censorship’ தோற்றமும் வளர்ச்சியும், எந்தெந்த காலக்கட்டங்களில் உருவாகி, எவ்வாறு வளர்ந்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்பது ஆய்விற்குரியதாகும்.

'உள்மறை'-‘Subterranean’- சமூக வலிமையுடன், ஆதாயத் தொண்டர்கள் மூலம் வளர்ந்துள்ள‌ அரசியல் கட்சிகள்,  தமிழ்நாட்டின் அரசியல் அரங்கை ஆக்கிரமித்துள்ளது உண்மையா? தேர்தலில்,  அரசியல் கட்சிகளின் 'உள்மறை'  சக்திகளுக்கிடையில், போட்டிகள் நிலவுவது உண்மையா?

அந்த போட்டியில் வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, வெற்றிக்கு உதவிய 'உள்மறை'  Subterranean  சக்திகள், ஆட்சிக்குள் நுழைவதை தவிர்க்க முடியுமா?  

இயல்பாக அரசு எந்திரம் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட விழையும் அரசு எந்திரத்தில் உள்ள சக்திகளுக்கும், தேர்தல் மூலம் அரசுக்குள் இடம் பெற்றுள்ள 'உள்மறை'  - Subterranean -சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு, எந்த திசையில் பயணிக்கும்? என்பதை பொறுத்தே, விழுப்புரம் 3 மாணவிகளின் மர்ம மரணங்களுக்கு விடையும், குற்றவாளிகளுக்கு  உரிய தண்டனையும் கிடைக்கும்.

அதற்கு சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் தொடங்கி, நீதி மன்றம் மூலம், அரசு எந்திரத்தை செயல்பட வைத்துள்ள மக்களின்  ' உள்மறை ' - Subterranean - சக்திகள்/ சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks) புத்துயிர் (renewal), மேற்குறிப்பிட்ட முரண்பாடு எந்த திசையில் பயணிக்கின்றன? என்பதை, எந்த அளவுக்கு 'விழிப்புடன்' கண்காணிக்கின்றனர்? என்பதை பொறுத்ததாகும்.  

ஆக, மக்களின் 'உள்மறை' - Subterranean - சக்திகள்/ சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks)  புத்துயிர் சக்திகள்;

ஆட்சிக்குள் நுழைந்துள்ள ஊழல் 'உள்மறை' - Subterranean - சக்திகள்;

இயல்பாக அரசு எந்திரம் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட விழையும் அரசு எந்திரத்தில் உள்ள சக்திகள்;

3 சக்திகளின் தொகுவிளைவில்(Resultant), 3 மாணவிகளின் மர்ம மரணங்களுக்கான 'நீதி' முடிவாகும்.

தமது பிரச்சினைகளுக்கும், தமது பகுதி பிரச்சினைகளுக்கும் அரசியல் கட்சிகள் துணையின்றி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகளை செயல்பட வைக்கிறார்கள்; அது போல, நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி மன்றம் மூலமும் செயல்பட வைப்பதும் எந்த காலக்கட்டத்தில் தொடங்கி, எப்படி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது? நடுத்தர, ஏழை மக்கள் வீதிகளுக்கு வந்து, ஊழல் 'உள்மறை' - Subterranean - சக்திகளை எதிர்த்து, துணிச்சலுடன்  போராடுகின்ற, இந்த காலக்கட்டத்தில், வசதியான தமிழர்களில் யார்? யார்? ஆட்சிக்குள் நுழைந்துள்ள ஊழல் 'உள்மறை' - Subterranean - சக்திகளுக்கு 'நெருக்கமாகி', அந்த சமூக விரோத சக்திகள் எல்லாம், சமூக அங்கீகாரத்துடன் வலம் வர‌ துணை புரிகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை காண, தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள ஆட்சிகளையும், தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களாக மாறி, மாறி ஆட்சி புரிந்து வரும் அரசியல் கட்சிகளின் தோற்றங்களையும், வளர்ச்சிகளையும், ஆய்வுக்குட்படுத்த வேண்டும். 1944இல் திராவிடர் கழகம் தோன்றவில்லையென்றால், இக்கட்சிகள் தோன்றியிருக்குமா? காங்கிரசிலிருந்து வெளியேறி, 1925இல் ஈ.வெ.ரா தொடங்கிய‌ சுயமரியாதை இயக்கம், எந்த அளவுக்கு, சமூக சீர்திருத்த இயக்கமாக வளர்ந்தது? 1944இல் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்கள் தோன்றி, வளர்ந்தது, சமூக உளவியலில் (Social Psychology), என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? அந்த போக்கில், உள்மறை பண்பாடு (Subculture) சக்திகள் ஊடுருவி வளர்ந்தார்களா? அதில் 'உள்மறை'   subaltern or subterranean சக்திகள்  எந்த சமூக செயல்நுட்பத்தில் வளர்ந்தார்கள்?  ( the subculture has referred to a 'whole way of life' or 'maps of meaning' which make the world intelligible to its members. The 'sub' has connoted notions of distinctness and difference from the dominant or mainstream society./ another significant resonance of the prefix 'sub' is that of subaltern or subterranean. Subcultures have been seen as spaces for deviant cultures to renegotiate their position or to win space for themselves. page 410; Cultural Studies: Theory and Practice - Chris Barker) சமூக சீர்திருத்த இயக்கத்தின் பயணத்தை, உள்மறை (Subculture-Subaltern)  பண்பாட்டு சக்திகள் 'கடத்தி' (Hijack), ஆட்சியில் அமர்ந்தது தொடர்பான ஆய்வுகள், வெளிவந்துள்ளதாக தெரியவில்லை. எனவே அது தொடர்பாக, 'முனைவர்' பட்ட ஆய்வு எவரும் மேற்கொண்டால், 'சுயலாப' நோக்கின்றி, அவருக்கு என்னால் உதவ முடியும். ஆங்கில இதழ்களையும்/நூல்களையும், தமிழில் புலமையாளர்களின் நூல்களையும், படித்து விளங்கிக்கொள்ளும் அறிவின்றி, வன்முறை, 'பலவகை தரகு' திறமைகளுடன், 'பெரியார் கொள்கையாளர்களாக', 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு(?)' என்று, இன்னும் பல முகமூடிகளுடன் வாழும், 'பொதுவாழ்வு' கூட்டணி வியாபாரிகள், இன்று தமிழ்நாட்டை சீரழித்து வருவதற்கு, மேற்குறிப்பிட்ட 'சமூக செயல்நுட்பம்' காரணமா? என்பதும் அந்த ஆய்வில் இடம் பெறும்.

'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவுகள் மூலம், அரசியல் நீக்கம் (Depoliticize) வளர்ந்து, அரசியல் கட்சிகள் ஆதாயத் தொண்டர்கள் பலத்தில், கொள்கைக்கு சம்பந்தமில்லாத 'ஆதாய தேர்தல் கூட்டணிகள்' ஏற்படுத்தி, பயணிக்கிறார்களா? கட்சிகளுக்கு சம்பந்தமில்லாத, பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வி மூலம் பயின்ற மாணவர்களிடம், இதுவரை இல்லாத அளவுக்கு, 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வருகிறதா? தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தோடு, 'தனித்தமிழ்' பற்றாளர்களின்,  'சுயநினைவற்ற' பங்களிப்புடன், தமிழர்களிடமிருந்து, 'விலகி', தமிழ் இலக்கணமும் மரணப்பயணத்தில் சிக்க, தமிழ் வேரழிந்த தமிழர்கள் அதிகரித்து வருகிறார்களா? ( 'தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3); சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட உடன், முதல் 48 மணி நேரத்தில், இளைஞர்களும், இளம் நடிகர்களும், மாணவர்களும் பிரமிக்க வைக்கும் வகையில், நிவாரண உதவிகளில் ஈடுபட்டது எதை உணர்த்துகிறது? பொது இடங்களில் திருடர்களையும், பாலியல் குற்றவாளிகளையும், போலீசாக இருந்தாலும், துணிச்சலுடன், பொது மக்கள் பிடித்து, உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் போக்கானது, எந்த காலக் கட்டத்தில் தொடங்கி, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்துள்ளது?

இவையெல்லாம் நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் - சிக்னல்கள் - என்றாலும், தமிழ்நாட்டில், தமிழ் வேரழியும் போக்கில், இந்தியர் என்ற அடையாளம் இதுவரை இல்லாத அளவுக்கு, வலிமையாகவும், வேகமாகவும் வளர்ந்து வருகிறதா? ஆங்கில வழிக்கல்வி மூலம், தமிழ்வேரழிந்து வரும் போக்கில், இது எந்த திசையில் பயணிக்கும்? 

கடந்த 10 வருடங்களில், ஆதாய நோக்கின்றி, உண்மையான ஈடுபாட்டுடன் உள்ள மாணவர்கள், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பில் 'அதிவேக' எண்ணிக்கையில் சேர்ந்து வருகிறார்களா? அத்தகைய ஆதாய நோக்கின்றி, உண்மையான ஈடுபாட்டுடன் உள்ள மாணவர்கள் 'பெரியார்' கட்சிகளின் மாணவர் அமைப்புகளில் 'சேர்வது' என்பது, 'அதிவேகமாக' குறைந்து வருகிறதா?  அவ்வாறு குறைந்து வந்தால், பெரியார் கட்சிகள் ஊழல் எதிர்ப்பில் கவலையின்றி பயணிப்பது; மேற்குறிப்பிட்ட கூட்டணியில் 'பெரியார்' முகமூடி நபர்களுடன் நேசமாக பயணிப்பது; உண்மையா? உண்மையென்றால்,  அவை அதற்கு காரணங்களாகுமா? நெருக்கடி கால ஆட்சியில்  தி.க, தி.மு.க ஆகிய கட்சிகள், சிறைத்தண்டனை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை சந்தித்த பின் நடந்த, 1977 பாராளுமன்ற தேர்தலில், அந்த ஒடுக்கு முறைக்கு காரணமான இந்திரா காங்கிரஸ் கூட்டணியானது, 34 தொகுதிகளை கைப்பற்ற, தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது எதை உணர்த்துகிறது? ( https://en.wikipedia.org/wiki/Indian_general_election,_1977_%28Tamil_Nadu%29 ) மேற்குறிப்பிட்ட 'கூட்டணி' வளர்ந்த சூழலில், விமர்சன போக்கின்றி, 'சுயலாப ரசிகராக', தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் செயல்பட்டதால், 'இடிப்பாரை  இல்லாத ஏமரா' (திருக்குறள் 448) போக்கில், 'தமிழ் ஈழ விடுதலை' முயற்சியானது, முள்ளிவாய்க்கால் அழிவை நோக்கி பயணித்ததா; பல 'புது பணக்காரர்களை' தமிழ்நாட்டில் உருவாக்கி? அதே போல், முள்ளிவாய்க்கால் அழிவின் போது, 2009இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியானது, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 27ஐ கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது, எதை உணர்த்துகிறது?( https://en.wikipedia.org/wiki/Indian_general_election,_2009_%28Tamil_Nadu%29 ) 1983 இனப்படுகொலைக்குப்பின், கிராமம், நகரம், என்ற வேறுபாடின்றி, 'பொங்கிய' 'சமூக ஆற்றல்' ஆதரவானது, ஏன்? எப்படி? இந்த அளவுக்கு குறைந்தது? என்பதும், ஆய்விற்குரியதாகும். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

மேற்கத்திய குறிப்பாயத்திற்கு(Western Paradigm) அடிமையாகாமல், உலக அளவில் 'சீர்திருத்தம், புரட்சி', 'உள்பண்பாடு' (Subculture), 'உள்மறை' (subterranean) தொடர்பாக நடந்து வரும் ஆய்வுகள் பற்றியும், உளவு அமைப்புகள், அரசுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் இரகசிய குழுக்கள் (Secret Clubs; https://en.wikipedia.org/wiki/Secret_society ) எல்லாம், உலகில் உள்ள பிரச்சினைகளை, தமது சுயநலனுக்கு 'நெறிப்படுத்த' (maneuver), எந்தெந்த நாடுகளில், எந்தெந்த அமைப்புகளில், எப்படியெப்படி 'ஊடுருவி' செயல்படுகின்றன? மேலே குறிப்பிட்ட 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம்,போன்ற முகமூடி சுயநல கூட்டணி' போன்ற, உலக நாடுகளில் உள்ள 'பொதுவாழ்வு திருடர்கள்' எல்லாம், 'எந்த பாதுகாப்புடன்' வெளிநாடுகளில் (தமிழ்நாட்டில் கொள்ளை அடித்த பணம் உள்ளிட்டு) 'திருட்டு பணத்தை' பதுக்கி வைத்துள்ளார்கள்? என்பது தொடர்பான ஆய்வுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.  ( 'Hudson’s next task was to estimate the amount of money from crime going into Switzerland’s secret banking system. In this investigation, his last for Chase, Hudson discovered that under US State Department direction Chase and other large banks had established banks in the Caribbean for the purpose of attracting money into dollar holdings from drug dealers in order to support the dollar (by raising the demand for dollars by criminals) in order to balance or offset Washington’s foreign military outflows of dollars.'; http://www.counterpunch.org/2016/02/03/why-michael-hudson-is-the-worlds-best-economist/ ) சட்டத்தின் பிடியில் சிக்காத அளவுக்கு, வெளிநாட்டு வலைப்பின்னலில், ஆம் த்மி கட்சி (AAP)  போன்ற கட்சிகள் சிக்கியுள்ளனவா? (http://canarytrap.in/2014/03/11/kejriwal-indias-biggest-scam/  ) என்பது பற்றி உலக ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு, காலனி ஆட்சி மூலம் 'திணிக்கப்பட்ட' 'மையப்படுத்தப்பட்ட (Centralized), நேர்க்குத்து (Vertical) தரவரிசை (Hierarchical)' அரசியல் குறிப்பாயத்திற்கு (Paradigm) அப்பால், இயல்பான சுயவலிமையுள்ள,  ஒருசீரற்ற(heterogeneous), கிடைத்தள(horizontal), சுயாட்சி(autonomous)  தன்மையில் உள்ள வகையில்,  தமிழ்நாடு உள்ளிட்டு,  இந்தியாவில் உள்ள மாநிலங்களை கணக்கில் கொண்டு, அந்த 'தனித்துவ'(unique)  சமூகவியல் போக்குகளை அடையாளம் கண்டு, 1944 முதல், இன்று வரை தமிழ்நாடு எவ்வாறு பயணித்து, இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது? இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும், 'அந்நிய நலன்களுக்கான' வலைப்பின்னலில் சிக்கி செயல்பட்ட/செயல்படும் அமைப்புகள், மற்றும் 'முற்போக்குகள், பிற்போக்குகள், அறிவுஜீவிகள்' பற்றிய ஆய்வுகளும், அறிவுபூர்வ விவாதங்களும் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது, என்பதும் என் கருத்தாகும்.

3 மாணவிகளின் மர்ம மரணங்கள் உள்ளிட்ட சீர்கேடுகள் பற்றி கவலைப்பட, நமக்கு அருகதை உண்டா; நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், மேற்குறிப்பிட்ட 'கூட்டணி' நபர்கள், அவர்களின் அடிவருடிகள் இருந்து, அவர்கள் மூலம், நாம் 'லாபம்' பெற்று வாழ்ந்து வந்தால்? நம்மை போன்றவர்களின் 'சமூக அங்கீகாரம்' 'வற்றினால்', அந்த 'சமூக விரோத கூட்டணி' 'உதிர்ந்து' போக மாட்டார்களா; அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் 'வெறிச்சோட'?

கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அகத்திலும் புறத்திலும் சீரழியாத தமிழர்கள் எல்லாம், ஒன்று பட்டு, அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும், மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான‌ விடைகளை கண்டாக வேண்டும்; தமிழ் வேரழியாமல், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'இணக்கமாக', தமிழ்நாடு மீட்சி திசையில், பயணிக்க வேண்டுமானால்; சர்வதேச அரசியல் பொருளாதார சவால்களை, 'தனிநாடாக' சந்திப்பதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து, 'ஐரோப்பியர்' அடையாளத்தில் பல தனிநாடுகள் ஒன்றுபட்டு வரும் போக்கில்.( தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3);  'தனி நாடு' உண்மையில் தனி நாடா?: http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

No comments:

Post a Comment