Sunday, February 7, 2016

உள்ளார்ந்த ஈடுபாடு(Passion)  தரும் இன்பம் பற்றி

தமிழ்நாட்டில் அறிவு உழைப்பு/உடலுழைப்பு ஆகியவற்றில், தமிழர்களில் 'சாதனையாளர்கள்'  அருகிவரும் பதர்க்காடாகதமிழ்நாடு  வளர்ந்து வருகிறது. 'பிற மாநிலத்தவரே' தமிழ்நாட்டிலும் 'சாதனையாளகளாக'  வளர்ந்து வரும் நிலையும் கூடவே வளர்ந்து வருகிறது. (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
இந்த போக்கிற்கான காரணத்தையும், தீர்வையும் பார்ப்போம்.

எந்த ஒரு மனிதருக்கும் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, தமது இயல்போடு ஒட்டிய இன்பத்தை  உணரும் வகையில் வாழ்வது மனித இயல்பாகும். அவ்வாறு இன்பத்தை 'அனுபவிக்க' தொடங்கியபின், 'அந்த இன்பத்திற்காக', தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் வரும் துயரங்களை கூட, அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். (‘“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்;  "Comparison is the thief of joy" Theodore Roosevelt; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

உலக வரலாற்றில் இலக்கியமானாலும், இசையானாலும், அறிவியல் உள்ளிட்ட எந்த துறையானாலும், அதில் சாதனைப் படைத்தவர்கள் அந்த வகை மனிதர்களே. அவர்கள் சாதனையின் இரகசியம் என்னவென்றால், தமது இயல்போடு ஒட்டிய திறமைகளுக்குப் பொருத்தமான, உள்ளார்ந்த ஈடுபாட்டை (PASSION) அடையாளம் கண்டு, 'லாப நட்ட கணக்கில் சிக்கி விடாமல்' நேசித்து, தமது ஆற்றலைக் கொண்டு,  அந்த ஈடுபாட்டை 'புணர்ந்து' வாழ்ந்ததே ஆகும். அவ்வாறு வாழ்வதில் வெளிப்படும் சாதனைகளை, உலகம் ஏற்றுக் கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல.

இன்றும் அவரை அடக்கம் செய்த கல்லறை எது? என்று தெரியாத அளவுக்கு, புகழின்றி, வறுமையில் இறந்த, இசை மேதை மொசார்ட்(Mozart) (The most famous person to be buried in the St. Marx Cemetery is Wolfgang Amadeus Mozart. Later attempts to locate his mass grave all failed, including a search by his widow, 17 years after Mozart's death, and by Vincent Novello in 1829. In 1855 a gravestone was erected at what was presumed to be the correct spot. Later the stone was transferred to a group of famous musician graves at Zentralfriedhof; https://en.wikipedia.org/wiki/St._Marx_Cemetery );
எழுத்தாளர் பிரான் கஃபா(Franz Kafka : http://en.wikipedia.org/wiki/Franz_Kafka );
உள்ளிட்டு பலரின் சாதனைகள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிச்சத்திற்கு வராமல், அவர்கள் இறந்து பல வருடங்கள் கழித்து, உலகப் புகழ் பெற்றதும் வரலாறு ஆகும்.

உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வாழ்பவர்களுக்கு, அந்த முயற்சிகளில் கிடைக்கும் இன்பங்களை, அனுபவித்தால் மட்டுமே புரியும். அதை உலகம் ஏற்று பாராட்டினால் கூட, அதெல்லாம் அதற்கப்புறம் தான். நோபெல் பரிசு உள்ளிட்ட உலகில் உள்ள பாராட்டுக்களை குறுக்கு வழிகளில், பலர் 'பெற்று வரும்' சூழலில் (‘The Prize’ by Irving Wallace), அத்தகைய பாராட்டுகளை பெறுவதே அவமானம் எனக் கருதி, அவற்றைப் புறக்கணித்த சாதனையாளர்களும் உண்டு.

1964‍இல் ஜீன் பால் சார்ட்ரே(Jean-Paul Sartre - http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/1964/press.html )  என்ற பிரெஞ்சு எழுத்தாளர், தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்தார். 'சாதனை'யான வரலாற்று நூல்களை எழுதிய பேரா,ரொமிலா தாபார் ( Romila Thapar - http://en.wikipedia.org/wiki/Romila_Thapar ) போன்ற சிலர்,  இந்திய அரசு தமக்கு வழங்கிய 'பத்ம' விருதுகளை நிராகரித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களில் பலர், 'எந்த வழியிலாவது' 'விருது, பாராட்டு' பெற முயற்சிக்கும் மன நோயாளிகளாக, வளர்ந்து வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் 'தரகர்' மூலம், 'நல்லாசிரியர்', 'கலைமாமணி' போன்ற விருதுகள் பெறுவது; பத்திரிக்கைகளில் வெளிப்படும் அளவுக்கு, அதிகமாகி வருகிறது. இதற்கும் கூட தரகர்கள் பெருகும் அளவுக்கு, ‘எல்லா வகையான’ தரகுப்பணிகளிலும், பல தமிழர்கள் 'வளர்ந்து' வருகிறார்கள். இத்தகைய தரகர்கள், மற்றும் அவர்கள் மூலம் 'விருதுகள்' உள்ளிட்டு, தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும், தமிழர்கள் வள‌ர்ந்து வரும் நாடாக, தமிழ்நாடு இருக்கிறது.  இவர்களுக்கெல்லாம்,  தமது சாதி, சமூக வட்டத்தில் மற்றவர் 'பொறாமைப்' படும் அளவுக்கு 'செல்வம், செல்வாக்கு' சம்பாதிப்பது  எப்படி என்ற‌  ‘இலட்சிய வெறி'யே முக்கியமாகும். குடும்பம், நட்பு உள்ளிட்ட எல்லா மனித உறவுகளுமே, அந்த இலட்சியத்திற்கு துணை புரிய வேண்டும் என்பதே, அவர்களுக்கு முக்கியம். 

தமிழ்நாட்டில் 'வீரியமாக',  'சாதி வெறியும்', 'சாதி மோதல்களும்', வளர்ந்து வரும்  சமூக செயல்நுட்பத்தில்(Social Mechanism); அந்த 'இலட்சிய வெறி' வகிக்கும் பங்கும்; அந்த 'இலட்சிய வெறியில்', 'அதிவேகமாக' அதிகரித்து வரும் 'சாதி' தலைவர்களின் செல்வமும், செல்வாக்கும்; அகத்தில் 'சாதி வெறி'யுடனும், புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரர்களாகவும், வலம் வரும் மனிதர்களின் தோற்றமும், வளர்ச்சியும்; தமிழ்நாட்டில் உள்ளார்ந்த ஈடுபாடுகளின் வீழ்ச்சிப் போக்கும்;   ஆய்விற்குரியதாகும். ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html)

உள்ளார்ந்த ஈடுபாடு(Passion) என்றால் என்ன? என்றும், அதன் மூலம் கிடைக்கும் இன்பம் என்ன? என்று தெரியாமல்,  'விருது, செல்வம், செல்வாக்கு'க்கு ஏங்கியே வாழும், மன நோயாளித் தமிழர்கள் அதிகரித்து வரும் நாடாக, தமிழ்நாடு இருக்கிறது.

எனது சமூக வட்டத்தில், இத்தகைய மன நோயாளிகளை, அவர்களை இயன்றவரைப் புண்படுத்தாமலேயே,  ஒதுக்கி வாழ்கிறேன்.  லாபநட்டம் பார்க்காத இயற்கையான அன்புடன் பழகுபவர்களை மட்டுமே, எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழ்வதால், எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் பொருந்திய ஆய்வுப்பணிகளில் வாழ முடிகிறது.( http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_21.html) இந்த‌ இரகசியத்தையும், தமிழ்நாட்டில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வாழ முனைபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே, பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு முன்பின் தெரியாத‌, சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் பேரா.முனைவர் என்.ராமநாதன், எனது ஆய்வுகளைப் பற்றி கேள்விப்பட்டு, எனது முனைவர் பட்ட ஆய்வேட்டை ('தமிழிசையின் இயற்பியல்'- Physics of Tamil Music' )  வாங்கி படித்தார். முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளை திறனாய்வு செய்யும் பணியும், பாடத்திட்டக்குழு உறுப்பினராகி( Member of Board of Studies for Music, in University of Madras), 'இசை இயற்பியல்'(Physics of Music), 'கணினி இசை'(Computer Music)  பாடத்திட்டங்களையும், பாடப்புத்தகங்களையும், நான் உருவாக்கும் வாய்ப்பும், அவராகவே எனக்கு வழங்கியவையாகும். எனது ஆய்வு முடிவுகளை, அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் முன்னிலையில் விளக்கும் வாய்ப்புகளும், அவர் வழங்கினார். அவரின் இசை ஆராய்ச்சி இணைய தளத்தில் எனது கட்டுரைகளை வெளியிட்டார். http://musicresearchlibrary.net/omeka/ search: S.A.Veerapandian )

எனது உள்ளார்ந்த ஈடுபாட்டை நான் அடையாளம் கண்டு வாழ்ந்ததால் பெற்ற இன்பங்களில்,  இது போன்ற, இன்னும் பல‌ நட்புகளும், நம்ப முடியாத இன்ப/துன்ப அனுபவங்களும்  அடங்கும்.

உள்ளர்ந்த ஈடுபாட்டுடன்(Passion)  ஒரு செயலில் ஈடுபடும்போது, 'கிடைக்கும் புதையலானது, சொற்களால் விளக்க முடியாத இன்பத்தை உங்களுக்குக் கொடுத்து, உங்களின் ஆர்வத்தையும் உழைப்பையும் அதிகப்படுத்தும் செயல்நுட்பத்தை, 'அனுபவ பூர்வமாக' விளக்கிய கட்டுரை தான்,  'பழந்தமிழ் இலக்கியங்களில் புதையலைத் தேடுவோம்'.

இக்கட்டுரையின் 'தோற்றமும் வரலாறும்  விறுவிறுப்பானதாகும்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கணினி துணையுடன் வாழத் தொடங்கியபின்,  பல வருடங்களாக தமிழில் எழுதாமல் இருந்த நான், 2005‍‍- இல் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின், எனது சகப் பேராசிரியரும் நண்பருமான அ.மார்க்ஸை சந்தித்தேன். அப்போது 'தீரா நதி' என்ற இதழில், தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த அவர், தமிழில் எனது ஆய்வுகள் பற்றி கட்டுரை எழுதி, அந்த இதழுக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார். நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எழுதிய கட்டுரை தான்,  'பழந்தமிழ் இலக்கியங்களில் புதையலைத் தேடுவோம்'. (http://musicresearchlibrary.net/omeka/items/show/2444 )

அவர் பரிந்துரையில் 'கூரியரில்' அனுப்பப்பட்ட கட்டுரை கிடைத்தது பற்றி எந்த மடலும் வரவில்லை. என்னாயிற்று? என்று அ.மார்க்ஸிடம் நான் சிலமுறை கேட்ட பின், சில மாதங்கள் கழித்து, அந்த கட்டுரை எந்த மடலும் இல்லாமல், காரணம் தெரிவிக்காமல், எனக்கு 'கூரியரில்' திருப்பி அனுப்பப் பட்டது. அதனையும் அ.மார்க்ஸிடம் தெரிவித்தேன். தமிழில் பிரபல இலக்கிய இதழின் 'பண்பாடு' பற்றி , அந்த இதழ் ஆசிரியரிடம் அ.மார்க்ஸ்  கண்டித்தாரா?, அல்லது   தமது சமூக வட்டத்தில் உள்ள ஒழுங்கீனங்களைப் பற்றி கண்டுகொள்ளாமல், உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டித்து எழுதி,  தமது 'வளர்ச்சி சமூக வட்டத்தை'ப் பேணி பாதுகாக்கும்,  பெரும்பாலான-  'வாழ்வியல் நிபுணர்களாக' வாழும் - தமிழ் எழுத்தாளர்களைப் போன்ற‌ நபரா, அ.மார்க்ஸ்? என்பது பற்றி தெரிந்து கொள்ள, இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. பேராசிரியராக பணியாற்றி, பொதுவாழ்வில் பல இழப்புகளை சந்தித்த வெகு சிலரில் ஒருவராகிய அவரை, பொதுவாழ்வையே பிழைப்பாக மாற்றிய‌, கீழே குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலிகளுடன்' ஒப்பிடுகையில், அவ்வாறு அவர் வாழ்வதாக வைத்துக்கொண்டாலும், அது பெரிய குறையாகாது.  எப்படி இருந்தாலும்,  அவர் தூண்டுதல் இல்லையென்றால்,  இக்கட்டுரையை நான் எழுதியிருக்க மாட்டேன்.

பின் 2008 ‍- இல் காரைக்குடியில் மத்திய அரசு நிதி உதவியில், செம்மொழி நிறுவனம் சார்பாக‌, நடந்த உலக அளவிலான செம்மொழி இலக்கியம் தொடர்பான மாநாட்டிற்கு அக்கட்டுரையினை, ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினேன். ஏற்றுக் கொண்டார்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி உயர்வுக்கு, 'உலக அளவிலான' மாநாட்டு கட்டுரை சமர்ப்பிக்கும் நிபந்தனையான‌ (condition) தேவையை நிறைவு செய்ய, பல கல்லூரி ஆசிரியர்கள், கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க அனுமதிக்கப்பட்டனர்.  ‍ஒவ்வொருவருக்கும் சுமார் 5 நிமிடங்கள். என்னை மேடைக்கு அழைத்தபோது, ‘கட்டுரை நகல் மாநாட்டுப் பொறுப்பாளரிடம் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படித்து, ஐயமிருந்தால், என்னிடம் நேரில் கேட்கலாம்.' என்று ஒரு நிமிடத்தில் அறிவித்து விட்டு,  மேடையை விட்டு இறங்கி விட்டேன். 

பின் அக்கட்டுரையை அமெரிக்காவில் வாழும் தமிழ் அறிஞர் ஜார்ஜ் ஹார்டுக்கு (George Hart)  அனுப்பினேன். அவர் அக்கட்டுரையை, 'Your comments are intelligent and interesting.' என்று பாராட்டி, நீண்ட மடல் எழுதியதுடன், அவருடைய ஆராய்ச்சி மாணவருக்கும், அக்கட்டுரையை அனுப்பினார்.

பின் ஜெர்மனியில் உள்ள தாமஸ் லெமன்- Thomas Lehmann என்ற தமிழ் அறிஞருக்கு, அக்கட்டுரையை அனுப்பினேன். ‘Your knowledge on the ancient Tamil music system is commendable.’ என்று அவரும் எனக்கு நீண்ட மடல் அனுப்பினார்.

' The Musical Dimension of Shiva: A New Discovery'- 'சிவனின் இசைப் பரிமாணம் ஒரு புதிய கண்டுபிடிப்பு' என்ற கட்டுரையை இணையத்தில் படித்த‌ (http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 ), உலக சைவ அமைப்பின் ஆஸ்திரேலியா கிளை பொறுப்பாளரான, சிட்னியில் வாழும் திரு. மா. அருச்சுனமணி என்னுடன் தொடர்பு கொண்டு, என்னைப் பாராட்டி, 2014 ஆகஸ்டு மாதம் அங்கு நடக்கும் மாநாட்டில் உரையாற்ற வருமாறு அழைத்தார். தமிழ்நாட்டில்  உட்பகுதியில், நகரக் கூச்சலின்றி, ஓரளவு அமைதியான சூழலில், எனது உள்ளார்ந்த‌ ஈடுபாட்டுகளுடன் ஒன்றி, ஆய்வுகளில் வாழ்ந்து வரும் என்னால்,  அங்கு வர இயலாத காரணத்தை நான் விளக்கியதை,  அன்புடன் அவர் ஏற்றுக் கொண்டார். தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம் உள்ளிட்ட,  எனது முயற்சிகளின் பின்பலமாக இருப்பவர்களில், அவரும் ஒருவராவார்.( இசை, நடனம், அறிவியல், தத்துவம் உள்ளிட்ட பல பரிமாண புலமையின் வெளிப்பாடாகிய 'சிவனை', 'மூடநம்பிக்கையின் வெளிப்பாடாக' ('மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?'; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ), பெரியார் கட்சிகளின் 'ஆபாச பட்டிமன்றம், வழக்காடு மன்றம்' போன்ற நிகழ்ச்சிகளில் கேலிக்குள்ளாக்கியது, எதை உணர்த்துகிறது? புலமைக்கு எதிரான, 'உணர்ச்சிகர பகுத்தறிவு' இயக்கம், உலகிலேயே  'தனித்துவமாக' (Unique), 'பகுத்தறிவு' என்ற பேரில், தமிழில் 'இனம்', மேற்கத்திய 'ரேஸாக'(Race)  திரிந்து, அதன் மூலம் ஒரு வகை செனோபோபியா (https://en.wikipedia.org/wiki/Xenophobia) 'வெறுப்பு' நோயில் சிக்கி,  பயணித்ததன் வெளிப்பாடா? புலமையையும், புலமையாளர்களையும் ஒதுக்கி, கேலிக்குள்ளாக்கி, தமது ஆய்வுகள் மூலம் உண்மையை  வெளிப்படுத்தினால் 'ஆபத்து' ( 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூலாசிரியரின் வாழ்வு சாட்சியாக) சூழலை உருவாக்கி, 'ஊழல்' புலமையை வளர்த்து, சட்டத்தின் பிடியில் சிக்கி சிறைக்கு செல்லும் 'முட்டாள்களாக' வாழாமல், 'முன்மாதிரி' (Role Model)  'வாழ்வியல் புத்திசாலியான', 'அதிவேக' பணக்காரர்களை உருவாக்கி, 'அந்த' பணத்தின் செல்வாக்கில், 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு' உணர்ச்சி பூர்வ, விவாத நோயில் சிக்கிய (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html ) ஆதரவாளர்களை, தமது 'எடுபிடிகளாக்கி',  வலம் வரும் கூட்டம், அதன் விளைவுகளா? அது போன்ற நபர்கள், மாற்று கருத்துக்களுக்கு இடமளிக்காமல், 'கடவுளால் படைக்கப்பட்ட நீதிபதிகளைப்' போல், 'தமிழ் விரோதி, தமிழின துரோகி' என்று பட்டங்கள் கொடுத்து, பொது அரங்கில் விவாத புலத்தினை, புலமையாளர்கள், 'அசிங்கப்படாமல்' ஒதுங்க விரும்பும், விவாத புலமாக்கியதன் விளைவுகளால், தமிழ்நாட்டில் அறிவுப் புலம் சீர் கெட்டதா? தமிழ்நாட்டின் சமூக சூழலானது, உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தவர்கள் கூட, மேற்குறிப்பிட்ட 'முன்மாதிரி' (Role Model)  'வாழ்வியல் புத்திசாலி'களின் செல்வாக்கில் சிக்கி, தமது மூளை செயல்பாட்டை(processing)  மாற்றி, மற்றவர் 'பொறாமைப்' படும் அளவுக்கு 'செல்வம், செல்வாக்கு' சம்பாதிப்பது  எப்படி?,  என்ற  ‘இலட்சிய வெறி'க்கு 'பலியாகும்' போக்கும்,  அதன் விளைவுகளா? என்பதெல்லாம், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான வழிகளைக் காட்டும் கேள்விகளாகும்.)

இயன்றவரை இயற்கையோடு இயைந்து (பறவை ஒலிகள் உள்ளிட்டு இயற்கையில் வெளிப்படும் ஒலிக்கூறுகளில், இசைக் கூறுகளை அடையாளம் கண்டு), சாதாரண மனிதர்களுடனும், இயன்றவரை எளிய வாழ்க்கையில், 'பாராட்டு, புகழ், செல்வம், செல்வாக்கு' போதைகளில் சிக்காமல் வாழும்போது, சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை'(signals) முன்கூட்டியே உணரமுடியும், என்பதும் என் அனுபவமாகும். அந்த போக்கில், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன், நான் மேற்கொண்டு வரும் ஆய்வு பற்றிய, சிறு குறிப்பையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தாய்மொழி, பாரம்பரிய அடிப்படையிலான பண்பாடு போன்றவற்றிற்கு எதிராக,  சமூக அளவில், மேற்கத்திய குறிப்பு ஆயத்திற்கு (Western Paradigm)  அடிமையான‌, 'முற்போக்கு சக்திகள் ' வளர்ந்து, தமிழ்நாட்டில் செல்வாக்கு செலுத்திய‌தன் விளைவுகளை, ஆழமாக கூர்ந்து கவனித்து, உரிய பாடங்கள் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனது வாழ்வில் நான் பட்ட துயரங்களும், அவமானங்களும் - அவற்றில் சில நானாகவே சமுகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக  விரும்பி அனுபவித்தவை -  இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய வாழ்க்கைப் பயணமாகவே எனக்கு படுகிறது. இசை இயற்பியல் (Physics of Music) அடிப்படையில்,  பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்ட ஆய்வுகள்,  மேற்கத்திய குறிப்பாயத்தின் வரை எல்லைகளையும் (Limitations), அவற்றைப் பற்றிய தெளிவின்றி மேற்கொள்ளப்பட்ட முற்போக்கு முயற்சிகளின் பாதகங்களையும், எனக்கு புலப்படுத்தியது.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், தமிழ்நாடு தற்போது வளர்ச்சி நோக்கிய திருப்பு முனையில் இருப்பதை உணர்த்தும் 'சிக்னல்கள்' (signals), எனக்கு புலப்பட்டதன் காரணமாக, அந்த போக்கிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கவே, இந்த முயற்சியிலும் நான் ஈடுபட நேர்ந்தது.

அந்த நோக்கிலேயே,  நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தை படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன். (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )
எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி; 

காலனியத்திற்கு முன் தமிழ்நாடு இருந்த நிலை, பின் காலனியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அதன்பின் இன்றுள்ள நிலை, என்று மூன்று தொகுதிகள் எழுதும் 'பேராசையுடன்' முயன்று வருகிறேன்; எனது உள்ளார்ந்த ஈடுபாட்டின் பலத்தில்.

நமது ஆய்வில் வெளிப்படும் முடிவுகள் மீது உடைமையுணர்வு (Possessive) கொள்வது என்பதானது, ஆய்வுக்கு ஒரு செயல்தடையாக (Inertia)  அமைந்து விடும்; உள்ளார்ந்த ஈடுபாட்டின் ஆற்றல் மூலமும் (Energy Source) பாதிக்கப்படும்; என்ற எச்சரிக்கையுணர்வோடும், நான் பயணிக்கிறேன்.

No comments:

Post a Comment