Monday, May 2, 2016

 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

 

தமிழக சட்ட மன்ற தேர்தல் போக்குகளை, சிங்கப்பூர் தமிழர்கள் ஆர்வமுடன் கவனித்து வரும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ( ‘Tamils in Singapore keep eye on TN polls’ ; http://newstodaynet.com/chennai/tamils-singapore-keep-eye-tn-polls )

சிங்கப்பூரில் வாழும் எனது மகன், சில வாரங்களுக்கு முன், 'தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?' என்று கேட்டார்.  

அதற்கு நான்;

“நான் 'வாக்கிங்' போகும் இடங்களிலும், கடைகளிலும், தெருவோர உணவு கடைகளிலும், பேருந்துகளிலும், தேர்தல் தொடர்பான ஆர்வமானது, சாதாரண பொது மக்களிடம்  இருப்பதாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல, தமது மனதில் இருப்பதை இயல்பாக வெளிப்படுத்தும் போக்கு குறைந்து, கேட்பவர்களுக்கு  ஏற்றார் போல் பேசும் பழக்கமும், அதிகரித்து வருகிறது. எனவே தான், கடந்த சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்புகளையெல்லாம் ('துக்ளக்' தவிர்த்து)  முட்டாளாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டன" என்று விளக்கினேன்.

இசை ஆய்வுக்கு முன், நான் பெரியார்  கொள்கையில் பயணித்த காலத்தில், அந்த ஆர்வத்தில், திருச்சி செயிண்ட் ஜோசப் (Evening College) மாலைக்  கல்லூரியில், சமூகவியல் கொள்கைகள் தொடர்பான ' Certificate Course on Sociological Theories ' மற்றும்  ' Diploma in Journalism & Mass Communication’  படித்தேன். அதில் 'டிப்ளமா' தொடர்பாக, ' The Role of Media in Shaping Public Opinion ' என்ற தலைப்பில், ஆய்வு (Project)  மேற்கொண்டேன்.
 
மேற்குறிப்பிட்ட எனது அறிவு, அனுபவத்தில், தமிழக அரசியல் தொடர்பாக, கீழ் வருவதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

From:  ‘தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’;

“தமிழ்நாட்டில் 1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு.க ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில்,  காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு, பல போராட்டங்கள் மூலம், தி.மு.க எதிர்ப்பு 'அரசியலில் வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்,  அக்கட்சியில் சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால், வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின் ஆதரவுடனும், பின்பலத்துடனும்,  அ.தி.மு.கவைத் தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த 'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக் குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில்,  அ.தி.மு.க முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக இருமுனை அரசியலில், 'தி.மு.க எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது. காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு.க எதிர்ப்பு அரசியல்'  என்பது, அ.இ.அ.தி.மு.கவின் 'ஏகபோக' பலமானது.

அந்த பொதுமக்கள் கருத்துருவாக்க செயல்நுட்பம் (public opinion formation mechanism) பற்றிய புரிதலின்றி, தி.மு.கவுடன் அவ்வப்போது, தேர்தலில் கூட்டணி வைத்து,   பயணித்த பெரிய, சிறிய அரசியல் கட்சிகளெல்லாம், தி.மு.கவை எதிர்த்து நிலைப்பாடுகள் எடுக்கும்போது, மக்களிடம் எடுபடாமல் போகிறார்களா? மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெறுகிறார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.

அந்த இருமுனை அரசியல் போக்கில், அடுத்த கட்ட மாற்றமாக, 'குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்க‌' ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபமும் வெறுப்புமே,  1996இல் தி.மு.க ஆட்சிக்கு வரவும், அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் வரவும் காரணமானது. அந்த புதிய போக்கில், அரசியல் நீக்கத்தில் (Depoliticize),  கொள்கைகள் சருகான நிலையில்,  உரிய பாடங்கள் கற்று, உரிய திருத்தங்களுடன் ஜெயலலிதா,  மக்கள் மத்தியில், தனிநபர் விசுவாசத்தில்,    அதிக செல்வாக்குள்ள தலைவராக உள்ளாரா?  உரிய பாடங்கள் கற்காமல், குடும்ப அரசியல் குழப்பத்தில் மூழ்கி, தி.மு.க எந்த அளவுக்கு பலகீனமாகியுள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும்…………….. அதிலும் தனிநபர் விசுவாசத்தில், பெரியார் ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் என்ற கட்டங்களை, அந்தந்த கட்டங்களுக்கான ஆதரவாளர்களுடன் கடந்து, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள சிதைவின் காரணமாக விளைந்த, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), கொள்கைகள் சருகாகி போன நிலையில்,  இன்று ஜெயலலிதா நடுத்தர, ஏழை மக்களின்  ஆதரவுடன்  இருப்பதானது, அந்த போக்கின் இறுதிக்கட்டமா? “

கடந்த சில வாரங்களாக, நான் வீதிகளில் நடந்து செல்கையில், சில‌ வீடுகளில் இருந்து வெளிவரும் தொலைக்காட்சி பெட்டி ஒலிகளில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது மட்டுமே கேட்க நேர்ந்தது.

எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும்,  அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது, அந்தந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருக்கும் அளவுக்கு, கட்சிகள் எல்லாம், 'ஊழல் அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், 'ஊழல் ஒழிப்பு, மது விலக்கு' தொடர்பான தலைவர்களின் பேச்சுக்களுக்கு என்ன விளைவு இருக்கும்? என்பதும் ஆய்விற்குரியதாகும். தி.மு.க எதிர்ப்பு பிரச்சாரங்களில், 'குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்கம்' பற்றி வெளிப்படுவது போல, அ.இ.அ.தி.மு.க எதிர்ப்பு பிரச்சாரங்களில், 'குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்கம்' பற்றி வெளிப்படுவதாக தெரியவில்லை. ஊழல் எதிர்ப்பு பிரச்சாரமானது உச்சத்தில் இருப்பதால், அந்தந்த கட்சியில், ஊழல் மூலம் சொத்து சேர்த்தவர்கள்  எல்லாம், அந்தந்த பகுதி வாக்காளர்களிடம், 'தலை குனிந்தே'  தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்களா? என்பதும், இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ள வித்தியாசமான போக்காகும்; திருமணம் போன்ற சமூக‌ நிகழ்ச்சிகளில், அத்தகையோர் பங்கேற்கும் போது, அத்தகையோரின் 'கடந்த காலம்' 'கிசுகிசு'க்கப்படுவது அதிகரித்துவரும் பின்னணியில்; முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு, 'ஊழல் பூனைகளுக்கு', 'மணி கட்டும்' பணியும் தொடங்கியுள்ள சூழலில்.

1996 தேர்தலில் அ.இ.அ.தி.முகவுக்கு எதிராக வீசிய அலையும், கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.முகவுக்கு எதிராக வீசிய அலையும், இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஆனால் டாஸ்மாக் மது, ஊழல் தொடர்பாக, மக்களிடம் 'வெறுப்பு, கோபம்' இருப்பதை உணர முடிகிறது. அது 'அலையாக' இன்னும் மாற வில்லை. மக்களின் கோபமும், வெறுப்பும் 'அலையாக' உருவெடுக்க வேண்டுமானால், தொடர்புள்ள பிரச்சினைகளுக்கு, மக்கள் பார்வையில், 'வில்லனாக', ஒரு குவியம் (Focal Point)  இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு குவியங்கள் இருப்பதால், 'அலை' உருவாகவில்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'சர்க்காரியா கமிசன்' ஊழல் விசாரணையில், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் 'கருணையால்' தப்பித்த,  தி.மு.க வும் ஊழல் எதிர்ப்பு பற்றி பேசும் அளவுக்கு, தமிழ்நாடானது 'ஊழல் வெள்ளத்தில்' மூழ்கியுள்ளதா? அப்படி தி.மு.க பேசியதால், அரசுக்கு எதிரான 'அலை' உருவாவது தடை பட்டதா?  கடைசி நேரம் வரை, அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.கவுடன் கூட்டணி சேர முயன்று, 'பேரம்' படியாமல், அதன்பின் இரண்டு கட்சிகளை எதிர்ப்பதும்,  அலை உருவாவதை கெடுத்ததா? அந்த தடைகளின்றி, அலை உருவாகியிருந்தால், அந்த 'ஊழல் எதிர்ப்பு' வெள்ளத்தில், இரண்டு கட்சிகளுமே 'ஒரே குவியமாக' சிக்கி,  சுவடின்றி அழிந்திருக்குமா? என்பவையும் ஆய்விற்குரியதாகும். சாதாரண பொதுமக்கள் பார்வையில், எந்த அளவுக்கு 'ஒரே குவியமாக', தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய  இரண்டு கட்சிகளும் சிக்கியுள்ளன? அதற்கு மாற்றான நம்பகத்தன்மையில், எந்த அளவுக்கு, 6 கட்சிகளின் ‘மக்கள்நல கூட்டணி’ அமைந்துள்ளது? தனித்து நிற்கும் பா.ஜ.கவும், பா.ம.கவும் அதில், எந்த அளவுக்கு 'போட்டி' போடும்? என்பதானது, அக்கூட்டணியானது, தேர்தல் முடிவுகளில் பெறும், வெற்றி/தோல்விகளில் வெளிப்படும்.   

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக,  கட்சி பாகுபாடின்றி, 'மோடி அரசு', மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை பொறுத்தே, தமிழ்நாட்டில் அது 'ஒரே குவியமாக', அலையாக மாறுமா? ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள்  அறிமுகப்படுத்திய 'அரசியல் நோய்’களிலிருந்து, தமிழக பா.ஜ.க விடுபடுமா? (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’ ‘; 
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html) என்பது தெளிவாகும்; 'தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்காக', குடும்ப/வாரிசு அரசியலில் சிக்காமல், 'சுயலாப' நோக்கின்றி, 'உணர்ச்சிபூர்வ' போக்கை விடுத்து, 'அறிவுபூர்வமாக' செயல்படும் கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில். (இருந்தால், தெரிவிக்கவும்;  நன்றியுடன் பரிசீலிக்க உதவும்)

சட்டமன்ற தேர்தலுக்கு முன், 'சொத்துக் குவிப்பு வழக்கின்'  தீர்ப்பு  வெளிவர வாய்ப்பில்லை; உச்சநீதி மன்றம் மே 14 முதல், சூன் 29 வரை விடுமுறையில் இருப்பதால். வாக்காளர்கள்/வாக்குச்சாவடி வரையில், 'தத்தம் திறமைகளை', 'செயல்பூர்வமாக நிருபிப்பவர்களுக்கு' வளர்ச்சியும், இயலாதவர்களுக்கு வீழ்ச்சியும்,  என்ற 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க மட்டுமே 'தன்னிகரில்லா' சாதனை படைத்து வரும் கட்சியாக இருக்கிறது; எவரையும் ஏற்றவும்/இறக்கவும் முடியும் என்ற வலிமையுள்ள தலைமையில். எனவே  மீண்டும் அவர் முதல்வராகும் வகையிலேயே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்;  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை விட, வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), எந்த அளவுக்கு பலகீனமாகிறது? என்பதைப் பொறுத்து, குறைவாகவே பெற்றாலும்.  அது வெளிப்படையான ஒன்றாகும். ஆனால் அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் உள்ள  ஊழல்/சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு 'அதிர்ச்சி வைத்தியமாக', 'உள்மறையாக' (Latent), அந்த தேர்தல் முடிவுகள், காலப்போக்கில் நிரூபித்தால், வியப்பில்லை; ஒரே குவியம் இல்லாததன் காரணமாக, 'அலையாக'  உருவெடுக்காத மக்களின் கோபமும், வெறுப்பும் நீடிக்கும் சூழலில் 

அரசியல் நீக்கம் (Depoliticize)  முடிவுக்கு வந்து, (சென்னை வெள்ளத்தில் மீட்பு மூலம் வெளிப்படுத்திய ஆர்வத்தின் தொடர்ச்சியாக‌) 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க, இளைஞர்கள், எளிதில் 'ஊழல் தொடர்பான' தகவல்களை தேடி பெற வாய்ப்புள்ள‌ 'டிஜிட்டல்' (Digital) யுகத்தில், 'ஊழல் சொத்துக்களை' பறிமுதல் செய்து, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் போக்குகளுக்கான வாய்ப்புகள் ('அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக கண்ணுக்கு தெரியாமல்,  உள்மறையாக (Latent)) கனிந்து வரும் சூழலில்; (by 2005 Nigeria had recovered $1.2 billion stolen by former President Sani Abacha by requesting assistance from multiple jurisdictions including Switzerland, Jersey, and Liechtenstein;  https://en.wikipedia.org/wiki/International_asset_recovery ) ஊழலுக்கு எதிரான 'செயல்பூர்வ சாதனைகள்' இன்றி, மோடி அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது; தமிழ்நாட்டில் பா.ஜ.க 'தலை நிமிர' முடியாது; என்ற சூழலில்; 'அலையாக' உருவெடுப்பதில் தாமதமான, டாஸ்மாக் மது எதிர்ப்பும்,  ஊழல் எதிர்ப்பும், வாய்ப்பு கிடைக்கும்போது, இன்னும் வீரியமான 'அலையாக', உருவாக உள்ள சூழலில்; தேர்தல் பிரச்சாரம் தொடர்பான, ஊடகங்களின் இரைச்சல்களுக்கிடையில், அரசியல் நீக்கத்தில் (Depoliticize), சாதாரண பொதுமக்கள் ஆர்வமின்றி இருப்பதானது, 'புயலுக்கு' முன், வெளிப்படும் 'அரசியல் காற்றழுத்த தாழ்வு மண்டிலமா'? என்பதும் ஆய்விற்குரியதாகும்;

தமிழ்நாட்டில், சமூக இயக்கவியலில் (Social Dynamics), வீழ்ந்து வரும்/வளர்ந்து வரும் சமூக விசைகளை (Social Forces)  கணக்கில் கொண்டால்.

தமிழ்நாட்டை பற்றிய எனது புரிதலும் எந்த அளவுக்கு சரியானது?  என்பதும் சட்டமன்ற‌ தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படும்.

Tuesday, April 26, 2016



 'அழுகியது' கழகங்கள் மட்டுமா?

 

 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல்  இனம்’ தானே;                          எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்


2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழ்நாட்டில் பொது அரங்கில் வெளிப்படப்போகும் போக்குகள் பற்றிய,  கீழ்வரும் கணிப்பு, எனது கவனத்தை ஈர்த்தது.

“கட்சியின் பழைய வரலாற்று நினைவுகளாலும் தலைவர்கள் மீதான கண்மூடித்தனமான அன்பாலும் கீழே உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள் தொண்டர்கள். நடுவில் தரகு வேலையில் தேர்ந்தவர்களே கொழிக்கிறார்கள். நிழல் அதிகார மையங்களே ஆள்கின்றன.
மக்களும் தொண்டர்களும் நெருங்க முடியாத உயரத் தில் கட்சித் தலைமைகள் நிற்பதால், நிழல் அதிகார மையங்களையும் இடைத்தரகர்களையும் தாண்டி அவற்றால், உண்மையான தொண்டர்களை அடையாளம் காண முடியவில்லை. நிழல்களின் தவறுகள் அம்பலமாகும்போது, கட்சித் தலைமைகளால் ‘அடி - அழு’ பாவனைகளைத் தாண்டி ஒன்றும் முடியவில்லை.

ஓரளவுக்கு மேல் இந்த பாவனையை நீடிக்கவும் முடியாது. பாவனைகள் நீண்டு உண்மையாகவே அவர்கள் மீது அடி விழுந்தால், அடி வாங்குபவர்கள் திரும்ப அடிப்பார்கள். பேச ஆரம்பிப்பார்கள். தரகின் பங்குகள் வெளிச்சத்துக்கு வரும். தலைமைகளின் பிம்பங்கள் உடைந்து நொறுங்கும். எப்படியும், புரையை ரொம்பக் காலம் பொத்திவைக்க முடியாது. ஊழல் முடை நாற்றம் அடிக்கும். சீழ் வெளியேறும். அதையே இப்போது வேட்பாளர் அதிருப்திப் போராட்டங்களாகப் பார்க்கிறோம். இரு கழகங்களும் அழுகிக்கொண்டிருக்கின்றன! “
‘அழுகும் கழகங்கள்’ – சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/

இந்தியாவில் 2016 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடக்கிறது. தேர்தல் கமிசன் கண்காணிப்பில், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பணத்தில்,  தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. (http://indianexpress.com/article/elections-2016/india/india-news-india/assembly-elections-2016-over-rs-62cr-illegal-cash-seized-in-poll-bound-states-tamil-nadu-tops-west-bengal-assam/)

நாம் ஓட்டிற்கு பணம் வாங்கினாலோ, அல்லது அவ்வாறு பணம் விநியோகிக்கும் தரகராக பணியாற்றி லாபம் அடைந்தாலோ, நாமும் 'அழுகிய' மனிதர்கள் தானே."யார் ஆட்சியைப் பிடித்தால், நமக்கு லாபம்? தேர்தலுக்காக செலவு செய்யப்படும் பணத்தில், நாமும் நமக்கான பங்கை அபகரிக்க, யார் வேட்பாளராக நின்றால், நமக்கு லாபம்?" என்ற சுயநலநோக்கு நமக்கிருந்தாலும், நாமும் 'அழுகிய' மனிதர்கள் தானே. 
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_16.html)

'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்று செல்வம், செல்வாக்குடன் வலம் வருபவர்களில் எவராவது, நமது குடும்பத்தில், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் இருப்பது தெரிந்தவுடன், அவர்களை திருத்துவதிலோ, திருந்த மறுத்தால் ஒதுக்கி வைப்பதிலோ,  நாம் ஈடுபடவில்லையேன்றால், நாமும் 'அழுகிய'  மனிதர்கள் தானே.

அந்த ஊழல் வலைப்பின்னலின்' 'பங்களிப்பால்', 'தண்டனை பயம்' குறைந்து, கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகள், 'அதிவேகமாக' அதிகரித்து வருவது; பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு அருகதை இருக்குமா, 'அழுகிய மனிதர்களான‌ சமூக குற்றவாளிகளாக' நாம் இருக்கையில் ?

அழுகிய மனிதர்களை ஆதரவாளர்களாகவும், தொண்டர்களாகவும், அதிகம் அழுகியவர்களுக்கே முன்னேற வாய்ப்புள்ளதாகவும் உள்ள,  கட்சிகள் எல்லாமே 'அழுகிய' கட்சிகள் தானே.

'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'அழுகிய மனிதர்கள்' எவ்வாறு உருவானார்கள்? என்பது பற்றிய எனது ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் சமூக நோயாக‌ வளர்ந்து வரும், 'அழுகல்' தொடர்பான சமூக செயல்நுட்பத்தை, நான் கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html)

நம்மிடையே வாழும் 'அழுகல்' மனிதர்களின் அறிவானது,  எந்த சமூக செயல்நுட்பத்தில் செயல்படுகிறது? என்பதை மேற்குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.

கீழ்வரும் திருக்குறள் அளவுகோலின்படி, தமிழ்நாட்டில் வாழும் 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல்  இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்.

'நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு' - திருக்குறள் 452

நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள் இல்லாதவர்களும், உழைத்து சம்பாதிக்க மனமில்லாதவர்களும், தமிழ்நாட்டில் அரசியலில் வளர்வதானது, சீரழிவில் முடியும் என்று,  1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில்,  ஈ.வெ.ரா எச்சரித்திருக்கிறார். அந்த 'அழுகல் இனம்' உருவான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலானது,  ஈ.வெ.ராவுக்கு இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் 'அழுகல் இனம்' உருவாக காரணமான,  'அழுகல் சமூக செயல்நுட்பமானது', எப்போது முளைவிட்டு, எப்படி வளர்ந்தது? என்ற ஆய்விற்குதவும் கீழ்வரும் பதிவை அடுத்து பார்ப்போம்.


“பழந்தமிழ் இலக்கியங்களில், 'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம். 
('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல் - திருக்குறள் 460'; 
https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)
 
மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race)  என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட‌ பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது……………. மனிதர்களின் பண்புகள் அடிப்படையில், தமிழில் வழக்கத்தில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, தவறாக ஆங்கிலத்தில் இருந்த 'ரேஸ்' (Race)  என்ற பொருளில் திரித்த‌, காலனிய சூழ்ச்சியில், 'திராவிடர் இனம்' என்ற அடையாளமானது, உணர்ச்சிகர போதையில், கவர்ச்சிகரமான பேச்சு, எழுத்து மூலம் தமிழர்களின் சமூக அடையாளமாக திணிக்கப்பட்டதா? அது தமிழர்களின் இயல்பில் , அரசியல் நீக்கம் உள்ளிட்டு என்ன வகைகளிலான திரிதலை ஏற்படுத்தியது?

'இனம்' திரிந்தது ஆனது, தமிழர்களின் இயல்பில் திரிதலைத் தூண்டியதா?

 (''காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (3)  இயல்முறி  வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்கள்';

இயல்பில் திரிந்து, 'ஊழல் அழுகலில் சங்கமமாகி', 'எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும்,  அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது, அந்ததந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருந்ததும்,  2016 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் மாற்றங்களுக்கு காரணமா?  தமிழ்நாடானது, 'ஊழல் அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், என்ன மாற்றம் ஏற்படும்? 

'தமிழ்நாட்டில் 'சிற்றினமானது', 'அழுகல் இனமாக', ஆதிக்கத்துடன் வளர்ந்த வளர்ச்சியும், தமிழ் இலக்கணத்தின் வீழ்ச்சியும், ஒரே காலக்கட்டத்தில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில் நிகழ்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அது போன்றே, 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) -  சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அதாவது 'அழுகல் இனமானது', தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தியாக வளர்ந்த சமூக செயல்நுட்பம் காரணமாகவே, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) வீழ்ச்சியும், தமிழ் இலக்கணத்தின் வீழ்ச்சியும், மது/போதை பொருள், திருட்டு, கொலை, தற்கொலை, உள்ளிட்ட சமூக நோய்கள் எல்லாம், பள்ளி/கல்லூரி மாணவர்கள் வரை பரவியதும், சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே பரவியதும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்ததும், ஒன்றுடன் ஒன்று பின்னி, அரங்கேறினவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

முந்தைய பதிவில் குறிப்பிட்ட 'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கும்', 'அழுகல் இனத்தின் ஆதிக்கத்திற்கும்', தொடர்பு உண்டா? என்பதும் ஆய்விற்குறியதாகும். 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி சாத்தியமா?

'அழுகல் மனிதர்கள்' எல்லாம், 'பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம், இந்துத்வா, தலித், முஸ்லீம்' உள்ளிட்ட இன்னும் பல முகமூடிகளுடன் ஏமாற்றி வாழ, நாம் துணையாக இருக்கிறோமா?  நாம் 'அழுகல் இனத்தில்' இருக்கிறோமா? நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் ‘அழுகல் மனிதர்கள்’ இருந்து, அந்த 'அழுகல் மனிதர்களோடு', நாம் நேசமாக இருப்பது தொடர்ந்தால், நாமும் அந்த 'அழுகல் மனிதர்' இனத்தில் இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா? குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளும், சமூக ஒழுக்க நெறிகளும், பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான சடங்குகளும், 'அழுகல் இனத்தின்  ஆதிக்கத்திற்கு' அடிமையாக, நாம் துணை போகிறோமா? தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை (வாய்ப்பு கிடைத்தால், அவர்களுடன் நெருக்கமாகி, பலன்கள் அனுபவித்துக் கொண்டே) குறை சொல்லியவர்கள் யார்? யார்? அவ்வாறு குறை சொல்லியவர்களில், தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள் எல்லாம்,   'அழுகல் மனிதர்கள்'  இல்லையா? 

ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு எச்சரிக்கையை கருத்தில் கொண்டு;

தமிழ்நாட்டு பொதுவாழ்வில், நேர்மையான சுயசம்பாத்தியமில்லாதவர்களில், உண்மையான சமுக அக்கறை உள்ளவர்களெல்லாம், பொது வாழ்விலிருந்து ஒதுங்கி, நேர்மையான சுயசம்பாத்தியம் மூலம்,  தற்சார்பை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பின்னர், மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடலாம்;  'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால். 


குடும்பம், நட்பு, கட்சி போன்ற அடிப்படைகளில்,  'அந்த அழுகல் மனிதர்கள்' மீது  நமக்குள்ள 'பற்றிலிருந்து' விடுபட்டு, 'அழுகல் இனத்தின்' 'பிடியிலிருந்து' வெளியேற முடியுமா?

சமூக ஒப்பீடு நோயில், 'திராவிட மனநோயாளியாக' சிக்கி, வாழ்பவர்களுக்கு,  அது சாத்தியமில்லை.

‘அந்த நோயில் சிக்காதவர்களுக்கு, குறைந்த பட்சம் தமது சமூக வட்டத்தில், அது சாத்தியமே’ என்று நிரூபிக்கும் வகையில், நான் வாழ்ந்து வருகிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான ஆதரவானது; வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்' என்ற நம்பிக்கையில். 
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_19.html )

“'ஊழல் வழிகளில்' பணம் சம்பாதிக்க, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைப்பவர்களையும், அவர்களை கண்டிக்காமல் 'நல்லுறவு' பேணுபவர்களையும், 'சமூக கிருமிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ்கிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக.”
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

ஊழல் ஒழிப்பானது, ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்களெல்லாம், ஊழல் ஒழிப்பு கட்சிகளின் மாநில பொறுப்பாளர்களாக வலம் வருகிறார்கள். கட்சி வேறுபாடின்றி, ஊழல் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டால், 'மதுவிலக்கு' உள்ளிட்டு, அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும், அந்த பணத்தில் செயல்படுத்த முடியும் என்பதை, அனைவரும் ஒப்புக்கொள்ளும் விந்தையும், தமிழ்நாட்டில் உள்ளது. 'அழுகல் இனத்தின்' ஆதிக்கம் ஒழியாமல், மதுவிலக்கு அமுலானால், 'டாஸ்மாக்' கடைகளெல்லாம், 'கள்ளச்சாராய' கடைகளாக, 'புது அவதாரம்' எடுக்காதா?

'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’

என்று குழம்ப வேண்டியதில்லை.
சுயலாப நோக்கற்ற, சமூக அக்கறையுள்ள, ஒவ்வொருவரும், தமது சமூக வட்டத்தில் உள்ள
'அழுகல் இன' பூனைகளுக்கு மணி கட்டுவது சாத்தியமே, என்பதையும், மேற்சொன்ன வகையில் நான் நிரூபித்து வருகிறேன். அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நமது சமூக வட்டத்திலுள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், தற்போது சீரழிந்துள்ள ‘சமூக செயல்நெறி மதகுகள் ‘ புத்துயிர் பெறும். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html

அதன்பின் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட  சட்டங்களும் ஒழுங்காக செயல்படும்; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்காக; 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்திலிருந்து, 'விடுதலை' பெற்று. 

தமிழில் மனிதரின் பண்பு அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்', 1944க்குப்பின் திரிந்து உருவான, 'அழுகல் இனத்திலிருந்து' 'விடுதலை' பெற்றால் தானே, தமிழ்நாட்டில் 'நல்லினம்' பல்கி பெருக முடியும். நமது முயற்சியில், நமது சமூக வட்டத்திலிருந்து, 'அழுகல் இனத்தை' அகற்றுவது தானே, அதற்கு சரியான, வலுவான, தொடக்கமாக அமையும்.

காந்தப்  புலத்தில் இருந்தாலும், இரும்பு போன்ற ஒரு சில உலோகங்கள் மட்டுமே, ‘காந்தத் தூண்டல்’ (Magnetic Induction) என்ற வினைக்குள்ளாகி, காந்தமாக மாறும்.

அது போல, ‘அழுகல் இனத்தின் ஆதிக்கத்தில்’  உள்ள சமூக சூழலில்;

இயல்பில் 'பலகீனமான' தமிழர்களே, தமிழ்நாட்டில் ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' என்ற சமூக செயல்வினை மூலம், 'அழுகல் இனமாக' மாறி வருகிறார்கள்.

அதற்கு 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'சீரழிவு சமூக வினையூக்கியாக (Catalyst)' செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், நான் மேற்கொண்டு வரும் சமூகவியல் பரிசோதனையில் (Sociological Experiment) வெளிப்பட்டுள்ளது.

நமது சமூக வட்டத்தில் இருக்கும் 'அழுகல் இனத்தை', அடையாளம் கண்டு அகற்றுவதானது, ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' எனும் சமூக நோயிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க துணை புரியும்.

Saturday, April 23, 2016


'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' ;

 

'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்


Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.

“எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன்.” (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அந்த கண்டுபிடிப்பை 2005 முதல் என்னை சந்தித்த,  தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்ட 'பெரியார்' கொள்கையாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளேன். 2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' கட்டுரை வெளியிட்டு (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html) , தொடர்ந்து 'இணைய வழியில்' அந்த கண்டுபிடிப்பை விளக்கி பல கட்டுரைகள் வெளியிட்டு வருகிறேன். அதற்கு ஏதும் அறிவுபூர்வ மறுப்பு, 2005 முதல் இன்றுவரை, ஏன் வெளிவரவில்லை? என்பதும் ஆய்விற்குரியதாகும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

உணர்ச்சிபூர்வ போதையிலோ, அல்லது 'பொதுவாழ்வு வியாபாரியாக' வாழ்வதாலோ, ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’, 'பெரியார்' கட்சிகளும், 'பெரியார்' கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற ஆராய்ச்சியையும் தொடங்க வேண்டுமா?

1944க்கு முந்தைய ஈ.வெ.ராவின் 'குடிஅரசு' இதழ் பாணியில், எனது பதிவுகளையும், அவற்றிற்கும் வரும் அறிவுபூர்வ மறுப்புகளையும், ஒரே நூலாக வெளியிடும் எண்ணமும் எனக்குண்டு. எனவே, எனது பதிவுகளுக்கு கீழே வாச‌கர் பதிவிடும் கருத்துக்களையும் அகற்றாமல், ஆர்வமுடன் படித்து வருகிறேன்.

இசை ஆராய்ச்சிக்கு முன், மார்க்சியம், லெனினியம் புலமையோடு, 'பெரியார்' கொள்கையில் நான் பயணித்த காலத்தில், ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’ கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழுந்ததை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.


“தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில்,  எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும்,  வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த சமஸ்கிருத  நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும்,  வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.

மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்……………………..இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், மேலேக் குறிப்பிட்ட புலமையுடன், தமிழ்நாட்டைப் பற்றிய எனது அறிவு அனுபவ அடிப்படையில், மார்க்சிய பார்வையில் இருந்த ஒரு சீரான பொருள் உற்பத்தி முறைக்கு (homogeneous mode of production) மாறாக, ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறையில் (heterogeneous mode of production ) இந்திய சமூகம், குறிப்பாக தமிழ்நாடு, இருந்தது எனது ஆய்வில் வெளிப்பட்டது. இதனை அந்த காலக் கட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த மார்க்சிய, மார்க்சிய‍ லெனினிய அமைப்புகளில் இருந்தவர்களுக்கு தெரிவித்த போது, எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே அத்தகைய விவாதத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை, என்ற புரிதலுடன் நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபட‌த் தொடங்கினேன்.

பெரியார் இயக்கத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும், தமக்குள்ள அறிவு வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலும், தாம் ஏற்றுக் கொண்ட கொள்கை தொடர்பான புலமையை அதிகரிக்க விரும்பும் ஆர்வமும், அதற்கான உழைப்பும் இருந்ததில்லை என்பது எனது களப் பார்வை(Observation) ஆகும். இது தொடர்பாக 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய தமிழ்நாடு' என்று பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

உண்மையில் மார்க்சியம் லெனினியம் தொடர்பாக‌,  முனைவர் பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள் பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பான பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
[ http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html
]”

ஒரு சமூகத்தில் தாய்மொழியும், அவர்களின் அடையாளமும், நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது தாய்மொழியும், அடையாளமும், பயனற்றது என்று கருதும் மக்கள், கட்சிகளையும், கொள்கைகளையும் 'விரயமாக' கருதி, பலவகை போதைகளில் பயணிக்கத் தொடங்குவார்கள். (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm ) தமிழ்நாட்டில் தமிழர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் தமிழையே,  ' விரயம் - waste' ஆக கருதும் அபாயமும் வளர்ந்து வருவது உண்மையானால், கம்யூனிஸ்ட் கொள்கைகளும், 'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக,  மாறி வருகின்றனவா?

“பொது மக்கள், குறிப்பாக நன்கு படித்து நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர்கள் ( மற்றும் அவர்கள் வழியில் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி நர்சரியில் சேர்த்து பயணிக்கும் கூலித் தொழிலாளர்கள்)மத்தியில், 'தமிழ், தமிழ்' என்று பேசுபவர்கள் பற்றிய இழிவான அபிப்பிராயமும், ஆங்கில வழிக் கல்வி மூலமாக வேர் பிடித்து வளர்ந்து வரும் திரிந்த மேற்கத்திய வாழ்வு முறை காரணமாக‌,  தமிழையே,  அவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் ' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயமும் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே பார்த்த தமிழுக்கான ஆபத்துகளின் பின்னணியில், இது 'தமிழ் அழிவு சுனாமி' தொடக்கத்தின், முதல் அறிகுறியாகவும் இருக்கலாம்.”
 
கம்யூனிஸ்ட் கொள்கைகளும், 'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக,  மாறி வருகின்றனவா? என்ற கேள்வி தொடர்பான பதிவு வருமாறு.

'அரசியல் பின்புலம் எதுவுமற்று, கொள்கை முழக்கங்களோ தத்துவ விளக்கங்களோ இல்லாமல், ஊழலை ஒழிப்பேன் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு அரசியல் செய்த விஜயகாந்த் பெற்ற வெற்றி, பிற கட்சிகளின் சித்தாந்த முழக்கங்களைக் கேலிப்பொருளாக்கியது எப்படி என்பது தனியே விவாதிக்க வேண்டியது.'
'மறுபடியும் முதலிலிருந்தா?'- அரவிந்தன்

“ ''எங்களுக்கு கொள்கை இல்லை; அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கொள்கைகள் சருகாகி, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில், 'தேர்தல் ஆதாய' நோக்கில், கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் பயணிக்கிறார்களா? அந்த கட்சிகளின் 'வால்களாக' (வெளியில் தெரிந்தும், தெரியாமலும்) ' 'பெரியார் கட்சிகள்' பயணிக்கிறார்களா?...................... தமிழ்நாட்டில், இன்று கட்சிகளின் சித்தாந்த முழக்கங்கள் எல்லாம் கேலிப்பொருளாகியுள்ளது பற்றியும், 1952 பொது தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியானது 131 தொகுதிகளில் போட்டியிட்டு, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக வெளிப்பட்டது பற்றியும், 64 வருட வளர்ச்சி/வீழ்ச்சிக்கு(?) பின், 2016 சட்டமன்ற தேர்தலை, விஜயகாந்த் தலைமையில் உள்ள அணியில் சந்தித்துள்ளது பற்றியும், ஆய்வு    மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.”

தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல், ஆற்று மணல், சந்தனக் காடுகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்களை கொள்ளையடித்தவர்களை எதிர்த்து, மக்களை திரட்டி, போராடாததில், கம்யூனிஸ்ட் கட்சிகளும், 'பெரியார்' கட்சிகளும் 'ஒரே வகையில்' பொதுவாழ்வில் பயணித்தார்களா? அக்கொள்ளைக்கு துணை போன, அந்தந்த ஆளுங்கட்சி 'புள்ளிகளுடன்', தத்தம் சுயநலன்களுக்காக, வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நெருக்கமாக 'பொதுவாழ்வில்' பயணித்தார்களா? அத்தகைய சுயநல போக்கில், தமிழ்நாட்டில் 'இந்துத்வா' கட்சிகளில் யார்? யார்? பயணித்தார்கள்? இப்படிப்பட்ட  மோசமான சமூக சூழலே, 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதா? தமது தாய்மொழியை 'காட்டுமிராண்டி' மொழியாக கருதி, தமிழில் இருந்த 'இனம்' திரிந்து, 'அடையாளச் சிதைவுக்குள்ளாகி',   'உணர்ச்சிபூர்வ போதையாளர்களாகவோ', அல்லது 'பொதுவாழ்வு வியாபாரிகளாகவோ', பெரும்பான்மையான 'பெரியார்' கொள்கையாளர்கள் வாழ்கிறார்களா, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர அனுமதித்து? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கும்';

கட்சிகளின் தொடர்பின்றி, தமிழ்நாட்டில் தினமும் ஆங்காங்கே, தண்ணீர் பிரச்சினை, சாலை பிரச்சினை, மோசடி உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளுக்காக, வீதியில் இறங்கி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருவதற்கும் தொடர்பு உண்டா? 

மேற்குறிப்பிட்ட தொடர்பின் பின்னணியில், முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி, திராவிடர்/திராவிட, தேசிய, பொதுவுடமை கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகள் வளர்ந்தார்களா? 

அந்தந்த கட்சிகளில் சுயலாப நோக்கின்றி, தத்தம் கொள்கைக்கு உண்மையாக வாழ்பவர்கள் எவரேனும் இருந்தால்;

தத்தம் கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகளை, 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக்க' வேண்டாமா? அது இயலாதெனில், 'சமூக கிருமிகளின்' பிடியில் மீளமுடியாத வகையில் சிக்கியுள்ள‌, அப்படிப்பட்ட கட்சிகள் நீடிப்பதே, சமூகத்திற்கு கேடாகாதா? 'அழுகும் கழகங்கள்'  (சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/) வரிசையில் அக்கட்சிகள் இடம் பெறாதா? 'அழுகும் கழகங்கள்' செல்வாக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்தார்களா?  'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து', ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை' மீட்க முடியுமா? (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html )

அத்தகைய ஆய்விற்கு
முதல்படியாக,  'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கு' முடிவு கட்ட வேண்டாமா, திருப்பு முனையில் இருக்கும் தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரிய‌ ?