Thursday, February 25, 2016


தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கான கருதுகோள்(1) (Hyphothesis);


ஆய்வு (Research) திறந்த‌ மூலம் (Open Source)  கூட்டு முயற்சியே  (Collaboration)

 

'சாதி ஒழிப்பு' முகமூடியில், 'புதிய' பொது வாழ்வு திருடர்களா


"திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது?" என்ற கேள்விகளை முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த கேள்விகளுக்கான விடைகளை பெறுவது பற்றி, இங்கு பார்ப்போம். 

நமது அறிவு, அனுபவ அடிப்படைகளில், இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் தேடும் நோக்கிலான ஆராய்ச்சிக்கு, உருவாக்கப்படுவது " கருதுகோள்" (hypothesis ) ஆகும். ( " a hypothesis refers to an idea that needs to be tested. A hypothesis needs more work by the researcher in order to check it. A tested hypothesis that works, may become part of a theory or become a theory itself."; https://simple.wikipedia.org/wiki/Hypothesis ) 

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள் தேடும் ஆராய்ச்சிக்காக, நான் உருவாக்கியுள்ள கருதுகோள் வருமாறு:

1857 முதலாம் விடுதலைப் போரில் 'அனைத்து சாதி இந்துக்களும், முஸ்லீம்களும்' 'காலனி எதிர்ப்பு' என்ற‌ அடிப்படையில்,  'இந்தியராக' 'ஒற்றுமையுடன்' போராடியதை 'எரிமலை' (ஆங்கிலத்தில்- 'The Indian War of Independence'  is an Indian nationalist history of the 1857 revolt by Vinayak Damodar Savarkar - first published in 1909) நூல் மூலமாக வெளிப்படுத்திய 'குற்றத்திற்காக', 'வேறு எந்த தலைவரும்' அனுபவிக்காத, 'அந்தமான் சிறைக்கொடுமை'களுக்குள்ளானார் வீரசவர்க்கார். 

'சில' சுயநலக்கள்வர்களான இந்தியர்களின் 'உதவியால்', 'மயிரிழையில்', அந்த விடுதலைப் போரில் தோல்வியைத் தவிர்த்த காலனி ஆட்சியாளர்கள், அதில் கற்ற பாடத்தில், ஆங்கிலத்தில் புதிதாக 'காஸ்ட்' -'caste' - என்ற சொல்லை (ஸ்பானிஸ், மற்றும் போர்ச்சுகீச மொழிகளிலிருந்து) உருவாக்கி, அதன் மூலம் புதிய அடையாள (Identity) முறையில், 'சாதி'யை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்து, புதிதாக சமூக ஒப்பீடு (Social Comparison)  நோயில் சிக்க வைத்து, அதனூடே, சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை, மற்றும் செவ்வியல் (Classical), நாட்டுப்புறம் (Folk) போன்ற புதிய உயர்வு/தாழ்வு பிரிவுகளும், ஏற்கனவே இருந்து வந்துள்ளது போல, சமூகத்தில்  அறிமுகம் செய்து, அதன் மூலம், 'சுயலாப கள்வர்' நஞ்சானது  'விதைக்கப்பட்டு'

காந்தி, நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி என்னும் 'நாற்றாங்காலில்' பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது;

இந்தியாவிலேயே 'தனித்துவமாக'(Unique),  'விலைமதிப்பற்ற' தியாகங்கள் மூலம், ஈ.வெ.ரா உருவாக்கியிருந்த சமூக ஆற்றலானது, 1944இல், தமிழில் இருந்த 'இனம்' திரிந்து, தனித்துவமான‌, 'நச்சு விவசாயம்' நோக்கி, பாதகமான 'சமூக ஆற்றல் மடை மாற்றத்திற்கு' உள்ளானதன் காரணமாக; திறந்த மனதுடன், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய வகையில் (Accountability), விவாதங்கள்  நடைபெற்ற ஒரு இயக்கத்தில், 'உணர்ச்சிபூர்வ' விவாதங்களும், 'கிசு கிசு' பாணியில் 'சந்தேகங்கள்' 'உண்மைகள்' போலவும் அரங்கேற‌; 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை கைவிடாமலேயே, 'இந்திய விடுதலையை', இந்தியாவிலேயே, 'தனித்துவமாக' வரவேற்று; நேருவின் 'உதவி'யால், 'பிரிவினை தடை சட்டம்' மூலம், பிரிவினையை கை விட்டு, ஆனால் 'பிரிவினைக்கான காரணங்கள் தொடர்வதாக' அறிவித்து, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பத்தில், 'இந்தியர்' அடையாளத்தையும், தேசிய கட்சிகளையும் பலகீனப்படுத்தி; தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தோற்றுவித்து, 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவற்றை கேலிக்குள்ளாக்கி, 'பலவகை தரகர்கள்', 'பலவகை கொள்கை முகமூடிகளுடன்', 'ஆதிக்கம்' பெறும் சமூக அடித்தளத்தை (அநேகமாக உலக வரலாற்றில் முதல் முறையாக) வளர்த்து; 'அந்த' தரகர்கள் துணையுடன், கடந்த சுமார் 50 வருடங்களில், தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவரின் சொத்துகள் 'அதிவேகமாக' அதிகரித்து, அந்த 'தரகு சம்பாத்திய' கவர்ச்சியில், தமிழர்களிடையே உள்ளார்ந்த ஈடுபாடுகளும் (Passions), அறிவு உழைப்பும், உடல் உழைப்பும் 'மந்தமாக';  நேர்மையான வழிகளில் பொருள் ஈட்டும் தகுதி, திறமைகளின்றி, உழைத்து சம்பாதிக்கும் மனமின்றி, 'குறுக்கு வழிகளில்', அதிவேக பணம் ஈட்டும், 'தரகர்கள்' எல்லாம், சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வர;

மேலே பராமரிக்கப்பட்ட 'காங்கிரஸ்' 'நச்சு நாற்றுகள்', 'திராவிட' 'நச்சு விவசாயமாக' வளர்ந்து; ('தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6); 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான; நல்ல விதைகளும், நச்சு விதைகளும்'; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html ), 

திருடர்களே,  திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, அவ்வாறு 'விதைக்கப்பட்டு', 'திராவிட அரசியல்' மூலம், 'திராவிட, தேசிய, முற்போக்கு,  பிற்போக்கு' உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் 'சிக்க' வைத்து, தமிழ்நாட்டு பொதுவாழ்வில்  'அறுவடை'யில் உள்ளது; வெளிநாட்டு நிதியில் செயல்படும் என்.ஜி.ஓக்களின் 'பல வகை' ஆதரவுடன். 

மேலே குறிப்பிட்ட கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு, மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவிலேயே, அது சரியா? அல்லது தவறா? என்பது தெளிவாகும். (குறிப்பு கீழே)

மேலே குறிப்பிட்ட கருதுகோளை நான் உருவாக்கவும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், துணை புரிந்த/புரியும் சமூகவியல் பரிசோதனை மாதிரிகளாக ( Sociological Real Life Experimental Specimens), திருச்சி பெரியார் மையம் மூலம் நான் அடையாளம் கண்ட, 'பெரியார்' 'சமூக கிருமிகள்' பயன்பட்டு வருகிறார்கள். [ 'sociologists use empirical evidence (that is, evidence corroborated by direct experience and/or observation) combined with the scientific method or an interpretive framework to deliver sound sociological research.'; https://opentextbc.ca/introductiontosociology/chapter/chapter2-sociological-research/ ] அந்த ஆய்வு நோக்கில், எனக்கு கிடைக்கும் சான்றுகளையும், அந்த சான்றுகள் அடிப்படையில் நான் யூகிப்பவைகளையும், எனது பதிவுகளில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். ('பெரியார்' மூலம் உருவான 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக வாய்ப்புண்டா?; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) நான் முனைவர் பட்டம் பெறுவதற்கோ, பணம், புகழ் சம்பாதிப்பதற்கோ,  இதில் ஈடுபடவில்லை.

தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் எண்ண‌ற்றோரின் தியாகங்கள் (தேசிய, திராவிட, பொதுவுடைமை உள்ளிட்ட அனைத்து இயக்கங்களிலும்) எல்லாம், தமிழ்நாட்டில் 'பொது அரங்கில் சுயநலக் கள்வர்கள்' ஆதிக்கம் பெறும் விளைவிலா,  முடிய வேண்டும்? அதிலிருந்து மீள வேண்டுமானால், அந்த பாதக விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பத்தை (Social Mechanism),  கண்டுபிடிக்க வேண்டாமா? 

இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. சுயலாப நோக்கமின்றி, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்கும் ஆர்வமுள்ள அனைவரின் பிரச்சினை ஆகும்.  

நாம் வாழும் 'டிஜிட்டல்'(Digital) யுகத்தில், தனிமனித லாபம்/முக்கியத்துவம் நோக்கின்றி திறந்த‌ மூலம் (Open Source) கூட்டுமுயற்சிகளின் (Collaboration) விளைவாக, ' லினக்ஸ்' (The development of Linux is one of the most prominent examples of free and open-source software collaboration. https://en.wikipedia.org/wiki/Linux )  உள்ளிட்ட இன்னும் பல பலன்களை நாம் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம்.

அந்த கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்கள் யார் என்று ஒருவரைப்பற்றி, இன்னொருவருக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. எவர் சொல்வது சரி? எவர், எதன் சார்பாக, கருத்து வெளியிடுகிறார்?  என்பது போன்ற கேள்விகளுக்கே இடமிருக்காது. தற்போது 'செனோபோபியா' ( http://jensrydgren.com/Logic%20of%20xenophobia.pdf ) நோயாக, உணர்ச்சிபூர்வ போக்கில் 'வலம்' வரும்,
‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து, அவர்பால்

வெறுப்பை உமிழ்வது அழிவு’- 'புது'க்குறள் வழியில், பொது அரங்கில், சுய நலக் கள்வர்களை பாதுகாத்து, விவாதங்கள் சீரழிந்த போக்கானது,  மறைந்து; 

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ‘ திருக்குறள் 423
என்பது அரங்கேறி வருவதானது, இணைய யுகத்தின் 'திறந்த மூலம்' (Open Source) வெற்றியாகும்.


வெளிவந்துள்ள தகவல் சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியில் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். தகவல்கள் சரியானவை என்றாலும், முன்வைக்கப்படும் வாதத்தில் குறைபாடுகள் (fallacy; https://en.wikipedia.org/wiki/List_of_fallacies ) உள்ளனவா? சரி என்பதற்கான சான்றுகளை தேடுவதிலும், தவறு என்பதற்கான சான்றுகளை தேடுவதிலும் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். 

அது போல 'திறந்த‌ மூலம்  கூட்டு முயற்சி' ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான கருதுகோளை,  நான் முன் வைத்துள்ளேன். நானும் எனது பதிவுகளில் குறிப்பிட்டு, வெளிப்படுத்தாத‌ (பல‌ வருடங்களுக்கு முன் பார்த்து, குறித்து வைக்காத; ஆனால் நிச்சயம்,வாய்ப்பு கிடைக்கும் போது,  நேரம் ஒதுக்கி, அவை தொடர்பான‌ ஆராய்ச்சியாளர்களை சந்தித்து) சான்றுகளை வெளிப்படுத்த முயல்வேன்.  

அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் எல்லாம் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும்,பேசி விவாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் ஆய்வு முயற்சிகளின் பலன்கள் இணையத்தில் இடம் பெற்றால் போதும். எனது பதிவுகளில் பின்னூட்டமாக (Feedback comment)  அத் தகவல்கள்/ தகவலுக்கான இணைய தொடர்புகள்,  இடம் பெறுவதை வரவேற்கிறேன். ஆர்வமுள்ளவர்கள், தாம் விரும்பும் போதும், தமக்கு இயலும்போதும் ஆய்வுகளில் ஈடுபடலாம். சுயலாப நோக்கின்றி அவ்வாறு பயணிப்பதன் மூலமே, ஆக்கபூர்வமான பலன்கள் வெளிப்பட்டு வருகின்றன. 

அந்த கருதுகோள் அடிப்படையிலும், அல்லது  அதற்கு மாற்றான புதிய கருதுகோள் அடிப்படையிலும், மீட்சி நோக்கிய முயற்சிகள் நடைபெற, தூண்டுகோலாகவே, எனது பதிவுகள் வெளிவருகின்றன; உணர்ச்சிபூர்வ போக்கிலிருந்து விலகி, திறந்த மனதுடன் அறிவுபூர்வ விவாதங்களின் ஊடே, 1944க்கு முன் ஈ.வெ.ரா பயணித்தது போல;

நேர்மையான, துணிச்சலான, சுயவிமர்சனம் மூலம், நம்மையும், குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டத்தையும், 'சுயலாப கள்வர்' நோயிலிருந்து விடுவித்து, 'அந்நிய சூழ்ச்சியிலிருந்து' விடுபட்டு; தமிழ்நாட்டில் பொது அரங்கில் 'பலவகை கொள்கை முகமூடிகளுடன்' வலம் வரும், 'சுயநலக் கள்வர்கள்' மற்றும் அவர்களை 'ஒட்டி' பலன் பெற்று வரும் 'துணை கள்வர்கள்' எல்லாம், தண்டிக்கப்படுவதை ஊக்குவித்து; தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான சரியான வழியில் பயணிக்க.

குறிப்பு :
மேலே குறிப்பிட்ட கருதுகோள் சரியா? தவறா? என்ற ஆய்வின்றி, 'சாதி ஒழிப்பு' என்று பயணிப்பவர்கள் எல்லாம், ஈ.வெ.ராவை போல, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html & போலியோ நோய் எதிர்ப்பு மருந்து (Polio Vaccine) கண்டுபிடித்த 'நுட்பம்'; http://www.nytimes.com/1990/11/25/magazine/once-again-a-man-with-a-mission.html?pagewanted=all#h[ShcIwt,1]  ) பற்றிய புரிதலின்றி பயணிப்பவர்களா? ஈ.வெ.ராவுக்கு இருந்த கல்வி வரை எல்லைகள் இல்லாதவர்களும், அவ்வாறு பயணிப்பது, 'படித்த தற்குறி பகுத்தறிவு' பயணம் ஆகாதா? அல்லது அந்நிய பிரிவினை சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்களா? அதில் 'ஊழல் ஒழிப்பை' பற்றிய கவலையின்றி, பயணிப்பவர்கள் எல்லாம், அந்த சூழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டிற்கு அறிமுகமான 'புதிய' பொது வாழ்வு திருடர்களா? என்பவையும், மேற்குறிப்பிட்ட கருதுகோள் தொடர்பான ஆய்வில் இடம் பெற வேண்டும்.



No comments:

Post a Comment